Saturday, November 20, 2010

நாடாமை..தீர்ப்ப மாத்திச் சொல்லு...

நாத்து 8:சட்டம் ஒரு இருட்டறை என்பது பெரும்பாலும் அனைவரும் கூறும் ஒன்று. காரணம், நீதி சாட்சிகளையும், சந்தர்ப்பங்களையும் மட்டும் கணக்கில் கொண்டு தன் கடமையைச் செய்யும். உணர்ச்சிகளுக்கு அங்கே வேலையில்லை. சில நேரம் நிஜம் ஒரு பக்கம் சாட்சியின்றி பூதாகாரமாய்த் தெரியும். சாட்சியுடன் இன்னொரு நிஜமும் சட்டத்தின்படி பொய்யாய் வெருட்டும். இரண்டு நிஜத்தில் எதைத் தள்ள முடியும்? அங்கேதான் நீதிபதியின் திறமையும் மனிதமும் வெளிப்படும் தருணம். அத்தகையதோர் நிகழ்வு இது.

திருவாளர் ’எக்ஸ்’ ஒரு மெயில் டிரைவர். சென்னையில் பணிபுரிகிறார். மனைவியின் பெயர் ’ஒய்’. இந்து சாஸ்திரீய முறைப்படி நடைபெற்ற திருமணம். ஆதாரமாக மனைவி திருமதி ‘ஒய்’ என்று திரு. ‘எக்ஸ்’ அலுவலகத்தில் கொடுத்த தகவல்கள் இருக்கிறது. திருமணம் ரிஜிஸ்தர் செய்யப்படவில்லை. இவர்களுக்கு குழந்தையில்லை.

பணி நிமித்தம் ஒரு ரயிலை ஓட்டிச் சென்று பாலக்காடில் ரிலீவ் ஆகி ஓய்வுக்குப் பின் சென்னை திரும்புவது வழக்கம். யாராவது ‘ஒய்’ என்ற பெயரில் கிடைப்பார்களா? அவரும் தன்னை விரும்புவாரா என்று விளம்பரம் கொடுத்தா தேடிப்பிடிக்க முடியும். விதி என்று சொல்லலாமா? அப்படி ஒருவர் கிடைத்தார். பரம ஏழை. சிறுவயது. பெயரும் ‘ஒய்’. அய்யா பணி முடிந்ததும் அவர்கள் வீட்டில் தங்குவார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்து ரிஜிஸ்தரும் செய்துவிட்டார். திருமணத்துக்குப் பின் இரண்டு குழந்தைகள்.

ஒரு நாள் கடமை முடிந்து பாலக்காட்டில் இருக்கையில் மாரடைப்பில் இறந்துவிட்டார். அந்த மனைவி உடலைப் பெற்று அலுவலகம் தந்த இறுதிக் கிரியைக்கான அட்வான்சும் பெற்று தகனம் செய்துவிட்டார். சென்னையில் இருக்கும் மனைவி, பணிக்குப் போன கணவன் ஒரு வாரமாகியும் திரும்பாததால் அலுவலகத்தில் விசாரிக்க, அவர் மரணித்ததும் அவர் மனைவி உடலைப் பெற்று ஈமக் கிரியை செய்ததும் தெரியவந்தது.

பதறிப்போய் தான்தான் மனைவியென்றும், இன்னொரு பெண்மணி எப்படி மனைவியாக இருக்க முடியுமென்றும் மனுச்செய்ய விசாரணையில்தான் இருவரும் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அலுவலகம் என்ன செய்யும்? சட்டத்தைக் காட்டி சக்ஸஷன் சர்ட்டிஃபிகேட் கோர்ட் மூலம் பெற்று வரப் பணித்தனர். முதல் மனைவி வசதியானவர். ஆனால் திருமணம் பதியப்படவில்லை. சாட்சியாக பத்திரிகை கூட இல்லை. இரண்டாம் மனைவி ஏமாற்றப் பட்டிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் சட்டப்படியான விவாகப் பதிவு இருக்கிறது. சிறு குழந்தைகள். நீதி மன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டு முதல் மனைவியின் திருமணத் தேதியை உறுதி செய்திருக்கக் கூடும். அதன் மூலம் இரண்டாவது திருமணம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியிருக்கக் கூடும்.

தெய்வம் போன்று செயல்பட்டார் நீதிபதி. அதைவிட முதல் மனைவியின் புரிதல் அபாரமானது. பரஸ்பர புரிதலில், பி.எஃப், கிராச்சுவிட்டித் தொகை முதல் மனைவிக்கும், கருணை அடிபடையிலான வேலையும் பென்ஷனும் இரண்டாம் மனைவிக்கும் என்ற ஒப்புதலின் பேரில் முதல்மனைவி வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார். குழந்தைகளுக்கும் ஒரு ஏழைப் பெண்ணுக்கும் நீதி கிடைத்தது.

நாத்து 9
: கோர்ட்டையே ஏமாற்றும் அளவுக்கு படிப்பறிவற்ற பெண்ணால் முடிந்திருக்கிறது என்பது ஒரு ஆச்சரியம். ஓர் அதிகாரி அவர். மனைவியும் குழந்தைகளும் உண்டு. வீட்டில் பணிபுரியும் வேலைக்காரியுடன் தொடர்பிருந்ததைக் கண்டித்துப் பார்த்தும் கேட்காததால், குழந்தைகளின் நலன் கருதி மனைவி தனியாகப் போய்விட்டார். 

அதே வீட்டில் வேலைக்காரியுடன் அதிகாரி வாழ்ந்து ரிட்டயரும் ஆகிவிட்டார். பணிக்காலத்திலேயே மனப்பிறழ்வுக்காக மருத்துவ உதவி பெற்றிருப்பது தெரியும். கடைசிக் காலத்தில் கடனுக்கு பயந்து ஒரு நண்பரின் ரேடியோ ரிப்பேர் கடையில் தங்கியிருந்ததும், அதில் கிடைக்கும் சொற்ப பணத்தில் வாழ்ந்ததும், இந்தம்மணி பென்ஷனை ஆட்டையைப் போட்டுக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அவரின் மறைவுக்குப் பிறகு செட்டில்மெண்ட் மற்றும் பென்ஷனுக்கான விண்ணப்பத்தில் மனைவி என்று வேலைக்காரம்மாள் விண்ணப்பிக்கிறார். பணியில் இருந்த காலத்தில் தன் குடும்பத் தகவலைக் கொடுத்திருந்தார் அவர். அதில் இவரின் பெயரைக் குறித்து வேலைக்காரி என்றே குறிப்பிட்டிருந்தார். 

தகவலைக் குறிப்பிட்டு, மனைவி இன்னார், தங்கள் பெயர் வேலைக்காரியாக பதிவாகி இருக்கிறது திருமணத்துக்கு அத்தாட்சி ஏதும் இருக்கிறதா எனக்கேட்டு எழுதியவுடன் எப்படியோ முதல் மனைவிக்கு டைவர்ஸ் ஆன தீர்ப்பு நகல், அவர்களின் குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் தெரியாது என்பதுடன் தான் குருவாயூர்க் கோவிலில் திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

அலுவலகத்துக்கு அது குறித்த தகவல்கள் இல்லை. பிள்ளைகளுக்கு பென்ஷன் பெறும் தகுதியிருப்பதால் இவருக்குப் பென்ஷன் வழங்க முடியாது என்ற பதிலுக்குப் பின்னான அவரின் நடவடிக்கை பேரதிர்ச்சியானது. கோவிலில் திருமணம் நடந்த தகவல்களைக் கொடுத்து எந்த கோர்ட் டைவர்ஸ் கொடுத்ததோ அதே கோர்ட்டில் சட்ட பூர்வ மனைவியாக பாவித்து பென்ஷன் தரப்பட வேண்டும் என்ற ஆர்டரையும் பெற்று அனுப்பினார். 

அப்பீலில் டைவர்ஸ் குறித்தான தகவலைச் சொல்லாமல் விட்டிருந்தது தெரியவந்தது. அதைவிட திருமணம் நடந்த தேதி டைவர்சுக்கு முற்பட்டதானதால் சட்டப்படி செல்லாது. கொடுமை என்னவென்றால் இரண்டு தீர்ப்புக்கும் இடையில் மிகக் குறைந்த கால இடைவெளி. இரண்டுக்கும் ஒரே நீதிபதி.

முரண்களைச் சுட்டிக்காட்டி, கோர்ட்டுக்கும் அம்மணிக்கும் கடிதம் எழுதப்பட்டது. அப்புறம் தகவலேதுமில்லை.  

இவை அனைத்தும் பல்வேறு கால கட்டங்களில்  பல்வேறு கலாச்சாரச் சூழல்களில் நடந்த திருமணங்கள். ஆனாலும் பொதுவான ஒன்று திருமணம் அது பதிவுடனோ இல்லாமலோ  ஒரு பாதுகாப்பு இல்லை . எல்லா அலுவலக நாட்களிலும் திருமணப் பதிவு அலுவலகத்தில்  காசுக்கு சாட்சிக் கையெழுத்துப் போடுவதையே பிழைப்பாய் நம்பியிருக்கிறது ஒரு கும்பல். பெண்ணுக்கு சித்தப்பன், பெரியப்பன், மாமன் என்று மாற்றி மாற்றிக் கையெழுத்துப் போடுபவன்  வேறொரு பையனுக்கும் அதே போல் சாட்சி போட்டால் போதும் என்ற அமைப்பு இருக்கிறது.

அது  பெரியவர்கள் பார்த்து நடத்தும் திருமணமோ, காதல் திருமணமோ, சுயமரியாதைத் திருமணமோ எதுவாயினும் சம்பந்தப் பட்ட இருவரை வைத்தே அவர்களின் நல் வாழ்வு அமைகிறது. திருமணம் பெரிய பாதுகாப்பு ஒன்றும் கொடுத்துவிடவில்லை. ஏமாற்றுபவன் சட்டத்தையும் ஏமாற்ற முடிகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

பெரும்பான்மையானோருக்கு இதில் சிக்கல் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடிகிறது. பலருக்கு இயலாமையால் சகித்துக் கொண்டு காலம் தள்ள அமைகிறது. மிகச் சிலருக்கு திருமண முறிவு தேட அவசியமிருக்கிறது. அதற்குப் பின்னான புரிதலோ மற்றொரு திருமணமோ வெகு சிலருக்கே அமைகிறது.

இருபது வருடங்களுக்கு முன் குசு குசுவென்று இன்னாரின் மகள் பதிவுத் திருமணம் செய்துகொண்டாள் என்று ஏளனமாகப் பேசப்பட்டது இன்று எந்தத் திருமணமானாலும் பதியப் படவேண்டும் என்றதும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் எப்படி வந்தது? சட்டத்திற்கு முன் என்ன கேவலமிருந்தது சட்டமயமானதும் தொலைந்து போக? 

மூன்று தலைமுறைக்கு முன்னால் உறவுகள் முன்னிலையில் தாம்பூலம் மாற்றி உரக்கச் சொன்னால் நிச்சயமான ஒரு திருமணம், இன்று காகிதத்தில் எழுதி பெற்றோர் மற்றும் சாட்சிகளின் கையெழுத்தோடுதானே உறுதியாகிறது? இதில் நமக்கு உறுத்தல் இருக்கிறதா?

ஆக ஒரு சட்டம் வந்து எந்த ஒன்றையும் அங்கீகரிக்கும் வரை நமக்கு ஏற்பு இல்லை. ஏற்பு என்று கூட சொல்ல முடியாது. சட்டத்தின் பாதுகாப்பிருக்கிறது. அவர்களைச் சீண்டினால் சட்டம் நம் மீது பாயும் என்ற பயத்துக்கு மட்டுமே அடங்கியிருப்போம்.  

~~~~~~~

58 comments:

பிரபாகர் said...

படிச்சிட்டேன்... கமென்ட் அப்புறம்...

பிரபாகர்...

கலகலப்ரியா said...

யாராவது ஒரு நல்ல காமெண்டா போட்டா நான் ரிப்பீட்டே சொல்லலாமின்னு வெய்ட் பண்றேன்... ஹெல்ப் பண்ணுங்க மக்கா....

எனக்கு டெம்ப்ளேட் பின்னூட்டம் பிடிக்கலை... பிடிக்கலை... பிடிக்கலை...

கலகலப்ரியா said...

jk apart.. நடப்புகளை உங்க பாணில கொடுக்கறது நல்லாருக்கு சார்..

காமராஜ் said...

பாலாண்ணா..
இப்பதான் வந்தேன் பழய பதிவுகளும் சேர்த்து உபயோகமுள்ள
ஒரு தொகுதியாக வந்திருக்கிறது.
எங்கள் சங்கத்துக்கும் தேவைப்படும்.
நன்றிகள்

பிரபாகர் said...

இந்த மாதிரி உண்மையெல்லாம் சொல்லப்போனாத்தான் புரியாத சில இதுங்க புடுங்கி மாதிரி பேசுதுங்க... விடுங்க ஆசான்!...

பிரபாகர்...

'பரிவை' சே.குமார் said...

நாட்டு நடப்புக்கள்... நல்ல பதிவில்...

Thenammai Lakshmanan said...

நல்ல உபயோகமான பதிவு பாலா சார்..

Unknown said...

சுவார்யசமான நிகழ்வுகள். அது சரி...வேலைக்காரி பெயர்கூடவா டிக்ளரேசனில் கொடுப்பார்கள்.

vasu balaji said...

@கலாநேசன்
சந்தேகத்தின் பேரில் கொடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். ரெசிடெண்ஷியல் சர்வண்ட் மெயிட் என்று குறிப்பிட்டிருந்தார்:)

நிகழ்காலத்தில்... said...

உண்மை அனுபவங்கள் சிந்திக்க வைக்கின்றன..

ஓட்டுப்போட்டு விட்டேன்:)

Unknown said...

என்னவொரு அயோக்கியத்தனம். எந்த மாதிரி வாழ்ந்தாலும், பாதிக்கப் படுவது ஒரு பெண், மற்றும் அவன் குடும்பம் தான்.

ராஜ நடராஜன் said...

நாத்து 8 மனிதாபிமானத்தோடு இருக்கிறது.

பதிவு திருமணம்ன்னாலே சமூகத்தின் பார்வையில் அங்கீகாரமில்லாமல்தான் இருந்தது.அனைத்து திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டுமென்ற சட்டம் இந்த பாகுபாடுகளை மாற்றியது வரவேற்க தக்கது.

ராஜ நடராஜன் said...

//யாராவது ஒரு நல்ல காமெண்டா போட்டா நான் ரிப்பீட்டே சொல்லலாமின்னு வெய்ட் பண்றேன்... ஹெல்ப் பண்ணுங்க மக்கா....//

இப்படியும் ஒரு ஆட்டம் இருக்குதா:)

கமெண்ட் ரிபீட் வெய்ட் செய்யுங்க!ஹெல்ப்புடன் வருகிறேன்.

Thekkikattan|தெகா said...

தொடர்ந்து நாத்து நடுங்க... கவனிச்சிட்டே வாரோம். :-)

அது சரி(18185106603874041862) said...

சட்டம் என்பதோ கலாச்சாரம் என்பதோ அன்றைய காலகட்டத்தை பொறுத்ததே. காலம் மாறும் போது கலாச்சாரமும் சட்டமும் மாறத்தான் வேண்டும். கலாச்சாரமோ சட்டமோ மனிதர்களை உருவாக்கவில்லை. மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது தான் சட்டம்.

ஒரு காலத்தில் இந்த ஜாதிக்காரன் படித்தால் அவன் காதில் ஈயத்தை ஊற்று என்று கூட சட்டம் இருந்திருக்கலாம். அதுவும் சட்டம் தான். ஆனால், அதே சட்டத்தை பிடித்துக் கொண்டு இன்றைக்கு எவனாவது முயன்றால் அவனை நடுத்தெருவில் தான் தொங்க விடவேண்டும்.

கலாச்சாரம் என்பதும் வேதவாக்கியம் அல்ல,மாறாமல் இருப்பதற்கு. முதலில் கலாச்சாரம் என்பதே அன்றைய காலகட்டத்தின் வாழ்வியலே. காலையில் இட்லி அல்லது தோசை அல்லது பொங்கல் என்ற கலாச்சாரம் மாறி இப்பொழுது நூடுல்ஸ், பூரி. பின்னோக்கி பார்த்தால் நானூறு வருடத்திற்கு முன் என் தாத்தன் சுடுகஞ்சி குடித்து விட்டு வயலுக்கோ இல்லை தூசி படிந்த வாளுக்கு எண்ணெய் தடவி போருக்கோ போயிருப்பான்.

கலாச்சாரத்திற்காக மனிதர்கள் இல்லை. மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது தான் கலாச்சாரம்.

அது சரி(18185106603874041862) said...

தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்கள் தான் கலாச்சாரம் போச்சே என்று கூக்குரலிடுவது வழக்கம்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உஷாரா இருந்துக்கோணும்ன்னு புரியுது..

a said...

//
கலகலப்ரியா said...
jk apart.. நடப்புகளை உங்க பாணில கொடுக்கறது நல்லாருக்கு சார்u......
//
repeatuuuuu........

பவள சங்கரி said...

மிக நல்ல பயனுள்ள பதிவு சார். மிக சுவாரசியமான வழக்குகள்.

ஆக ஒரு சட்டம் வந்து எந்த ஒன்றையும் அங்கீகரிக்கும் வரை நமக்கு ஏற்பு இல்லை. ஏற்பு என்று கூட சொல்ல முடியாது. சட்டத்தின் பாதுகாப்பிருக்கிறது. அவர்களைச் சீண்டினால் சட்டம் நம் மீது பாயும் என்ற பயத்துக்கு மட்டுமே அடங்கியிருப்போம்.

சரியாகச் சொன்னீர்கள். மனிதாபிமானத்துடன், மிக பொறுமையாக எழுதப்பட்ட இடுகைக்கு வாழ்த்துக்கள் சார்.

ஈரோடு கதிர் said...

* ரெண்டு ‘ஓய்’க்கும் ஒரே பேர்

* இரண்டுக்கும் ஒரே நீதிபதி.


விதி வலியது போல!

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் நடும் நாற்றுகள் மூலம் இது போல அநியாயங்களையும்,
ஆதரவுகளையும் அறிய வருகிறோம்.பட்டணத்துப் பெண்ணின் அறியாமையும்,படிக்காத பெண்ணின் சாமர்த்தியமும் வியக்கவைக்கின்றன.

Good citizen said...

கலாச்சாரத்திற்காக மனிதர்கள் இல்லை. மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது தான் கலாச்சாரம்.

ரி ப் பீ ட் டுடுடுடுடுடுடுடுடு

கலகலபிரியா மேடம் சாரி நான் முந்திக்கிட்டேன்னு நெனைக்கிறேன்

Unknown said...

க"லா"சாரம்...

கலகலப்ரியா said...

@ராஜ நடராஜன்

ம்க்கும்.. எந்தக் காலத்தில...

கலகலப்ரியா said...

@அது சரி(18185106603874041862)

||தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்கள் தான் கலாச்சாரம் போச்சே என்று கூக்குரலிடுவது வழக்கம்||

ரிப்பீட்டே...

கலகலப்ரியா said...

@வழிப்போக்கன் - யோகேஷ்

யோகேஷ்... இது சூப்பரு...

கலகலப்ரியா said...

@moulefrite

அவ்வ்... வடை போச்சேன்னு சொல்ல மாட்டேனே... எனக்குப் பிடிச்ச முறுக்கு எல்லாம் நான் ரிப்பீட் பண்ணிட்டேன்..

Kumky said...

ஒர் ரெண்டுங்கெட்டான்” காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கலாச்சாரம் என்கிற பேரில் கட்டமைக்கப்பட்டிருந்த ஜாதீய பூச்சுக்கள் உதிர்ந்துகொண்டிருக்கின்றன.

தகவல் தொழில் நுட்பம் தனி மனித வாழ்வில் கொண்டுவந்த புரிதலினால் உலகமும் உள்ளங்கைக்குள்.

அரசாங்களினால் கட்டமைக்கப்படுகிற நுகர்வுக்கலாச்சாரத்தின் பெரும் வீச்சும் தனி மனித வாழ்வியலின் திசை திருப்பும் சுக்கான் ஆகிவிட்டிருக்கிறது.

ஆக அமைப்பில் கதைகளினாலும் புராணங்களினாலும் கல்வியினாலும் குடும்ப மூத்தோர்களினாலும் தலை முறையாக கட்டமைக்கப்பெற்றிருந்த தனி மனித ஒழுக்கமானது காற்றில் பறந்து.,எப்படி வேண்டுமானாலும் வாழ்வை கடத்துகிற மனிதர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் போல..

vasu balaji said...

@கலகலப்ரியாம்கும்:)). நன்றிம்மா.

vasu balaji said...

@காமராஜ்

//பாலாண்ணா..
இப்பதான் வந்தேன் பழய பதிவுகளும் சேர்த்து உபயோகமுள்ள
ஒரு தொகுதியாக வந்திருக்கிறது.
எங்கள் சங்கத்துக்கும் தேவைப்படும்.
நன்றிகள் //

மனங்களைப் பொறுத்தே பயன்பாடும் இல்லையா காமராஜ். இந்தப் பொறியும் எங்கோ கங்காகி ஒரு விளக்கேற்றும் என்ற நம்பிக்கை தந்தமைக்கு என் நன்றி உங்களுக்கு:)

vasu balaji said...

@பிரபாகர்

நன்றி பிரபா

vasu balaji said...

@சே.குமார்
நன்றி குமார்.

vasu balaji said...

@தேனம்மை லெக்ஷ்மணன்
நன்றிங்க தேனம்மை.

vasu balaji said...

@நிகழ்காலத்தில்...

நன்றிங்க.

vasu balaji said...

@Sethu

அந்தக் காலம் மலையேறிவிட்டது சேது. பாதிப்பு இப்போது இருதரப்பிற்கும்.

vasu balaji said...

@ராஜ நடராஜன்

இதை மாற்றம் என்றா சொல்கிறீர்கள் அண்ணே. பாம்புக்கு ராஜா மூங்கித்தடி என்பதுதான் சட்டம்.

vasu balaji said...

@Thekkikattan|தெகா

ம்ம். ஊக்கத்துக்கு நன்றி தெ.கா.

vasu balaji said...

@அது சரி(18185106603874041862)

இளைய தலைமுறையில் இந்தத் தெளிவு ஏன் பரந்துபடவில்லை என வியக்க வைக்கிறது. நன்றி அது சரி.

vasu balaji said...

@அது சரி(18185106603874041862)

பிரமாதம். மிகச்சரி.

vasu balaji said...

@எல் போர்ட்.. பீ சீரியஸ்..

எம்புட்டு உஷாராயிருந்தாலும் ஆட்டைய போடணும்னா ஆயிரம் வழியிருக்குன்னும் புரியணுந்தாயி.:)

vasu balaji said...

@வழிப்போக்கன் - யோகேஷ்
நன்றி யோகேஷ்

vasu balaji said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றிங்க நித்திலம்.

vasu balaji said...

@ஈரோடு கதிர்

ரெண்டு ஒய் க்கும் ஒரே வலி. :(

vasu balaji said...

@வல்லிசிம்ஹன்

நன்றிங்க.

vasu balaji said...

@moulefrite

நன்றிங்க:))

vasu balaji said...

@கே.ஆர்.பி.செந்தில்

ஆமாம். கலாசாராத்தினு ஊடே ‘லா’ வந்தால்தான் நிற்கும்.

vasu balaji said...

@கும்க்கி

சரியாகச் சொன்னீர்கள் கும்க்கி. நன்றி

vasu balaji said...

@கலகலப்ரியா

ஆஹா. நறுக் தவிர இம்புட்டு பின்னூட்டம் இப்போதான் வாலு. நன்றி நன்றி.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

சார் நல்ல பதிவு . சட்டம்னாலே சிக்கல்தான் . ஆனாலும் நீதி கடைசியில் ( கடைசியலதான் .... ) வெல்லும் .....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

சார் நேரம் இருந்த என்னோட பதிவையும் கொஞ்சம் வந்து படிச்சு பார்த்து நான் ஏதாவது தப்ப எழுதி இருந்த கருத்து சொல்லிட்டு போங்க . . . [ முக்கியமா இந்த பதிவுகளை படிச்சுட்டு சொல்லுங்க :1 ) http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html (
சாதி = எய்ட்ஸ் (part-1) )
2 ) http://rockzsrajesh.blogspot.com/2010/11/part-2.html (
சாதி = எய்ட்ஸ் (part-2) ) ]
பணிவுடன் ,
ராக்ஸ்

ரிஷபன் said...

//அது பெரியவர்கள் பார்த்து நடத்தும் திருமணமோ, காதல் திருமணமோ, சுயமரியாதைத் திருமணமோ எதுவாயினும் சம்பந்தப் பட்ட இருவரை வைத்தே அவர்களின் நல் வாழ்வு அமைகிறது. திருமணம் பெரிய பாதுகாப்பு ஒன்றும் கொடுத்துவிடவில்லை. ஏமாற்றுபவன் சட்டத்தையும் ஏமாற்ற முடிகிறது//

100/100 உண்மை!

க.பாலாசி said...

முதல் நாத்தில் வரும் முதல் மனைவி ஆச்சர்யப்படுத்துகிறார். வாழ்க..

இரண்டாவதுல ஒண்ணும் சொல்ல முடியல..

பல விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறீங்க.. நன்றியத்தவிர வேறென்ன சொல்றது.

"உழவன்" "Uzhavan" said...

இப்படி ஒரு சிலர் செய்துவிடுவதால், சிலசமயங்களில் ஒரு குடும்பமே வீதிக்கு வந்துவிடும் நிலைமை ஏற்பட்டுவிடுகிறது.

vasu balaji said...

@rockzsrajesh

நன்றிங்க. நிச்சயம் படிக்கிறேன்.

vasu balaji said...

@ரிஷபன்

நன்றி ரிஷபன்

vasu balaji said...

@க.பாலாசி

நன்றி பாலாசி

vasu balaji said...

@"உழவன்" "Uzhavan"

நன்றிங்க உழவன்

ரோஸ்விக் said...

//பிரபாகர்
November 20, 2010 9:57 PM இந்த மாதிரி உண்மையெல்லாம் சொல்லப்போனாத்தான் புரியாத சில இதுங்க புடுங்கி மாதிரி பேசுதுங்க... விடுங்க ஆசான்!...

பிரபாகர்...
//

கோபப்படாதீங்க சார் :-). பொதுவெளில அப்படித்தான் இருக்கும். நீங்களும் வார்த்தையை விடாதீங்க.

Be Cool :-)