கடந்த பத்துப் பதினைந்து நாட்களாக பதிவுலகில் சலசலப்பை ஏற்படுத்திய தலைப்பு ‘லிவிங் டுகெதர்’. நேர்மையான, வக்கிரமான, நகைச்சுவையான, புரிதலுடனான, அபத்தமான என்று பல பதிவுகள் வந்துவிட்டன. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. திரும்பவும் முதலிலிருந்தா என்று அலுத்துக் கொள்ள வேண்டாம். இந்த விவாதங்களில் முக்கியமாக முன்வைக்கப்பட்ட விஷயம் பிள்ளைகளின் எதிர்காலம் என்பது.
எதிர்ப்பவர்கள் அணியில் பிள்ளைகள் வன்முறையாளனாக, சமூக விரோதிகளாக வளரக்கூடும் என்ற அச்சம், பிள்ளைகளுக்காக வாழ்வது என்ற தியாகம் இருக்காது, பேஏஏஏர் சொல்லும் பிள்ளையாக இருக்காது என்ற அதி நவீன கண்டுபிடிப்பு (ங்கொய்யால தாத்தனுக்கு அப்பன் பேரு கேட்டா சொல்லத் தெரியாது இதுல குடும்பப் பேரை காப்பாத்தி சொல்ல வேற போகுது),விட்டுக் கொடுத்து வாழ்தல் என்ற மஹா உன்னதமான தியாகம் எல்லாம் பேசப்பட்டது.
அது அவரவர் விருப்பம், அடிப்படை உரிமை என்று பேசியவர்கள் குழந்தை வளர்ப்பு முறை, மேலை நாடுகளில் குழந்தைகளுக்கான உரிமைகள், சுதந்திரங்கள் போன்றவற்றை முன்வைத்தார்கள்.
எதிர்ப்பு, ஆதரிப்பு, இரண்டுமற்ற தனிப்பட்ட மனித உரிமை என்பது தாண்டி கருத்துக்களை மட்டும் பார்க்கும் போது முக்கியமாக தென்படும் விஷயம் பெற்றோர்களின் கடமை (பிள்ளைக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது) பிள்ளைகளின் கடமை என்பது.
டமில் தந்தையோ, இந்தியத் தந்தையோ, கோணியைச் சுத்தி அடித்தாற்போல் பொத்தாம் பொதுவாக அயல்நாட்டுத் தந்தையோ எல்லாவற்றிலும் பொறுப்பற்ற தந்தைகள் (அது எந்த வகையிலானாலும்) இருக்கத்தான் செய்கிறார்கள். பொறுப்பான தந்தைகளைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
இன்று கலாச்சாரம், நம் பண்பாடு என்று சொல்லிக் கொண்டு நாம் பிள்ளை வளர்க்கும் முறை இருக்கும் லட்சணத்தைப் பார்த்தேயாக வேண்டும். வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற டகால்டி எஸ்கேபிஸம், வளர்ப்பு சரியில்லை என்ற ஒற்றை வரி விமரிசனத்தில் புறம்தள்ளும் மனோபாவம் எல்லாம் ஓரம் வைத்துவிட்டுப் பார்க்கவேண்டிய விஷயம் இது.
இந்தியத் தந்தையிடம் (முக்கியமாக டமில் தந்தையிடம்) பெற்றோரின் கடமை என்ன என்று கேட்டுப் பாருங்கள். பையனை நல்லபடியா வளர்க்கணும். நல்லா படிக்க வைக்கணும். அவன் கால்ல அவன் நிக்கிறாமாதிரி செஞ்சுட்டா நம்ம வயசான காலத்துல குடும்ப பாரத்தை அவன் சுமப்பான்.
பெண்ணானால், அடக்க ஒடுக்கமாக வளர்க்கணும், படிக்க வைக்கணும், காலா காலத்துல ஒரு நல்ல இடத்துல புடிச்சி கொடுத்துட்டா ஒரு பாரம் குறையும். நாள பின்ன கண்ணக் கசக்காம நல்லா இருந்தா அதைவிட வேறென்ன வேண்டும். ஆக பிள்ளைகள் சுமையும் சுமைதாங்கியும்தானா?
முடிந்தது கடமை!!! இப்படியே நடந்துவிட்டால் குறை சொல்ல ஏதுமில்லைதான். ஆனால், வலிக்குமே என்று பயப்படாமல் சர்ஜரி மாதிரி கீறிப்பார்த்தால் தெரிவது அப்பட்டமான சுயநலம். இல்லை என மறுக்க முடியாது. சற்றே எதிர்பார்ப்பில் சறுக்கல் ஏற்படின் இந்தச் சுயநலம் வெளிப்படாமல் போகாது. அதற்கான அத்தாட்சி இன்று முளைத்திருக்கும் முதியோர் இல்லங்கள்.
நல்ல ஸ்கூலில் சேர்த்தேன். வருமானத்துக்கு மீறியதென்றாலும் ஓவர்டைம், சைட் பிசினஸ் என்று எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு படிக்கவைத்தேன். அவனை இவனைப் பார்த்து காலில் கையில் விழுந்து வேலை வாங்கிக் கொடுத்தேன், அல்லது காசைக் கொட்டி தனியார் கல்லூரியில் காம்பஸ் இண்டர்வியூ இருக்குமென்றே அங்கு சேர்த்தேன். வேலை கிடைத்ததும் சாப்பாட்டுக்கு கொஞ்சம்னு குடுக்குறான். தங்கச்சி, அக்கா கலியாணத்துக்கு ஒரு பைசா கொடுக்கலை என்று குறைபாடுகள் தலை தூக்கும்போது வார்த்தைகள் தடிக்கும்.
உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன் என்று சுயபுலம்பல் ஆரம்பிக்கும்போது, நீ வளர்த்தால் ஆச்சா. நான் பொறுப்பாக நடந்து கொண்டிராவிட்டால் இப்படி அலட்ட முடியுமா என்ற பதிலடி விழும். ஒரு கட்டத்தில் கொச்சையாக உன் இச்சைக்குப் பெற்றுப் போட்டுவிட்டு, வளர்த்தேன் வளர்த்தேன் என்று அலட்டுகிறாயே. நாய் பூனை எல்லாம் கூட பெத்தா வளர்க்காமலா இருக்கு போய்யா ஜோலியப் பார்த்துகிட்டு வரைக்கும் போய், அப்பன்காரன் மடமடவென்று குளியல் அறையிலோ, சமையல் அறையிலோ ஒரு குடம் தண்ணீரை தலையில் கொட்டிக் கொண்டு நீ எனக்குப் பிள்ளையில்லை, நான் உனக்கு அப்பனில்லை என்பதில் கொண்டு விடுகிறது.
தன் விருப்பத்துக்கு படிக்கவைத்து, தன் விருப்பத்தை எதிர்காலமாகத் திணித்து, தன் விருப்பத்துக்கு திருமணம் செய்து, அதற்குப் பின்னும் ‘எம்மவன் என்னைக் கேக்காம ஒரு துரும்பு கூட எடுத்துப் போடமாட்டான்’ என்று பெருமை கொள்வது பெருமைப் படக்கூடிய விஷயமாகத் தெரியவில்லை.
'சுயத்தை மதிக்கத் தெரிந்தவனுக்குத்தான் அடுத்தவனை மதிக்கத் தெரியும்’ என்ற வழக்கு எத்தனை ஆழமானது. பரம்பரை பரம்பரையாக சுயத்தை இழக்கப் பழக்கி அதையே பெருமை பேசுவதன் பலன் இன்று பரவலாக அறுவடையாகிறது. இல்லையேல் பெற்று வளர்த்தேன், இன்று வயதான காலத்தில் உதறிவிட்டான் என்று சுயமிழந்து புலம்பும் நிலை ஏன் வருகிறது?
இந்த அழகில் பிள்ளைகளின் வளர்ச்சிக்கேற்ற, அவர்களின் உள்வாங்கும் திறனுக்கேற்ற அவர்களின் விருப்பமான கல்வி, சுயநம்பிக்கை, அப்பன் காசு கடன் என்ற எண்ணம், சமூகத்துக்காக ஏதேனும் செய்கிறேன் என்ற ஆர்வம், கட்டுப் புத்தகம் தவிர கற்றுக் கொள்ள இப்பிரபஞ்சம் என்ற தெளிவு என்று கற்றுக் கொடுத்து, ஆரம்பம் முதலே கண்டிப்பான நண்பனாக நெறிப்படுத்தும் பாங்கு, உற்ற வயதில் உன் வாழ்க்கையின் ஆரம்பம் இது! உன் வழியைச் செம்மையாய்த் தேர்ந்தெடு. நான் இருக்கிறேன் எட்ட நின்று கைதட்ட!! தேவைப் படும்போது உதவவும் செய்கிறேன். எனக்கு உன் நலம், உன் மகிழ்ச்சி, உன் சிறப்பான வாழ்க்கை போதும் என்று ஒரு நண்பனாக கையசைத்து தேவைப்படுகையில் ஆலோசனை சொல்லி, இது என் கருத்து மட்டுமே! முடிவு உன்னுடையது என்று வழிகாட்டும் வெளிநாட்டுப் பெற்றோரை (வெளிநாட்டிலிருக்கும் இந்தியப் பெற்றோரையும் சேர்த்து) எள்ளிப் பேச எப்படி முடிகிறது?

(தொடரும்?)