கொசோவோவின் உருவாக்கம் சர்வதேச ஒத்துழைப்புக்கு அச்சுறுத்தல் -ஜனாதிபதி மஹிந்த
என்ன ஒத்துழைப்பு? மொத்தமா அழிக்கிறதுக்கும், அடைத்து வைக்கவுமா? அவங்களாவது பிழைச்சு போகட்டுமே ராசா.
_________________________________________________
சிறிலங்கா படைகளைவிட்டு 65,000 பேர் தப்பியோடியுள்ளனர்
உசிருக்கு பயந்தா மன சாட்சிக்கு பயந்தா? அப்ப சண்ட போட்டதாரு? இரவல் படையா?
_________________________________________________
இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேசத்தின் கண்ணோட்டமும் கருத்தில் கொள்ளப்படும்
அவனவனும்தான் போட்டி போட்டு குடுக்கறாங்களே. எதற்கிந்த கண்துடைப்பு?
_________________________________________________
முகாம்களிலுள்ள மக்களை குறுகிய காலப்பகுதிக்குள் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்: ஐ.நா. பான் கீ மூனிடம் ராஜபக்ஷ
அந்தாளு ஏன் பண்ணலைன்னு கேக்கவா போறாரு.
_________________________________________________
புலிகளை எதிர்ப்பதில் சில நாடுகள் நேர்மையாகச் செயற்படவில்லை: அணிசேரா மாநாட்டில் ஜனாதிபதி
அட அட நேர்மைக்கு உதாரணம் இவருகிட்டதான் கத்துக்கணும்.
_________________________________________________
மீக நீண்ட காலத்திற்கு பின்னர் வன்னி மக்கள் உண்மையான சுதந்திரத்தை தற்போது அனுபவித்து வருகின்றனர்: கருணா
அட நாயே! வாலாட்டுறதுக்கும் அளவில்லையா? அங்கால போய் பாரு. உனக்கு சுதந்திரம் கிடைச்சுடும்.
_________________________________________________
மீளக்குடியமர்த்தும் பணியின் முன்னேற்றத்தை நேரில் கண்டறிய பான் கீ மூன் இலங்கை விஜயம்
நம்பிட்டோம்ல. ஐ. நா. ஆளுங்கள விட்டுடு ராசா புண்ணியமா போயிடும்னு கால நக்க போகுது போல.
_________________________________________________
மோசமான சூழ்நிலையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறித்த சரியான புள்ளி விவரங்களைப் பெற முடியவில்லை: பான் கி மூன்
சாகடிக்க விட்டதை பற்றி கவலை இல்லை. செத்த கணக்கு தெரியலைன்னு அழுகையா?
_________________________________________________
இடம் பெயர்ந்த தமிழ் அகதிகளின் குறைகளை போக்குவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கும்படி இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் கண்டிப்புடன் தெரிவித்ததாக மன்மோகன் சிங்.
பண்றங்கையா. கோவிச்சிக்கிறாதிங்கன்னு பக்சே கெஞ்சல்னு சேர்த்து சொல்லி இருந்தாலும் நம்புவம்ல.
_________________________________________________
ஈழப்பிரச்சனைக்கு தீர்வு காணபதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது: ஹிலாரி கிளிண்டன்
ஆமாம் பின்ன. கொஞ்சம் மிஞ்சி இருக்கில்ல. உங்க பங்கு என்ன?
_________________________________________________
அனைத்துலக விதிகளை மீறும் இலங்கை: ஐ.நா. பணியாளர்கள் சங்கம் குற்றச்சாற்று
அட. இப்போதான் கண்டு பிடிச்சிருக்காங்கையா.
_________________________________________________
16 comments:
செய்தியின் கமெண்ட் ஒவ்வொன்றும் சூபருங்க.
செய்தியின் கமெண்ட் ஒவ்வொன்றும் சூபருங்க.
பாலா வாங்க! வாங்க! ஓய்வு முடிந்ததா :-)
நன்றி கும்மாச்சி
/பாலா வாங்க! வாங்க! ஓய்வு முடிந்ததா :-)/
:). வாங்க கிரி. ஆமாம்.
மீண்டும் வருக நறுக்க
Welcome back sir!
பாலாண்ணே, வாங்க, வணக்கம்! நல்லா இருக்கீயளா?
வந்துட்டீகளாக்கும்!நல்லா நறுக்குன்னு கேளுங்க இன்னும்.
/ நசரேயன் said...
மீண்டும் வருக நறுக்க/
நன்றி நசரேயன்.
/யூர்கன் க்ருகியர்..... said...
Welcome back sir!/
நன்றி க்ரூகியர்.
/ பழமைபேசி said...
பாலாண்ணே, வாங்க, வணக்கம்! நல்லா இருக்கீயளா?/
வாங்க பழமை. வணக்கம். நலம். நன்றி.
/ ராஜ நடராஜன் said...
வந்துட்டீகளாக்கும்!நல்லா நறுக்குன்னு கேளுங்க இன்னும்./
ஹி. ஹி. நன்றி.
சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!
// ஆப்பு said...
சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!//
பார்த்துங்னா நீங்களே சொறிஞ்சிட்டு உங்களுக்கே சொருகிட போறீங்க.. !
welcome back
Post a Comment