Thursday, November 18, 2010

அப்ப இது என்னங்க?...

நாத்து 4: நாமக்கல் பக்கதுல பாலப்பட்டின்னு ஒரு சின்ன கிராமம். முன்சீப்புக்கு பெரிய பொண்ணு பிச்சம்மா. ஏழு வயசுல கலியாணமாச்சி. புருஷனுக்கு 13 வயசாம். அஞ்சு நாள் கலியாணம். கலியாணம் முடிஞ்சி ஊருக்கு போன புருஷன் ஒரு மாசத்துல தர்பப்புல்லு அறுக்கப் போய் பாம்பு கடிச்சி போய் சேர்ந்துட்டான். சாவுக்கு போனவள துக்கிரி முண்ட காலு வச்ச நேரம் (அவுங்க ஊட்டுக்கே போவல பொண்ணு) எம் புள்ளைய சாவடிச்சிட்டான்னு மாமியாக்காரி சாத்து சாத்துன்னு சாத்துச்சாம். மாமி அடிச்சிட்டான்னு கதற தெரிஞ்ச பிச்சம்மாக்கு புருஷன் போய்ட்டான். படிப்புதான் போச்சு. இனி அம்மா வீட்டுல ஒரு மூலையில ஒண்டணுமேன்னு எல்லாம் அழத் தெரியாத வயசு.

பிச்சம்மாளுக்கு மொட்டையடிக்கணுமுன்னு ஒத்தக்கால்ல நின்ன மாமியா வீட்டுக்காரங்களையும், அப்பனையும் பிச்சம்மாவோட தம்பியும் ஆத்தாக்காரியும் செத்துடுவோம்னு போராடி மொட்டையடிக்க விடாம செஞ்சுட்டாங்க. அம்மா வீட்டுல ஒரு இருட்டு ரூம்தான் உலகம் அவளுக்குன்னு ஆகிப்போச்சு. அதான் கஷ்டமிருக்கிறவங்களுக்கு பட்டு கழி நாயேன்னு ஆயுசு குடுப்பானே. அது இருந்துச்சு 79 வயசு வரைக்கும். அண்ணந்தம்பியே காப்பாத்தாத காலத்துல தம்பிங்க ரெண்டு பேரையும் பறி கொடுத்தப்புறம் என்னதான் தம்பி பசங்கள வளர்த்தாலும், தம்பி பொண்டாட்டி வச்சி காப்பாத்துமா என்ன. அதுவே பாவம் ஒரு ஊட்ல சமையல் செஞ்சி பொழைக்குது. புள்ளைல ஒருத்தன் படிப்பு வரலைன்னு ஹோட்டல்ல சர்வர். நீ போ தாயின்னு விட்டுட்டாங்க.

அதும் எங்கயோ கடைசி வரைக்கும் ஒரு ஊட்ல சமயல், எடுபிடின்னு சாப்பாட்டுக்கும் புடவைக்கும்னு உழைச்சி செத்துப்போச்சி. ஏன் பிச்சம்மா? உங்க வீட்டுக்காரர் பேரு கவனமிருக்கா எப்புடி இருப்பாருன்னு கேட்டேன். பேரெல்லாம் தெரியாது. ராஜான்னு கூப்புடுவாங்கன்னு கவனம். அஞ்சு நாள் கலியாணத்துல ஒரு நாள் பல்லாங்குழி ஆடுறப்ப ‘சோ’ தட்டிட்டாள்னு சண்டைல அடிச்சிட்டான்னு அவங்கூட ரெண்டு நாள் பேசலைன்னு சொல்லி சிரிச்சது.

நாத்து 5: பதிமூணு வயசு அலமேலுவுக்கு கலியாணம் ஆகும்போது அவ புருசனுக்கு வயசு 38க்கு மேல். மவளுக்கு 15 வயசு. கலியாணம் ஆகிப் போச்சு. அடுத்த மவளுக்கு 11, புள்ளைங்களுக்கு 5, 3. அவங்களுக்கு பொறந்தது பன்னெண்டு. அப்பல்லாம் ரிஜிஸ்டர் பண்றதில்லை. 70ம் வருஷம் புருஷன் போய்ட்டாரு. பாவி மனுசன் ஆஃபீஸில ரெண்டாம் கலியாணம் பண்ணத பதியல. புள்ளைங்க பென்ஷன் வராதுன்னு சொல்லிட்டு இருந்துட்டாங்க. தனி மனுஷியா போராடி போராடி எங்கயோ கிடந்த ஒன்னு ரெண்டு ஆவணங்கள கொடுத்து கோர்ட் அத்தாட்சி வாங்கி 15 வருஷத்துக்கு அப்புறம் குடும்ப பென்ஷன் வாங்கிச்சி. அந்த பதினஞ்சி வருஷ நரக வாழ்க்கை? அது பண்ண புண்ணியம் கிழவர் போனப்ப இது கிழவி ஆயிடுச்சி. சின்ன வயசுல போயிருந்தா?

நாத்து 6:ஒரு அம்மணிக்கு ரயில்வேல வேலை செஞ்ச வீட்டுக்காரர் இறந்துட்டாரு. பிள்ளைக்கு வேலை வேணும்னு இந்தம்மா தனக்கு கேக்கலை.  ரெண்டாவது கலியாணம் பண்ணலாம்னு பொண்ணு வீட்ல முடிவெடுத்தாங்க. கொஞ்ச மாசத்துல ஒரு டாக்டர் வந்து கலியாணம் பண்ணிக்கறேன்னு வந்தாரு. ரெண்டு பேர் வீட்டு சம்மதத்தோட கலியாணம் நடந்துச்சு. கலியாணம் பண்ணதால பென்ஷன் போச்சு. பசங்க பொண்ணோட அம்மா வீட்டில விட்டு குடித்தனம் ஆரம்பிச்சாங்க. அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச மாசத்துலயே ஒரு விபத்துல போய் சேரவும் ஆரம்பமாச்சி பிரச்சன. குழந்தைங்க வரக்கூடாதுங்கறான் புருஷன். அதுங்களுக்கு பணமும் தரமாட்டேன்னு சொல்லிட்டான். படிக்கிற பசங்க. அந்தம்மணி வந்து பசங்களுக்காவது பென்ஷன் குடுங்கன்னு கேட்டுச்சு. சட்டப்படி நேச்சுரல் கார்டியன் நீங்க உயிரோட இருக்கீங்க. அதனால கிடையாதுன்னு சொல்லிடுச்சி சட்டம். டைவர்ஸ் பண்ண முடியாது பெர்சனல் ரீஸன்னு அழுவுது. போலீசுல கம்ப்ளெயிண்ட் குடுங்க. அவங்க சட்டப்படி கோர்ட் ஆர்டர் வாங்கி கொடுப்பாங்கன்னா அதுக்கு டைவர்ஸ் பண்ணமாட்டனான்னு அழுது. டைவர்ஸ் பண்னாலும் ஒன்னும் கிடைச்சிருக்காது.

நாத்து 7: அந்தம்மணி புருஷன் ஒரு தத்தாரி. கலியாணம் ஆன புதுசுலயே சீட்டாடி, கல்லால கை வச்சி நகை நட்ட வச்சி கேசுல மாட்டாம காப்பாத்தினாங்க. வேலைக்கு போகாம பொண்டாட்டி சம்பளத்துல சாப்பாடு. அடிச்சி, உதைச்சி, காச புடுங்கி இல்லைன்னா திருடி சீட்டாட்டம். ஒரு பையன் ஒரு பொண்ணு. மாசம் இவ்வளவு தரேன். அதுக்குமேல சாவடிக்காதன்னு, அந்தம்மா குழந்தைங்களோட சென்னைக்கு வந்துடுச்சி. அந்தாளு ஊர்ல. சொந்த வீட்டுல இருந்தாரு. அந்தம்மா ஹார்ட் அட்டாக் வந்து மண்டைய போட்டப்ப பையனுக்கு 27 வயசு. படிப்பு முடிச்சும் வேலை கிடைக்கல. பொண்ணுக்கு கலியாணம் ஆயிடுச்சி.

அய்யா வந்தாரு. கொள்ளி போட்டாரு. நகையை அடமானம் வச்சு காரியம் பண்ணாரு. மனுஷன் கில்லாடி. அப்பன் தறுதலை. எங்கம்மாதான் வளர்த்துச்சி. பணம் குடுக்காதீங்கன்னா ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது. சட்டப்படி நாந்தான் புருஷன். எங்களுக்கு அப்ஜக்‌ஷன் இல்லைன்னு கையெழுத்து போட்டுக் குடுங்கன்னு பொண்ணு பையங்கிட்ட டீல் போட்டாரு. இன்சூரன்சு, நகை நட்டு எல்லாம் பொண்னுக்கு. பி.எஃப்.,க்ராச்சுவிடி பணம் பையன் பேருல போட்டு மாச வட்டி. அதுக்கு மேல மாசாமாசம் கொஞ்ச பணம் பென்ஷன்ல இருந்து குடுக்கறதா பேச்சு.

எல்லா ஃபார்மாலிட்டியும் முடிச்சி, செட்டில்மெண்டும் வாங்கிட்டாரு. அப்பவும் ஒரு நப்பாசை. பையனுக்கு கருணை அடிப்படையில வேலை கிடைக்க சான்ஸ் இருக்கான்னு. ஏன்னா வேலை கிடைச்சா க்ராச்சுவிட்டியும் ஆட்டைய போட்டுக்கலாம்னு டீலு. ப்ச். சட்டத்துல வழியில்லை. பே கமிஷன் அரியர்ஸ் வந்தப்ப அந்தப் பணத்துக்கும் பங்கு கேக்குறாங்க சார். என்னா அனியாயம்னு தெனாவட்டா அந்தாளே சொன்ன தகவல் இது.  

(இதுவும் உண்மைச் சம்பவங்கள்தானுங்க. அந்த மூணும் நாத்தில்ல களைன்னு சொல்லிட்டீங்க. இதாச்சும் தேறுமா பாருங்க)

27 comments:

பிரபாகர் said...

நாம தான் மொதலா? கமெண்ட போட்டு டெஸ்ட் பண்ணிட்டு படிப்போம்...

பிரபாகர்...

பிரபாகர் said...

ஆஹா! கமெண்ட் அப்ரூவலுக்கு வெயிட்டிங்... ரிலீஸ் பண்றதுக்குள்ள படிச்சிடுவோம்...

பிரபாகர்...

பிரபாகர் said...

இதுக்கு முன்னால இருக்கிறதயே இப்பத்தான் படிக்கிறேன்...

என்னத்த சொல்ல!... இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை!...

பிரபாகர்...

'பரிவை' சே.குமார் said...

மனதை வருடும் நாற்றுக்கள்...
மனிதரில் இத்தனை நிறங்களா?

Thenammai Lakshmanan said...

மனுஷங்க எத்தனை விதம்..

க.பாலாசி said...

முத நாத்த படிக்கும்போதே மனசுக்குள்ள பக்குன்னு ஆயிடுச்சுங்க... ச்ச்ச என்னமாதிரியான வாழ்க்கை, மனிதர்கள்... நல்லவேள இப்பல்லாம் இந்த சின்னவயசு திருமணம், மொட்ட அடிக்கிறது தனிமைப்படுத்தறதுன்னு பெரிய கொடுமைகள் இல்லாம இருக்கு. உங்ககிட்ட சொன்ன பதில்ல அந்தம்மாவால எப்டி சிரிக்கமுடிஞ்சதுன்னு யோசிச்சிகிட்டிருக்கேன்...

செ.சரவணக்குமார் said...

அந்த 4 ம் நாத்து மனதை என்னவோ செய்கிறது.

மனதில் சுமையேற்றிய இடுகை.

பவள சங்கரி said...

பிச்சம்மாவைப் பாடு பெரும்பாடு போல......அலமேலுவோட அவலம் ......அதிகம். ரயில்வே வூட்டுக்காரரோட சம்சாரம் பேரு இல்லீங்களா? தத்தாரி புருசனுக்கு வாக்கப்பட்டவ கதி அதோகதிதானே?

அன்புடன் நான் said...

நெருடல்கள்..............

கலகலப்ரியா said...

ம்ம்...

VELU.G said...

இப்படியெல்லாம் மனுஷங்க இருக்கத்தானே செய்யறாங்க... மனசை பிழிஞ்சிடுச்சுங்க

VELU.G said...

இப்படியெல்லாம் மனுஷங்க இருக்கத்தனே செய்யறாங்க.. மனசை பிழிஞ்சிடுச்சுங்க

ஆரூரன் விசுவநாதன் said...

எத்தனை விதமான மனிதர்கள்...
எத்தனை விதமான பிரச்சனைகள்...

இந்த இடத்திலதான் வேற வழியுமில்லாம, நம்பிக்கையும் இல்லாம கடவுள திட்ட வேண்டியிருக்குது.

Unknown said...

இப்பல்லாம் கருத்து சொல்றதுக்கே பயமா இருக்கு...

Unknown said...

சார்! ஒவ்வொன்னும் படிக்கப் படிக்க எவ்வளவு கொடுமையாக இருக்கு.

படிச்சவங்களா சேர்ந்து கோர்ட்க்கு நடை முறை பிரச்சனைகளை எடுத்து சொல்லி பென்ஷன் ஏற்பாடு பண்ண முடியாதா? பென்ஷன் ஆபீஸ் போனாலே லஞ்சம் கொடுத்தா தான் application யே கையில வாங்குறாங்க.

பதிவுத் திருமணம் இல்லாம இது மாதிரி பல ப்ரச்சனனைகள் வந்தப்ப தான், இப்ப நிறைப் பேர் பதிவு செய்ய ஆரம்பிச்சுட்டாங்க ! என் கல்யாணம் அன்னிக்கே சாப்பிடக் கூட இல்லாம, register பண்ண போனா, பண்ணமாட்டேன்கிறான். நேரா அந்த commissioner கிட்டப் போய் தான் register பண்ணேன்.

சிறு வயதிலிருந்தே கல்வி முறையில் மாற்றம் செய்து இதன் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி வரணும்.

நீங்க எழுதியுள்ள ஒவ்வுறு நாத்தையும் புடுங்கி களைஎடுத்து வேறு நல்ல இடத்தில் நட இன்னும் எவ்வளவு வருஷம் வெயிட் பண்ணனும் சார்.

ராஜ நடராஜன் said...

இன்னும் நாத்து நட்டு முடியலையா?

அப்படி என்னதான் நடுறீங்கன்னு பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//ம்ம்... //

நசரு!சீக்கிரம் ஓடியாங்க ஒரு ம் குறையுது.படிக்க விடுங்கப்பா:)

ராஜ நடராஜன் said...

4 வது நாத்து எனக்கு ஏதோ ஒரு நாவலை நினைவுபடுத்துது.பெயர் நினைவுக்கு வரல.

பத்மா said...

இதெல்லாம் எதுக்கு?

வல்லிசிம்ஹன் said...

அவலம். அதைப் போக்க முடியாவிட்டாலும் சிரிக்கத்தெரிந்த அந்த ம்மாவின் வெகுளிக் குணத்திற்கு நமஸ்காரம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ம்ம்...

ரிஷபன் said...

அஞ்சு நாள் கலியாணத்துல ஒரு நாள் பல்லாங்குழி ஆடுறப்ப ‘சோ’ தட்டிட்டாள்னு சண்டைல அடிச்சிட்டான்னு அவங்கூட ரெண்டு நாள் பேசலைன்னு சொல்லி சிரிச்சது.

என்னத்த சொல்ல.. ஒண்ணு விட்ட பெரியம்மாவ அவ புருஷன் ஒதுக்கி வச்சுட்டு வேற கல்யாணம் பண்ணிட்டான். எம்பது வயசுல அவன் செத்த சேதி கேட்டு வேற ஊர்ல இருந்த பெரியம்மா தாலி நீக்கின நேரம்.. (இப்ப அவங்களும் போயாச்சு) ‘எதுக்கும்மா’ அப்ப சிரிச்சாங்க அவங்களும்.

ஈரோடு கதிர் said...

மனச சுழற்றியடிக்குதுண்ணே!

vasu balaji said...

@@நன்றி பிரபா
@@நன்றி குமார்
@@நன்றிங்க தேனம்மை
@@நன்றி பாலாஜி.
@@நன்றி சரவணக்குமார்
@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி கருணாகரசு
@@நன்றிம்மா
@@நன்றி வேலு
@@நன்றி ஆரூரன்
@@நன்றிங்க செந்தில்

vasu balaji said...

@@நன்றி சேது.ரிஜிஸ்டர் பண்ணா பிரச்சினையில்லைன்னு யாரு சொன்னா? அந்த கதை இன்னைக்கு சொல்றேன்.
கல்வி:). ஆமாம். மொழி மாதிரி, இது மெயின் ஸ்ட்ரீம்ல இல்லாம மாரல் இன்ஸ்ட்ரக்‌ஷன்னு ஒரு பீரியட் இருக்கும் முன்ன. அது போச்சு இப்போ. அப்படி வந்தா சொல்லித்தர டீச்சர் இருக்காங்களா? அந்த ஸ்கூல்ல கெட்ட வார்த்த கத்து தராங்கன்னு போய்ட்டே இருப்பாங்க.

vasu balaji said...

@@பாருங்கண்ணே. நானும் நாத்து நாத்துன்னு நடுறேன். அதை களை களையின்னு சொல்றாங்க.

@@நன்றிங்க பத்மா
@@நன்றி வல்லீசிம்ஹன்
@@நன்றி டி.வி.ஆர் சார்
@@நன்றி கதிர்.
@@நன்றிங்க ரிஷபன்.

மாதேவி said...

"நாத்து" பாரம் கூடிவிட்டது.