Saturday, July 25, 2009

அடல்ட்ஸ் ஒன்லி (பயப்படாம படிங்க)

தலைப்பை பார்த்துவிட்டு வில்லங்கமா இருக்கும் என்றோ என்ன கேடு இவனுக்குன்னோ அவசரப்பட்டு வஞ்சிராதிய. ஒரு பிஞ்சு மனசுல விழுந்த அடியோட சோகம் இது.

வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில மேலதிகாரி நம்ம அதிகாரிய கூப்பிட்டு தெருவில கோலி விளையாடுற புள்ளைங்களுக்கெல்லாம் வேலை குடுக்கிறமா இப்போன்னு கேக்கிற அளவு நம்ம உருவ அமைப்பு. மீசைன்னு ஒண்ணு வருவனான்னு கோவப்பட்டுகிட்டு எம்மேல வஞ்சம் தீர்த்த காலம் அது.

அப்போல்லாம் சென்னையில ஆங்கிலப் படம் மட்டுமே ஓடும் திரையரங்கங்கள் அதிகம். காசினோ, தேவி, குளோப், கெயிட்டி, சஃபையர், புளுடயமன்ட், உமானு ரொம்ப பிரசித்தமான திரையரங்கங்கள் இருந்தன. அதிலயும் மினர்வா, காசினோ எல்லாம் ஒழுக்கத்துக்கு பெயர் போனது. மினர்வால கள்ள டிக்கட், லுங்கி கட்டின ஆளுங்க, பிகிலடிக்கிறதெல்லாம் கேள்விப் படாத விஷயம். கெயிட்டி, உமா, குளோப்பில எல்லாம் எந்த படம் வேணும்னாலும் போடுவாங்க. Three Muscteers (மூன்று எம்.ஜி.ஆர் வீரர்கள்), The man from Istanbul (இஸ்தான்புல் இளசுகள்)னு எல்லாம் தலைப்பு மாறி போஸ்டரடிக்கிறது.

பதினொண்ணாப்பு படிக்கிறப்ப தமிழ் திரையுலகத்தில பெரும் புரட்சி ஏற்பட்டுச்சி. முதல் முதலா வயது வந்தவர்களுக்கு மட்டும்னு படம் வர ஆரம்பிச்சது. தோ ரஹா (இரண்டு பாதை) என்று ஒரு ஹிந்திப் படமும், மஞ்சுளா நடிச்ச ஒரு படம் (மறுபிறவியோ என்னமோ). அம்புடுதேன். தமிழ் பத்திரிகை உலகில் கற்பழிப்பு என்ற வார்த்தை காணாம போயிட்டுது. விமரிசனம் பார்த்தா கதாநாயகியை வில்லன் தோரஹா செய்ய முயற்சிக்கும் போதுன்னு அந்த பதத்த ஒரு வார்த்தையாவே உபயோகிப்பாங்க. இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் படத்துக்கு எதிரா சிவாஜி படம், கமல் படத்துக்கு போட்டியா ரஜனி படம் மாதிரி பாலசந்தர் படத்துக்கு போட்டியா கே. எஸ். கோபால கிருஷ்ணன் படம்னு வரும்.

நம்ம பக்கத்துல இருக்கிற நண்பர் நல்லா நெடு நெடுன்னு வளர்ந்து மனுசனா இருப்பாரு. ஆங்கிலப் பட பிரியர். உமா தியேட்டரில வாரம் ஒரு படம் போடுவாங்க. தவராம போய்ட்டு வருவாரு. வந்து கதை வேற சொல்லுவாரு. இத்தனைக்கு உமாவில ரொம்ப பிரபலமான படமாத்தான் அதிகம் போடுறது. நாம பாட்டுக்கு வெள்ளந்தியா இருந்தோம். நம்ம போறாத காலம் பாலசந்தரின் அரங்கேற்றமும், கோபால கிருஷ்ணனின் வாழையடி வாழையும் வந்திச்சி. ரெண்டுமே அடல்ட்ஸ் ஒன்லி. விமரிசனம் ஆகா, அபாரம். தமிழ்த்திரையுலகம் எங்கயோ போயிடுத்துன்னு வந்திச்சி. கூடவே அடல்ட்ஸ் ஒன்லி கொடுத்தது அனியாயம்னு வேற. ஆனா இதுக்காகவே படம் ஓடும்னொ என்னமோ அப்படியே விட்டாங்க. வகுப்பில யார பார்த்தாலும் நீ பார்த்துட்டியா? என்னாமா எடுத்திருக்காங்கன்னு சொல்ல சொல்ல மனசு கேக்கல. சரி போவம்னு போனது.

முன்னாடியே போனாதான் டிக்கட் வாங்க முடியும். அதனால ஒண்ணர மணி காட்சிக்கு 11 மணிக்கே போய் நிக்க கதவு திறக்கல. ஒரு வழியா 11.45 கு மேல காவல் காரர் கதவ ஒருக்களிச்சி கவுண்டரில மிச்ச தவம் கிடக்க அனுமதிச்சாரு. நம்ம மனசில டிக்கட் வாங்கிட்டா விட்ருவான்னு நினைப்பு. ரெண்டு பேருக்குள்ள மறைஞ்சி மறைஞ்சி நகர காலர புடிச்சி இழுத்து உனக்கு அனுமதியில்லைன்னுட்டாங்க. மத்த பேரெல்லாம் கேவலமா பாக்க தலைய குனிஞ்சிகிட்டு நகர்ந்தா நம்ம வகுப்பு தோழர் ஒரு ஆளு பார்த்து தொலைச்சதோட இல்லாம தெம்பா உள்ள போனாரு. ஆளு வளர்த்தி அப்படி. அடுத்த நாள் வகுப்பில டேய் இவனெல்லாம் அரங்கேற்றம் படம் பார்க்க வந்தான்டா. குழந்தைங்க பார்க்க கூடாதுன்னு விரட்டி விட்டங்கடான்னு தண்டோரா போட, மானம் போச்சி. அழமாட்டாக் குறையா உர்ருன்னு இருந்தது.

பியூசி முடிச்ச கையோட அரசுப் பணி கிடைக்கவும் அதுல சேர்ந்தாச்சி. ஐ.சி.எப். மனமகிழ் மன்றத்தில சனி, ஞாயிறு திரைப்படம் காட்டுவாங்க. கீழ் வீட்டில இருந்த ஒரு மலையாளத்து அண்ணாவோட உறுப்பினர் அட்டைய வாங்கி டிக்கட் வாங்கி வெச்சிடணும். நல்ல படம்னா செவ்வாய் கிழைமையே டிக்கட் கிடைக்காது. நம்மள சோதிக்கன்னே அங்க அரங்கேற்றம் படம் போட்டாங்க. இப்பதான் மேஜராயிட்டமே . எவன் தடுக்கிறதுன்னு ஆறு மணி ஆட்டத்துக்கு டிக்கட் வாங்கியாச்சு.

சனிக்கிழமை அலுவல் முடிச்சி பஸ்ஸ புடிச்சி தெம்பா ஓடி, டிக்கட்ட நீட்டினா டிக்கட் கிழிக்கிற ஆளு இழுத்து விட்டாரு. சின்னபசங்களுக்கு அனுமதி இல்லையாம். ண்ணா ண்ணா நான் கவருமென்டுல வேல பாக்குறன். 18 வயசாயிடிச்சின்னு கிசு கிசுக்க டேய், உன்னமாதிரி எத்தன பேர பார்த்திருக்கேன் ஓடி போயிடுன்னு இறைச்சலா சொல்ல, ரொம்ப‌ கூசி குறுகி போச்சி. அடையாள அட்டை காட்டியா படம் பார்க்கணும்னு ரோசம். நொந்து நூலாகி திரும்பற நேரம்.

அது ஒரே கதவில ஆண் பெண் வரிசை தனியா இருந்தாலும், ஆண்கள் டிக்கட் ஒண்ணு பெண்கள் டிக்கட் ஒண்ணுன்னு அனுப்பறது. ரொம்ப கொடூரமா பெண்கள் வரிசைல கீழ் வீட்டு அக்கா மகள். பத்தாம்பு போன புதுசு. நம்ம கிட்ட டியூசன் வேற படிச்சது. தாவணி போட்ட ஒரே காரணத்துக்காக அத வயசுக்கு வந்ததுன்னு நினைச்சாரோ இல்ல பொம்பள கிட்ட வயசு கேக்கிறது தப்புன்னு நினைச்சாரோ தெரியல. மனுசன் டிக்கட்ட கிழிச்சி உள்ள விட அது பார்த்த பார்வை இருக்கே. மனுசன் தாங்க முடியுமா சொல்லுங்க. ரொம்ப நாள் அந்த புள்ள எதிர்ல வராம நான் பம்மின கொடுமை தனி கதை.

சினிமாவோட சண்டை போட்டுகிட்டு ஒரு மூணு நாலு வருஷம் படம் போனதே இல்ல. இப்படி அடிமேல அடியா வாங்கி அந்த தழும்பு மெதுவா ஆறி ஒரு மாதிரியா மறந்தும் போச்சு. இந்த கடவுளுக்கு என்ன கோவமோ தெரியல. ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை இந்தியத் தொலைக்காட்சியிலேயே முதன் முதலாக பாலச்சந்தரின் காவியம் அரங்கேற்றம் காட்டுனாங்க. ஏழாப்பு படிக்கிற என் பையனும் மூணாம்பு படிக்கிற பெண்ணும் ஹால்ல உக்காந்து பார்க்குதுங்க.

அடல்ட்ஸ் ஒன்லி தரம் தான் மாறிப் போச்ச்சா இல்ல புள்ளைங்க விவரமாயிட்டாங்களா? என்ன கொடுமை சரவணா இது? எப்படியோ தொடர்ந்து என்ன நோவடிக்கன்னே வந்த அந்தப் படத்த இது வரைக்கும் பார்க்கல.


19 comments:

பழமைபேசி said...

பாலாண்ணே, கொஞ்சம் பத்தி பிரிச்சிப் போடுங்க....

http://maanbu.blogspot.com/2009/07/blog-post_25.html

Anonymous said...

kalakal

sakthi said...

ஏழாப்பு படிக்கிற என் பையனும் மூணாம்பு படிக்கிற பெண்ணும் ஹால்ல உக்காந்து பார்க்குதுங்க.

mmmm

:)))))

இது நம்ம ஆளு said...

அடல்ட்ஸ் ஒன்லி தரம் தான் மாறிப் போச்ச்சா இல்ல புள்ளைங்க விவரமாயிட்டாங்களா? என்ன கொடுமை சரவணா இது? எப்படியோ தொடர்ந்து என்ன நோவடிக்கன்னே வந்த அந்தப் படத்த இது வரைக்கும் பார்க்கல.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ரொம்ப கொடூரமா பெண்கள் வரிசைல கீழ் வீட்டு அக்கா மகள். பத்தாம்பு போன புதுசு. நம்ம கிட்ட டியூசன் வேற படிச்சது. தாவணி போட்ட ஒரே காரணத்துக்காக அத வயசுக்கு வந்ததுன்னு நினைச்சாரோ இல்ல பொம்பள கிட்ட வயசு கேக்கிறது தப்புன்னு நினைச்சாரோ தெரியல. மனுசன் டிக்கட்ட கிழிச்சி உள்ள விட அது பார்த்த பார்வை இருக்கே.//


படத்த நீங்க பார்த்தீங்களா இல்லையா..?

எனக்கு பாலச்சந்தர் அப்படின்னாலே இந்தப் படம்தான் ஞாபகம் வரும்

யூர்கன் க்ருகியர் said...

ரசித்தேன் .... கடைசில சிரித்தேன் !
நல்ல நகைச்சுவை பகிர்வு. நன்றி

துபாய் ராஜா said...

//மேலதிகாரி நம்ம அதிகாரிய கூப்பிட்டு தெருவில கோலி விளையாடுற புள்ளைங்களுக்கெல்லாம் வேலை குடுக்கிறமா இப்போன்னு கேக்கிற அளவு நம்ம உருவ அமைப்பு. மீசைன்னு ஒண்ணு வருவனான்னு கோவப்பட்டுகிட்டு எம்மேல வஞ்சம் தீர்த்த காலம் அது.//

//ரெண்டு பேருக்குள்ள மறைஞ்சி மறைஞ்சி நகர காலர புடிச்சி இழுத்து உனக்கு அனுமதியில்லைன்னுட்டாங்க. மத்த பேரெல்லாம் கேவலமா பாக்க தலைய குனிஞ்சிகிட்டு நகர்ந்தா ..//

//டேய், உன்னமாதிரி எத்தன பேர பார்த்திருக்கேன் ஓடி போயிடுன்னு இறைச்சலா சொல்ல, ரொம்ப‌ கூசி குறுகி போச்சி.//

//ரொம்ப நாள் அந்த புள்ள எதிர்ல வராம நான் பம்மின கொடுமை தனி கதை.//

//சினிமாவோட சண்டை போட்டுகிட்டு ஒரு மூணு நாலு வருஷம் படம் போனதே இல்ல. இப்படி அடிமேல அடியா வாங்கி அந்த தழும்பு மெதுவா ஆறி ஒரு மாதிரியா மறந்தும் போச்சு. இந்த கடவுளுக்கு என்ன கோவமோ தெரியல. ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை இந்தியத் தொலைக்காட்சியிலேயே முதன் முதலாக பாலச்சந்தரின் காவியம் அரங்கேற்றம் காட்டுனாங்க. ஏழாப்பு படிக்கிற என் பையனும் மூணாம்பு படிக்கிற பெண்ணும் ஹால்ல உக்காந்து பார்க்குதுங்க.//

//என்ன கொடுமை சரவணா இது? எப்படியோ தொடர்ந்து என்ன நோவடிக்கன்னே வந்த அந்தப் படத்த இது வரைக்கும் பார்க்கல//

வாழ்க்கையில சோதனை இருக்கலாம். ஆனா சோதனையே வாழ்க்கையா இருந்தா........ :)))))

Suresh Kumar said...

இப்பவெல்லாம் காலம் ரெம்ப முன்னோக்கி போகிடடிருக்கு தல. அருமையாக எழதியிருக்கிறீர்கள் .

vasu balaji said...

நன்றி
@@பழமை
@@சக்தி
@@யூர்கன்
@@துபாய் ராஜா
@@சுரேஷ் குமார்

vasu balaji said...

/ SUREஷ் (பழனியிலிருந்து) said...

படத்த நீங்க பார்த்தீங்களா இல்லையா..?

எனக்கு பாலச்சந்தர் அப்படின்னாலே இந்தப் படம்தான் ஞாபகம் வரும்/

எப்படியோ தொடர்ந்து என்ன நோவடிக்கன்னே வந்த அந்தப் படத்த இது வரைக்கும் பார்க்கல.

UNIVERSAL said...

Boss,What is the name of the film which you mentioned in below paragraph.

"அடல்ட்ஸ் ஒன்லி (பயப்படாம படிங்க)"

vasu balaji said...

/Boss,What is the name of the film which you mentioned in below paragraph./

அரங்கேற்றம்

ராஜ நடராஜன் said...

பழைய நெனப்புதான் பாலாண்ணே பழைய நெனப்புதான்.

அது யாரு மொத டிக்கட்ல நின்னுகிட்டு பத்தி பிரிக்க சொல்லி கூவறது?(தமிழ் வாத்தியாரா வரவேண்டியவரு:)பதிவுக்குள்ள மூழ்கணும்.பத்தி பத்தியெல்லாம் பத்தக்கூடாது ஆமாம்!

ராஜ நடராஜன் said...

நானும் இதுவரைக்கும் அரங்கேற்றம் படத்த கேசட்டு வாங்கியாவது ஒரு தபா பார்த்துடனுமுன்னு நெனக்கிறேன்.நெனப்புதான்.ஆகறபாடா காணோம்.

vasu balaji said...

ஆகா. நீங்களும் பார்க்கலியா.

வல்லிசிம்ஹன் said...

இப்பவாச்சும் அந்தப் படத்தைப் பார்த்துத் தொலைத்திருக்கலாம்.
மனசு வளர வேண்டாமா:)

♫சோம்பேறி♫ said...

மீடியா.. மீடியா.. மீடியா..

vasu balaji said...

/ வல்லிசிம்ஹன் said...

இப்பவாச்சும் அந்தப் படத்தைப் பார்த்துத் தொலைத்திருக்கலாம்.
மனசு வளர வேண்டாமா:)/

அப்படியாவது பார்க்கணுமான்னு ஒரு வீம்புதான்.

vasu balaji said...

/ ♫சோம்பேறி♫ said...

மீடியா.. மீடியா.. மீடியா..

அதே அதே அதே!!