Monday, March 28, 2011

நறுக்னு நாலுவார்த்த V 6.0

கடமை தவறினாலும், கண்ணியம் தவறினாலும் கழகத்துக்கு சிறிதளவு சேதாரம்தான் ஏற்படும்; கட்டுப்பாடு தவறினால் கழகம் முழுமையாக சேதமுற்றுவிடும்....கலிஞ்ஜர்.

தல! வாயத் தொறந்துறாதப்பான்னு ராசாவுக்கு எழுதின லெட்டரா. கன்பீஸன்ல இங்க வந்துருச்சு?
---------------------------------------------------------------------------------------------------------------------
சினிமாத் துறையை எனது வீட்டுத் துறையாக பங்கிட்டுக் கொள்வதாகக் கூறுகிறார்கள் - கலிஞ்ஜர்

யோவ்! யாருய்யா வெண்ணை பங்கிட்டதுன்னு சொன்னது மொதலாளிய. இருக்கற பங்கு சண்டை போறாதுன்னு இது வேறயான்னு கலங்கி போவுதுல்ல?
----------------------------------------------------------------------------------------------------------------------
எனது குடும்பம் கலைத் துறையில் இருக்கக் கூடாதா?

கலைத்துறையே உங்க குடும்பமா கீதே தலீவா. அதான் காண்டு.
----------------------------------------------------------------------------------------------------------------------
சொத்து ஆவணங்களை சரியாக தாக்கல் செய்யாததால் பா.ம.க. வேட்பாளர் சதாசிவம் வேட்பு மனு தள்ளுபடியானது.

நியாயம்தானே. இருக்கிற சொத்துக்கு கணக்கிருந்தாதானே அடிச்ச சொத்து எம்புட்டுன்னு கணக்கு பாக்க. இது கூட தெரியாம என்னாத்த வேட்பாளரு.
------------------------------------------------------------------------------------------------------------------------
என்னிடத்தில் பட்டம் பெற்று என்னை எதிர்க்கிறார்கள் : கலைஞர்

எதிர்க்கமாட்டேன்னு எழுதி வாங்கிட்டு குடுத்திருக்கணும் தலீவரே. பட்டம் குடுத்த பாவத்துக்கு டீலுக்கு வரியானு கேக்குறானுவ நன்னாரிப் பசங்க.
------------------------------------------------------------------------------------------------------------------------
மா.கம்யூனிஸ்டுக்கும் அதிமுக தேர்தல் அறிக்கைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை: டி.கே.ரங்கராஜன்

தேர்தலுக்கு குடுக்குற பணத்துக்கு மட்டும்தான் சம்மந்தம் இருக்குன்னு தெரியாம கேக்குறானுவ டீட்டேயிலு.
-----------------------------------------------------------------------------------------------------------------------
தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவேண்டும்: தொல். திருமாவளவன்

தலீவருக்கு ஓக்கேயா? இல்ல கண்டுக்காம உடு பாசுங்குறாரா?
------------------------------------------------------------------------------------------------------------------------
மயிலாப்பூரில் தங்கபாலு போட்டி

அப்புடி போடுங் தலைவரே. இதுலயும் ஊத்திக்கினா கவுன்ஸிலர்ல கலக்கிடலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை உயர்வு

புலிகளை கூண்டோடு ஒழிக்க அன்னை சோனியாவின்..ஓ நிஜப்புலியா.. தொங்கபாலு..
-----------------------------------------------------------------------------------------------------------------------
சிக்கன்,மட்டன்,மீன் விலை ஏற்றம். தக்காளி, கத்தரிக்காய், பீன்ஸ் விலை சரிவு.

ஒருபக்கம் பிரியாணிக்கு கட்சி வாங்கும். இன்னோரு பக்கம் அவன் குடுத்த காசுக்கு ஜனங்க வாங்கும். ஆக மொத்தம் கால்நடைகளுக்கு கட்டம் சரியில்லை.
-----------------------------------------------------------------------------------------------------------------------
அதிமுகவின் சிப்பாயாக மாறிவிட்டார் விஜயகாந்த் : மதிமுக பொருளாளர் ஆவேசம்

நம்ம வேலைய புடுங்கி இன்னோருத்தருக்கு குடுத்தா கடுப்பாதான் இருக்கும். சைலண்டா சஃப்ஃபர் பண்ணனும். ச்ச்செரியா?
----------------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்கள் மீது காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை; ஜெ.,

நடுவுல தாத்தா பிலிம் காட்ட ஸொல்லோ யக்கா வாயேன்னு இளிச்சப்ப  இது மறந்து போச்சுல்ல?
-----------------------------------------------------------------------------------------------------------------------
தேர்தலுக்குப் பின் தமிழ் நாட்டைப் பற்றிக் கவலைப் படமாட்டார் ஜெ. கொடநாட்டைப் பற்றித்தான் கவலைப் படுவார்...ஸ்டாலின்

அவங்க ரேஞ்சுக்கு அது போதும். நமக்கு தமிழ்நாடே காணாது.
----------------------------------------------------------------------------------------------------------------------
அதிமுகவுக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன் பிரச்சாரம்

சுறா படம் காட்டுவேன்னா வாக்காளர்களை மிரட்டிய குற்றத்துல வருமா?
----------------------------------------------------------------------------------------------------------------------
எங்களை தாக்கினால் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், விஜய், அஜீத் ரசிகர்கள் காப்பாற்றுவார்கள் :சத்யராஜ்

ஹய்யோ ஹய்யோ. எங்கள உடு. ராஜபக்ஸேவ பச்சடி வைச்சிட்டு வரோம்னு கூவுச்சி இந்த கொய்யால. த்த்த்த்த்தூ
----------------------------------------------------------------------------------------------------------------------
குற்றச்சாட்டுகளை முறியடிப்போம்: கனிமொழி

ராசா கைய வச்சாஆஆஆஆஆ..அது ராங்கா போனதில்லேஏஏஏஏ
----------------------------------------------------------------------------------------------------------------------
வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் :நடிகர் கார்த்திக்

அதுக்கு அவரு எருமையால்ல இருக்கணும்.
----------------------------------------------------------------------------------------------------------------------
சுவரொட்டி, ஃப்ளெக்ஸ் பேனர்களுக்குத் தடை -- தேர்தல் ஆணையம்.

ங்கொய்யால. அப்பறம், காதுக்குள்ள வாக்கு கேக்குறோம்னு மெரட்டுவானுங் தல..அவ்வ்வ்வ்
----------------------------------------------------------------------------------------------------------------------
விஜயகாந்த் முதல்வர்னா நான் பிரதமர்..போ..வடிவேலு

அப்ப நானு?...பன்னி.
----------------------------------------------------------------------------------------------------------------------

22 comments:

Raja=Theking said...

நான்தான் first

Raja=Theking said...

வடை

Raja=Theking said...

நாலு வரி னு சொல்லிட்டு நெறைய வருது

சேட்டைக்காரன் said...

//வாயத் தொறந்துறாதப்பான்னு ராசாவுக்கு எழுதின லெட்டரா. கன்பீஸன்ல இங்க வந்துருச்சு?//

புதுசா ஹிஹிலீக்ஸ்-னு ஒண்ணு கிளம்பியிருக்கு ஐயா. அதுலே வந்திருக்கும்!

நானும் நறுக்குன்னு சுருக்கமா பின்னூட்டம் போட்டுட்டேன் ஐயா!
ஒரு பானை சோத்துக்கு ஒரு நறுக் பதம்! :-)

அஹமது இர்ஷாத் said...

Ennaa Vedi.. Kalakkal Bala sir :))

Samy said...

Bala, I expected this. Good jokes.samy

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அசத்தல் சாரே! :))

ஸ்ரீராம். said...

எல்லாமே ஹா ஹா ரகம்..! கலைஞர் வேற சினிமாத் துறைதான் நிரந்தரம்...முதல்வர் பதவி வரும் போகும்னு இன்று சொல்லியிருக்கார்.

பிரபாகர் said...

அய்யா கைய வெச்சா... அது அற்புதமா வந்துடுமே....

பிரபாகர்...

யூர்கன் க்ருகியர் said...

ஹைய்யோ ஹைய்யோ .... கலீஞ்சரு கிட்ட படா டமாஸ்ப்பா !!

ரிஷபன் said...

ஆனாலும் ரொம்ப லொள்ளுதான்..

Chitra said...

வைகோ எங்களை ஆதரித்தால் பெருமையாக இருக்கும் :நடிகர் கார்த்திக்

அதுக்கு அவரு எருமையால்ல இருக்கணும்.

.....எல்லாமே கலக்கல் கமென்ட்ஸ். இது இன்னும் கூட... :-)))))

ஜோதிஜி said...

சிரித்த சிரிப்புல வீட்டுக்காரம்மா திட்டுற திட்டு தாங்கமுடியலைங்கோ.......

நன்னாரிபயபுள்ள.

பழமைபேசி said...

இஃகி இஃகி

எல் கே said...

//மயிலாப்பூரில் தங்கபாலு போட்டி

அப்புடி போடுங் தலைவரே. இதுலயும் ஊத்திக்கினா கவுன்ஸிலர்ல கலக்கிடலாம்.//

சேலத்தில் அடிச்சு துரத்தினாங்க. இப்ப இங்க நிக்கறாரா ??

நாய்க்குட்டி மனசு said...

சார் , உங்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்த வாத்தியார் யாருன்னு கையக் காட்டுங்க. அவரு ரெண்டு கையையும் கண்ணில ஒத்திக்கணும். என்னா தமிழு , என்னாதமிழு

ஈரோடு கதிர் said...

||ஒருபக்கம் பிரியாணிக்கு கட்சி வாங்கும். இன்னோரு பக்கம் அவன் குடுத்த காசுக்கு ஜனங்க வாங்கும்.||

இன்னும் காசு குடுக்கலீயே தலைவா!!!!

vasan said...

"நறுக்கு,நறுக்கு,நறுக்கு,நறுக்கு"
ஒவ்வொன்றும், ம‌ற்றொன்றை மிஞ்சியதாய். அருமையான குட்டு.

VELAN said...

//தேர்தலுக்குப் பின் தமிழ் நாட்டைப் பற்றிக் கவலைப் படமாட்டார் ஜெ. கொடநாட்டைப் பற்றித்தான் கவலைப் படுவார்...ஸ்டாலின்

அவங்க ரேஞ்சுக்கு அது போதும். நமக்கு தமிழ்நாடே காணாது.//

Fine Brother.

தெய்வசுகந்தி said...

கலக்கல்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//எதிர்க்கமாட்டேன்னு எழுதி வாங்கிட்டு குடுத்திருக்கணும் தலீவரே. பட்டம் குடுத்த பாவத்துக்கு டீலுக்கு வரியானு கேக்குறானுவ நன்னாரிப் பசங்க.//

Top!

வானம்பாடிகள் said...

அனைவருக்கும் நன்றி:)