Thursday, April 28, 2011

ஜோக் எடு கொண்டாடு (கலிஞ்சர் பெசல்)

பூதத்தைப் பூனை விழுங்கிவிட்டதாகக் கூறுவது போல அனுமானமாக பலகோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்திவிட்டதாக ....

அப்ப பூனை இருக்கிறது நிசம்தானே தலீவா! கோர்ட்டு பூனைய வெளிய உடுங்குது. நீங்க பூதம் முழுங்குன கதைன்றீங்க:)) ஹி ஹி சிப்பு வல்ல.


கலைஞர் டி.வி க்காக ரூ 200 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு பின்னர் வட்டியுடன் திரும்பச் செலுத்தப்பட்டு..


யப்பா! அழுவாச்சியா வருது தலீவா. நேர்மைக்கே காலம் இல்ல தலீவா. ஓணும்னே ராஜாவ புடிச்சப்புறம் பயந்து போய் குடுத்தாங்கன்னு கத கட்டுறானுவோ. 


ஊழல் செய்வதையே கலாச்சாரமாகவும் தனது வாழ்க்கை முறையாகவும் கொண்ட சில அரசியல் கட்சி..


ஓஹ்ஹ்ஹ்ஹோஹ்ஹோ..ஆக்க்கக்கா..ஊக்க்கூக்குக்கூ..முடியல தலைவரே..இதுக்கு ராஜபிச்ச சமாதானத்துக்கான சண்டைன்னு சொன்னது எவ்வளவோ மேலு...


நானே கைது செய்யப்பட்டபோது கூட சிரித்த முகத்தோடுதான் ஏற்றுக் கொண்டேன்..


டோய்! எவண்டா எங்க தலீவன் குரல்ல கொல்றாங்கோன்னு கத்துனது? பாரு தல! எப்டில்லாம் ஏமாத்தி கீறானுவோ?


ஒரு லட்சத்து 32ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வேலை வாங்கிக் கொடுத்ததால் கனிமொழி மீது பொறாமை..


கம்னு இரு தலீவா. அப்புறம் இந்தக் கம்பெனிக்காரனுங்க கூட இன்னா லிங்குன்னு தேடுவானுவோ.
நாட்டுப் புறக் கலைகளை வளர்க்கவேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி..

அடங்கொன்னியா! இம்புட்டு நல்ல நோக்கத்துக்கு நீதிமன்றம் எதுக்கு துப்புச்சு?


காலையில் கூட நூற்றுக் கணக்கான கேமிராக்கள் பத்திரிகையாளர் காத்திருக்க கூட்டத்துக்கு வரத் தயங்கிய கனிமொழியை நானே நேரில் சென்று கூட்டி வந்தேன்..என் மகள் என்பதற்காக அல்ல..கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவதுதான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்...


சொன்னா புரியமாட்டிங்குது எசமான்? அப்ப ராசா எந்தக் கட்சி? இவரு ஏன் போகலன்னு கேள்றாங்குது...


கனிமொழி மட்டுமல்ல, அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகிற பாடு எனக்குத்தான் தெரியும்...


இந்த வயசுல இம்புட்டு சோகம் வரக்கூடாது தலீவா...


நான் மூன்று நாட்களாக அந்த வீட்டுக்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கிவிடுகிறேன்..


போனா இந்த நேரத்துல கூட அங்க போவாம இருக்க முடியாதான்னு இங்க இடிப்பாங்க. போவலைன்னா பொண்ண விட பொண்டாட்டி பெர்சா போச்சுல்லன்னு அங்க இடிப்பாங்க..என்னா கொடுமை தலீவா:((

எனக்குள்ள சங்கடங்களை பெரிது படுத்தி நான் என்றைக்குமே யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்கமாட்டேன்...

அட கிருத்திரம் புடிச்ச பக்கிகளா! பெரீவரு என்னா பீலிங்கா சொல்றாரு..ஓணும்னே கட்சின்னு சொல்ற இடத்துல குடும்பம்னு படிக்கிறது..குடும்பம்னு சொல்ற இடத்துல கட்சின்னு படிக்கிறதுன்னு ஏம்பா இப்படி...அவ்வ்வ்..

29 comments:

sathishsangkavi.blogspot.com said...

//சொன்னா புரியமாட்டிங்குது எசமான்? அப்ப ராசா எந்தக் கட்சி? இவரு ஏன் போகலன்னு கேள்றாங்குது...///

டாப்பு....

சும்மா நச்சு நச்சுன்னு இருக்கு தலீவா உங்க பதிலு....

முனைவர் இரா.குணசீலன் said...

சவுக்கடி நகைச்சுவைகள்.

முனைவர் இரா.குணசீலன் said...

(கலிஞ்சர் பெசல்)

அவரோட பேர இவ்வளவு அழகா சொல்ல உங்களாலதாங்க முடியும்...

முனைவர் இரா.குணசீலன் said...

நானே கைது செய்யப்பட்டபோது கூட சிரித்த முகத்தோடுதான் ஏற்றுக் கொண்டேன்..

டோய்! எவண்டா எங்க தலீவன் குரல்ல கொல்றாங்கோன்னு கத்துனது? பாரு தல! எப்டில்லாம் ஏமாத்தி கீறானுவோ?


அருமையா சொன்னீ்ங்க!!!

எப்படிலாம் நாடகமாடுறாங்க....?

மணிஜி said...

ப.கு.தி.ப

vasu balaji said...

/மணிஜி...... said...

ப.கு.தி.ப/

அது என்னாண்ணா?:))

யூர்கன் க்ருகியர் said...

தல ..தல ... !

என்னடா.. ?

சி பி ஐ வாராங்க தல ...

இப்பெல்லாம் சி பி ஐ க்கு என் குடும்பத்தோட விளையாடுறதே வேலையா போச்சி !!

பிரபாகர் said...

ஸ்பெஷல்.... ரொம்ப அருமையா இருக்கு... சம்மந்தப்பட்டவங்க படிச்சாலும் சிரிப்பாங்க!...

பிரபாகர்...

பனித்துளி சங்கர் said...

////ஊழல் செய்வதையே கலாச்சாரமாகவும் தனது வாழ்க்கை முறையாகவும் கொண்ட சில அரசியல் கட்சி..

ஓஹ்ஹ்ஹ்ஹோஹ்ஹோ..ஆக்க்கக்கா..ஊக்க்கூக்குக்கூ..முடியல தலைவரே..இதுக்கு ராஜபிச்ச சமாதானத்துக்கான சண்டைன்னு சொன்னது எவ்வளவோ மேலு... ///////

தங்களின் அனைத்துப் பதில்களும் சிறப்பு அதிலும் இந்த ஊழல பற்றிய தங்களின் சிந்தனை நச்சுன்னு சொல்லி இருக்கும் விதம் கலக்கல் .

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அருமை..

மக்களையெல்லாம் கேணப்பயல்கள் என்று நினைத்துக் கொண்டுதான் இம்மாதிரி அறிக்கைகள் எல்லாம் வருகின்றன...

இம்முறை தின்ற உப்புக்கு தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும் என நினைக்கிறேன்.

பழமைபேசி said...

அவ்வ்வ்......

ஜில்தண்ணி said...

டாப்பு தல :)

க.பாலாசி said...

//நான் மூன்று நாட்களாக அந்த வீட்டுக்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கிவிடுகிறேன்..//

இந்த வயசுலையும் இந்த மனுஷனுக்கு ஒரு கிளுகிளுப்பு தேவப்படுது பாருங்க..

சக்க அடி...

bandhu said...

//நான் மூன்று நாட்களாக அந்த வீட்டுக்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கிவிடுகிறேன்..//
இந்த ஆளோட தியாகத்தின் லெவல் இவ்வளவு தான்!

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கம்னு இரு தலீவா. அப்புறம் இந்தக் கம்பெனிக்காரனுங்க கூட இன்னா லிங்குன்னு தேடுவானுவோ.//
லிங்க் எடுத்துக் கொடுத்தாச்சு போல் இருக்கே !

ரிஷபன் said...

கம்னு இரு தலீவா. அப்புறம் இந்தக் கம்பெனிக்காரனுங்க கூட இன்னா லிங்குன்னு தேடுவானுவோ.

டாப்பு....

ஓலை said...

ச்சே ! என்ன சொல்றது. என் குடும்ப வளர்ச்சியப் பார்த்து ஒரே பொறாமை.

ஒருத்தர் பொறாமைப் படலாம். ஊரே பொறாமப் படலாமா!

-------
"ப.கு.தி.ப" -- விளக்கம் தர முடியுமா?

ஓலை said...

பாவம் சார். நடக்க முடியாத வயசிலும் இப்பிடி ஊர் ஊர்ராய்ப் போய் குடும்ப வளர்ச்சிக்கு உழைக்கிற மனுசனப் பார்த்து கேட்கிற கேள்வியா இது!

Kumky said...

அப்போ நாங்கதான் தப்பா புரிஞ்சிட்டமா...

ஹூம்...உலகமென்றால் என்ன....அம்மையப்பன் என்றால் என்ன...

ஈரோடு கதிர் said...

கலனாரின் வெந்த நெஞ்சிலே சொந்தக் கொள்ளியை சொறுகியதைக் கண்டித்து இன்னொரு 3 மணி நேரம் தின்னா விரதம்!!!!

நசரேயன் said...

அருமை

ராஜ நடராஜன் said...

பிராக்கெட்டு போடாட்டியும் ஆளுக சுத்துவாங்க:)

ராஜ நடராஜன் said...

//"ப.கு.தி.ப" -- விளக்கம் தர முடியுமா?//

கட்சி குட்டி போட்டுறுக்குமோ:)

ராஜ நடராஜன் said...

பெருசு எத்தனை அடிச்சாலும் தாங்குறாரு.நமக்குத்தான் கைவலிக்கும்.விட்ருங்கண்ணே.

தாராபுரத்தான் said...

போங்கண்ணா..அவருதான் உணர்ச்சிவசப்படு பேசுனாருன்னா..வரிக்கு வரி மானத்தை வாங்குறிங்கோ.

ஸ்ரீராம். said...

எல்லாமே டாப் கிளாஸ். என்ன சொன்னாலும் மக்கள் நம்புவார்கள் என்று அரசியல் தலைவர்கள் நம்புகிறார்கள். அல்லது நம்பாதவர்கள் குரலை அவர்கள் லட்சியம் செய்யப் போவதில்லை. தமிழ்நாட்டு ஜனங்களைச் சொல்லணும்...!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ஊசாத ஊசி பாலாண்ணா.

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி:)

Unknown said...

கலக்கல்