Thursday, November 4, 2010

ஆங்கில மோகமும் அரசு ஊழியனும்...

சென்றமாதம் பதிவர் கே.ஆர்.பி.செந்தில் ஆங்கில மோகம் குறித்து ஒரு அருமையான பதிவு எழுதியிருந்தார். சீனாக்காரன் ஆங்கிலத்திலா படிக்கிறான்? என்னல்லாம் கண்டுபிடிக்கிறான் என்ற சிலாகிப்புக்கு இனி வழியில்லை. கண்டிப்பாக பார்க்கவேண்டிய காணொளியைத் தந்திருக்கிறார் திரு செந்தில்.


அதற்குப் பின்னூட்டமிட்ட நண்பர் ராஜ நடராஜன் இவ்வாறு கூறியிருந்தார்.:
//இப்போதைய காலகட்டத்தில் ஆங்கிலம் நமக்கு அவசியம் தேவை.


இந்தியாவில் தமிழனை விட மொழியை நேசிக்கும் இன்னொரு மாநிலக்காரன் இல்லை என்பேன்.


தமிழை தமிழாகவும்,ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் பேசுவோம்.


ஆனால் நாம் எங்கே கோட்டை விட்டு விடுகிறோமென்றால் தமிழுடன் ஆங்கிலம் கலந்து பேசுவதில்.சன்,கலைஞர் தொல்லைக்காட்சிகளனைத்தும் சமீபத்து மொழி வில்லன்கள் மட்டுமே.உண்மையான மொழி வில்லன்கள் அரசாங்க அலுவலகம் முழுதும் ஒளிந்து கொண்டிருக்க்றார்கள்.இவர்களிடமிருந்தே இந்த நோய் மொத்த சமூகத்திற்கும் பரவியுள்ளது என்பது எனது கணிப்பு.


மாற்றுக்கருத்தாளர்கள் தங்கள் எண்ணங்களை பின்னூட்ட வேண்டுகிறேன். //


செந்தில் அனுமதித்தால் தனியே இடுகை போடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். செந்தில் பெருந்தன்மையாக இதற்கு அனுமதி எதற்கு என்று பின்னூட்டி இருந்ததைத் தாமதமாகத்தான் பார்த்தேன். இதற்கு பதிலளிக்க எனக்கிருக்கும் ஒரே தகுதி அரசாங்க ஊழியன் என்ற ஒரே தகுதி. மற்றபடி மொழி குறித்த சிறப்புத் தகுதி எதுவுமெனக்கில்லை என்பதை உணர்ந்தே இதை எழுதத் துணிகிறேன்.


அட சை! இந்த எளக்கியத் தமிழெல்லாம் நமக்கு சரிப்படாது. நம்ம வழியிலையே போவம். அண்ணோவ்! புடிங்க பாயிண்டு.


இந்தியாவில் தமிழனை விட மொழியை நேசிக்கும் இன்னொரு மாநிலக்காரன் இல்லை என்பேன்.


தப்புண்ணா! இந்த பெங்காலி பெங்காலின்னு இருக்காவளே. அவனுவளவிடவா. பரோடா ரயில்வே காலேஜில் தெரியாம ஹிந்தி தெரியாதுன்னு சொல்லி மாட்டிக்கிட்டேன். கூட ஒரு பெங்காலியும். சிக்கினாண்டா சின்ராசுன்னு ஸ்பெஷல் க்ளாஸ்னுட்டானுவ. நான் தொண்டை கட்டினா மாதிரி க 4, ச 4னு சாவறப்ப, பெங்காலி டவுட் கேக்கறேன்னு அந்தாளுக்கு பெங்காலி சொல்லிக் குடுத்துட்டிருக்கான்.


தமிழை தமிழாகவும்,ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் பேசுவோம்.


முதல்ல தமிழை எடுத்துக்குவோம். எந்தத் தமிழைப் பேசறது. சென்னை, மதுரை, கொங்கு, தஞ்சைன்னு விதவிதமால்ல இருக்கு. அந்தந்த ஊர்த் தமிழையே சுத்தமா பேசினா அந்தூர்க்காரங்களுக்கே புரியுமான்னு இல்லை சந்தேகம். மதுரைக்காரர் ‘வாரேன்’னா சென்னைக்காரன் என்னத்தை ‘வாரச்சொல்றான்’னு இல்ல நிப்பாரு. ஒரு லிஸ்டே இருக்கே! ஜன்னல்ல இருந்து எதெல்லாம் வேற்று மொழியில இருந்து வந்ததுன்னு. ஜன்னலை ஏத்துக்க முடியுதுன்னா டிக்கட் ஏன் உறுத்தணும்?


ஆங்கிலம் பாடு இன்னும் அதோகதி. ஆந்திரக்காரனுக்கு  ‘அயரன்’, கேரளாக்காரனுக்கு  ‘செண்டிமெண்ட்’,வடக்கூரானுக்கு ‘புய்புல்’, பெங்காலிக்கு ‘பொவர்’, தமிழனுக்கு ‘றுப்பீஸ்’ இப்படி அடிபட்டு மிதிபட்டு குத்துயிரால்ல இருக்கு. ஆக தமிழன்னே இல்லை. இந்திய மொழி எல்லாமும், இந்தியன் எல்லாருட்டயும் ஆங்கிலமும் இப்படி கலந்தாங்கட்டியா அடி வாங்கிட்டுதான் இருக்கு. இந்தச் சுட்டியைப் பாருங்க. எல்லாரும் உலக அளவில் பிரபலமானவங்கதான். இந்த ஆங்கிலத்தில் எத்தனை பேப்பர் விவாதித்திருப்பார்கள்? ஆங்கிலம் பாருங்க எப்படி இருக்குன்னு. ஹி ஹி. நம்ம ப்ரணாப்ஜி அவரோட ஆங்கிலத்தை வச்சிக்கிட்டு வெளியுறவுத்துறை அமைச்சரா வேற இருந்தாரே.


இப்ப வருவோம் அரசு ஊழியர் கதைக்கு
அது முக்கியமா மத்திய அரசு ஊழியர்களைக் குறிக்கிறதுன்னு வைத்துக் கொள்ளலாம். மாநில அரசில் தமிழ் பயன்பாடு அதிகம். மக்களுடனான தொடர்பிலும் தமிழ்தான் ப்ரதானம். இது இன்றைய நிலமைன்னு சொல்லிட முடியாது.75 வருடத்துக்கு முன்னாடி எடுத்துண்டாலும், பத்திரத்தில் எழுதின ‘தாவர ஜங்கம சொத்துதான்’ அர்த்தமே புரியாமல் இன்றும் தொடர்கிறது.


மத்திய அரசு ஊழியர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்து பேச வேண்டியிருக்கும் அலுவலகத்தில். காரணம் இடமாற்றல் ஷரத்துக் காரணமாக பெரும்பாலான மத்திய அரசு அலுவலகங்களில் மற்ற மாநிலத்தவருடன் பகிர வேண்டியிருப்பது. மத்திய அரசு அலுவலகத்தில் போலீஸ் ஸ்டேஷன் மாதிரியே ரைட்டர் என்று ஒருத்தர் எல்லா செக்‌ஷனிலும் இருந்திருக்கிறார். இன்னமும் சில அலுவலகங்களில் இருக்கிறார். அவருக்குத்தான் ஆங்கிலத்தில் ஓரளவு சரளமாக எழுத வரும். இதில மத்தவங்கள எங்க போய் கெடுக்கறது?


நம்ம ஊர்ல ’பட்லர் இங்கிலீஷ்’னே சொல்லுவாங்களே. இப்ப சாதாரணமா எல்லாரும் பேசுறதே அப்படி இருக்கிறதால இதை அதிகம் கேக்க முடியறதில்லை. அப்படி வெகுஜனங்களிடையே பரவியிருக்கலாம். பத்திரிகைகளிலும் ஆங்கில வார்த்தைகள், வடமொழி எழுத்துகள் அப்படியேதான் எழுதப்பட்டதில்லையா.


முக்கியமாக இன்னமும் ஆங்கிலோ இந்தியர்கள் நம்மிடையே பரவலாக இருக்கிறார்களே. அவர்களும் ஒரு காரணியாக இருக்கலாம் அல்லவா? ஒரு ஆச்சரியமான விஷயம் இவர்கள் அதிகம் வாழும்/வாழ்ந்த புரசைவாக்கம், பெரம்பூர் பகுதிகளில் இந்தத் தலைமுறை ரிக்‌ஷாக்காரர்கள் கூட 'Doveton','Five' எல்லாம் ‘ட்வ்ஃப்டன்’,  ‘ஃபைவ்ஃப்’ என்று அழகாக உச்சரிப்பதைக் காணலாம்.


ரஜனிமாதிரி ‘ஐ கேன் டாக் இங்க்லீஷ், வாக் இங்க்லீஷ், ஸ்லீப் இங்க்லீஷா’ இருந்தாலுமே கூட இந்தியனின் ஆங்கிலம் வேறு வேறு ரூபத்தில்தான் இருக்கும் இல்லையா? நம்மாளுக்கு ஆங்கிலத்தில் எழுதுறது ரொம்ப சுலபம். ஆங்கிலத்தில் நினைச்சு ஆங்கிலத்தில் எழுதிடுவான். பேசுறப்பதான் மென்னிய பிடிக்கும். காரணம் தமிழில் நினைத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து  அப்புறம் பேசுவது. எங்கே சொன்னது சரியாகப் புரியாமல் போயிருக்குமோ என்று தமிழிலும் சொல்லுவதும் ஒரு மனப்பாங்கு. 

அதையும் விட ‘டமிலனுக்கு’மட்ட்ட்ட்டும் கொஞ்சம் கேப் விட்டுப் பேசறது பெரிய வெட்கப்படக்கூடிய விஷயம். வெள்ளைக்காரனே கொஞ்சம் 'well'..er...i... i..i mean' இப்படியெல்லாம் ஃபில்லர் போட்டு சரளமா பேசினாலும் நம்மாளுவ இப்படி பேச மாட்டாங்க.


முக்கியமான இன்னொரு விஷயம் ஊடகங்கள் வாயிலாக மேநாட்டு கலாச்சார அறிமுகமும், ஆங்கில வழிக் கல்வி வாயிலாக அதன் பயன்பாட்டின் சுலபமும் கூட ஒரு காரணி என நினைக்கிறேன். உதாரணமாக 'I love my brother' இதைத் தமிழில் சொன்னால் கொஞ்சம் செயற்கையாகத் தோன்றும். தமிழில் இந்த உணர்வு இல்லாமலா இருந்தது. அதன் வெளிப்பாடு இல்லை. ‘என் அண்ணன்னா எனக்கு உசிரு’ என்பது இந்த நெருக்கம் தருமா? கோபத்தில் உதிர்க்கும் ‘WTF', 'Shit' போன்ற வார்த்தைகளை தமிழில் சொன்னால் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இருக்கிறதா? அடிதடியில் அல்லவா முடிகிறது. ஆங்கிலத்தில் கெட்டவார்த்தையாக, வசவாகத் தோன்றாத ஒன்று தமிழில் அப்படி மாறிவிடுவது ஏன்?


இது இப்படியே அறைகுறையாத்தான் இருக்குமான்னா அப்படித்தான் தோன்றுகிறது. காரணம், நாற்பது வருஷத்துக்கு முன்னயும் சரி, இப்பவும் சரி தமிழோ, ஆங்கிலமோ, மற்ற மொழியோ பள்ளியில் துணைப்பாடம்தான். ஹிந்திப் ப்ரசார் சபாவில் தனியா ஹிந்தி படிக்கப் போனாமட்டும் அழகா இலக்கணத்துல ஆரம்பிச்சி சொல்லித்தராங்க. 'Wren and Martin' க்ராம்மருக்கு கீ போடுவாங்க இந்தியர்கள்னு தெரிஞ்சிருந்தா வெள்ளைக்காரன் தூக்கில் இல்லையா போட்டிருப்பான். ஒரிஜினலை விட இந்த கீ இல்லையா அதிகம் விற்றது?


இன்றைக்கு வெகு சரளமாக ஓரளவு ஆங்கிலத்தை ஆங்கிலமாக பேசுபவர் என்று கருதப்படுபவரில் எத்தனை பேருக்கு ‘Sesame and Lillies' புரியும்? புரியுறது அப்புறம் இருக்கட்டும். அந்த அழகு கெடாமல் வாசிக்க முடியும்? எனக்கு இதைப் படிக்கச் சொன்னவர் அந்தக் காலத்தில் சிக்ஸ்த் ஃபார்ம் ட்ராப் அவுட். அலுவலகப் பரிட்சையில் ஜெனரல் இங்கிலீஷ் என்ற ஒரு பேப்பர் உண்டு. அதிலும் ‘Precis Writing' 30 மார்க். 1960லிருந்து அந்தப் பரிட்சையில் ஃபெயிலாகி 1980ல் என்னோடு பாஸ் செய்தார் ஒருவர். ஹி ஹி. அவர் எழுதின லட்சணம் அப்படின்னு இல்லை. திருத்துற ஸ்டேண்டர்ட் குறைஞ்சிட்டுது.


இப்பொழுதெல்லாம் ஸ்டெனோக்ராஃபர்ஸ் ரொம்ப நக்கலா சொல்லிடுறாங்க. நீங்க சொல்லுங்க சார். இங்கையே டைப் பண்ணிடுறேன்னு. ரெண்டு வரி சொல்லிட்டு, எங்க படின்னு கேட்டு, இல்லை வேணாம், அடிச்சிட்டு இது எழுதிக்கோன்னு சொல்ற லட்சணத்துக்கு ஷார்ட் ஹேண்ட் வேற எதுக்கு?


ஆக, நல்ல தமிழோ நல்ல ஆங்கிலமோ (ஓரளவுக்கு) பேச, எழுத கல்வி முறை மாறவேண்டும். தாய் மொழியில் அடிப்படை இலக்கணமே தெரியாத பொழுது ஆங்கில இலக்கணம் எங்கிருந்து படிக்க? வீட்டில் வந்தால் எத்தனைப் பேருக்கு சொல்லித்தரும் அளவுக்கு தெரியும். அல்லது நேரமோ பொறுமையோ இருக்கிறது? பயிற்சி நிலையம், ட்யூஷனென்று போனாலும் தரம் இதேதான் என்னும் போது மாற்றம் சாத்தியமேயில்லை.


Sesame and lillies தரவிறக்க சுட்டி

(அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் !!!)

122 comments:

Unknown said...

வணக்கம்.

vasu balaji said...

@Sethu

வணக்கம்

Unknown said...

உண்மையிலேயே பெரிய மத்தாப்பப் பிடிச்சுட்டீங்க. என்னத்த சொல்றது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அறை எடுத்து யோசிப்பீரோ !!!!!(எப்படி)

நசரேயன் said...

வணக்கம்

vasu balaji said...

=)). இதென்ன புதுசா தளபதி. ஒற்றை வார்த்தை பின்னூட்டம்.

vasu balaji said...

வணக்கம் தளபதி

நசரேயன் said...

இங்கலிபிசு பேசினாத்தான் அறிவாளின்னு நினைப்பாங்க என்கிற நிலையம் மாறனும்

நசரேயன் said...

தாகூர் சொந்தகாரங்க எல்லாம் இப்ப ஹிந்திக்கு போய்ட்டாங்கன்னு கேள்விபட்டேன்

Unknown said...

சார்! தென் தமிழ்நாட்டின் தேன் மதுர மொழியை நீங்க விட்டுட்டீங்க. மதுரையோட நிறுத்திட்டீங்க.

நம் தமிழ் நாட்டிலே பேச்சு தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. வெட்கத்தவுட்டு சொல்லனும்னா, தமிழ்ல ஒரு விண்ணப்ப பாரம் பூர்த்தி செய்வதற்கு எவ்வளவு அல்லல் பட வேண்டியிருக்குது தெரியுமா. சுத்தாமா என்ன கேட்கிறாங்கனு புரிய மாட்டேங்குது. ஏன் இப்பிடி வேறுபாடு என்று புரியவில்லை? ஆங்கிலம் சரியா தெரியலைன்னாலும், ஆங்கில விண்ணப்ப பாரம் புரிஞ்சுடுது. - இது உங்கள் விவாதத்தின் அடிப்படையில் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும், ஏன் இப்பிடின்னு தெரிஞ்சுக்கத்தான்.

vasu balaji said...

@நசரேயன்

அதுக்கு பேரு இங்கிலீஷ் இல்ல. பீட்டரு. இது பெருசுங்க மேட்டரு:))

vasu balaji said...

@நசரேயன்

அது தாகூர் இல்ல. தாக்கூர்:)). அவிங்க ஹிந்திக்காரய்ங்கதான்

நசரேயன் said...

//இதற்கு பதிலளிக்க எனக்கிருக்கும் ஒரே தகுதி அரசாங்க ஊழியன் என்ற ஒரே
தகுதி//

குடிமகன் என்ற முறையில் நாங்க கருத்து சொல்வோம்

vasu balaji said...

காரணம் தமிழ்ங்கற பேருல இப்ப வந்து அகராதில தேடிப் பிடிச்சி வார்த்தையைப் போடுறதுதான்.

நசரேயன் said...

சுருக்கமா சொல்லனுமுனா வேற இடத்திலே போட்ட துண்டை எல்லாம் எடுத்திட்டு வந்து மொழி மேல போடணும்

vasu balaji said...

@நசரேயன்

ம்கும். அரசாங்க ஊழியன் மட்டும் குடிமகன் இல்லையோ.

vasu balaji said...

@நசரேயன்

ஆஹா. அப்ப மொழியும் தேறாத கேசுங்கறீங்க.

Unknown said...

தளபதி! இந்த துண்டு போடற விஷயம் என்ன? பழமை கூட ஒரு தடவ use பண்ணார்.

இன்னொரு சந்தேகம். 'என்ன கொடுமை சரவணா!'. இது ஏதாவது சினிமாவில் வந்த வசனமா?

நசரேயன் said...

//ரிக்‌ஷாக்காரர்கள் கூட 'Doveton','Five' எல்லாம் ‘ட்வ்ஃப்டன்’, ‘ஃபைவ்ஃப்’ என்று அழகாக உச்சரிப்பதைக் காணலாம். //

வெள்ளையப்பன் ரிக்‌ஷா ஓட்டுராரோ?

vasu balaji said...

@Sethu
துண்டுன்னா தெரியாதா? அய்யகோ!!! எ.கொ.சே:))

ஆமாம் சேது. ரஜனி படம்.

நசரேயன் said...

//முக்கியமாக இன்னமும் ஆங்கிலோ இந்தியர்கள் நம்மிடையே பரவலாக இருக்கிறார்களே//

எங்க ஊரிலே எல்லாம் ஒருத்தர் இல்லை ..

நசரேயன் said...

//இன்னொரு சந்தேகம். 'என்ன கொடுமை சரவணா!'. இது ஏதாவது
சினிமாவில் வந்த வசனமா?//

இப்போதைக்கு கடையிலே இருக்கு .. இனிமேல தான் சினிமாவுக்கு போகும்

Unknown said...

என்ன பண்றது சார். இந்தப் பதிவுலகித்திலே புது dictionary அல்ல வெளியிட்டு இருக்காங்க. இதப் புரிஞ்சிக்கிரதுகுள்ள தென் தமிழ்நாட்டு மொழி சீக்கிரம் கத்துகிடலாம்.

Unknown said...

"இப்போதைக்கு கடையிலே இருக்கு .. இனிமேல தான் சினிமாவுக்கு போகும்"

Ha! Ha Ha Ha! அட்டகாசம்.

vasu balaji said...

@Sethu

எல்லாம் சினிமால சுட்டதுதான்:))

நசரேயன் said...

ஐ கேன் டாக் இங்க்லீஷ், வாக் இங்க்லீஷ், ஸ்லீப் இங்க்லீஷா

நசரேயன் said...

//மாற்றுக்கருத்தாளர்கள் தங்கள் எண்ணங்களை பின்னூட்ட வேண்டுகிறேன். //

மாற்று கருத்து இல்லைனா என்ன செய்யன்னு ?

Unknown said...

"ஸ்லீப் இங்க்லீஷா"

இல்லைங்க தப்பா புரிஞ்சுகிட்டங்க. ஸ்லிப் இங்கிலீஷ்.

vasu balaji said...

@நசரேயன்
கன்னா பின்னான்னு ரிப்பீட்டிக்கிறேன்னு போடறதுதான்.

vasu balaji said...

@நசரேயன்

தோடா. ரஜனி சொன்னது அது

Unknown said...

மாற்றுக் கருத்து 

vasu balaji said...

@முகிலன்

என்னா அது. இங்க சொல்றீங்களா. இல்லை தொடர் இடுகையா?

நசரேயன் said...

I love my brother' இதைத் ஆங்கிலத்திலே சொன்னால் கொஞ்சம் செயற்கையாகத் தோன்றும், ஏன்னா அது தாய்மொழி இல்லையே

நசரேயன் said...

I Love you ன்னு சொன்ன செயற்கையா இருக்கும் .. நான் துண்டு போடுறேன்னு சொன்னா நல்லா நாட்டு உரம் இயற்கையா இருக்கு

நசரேயன் said...

//‘WTF', 'Shit' //

வேற்று மொழியிலே திட்டுவதை பொறுத்து கொள்ளும் அளவுக்கு தமிழன் ரெம்ப பொறுமையா இருக்கான் ..

நல்லதை மட்டுமே தாய்மொழி பேசுவோம்

நசரேயன் said...

//‘Sesame and Lillies'//

இப்படி ஒரு சரக்கு பேரா ?

நசரேயன் said...

// ஹிந்திப் ப்ரசார் சபாவில் தனியா ஹிந்தி படிக்கப் போனாமட்டும் அழகா இலக்கணத்துல ஆரம்பிச்சி சொல்லித்தராங்க//

நல்ல தமிழ் வாத்தியார் கிடைச்சா அழகா இலக்கண தமிழும் சொல்லிகொடுப்பார். நீங்க ஏன் வடக்கூர் தேடி போறீங்க ?

நசரேயன் said...

//Wren and Martin' க்ராம்மருக்கு கீ போடுவாங்க //

அப்புறம் கீ போட்டவருக்கு சோப்பு போடுவாங்களா ?

நசரேயன் said...

//ஆங்கிலத்தை ஆங்கிலமாக பேசுபவர்//

தமிழை தமிழா பேசுபவர்கள் தொல்காப்பியம் தெரிய வேண்டிய அவசியமா ?

நசரேயன் said...

ஆள் இல்லாத கடையிலே எவ்வளவு நேரம் தான் டீ ஆத்த ?

நசரேயன் said...

//அந்த அழகு கெடாமல் வாசிக்க முடியும்?//

ஏன் வாசிக்காமலே இருந்தா முடியாதா ?

நசரேயன் said...

//1960லிருந்து அந்தப் பரிட்சையில் ஃபெயிலாகி 1980ல் என்னோடு பாஸ் செய்தார் ஒருவர்//

யாரு யாருக்கோ விருது கொடுக்காங்க மத்திய அரசிலே இருந்து..இவருக்கு ஒரு விருது கொடுத்து இருக்கலாம்

vasu balaji said...

@நசரேயன்

ம்கும்.:)

vasu balaji said...

@நசரேயன்

//I Love you ன்னு சொன்ன செயற்கையா இருக்கும் .. நான் துண்டு போடுறேன்னு சொன்னா நல்லா நாட்டு உரம் இயற்கையா இருக்கு //

அடங்கொன்னியா:))

நசரேயன் said...

//நீங்க சொல்லுங்க சார். இங்கையே டைப் பண்ணிடுறேன்னு//

எங்கண்ணே எங்களை தட்டச்ச சொல்லுறீங்க ?

vasu balaji said...

@நசரேயன்

//வேற்று மொழியிலே திட்டுவதை பொறுத்து கொள்ளும் அளவுக்கு தமிழன் ரெம்ப பொறுமையா இருக்கான் ..

நல்லதை மட்டுமே தாய்மொழி பேசுவோம் //

தளபதி தத்துவம்

vasu balaji said...

@நசரேயன்

/இப்படி ஒரு சரக்கு பேரா ? /

ஆமா! குடிக்கறதில்லை. படிக்கறது. ஆனா சேம் எஃபகட்.

vasu balaji said...

@நசரேயன்
/நல்ல தமிழ் வாத்தியார் கிடைச்சா அழகா இலக்கண தமிழும் சொல்லிகொடுப்பார். நீங்க ஏன் வடக்கூர் தேடி போறீங்க ? /

அவன் தேடிவந்து சொல்லிதாரான். நல்ல தமிழ் வாத்தி அட்ரஸ் குடுங்களேன். அவ்வ்வ்

நசரேயன் said...

//அடிச்சிட்டு இது எழுதிக்கோன்னு சொல்ற லட்சணத்துக்கு ஷார்ட் ஹேண்ட் வேற எதுக்கு?//

கை நீளமா இருந்தா அடி சொல்லுறவருக்கு விழுமுன்னு ஒரு பயந்தான்

vasu balaji said...

@நசரேயன்

/தமிழை தமிழா பேசுபவர்கள் தொல்காப்பியம் தெரிய வேண்டிய அவசியமா ?/

வேணாமே.

vasu balaji said...

@நசரேயன்

/ஆள் இல்லாத கடையிலே எவ்வளவு நேரம் தான் டீ ஆத்த ?/

களைச்சிருப்பீரு. நீர் குடியும்:))

vasu balaji said...

@நசரேயன்
/யாரு யாருக்கோ விருது கொடுக்காங்க மத்திய அரசிலே இருந்து..இவருக்கு ஒரு விருது கொடுத்து இருக்கலாம் /

அதான் பாஸ் போட்டுட்டாங்கல்ல.

நசரேயன் said...

//நல்ல தமிழோ நல்ல ஆங்கிலமோ (ஓரளவுக்கு) பேச, எழுத கல்வி முறை மாறவேண்டும்.//

தமிழ்ல நல்லாத்தானே இருக்கு.. ஆங்கிலம் பத்தி இப்ப கவலைப் படுகிற நிலையிலே இல்லை, காரணம் எல்லோருமே ஆங்கில புலி தானே..

நசரேயன் said...

//தாய் மொழியில் அடிப்படை இலக்கணமே தெரியாத பொழுது ஆங்கில இலக்கணம் எங்கிருந்து படிக்க? //

நாம என்ன மரபுகவுஜையா எழுதப் போறோம்

Unknown said...

சார், மத்த நாடுகள்ல பல மொழிகள் பேசப் பட்டாலும், வர்த்தக மற்றும் பிற தொடர்புகளுக்கு ஒரே மொழி தான். ஆனால் நமக்கு இந்தியாவைப் பொறுத்தவரையில் பல வேறுபட்ட மொழிகள் இருக்கு, ஒரு மொழி பேசும் மாநிலங்களில் அந்தந்த மொழிக்குள் பரிவர்தனை செய்ய முடியும். பிற மாநிலங்களுடன் பரிவர்த்தனை தேவைப் படும் நேரம், ஹிந்தியா ஆங்கிலமானு பிரச்சனை. இந்தப் பிரச்னையை சுலபமா தீர்க்க வெள்ளைக்காரன் இங்கிலீஷ் வெச்சுக்கோன்னு கொடுத்துவிட்டுப் போய்ட்டான்.

தமிழ்நாட்டினர் பிற மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் அதிகம் சென்று வருவதால், இங்கிலீஷ் மீதான மோகம், சரியாப் பேசறோமோ இல்லையோ, அதிகம் ஆயிடுச்சு. வெளி நாட்டிலிருந்து திணிக்கப்பட்ட டிவி, மாடர்ன் மீடியா, இன்டர்நெட், கம்ப்யூட்டர் எல்லாம் ஆங்கிலத்தின் மீதான மோகத்தை தான் அதிகப் படுத்துகிறதே தவிர, தாய் மொழி வளர்ச்சிக்கு உதவுவதில்லை. இதே பிரச்சனை ஹிந்தி காரர்களும் சொல்லுகிறார்கள். 1950 - 60 காலத்தில் வந்த தரமான ஹிந்தி கவிதைகள், கதைகள் வரவில்லை என்று சொல்கின்றனர்.

எந்த ஒரு புது தொழிற்சாலையோ, அல்லது தொழில் சார்ந்து கருவிகளோ தமிழ்நாட்டை விட்டு பிற இடங்களிலிருந்து வரும் கால கட்டத்தில், எளிதான communication க்கு மக்கள் தானாக இங்கிலீஷ் பக்கம் தாவுவதை தவிர்க்க முடியாது. இதை தமிழ் எழுத்தாளர்கள் எப்போதும் கவலையோடு குறிப்பிடுவர். ஆனால் நமக்கு தாய் மொழிக் கல்வியில் படித்து வந்ததால் அதன் மீது பற்றும் பாசமும், புரிந்து கொள்ளும் வசதியும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

கடைசியில் கொஞ்சம் கொசுறு!
நேற்று ராத்திரி என் பையன் கதைப் புத்தகம் படிக்கும் போது அவன் சொன்ன ஒரு வார்த்தையை நம்ம இந்திய/தமிழ் accent இல் ஒரு சின்னத் திருத்தம் செய்தேன். மாப்பிளை உடனே, 'அப்பா! நீ பேசற தமிழையே என் மொழியில புரிஞ்சுகிட்டு தான் நான் உனக்கு பதில் சொல்றேன். நீ என்னை கரெக்ட் பண்றே னு'. சரிங்க சார் னு வேடிக்கைப் பார்த்தேன். பையனுக்கு ஏழு வயசு.

நசரேயன் said...

//அடிப்படை இலக்கணமே தெரியாத பொழுது ஆங்கில இலக்கணம் எங்கிருந்து படிக்க? //

எனக்கு டியூஷன் டீச்சர் ஞாபகம் வந்துவிட்டது

நசரேயன் said...

//வீட்டில் வந்தால் எத்தனைப் பேருக்கு சொல்லித்தரும் அளவுக்கு தெரியும். அல்லது நேரமோ பொறுமையோ
இருக்கிறது? //

நோகாம நொங்கு திங்க முடியமா ?

நசரேயன் said...

//பயிற்சி நிலையம், ட்யூஷனென்று போனாலும் தரம் இதேதான் என்னும் போது மாற்றம் சாத்தியமேயில்லை//

சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

எட்டு சுரக்காய் கறிக்கு உதவாது

மேல சொன்ன ரெண்டு வரியிலே எல்லாம் பதிலும் இருக்கிறது என்று கும்மியை முடித்துகொள்கிறேன்

நசரேயன் said...

//1950 - 60 காலத்தில் வந்த தரமான ஹிந்தி கவிதைகள், கதைகள் வரவில்லை என்று சொல்கின்றனர்.//

தரமான தமிழ் கவுஜைகள் படிக்க என் கடைப்பக்கம் வாங்க சேது

Unknown said...

"தரமான தமிழ் கவுஜைகள்"

பாத்தீங்களா தளபதி, பதிவுலத் தமிழ் 'கவுஜ'.

எப்பிடி பழமை, இதை ஏத்துகிட்டார்.

Unknown said...

"என் கடைப்பக்கம் வாங்க சேது".

எப்போதும் வருவேன். உங்களைப் பத்தி தெரியாது. பேசாமப் பொய் விடுவேன்.

நேற்று கூட தூதரகம் பதிவுக்கு வந்தேனே!

Unknown said...

தளபதி,

துண்டப் போட்றதுனா துண்டப் போட்டு ஒரு அமுக்கு அமுக்கிறதா? அதத் தான் நாசுக்கா சொல்றதோ! எந்த அர்த்தத்தில் உபயோகப் படுத்தறீங்க?

ப.கந்தசாமி said...

நசரேயன், சேது, வானம்பாடிகள்.

தீபாவளி இன்னிக்கே வந்துடுச்சா? நான் நாளைக்குன்னு நெனச்சு தூங்கிட்டனே?

முகிலன், அது யாருங்க பூஜை வேளைல கரடி மாதிரி? நானும் அப்படியேதான்? எஸ் ஆகிக்கிறேன்!

Unknown said...

" DrPKandaswamyPhD said...
நசரேயன், சேது, வானம்பாடிகள்.

தீபாவளி இன்னிக்கே வந்துடுச்சா? நான் நாளைக்குன்னு நெனச்சு தூங்கிட்டனே?"

இல்லை சார். சும்மா ஒரு விளையாட்டுக்கு. ஐயாவோட கலாய்க்காம வேற யார்ட்ட பண்ண முடியும்.

உங்களுக்கு ஒதுங்கி வழி விடறோம். நீங்க பேசுங்க சார்.

உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

பிரபாகர் said...

கடைசிப் பத்தியில் முத்தாய்ப்பாய் சொல்லியிருக்கிறீரக்ள் அய்யா...

சொன்ன யாவும் முழுதும் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது...

பிரபாகர்...

பழமைபேசி said...

கும்மி மோகமும் பதிவர்களும்!

Unknown said...

சார், யு ஆர் ரைட். ரொம்பச் சரியாச் சொன்னீங்க. ஆனா சொல்ல வந்ததை முழுதும் சொல்லாத மாதிரி இருக்கு.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

//சென்னைக்காரன் என்னத்தை ‘வாரச்சொல்றான்’னு இல்ல நிப்பாரு//

தமிழக பாஷை வித்யாசத்தை வைத்தே ஒரு பதிவு போடலாம்.

ஸ்ரீராம். said...

//அதையும் விட ‘டமிலனுக்கு’மட்ட்ட்ட்டும் கொஞ்சம் கேப் விட்டுப் பேசறது பெரிய வெட்கப்படக்கூடிய விஷயம். வெள்ளைக்காரனே கொஞ்சம் 'well'..er...i... i..i mean' இப்படியெல்லாம் ஃபில்லர் போட்டு சரளமா பேசினாலும் நம்மாளுவ இப்படி பேச மாட்டாங்க//

மிகவும் உண்மை..!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உங்க போஸ்ட் ரீட் பண்ணுனேன்.. ரொம்ப டேஸ்டி (மொறைக்கபடாது :) )

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//தாய் மொழியில் அடிப்படை இலக்கணமே தெரியாத பொழுது ஆங்கில இலக்கணம் எங்கிருந்து படிக்க?//

பிரெஞ்ச் இலக்கணப் புத்தகத்தில் இருந்து (மறுபடியும் முறைக்கப்படாது :) )..

தாய்மொழி என்பதால், அதன் "அடிப்படை" இலக்கணம், மொழியைப் பேசுவதாலும், எழுத்துகளின் அறிமுகத்தைத் தொடரும் தினசரி வாசிப்பினாலுமே வந்துவிடும்.. இஸ்கூல் புத்தகத்தில் இருந்து கற்கத் தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து..

vimalanperali said...

இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை நிலைமை அரசு அலுவலகங்களில்.

ஜோதிஜி said...

ஆச்சரியம். இந்த ப்ரா ணாப் (இது கூட நல்லத்தானே இருக்கு) முகர்ஜி பேசும் ஆங்கிலத்தை பல முறை கேட்டு ஆடிப்போயிருக்கேன். நாமே பராவயில்லை என்று யோசித்தது உண்டு. கூகுள் பஸ்ஸில் இதைப்பற்றிச் சொல்ல நண்பர் கிண்டலடித்தார். அதையே நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கீங்க.

தப்புத்தாளங்கள் தலைப்பில் இதைப்பற்றி தெளிவாகவே சொல்லியிருக்கேன்.

புரசைவாக்கம் ஹிந்தி பிரச்சார சபாவில் இரண்டு ஹிந்தி பரிச்சை எழுதி தேர்ச்சியும் பெற்றேன். எங்கே போய் பேசி பழகுறது.

கல்கத்தா போனப்பா என்னடா ஹிந்தியை தப்பா பேசுறாங்கன்னு பார்த்தா அதுக்கு பேரு பெங்காலின்னு அப்புறம் தான் புரிஞ்சது. வட நாட்டில் வந்து வேலை செய்யும் பணியாளர்கள் பேசுவது 20 சதவிகிதம் தான் ஹிந்தி. அவரவர் தாய் மொழி தான்.

தமிழனுக்கு எந்த இனத்திலும் இல்லாத ஒரு சிறப்பு உண்டு. எந்த அளவுக்கு தனக்குத் தானே உருவாக்கிக் கொள்ளும் தாழ்வு மனப்பான்மையைப் போலவே வெட்டிப் பந்தாவை விடாமல் வைத்துருப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழனே.

பெண்கள் குறித்து என்து பார்வையில் சமீபத்தில் ஒரு பெண் சந்தித்த போது உருவான தாக்கத்தில் இந்த ஆங்கில மோகம் பற்றி ஒன்று எழுதி வைத்துள்ளேன். ஒத்த சிந்தனைகள். நல்வாழ்த்துகள்.

Paleo God said...

வாய் பேச முடியாதவங்களுக்கு சைகையையாவது விட்டு வெச்சாங்களே!

Paleo God said...

1960லிருந்து அந்தப் பரிட்சையில் ஃபெயிலாகி 1980ல் என்னோடு பாஸ் செய்தார் ஒருவர். ஹி ஹி. அவர் எழுதின லட்சணம் அப்படின்னு இல்லை. திருத்துற ஸ்டேண்டர்ட் குறைஞ்சிட்டுது. //

கஜினியே கவுந்துடுவார் சார்! இன்னுமா இவர கேரக்டர்ல விட்டு வெச்சிருக்கீங்க?:)

suneel krishnan said...

ஆங்கில கெட்ட வார்த்தைகளின் முழு அர்த்தமும் வீச்சும் நமக்கு புரிவதில்லை அதனால் அது எளிதாக எடுத்து கொள்ள படுகிறது என்று எண்ணுகிறேன் .
நீங்கள் கூறுவது ரொம்ப சரி ,ஆங்கிலம்- நம்ம நாட்டில் பிரிட்டிஷ் ஆங்கிலம் இல்லை -தமிழ் +ஆங்கிலம், மலையாள+ஆங்கிலம் , பெங்காலி +ஆங்கிலம் ,பஞ்சாப்+ஆங்கிலம், இப்படி ஆங்கிலம் எல்லாமே ஒரு தங்கள் மொழி தாக்கத்தோடு தான் பேச படுகிறது .நான் அஸ்ஸாம் மாநில நோயாளிகள் சிலரை சந்தித்த பொது அவர்களின் பிரச்சனையை நான் புரிந்து கொள்ள எனக்கு அரை மணி நேரம் ஆனது , நான் சொல்வது அவருக்கு புரியல ,அவுங்க பேசுறது எனக்கு புரியல

Ahamed irshad said...

ந‌ல்லா பாட‌ம் எடுத்துட்டீங்க‌ண்ணே என‌க்கு தூக்க‌ம் வ‌ருது அதுக்கு என்னா பேரு இங்கிலீசு'ல‌..

அ.அலுவ‌ல‌க‌த்தில‌ ல‌ஞ்ச‌ம் வாங்காம‌ வேல ந‌ட‌ந்தாலே போதும்ண்ணே..

Unknown said...

அது சரிண்ணே, நீங்க சொன்னா ஒத்துக்க வேண்டுயது தான்.

வேற வழி ???

Unknown said...

நீங்க சொல்றது தெளிவா இருக்கு .. சேது சொல்ற மாதிரி நம்ம தேசத்தில் பலமொழிகள் புகுந்து விளையாடுவதால், ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக வைத்துகொள்ளலாம். ஏன் ஹிந்திய வச்சுக்ககூடாதா என்று கைதூக்குபவர்களுக்கு ஜோதிஜி பதில் சொல்வார் ( ஜி என்று போட்டுகொள்வதால் அல்ல)..

அப்புறம் ஆங்கிலம் தெளிவாக கற்றுக்கொள்ள புரொபசர் கெவ் நாயர் http://www.kevnair.com/kevnair.asp எழுதியுள்ள ( பனிரெண்டு பாகம் + பனிரெண்டு துணை பாகம் இருக்கு) புத்தகம் இருப்பவற்றில் மிக சிறந்தது.. ஆங்கிலத்தை பீராய்ந்து பிரித்து கொடுத்திருப்பார். உத்தமமான புத்தகம்.. வாங்கியவர்கள் தலைக்கு வைத்து தூங்கிவிடுவார்கள் என்பதால் சிறிய புத்தகங்களாக தந்திருக்கிறார். படித்து பாருங்கள் குறைந்தது ஒரு பதிவு போடவாவது தேறும்..

Sesame and lillies - க்கு அய்யாவுக்கு என் வந்தனம்..

எம் அப்துல் காதர் said...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், எங்களின் மனம் நிறைந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்

ராஜ நடராஜன் said...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் பாலாண்ணா!

ஊர் கடையெல்லாம் சுத்தி விட்டு இப்பத்தான் உங்களை கவனித்தேன்.

இடுகை....(பழமை இடுகை சரிங்கிறார்.பதிவுதான் சரிங்கிறார் ஞானி கூடவே பின்னுட்டம் சரியில்ல மறுமொழிதான் சரியாம்.இதுல யார் சரி?) முழுவதும் படித்து விட்டு என்ன சொல்கிறீர்கள் என்று கிரகித்துக் கொண்டு பின்னூட்டம் வந்தால் இந்தியாவும் வளைகுடாவும் தூங்குற நேரத்தில் நசரேயன்கூட கும்மியடிச்சிகிட்டுருக்கிறீங்க:)

வள வளக்க நிறைய இருப்பதால் துண்டு துண்டா (இது அந்த துண்டு இல்ல நசரு) பின்னூட்டறேன்.

ராஜ நடராஜன் said...

//இந்தியாவில் தமிழனை விட மொழியை நேசிக்கும் இன்னொரு மாநிலக்காரன் இல்லை என்பேன்.


தப்புண்ணா! இந்த பெங்காலி பெங்காலின்னு இருக்காவளே. //

கல்லூரியில் முகர்ஜின்னு எனக்கும் ஒரு விடுதி அறைக்காரன் இருந்தான்.ஒத்தையா மாட்டிகிட்டதால இருக்கும் டெல்லிக்காரன்கிட்ட இந்தியும் மற்றவர்கள்கிட்ட தமிழும் கலாய்த்துக்கொண்டிருந்தான்.கல்கத்தா போனோமா இருந்த ஒரு மாதமும் ஆங்கிலேயன் கட்டிய கட்டிடங்கள்,காளி கோயில்,பெங்காளி மொழியின் இனிமை,அன்னை தெரசா பள்ளி,அழகான பெண்கள்,விவேகானந்தர் பயணித்ததாக ஹூப்ளி பாலமும் ஆறும் தவிர மொழி குறித்த ஆர்வமாக நமக்கு இந்தி தார் என்றால் அவர்களுக்கு ஆங்கிலம் தார் என்பது மட்டுமெ வித்தியாசம்.

இப்பவும் பெங்காளிகளின் இலக்கியம் தாகூர் முதலே துவங்குகிறது ஜனரஞ்சகமாக.ஆனால் நமக்கு திருவள்ளுவன் காலம் முதல் பாரதி காலம் வரையும் சொல்லிக்கொண்டே போகலாம்.இப்போதைய காலத்தை எதிர்காலம் தீர்மானிக்கும்.

தி.மு.கவின் தற்போதைய பாதை தவறிய நிலை பற்றிய விமர்சனங்கள் எனக்கிருந்தாலும் துவக்க கால மொழி ஆர்வம் பற்றியும் இந்தி மொழிப் போராட்டமும் எந்த மாநிலத்தினருக்கும் இல்லாத ஒன்று.

ராஜ நடராஜன் said...

//தமிழை தமிழாகவும்,ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் பேசுவோம்.


முதல்ல தமிழை எடுத்துக்குவோம். எந்தத் தமிழைப் பேசறது. சென்னை, மதுரை, கொங்கு, தஞ்சைன்னு விதவிதமால்ல இருக்கு.//

நீங்கள் சொல்வது வட்டார வழக்கல்லவா?இதில் எந்த தமிழாக இருந்தாலென்ன?மூலம் தமிழை அல்லவா சுற்றி வருகிறது.

எனக்கு 4 மொழிகளில் பேச வேண்டிய சூழல்.

அலுவல் காரணமாக ஆங்கிலம்.இந்த விலாசம் எங்கே என நடைபாதையில் கேட்கும் போது அரபி,வட இந்தியாவிலிருந்து வந்து பணி செய்பவர்களிடம் இந்தி,வீட்டிலும்,நிரந்தரமாக வண்டிக்கு எரிபொருள் போடும் போது தமிழகப் பணியாளர்களுடன் பேசும்போது தமிழும் தனித்தனியாகவே பேச வருகிறது.ஒன்றோடு ஒன்று முட்டிக்கொள்வதில்லை.

எனக்கிருக்கும் தமிழக தொடர்பு இப்போது இணையமாக இருந்தாலும் முன்பு தொலைகாட்சி ஊடகங்களே.நேர்காணல்,கருத்து கேட்டல் போன்றவற்றில் கலப்படம் செய்து பேசுபவர்கள் அரசு ஊழியர்கள் என்பதை கவனிக்க துவங்கினேன்.

Bruno said...

//இந்தியாவில் தமிழனை விட மொழியை நேசிக்கும் இன்னொரு மாநிலக்காரன் இல்லை என்பேன்.


தப்புண்ணா! //

பெங்கால் வரைக்கும் ஏன் சார் போகனும்

கேரளா போதுமே

Bruno said...

//எந்தத் தமிழைப் பேசறது. சென்னை, மதுரை, கொங்கு, தஞ்சைன்னு விதவிதமால்ல இருக்கு. //

எதை வேண்டுமானால் பேசலாம்

அல்லது செந்தமிழ் பேசலாம்

Bruno said...

//ஜன்னலை ஏத்துக்க முடியுதுன்னா டிக்கட் ஏன் உறுத்தணும்?

//

ஏனென்றால் பயணச்சீட்டு என்ற சொல் உள்ளதே

ஜன்னலே ஏத்துக்கிட்டதே தப்பு சார்
அது சரி என்று யார் சொன்னார்

சாளரம் தான் சரி

Bruno said...

//ஆங்கிலத்தில் கெட்டவார்த்தையாக, வசவாகத் தோன்றாத ஒன்று தமிழில் அப்படி மாறிவிடுவது ஏன்?//

அர்த்தம் புரிவதால் :) :)

Bruno said...

//. ஒரிஜினலை விட இந்த கீ இல்லையா அதிகம் விற்றது?

//


ஹி ஹி ஹி

vasu balaji said...

//தி.மு.கவின் தற்போதைய பாதை தவறிய நிலை பற்றிய விமர்சனங்கள் எனக்கிருந்தாலும் துவக்க கால மொழி ஆர்வம் பற்றியும் இந்தி மொழிப் போராட்டமும் எந்த மாநிலத்தினருக்கும் இல்லாத ஒன்று.//

சரிதான். ஆனால் தமிழாசிரியர்களாக வந்தவர்கள் 10ம் வகுப்புவரை இலக்கணம் நடத்தியது பெருங்கொடுமை. பள்ளி இறுதி வகுப்பில் கடைசி ஒரு மாதம் மட்டும் இலக்கணம் எடுத்தபோது ஆசிரியம் மிகவும் திணறிப் போனார். இன்றும் தொலைதூரக் கல்வி தமிழ் இலக்கணம் பாருங்கள். ஆர்வமாகக் கற்பவர்களுக்கு ஒரு இழவும் புரியாது. இதே இலங்கைப் பதிப்பு இலக்கணம் பாருங்கள் 5ம் வகுப்புக்கு உரியது. அவ்வளவு அழகாக இருக்கும். அவ்வ்வ்.

ராஜ நடராஜன் said...

இந்த கலப்பு எப்படி ஆரம்பித்திருக்கும் என்ற எனது கணிப்பு எப்படியென்றால் 90லிருந்து இதுவரையிலான பணிதேடுதல் கணினித்துறையை சார்ந்தும் பன்னாட்டு உலாவல் சார்ந்ததுமாக போய்விட்டது.ஆனால் 90க்கும் முந்தைய காலகட்டத்தில் பணி தேடுதலின் மதிப்பு அரசாங்க உத்தியோகம் புருஷ லட்சணம்.நீங்கள் சொன்னது மாதிரி காகித தகவல் சேமிப்புக்களுடன் உறவாடும் போது அடுத்த நாற்காலியில் இருப்பவரிடம் தமிழில் சொல்லவும் ஆனால் சில வாக்கியங்கள் ஆங்கில பொருட்சொல் குறிப்பு கலந்து பேச்சு வழக்கு ஆரம்பம்.உதாரணம்

சார் ஒரு 200 ஹண்ட்ரெட் ரூபிஸ் லோன் கொடுங்க.சேலரி வந்ததும் தந்துடறேன்.வட்டார வழக்கின் ஆரம்பம்
ஹண்ட்ரெட்
ரூபிஸ்
லோன்
சேலரி

அத்தனையும் அலுவல் சார்ந்த புழக்கம்.

vasu balaji said...

//எனக்கு 4 மொழிகளில் பேச வேண்டிய சூழல்.//

ஆமாண்ணே. அதுலயும் பாருங்க நம்மாளு கல்கத்தால இருந்தா பெங்காலி, தில்லியில ஹிந்தி, பஞ்சாப்ல பஞ்சாபி, ஆந்திரால தெலுங்கு எல்லாம் லோக்கல விட சூப்பரா பேசுவாங்க. இந்த இங்கிலிசுபீசு மட்டும் தொண்டைய புடிக்கும். அதில்லாம தனித்திறமை இருக்கில்லையா.

ராஜ நடராஜன் said...

நான் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் வருமானவரி அலுவலக கேண்டீன்(அப்படித்தான் எழுதியிருக்கும்) பூரி மசாலா ருசியாக இருக்குதேன்னு நண்பனுடன் போனால் மேலே சொன்ன வார்த்தை பரிவர்த்தனை காதில் கேட்கும்.வெள்ளையும் சொள்ளையுமா அரசு அதிகாரிகள் பேசுகிறார்கள்.படிக்கின்றவனும் பாதையில் நடக்கின்றான்.

இது ஒரு புறமிருக்க,கிராமம் சார்ந்த ஒருவர் சில காரணங்களுக்கு அரசு அலுவலகம் போக நேர்ந்தால் அவரிடமும் ”இதுல 50 ரூபா கோர்ட் பீ ஸ்டாம்ப் ஒட்டிக்கொண்டு வா”ங்கன்னுடுவார்:)

vasu balaji said...

//நீங்கள் சொல்வது வட்டார வழக்கல்லவா?இதில் எந்த தமிழாக இருந்தாலென்ன?மூலம் தமிழை அல்லவா சுற்றி வருகிறது.//

ஆமாம். மூலம் தமிழேதான். அதிலேயே வேறுபாடு இருக்கிறதில்லையா. ஈழத்தின் வெளிக்கிட்டானுக்கும் தமிழ்நாட்டு வெளிக்கு போனானுக்கும் எத்தனை வித்தியாசம்?

vasu balaji said...

புருனோ Bruno said...
/பெங்கால் வரைக்கும் ஏன் சார் போகனும்

கேரளா போதுமே/

அவன் கொஞ்சம் ஆங்கிலம் கலப்பானே:))
/ஜன்னலே ஏத்துக்கிட்டதே தப்பு சார்
அது சரி என்று யார் சொன்னார்

சாளரம் தான் சரி/

ம்கும். அப்புறம் சாவி, மேசைன்னு சங்ககாலத்துக்கு போலாம்தான். தினத்தந்தியே கெலிகாப்டர், கெவிட்யூட்டி எல்லாம் ஆகாதுன்னு மல்லுகட்டி இப்ப ஹெலிகாப்டர் போடுறான்:))

ராஜ நடராஜன் said...

புள்ள கான்வெண்ட்ல படிக்க வச்சா நல்லா இங்கிலிபீசு பேசுமேன்னு அங்கேயே துரத்தி விடறது.அவுக புள்ளயே அங்கதான் படிக்குதுன்னு ஊர்ல இருக்கற அத்தனை பேரும் அங்கேயே துரத்தி விட்டு விட்டு இப்ப கல்விக்கட்டணங்கள் பத்தி புலம்பிகிட்டிருக்கோம்.

(நீங்க சொன்ன மெட்ராஸ் ட்வ்டன்ல படிச்சேன்னு பீத்திக்கிறவனுக்கே தமிழ் மீடியம் நான், விண்ணப்ப பாரம் பூர்த்தி செய்யவேண்டிய கொடுமை பாலாண்ணா!)

vasu balaji said...

//சார் ஒரு 200 ஹண்ட்ரெட் ரூபிஸ் லோன் கொடுங்க.சேலரி வந்ததும் தந்துடறேன்.வட்டார வழக்கின் ஆரம்பம்
ஹண்ட்ரெட்
ரூபிஸ்
லோன்
சேலரி

அத்தனையும் அலுவல் சார்ந்த புழக்கம்.//

62ல் அரச்சலூரில் ப்லசர் பார்க்க ஓடி அது போனது கூட தெரியாமல் ப்லசர் எங்கடா என்று கேட்டு பட்டணத்து முட்டாளாய் ப்லசர் என்றால் கார் எனக் கற்றுக் கொண்டேன். ஹி ஹி.

பெரம்பூர் ரயில்வே குவார்டர்ஸில் ஆங்கிலோ இந்தியர்கள் பேச்சும் ‘டோனி! கம் ஹியர் ரைட் நவ் எருமை’, ‘டோண்ட் ப்ளே இன் வெயில் மேன்’ என்ற ரீதியில் இருக்கும்.

vasu balaji said...

//(நீங்க சொன்ன மெட்ராஸ் ட்வ்டன்ல படிச்சேன்னு பீத்திக்கிறவனுக்கே தமிழ் மீடியம் நான், விண்ணப்ப பாரம் பூர்த்தி செய்யவேண்டிய கொடுமை பாலாண்ணா!)//

=)). சேது சொன்னா மாதிரி தமிழ் விண்ணப்பம் பூர்த்தி செய்யுறது ரொம்ப கஷ்டம். ஆங்கிலம் குத்துமதிப்பா சரியா வந்துடும்.:))

ராஜ நடராஜன் said...

//மத்திய அரசு ஊழியர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் கலந்து பேச வேண்டியிருக்கும் அலுவலகத்தில். //

மத்தியமோ மாநிலமோ அரசு ஊழ்யர்கள்கிட்ட துவங்கி அடுத்து பட்டாபட்டி குழு மொழில சொல்லனுமின்னா அடுத்த கெடா வெட்டு
இந்த கல்லூரி பொண்ணுக.

நீயா நானா நிகழ்ச்சியொன்றில் “ ஏய் வாடி!மாதுளம்பழ சூஸ் குடிக்கலாம்ன்னுட்டு நண்பிகிட்ட சொல்ற பொண்ணு பழரசக்கடைக்காரர்கிட்ட ஒரு பொமேகிரனட்டிங்குதாம்.நண்பி எனக்கு தர்பூசணின்னா பழரசகாரர் முதலில் பொமேகிரனட்தான் போடுறாராம்.”

ஆங்கிலம் பேசுவது தன்னை உயர்த்திக்கொள்ளும் மனோபாவம் தமிழகத்தில் அதிகம் என்று விவாதம் நீண்டது.

vasu balaji said...

/மத்தியமோ மாநிலமோ அரசு ஊழ்யர்கள்கிட்ட துவங்கி அடுத்து பட்டாபட்டி குழு மொழில சொல்லனுமின்னா அடுத்த கெடா வெட்டு
இந்த கல்லூரி பொண்ணுக./

அது பீட்டர்ணே:)). அது ஆங்கிலத்தில் சேராது. நம்ம சக அதிகாரி இருக்கார். மேலதிகாரி மலையாளம். தமிழ் நல்லா பேசுவாங்க. நான் தமிழ்ல பேசுவேன். இவரு ‘உய் ஹாவ் ரிசீவ்ட் மேடமு. பட்டு தேரு..ஈஸ்.. நோ..ரெலவன்சு டு திய்யி அப்ஜக்ஹனு ரெய்ஸ்டு’ம்பாரு. ஆனா பேனா எடுத்தா சர சரன்னு ஓடும்.:))

vasu balaji said...

மி த நூறு:)) அந்த sesame and lillies இதுவரைக்கும் படிக்கலைன்னா தீபாவளி கிஃப்ட் உங்களுக்கு. தீபாவளி வாழ்த்துகளுடன்.

ராஜ நடராஜன் said...

//பெரம்பூர் ரயில்வே குவார்டர்ஸில் ஆங்கிலோ இந்தியர்கள் பேச்சும் ‘டோனி! கம் ஹியர் ரைட் நவ் எருமை’, ‘டோண்ட் ப்ளே இன் வெயில் மேன்’ என்ற ரீதியில் இருக்கும்.//

இடுகைக்கு பதில் சொல்லிகிட்டு வரலாமுன்னு பார்த்தா பின்னூட்டத்துக்கும் வேறயா?

மெய்யாலுமே நான் ஆங்கிலேய இந்தியர்கள் வீட்டுக்கு நட்பு ரீதியா போய் இருக்கிறேன்.இங்கேயும் அல்ராய்ன்னு ஒருத்தன் சுத்திகிட்டு இருக்கான்.நல்லாத்தான் தமிழ் பேசுறான்.ஆங்கிலேய இந்தியர்கள் வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார்கள்.

உங்களது அடைப்பான் எனக்கு சிரிப்பே:)))))

ராஜ நடராஜன் said...

//கேரளா போதுமே//

மருத்துவர் புருனோவின் கவனத்திற்கு!கேரளாவை எந்தக்கணக்கில் சேர்ப்பது?கதகளி,மலையாள கலாச்சாரம் சார்ந்தவற்றில் பெருமைபட்டுக்கொள்ளலாம்.மொழி குறித்த பார்வையில் இவர்களது ஆங்கிலம் கோபத்தையே உருவாக்குகிறது.அதற்கு நம்மூர் ரிக்‌ஷாகாரரின் உலகனுபவ ஆங்கிலம் பரவாயில்லையென்பேன்.

ராஜ நடராஜன் said...

//சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

எட்டு சுரக்காய் கறிக்கு உதவாது //

நசரு!இடுகையின் சாரமே செந்தமிழும் நாப்பழக்கம் என்பது மட்டுமே.

ஆனால் எட்டு சுரக்காய் கறிக்கு உதவாதுன்னு பொய்யெல்லாம் சொல்லக்கூடாது:)

ஈ ரா said...

அண்ணே ,

நல்ல பதிவு..


//ரஜனிமாதிரி ‘ஐ கேன் டாக் இங்க்லீஷ், வாக் இங்க்லீஷ், ஸ்லீப் இங்க்லீஷா’ இருந்தாலுமே கூட இந்தியனின் ஆங்கிலம் வேறு வேறு ரூபத்தில்தான் இருக்கும் இல்லையா?/

அதிசயமா தலைவர் பேர் உங்க கட்டுரையில் இடம்பெற்றிருக்கு.. (எதோ வகையில இருந்தாலும் )

தீபாவளி வாழ்த்துக்க்கள்

ராஜ நடராஜன் said...

//ஆக, நல்ல தமிழோ நல்ல ஆங்கிலமோ (ஓரளவுக்கு) பேச, எழுத கல்வி முறை மாறவேண்டும். தாய் மொழியில் அடிப்படை இலக்கணமே தெரியாத பொழுது ஆங்கில இலக்கணம் எங்கிருந்து படிக்க? வீட்டில் வந்தால் எத்தனைப் பேருக்கு சொல்லித்தரும் அளவுக்கு தெரியும். அல்லது நேரமோ பொறுமையோ இருக்கிறது? பயிற்சி நிலையம், ட்யூஷனென்று போனாலும் தரம் இதேதான் என்னும் போது மாற்றம் சாத்தியமேயில்லை. //

நான் சொல்ல விரும்புவது வட்டாரம் சார்ந்து தமிழைப்பேச பழகிக்கொள்வோம்.ஆங்கில வார்த்தைகளை தமிழோடு கலந்து பேசுவதால் பழக்கத்தில் ஆங்கிலம் முந்திக்கொண்டு தமிழின் அழகை கெடுக்கிறது.

தமிழின் அழகை தமிழாக பேசுவோம்.
ஆங்கிலத்தின் சுவையை தனியாக சுவைப்போம்.

ஜோதிஜி இந்தி கற்றும் பேச இயலவில்லை என்கிறார்.நான் பிரெஞ்சு கற்றும் பேச இயலவில்லை.நசரு சொல்லி முடிச்சிகிட்ட மாதிரி நாப்பழக்கம் மட்டுமே தமிழை வாழவைக்கும் சொல்லி முடிச்சிக்கிறேன்.

அப்புறமா யார் கதைக்கிறாங்கன்னு பார்க்க வருகிறேன்.

ராஜ நடராஜன் said...

//ஜன்னலே ஏத்துக்கிட்டதே தப்பு சார்
அது சரி என்று யார் சொன்னார்

சாளரம் தான் சரி//

போகலாம்ங்கிற நேரத்தில் மருத்துவர் புருனோவின் வாசகம் கண்ணில் பட்டது.

பார்த்தீங்களா?சாளரம்.... சொல்வதற்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது.ஆனால் புழக்கம் ஜன்னல் வந்து முந்திகிச்சு.

எனவே நான் சொன்னமாதிரி அரசு அலுவலகத்திலிருந்து தங்கிலீஷ் அறுவடையை ஆரம்பிப்போம்.இன்னும் 10,20 வருடங்களில் தமிழ் புதிய விதைகளாய் புதிதாய் வளரட்டும்.

ராஜ நடராஜன் said...

எனக்கே ஓட்டுப்போட இவ்வளவு சிரமம்ங்கிறபோது காலையில எழுந்து குளிச்சு,வரிசைல நின்னு,ஓட்டுப்பெட்டிய தேடி,சின்னங்களை சரியா பார்த்து...எத்தனை கஷ்டம் ஓட்டுப்போடற வேலை?

ஆமா!இன்னுமென்ன சின்ன(ம்) முறை?
வாக்காளர் விரும்புவரை எளிதாக தேர்ந்தெடுக்க தேர்தலில் நிற்பவர்களின் உருவப்படங்கள் வரும் காலம் எப்போது?

சூர்யா ௧ண்ணன் said...

தீபாவளி வாழ்த்துகள் தலைவா

ஜோதிஜி said...

செந்தில் ஹிந்தி தேசிய மொழியாக இருப்பதில் ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை.

ஆனால் சில கேள்விகள்.

ஆங்கிலமே தெரியாத கிராமத்து மக்கள் வங்கிக்குச் செல்லும் போது அதில் ஹிந்தியை திணிக்க வேண்டிய அவஸ்யம் என்ன?

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் முக்கிய இடங்களில் குறிப்பாக பயணச்சீட்டு கொடுக்கும் பகுதிகளில் பணிமாறுதல் காரணமாக வரும் நபர்களுக்கு ஏன் உள்ளூர் மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணம் வருவதில்லை.

மேலே இருப்பவர்களும் இது குறித்து அக்கறையில்லாமல் இருப்பது ஏன்? ஆனால் நம்மாளுங்க வடநாட்டில் வேலைக்குச் சென்றால் முதல் வேலை
தமிழன் என்பதை முடிந்தவரைக்கும் மறைத்துக் கொள்ள பார்ப்பது. ஒருவருடத்தில் தமிழே மற்ந்து விட்டது என்று பீலா விடுவது.....

இங்கு குழந்தைகள் ஹிந்தி படிக்கிறார்கள்?

எப்படி? அப்படியே நாம் ஆங்கிலத்தை தமிழிலில் எழுதி வைத்து படித்தோமே அப்படித்தான்.

சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் பரிட்சையில் எழுதினால் போதும் என்கிற ரீதியில்?

எப்படி புதிய தலைமுறையினர் இந்த ஹிந்தியை முழுமையாக தெளிவாக கற்றுக் கொள்ள முடியும்?

பணத்தாளில் தமிழ் மொழி இருக்கிறதே?

ஏன் பாராளுமன்றத்தில் மொழிபெயர்பபாளர்கள் தமிழுக்கென்று இல்லை?

பேசினாலும் கத்துகிறார்களே ஏன்? காரணம் மடத்தடமான வெறி????????

அல்லது திணித்தல். திகட்டத்தான் செய்யும்.

இங்கு ஆயிரம் மலையாளிகளுடன் மிக நெருக்கமாக பழகியிருப்பேன். முதலாளி முதல் அடித்தட்டு தொழிலாளி வரைக்கும்.

மலையாளம் மட்டும் தான் பேசுகிறார்கள். பத்துவருடம் உள்ளே வாழ்ந்தாலும் கூட. இது ஏன்?

முக்கிய நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருப்பவர்கள் கூட அலுவலக உரையாடல் முடிந்து நான்கு பேர்கள் ஒன்று சேர்ந்தால் டக் கென்று மலையாளம் தான் வாயில் வருகின்றது? ஏன்?

என்னுடைய கருத்து நமக்குத் தேவை என்றால் தனிப்பட்ட முறையில் ஹிந்தியை கற்றுக் கொண்டால் போதுமானது.

ப சிதம்பரம் கூட தன்னுடைய ஓட்டுநர் முதல் கடைநிலை ஊழியர் வரைக்கும் உபி ஹிந்தி தான் பேசுகிறார். ஆனால் வெளியில் வாய் திறப்பதில்லை.

அவர் தமிழ் பேசும் பாருங்கள். கலைஞர் தோற்றுப் போய்விடுவார்.

ஆக்ஸ்போர்டு ஹார்வேர்டு தெரியுதா?

ஆயிரத்தெட்டு நொட்டை சொன்னாலும் நாமே உருவாக்கிக் கொண்டே தாழ்வு மனப்பான்மை தான் இதற்கு முக்கிய காரணம்.

பழமைபேசி 45 நிமிடம் பேசினார். ஒரு கலப்பு வார்த்தை கூட இல்லை.

இது ஒரு விதமாக மன்ப் பக்குவம்.

எல்லோருக்கும் வந்து விடாது.

ஜோதிஜி said...

செந்தில் ஹிந்தி தேசிய மொழியாக இருப்பதில் ஒன்றும் பெரிய பிரச்சனையில்லை.

ஆனால் சில கேள்விகள்.

ஆங்கிலமே தெரியாத கிராமத்து மக்கள் வங்கிக்குச் செல்லும் போது அதில் ஹிந்தியை திணிக்க வேண்டிய அவஸ்யம் என்ன?

தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் முக்கிய இடங்களில் குறிப்பாக பயணச்சீட்டு கொடுக்கும் பகுதிகளில் பணிமாறுதல் காரணமாக வரும் நபர்களுக்கு ஏன் உள்ளூர் மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணம் வருவதில்லை.

மேலே இருப்பவர்களும் இது குறித்து அக்கறையில்லாமல் இருப்பது ஏன்? ஆனால் நம்மாளுங்க வடநாட்டில் வேலைக்குச் சென்றால் முதல் வேலை
தமிழன் என்பதை முடிந்தவரைக்கும் மறைத்துக் கொள்ள பார்ப்பது. ஒருவருடத்தில் தமிழே மற்ந்து விட்டது என்று பீலா விடுவது.....

ஜோதிஜி said...

இங்கு குழந்தைகள் ஹிந்தி படிக்கிறார்கள்?

எப்படி? அப்படியே நாம் ஆங்கிலத்தை தமிழிலில் எழுதி வைத்து படித்தோமே அப்படித்தான்.

சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் பரிட்சையில் எழுதினால் போதும் என்கிற ரீதியில்?

எப்படி புதிய தலைமுறையினர் இந்த ஹிந்தியை முழுமையாக தெளிவாக கற்றுக் கொள்ள முடியும்?

பணத்தாளில் தமிழ் மொழி இருக்கிறதே?

ஏன் பாராளுமன்றத்தில் மொழிபெயர்பபாளர்கள் தமிழுக்கென்று இல்லை?

பேசினாலும் கத்துகிறார்களே ஏன்? காரணம் மடத்தடமான வெறி????????

அல்லது திணித்தல். திகட்டத்தான் செய்யும்.

இங்கு ஆயிரம் மலையாளிகளுடன் மிக நெருக்கமாக பழகியிருப்பேன். முதலாளி முதல் அடித்தட்டு தொழிலாளி வரைக்கும்.

மலையாளம் மட்டும் தான் பேசுகிறார்கள். பத்துவருடம் உள்ளே வாழ்ந்தாலும் கூட. இது ஏன்?

முக்கிய நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருப்பவர்கள் கூட அலுவலக உரையாடல் முடிந்து நான்கு பேர்கள் ஒன்று சேர்ந்தால் டக் கென்று மலையாளம் தான் வாயில் வருகின்றது? ஏன்?

என்னுடைய கருத்து நமக்குத் தேவை என்றால் தனிப்பட்ட முறையில் ஹிந்தியை கற்றுக் கொண்டால் போதுமானது.

ப சிதம்பரம் கூட தன்னுடைய ஓட்டுநர் முதல் கடைநிலை ஊழியர் வரைக்கும் உபி ஹிந்தி தான் பேசுகிறார். ஆனால் வெளியில் வாய் திறப்பதில்லை.

அவர் தமிழ் பேசும் பாருங்கள். கலைஞர் தோற்றுப் போய்விடுவார்.

ஆக்ஸ்போர்டு ஹார்வேர்டு தெரியுதா?

ஆயிரத்தெட்டு நொட்டை சொன்னாலும் நாமே உருவாக்கிக் கொண்டே தாழ்வு மனப்பான்மை தான் இதற்கு முக்கிய காரணம்.

பழமைபேசி 45 நிமிடம் பேசினார். ஒரு கலப்பு வார்த்தை கூட இல்லை.

இது ஒரு விதமாக மன்ப் பக்குவம்.

எல்லோருக்கும் வந்து விடாது.

ஜோதிஜி said...

இங்கு குழந்தைகள் ஹிந்தி படிக்கிறார்கள்?

எப்படி? அப்படியே நாம் ஆங்கிலத்தை தமிழிலில் எழுதி வைத்து படித்தோமே அப்படித்தான்.

சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் பரிட்சையில் எழுதினால் போதும் என்கிற ரீதியில்?

எப்படி புதிய தலைமுறையினர் இந்த ஹிந்தியை முழுமையாக தெளிவாக கற்றுக் கொள்ள முடியும்?

பணத்தாளில் தமிழ் மொழி இருக்கிறதே?

ஏன் பாராளுமன்றத்தில் மொழிபெயர்பபாளர்கள் தமிழுக்கென்று இல்லை?

ஜோதிஜி said...

பேசினாலும் கத்துகிறார்களே ஏன்? காரணம் மடத்தடமான வெறி????????

அல்லது திணித்தல். திகட்டத்தான் செய்யும்.

இங்கு ஆயிரம் மலையாளிகளுடன் மிக நெருக்கமாக பழகியிருப்பேன். முதலாளி முதல் அடித்தட்டு தொழிலாளி வரைக்கும்.

மலையாளம் மட்டும் தான் பேசுகிறார்கள். பத்துவருடம் உள்ளே வாழ்ந்தாலும் கூட. இது ஏன்?

முக்கிய நிறுவனங்களில் உயர்பதவிகளில் இருப்பவர்கள் கூட அலுவலக உரையாடல் முடிந்து நான்கு பேர்கள் ஒன்று சேர்ந்தால் டக் கென்று மலையாளம் தான் வாயில் வருகின்றது? ஏன்?

என்னுடைய கருத்து நமக்குத் தேவை என்றால் தனிப்பட்ட முறையில் ஹிந்தியை கற்றுக் கொண்டால் போதுமானது.

ப சிதம்பரம் கூட தன்னுடைய ஓட்டுநர் முதல் கடைநிலை ஊழியர் வரைக்கும் உபி ஹிந்தி தான் பேசுகிறார். ஆனால் வெளியில் வாய் திறப்பதில்லை.

அவர் தமிழ் பேசும் பாருங்கள். கலைஞர் தோற்றுப் போய்விடுவார்.

ஆக்ஸ்போர்டு ஹார்வேர்டு தெரியுதா?

ஆயிரத்தெட்டு நொட்டை சொன்னாலும் நாமே உருவாக்கிக் கொண்டே தாழ்வு மனப்பான்மை தான் இதற்கு முக்கிய காரணம்.

பழமைபேசி 45 நிமிடம் பேசினார். ஒரு கலப்பு வார்த்தை கூட இல்லை.

இது ஒரு விதமாக மன்ப் பக்குவம்.

எல்லோருக்கும் வந்து விடாது.

ஜோதிஜி said...

Pls change comments settings

Unknown said...

" ஜோதிஜி"

நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பெரிய மனிதர்களும், அடிப்படையிலேயே தமிழை இலக்கணபூர்வமாக கற்றவர்கள். அவர்களால் அதே பாணியில் பிற மொழிகளை எளிமையாக கற்க முடியும்.

தாய் மொழி கல்வியை அடிப்படையாக சிறுவயதிலிருந்து கற்க வேண்டிய அவசியத்தை தான், வானம்பாடி ஐயாவும் தனது கடைசி பத்தியில் சொல்லியுள்ளார். தாய் மொழி கல்வியை யாரும் நிராகரிக்கவேண்டும் என்று சொல்லவில்லை என்று நினைக்கிறேன். தாய் மொழிக் கல்வியை foundation ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும் என்பதை தான் வலியுறுத்தப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள எளிமையை தமிழிலும் கொண்டு வர வேண்டும்.

Ashok D said...

good one :)

ராஜ நடராஜன் said...

//ஆங்கிலத்தில் உள்ள எளிமையை தமிழிலும் கொண்டு வர வேண்டும். //

தமிழ் இலக்கண வரையறைகள் உடையது.எளிமையல்ல இங்கே பிரச்சினை.எந்த மொழிக்கும் பேசுவோர்க்கு எளிமையானதே.

தமிழ் மொழி மீதான மதிப்பும் இலக்கிய ஆர்வமும் நமக்கு அவசியம்.

Unknown said...

'தமிழ் மொழி மீதான மதிப்பும் இலக்கிய ஆர்வமும் நமக்கு அவசியம்".

சார், நீங்க சொன்ன இந்த ரெண்டிலும் நம்ம மக்கள் குறைவில்லாம மதிப்பு வெச்சிருக்காங்க. நடைமுறைப படுத்துவதில் தான் சிக்கல்.
1 . ஆங்கிலம் பேசத் தெரிஞ்சா தான் மதிப்புன்னு நினைகிறது.
2 . தமிழ் இலக்கியம் புரிஞ்சாலும், அது எளிதில் பேசுவதற்கு இயலாத போது, அது ஒரு தடைகள் தான்.

உதாரணத்துக்கு, பழமையார் நேற்று, யானைக்கு எத்தனை பெயர்கள் உள்ளதுன்னு சுட்டி காமிச்சார். யானை எங்கர வார்த்தையை தவிர்த்து இலக்கிய ஆர்வத்தில் வேறு வார்த்தை உபயோகிச்சோம், அதனை பேரும் அண்ணாந்து நோக்கி அப்பிடிங்கலானு கேட்க வேண்டியது தான்.

priyamudanprabu said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள் !!!)

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

Unknown said...

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

ஒரு தனி பதிவு போட்டிருந்தால் எல்லோரும் ஒரே இடத்தில சொல்ல வசதியாக இருந்திருக்கும்.

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி:)