Friday, March 12, 2010

காய் வலி -1

(டிஸ்கி:
  1.  முகிலனோட பூவலிக்கு இது எதிர் இடுகை அல்ல. 
  2.  இண்டியன் வெர்ஷன்னு வெச்சிக்கலாம். 
  3. முகிலன் கிட்ட நேத்தே சொல்லி பெர்மிஷன் வாங்கிட்டேன்.  )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


கரையோரக் குடிசைகளும், பாழடைந்த பங்களாக்களும், பளபளக்கும் அடுக்கு மாடி வீடுகளும் என்று வகைப்படுத்த முடியாத ஒரு ஏரியா.

யோவ். எந்திரிய்யா. மணி ஏழாய்ட்சி போல. போய் ஒரு டீயும் பன்னும் வாங்கியாந்துடு. நான் ரெடியாவுரேன். அந்தம்மா கூவிகினுருக்கும். இன்னாமோ முடியலய்யா எனுக்கும். எந்திரிய்யா என்றாள் சுமதி. முதல் நாள் ஏற்றிக் கொண்ட டாஸ்மாக் மப்பு தெளியாமல் முனகியபடி புரண்டு படுத்தான் கிசோரு. திரும்பவும் உலுக்கினாள்.

..த்தா. எய்ந்தேன். இடுப்பு மேல ஒதிப்பேன். புள்ளதாச்சின்னு பாக்குறேன். மப்புல பட்தா இப்டி எய்ப்பாதன்னு எத்தினி வாட்டி சொல்லிகிறேன் போமே, என்று திரும்பப் படுத்தான். யோவ். நேரமாயிட்சிய்யா. நீ வண்டி எடுக்க தேவல? எப்பப்பாரு குட்சிகினு வந்து பட்தா பூவாக்கு எங்க போக? 

நீ ஓணா பாரு. புள்ள பெக்க யார்னா அனாதி மாதிரி என்ன இட்டும்போய் சேர்த்தா உண்டு. இல்லாங்காட்டி, தோ! அங்க பன்னி குட்டி போட்டுகுதே. அப்டிதான் நான் பெத்து போட்டு கெடக்க போறேன். நீ குட்சிகினு குசாலா சாவு என்று குரல் உடைந்தாள்.

...ம்மால. சனியன கட்டிக்கினு சாவரதா கீது. கெளம்பிகினு முருகனாண்ட அங்க ட்ராப் பண்ண சொல்லி எறங்கிகமே. போ சொல்லவே ஆயா கடைல ரெண்டு இட்லி துண்ட்டு கெளம்பு. நான் இட்டாந்து ஊட்ல உட்டு  சவாரி போய்க்கிறேன் என்று சொல்லியபடியே உறங்கிப் போனான்.

--------------------------------------------------------------------------------------
ஹேய்! ராம். ராம். கெட்டப் மேன். அம்மாவ எழுப்பாம ஒரு டீ போட்டு குடுய்யா என்றாள் ரம்யா.

குட் மார்னிங். ஏண்டா? தூங்கலையா? யூ லுக் சோ டயர்ட். என்னாச்சி. என்னை எழுப்பக் கூடாதா என்றபடி எழுந்து போய் அதே வேகத்தில் வந்தவன், ஷிட்! சர்வெண்ட் மெய்ட் மில்க் கொண்டு வரல மேன். ப்ளேக் டீ ஓகேயா என்று கொண்டு வந்தான்.

ப்ளேக் டீ யா. க்கே. ஸீ ராம். ஐ ஃபீல்ஸ் சோ அன்காம்ஃபி. என்னமோ பண்றது. சிவியர் பெயின் இல்ல. பெட்டர் லெட்ஸ் ஹேவ் அ செக்கப் வித் அர் டாக்டர் என்றாள்.

யா. ஐ வில் மேக் அன் எமெர்ஜென்ஸி அப்பாயின்மெண்ட். நீ டீ சாப்ட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து ரெடியாய்டு என்றபடி குளிக்கக் கிளம்ப டோர்பெல் அடித்தது. கதவைத் திறந்தபடி என்னம்மா இவ்வளவு லேட் என்று சொல்ல வந்ததை, ரம்யாவை விட பெரிய வயிற்றுடன் நோஞ்சானாய் நின்ற சுமதியைக் கண்டதும் விழுங்கியபடி ஏதும் சொல்லாமல் நகர்ந்தான்.

இரண்டு நாள் முன்னாடியே டாக்டரிடம் பேசியாகிவிட்டது. எப்படியும் இரண்டே குழந்தைகள். நார்மல் டெலிவரி, டென்ஷன், ரிஸ்க், பெயின் எல்லாம் எதுக்கு? பேபி ஈஸ் ஹெல்தி. இந்த வீக்ல எப்போ வேணா பிறக்கலாம். சோ. சிசேரியன் பண்ணா ஈசி என்று முடிவெடுத்திருந்தார்கள் இருவரும்.

டோண்ட் சூஸ் என் ஆஸ்பிஷியஸ் மொமெண்ட் மேன். ஜாதகம் எழுதிட்டு வந்து அந்த நேரம்னு கேட்டா ஈவன் ஐ காண்ட் அர்ரேஞ் இட். சூஸ் அ குட் டே இஃப் யா விஷ் அன் டெல் மீ. வி வில் கெட் ஹெர் அட்மிட்டட் ஒன் டே பிஃபோர் என்றிருந்தாள். அதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருந்தன.

பெரியம்மா எய்ந்துக்கலியா சார்? தப்ச்சேன். அக்கா எப்டி கீது, ஏந்துட்சா? ஏந்ததும் டீ கேக்கும். தோ போட்னு வந்துடறேன் என்று நகர்ந்தாள் சுமதி.
--------------------------------------------------------------------------------------

வீடு பெருக்கும் போதே பளிச்சென்று சுண்டியிழுத்தது சுமதிக்கு. ஹூக்ம் என்றபடி நிமிர்ந்து ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு பெருக்கத் தொடங்கினாள். பர பரவென்று வேலை செய்யச் செய்ய களைப்பும் வலியுமாய்த் தவித்தாள்.

குளித்து விட்டு வந்த ராம் டாக்டருக்கு ஃபோன் செய்தான். குட்மார்னிங் டாக்டர். ராம் ஹியர். ரம்யா வான்ன டாக் டு யூ டாக்டர் என்று ஃபோனைக் கொடுத்தான். டாக்டரின் கேள்விகளுக்கு பதில் சொல்லி போனைக் கொடுத்தாள்.

ராம். ஐ ஹாவ் டு அட்டெண்ட் எ கான்ஃபரன்ஸ். இட்ஸ் இம்பார்டண்ட். ஐல் பீ ஃப்ரீ பை டூ, ஆஃப்டர் த லஞ்ச் ஈஸ் ஓவர். யூ ப்ரிங் ஹர் டு த நர்ஸிங் ஹோம் ஷார்ப் பை நைன். ஐ வில் ஸீ ஹர் அண்ட் அட்மிட் ஹர் இஃப் நெஸஸரி. மோஸ்ட் ப்ராபப்ளி இட்ஸ் ஃபால்ஸ் பெய்ன். எனி ஹவ் யூ ஹேவ் டிசைடட் டு ஹேவ் சிசேரியன். டேக் மை வர்ட். நத்திங் டு வர்ரி என்று சொல்லி வைத்தாள்.

எழுந்திரும்மா. நான் அம்மாவை எழுப்புறேன். வி ஹேவ் டு லீவ் இன் 45 மினிட்ஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே என்னாச்சுடா என்றபடி வந்தாள் ரம்யாவின் அம்மா. மட மடவென்று டாக்டர் சொன்னதைச் சொல்லி, அவளை ரெடி பண்ணுங்க அத்தை. நான் டாக்டர் கிட்ட போய்ட்டு தேவைன்னா ஃபோன் பண்ணிட்டு கார் அனுப்பறேன் என்றான் ராம்.

உன் மாமியார் ஸ்பெசிஃபிக்கா இன்னைக்கு கூடாதுன்னு சொன்னாளேம்மா. டாக்டர்ட கேளு என்ற படி அவளை பாத்ரூமுக்கு நகர்த்திக் கொண்டு போனாள் ரம்யாவின் அம்மா.

--------------------------------------------------------------------------------------

யம்மா. நோவு கண்டுட்சி போலம்மா. ஒரு ஃபோன் பண்ணிக்கிறேம்மா என்றவளிடம், அதுக்குள்ளயாடி? நீ ரெண்டு வாரம் ஆகும்னு சொன்னியே? இன்னைக்குன்னு பார்த்தா உனக்கு வலி வரும். சரி போன் பண்ணுடி. உங்க மாமியார வரச் சொல்லு என்றபடி ரமாவைக் கவனிக்கச் சென்றாள்.

இரண்டு மூன்று முயற்சிக்குப் பின் போதை+தூக்க கலக்கத்தில் செல்லை எடுத்தான் கிசோர். யோவ். நோவு கண்டுட்சி போலய்யா. வண்டியெடுத்துனு அத்தைய இட்டுனு, ஆஸ்பத்திரி சீட்டு சரவணா கவர்ல கீது, அப்டியே தூக்கினு,  ஃப்ளாட்டண்ட வாய்யா. ஆஸ்பத்திரி போகணும் என்றவளை, இன்னாடி இது? சரி வரேன் என்றபடி முகம் கழுவி வண்டியெடுத்தான்.

--------------------------------------------------------------------------------------
ஐ டோன் திங்க் ஐ கான் வாக் என்றவளை கை பிடித்து இறக்கி, வீல் சேரில் அமர்த்தி தள்ளிக் கொண்டுபோய் ஹாய்! டாக்டர் குட்மார்னிங் என்றான் ராம். சிரித்தபடி, வாட் ரம்யா. காண்ட் வெயிட் டு சீ யூர் பேபி ரைட்? நர்ஸ். டேக் ஹர் டு லேபர் ஐ வில் கம் என்று அனுப்பிவிட்டு,  யூ வெயிட் ஹியர் ராம்.,நதிங் டு வர்ரி என்றபடி நகர்ந்தாள் டாக்டர்.
--------------------------------------------------------------------------------------
யோவ் சொன்னா கேளுய்யா. சீஃப் டாக்டர் வர நேரம். ஆம்பளைங்க நாட் அலவ்ட். அந்தம்மா இட்னு போவாங்க என்று விரட்டினான் அரசு மகப்பேறு மருத்துவமனைக் காவலன். போதை முற்றிலும் இறங்கியிருக்க, அண்ணாத்த, 2 வாரம் ஆவும்னு சொன்னாங்க அண்ணாத்த, ரொம்ப நோவுதுன்றா. டாக்டர்ட காட்டிட்டு எகிறிடுவேன். பாரு அண்ணாத்த என்றபடி 20ரூ நோட்டை மடித்து கைக்குள் அழுத்தினான். கைத்தாங்கலாய், சுமதியை இறக்கினாள் அவள் மாமியார். டேய். பனிக்குடம் ஒட்ஞ்சிட்சிடா. வீல் சேர் எட்தாடா. நர்ஸ கூப்ட்டு பாரு என்றாள்.

உள்ளே நுழைந்து ஒருவரையும் காணாமல், ஓரமாய் இருந்த வீல் சேரை தள்ளிக் கொண்டு வந்து அமர வைத்து வழியில் வந்த நர்சிடம் கடிபட்டு, கை காட்டப்பட்ட இடத்தில் சென்ற போது, இவளை மாதிரியே துடித்தபடி பத்து பதினைந்து பேர் இருந்தார்கள்.  ஆம்பிளைங்கள்ளாம் இருக்கக் கூடாது வெளிய போய்யா என்று விரட்டியபடி வந்தவனை, அப்ப நீ யாரு என்று கேட்கத் தோன்றியும், யம்மா! கேட்டாண்ட குந்தினுக்குறேன். எதுனா வேணும்னா வந்து கொரலுடு என்றபடி போனான் கிசோரு.
--------------------------------------------------------------------------------------
ஓக்கே ராம். பெட்டர் அட்மிட் ஹர். வீட்ல போய் என்ன பண்ணப் போறா? யூ டேக் தட் டபுள் ஏ.சி.ரூம். இட்ஸ் நியரர் டு த ஓ.டி. ஐ.வி கொடுத்து பார்க்கலாம். ஒரு வேளை நார்மல் டெலிவரின்னா வி ஷூட்ண்ட் இண்டர்ஃபியர். ஐ டோல்ட் மை அஸிஸ்டண்ட் டு கான்ஸ்டண்ட்லி மானிடர். ஷி வில் கால் மி இஃப் நெஸசரி. ஹேவ் யூ கம் ப்ரிபேர்ட்? ஐ வில் பி ஹியர் பை 2.30. லெட்ஸ் ஸீ, என்றாள் டாக்டர் மேனகா. மடமடவென தாழ்ந்த குரலில் இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுத்து, சத்தமாக எனி டைம் யூ ஃபீல் மை அட்வைஸ் ஈஸ் நீடட், கிம்மி எ கால். வைப்ரேஷன்ல வெச்சிருப்பேன். சோ நோ ப்ராப்ஸ் என்ற படி பறந்தாள் டாக்டர்.
--------------------------------------------------------------------------------------
மூடியிருந்த கதவின் பின்புறமிருந்து கிசோரு கிசோரு என்றாள் பாக்கியம். இன்னாம்மா? இன்னா சொன்னாங்க என்று ஓடி வந்தான். நோவுதானாம். இன்னும் ரெடியாவலையாம். நடக்க சொல்லி ரூம்ல உட்டுக்குறாங்க. சில்ற குட்றா. அல்லாத்துக்கும் துட்டு துட்டு துட்டுதான். நாஷ்டா வாங்கியாந்துட்டு, ஊட்ல போய் அவ பழைய பொடவ துணி, ஒரு லோட்டா, ஒரு ப்ளேட்டு எட்தாந்துடு. நான் போய் அவள பார்த்துட்டு வந்துடுறேன் என்று போனாள்.
--------------------------------------------------------------------------------------
(மீதி நாளை)

27 comments:

முகிலன் said...

அருமையான கதை சார்.. நம் நாட்டில் இருக்கும் இரு வேறு பிரிவினருக்கு மருத்துவ வசதி எப்படி இருக்கிறது என்று தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள்.. :)

Chitra said...

நாட்டு நடப்பை கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

thenammailakshmanan said...

நிஜம்தான் பாலா சார் மருத்துவ வசதி இரு வேறு பிரிவினருக்கு வித்யாசம்தான்

மேலும் என்ன குழந்தை பிறந்ததுன்னு தெரியலயே நார்மலா சிசேரியனான்னு எல்லாத்துக்கும் காசுதான் சரிதான்

குழந்தை பிறக்கப் போவது உண்மைனு நம்ப வைச்சுட்டீங்க அதே இந்தக் கதையோட வெற்றி

கலகலப்ரியா said...

நல்லாருக்கு சார்... வித்யாசம் காட்ட ட்ரை பண்ணி இருக்கீங்க... எழுத்திலும்...

தாராபுரத்தான் said...

அய்யா,இன்றைய தமிழக கிராம புறங்களில் தாய் சேய் நல சேவைகள் மிக சிறப்பாக செயல்படுத்தப்படடு வருகிறது.இருப்பிடத்திலிருந்து கார் வைத்து அழைத்து சென்று பிரசவம் பார்த்து ,தாயையும் சேயையும் ரூ,6700 பணத்துடன் வீட்டுக்கு அழைத்து செல்லப் படுகின்ற அதிசியங்கள் நடை பெற்று வருகிறது்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு Bala

பிரபாகர் said...

வழக்கம்போல் மிக அருமைன்னு சொல்லிட்டு டிஸ்கியில சொல்ல வேண்டிய எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்க அய்யா...

சென்னை பாஷை பேசறத நல்லா கூர்ந்து கவனிச்சிருப்பீங்க போலிருக்கு, நல்லா உங்க எங்க எழுத்துக்கு பிட் ஆகுதுங்கய்யா. நமக்குத்தான் பொறுமையா படிக்க வேண்டியிருக்கு.... பிரியல...

இருவேறுபட்ட வர்க்கத்தினரை அழகாய் அலசியிருக்கிறீர்கள். எதிர் இடுகை அல்ல என்று குறிப்பிட்டாலும் அதே விஷயத்தை வேறு கோணத்தில்... அசத்துகிறீர்கள்.

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

என்ன ஐயா திடீர்னு மாடரேசன் போட்டுருக்கீங்க?

புலவன் புலிகேசி said...

கண்முன் காட்சிகளாய் விரிந்து செல்கிறது இந்த பாகுபாடு...அடுத்து விரைவில் எழுதுங்க

சைவகொத்துப்பரோட்டா said...

எல்லாமே காசுதான்........நன்றாக வந்திருக்கிறது.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நல்லாருக்கு சார்... வித்யாசம் காட்ட ட்ரை பண்ணி இருக்கீங்க... எழுத்திலும்..//

அதேதான்.
--
அந்த டிஸ்கிய நானும் ரிசர்வ் பண்ணிக்கலாமா சார்..:)
--
அதென்னமோ முகிலன் சொன்னதிலிருந்தே உள்ள கொடாஞ்சிகினே கீது..:)
--
தொடருங்க.. தொடருங்க..

ஈரோடு கதிர் said...

அருமையான இடுகை...

மிகச் சிறந்த இடுகையில் இது முக்கியமானது...

இடுகை படித்து மனசு நொந்த போது...

தாராபுரத்து அண்ணன் சொல்றதும் கொஞ்சம் ஆறுதலா இருக்கு....

ஸ்ரீராம். said...

பொன்னகை அணிந்த மாளிகைகளும் புன்னகை மறந்த மண்குடிசையும்....

இருவேரியக்கம்...நல்ல நடை.

D.R.Ashok said...

மிக பிரமாதமான narration sir.. அப்பட்டமாக இரண்டு அடுக்குகளை காட்சி படுத்தியிருக்கீங்க... குறிப்பா டயலாக்ஸ் யதார்த்தம்.

நல்லபடியாவே முடிச்சுருங்க :)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல கதை; நாட்டுல இப்படித்தான் நடக்குது, என்னத்த சொல்ல..

எம்.எம்.அப்துல்லா said...

சில ஆண்டுகளுக்குமுன் காசு தராத வசதியற்ற இரு பெற்றோர்களின் பிறந்த குழந்தைகளை இடம்மாற்றிய வக்கிரபுத்தியை நினைவிருக்கா உங்களுக்கு???

இராகவன் நைஜிரியா said...

சூப்பர் கதை.

உலக நிகழ்வுகளை கதையாகச் சொல்லியவிதம் ... அருமை.

அக்பர் said...

நல்லாருக்கு சார்.

இப்படிக்கு நிஜாம்.., said...

எருமைகள் தங்கள் குடும்பத்தோடு பறக்க ஏரோப்பிளேன் டிக்கெட் வழங்கும் அரசாங்கம் இந்த ஏழைகளை வெறும் ஓட்டுப்போடும் மிசினாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பதற்கு நம் மருத்துவம் ஓர் உதாரணம்.இந்தியாவின் மருத்துவ வசதி தெளிந்த நீரோடையாகத்தான் இருக்கிறது.ஆனால் அங்கிருக்கும் பன்றிகள் அதை சாக்கடையாக மாற்றிவிடுகிறார்கள். பிரதிபலிக்கும் கதையண்ணே!

இப்படிக்கு நிஜாம்.., said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

ஏண்ணே! நல்லாத்தானே போயிக்கிட்டு இருந்திச்சி. அப்பறம் இதுவேற எதுக்காம்????

பா.ராஜாராம் said...

D.R.Ashok said...

//மிக பிரமாதமான narration sir.. அப்பட்டமாக இரண்டு அடுக்குகளை காட்சி படுத்தியிருக்கீங்க... குறிப்பா டயலாக்ஸ் யதார்த்தம்.//

இதேதான் பாலா சார்..

திருப்பூர் மணி Tirupur mani said...

:-)


:-)

ராஜ நடராஜன் said...

எழுதி முடிங்க.மொத்தமா படிச்சிட்டு சொல்றேன்.

ராஜ நடராஜன் said...

இரண்டாவது சுத்துல இப்ப நான் முதல் ஆளு போல தெரியுதே:)

உலகம் சுத்தற வேகத்துல எல்லோருக்கும் எத்தனை கடை ஏறி இறங்க வேண்டியிருக்குதோ.

கிசோரு,சுமதி வரைக்கும் வந்துட்டேன்.தொடர்கிறேன்.

ராஜ நடராஜன் said...

படிச்சு பின்னூட்டமும் முடிச்சாச்சு.உங்களுக்கு கூடவா தணிக்கை நிலமை?

ராஜ நடராஜன் said...

இரு வேறுபட்ட பிரசவ வாழ்க்கை.

வானம்பாடிகள் said...

அனைவருக்கும் நன்றி.