பொதுவா எல்லாருக்கும் அரசு ஊழியர் என்றாலே ஒரு கடுப்புதேன். அதுலயும் சட்டவிதி எல்லாம் காசக் கண்டா காணாம போயிடும்னு மொத்த ஜனமும் ஒண்ணாக் குரல் கொடுப்பாங்க. இந்தியன் மாதிரி சட்டப் படி நடக்குற சிலத சொல்லுறேன். அப்புறமும் கத்தினா நடக்கறதே வேற.
விதி : கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுபவர்கள் அதற்கான மனுவுடன் அவர்கள் உயிரோடிருப்பதற்கான அத்தாட்சி படிவத்தை இணைக்க வேண்டும்.
தலைவிதி:
ஏதோ காரணத்தால் மே மாதம் ஓய்வூதியம் பெற வராத ஒருவர் ஜூன் மாதம் இரண்டு மாதத்துக்கான விண்ணப்பம் மற்றும் அத்தாட்சிப் படிவத்தைக் கொடுக்கிறார்.
எழுத்தர்: மே மாதம் ஓய்வூதியம் வாங்கலையா?
முதியவர்: இல்லைங்க. ஊருக்கு போயிருந்தேன். சேர்த்து வாங்கிக்கலாம்னு.
எழுத்தர்: ஜூன் மாதம் உயிரோட இருந்ததுக்கு அத்தாட்சி இருக்கு. மே மாதத்துக்கு ஏன் வைக்கல?
முதியவர்: (இல்லாத பல்லைக் கடித்துக் கொண்டு) ஏங்க ஜூன்ல உசிரோட வந்துருக்கேன்? மேல போயிருந்தா எப்படிங்க வருவேன்?
எழுத்தர்:(சட்ட விதியை படித்துக் காட்டி) நானா கேக்குறன். அரசாங்கம் கேக்குது.
முதியவர்: சரி அரசாங்கமே வெச்சிக்கட்டும். ஜூன் ஓய்வூதியம் மட்டும் கொடுங்க போதும்.
எழுத்தர்: பெரியவரே. நீங்களும் அரசாங்கத்தில பணி புரிந்து ஓய்வு பெற்றவர் தானே? நாளைக்கு தணிக்கையில மே மாதம் ஓய்வூதியம் பெறாத, சான்றிதழ் தராத ஒருத்தருக்கு எப்படி ஜூன் ஓய்வூதியம் தந்தீங்கன்னு எனக்கு ஓய்வூதியம் இல்லாத பண்ணிடுவாங்க. நீங்க உங்க பென்ஷன் ஆபீசர போய் பாருங்க.
இந்த இந்தியன எதாவது பண்ண முடியுமா? சட்டப் படிதானே நடக்குறாரு.
தளர்ந்து தலையில் அடித்துக் கொண்டு நடக்கும் முதியவரிடம் வருகிறார் பியூன். பெர்சு. இன்னா? ஒரு மாசம் பென்சன் வாங்கலையா? அங்க பாரு மர்த்தாண்ட குந்தினு இருக்காரே. அவரு டாக்டரு. 50ரூ குடுத்தா 2 மாசத்துக்கும் சர்டிபிகேட் குடுப்பாரு. வாங்கியாந்து குட்தா மேட்டரு ஓவரு. இதுக்கு போய் பேஜாராய்க்கினியே. கடவுளே வந்து வரம் குடுத்தாற் போல் சொன்ன அவருக்கு ஒரு 5ரூ கொடுத்து (ஹி ஹி. அதுக்கும் ரூல் இருக்குங்க) சந்தோஷமாக ஓய்வூதியம் பெற்றுச் செல்கிறார்.
சத்தியமா சட்ட விதி மீறலையே?
விதி: அரசு ஊழியரோ அவரது வாழ்க்கைத் துணைவியோ குடும்பக் கட்டுப்பாட்டை மேற்கொண்டால் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நாளிலிருந்து குறிப்பிட்ட ஊக்கத் தொகை வழங்கப் படும். கு.க. மேற்கொள்ளும் ஆணுக்கு 55 வயதும் பெண்ணுக்கு 50 வயதும் தாண்டி இருக்கக் கூடாது.
தலைவிதி:
மனைவி குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதால் ஊக்கத் தொகை பெறும் ஒருவர் மனைவி இறந்த காரணத்தால் மறுமணம் செய்து கொள்கிறார். சம்பளம் போடும் எழுத்தர் விளக்கம் கேட்டதன் மூலமா தலைவிதி எப்படி மாறிப் போகுது பாருங்க.
நியாயமான கேள்வி தானுங்களே? வேலையே வேணாம்னு சன்னியாசியா போகலாம் போல வருமா வராதா? என்னப்பா இப்படி எல்லாம் கேக்குறியேன்னா நீ இந்த இடத்துல இருந்தா கேப்பியா மாட்டியா சொல்லும்பான்.
இதே பிரிவில என்னல்லாம் விதி இருக்கு பாருங்க:
விதி: இரண்டு குழந்தைகள் உள்ளவர்கள் கு.க. செய்து கொண்டால் மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்படும்.
கேள்வி: ஒரே பிரசவத்தில் 3 குழந்தை பிறந்தால் ஊக்கத் தொகை உண்டா?
அரசு விளக்கம்: இயற்கை வினோதமாகையால் கொடுக்கலாம்.
கேள்வி: முதல் பிரசவத்தில் பிறந்த ஒரு குழந்தை உயிரோடு இருக்கையில் இரண்டாம் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பெற்றவர் கு.க. மேற் கொண்டால் ஊக்கத் தொகை உண்டா?
அரசு விளக்கம்: பிரசவ எண்ணைக்கை தாண்டவில்லையாதலாலும் ஊழியரின் கட்டுப்பாட்டிலில்லாத நிகழ்வாகையாலும் கொடுக்கலாம்.
கேள்வி: முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பெற்ற ஒருவர் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகு கு.க. மேற்கொண்டால் ஊக்கத் தொகை வழங்கப் படுமா? (மேற் குறிப்பிட்ட விளக்கப் படி குடுக்க வேண்டியதுதானே? ஏண்டா நோண்ட்றான்னு கேக்குறீங்களா?)
அரசு விளக்கம்: மாட்டாது. முதல் பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் இருப்பதால் தெரிந்தே விதிமுறைகளை மீறிய காரணத்தினால் தகுதி இழக்கிறார்.
சிரிக்க மாட்டீங்களா? விடுறதில்ல உங்கள. உங்களுக்காச்சி எனக்காச்சி. இத படிங்க:
புராதனப் பொருள் மாதிரி வருசம் போக போக மதிப்பு உயரும் அருவம் என்னா சொல்லுங்க பாப்பம்?
திறமையை ஊக்குவித்தால் அது நியாயம். திறமையை காட்டாம இருக்க ஊக்குவிக்கிற இதுதான்.
அது தான் அரசு ஊழியரின் இனப் பெருக்கத் திறன்.
யானை இறந்தாலும் ஆயிரம் பொன் மாதிரி குழந்தை பெறும் திறன் போனா மதிப்பு ஏறிக் கொண்டே போகும். எப்படின்னு கேக்குறீங்களா? குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட தேதியில் அவர் வாங்கும் சம்பளத்தில் ஒரு இன்கிரிமென்ட்டுக்கு சமமான ஊதியம் ஊக்கத் தொகையாக மாதா மாதம் வழங்கப் பட்டது. சம்பளக் கமிசன் வரும்போதெல்லாம் ஊதியம் மாறும்போது இதுவும் ஏறிடும். தாடைய சொறிய வேணாம். 90ல தங்கமணி கு.க. அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது அதுக்கு ஊக்கத் தொகை ரூ 50. எனக்கு ரூ. 75. எனக்கு அதிகம். அதனால நான் வாங்கிட்டேன். ஐந்தாவது சம்பள கமிஷன்ல அதோட மதிப்பு ரூ.225 ஆச்சு. இப்போ ஆறாவது சம்பளக் கமிஷன்ல ரூ 450 மாசத்துக்கு.
ஹி ஹி. யாருங்க அது. ரொம்ப கவனமா படிச்சிட்டு அதான் 55 வயசு ஆணுக்கு 50 வயசு பொண்ணுக்குன்னு விதி இருக்குதே. அது தாண்டினப்புறம் ஏண்டா குடுக்கணும்? இத கேக்க மாட்டிங்களாடான்னு சவுண்ட் விட்றது? மாட்டமே ! மொத்த பேருக்குமில்ல ஆப்பு? யானை தன் தலையில மண்ண வாரி போட்டுகிட்டா மாதிரி ஆய்டும்ல?

- முதல் மனைவிதான் குடும்பக் கட்டுப்பாடு செய்தவர். அவர் உயிருடன் இல்லை. மறுமணம் செய்தவர் குடும்பக் கட்டுப்பாடு செய்திருந்தால் செல்லுமா?
- இல்லை என்றால் ஊக்கத் தொகையை எந்த தேதியில் இருந்து நிறுத்துவது?
- திருமணம் செய்த தேதியா?
- ஒரு வேளை மறுமணம் செய்தவருக்கு குழந்தைப் பேறு உண்டாகுமானால் அந்த தேதியிலிருந்தா? (இதுக்கு அத்தாட்சி வேற கேப்பாங்க. பிரமன் தான் தரணும்) அல்லது குழந்தை பிறந்த நாளிலிருந்தா?
- அப்படி பிறக்கும் பட்சத்தில் முதல் மனைவி குடும்பக் கட்டுப்பாடு செய்திருந்தாலும், ஊழியர் ஊக்கத் தொகை பெற்றதனால் இப்பொது குழந்தை பிறந்ததனால் விதியை மீறியதாகக் கருதி இது நாள் வரை வழங்கிய ஊக்கத் தொகையை பிடித்தம் செய்வதா?

***