Wednesday, February 16, 2011

கேரக்டர் - அய்யர்.

அய்யரை நீங்கள் பார்த்திருக்கலாம். ஐந்தடி ரெண்டங்குலம் உயரம். கட்டையான சுமாரான பருமன். நல்ல நிறம். சிலர் நகம் வளர்ப்பார்கள். சிலர் மீசை வளர்ப்பார்கள். அய்யருக்கு மூக்கிலும், காதிலும் முடி வளர்ப்பதில் தனி ஈடுபாடு. காதில் உள்ளே வெளியே என்று பொசு பொசுவென்று காதை அடைத்துக் கொண்டு அப்படி ஒரு முடியென்றால் மூக்கில் ஷேவிங் ப்ரஷ்ஷை சொருகினார்போல் இருக்கும்.

பழைய ஐந்து பைசா போல் சதுரமுகம். இறுக்கி இறுக்கி தடித்த உதடுகள். மினுமினுக்கச் சிரிக்கும் கண்கள். மீசை வைத்தால் ஷேவிங் பிரஷ்ஷை மறைக்கும் ஷூ பாலிஷ் போடும் ப்ரஷ் போல் இருக்கும் என்பது போல் அகலமாக மூக்குக்கும் மேல் உதட்டுக்கும் இடைவெளி.

பொதுவாக சிலர் வெற்றிலை போடுவார்கள். சிலர் மூக்குப் பொடி போடுவார்கள். இதிலும் நம்ம அய்யர் தனி. ரெண்டும் உண்டு. அந்தக் காட்டுக்குள் மூச்சு போய் வருவதே கஷ்டம். இதில் பொடி வேறு எப்படி உள்ளே போகிறது என்ற சந்தேகத்துக்கே விடை தெரியாதபோது, வெற்றிலை குதப்பி இடுக்கிக் கொண்டு உம்ம்ம்ம்ம் மென்றிருக்கையில் வாயிலும் இல்லாமல் மூக்கிலும் இல்லாமல் மீன் போல் காதினாலும் இல்லாமல் எப்படித்தான் சுவாசிக்கிறார் என்ற கேள்விக்கு விடையேயில்லை.

பொதுவாக வெற்றிலை பாக்கு புகையிலை போடுபவர்கள் உம்மணா மூஞ்சிகளாக இருப்பது வழக்கம். புகையிலை எச்சில் ஊற ஊற கன்னம் கொள்ளாமல் பிதுக்கிக் கொண்டு, வாயோரம் கசியாமல் உதடு கூட்டிக் கொண்டு எழுதுவதும், ஏதாவது கேட்டால் அமாவாசை இரவில் ஊளையிடும் நரி போல் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு ‘அடெல்லாம் எழ்ழ கேட்டா டெரியாடு! அங்ஙடாழ் இழுக்கும் டேழு’ என்ற பதில் வரலாம். தானாக ஜோக் அடிப்பதோ அடிக்கப்படும் ஜோக்குக்கு சிரிப்பதோ இயலாத காரியம்.

ஆனால் அய்யர் அப்படியில்லை. ஒட்டகம் நீரைச் சேமிப்பதுபோல் புகையிலை நீரை சேர்த்து வைக்க தனி பை இருந்திருக்குமோவென்ற சந்தேகம் எப்போதும் உண்டு. காதைத் தீட்டிக் கொண்டு சுற்றிலும் நடப்பதைக் கேட்டுக் கொண்டு சிரிப்பு வந்தால் தேன் தடவிய குழந்தை போல் உதட்டைக் கூட்டிச் சுழித்து உப்பென்று நின்றால் கண்கள் கலகலவென சிரிக்கும்.

புகையிலை நீர்ப்பையில் பதுக்கினாற்போல் பெரும்பாலும் புகையிலை உருண்டை மட்டும் அடங்கி புடைத்த கன்னத்தோடு பளிச்சென வெடிச்சிரிப்பு கமெண்ட் அடித்து வாய் கூட்டிய மறு நொடி இரண்டு கன்னமும் உப்பிக் கொள்ளும்.

சாப்பிட்டுவிட்டு ஆஃபீஸ் வந்ததும் ஒரு முறை கொப்பளித்த கையோடு வெற்றிலை போட்டால் காஃபி வரும் வரை தாங்க முதல் கச்சேரி. வெற்றிலை போடுபவர்கள் சாதாரணமாக மேம்போக்காக காம்பு நீக்காமல், சீவல், பின்னால் ரெண்டு வெற்றிலை காம்பு கிள்ளி சுண்ணாம்பு அப்பி இடுக்கிக் கொண்டு, ஒரு உருண்டை பன்னீர் புகையிலை திணித்துக் கொள்வார்கள். அய்யருக்கு அது தவம்.

நெய் சீவல் இருந்தால் முகத்தில் தெரியும் வாஞ்சையே தனி. இல்லாவிட்டாலும் சீவலை விரலால் எடுக்கும்போதே அளவாய் வரும். ‘பாப்பான் நண்டு பிடிக்கிறார்போல்’ என்ற சொலவடை செல்லாது. சரியான அளவில் விரல் பிரிந்து சரியான அளவை அள்ளும். ஒரு முறை போட்டால் இன்னும் கொஞ்சம் என்ற பேச்சே இல்லை. அப்புறம் ரோஸ் சுண்ணாம்பை வழித்து ஆள்காட்டி விரல் முனையில் வைத்துக் கொண்டு துளிர் வெற்றிலையாக எடுத்து ஒரு உதறு. பிறகு ஒன்றொன்றாக முன்னும் பின்னும் பார்த்து சட்டையிலோ உட்கார்ந்திருந்தால் பேண்டிலோ துடைப்பார்.

துடைப்பது என்றால் அதற்கு அர்த்தமே வேறு. தங்க நகைக்கு நாய்த் தோலால் பாலீஷ் போடுவார்களே அப்படி. பின்பு கட்டை விரலால் வெற்றிலை நரம்பில் ஒரு நீவல். எடுத்த சுண்ணாம்பு சீராக எல்லா வெற்றிலையிலும் தடவி, முதுகுப் புறம் மடித்து, நுனி கிள்ளி, நடு நரம்பை இழுத்தால் சர்ஜன் மாதிரி காம்பு மட்டும் வரும்.

அந்த கேப்பில் விரலிடுக்கில் வெற்றிலையை வைத்துக் கொண்டு கட்டளைகள், விளக்கங்கள் சொல்லி ஒன்றொன்றாய் உள்ளே அனுப்புவதற்குள் சீவல் ஊறி பதமாய் இருக்கும். வெற்றிலை உள்ளே போனதும் புகையிலை உருட்டுவதெல்லாம் கிடையாது. அது ஒரு சீராக அரைபட்டு சீவலோடு கலந்தபிறகு, கண்ணாடித்தாள் பையிலிருந்து பன்னீர் புகையிலை அளவாக விரலிடுக்கில் சிக்கும். உள்ளேயே உருட்டி பந்தாக்கி வாய்க்குள் போட்டால் ஆலாபனை முடிந்த கச்சேரிபோல் முகத்தில் ஒரு எக்ஸ்டஸியோடு அமைதியும் சேரும்.

அந்த சுகத்தில் கொஞ்சம் திளைத்து விரல் சுண்ணாம்பைத் துடைத்து ஒரு சிட்டிகை பொடி எடுத்து திணித்த பிறகு மூலை மடித்த கர்ச்சீப்பால் மூக்கு ப்ரஷ்ஷுக்கு பாலிஷ். சன்னதம் வந்தவர் போல் ஆகிவிடுவார்.

அய்யர் குள்ளம் என்பதால் பெரும்பாலும் நின்றபடியேதான் வேலை செய்வார். நெடிய நோட் எழுத வேண்டும் என்றால் மட்டும் உட்காருவார். அரியர்ஸ் பில், மட்டமடித்ததால் சம்பளம் போடாத கேசுகளுக்குத் தெரியும். இந்த முயக்கத்தில் அய்யரிடம் போய் நின்றால் வரம்தான் என்று.

இத நம்பித்தான் பொண்டாட்டிக்கு கலியாணம் வச்சிருக்கேன் சாமி என்று புளுகினாலும், பாவம்யா பொண்டாட்டிக்கு கலியாணமாம் என்று பரிந்துரை செய்து செக்குக்கு ரெடியாக இருந்தாலும் திருத்தம் செய்யச் சொல்லுவார் அல்லது தானே செய்வார். அப்படி ஆட்களையெல்லாம் நிறையச் சொல்லியாகிவிட்டது. அய்யரின் ஸ்பெஷாலிடி வேறு.

என்னதான் பேரை மாத்தி வச்சிக்கோ எனக்கென்ன போச்சு என்று இராயப்பேட்டையை கொலைகாரன் பேட்டை என்றுதான் சொல்லுவார். தன் பதின்ம வயதில் யாரோ யாரையோ வெட்டத் துரத்தி வந்ததற்குப் பயந்து தில்லகேணி வரை ஓடி திரும்பி வர வழி தெரியாமல் திகைத்த கதை எத்தனை கேட்டாலும் அலுக்காது. அலுவலக வேலையில் மூழ்கி லேட்டான காலங்களில் அடிவயிறு கலங்க வீடு திரும்புகையில் நம்ம அய்யருடா என்று ஆறுதல் அளிக்கும் குரல் பலத்தில் ஓடிப் போய் வீடு சேரும் காமெடியை புகையிலை எச்சையோடு மற்றவர் புரையேறச் சிரித்தாலும் கண்ணால் சிரித்தபடி சொல்லும் கலைஞர்.

இன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்த வடக்கத்தியான் கோஷ்டியை  “உன் ஜர்தா என்ன பெரிய கொம்பா? இதைப் போடு” என்று பன்னீர்ப் புகையிலை பீடா கொடுத்து, கடைசி நாளில், வந்ததற்கு ரெண்டு பேராவாவது எழுதணுமே அய்யர் என்று கண்கள் கலங்க கெஞ்சி அவர் விருப்பத்துக்கு ரெண்டு ஜுஜூபி அப்ஜக்‌ஷன் எழுத வைத்தவர். 

சோதனைபோல் ப்ரமோஷனில் பெங்களூரு கண்டோன்மெண்டில் போட்டுவிட்டார்கள். சவம் பெங்களூர் மெயிலில் 365 நாளும் கூட்டம்தான். அதனால், சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கு கிளம்பினால் ஏற்காடு எக்ஸ்ப்ரஸில் முன்னதாக வந்து மேலே படுத்துவிடலாம். ஜோலார்பேட்டில் இறங்கி ஒரு பால் சாப்பிட்டு முடிக்க ஐலேண்ட் எக்ஸ்ப்ரஸ் காலியாக வரும். தூக்கம் தொடரலாம். திரும்பும் போதும் இப்படியே. வெள்ளி இரவு கிளம்பி சென்னை வந்து ஞாயிறு இரவு கிளம்பி பெங்களூர் சேருவது வழக்கம்.

அப்படி ஒரு முறை திரும்பும்போது ஏற்காடு எக்ஸ்ப்ரஸில் பாய்ந்து இடம் போட்டு ஏறியும் வண்டி கிளம்பவில்லை. கக்கூசில் தண்ணியில்லை என்று செயினை இழுத்ததால் நீர் நிரப்பும் வேளையில், ஆயில் துடைத்த துணிப்பந்தத்தைக் கொளுத்தி கோச்சின் அடியில் ப்ரேக் கட்டையை சரி பார்ப்பதை எண்ணெய்ப் புகையும் நெருப்பு வெளிச்சமும் பீதியைக் கிளப்ப, ‘அய்யய்யோ, வண்டியில் நெருப்பு’ என்று முதலில் பாய்ந்தவர் நம்ம அய்யர்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் கோச்சில் இருந்தவர்கள் முழுதும் ப்ளாட்ஃபார்மில்.  அது நெருப்பில்லை, ப்ரேக் செக்கிங் எனத் தெரிந்து ஆசுவாசமாவதற்குள் விசில் ஊத அனைவரும் பாய்ந்தேறிய பிறகு பார்த்தால் நிற்க இடமில்லாமல் நின்றிருந்த அய்யர் லக்கேஜில் படுத்திருந்தார்.

படுத்திருந்தவர்கள் எல்லாம் நின்றபடியும், நிற்க இடமில்லாதவர்கள் வசதியாகவும் ஒரு நொடியில் மாற, ‘யார்யா சவுண்ட் விட்டது’ என்ற எரிச்சல் கேள்விகளுக்கு புகையிலை அடக்கியபடியே அய்யரால் மட்டும்தான் வெடிச்சிரிப்பு சிரிக்காமல் இருந்திருக்க முடியும்.

அய்யருக்கு இன்னோரு ஸ்பெஷாலிட்டியும் உண்டு. மின்சாரத்தைத் தொட்டால் ஷாக் அடித்துவிடும் என்றபயம். ஒரு நாளும் கையால் ஸ்விட்ச் போட்டதோ அணைத்ததோ இல்லை. இருப்பா! நானும் கிளம்பிட்டேன் லைட்டை அணைத்துவிடு என்று கிளம்புவார். வேறு வழியில்லை எனில் இதற்காகவே பதுக்கி வைத்திருக்கும் 4 அடி நீள கட்டையால் முதல் முறை பட்டாசு கொளுத்தும் குழந்தைபோல் பீதியோடு அணைக்கும் அழகே அழகு.

கொடுமை கொடுமை என்று அய்யரைப் பழிவாங்கவே அடிக்கடி ஜல்ப் என்னும் ஜலதோஷம் பிடித்து ஆட்டும். மூக்குப் பொடியும் போட முடியாமல், புகையிலை எச்சையும் அடக்க முடியாமல் தும்மிக் கொண்டே இருந்தால் மனுசனுக்கு வேறே நரகம் என்ன இருக்கிறது? அப்போதெல்லாம் மருந்துக் கடைகளில்தான் ப்ராந்தி கிடைக்கும். அதுவும் ப்ரிஸ்க்ரிப்ஷன் இருக்க வேண்டும். அவுன்ஸ் க்ளாசில் ஊத்தி ராவாக கொடுப்பார்கள். அதை சிரப்பு என்று என்று நம்பிக் குடித்தவர் அய்யர்.

பெங்களூர் குளிருக்கு ஜல்பின் தொல்லை அதிகமாக ப்ரிஸ்க்ரிப்ஷனோடு மருந்துக் கடைக்குப் போனபோதுதான் அது சிரப்பில்லை ப்ராண்டி எனத் தெரிந்து கொண்டு, ஜல்பா ப்ராண்டியா என்று பட்டி மன்றம் நடத்தி ஒரு வாய் ஊற்றிக் கொண்டு மிச்சத்தை அப்படியே வைத்து விட்டு  வருவதை சொன்னதற்கு சிரிக்கவா? அல்லது  ‘அதுவரைக்கும் எனக்கு போதைன்னே தோணினதில்லை! ப்ராண்டிக் கடையில் குடித்தால் மட்டும் பறக்கறாமாதிரி கால் பின்னும்’ என்று குழந்தை மாதிரி சொல்வதற்கு சிரிக்கவா?

எட்டாம் நம்பர் சாராயக் கடையில் 50 மில்லி வாங்கி பன்னீர் சோடாவில் கலந்து மிளகு போட்டுக் கொண்டு வரச்சொல்லி அதை ஃபாரின் சிரப்பு என்று ஏமாற்றிக் கொடுத்து அய்யரின் அலம்பல் தாங்காமல் அவர் நண்பர் நொந்து போனது வேறு காவியம்.

இப்படிக் குழந்தையாகவே இருந்து ரிட்டையர் ஆகி கொஞ்ச வருடங்களுக்கு முன் இறந்து போனார் அய்யர்.
-:o:-

44 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமை வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான் தான் பஸ்ட்..

settaikkaran said...

//பழைய ஐந்து பைசா போல் சதுரமுகம்.//

வாவ்..! கலக்கல்!!

settaikkaran said...

//ஒட்டகம் நீரைச் சேமிப்பதுபோல் புகையிலை நீரை சேர்த்து வைக்க தனி பை இருந்திருக்குமோவென்ற சந்தேகம் எப்போதும் உண்டு//

ஹாஹா! எப்படி ஐயா இப்படி யோசிக்கிறீர்கள்? :-))

settaikkaran said...

//நடு நரம்பை இழுத்தால் சர்ஜன் மாதிரி காம்பு மட்டும் வரும்.//

அடுத்த கலகலப்பூட்டும் வர்ணனை!

settaikkaran said...

//வேறு வழியில்லை எனில் இதற்காகவே பதுக்கி வைத்திருக்கும் 4 அடி நீள கட்டையால் முதல் முறை பட்டாசு கொளுத்தும் குழந்தைபோல் பீதியோடு அணைக்கும் அழகே அழகு.//

அப்படியே ஒரு கேலிச்சித்திரத்தை பார்ப்பதுபோல இருக்கிறது. சூப்பர்!

settaikkaran said...

//எட்டாம் நம்பர் சாராயக் கடையில் 50 மில்லி வாங்கி பன்னீர் சோடாவில் கலந்து மிளகு போட்டுக் கொண்டு வரச்சொல்லி அதை ஃபாரின் சிரப்பு என்று ஏமாற்றிக் கொடுத்து அய்யரின் அலம்பல் தாங்காமல் அவர் நண்பர் நொந்து போனது வேறு காவியம். //

ஐயோ பாவம் சார்! :-))

settaikkaran said...

ஒவ்வொரு முறை கேரக்டர் வாசித்ததும் டெம்பிளேட் போல பின்னூட்டம் வந்து விடுகிறது. இப்போதும் அதுவே: "கேரக்டர் பத்தி எழுத ஐயாவுக்கு நிகர் ஐயாவே!"

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

sriram said...

அருமை பாலாண்ணா..
கேரக்டர் தொடரில் விழுந்த இடைவெளி ஏனோ?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அன்புடன் நான் said...

வணக்கம் அய்யா.

//ம் 4 அடி நீள கட்டையால் முதல் முறை பட்டாசு கொளுத்தும் குழந்தைபோல் பீதியோடு அணைக்கும் அழகே அழகு//

வேடிக்கையாதான் இருக்கு.

அன்புடன் நான் said...

அவசரப்பட்டு இடம் பிடித்து அப்புறம் நின்றுகொடே பயணப்பட்டதும்.... நல்ல நகைச்சுவை.

Chitra said...

இப்படிக் குழந்தையாகவே இருந்து ரிட்டையர் ஆகி கொஞ்ச வருடங்களுக்கு முன் இறந்து போனார் அய்யர்.


.....இவரை போன்றவர்கள் அபூர்பவமானவர்கள்.

சிநேகிதன் அக்பர் said...

class

ஓலை said...

அருமை சார்.
இன்னிக்கு சேட்டையார் நல்ல குஷி போலிருக்கு.

Unknown said...

ஐயரை வெகுவாகதான் ரசித்து இருக்கீங்க.. அவரை விவரனை செய்ய செய்ய நேரில் பார்ப்பது போல இருந்தது..

ரயிலில் அவர் படுக்க இடம் கிடைப்பதற்க்காக செய்த அட்டகாசம், சிரிச்சு மாளல..

பிரபாகர் said...

கடைசி வரியினைத்தவிர எல்லாவற்றுக்கும் சிரித்து மாளவில்லை. முழு ஹ்யூமரோடு ஒரு கேரக்டர், நம்ம அய்யர்...

அருமை அய்யா.

பிரபாகர்...

Ahamed irshad said...

ப‌ழகிய‌ உண‌ர்வு பாலா சார்..

கே. பி. ஜனா... said...

வர்ணனை டாப்ஸ்!Especially..
//நடு நரம்பை இழுத்தால் சர்ஜன் மாதிரி காம்பு மட்டும் வரும்.//

Paleo God said...

இத நம்பித்தான் பொண்டாட்டிக்கு கலியாணம் வச்சிருக்கேன் சாமி என்று புளுகினாலும், பாவம்யா பொண்டாட்டிக்கு கலியாணமாம் என்று பரிந்துரை செய்து செக்குக்கு ரெடியாக இருந்தாலும் திருத்தம் செய்யச் சொல்லுவார்///

கருப்பா பயங்கரமா இருக்கே சார் :))

அருமையான வர்ணிப்புகள்! அருமையான கேரக்டர்!

பா.ராஜாராம் said...

தன்னை மறந்து, குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தவனை, " என்னடே இப்படி ஒரு சிப்பாணி?" என்கிறார் அறைத் தோழர்.

என்ன சொல்லட்டும் பாலாண்ணா?

:-)) fantastic!

பா.ராஜாராம் said...

வர்ணனைகளிலும், விவரணைகளிலும் ஊறித் திளைத்து வந்திருக்கு கை! எழுதிய கையல்லோ!

cheena (சீனா) said...

அன்பின் பாலா - எப்படி இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள் - நேரில் பார்த்துப் பழகியவராக இருந்தாலும் கூட - இவ்வள்வு நுணுக்கமாக, அவரது செயல்களை, எழுதுவதென்பது கடினமான செயல் அல்லவா. சும்மா சொல்லக் கூடாது - சூப்பர் - பலே பலே !

cheena (சீனா) said...

அன்பின் பாலா

பணிச்சுமை அதிகமா - எழுதுவது குறைந்து விட்டதே ! ஏன் - 2009ல் 308 ; 2010ல் 163 ; 2011ல் ஆறே ஆறுதான். ஏன் பாலா ? என்ன விஷயம் .......தொடர்ந்து எழுதுக ! மறுமொழிகள் சராசரியாக 50 வருகிறதே ! நல்வாழ்த்துகள் பாலா - நட்புடன் சீனா

ராஜ நடராஜன் said...

ஓடிகிட்டே இருக்குற ஆளுகளைத்தான் அதிகம் பார்த்தேன்.எங்கேயிருந்து மாட்டுகிறது கேரக்டர்?

vinthaimanithan said...

நான் எழுத நினைத்த பின்னூட்டத்தை எழுதினால் வரிக்குவரி சிலாகித்து சற்றேறக்குறைய உங்கள் பதிவின் நீள அகலத்துக்கு ஆகிவிடும். ஒற்றைவரியில் போட்டால் டெம்ப்ளேட் போலாகிவிடும்...அது நமக்கு அலர்ஜி! ஏஞ்சாமி இப்படி சிக்கல்ல உடுறீங்க? யாத்தே நடுராத்திரி 1 மணிக்கு பேய்மாதிரி சிரிச்சிக்கிட்டு இருக்கேன். வெற்றிலைசீவல் போடும் பழக்கம் உண்டா என்ன? இவ்வளவு நுணுக்கமான விவரிப்பு... சான்ஸ்லெஸ்! எனக்கு வெற்றிலைசீவல் போடும் பழக்கம் உண்டு.. ஹி..ஹி! அய்யருக்கு ஜே!

nellai அண்ணாச்சி said...

படிக்க படிக்க சுவை

நசரேயன் said...

//வர்ணனைகளிலும், விவரணைகளிலும் ஊறித் திளைத்து வந்திருக்கு கை!
எழுதிய கையல்லோ//

ஆமா ..ஆமா ..

அது சரி(18185106603874041862) said...

||இத நம்பித்தான் பொண்டாட்டிக்கு கலியாணம் வச்சிருக்கேன் சாமி என்று புளுகினாலும், பாவம்யா பொண்டாட்டிக்கு கலியாணமாம் என்று பரிந்துரை செய்து செக்குக்கு ரெடியாக இருந்தாலும் திருத்தம் செய்யச் சொல்லுவார் அல்லது தானே செய்வார்||

:)))))

இது உங்க பிராண்ட் காமெடி.

ஆமா, இதெல்லாம் சேர்த்து ஒரு புக் போட்டா என்ன?

கலகலப்ரியா said...

அவதானிப்பும்... அதை எழுதிய விதமும் அருமை சார்...

ஸ்வீட் said...

ஐயரைபற்றிய அபார வர்ணனையில் அசந்து போய் விட்டேன்..தங்கள் கற்பனை வளத்திற்கு ஒரு ராயல் சல்யூட்.

மணிஜி said...

அய்யர் தி கிரேட்:-))(உங்களையும் சொன்னேன்)

Unknown said...

:)))) அருமையான வெற்றிலை வர்ணணைகள்!

என் அம்மா வெற்றிலை போடுவார். என் அப்பா பொடி போடுவார்!

ஸ்ரீராம். said...

வர்ணனைகள் என் சித்தப்பாவுக்கு அப்படியே பொருந்துகின்றன! சுவாரஸ்யம்.

ஈரோடு கதிர் said...

அய்யர் தி கிரேட்! :)

ரிஷபன் said...

துடைப்பது என்றால் அதற்கு அர்த்தமே வேறு. தங்க நகைக்கு நாய்த் தோலால் பாலீஷ் போடுவார்களே அப்படி. பின்பு கட்டை விரலால் வெற்றிலை நரம்பில் ஒரு நீவல். எடுத்த சுண்ணாம்பு சீராக எல்லா வெற்றிலையிலும் தடவி, முதுகுப் புறம் மடித்து, நுனி கிள்ளி, நடு நரம்பை இழுத்தால் சர்ஜன் மாதிரி காம்பு மட்டும் வரும்.
அட அட.. உங்களால் மட்டுமே முடியும்.. உயிரோட்டமாய் வர்ணனை.. சொக்கிப் போக வைத்த எழுத்து.

vasu balaji said...

வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க சௌந்தர்
@@நன்றி சேட்டை
@@நன்றி டி.வி.ஆர்.சார்
@@நன்றி ஸ்ரீராம். கொஞ்சம் வேலை ஸ்ரீராம்.
@@நன்றி கருணாகரசு
@@நன்றி சித்ரா
@@நன்றி அக்பர்
@@நன்றி சேது
@@நன்றி செந்தில்
@@நன்றி பிரபா
@@நன்றி இர்ஷாத்
@@நன்றிங்க ஜனா

vasu balaji said...

@@ நன்றி ஷங்கர்ஜி.
@@பா.ரா. தாங்க்ஸ்:)
@@நன்றிங்க சீனா. கொஞ்சம் வேலை.

vasu balaji said...

@@ ஹி ஹி அது பழய ஆளு நடராஜண்ணே.
@@ம்ம்ம். நன்றி ராஜாராமன். எப்பவாவது வெற்றிலை போடுவேன்.:))
@@நன்றிங்க நெல்லை அண்ணாச்சி
@@நன்றிங்க நம்ம அண்ணாச்சி.

vasu balaji said...

அது சரி(18185106603874041862) said...

||இத நம்பித்தான் பொண்டாட்டிக்கு கலியாணம் வச்சிருக்கேன் சாமி என்று புளுகினாலும், பாவம்யா பொண்டாட்டிக்கு கலியாணமாம் என்று பரிந்துரை செய்து செக்குக்கு ரெடியாக இருந்தாலும் திருத்தம் செய்யச் சொல்லுவார் அல்லது தானே செய்வார்||

:)))))

இது உங்க பிராண்ட் காமெடி.//

ஹி ஹி

// ஆமா, இதெல்லாம் சேர்த்து ஒரு புக் போட்டா என்ன?//

அவ்வ்வ்வ்வ்வ். என்ன ப்ளான். எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம். இடுகைல வேணாம்:))))

vasu balaji said...

/கலகலப்ரியா said...

அவதானிப்பும்... அதை எழுதிய விதமும் அருமை சார்.../

ம்ம்ம். ரொம்ப நன்றிம்மா.

vasu balaji said...

@@நன்றிங்க ஸ்வீட்
@@நன்றி மணிஜீ.
@@நன்றிங்க தஞ்சாவூரான்.
@@நன்றி ஸ்ரீராம். சொன்னேன்ல பார்த்திருக்கலாம்னு:))
@@நன்றி ரிஷபன்
@@நன்றி ப்ரவுண்ணா

vasu balaji said...

மேயரே. என்னா லொல்லு. நன்றி.

பழமைபேசி said...

தள்பதி, பின்னூட்டத்துக்கு பின்னூட்டம் போடுறதை எப்ப நிறுத்துவாரோ?

//பழைய ஐந்து பைசா போல் சதுரமுகம்//

புதிய ஐந்து பைசா எப்படி இருக்கும்? எனக்குத் தெரிஞ்சு,புது ஒரு பைசாக் காசு பூனை மாதிரி இருக்கும்... அஞ்சு பைசாக் காசு, புலி மாதிரி இருக்கும்.

பழைய ஒரு பைசா, பித்தளைல வட்டமா இருக்கும்.