Tuesday, November 9, 2010

பயணம்..

திசையற்ற வெளியில் என் பயணம்
நானும் என் நிழலும் மட்டுமே
பகலின்றி இரவின்றி
பயணம் மட்டுமே..
திடீரெனத் தோன்றியதோர் பட்டாம்பூச்சி
இமை விசிறி என் முன் பறந்தது..
யார் நீ! என்றேன்
நான் நீ என்றது!
சொன்ன நொடியில் நான் அதுவென்றுணர்ந்தேன்
பாதை தோன்றியது! ஓரம் பசும் புற்களும்
பந்தலாய் மரங்களும் பறவை ஒலிகளும்
களைப்பு மறைந்து கனவாய்த் தோன்றுகிறது
இப்போது நானும் என் பட்டுப்பூச்சியும் மட்டுமே!
பகலின்றி இரவின்றி
பயணம் தொடர்கிறது இசையாய்...
~~~~~~~~~~~~~~~~~~~

80 comments:

க ரா said...

இப்படி ஒரு பயணம் வாய்ச்சா நல்லாத்தான் இருக்கும் சார் :)

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லா இருக்கு சார்... உங்கள மாதிரி வரி வரியா விமர்சிக்க எனக்கு வர மாட்டேங்குது... ஸாரி சார்...

Chitra said...

இப்போது நானும் என் பட்டுப்பூச்சியும் மட்டுமே!
பகலின்றி இரவின்றி
பயணம் தொடர்கிறது இசையாய்...

.....lovely!!!!
Positive and cheerful attitudes make the journey of life, more meaningful and great!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

நசரேயன் said...

அண்ணே புது கடைக்கு திறப்பு விழா எப்ப?

நசரேயன் said...

//இப்படி ஒரு பயணம் வாய்ச்சா நல்லாத்தான் இருக்கும் சார் :)
//

நடந்து போங்க

vasu balaji said...

@நசரேயன்

என்ன இது புது கதை:))

vasu balaji said...

@நசரேயன்

ஆமா. தொப்பை குறையலன்னு வருத்தப் பட்டர்ல.

Unknown said...

அற்புதம்.

பகலின்றி இரவின்றி பயணம் செய்ய ஆசை தான். ஆனா கடன் கொடுத்துவன் கூடவே துரத்துவானே!

நசரேயன் said...

திசையற்ற வெளியில் என் பயணம்
நானும் என் நிழலும் மட்டுமே
பகலின்றி இரவின்றி
பயணம் மட்டுமே..
திடீரெனத் தோன்றியதோர் டாஸ்மாக்
இமை விசிறி என் முன் பறந்தது.. யார் நீ! என்றேன்
நான் நீ என்றது!
சொன்ன நொடியில் நான் அதுவென்றுணர்ந்தேன்
பாதை தோன்றியது! ஓரம் பசும் புற்களும்
பந்தலாய் மரங்களும் பறவை ஒலிகளும்
களைப்பு மறைந்து கனவாய்த் தோன்றுகிறது
இப்போது நானும் என் சரக்கு பாட்டில் மட்டுமே!
பகலின்றி இரவின்றி
பயணம் தொடர்கிறது போதையாய்...

நசரேயன் said...

//பகலின்றி இரவின்றி பயணம் செய்ய ஆசை தான். ஆனா கடன் கொடுத்துவன் கூடவே துரத்துவானே//

மஞ்ச கடிதாசி கொடுங்க சேது

நசரேயன் said...

@வானம்பாடிகள்

மணி அண்ணன் புதுக்கடை பேரை போட்டு இருந்தாரு ?

Unknown said...

சார்,

தளபதி உங்களோட வரேன்கிறார். நிம்மதி யாருக்கு உங்களுக்கா? தளபதிக்கா?

vasu balaji said...

@நசரேயன்

ம்ம்ம்ம்ம். அப்படி இல்ல

திசையற்ற வெளியில் என் பயணம்
நானும் என் நிழலும் மட்டுமே
பகலின்றி இரவின்றி
பயணம் மட்டுமே..
திடீரெனத் தோன்றியதோர் டாஸ்மாக்
இமை விசிறி என் முன் பறந்தது.. யார் நீ! என்றேன்
நான் நீ என்றது!
சொன்ன நொடியில் நான் அதுவென்றுணர்ந்தேன்
பாதை தோன்றியது! ஓரம் நடைபாதையும்
வெந்ததாய் மீனும் கோழியும்
களைப்பு மறைந்து கனவாய்த் தோன்றுகிறது
இப்போது நானும் என் சரக்கு பாட்டில் மட்டுமே!
பகலின்றி இரவின்றி
பயணம் தொடர்கிறது போதையாய்...

vasu balaji said...

நசரேயன் said...

@வானம்பாடிகள்

மணி அண்ணன் புதுக்கடை பேரை போட்டு இருந்தாரு ?//

அது எல்லா கணக்கும் புதுசா ஆரம்பிக்கச் சொல்லுது. கெடன்னு விட்டுட்டேன்:))

Unknown said...

மஞ்ச கடுதாசி கொடுத்தா தங்கமணி பிங்க் ஸ்லிப் கொடுதுருவாங்களே!

Unknown said...

அப்பா நீங்க ரெண்டு பெரும் சேர்ந்து ஒரு மார்கமாத்தான் போறீங்க!

நசரேயன் said...

@Sethu

பிங்க் ஸ்லிப் நெத்தியிலே ஒட்டிக்கலாம்

Unknown said...

சூப்பர் ஐடியா தளபதி.

நசரேயன் said...

இது எப்படி ?

திசையற்ற வெளியில் என் பயணம்
நானும் என் நிழலும் மட்டுமே
பகலின்றி இரவின்றி
பயணம் மட்டுமே..
திடீரெனத் தோன்றியதோர் கவுஜ
இமை விசிறி என் முன் பறந்தது..
யார் நீ! என்றேன்
நான் நீ என்றது!
சொன்ன நொடியில் நான் அதுவென்றுணர்ந்தேன்
பாதை தோன்றியது! ஓரம் பசும் புற்களும்
பந்தலாய் மரங்களும் பறவை ஒலிகளும்
களைப்பு மறைந்து கற்பனையாய் தோன்றுகிறது
இப்போது நானும் என் கவுஜையும் மட்டுமே!
பகலின்றி இரவின்றி
பயணம் தொடர்கிறது கானல் நீராய்

Unknown said...

இப்போது நானும் என் கவுஜையும் மட்டுமே!
- ஏன் தளபதி! கூடவே வளவளத்தாவை சேர்துக்குகங்களேன்!.

நசரேயன் said...

திசையற்ற வெளியில் என் பயணம்
நானும் என் நிழலும் மட்டுமே
பகலின்றி இரவின்றி
பயணம் மட்டுமே..
திடீரெனத் தோன்றியதோர் விடை கோழி
இமை விசிறி என் முன் பறந்தது.. யார் நீ! என்றேன்
நான் நீ என்றது!
சொன்ன நொடியில் நான் அதுவென்றுணர்ந்தேன்
பாதை தோன்றியது! கோழியை அடித்தேன்
விறகாய் மரங்களும்,தீயாய் கோழியும்
தின்று களைப்பு மறைந்து கால்வாய் தோன்றுகிறது
இப்போது நானும் என் வறுத்த கோழி மட்டுமே!
பகலின்றி இரவின்றி
பயணம் தொடர்கிறது மீனைத்தேடி

-குடுகுடு சிறப்பு கவுஜ

நசரேயன் said...

// வளவளத்தாவை சேர்துக்குகங்களேன்!.//

வளவளத்தா கனவுல இருக்கா

நசரேயன் said...

//ரொம்ப நல்லா இருக்கு சார்... உங்கள மாதிரி வரி வரியா விமர்சிக்க எனக்கு வர மாட்டேங்குது... ஸாரி சார்...//

இதையே வரி வரியா போட்டு இருந்தா கவுஜ ஆகி இருக்குமே பிரியா

நசரேயன் said...

சேது ஏன் அழிச்சி .. அழிச்சி விளையாடுறாரு ?

Unknown said...

உங்க பதில் late ஆகா வந்தது. அதனால் நான் எழுதியது உங்களுக்கு பிடிக்கவில்ல என்று நினைத்து தூக்கிட்டேன். மன்னிக்கவும்.

நசரேயன் said...

Positive and cheerful attitudes make the journey to johnny walker

--என் பங்கு பீட்டர்

vasu balaji said...

@நசரேயன்

johny waker makes you the jay walker:))

நசரேயன் said...

சேது கடையிலே ஏத்தினா எத்துனது தான் அழிக்க எல்லாம் ௬டாது, அழிச்சி விளையாண்ட கும்மி நல்லா இருக்காது

நசரேயன் said...

//johny waker makes you the jay walker:))//

சரக்கு அடிக்காமலே சந்தோசம் வருதே

vasu balaji said...

@Sethu
/சார்,

தளபதி உங்களோட வரேன்கிறார். நிம்மதி யாருக்கு உங்களுக்கா? தளபதிக்கா? /

வளவளத்தாக்கு

Unknown said...

கையில johnny வால்கர்.

மனசில வளவளத்தா.

- அப்ப தளபதியை எப்பதான் நினைவுலகுக்கு இழுத்து வருவது.

கலகலப்ரியா said...

ஓய்... யாரு இங்க ஓவரா சவுண்ட் விடறது... நாமல்லாம் இருக்கோம்ல...

பை த வே.. Yesuvadian அப்டின்னு ஒரு டெய்வரு இத்துப்போன பஸ் ஒன்ன வச்சு ஓட்டிக்கிட்டிருந்தாரு... இப்போ டெய்வரயும் காணோம் பஸ்ஸயும் காணோம்... யாராவது பாத்தியளா...

மதுரை சரவணன் said...

நல்ல பயணம் . த்ன்னை உணர்தல் இருப்பதிலே சிறந்தது... நரேனின் போட்டிக் கவிதைகள் அசத்தல்.. வாழ்த்துக்கள்

vasu balaji said...

கலகலப்ரியா said...

ஓய்... யாரு இங்க ஓவரா சவுண்ட் விடறது... நாமல்லாம் இருக்கோம்ல...

பை த வே.. Yesuvadian அப்டின்னு ஒரு டெய்வரு இத்துப்போன பஸ் ஒன்ன வச்சு ஓட்டிக்கிட்டிருந்தாரு... இப்போ டெய்வரயும் காணோம் பஸ்ஸயும் காணோம்... யாராவது பாத்தியளா...//

அவருக்கு கவுஜ பொங்கி பொங்கி பஸ் முங்கி போகுதாம். இப்ப போட் விடுறாரு

vasu balaji said...

எங்க ரெண்டு பேரும் பறந்துட்டாங்க?

Unknown said...

"ஓய்... யாரு இங்க ஓவரா சவுண்ட் விடறது... நாமல்லாம் இருக்கோம்ல..."

பிரியா சவுண்ட் ஜாஸ்தியா காதில விழுந்துது சார். அதான்.

நசரேயன் said...

my journey is nowhere
without dawn and dusk
with my shadow
sudden sparkled light of silkworm in front of my eyes
who are you, I asked
I, you, replied
I felt the same on that second
the way has come! grass in the sides
dream is suppressed tired
now it me and silkworm
without dawn and dusk
music of journey continues..........

--இங்கலிபிசாக்கம்

கலகலப்ரியா said...

அந்தப் பயம் இருக்கட்டும் சேது.. :o)

Unknown said...

தளபதி. --இங்கலிபிசாக்கம் தான் suparo சூப்பர்.

நசரேயன் said...

//Yesuvadian அப்டின்னு ஒரு டெய்வரு இத்துப்போன பஸ் ஒன்ன வச்சு ஓட்டிக்கிட்டிருந்தாரு... இப்போ டெய்வரயும் காணோம் பஸ்ஸயும் காணோம்... யாராவது பாத்தியளா..//

வேலை யாருக்கு பார்க்கேன்னு எனக்கு சந்தேகமா போச்சி,அதான் பஸ்சை வித்துபுட்டேன்

கலகலப்ரியா said...

டெய்வர்... இன்லீஸ்பீஸ் வேறயா... இங்கிலிபிசாக்கம்தான் உங்க பேரா... சொல்லவே இல்ல..

Unknown said...

"அந்தப் பயம் இருக்கட்டும் சேது.. :o)"

- இல்லாட்டி எப்பிடி. நீங்க கீபோர்ட் தட்டற சத்தம் கேட்குதே.

கலகலப்ரியா said...

||வேலை யாருக்கு பார்க்கேன்னு எனக்கு சந்தேகமா போச்சி,அதான் பஸ்சை வித்துபுட்டேன்||

எப்டியோ.. பயணிகள் தப்பிச்சாய்ங்க.. என்னோட பஸ்ல டெய்வர் ஞாபகார்த்தமா பேரு மட்டும் எழுதி வச்சிருக்கு... ஃப்ரேம் பண்ணி..

கலகலப்ரியா said...

||- இல்லாட்டி எப்பிடி. நீங்க கீபோர்ட் தட்டற சத்தம் கேட்குதே.||

அட அது உங்க கீ போர்ட் சேது... ஸ்ஸ்ஸபா... பயம் என்ன எல்லாம் செய்யுது..

கலகலப்ரியா said...

சரி இன்னைக்கு ஓவரா கும்மி அடிச்சிட்டேன்... பை மக்கா..

எல் கே said...

பிரயாணம் அருமை

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு.

Anonymous said...

ரைட் ரைட்.. :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

விடுங்கண்ணே.. எனக்கு கவிதை தெரியாதுனு யார்கிட்டையும் சொல்லாதீங்க...

அப்பால வரேன்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

50 போட்டிருக்கேன்..
ஏதோ, இலவசமா
இந்தியா பூரா சுத்தற்மாறி ரயில் டிக்கெட மட்டும் அனுப்பி வையுங்க.. ஹி..ஹி

தமிழ்க்காதலன் said...

ஒரு நல்லக் கவிதை. பாராட்டுக்கள். வந்து போங்கள்...( ithayasaaral.blogspot.com )

காமராஜ் said...

நல்ல வெயில் நேரத்தில் ஜிலீர்னு முகத்திலடிக்கிற குளிர்காற்றுப்போல இந்தக்கவிதை.பட்டாம் பூச்சியாகிறது மனசு.

Ashok D said...

திசையற்ற வெளியிலோர் பயணம்
நானும் நிழலும் மட்டுமே
இரவு பகலன்றி
தொடர்கிறது..
சட்டென தோன்றிய பட்டாம்பூச்சி
இமைதிறந்து முன் பறந்தது..
யார்? எனக்கேட்டேன்
நான் நீ என்றது!
க்‌ஷனத்தில் அதுவென இருந்தேன்
பாதையாய் பசும் புற்களாய்
பந்தலாய் மரங்களாய் பறவையாய் ஒலிகளாய்
வாழ்ந்து கலந்தேன்
களைப்பு மறைந்து கனவாய்த் தோன்றுகிறது
இப்போது நானும் என் பட்டாம்பூச்சியும் மட்டுமே!
பொழுதன்றி தொடர்கிறது
பயணம்
அனைத்தும் இசையாய்...


(நாங்களும் எழுதுவோம்மில்ல :)

vasu balaji said...

D.R.Ashok said...
/(நாங்களும் எழுதுவோம்மில்ல :)/

கையக் குடுங்க அசோக். அழகு:)

பத்மா said...

romba nallarukunga sir

பவள சங்கரி said...

சார் உங்க கவிதை அருமை சர்ர்....... நசரேயன் போட்டி கவிதையும் சூப்பர்.....இது போல இன்னும் நிறைய எழுதுங்க சார்....

Ahamed irshad said...

க‌வித‌ க‌வித‌...

(எதிர்க‌வுஜ‌ எப்ப‌டி எழுதுற‌துன்னு யாராச்ச‌ம் டியூஷ‌ன் எடுங்க‌ப்பா..)

பா.ராஜாராம் said...

superb bala annaa!

nalamaa?

Unknown said...

அகம் பிரமாஸ்மி....

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லா இருக்கு.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

க.பாலாசி said...

ரொம்ப அருமை.. உள்ளாழ்ந்து அனுபவிக்கும்போது இந்த பயணம் சுகம்.. படிக்கும்போதும்...

Admin said...

கடைசி வரிகளில் நிற்கின்றது கவிதையின் ரசனை.. அழகு... வாழ்த்துக்கள் சார்..

suneel krishnan said...

அட்டகாசம்!!

ஈரோடு கதிர் said...

சுகமான பயணம்

Thenammai Lakshmanan said...

அட அருமை.. பாலா சார்.. இப்படி கேட்ட மாத்திரத்தில் பறக்கும் மனம் இருந்தால் சுகம்தான்..:))

பிரபாகர் said...

அருமை கடவுளே... எப்படி இதை இவ்ளோ நேரம் படிக்காம விட்டேன்? காலையில இருந்து ஆன்லைன்ல இருந்தும் கவனிக்கவவே இல்லையே...?

பிரபாகர்...

Jerry Eshananda said...

ரசித்தேன்.

ரிஷபன் said...

கவிதை அழகு!

Paleo God said...

சேம் ப்ளட்ட ரிப்பீட்டிக்கிறன் சார்!!

அவ்வ்வ் :))

ராஜ நடராஜன் said...

எல்லோரும் கவிதை சொல்லிகிட்டேயிருந்தா நான் தனியா பயணிக்கவா?

கண்ணதாசா!சீக்கிரம் ஓடிவா!

இரண்டு மனம் வேண்டும்
கவிதை பாட ஒன்று
கதைப்பதற்கு ஒன்று.

Radhakrishnan said...

பிரமாதமான பயணம். அழகிய கவிதை. அது ஏன் கவிஞர்கள் பட்டாம்பூச்சியை தேர்ந்தெடுக்கிறார்கள்?

ஹி ஹி! நசரேயரே, எதிர்கவிதை எதிரிகவிதை ;)

a said...

//
பயணம் தொடர்கிறது இசையாய்...
//
அருமைங்கோ........

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆஹா...இதுவும் ஒரு சுகமே...!!!!

அன்புடன்,

“ஆரண்ய நிவாஸ்”
http://keerthananjali.blogspot.com/

vasu balaji said...

@இராமசாமி கண்ணண்

நன்றிங்க

vasu balaji said...

@கலகலப்ரியா

அவ்வ்வ்வ்வ்வ். கிண்டல் பண்ணாதம்மா. நன்றி.

vasu balaji said...

@Chitra
நன்றிங்க

vasu balaji said...

@@நன்றி டி.வி.ஆர்.சார்
@@தளபதி நன்னி நன்னி
@@நன்றி சேது
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி பாலாஜி சரவணா
@@நன்றி பட்டா
@@நன்றிங்க தமிழ்க்காதலன்
@@நன்றிங்க காமராஜ்
@@நன்றி அசோக்
@@நன்றிங்க பத்மா
@@நன்றிங்க் நித்திலம்
@@நன்றி இர்ஷாத்
@@ஆஹா நன்றி பா.ரா. நல்லாருக்கேன். நீங்க.

vasu balaji said...

@@நன்றி செந்தில்
@@நன்றிங்க சே.குமார்
@@நன்றிங்க நண்டு
@@நன்றி பாலாசி
@@நன்றி சர்ஹூன்
@@நன்றி டாக்டர்
@@நன்றிங்க கதிர்
@@நன்றிங்க தேனம்மை
@@நன்றி பிரபா
@@நன்றி ஜெரி
@@நன்றி ரிஷபன்
@@நன்றி ஷங்கர்
@@நன்றி ராஜண்ணா
@@நன்றிங்க வி.ஆர்
@@நன்றிங்க யோகேஷ்
@@நன்றிங்க ஆர். ஆர். ஆர்