Saturday, April 23, 2011

அன்புள்ள மம்மி

ஆமாம். உனக்கு மம்மின்னு கூப்புட்டா பிடிக்காதுன்னு தெரிஞ்சிதான் கூப்புடுறேன். சின்னத்தம்பி படத்துல கவுண்டரு அவுங்கப்பாகிட்ட பொலம்பனத பார்த்து கிக்கிக்கீன்னு சிரிச்சல்ல. இதும் அப்புடி படிச்சிக்கோ. ஆனா சிரிக்காத! வகுறு எரியுது.

ஏதோ மொதப் பொறப்புன்னா பரவால்ல. யக்காக்கும் எனக்கும் நடுவுல பொறந்து செத்தது செத்து பொறந்ததுன்னு நீ சொன்ன கணக்குல மூணோ நாலோதானே நான் வரேன். ஒரு ஒழுங்கான சைசுல பெத்துக்கத் தெரியாது? பொறக்கறது நம்மகையிலயா இருக்குன்னு எஸ்ஸாவ பார்க்காத. எரிய எரிய மொட்டைய போட்டுட்டு, கொடங்கொடமா ரெண்டு கையிலயும் தண்ணிய வாங்கி அடிச்சி மண்டைய பாரு கவுத்து வெச்ச சொம்பாட்டம்னு ஷேப் பண்ணியிருக்கேன்னு அலட்டிக்குவல்ல. குப்புறபோட்டு மண்டைய ஷேப் பண்ண சரி, மல்லாக்க போட்டு மூக்கு பிடிச்சி விட்டேன். இல்லைன்னா சப்பைமூக்கா இருக்கும்னு பெரிய சாதனை மாதிரி வேற சொல்லுவியே, என் மம்மி.

ஒரு நாளாச்சும் ஸ்கூல்ல காக்கா மூக்கான்னுவானுவோ, டீச்சருங்களுக்கு பிடிமானமா ஆகிப் போவுமேன்னு யோசிச்சிருக்கியா நீயி. தெரியாமத்தான் கேக்குறேன். மண்டையிலயும், மூக்குலயும் மூடுறதுக்கோ அலங்காரம் பண்ணவோ ஒன்னுமில்லையே. அப்புறம் அத எதுக்குப் போய் வேல மெனக்கெட்டு பட்டி பார்த்த? அதெல்லாம் செஞ்சியே, பாதத்தை பிடிச்சி விடணும்னு, எம் புள்ளைக்கு காமாச்சி பண்ணுச்சே. நீ ஏன் பண்ணல? வாத்துக் காலு மாதிரி பப்பரப்பானு ஒரு பாதம்.

யம்மா! எங்கூட எத்தினி செருப்புகடைக்கு வந்துருப்ப. ஒரு வாட்டியாச்சும் என் சைசுக்கு கிடைச்சிருக்கா யம்மா? அட ஏதோ ஒரு வயசுல ஒரு வருசமாச்சுமா சரியா சைஸ் கெடக்காம வளப்ப? ஆறாம் நம்பர் வாங்குனா காலு வெளிய, ஏழாம் நம்பர் வாங்குனா செருப்பு வெளியன்னு என்னா பொழைப்பு இது. சரி ஷூ வாங்கலாம்னு போனா, சின்ன சைஸ் எடுத்தா கட்டை விரலுக்கு ஓட்டை போடுடாங்குது. கொஞ்சம் பெருசான்னா கால முன்ன நவுத்தி வச்சி நடந்தா பாத்ரூம் ஸ்லிப்பர் மாதிரி படக் படக்னு அடிக்குது. பின்னுக்கு தள்ளி நடந்தா முன்னாடி மடங்குது. இத்தனையும், அந்த வாத்துக்காலு உள்ள போறமாதிரி அம்பாசிடர் கார் மூஞ்சு மாதிரி அகலமான ஷூ வாங்குனாத்தான். இத்தினி வயசுல ஒரு ஷூ கூட போட வாய்க்கலையே யம்மா.

சரி, உடு. கண்ணு பொட்டயா போச்சுன்னு டாக்டர்கிட்ட போனமே. ரெண்டு கண்ணையும் ஒன்னாதான பெத்த? சோத்த மென்னு தின்னாலாவது வலப்பக்கம் மெண்ட, அதான் வலக்கண்ணு ஸ்ட்ராங்குன்னு கத சொல்லுவ. நாந்தான் குருட்டு கோழி தவுட்ட முழுங்குறாமாதிரி முழுங்குற கேசாச்சே. அதெப்பிடி ஒரு கண்ணு மைனஸ் மூணர, ஒன்னு மைனஸ் மூணுன்னு ஆவும் சொல்லு? அந்தாளு என்னா சொன்னான் கவனமிருக்கா? பதினாறு வயசுலயே இவ்வளவு பவரு கூடாது. நெறய கேரட் சாப்புடுன்னு சொன்னான். எனக்குதான் காய்கறியே பெரும்பாடாச்சே. இதுல கேரட்டுமட்டுமா சாப்புடப் போறேன்னு இருந்தேன்.

ஊர்ல உலகத்துல கண்ணாடி போட்டா ஒரு ரெண்டு வருசம் கழிச்சி ஒன்னு அப்படியே இருக்கும், இல்ல கொஞ்சம் கூடும். எம் பொழப்ப பார்த்தியா? தலைய வலிக்குதேன்னு போய் கண்ணு செக்பண்ணா, பவர் கம்மி ஆகியிருக்கே, எப்புடின்னு தாடிய சொறிஞ்சி சொறிஞ்சே வேற கண்ணாடி எழுதுவானுவோ. அத வாங்கிப் போட்டு ஆறுமாசத்துக்கெல்லாம் திரும்ப தலை வலிக்கும்.

போன வருசம் செக் பண்ணப்ப வலக்கண்ணுல மைனஸ் ஒன்னு இடக்கண்ணுல மைனஸ் முக்கால்னுச்சி டாக்டரு. இதுல வேற படிக்கறதுக்கு ஒரு கண்ணு ஓக்கே ஒன்னுக்கு ப்ளஸ் கால்னுச்சி. கவலையா நான் சரித்திரம் சொல்லி, ஏங்க வயசானா கண்ணு பார்வை குறையுமா ஏறுமா? இத்தனைக்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல கம்ப்யூட்டர மொறைக்கற ஆளுன்னா, கொஞ்ச நாள்ள கண்ணாடி போடவே தேவையில்லாம போகலாம் நல்லதுதானேங்குது. அடுத்ததா போட்டுச்சு ஒரு பிட்டு. இடக்கண்ண விட வலக்கண்ணுக்கு வேலை அதிகம் குடுக்கறனாம். அதென்னா ஏர் மாடா? ஒரு பக்கம் அடிச்சி ஓட்டுறதுக்கு.

சட்ட வாங்கப் போனா அவன்கிட்ட 38ம் 40ம் இருந்தா எனக்கு 39. பேண்டு வாங்கலாம்னு போனா 26ம் இல்லாம 28ம் இல்லாம ஒரு சைசு. நீளம் வேற பாதி பேண்டு துணிக்கு காசு வேஸ்டு. டெய்லர்கிட்ட தைக்கலாம்னு போனா, ஆறடி இருந்தாலும் 1.20மீ என் சைசுக்கும் 1.20மீ அப்படிங்குறான். நீ பி யூ சி சேர்க்குறப்ப 1.10மீ வாங்கிட்டு, பையன் குள்ளம்தானே மிச்ச துணில ரெண்டு ஜட்டி தச்சுடுங்கன்னு கேட்டு தச்சாமாதிரி நான் கேக்க முடியுமா?

சரி வயசானா ரோகம் வரும். அதாச்சும் ஒரு மொறையா வர வேணாமா? கழுத்து வலின்னு போனா தலகாணி இல்லாம தூங்குன்றான். நெஞ்செரிச்சல்னா ஃப்ளாட்டா தூங்காத மூணு தலகாணி வச்சி சாஞ்சாமாதிரி தூங்குன்றான்.

இப்ப ஏண்டா இந்த பொலம்பலுங்கறியா? பொலம்பாம என்ன செய்யச் சொல்லுற? ஆபீசுலதான் நாள் முச்சூடும் குடைராட்டினத்துல உக்காந்தவன் மாதிரி கால் நிலத்துல படாம உக்காந்து கால் வலிக்குது, முதுகு பொளக்குதே. மனுசனுக்கு ஒரு ரெக்ளைனர் சேர் வேணும்னு ஆசைப் படக்கூடாதா? நான் என்னா எண்பத்தேழு வயசானாலும் வீல் சேரானாலும் முதல் மந்திரி சேரா இருக்கணும்னா கேட்டேன். சாஞ்சிக்க ஒரு ரெக்லைனர் அம்புட்டுதானே.

போனேன் கடைக்கு. நல்ல குவாலிட்டில வேணுமான்னுச்சு. நாலுமுழம் வேட்டியோட போனா இம்புட்டுதான் மருவாதின்னு, ஆமாம்மான்னேன். பொட்டிய உருவி, குஷன் போட்டு ஒரு ரெக்லைனர் காட்டுச்சு. ஏழு ஸ்டேஜுங்கன்னு உக்காந்து, பிடியை ஆட்டி ஆட்டி கிட்டதட்ட ஒரு பெட் மாதிரியே படுக்கலாம்னு டெமோ வேற. இதத்தானே தேடிக்கிட்டிருந்தேன்னு பில்லப் போடுன்னேன்.


உக்காந்து பாருங்கன்னு சொன்னுச்சே. ஏழு ஸ்டேஜும் எப்படி இருக்குன்னு பார்த்து வாங்கமாட்டாம கூச்சம்.  வாங்கதான் போறமேன்னு போட்ட மேனிக்கு உக்காந்து பார்த்துட்டு வாங்கிட்டு வந்துட்டேன். முதுகுபக்கம் ஒரு கர்வ் வேற. முதுகு ஷேப்புக்கு, முதுகு வலியே வராதுன்னு வேற சொல்லுச்சேன்னு சந்தோசம். நெலைச்சுதா? இல்ல நெலைச்சுதான்னு கேக்குறேன். 

வந்து ஊட்ல உக்காந்தால்ல தெரியுது. கால சரியாத் தொங்க விடணும்னா கொஞ்சம் சரிஞ்சி உக்காரணும். அந்த பொடப்பு நடு முதுகுல முட்டுக் குடுத்து வகுத்த துருத்திக்கிட்டு எம்புட்டு நேரம்தான் உட்கார முடியும்? சரின்னு அணங்கி சுணங்கி அந்த புடைப்பு எங்க வரணுமோ அங்க உக்காந்தா பாதி ஆடு சதை கால் மடியற எடத்துல வருது. அப்புறம் எங்க மடக்க? சின்னக் குழந்தைய சலூன்ல உக்கார வெச்சாமாதிரி கால அந்தரத்துல நீட்டிக்கிட்டு எப்படி உட்கார?

கிட்ட கிட்ட நாலாயிரம் தண்டம் அழுதப்புறம்தான் கவனம் வருது. ஏண்டாடேய், முடிவெட்டப் போய் என்னைக்குன்னாச்சும் அந்த சீட்ல இருந்து கால் வைக்கிற ஸ்டேண்ட்ல கால் எட்டியிருக்காடா? ட்ரெய்ன்ல ஏசி கோச்சுல வீம்புக்குன்னாலும் எதிர் சீட் கீழ கால் வைக்கிற எடத்துல வைக்கிறேன்னு சாச்சி வச்ச ஏணிமாதிரி இருந்து முதுகு புடிச்சிகிச்சின்னு செத்தியேன்னு என்ன நானே கேட்டு என்ன பண்ண?

இப்ப புரியுதா ஏன் புலம்புறேன்னு. இப்புடி பட்டி பார்க்க உடம்பு ஃபுல்லா இருக்கறப்ப என் மண்டைய ரவுண்டாக்கிட்டேன். சப்ப மூக்க நீட்டாக்கிட்டேன்னு என்னா அலட்டு அலட்டுன? இதெல்லாம் கேக்காம எப்புடி இருக்கறது.

என்னாது?

இங்கபாரு, நானே வயத்தெரிச்சல்ல புலம்புறேன். இப்ப மட்டும் என்ன? லூசு கூட முழு லூசு இல்லைடா நீ, அரை லூசுன்னு சொல்லுறியே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
-:x:-

19 comments:

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கஷ்டம்தான் சாரே! :))) இப்பவும் ஒரு நல்ல ஈசி சேர் குவாலிட்டியா கிடைக்க மாட்டேங்குது:(

ராஜ நடராஜன் said...

எப்பவுமே ரெண்டாவதுதான் கொடுப்பினையா:)

விந்தைமனிதன் said...

மாவீரன் நெப்போலியன், அறிஞர் அண்ணா எல்லாரும் குள்ளம்தானாம்! அஞ்சடி நாலு அங்குலம்.

ஹி..ஹி.. நானும் அஞ்சடி நாலு அங்குலம்

:)))

வானம்பாடிகள் said...

:))) இந்த கேள்விக்கு உங்க ப்ரொஃபைல் ரொம்ப பொருந்துண்ணே:))

வானம்பாடிகள் said...

/விந்தைமனிதன் said...

மாவீரன் நெப்போலியன், அறிஞர் அண்ணா எல்லாரும் குள்ளம்தானாம்! அஞ்சடி நாலு அங்குலம்.

ஹி..ஹி.. நானும் அஞ்சடி நாலு அங்குலம்

:)))/

அதுல பிரச்சனையில்லை. ஒன்னு முதுகு நீட்டா, இல்லை கால் நீட்டா இருந்துட்டா பரவால்ல. இது சரியா நடுவுல சேம் சைஸ் ப்ராப்லம்:))

sriram said...

பட்டி ஏதும் பாக்க்காம பொடம் போட்ட தங்கமா மனசு கொண்ட மனுசனை உருவாக்கின மம்மியை திட்டுறியே மனுசா இது நியாயமா? மனுசனுக்கு முக்கியம் மனசா மயிரா?

நான் படிக்காத தற்குறி, வாழ்வில் எல்லாத்திலேயும் சுமார் ரகம் - அதுக்கே தலைக் கனம் என்று சொல்ற அளவுக்கு தன்னம்பிக்கை எனக்கு - உனக்கு என்ன ஐயரே - ராஜா மாதிரி வாழ்க்கை - பொலம்புறதை நிறுத்து பாலாண்ணா..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சிநேகிதன் அக்பர் said...

ம்ம்ம்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்...

ஓலை said...

Wow!

கே.ஆர்.பி.செந்தில் said...

:)))))

செ.சரவணக்குமார் said...

superb write up bala sir.

ஸ்ரீராம். said...

ஒரே Feelings of India வா இருக்கே....!!

சேட்டைக்காரன் said...

//ஆறாம் நம்பர் வாங்குனா காலு வெளிய, ஏழாம் நம்பர் வாங்குனா செருப்பு வெளியன்னு என்னா பொழைப்பு இது//

//இடக்கண்ண விட வலக்கண்ணுக்கு வேலை அதிகம் குடுக்கறனாம். அதென்னா ஏர் மாடா? ஒரு பக்கம் அடிச்சி ஓட்டுறதுக்கு.//

//நான் என்னா எண்பத்தேழு வயசானாலும் வீல் சேரானாலும் முதல் மந்திரி சேரா இருக்கணும்னா கேட்டேன்.//

வழக்கம்போல, ஆங்காங்கே தூவிக்கிடக்கும் ஐயா டச்! :-)
கெளப்பறீங்க!

ஈரோடு கதிர் said...

||ஒரு கண்ணு மைனஸ் மூணர, ஒன்னு மைனஸ் மூணுன்னு ஆவும் சொல்லு?||

ஒரு கண்ணுல பொலுக் பொலுக்னு சைட் அடிச்சா ரொம்பவும் தேயும்ல!

ஈரோடு கதிர் said...

||"அன்புள்ள மம்மி"||

ஓ... ரஜினி மாதிரி மம்மிக்குத்தான் ஓட்டுப் போட்டீங்ளா!???

ஈரோடு கதிர் said...

ஏன்னே பவானி ஜமுக்காளத்த பைப்ல திணிச்சு ஒரு ஈஸி சேர் வாங்கியிருந்தா இந்த இடுகை எழுதுன நேரம் மிச்சம்தானே # ரணகளத்துல கிளுகிளு ஐடியா கொடுப்’போர்’!!!

ஆரூரன் விசுவநாதன் said...

வலியையும் வேதனையும் கூட நாசூக்கா, சிரிக்க சிரிக்க சொல்ல உங்களாலதான் ஆசானே முடியும்.......

க.பாலாசி said...

சார் முடியல... வழக்கம்போலவே அடக்கமாட்டாம சிரிக்கிறேன்.

ரிஷபன் said...

இடக்கண்ண விட வலக்கண்ணுக்கு வேலை அதிகம் குடுக்கறனாம். அதென்னா ஏர் மாடா? ஒரு பக்கம் அடிச்சி ஓட்டுறதுக்கு.
ஹா ஹா ரசித்துப் படித்தேன்.. எனக்கு பவர் அதிகமாகிக் கொண்டே போகிறது..

தாராபுரத்தான் said...

அம்மா எந்த நேரத்தில என்ன பெத்தீகோ..