Thursday, March 25, 2010

கலாய்க்கப்போவது யாரு -2வந்துடுங்க!!
நாள் : 27/03/10

கிழமை ; சனிக்கிழமை

நேரம் : மாலை 6 மணி

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் 
6. முனுசாமி சாலை, 
மேற்கு கே.கே.நகர். 
சென்னை: 

தொடர்புக்கு 
மணிஜி :9340089989
M.M.Abdulla -9381377888
cablesankar -9840332666
லக்கிலுக்: 9841354308 
நர்சிம் ; 9841888663 
பொன்.வாசுதேவன் : 9994541010

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஓஜாரே ஓஜா...ரே ரே. ஓஜா..

பொன்னாத்தா:
வணக்கம் அடுத்ததாக வந்து கலக்கப் போறவரு பிரபாகர்.

பிரபா: வணக்கம் தங்கச்சி..

பொன்னாத்தா: அண்ணா நீங்களா..

பிரபா: பாசமான என் அன்பு தங்கச்சி
              கேட்டுபுட்டாலே நீங்களான்னு அண்ணாச்சி..

வா.பா:
தோ. அதெல்லாம் இடுகையில. இது ப்ரோக்ராம். டி.ஆர். மாதிரி நடிச்சி காட்ரீங்களா என்னா? என்ன பண்ணப் போறீங்க அத சொல்லுங்க.

பிரபா: வணக்கங்கைய்யா. ஸ்டாண்டப் காமெடிதான்யா. வழக்கமா பாத்திங்கன்னா எல்லாரும் ஜோக் படிச்சிட்டு வந்து துண்டு துண்டா சொல்லுவாங்கைய்யா. இது அப்படி இல்லங்கைய்யா. ஒரே ஃப்ளோல அப்பிடியே வருங்கைய்யா. யோசிக்கவே இல்லங்கைய்யா. பேரு கூப்டதும் டக்னு இந்த ஐடியா வந்ததுங்கைய்யா. நிகழ்ச்சிக்குள்ள போலாங்களாய்யா?

பொன்னாத்தா:
இப்படி ஒரு அப்பாவியா இருக்கீங்களேண்ணா. ஆரம்பிங்க.

பிரபா: அப்ப நான் மாமா பொண்ண ஒரு தலையா லவ் பண்ணிட்டிருந்த நேரம். சங்க காலத்துல காளைய அடக்குறது, இளவட்டக்கல்லு தூக்குறது மாதிரி மாமா பொண்ணு ஒரு பாம்ப புடிச்சி கொண்டா. அப்பதான் லவ் பண்ணுவேன்னு சொல்லிட்டாப்ல. என்னடா இப்படி சொல்லிபுட்டான்னு கலவரமாயிடிச்சி. வேல்முருகன் சொன்னாப்ல, பாம்புன்னுதான  சொன்னா. அனகொண்டான்னு சொல்லலையே. ஆத்துக்கு போய் தண்ணி பாம்ப புடிச்சிடலாம்னு சொன்னாப்ல.

சரின்னு நான், வேல்முருகன்,ராஜு, எல்லாம் ஆத்துக்கு போனோம். அங்க ஒரு பொண்ணு லவ் ஃபெய்லூய்ர்ல தண்ணில முழுகிடிச்சி. நான் காப்பாத்துங்கன்னு கத்தி, அக்கம்பக்கதுல எல்லாருமா சேர்ந்து கரைல போட்டாங்க. நான் சினிமால பார்த்தத கவனம் வெச்சி, வயத்த அமுக்கி தண்ணிய வெளிய எடுங்கன்னேன்.

இதாண்டா சாக்குன்னு வயசு பசங்க அத்தன பேரும் பாஞ்சி அமுக்குனதுல அதுக்கு மூச்சு நின்னு போச்சு. வாயோட வாய் வெச்சி ஊதுனா மூச்சு வரும்னேன். நீ செய் பிரபான்னாங்க. இல்ல! மாமா பொண்ண லவ் பண்ணாதவங்கதான் பண்ணனும்னேன். நாந்தான் நாந்தான்னு ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிகிட்டதுல அந்த பொண்ணு செத்து போச்சு.

ஃப்ரெண்ட்ஸ்ங்கெல்லாம் ஓட்டிடாங்க. ஊர்க்காரங்கள்ளாம் சேர்ந்து என்னாலதான்னு என்ன மரத்துல கட்டி போட்டுடாப்ல , சாவு எடுக்கற வரைக்கும். அப்புறம் ஆத்துக்குள்ள அளைஞ்சி ஒரு பாம்ப புடிச்சிட்டு மாமா பொண்ணு எனக்குதான்னு தெம்பா போனேன். எனக்கு முன்னாடி சித்தப்பா பையன் ஒரு ரப்பர் பாம்ப காட்டி மடிச்சிட்டாப்ல. அதாவது பரவாயில்ல நான் கொண்டு வந்தது மண்புழுன்னு போட்டு குடுத்துட்டாப்ல. அந்த கதைய அடுத்த எபிசோட்ல சொல்றேன்.

கேபிள்ஜி: கொர்..கொர்ர்..கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

பொன்னாத்தா: கேபிள்ஜி. அண்ணாவோட பெர்ஃபார்மன்ஸ் பத்தி சொல்லுங்க. அங்க என்ன பண்றீங்க கொரட்ட விட்டுகிட்டு?

கேபிள்ஜி: அவ்வ்வ். கொரட்ட இல்லம்மா. சிங்கப்பூர் போனப்ப ராத்திரி 3 மணிக்கு எழுப்பி இத இடுகையா போடட்டா அங்கிள்னு கேட்டாரும்மா... பயங்கர தமாஷ்

பொன்னாத்தா:
நீங்க சொல்லுங்க சார்.

வா.பா. நல்லா இருந்திச்சி ப்ரபா. எப்ப நடந்தது இது?

பிரபா: நான் மூணாவது படிக்கும் போதுய்யா. மாமா பொண்ணுக்கு வயசு ஒண்ர. 5 நிமிஷத்துக்கு அரங்கம் அதிர்கிறது.

பொன்னாத்தா:
யோவ் செறப்பு. ஒரு ஒரு வாட்டியும் கேக்கணுமா. உங்க ஒபினியன் சொல்லுங்க.

அதுசரி: நமப் பார்வதீ! குழந்தாய்! என் பாம்ப காணோம்! நீர்தான் பிடித்துக் கொண்டு போனீரோ? :o)))

ஓஜாரே ஓஜா..ரே.ரே..ஓஜா..


பொன்னாத்தா:
அடுத்ததாக கலாய்க்க வருபவர் பாலாசீ. வாங்க பாலாசீ. நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி என்ன பண்ணப் போறீங்க சொல்லுங்க.

பாலாசீ
: ஜட்ஜ் செலக்‌ஷன் சரியில்ல.

பொன்னாத்தா
: என்னது? யோவ். நிகழ்ச்சி என்ன பண்ணப் போறீங்க சொல்லுங்கன்னா இதென்னா வில்லங்கம்?

பாலாசீ:
ஆமாங்க! பின்ன என்ன. 8 வரி நடக்கற சாங்கியம் கூட 2 வரி சொந்த பிட்ட சேர்த்துவிட்டு கல்லா கட்டுறவன் நானு. இப்பல்லாம் யாரும் இடுகைய படிக்கறதே இல்ல. பாலாசீ பின்னூட்டம் இல்லீன்னா சப்ப இடுகைன்னு போய்டுறாங்க. என்ன போய் இவங்க ஜட்ஜ் பண்ணாங்கன்னா பரிசா குடுப்பாங்க. பொறாம..

பொன்னாத்தா:
சரி சரி அதெல்லாம் இருக்காது. நீங்க சொல்லுங்க. என்ன பண்ண போறீங்க?

பாலாசீ:
பின்னூட்ட காமெடின்னு ஒரு அய்ட்டம்

பொன்னாத்தா: சரி அசத்துங்க..

பாலாசீ: இப்புடித்தாங்க ஒரு நாள் வழக்கம் போல தமிழ்மணம் தொறந்து வெச்சிக்கிட்டு இடுகை வருமான்னு உக்காந்திருந்தேன். ரொம்ப நேரமா ஒண்ணும் காணோம். சரின்னு எதிர்ல நாயர் டீ கடையில டீ சொன்னேன். அவன் டீ கொண்டு வந்துட்டு எதுக்கோ  ‘நன்னாயி’  ன்னு சொன்னான்.

போரடிச்சதா. கூகிள் ட்ரான்ஸ்லிடரேஷன்ல மலையாளம் செலக்ட் பண்ணி, நன்னாயின்னு அடிச்சனா. அது மலையாளத்துல வந்திச்சி. சரின்னு அப்படியே ஒரு பொண்ணு பேர மலையாளத்துல டைப் பண்ணி ஸர்ச் பண்ணேன். ப்ரொஃபைல் வந்திச்சி. பார்க்க அழகா இருக்கவும் அதோட ப்ளாக்ல போய் ஒரு இடுகைய செலக்ட் பண்ணி, அழகா தெரிஞ்ச ஒரு வரிய கட் அண்ட் பேஸ்ட் போட்டு கீழ  ‘நன்னாயி’ பேஸ்ட் பண்ணேன். போட்டு 2 நிமிஷத்துல பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் வந்திச்சி.

பர பரன்னு ஆய்ட்டேன். நாயர் கடையில இன்னோரு டீ தெம்பா சொல்லிட்டு, நாயரே இத படிச்சி காண்பின்னேன். அவன் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிட்டான். சொல்லிட்டு சிரிய்யான்னா, இல்ல விளக்கு மாத்தால அடிப்பேன் ஓடிப்போயிருன்னு போட்டிருக்குன்னு சிரிச்சான்.

நான் அப்பாவியா, என்னாங்க அனியாயம்? அந்த பொண்ணு எழுதுனததானே நான் பேஸ்ட் பண்ணி  ‘நன்னாயி’ போட்டேன். எதுக்கு திட்டுதுன்னேன்? அத படிச்சீட்டு தரையில பொரண்டு பொரண்டு சிரிச்சான். அப்புறம் சொல்றான், அந்த பொண்ணோட லவ்வர் அவள விட்டுட்டு இன்னோருத்திய லவ் பண்றத பத்தி இடுகை போட்டிருக்கு அந்தம்முனி. என் கெரகம்,   “என்ன இப்படி மோசம் பண்ணிட்டானே அவன் உருப்படுவானான்னு” எழுதி இருந்தத வெட்டி ஒட்டி அதுக்கு பின்னூட்டம் நன்னாயின்னு போட்டுட்டேன். ஆனா இதுக்கெல்லாம் அசந்துடுவானா இந்த பாலாசீ. நாம பார்க்காத வெளக்குமாத்தடியா? டெய்லி அங்க போய் ஒரு வரி வெட்டி ஒட்டி நன்னாயி போட்டுட்டிருக்கேன். எப்புடீஈஈஈ.  சனியம்புடிச்சவனுங்க மலையாளமணம், மலையாலிஷ் ஓட்டுபட்டி வைக்கல.

பொன்னாத்தா: அய்யோஓஓ. சாமி முடியல. நீ திருந்தவே மாட்டியா பாலாசீ..

(வா.பா., கேபிள், அதுசரி எல்லாரும் தரையில் உருண்டு சிரிக்கிறார்கள். அரங்கம் முழுசும் ஸ்டேண்டிங்க் ஒவேஷன்)

பொன்னாத்தா: யப்பா ராசா! போப்பா! அவங்க பதில் சொல்ற நிலைமையில இல்ல.

பாலாசீ: யக்கா! கவிதைதான் புரிய மாட்டீங்குது. பரிசாவது கிடைக்குமான்னு புரியரா மாதிரி சொல்லுக்கா..அவ்வ்வ்.

பொன்னாத்தா: வணக்கம் பதிவர்களே. ஒரு சின்ன இடைவேளைக்கு பின் மீண்டும் சந்திப்போம்..கலாய்க்கப் போவது

மொத்த கும்பலும்: யாஆஆஆஆரூ!!

ஓஜாரே ஓஜா..ரே ரே ஓஜா.. 

(தொடரும்)

57 comments:

பிரபாகர் said...

ஆஹா...

நல்லா கலக்கியிருக்கீங்கய்யா!

பிரபாகர்...

முகிலன் said...

பிரபாகர் - பாலாசீ டோட்டல் டேமேஜ்..

V.Radhakrishnan said...

நன்னாயி.

கலகலப்ரியா said...

ஏதோ கற்பனைலயாவது பொன்னாத்தாவ கலாய்க்கலாமின்னு நெனைக்கறாங்க.... நடக்கட்டு நடக்கட்டு... அண்ணா கத சூப்பரு.... பாலாசி யேன்பா... ய்ய்யேன்....

க.பாலாசி said...

ஆகா... இன்னைக்கு துண்டு போச்சே....

க.பாலாசி said...

//பிரபா: பாசமான என் அன்பு தங்கச்சி
கேட்டுபுட்டாலே நீங்களான்னு அண்ணாச்சி..//

அவ்வ்வ்வ்வ்..........

ராஜ நடராஜன் said...

உங்க வீட்டுக்கு வரனுமுன்னு நினச்சா குறுக்கால குறுக்கால ஆளுக வந்து பேசிகிட்டு நிற்கிறாங்க.

க.பாலாசி said...

//கேபிள்ஜி: கொர்..கொர்ர்..கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..//

அட முழுசா சொல்றதுக்குள்ள என்ன தூக்கம்.....

துபாய் ராஜா said...

சார் சான்ஸே இல்லை... அப்படியே பிரபாகர் ஸ்டைல்...

பாலாசியும் கலக்கல்...

ராஜ நடராஜன் said...

ஸ்னேக் பிரபாகர்ன்னு பேர் வச்சதும் வச்சீங்க,நின்னு நிலைச்சிடும் போல இருக்குதே:)

க.பாலாசி said...

//பாலாசீ பின்னூட்டம் இல்லீன்னா சப்ப இடுகைன்னு போய்டுறாங்க//

ம்ம்ம்... அந்தளவுக்கா நெலம மோசமாயிடுச்சு....

க.பாலாசி said...

//மலையாளமணம், மலையாலிஷ் ஓட்டுபட்டி வைக்கல. //

ஆமங்க ரொம்ப கஷ்டமா இருக்கு... அங்கணயும் ஏதாவது கவிதை கெடைக்குமான்னு பாக்குறேன்... ஒண்ணும் தேரல.... என்ன பண்றது....

ராஜ நடராஜன் said...

ஓஜாரே ஓஜா..ரே ரே ஓஜா..

க.பாலாசி said...

//பாலாசீ: யக்கா! கவிதைதான் புரிய மாட்டீங்குது. பரிசாவது கிடைக்குமான்னு புரியரா மாதிரி சொல்லுக்கா..அவ்வ்வ்.//

ஆங்ங்ங்ங்...... பெறவு ரணகளமாயிடும் தெரிஞ்சிக்குங்க....

க.பாலாசி said...

//முகிலன் said...
பிரபாகர் - பாலாசீ டோட்டல் டேமேஜ்..//

நாளைக்கு உங்கமுறையாத்தான் இருக்கும்.. அப்ப நாங்களும் சொல்லுவோம்ல...

க.பாலாசி said...

//V.Radhakrishnan said...
நன்னாயி.//

என்னாது... எங்க ரெண்டுபேரையும் பிரிச்சி மேஞ்சதா..... இருக்கட்டும் இருக்கட்டும்....

க.பாலாசி said...

//கலகலப்ரியா said...
பாலாசி யேன்பா... ய்ய்யேன்....//

உங்ககிட்ட சொல்றதுக்கு என்னகங்கக்கா... ஊருக்கு எளச்சவன் புள்ளையார் கோயிலு ஆண்டியாம்... அந்த கதையா என்னைய வச்சி இவங்கள்லாம் காமடி பண்றாங்க.... அவ்வ்வ்வ்வ்....

முகிலன் said...

//வணக்கங்கைய்யா. ஸ்டாண்டப் காமெடிதான்யா. வழக்கமா பாத்திங்கன்னா எல்லாரும் ஜோக் படிச்சிட்டு வந்து துண்டு துண்டா சொல்லுவாங்கைய்யா.//

துண்டா? அது நசரேயன் சொத்தாச்சே?

முகிலன் said...

//அப்ப நான் மாமா பொண்ண ஒரு தலையா லவ் பண்ணிட்டிருந்த நேரம்//

அப்ப என்ன இப்பயும் ஒரு தல தான?

அட உங்க தோளுக்குமேல இருக்கிறத சொன்னேங்க..

முகிலன் said...

//வேல்முருகன் சொன்னாப்ல, பாம்புன்னுதான சொன்னா. அனகொண்டான்னு சொல்லலையே. ஆத்துக்கு போய் தண்ணி பாம்ப புடிச்சிடலாம்னு சொன்னாப்ல.//

இந்த ஃப்ரண்ட்ஸ் பயபுள்ளக தான் நம்மள கவுக்கிறதே

முகிலன் said...

//அந்த கதைய அடுத்த எபிசோட்ல சொல்றேன்.

கேபிள்ஜி: கொர்..கொர்ர்..கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
//

இந்தக் கதைக்கே கேபிள்ஜி தூங்கிட்டாரு. இன்னும் அந்தக் கதையயும் கேட்டா மொத்த ஸ்டுடியோவும் தூங்கிரும்..

முகிலன் said...

// நாம பார்க்காத வெளக்குமாத்தடியா? //

இதெல்லாம் ஒண்ணுமேயில்லப்பு. ஒரு கல்யாணத்தப் பண்ணிப்பாரும், அப்பறந்தெரியும் எது வெளக்கமாத்தடின்னு..

முகிலன் said...

//எப்புடீஈஈஈ. சனியம்புடிச்சவனுங்க மலையாளமணம், மலையாலிஷ் ஓட்டுபட்டி வைக்கல.
//

சரி நமக்கு இன்னும் எலக்சன்ல ஓட்டுப் போடத்தான் வயசாவல. இங்கனயாச்சும் ஓட்டுப் போடுவம்னு பாத்தா.. சனியம்புடிச்சவனுங்க

க.பாலாசி said...

//முகிலன் said...
இதெல்லாம் ஒண்ணுமேயில்லப்பு. ஒரு கல்யாணத்தப் பண்ணிப்பாரும், அப்பறந்தெரியும் எது வெளக்கமாத்தடின்னு..//

ரொம்ப அனுபவிச்சிருப்பிங்க போலிருக்கே... எப்டி தப்பிக்கறதுன்னும் சொல்லுங்களேன்...

க.பாலாசி said...

//முகிலன் said...
சரி நமக்கு இன்னும் எலக்சன்ல ஓட்டுப் போடத்தான் வயசாவல. இங்கனயாச்சும் ஓட்டுப் போடுவம்னு பாத்தா.. சனியம்புடிச்சவனுங்க//

என்னோட கொழந்த மனசு உங்களுத்தான் புரியுது அண்ணா.......

பா.ராஜாராம் said...

:-)))

முகிலன் said...

இங்கன கும்மி நடக்குது ஓடியா ஓடியா

முகிலன் said...

//ரொம்ப அனுபவிச்சிருப்பிங்க போலிருக்கே... எப்டி தப்பிக்கறதுன்னும் சொல்லுங்களேன்.//

தப்பிக்கிறதா?? அதெல்லாம் வாங்கி வாங்கி மரத்துப் போயிரும்.. பேசாம ஒன்னு ரெண்டு மூனுன்னு எண்ணிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்

Chitra said...

ஓஜாரே ஓஜா..ரே ரே ஓஜா..

கலாய்ப்பு மன்னன் யாரு? பாலா சார்தான். :-)

க.பாலாசி said...

//முகிலன் said...
தப்பிக்கிறதா?? அதெல்லாம் வாங்கி வாங்கி மரத்துப் போயிரும்.. பேசாம ஒன்னு ரெண்டு மூனுன்னு எண்ணிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்//

என்னங்கண்ணே... பீதிய கலப்புறீங்க... இன்னும் நான் ஒருவாட்டிகூட கல்யாணம் பண்ணலையே....பயமாயிருக்கே....

ஈரோடு கதிர் said...

//வா.பா. நல்லா இருந்திச்சி ப்ரபா. எப்ப நடந்தது இது?//

ம்க்கொய்யாலே... இதே வேலையாப்போச்சு

நீங்களே எங்கண்ணன உசுப்பேத்தி விட்டுட்டு பின்னாடி ரேக்குவீங்களோ

ஈரோடு கதிர் said...

//வா.பா., கேபிள், அதுசரி எல்லாரும் தரையில் உருண்டு சிரிக்கிறார்கள்.//

மீ... டூ

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
ஏதோ கற்பனைலயாவது பொன்னாத்தாவ கலாய்க்கலாமின்னு //

ஓ... நீங்கதானா அது!!!!

அது செரி

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...//

வாங்க சார்...இப்பதான் வழிதெரிஞ்சிதுங்களா!!!.. நான் கௌம்பறேன்... பத்திரமா பாத்து கும்முங்க...

ஈரோடு கதிர் said...

பிரபா... பாலாசி... டோட்டல் டேமேஜ்

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
வாங்க சார்...இப்பதான் வழிதெரிஞ்சிதுங்களா!!!//

இன்னும் இருக்கிறியா நீ!!!!!!

இராகவன் நைஜிரியா said...

கலக்கலோ கலக்கல்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆஹா...

இராகவன் நைஜிரியா said...

பிரபாவைப் பற்றி பிராபவை நீங்க நல்லா புரிஞ்சு வச்சு இருக்கீங்க அண்ணே.

ச.செந்தில்வேலன் said...

அசத்தறீங்க பாலாண்ணே.. இப்படி டேமேஜ் பண்ணீட்டீங்களே... அடுத்து யார் தலை உருளப்போகுதோ :)

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஐயா இடுகை கலக்கல்

பிரபாகர்..

சாரி

ஷங்கர்..:))

padma said...

சுப்பர் ங்க

றமேஸ்-Ramesh said...

நான் பிந்திட்டன் போல.. பிரபாகர் ஹாஹாஹாஹாஹா பாலாஜீிிி சுப்பர் பதிவு கலக்கிட்டீங்க போஸ்

இராமசாமி கண்ணண் said...

சூப்பர் :)

நசரேயன் said...

//முகிலன்
March 25, 2010 7:20 PM
பிரபாகர் - பாலாசீ டோட்டல் டேமேஜ்..//

அண்ணே முகிலனைஎல்லாம் நல்லா தூக்கலா கலாயுங்க

ஸ்ரீராம். said...

மலையாள ஜோக் கல கலா..

புலவன் புலிகேசி said...

செமையா கலாய்ச்சிட்டீங்க...அதுவும் பிரபாகர் அண்ணனோட பாம்புக் கதை அவரு இடுகை மாதிரியே இருக்கு....

தாராபுரத்தான் said...

பாலாசி தம்பி ஒண்ணும் கவலைப்படாதீங்க...சும்மா பயமுறுத்தறாங்க.

வரதராஜலு .பூ said...

டாப் கியர்ல போவுது.

கலக்கல்.

இன்னும் யார் யாருக்கு டோட்டல் டேமேஜோ?

இன்னும் இன்னும் மேல போங்க


:)

சேட்டைக்காரன் said...

இது கலாய்ப்பு இல்லீங்க, கலகலகலகலாய்ப்பு! அசத்தல்!!!

vidivelli said...

அண்ணரே கலக்குங்க.......கலக்குங்க.......

நர்சிம் said...

கலாய்க்கல்..கலக்கல்.குழுமத்திற்கு வாழ்த்துகள்

நாடோடி said...

ந‌ல்லா போகுது.... ஒருத்த‌ரையும் விட‌மாட்டீங்க‌ போல‌.

princerajan C.T said...

சிரிச்சிட்டே இருக்காங்க ..எல்லோருடைய வாழ்நாளிலும் ஒரு நாள் கூடியது .

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

பாலாசி மேட்டர் - நன்னாயி

DREAMER said...

//அந்த பொண்ணோட லவ்வர் அவள விட்டுட்டு இன்னோருத்திய லவ் பண்றத பத்தி இடுகை போட்டிருக்கு அந்தம்முனி. என் கெரகம், “என்ன இப்படி மோசம் பண்ணிட்டானே அவன் உருப்படுவானான்னு” எழுதி இருந்தத வெட்டி ஒட்டி அதுக்கு பின்னூட்டம் நன்னாயின்னு போட்டுட்டேன்.//

நன்னாயி

ரோஸ்விக் said...

ஆஹா பிரபாகர் - பாலாசி ரெண்டுபேர் பேரும் டோட்டல் டேமேஜ்... செம சிரிப்பு... அதுலயும் குறிப்பா... பிரபாகர் அண்ணாச்சியோட வந்திச்சி, போச்சி... ஸ்டெயிலு பணால்... :-))