Monday, June 1, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 68

சிறிலங்காவின் கபடத்தனத்தை எதிர்கொள்ளும் அரசியல் கட்டமைப்பை வென்றெடுக்கும் பாரிய தேசியக்கடமை நம்முன் உள்ளது: செ.பத்மநாதன் அழைப்பு

அவன் கள்ளன் தெரியும். நீங்க தலைவர் இருக்கிறார்னு சொல்லி அப்புறம் இல்ல இறந்துட்டார்னு சொன்ன கபடம் என்ன?
__________________________________________
நடேசன், புலித்தேவன் சரணடையும் விடயம் கொல்லப்பட்டு 10 நிமிடத்தின் பின்பே தெரியும்: இராணுவ தளபதி தெரிவிப்பு

ஏன்? முடிச்சிட்டு சொல்ல சொன்னிங்களா?
__________________________________________
இருப்பினும் அவர்கள் தமது வெள்ளைக் கொடிகளைக் காண்பிக்க தாமதித்து விட்டனர் என்பதே உண்மையாகும்: ஃபொன்சேகா

என்னல்லாம் உண்மை பேசிட்டாரு இவரு. இது மட்டும் பொய்னு சொல்லதீங்கப்பா. நம்புங்க.
__________________________________________
இலங்கையில் ஏற்பட்ட தமிழ் பொதுமக்கள் இழப்பிற்கு இந்தியா பொறுப்பேற்கவேண்டும்: இந்திய முன்னாள் இராணுவ அதிகாரி

எப்பவுமே காலம் கடந்துதான் சொல்லுவீங்களா ஐயா மாரே?
__________________________________________
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் உள்நாட்டில் தான் நடைபெறும்: வெளியுறவு அமைச்சர்

அட எதுக்குங்க இதெல்லாம். ஒண்ணுமே நடக்கல. வெளிய இருந்தவங்கள்ளாம் வேலிக்குள்ள வரோம்னு வந்து இருக்காங்க. செத்த, கால் கை போன குஞ்சு குளுவான், கிழடெல்லாம் தடுக்கி விழுந்து அப்படி ஆச்சி. போங்கடா.
__________________________________________
கொழும்பு பல்கலைக்கழகம் ராஜபக்ஷ சகோதரர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க திட்டம்

உயிரைக் காத்த மருத்துவர்களுக்கு துரோகி பட்டம், உயிரெடுத்த பக்ஸேக்களுக்கு டாக்டர் பட்டமா? விளங்கிடும்.
__________________________________________
இலங்கை போரில் தப்பிய 400 விடுதலைப் புலிகள், அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும், சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதென்னா புதுக்கரடி. நல்லா அடிக்குதுடா கிலி இவங்களுக்கு.
__________________________________________
எதிர்க்கட்சிகளுக்கு மரியாதை கொடுப்போம்: பிரதமர்

உசாருப்பா. தமிழர் நலனில் கவலை கொண்டுள்ளோம்னாரு. ஆயிரக் கணக்கில போய்ட்டாங்க. இப்பொ மரியாத குடுப்பாராமா.
__________________________________________
விடுதலைப்புலிகளுக்கு உதவ கூடாது: உலக நாடுகளுக்கு இலங்கை அரசு கோரிக்கை

ஆமாம். இவனுங்களுக்குதான் உதவணும். பரதேசிங்களா. நக்கலா?
__________________________________________
ஈழம் என்ற வார்த்தையை நீக்க வேண்டும்: கொக்கரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி

வார்த்தையவே நீக்கணும்னு துடிக்கிற நாயி வாழவா விடும். எவனுக்கும் புரியாதா?
__________________________________________
பொட்டு அம்மான் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானது: சரத் பொன்சேகா

அட போடா. யாரு நம்பினாங்க. மறுப்பு வேறயா?
__________________________________________
விடுதலைப்புலிகளுடன் போர்: இலங்கை ராணுவ செலவு ரூ. 5 லட்சம் கோடி

கேடிங்க. அவனவன் அடிச்ச கோடிய சொல்ல மாட்டானுங்களே.
__________________________________________
உலங்கு வானூர்தி ஒன்று விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் தாக்கியழிக்கப்பட்டபோது அதில் விமானியாக இருந்த ரஷ்ய விமானி கொல்லப்பட்டதாக விமானப்படைத் தளபதி மார்ஷல் ரோஷான் குணதிலக கூறியுள்ளார்.

கூட்டா சேர்ந்துதானடா பண்ணிங்க. அதானே ஐநா அடக்கி வாசிக்குது. நாறத்தான் போறிங்க.
__________________________________________

18 comments:

SUBBU said...

//அவன் கள்ளன் தெரியும். நீங்க தலைவர் இருக்கிறார்னு சொல்லி அப்புறம் இல்ல இறந்துட்டார்னு சொன்ன கபடம் என்ன?//

சரியா கேட்டீங்க

ராஜ நடராஜன் said...

//உயிரைக் காத்த மருத்துவர்களுக்கு துரோகி பட்டம், உயிரெடுத்த பக்ஸேக்களுக்கு டாக்டர் பட்டமா? விளங்கிடும்.//

நறுக் 68.

பாலா... said...

@@சுப்பு
@@ராஜ நடராஜன்

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

கிரி said...

//இருப்பினும் அவர்கள் தமது வெள்ளைக் கொடிகளைக் காண்பிக்க தாமதித்து விட்டனர் என்பதே உண்மையாகும்: ஃபொன்சேகா//

நம்மை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே

sakthi said...

இலங்கை போரில் தப்பிய 400 விடுதலைப் புலிகள், அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும், சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதென்னா புதுக்கரடி. நல்லா அடிக்குதுடா கிலி இவங்களுக்கு.

வித்தியாசமான பதிவுகள் பாலா
ஒரே தலைப்பில் தினமும்
அசத்துங்கள்

பாலா... said...

/நம்மை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே/

காமெடி பண்ணா பரவால்ல. டிராஜடி பண்ணிட்டு சிரிக்க வைக்கிறது கொடுமை.

பாலா... said...

/வித்தியாசமான பதிவுகள் பாலா
ஒரே தலைப்பில் தினமும்
அசத்துங்கள்/

ஊக்கத்துக்கு நன்றி சக்தி

Sabes said...

//..உயிரைக் காத்த மருத்துவர்களுக்கு துரோகி பட்டம், உயிரெடுத்த பக்ஸேக்களுக்கு டாக்டர் பட்டமா? விளங்கிடும்..//
The Best
Thanks

பாலா... said...

வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி சபேஸ்

நசரேயன் said...

//விடுதலைப்புலிகளுடன் போர்: இலங்கை ராணுவ செலவு ரூ. 5 லட்சம் கோடி

கேடிங்க. அவனவன் அடிச்ச கோடிய சொல்ல மாட்டானுங்களே.//

கலக்கல் ..பட்டய கிளப்புது

பழமைபேசி said...

ஆமாம்...

கும்மாச்சி said...

உங்க கமெண்டுங்க எல்லாம் சூபெருங்கப்பு. நடத்துங்க.

பாலா... said...

/நசரேயன் said..
கலக்கல் ..பட்டய கிளப்புது

நன்றி நசரேயன்

பாலா... said...

/ பழமைபேசி said...

ஆமாம்.../

வாங்க பழமை. நன்றி

பாலா... said...

/ கும்மாச்சி said...

உங்க கமெண்டுங்க எல்லாம் சூபெருங்கப்பு. நடத்துங்க./

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி கும்மாச்சி.

மயாதி said...

காமடி என்ற பெயரில் இப்படி நறுக்கென வெட்டிப்போட்டிங்க நிறைய உண்மைகளை...
வாழ்த்துக்கள் !

//உயிரைக் காத்த மருத்துவர்களுக்கு துரோகி பட்டம், உயிரெடுத்த பக்ஸேக்களுக்கு டாக்டர் பட்டமா? விளங்கிடும்.//

பின்ன தமிழன காப்பாற்றியவன் துரோகிதானே !
இதுல என்ன சந்தேகம் அதுதான் கலைஞர் துரோகியாகாம இருந்திட்டார்...

பாலா... said...

வாங்க மயாதி. நன்றி

உங்கள் தோழி said...

//ஈழம் என்ற வார்த்தையை நீக்க வேண்டும்: கொக்கரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி//

//வார்த்தையவே நீக்கணும்னு துடிக்கிற நாயி வாழவா விடும். எவனுக்கும் புரியாதா?//

புரிஞ்சிட்டா மட்டும் என்ன பண்ணிட போறாங்க?:(:(:(