Tuesday, February 15, 2011

கதிர் கீச்சுக்கு பதில் கீச்சு

கதிர் கீச்சுன கீச்சு இங்கே
ஒருவரின் நெருடல், மற்றொருவருக்குச் சாதகமானது. மற்றொருவருக்குச் சாதகமானது இன்னொருவருக்கு நெருடல். # மனுசனாப் பொறந்திருக்கக் கூடாதோ!?

ப.கீ: ஆசனூர் போனப்ப பின் சீட்டுல கும்க்கியும் ஆரூரனும் இவர நடுவுல உட்டு அமுக்கிட்டாங்க போல#மனுசப்பய கேக்கற கேள்வியா இது?
-0-
வார்த்தைகளுக்குள் அடங்குவதா காதல்? # கொசு@பிப்14.காம்

ப.கீ:ங்கொய்யால. பேச்சுவார்த்தயில்லாம காதல் சொன்னா கைய புடிச்சி இழுத்தியான்னு சொம்பு தூக்க அலையுது நாட்டாம#மூட்டைப் பூச்சி@பிப்.15.காம்
-0-
 
எந்த அரிப்பும் ஒற்றைச் சொறிதலில் அடங்கிவிடுவதில்லை. சொறியச்சொறிய இன்னும் கொஞ்சம் எனக் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது
ப.கீ:அல்லோ! யாருட்ட? மொதல் அரிப்புக்கு மொதல் சொறிதல் சரியாப் போச்சி. திரும்ப அரிக்கமாட்டேன்னு அக்ரீமெண்ட் இருக்கா? அது கேட்டா யாரு சொறியச் சொன்னா?
-0-
ஆறுகளைச் சாக்கடைகளாக மாற்றிவிட்டு அதையே வடிகட்டி, சுத்திகரித்துக்(!) குடிக்கும் மேம்பட்ட தலைமுறை நாம்!

ப.கீ:அடப்பாவி மனுசா! அப்ப மறு சுழற்சின்னு இடுகை இடுகையா போட்டு ஓட்டு தேத்தினதெல்லாம் பொய்யா?
-0-
வெறும் தகவல்களைத் தாங்கும் எழுத்தை விட உணர்வுகளைத் தாங்கும் எழுத்தின் ஆயுள் நீளமானது.

ப.கீ:ம்கும். இவருக்கு யார்னா காசு குடுக்க வேண்டி இருந்து, இந்தாங்க சாமி உங்க துட்டுன்னு ஒரு செக்கு (தகவல் தாங்கும் எழுத்து) குடுக்காம, அய்யா சாமி எனக்கு இம்புட்டு கஷ்டமா இருக்குன்னு ஓன்னு அழுது லெட்டர் (உணர்வைத் தாங்கும் எழுத்து) குடுத்தா இதுலயா கீச்சுவாரு? அவன கீச்சுடுவாரு.
-0-
சிக்னலில் நிற்கும்போது மட்டும் எல்லோருக்கும் ஒரே மாதிரி அவசரம் இருப்பது எப்படி

ப.கீ:அட கிளம்ப முன்ன ‘போகாம’ கிளம்பிட்டிருப்பாங்க. இதுக்கு வேற வெளக்கணுமோ?
-0-
 
ஆயிரம், பத்தாயிரம், ஐம்பதாயிரம் ரூபாய் என்பதெல்லாம் நிலைமைகளைப் பொறுத்து பெரிய தொகை என்று தெரிகிறது. ஆனால் 300 கோடி, 2000 கோடி, 40000 கோடி என்பதெல்லாம் சர்வசாதாரணாமா சொல்ல வருது... # என்னாச்சு எனக்கு? எனக்கு மட்டும்தான் இப்படியா?

ப.கீ:ஆயிரம், பத்தாயிரம், ஐம்பதாயிரம்லாம் நாம பார்த்து, தொட்டு, எண்ணி அனுபவிச்சது. இந்த கோடிய கண்டவன் எவன்? பத்தாயிரம் ரூபாய பாக்கட்ல போட்டுகிட்டு நடக்கலாம். பத்து கோடி ரூபாய செக்கா வெச்சிகிட்டு பட்டர் பிஸ்கட் கூட வாங்க முடியாது...# முன் மண்டை மினு மினுத்தா இப்புடிதான்.
-0-
எல்லாவற்றிலும் புதுசு வேணும்னு நினைச்சாலும், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவ மட்டும் ஏன் 10 வருசமா மாற்றாமல் வெச்சிருக்கிறோம். # யூ டூ!?
ப.கீ:அடியே! இப்படியெல்லாம் பிட்டப் போட்டு அத வச்சி ‘புதுசா’ ஒன்னு தேடினா பழசா பிஞ்சி போனதுல பச்சு பச்சுனு விழும்டி.# ம்கும்! மத்ததுல வாங்கறதுக்கு சோடி சேர்க்குது சோடி.
-0-
 தொலைத்த இடத்தில் தேடுவதைவிட, கிடைக்காத இடத்தில் தேடுவது பல நேரங்களில் காரணம் சொல்லித் தப்பிக்க உதவுகிறது # ஆமா நான் ஏன் இப்படி ஆயிட்டேன்?

ப.கீ:ஒரு பக்கம் ட்விட்டரு, ஒரு பக்கம் ஜி டாக்கு, ஒரு பக்கம் ஃபேஸ்புக்குன்னு அலபாஞ்சா இப்புடித்தான்#முன்னாடி மட்டும் ஓக்கியமோ?
-0-
உள்ளடங்கிய ஒரு கிராம விவசாய நிலம் ஏக்கர் 40 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவரின் கருப்புப்பணம் வெளுக்கப்படுகிறது.

ப.கீ:ஏன்யா ஏன்? மெயின் ரோடுல பங்களா கட்டினா மட்டும் வெள்ளைப் பணம்னா சொல்லப் போறீங்க. விக்கற விலையில வெள்ளப் பணத்துல கட்ட முடியுமாய்யான்னு அப்பவும் இதே தத்துவம்தானே.
-0-
ஒரே ஒரு நாளைக்காவது எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நிம்மதியா தூங்கப்போகனும் # கனவு

ப.கீ:டிவிட்ட மறந்து போய் தூங்கிட்டா மாதிரி கனவு கண்டு படக்குன்னு எழுந்து ட்வீட்டிருக்கு பய புள்ள.
-0-
இணையத்தில் எழுதுவதாலேயே கூடுதல் சமூகப் பொறுப்பு வந்திடுச்சா!? இணையத்தில் எழுத வராமலிருந்தால் அறச்சீற்றத்தை எங்கே கரைத்திருப்போம்?

ப.கீ:இணையத்துல எழுதுனாலும் ஊட்டுக்குள்ள கத்தினாலும் பத்து பேரு சுத்தி நின்னு பராக்கு பார்க்கதான் செய்வாங்க. என்ன, ஊட்டுல ஓவரா போனா தே! கம்னு கெடன்னு உச்சி மண்டையில சொடேர்னு ஒன்னு உழும்!
-0-
மக்களைப் பற்றிச் சற்றும் சிந்திக்காமல் கூட்டணிக்காக மட்டுமே மானங்கெடும் இந்த அரசியல் தலைகள்தான் நாளையும் இந்த நாட்டை ஆளவேண்டுமா?

ப.கீ:நாளன்னைக்கு ஆண்டா ஓக்கேயா பாஸ்?
-0-
 மனிதர்களைப் புரிந்து கொள்ளச் சிரமப்படும்போது நாம் மனிதர்கள் அல்லவோ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.

ப.கீ:சந்தேகம் மனுசனுக்கு மட்டுமே இருக்கிற வியாதின்னு சொன்னா நம்பாம சந்தேகப்பட்டா இப்படியெல்லாம் சந்தேகம் வரும்தான்.
-0-
எல்லா மக்களையும் சமமாக நடத்தி, சுறுசுறுப்பாக மக்களுக்காகவே இயங்கும் ஒரே அரசுத் துறை(!) டாஸ்மாக்

ப.கீ:டாஸ்மாக் அரசுத் துறையில்லை. அது கொம்பேனி.
-0-
எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரே ஒற்றுமை வெள்ளைச் சட்டை, மற்றும் மாசுபட்ட மனசு
ப.கீ:குசும்பப் பாரு. ஒருத்தன் வேட்டிய ஒருத்தன் உருவிட்டான்னு குறியீடா சொல்றாராமா.
-0-
ங்கொய்யாலே..... எம்.ஜி.ஆரு ஒரு ஆளு மட்டும்தான் முழுக்கைச் சட்டை, தழையக் கட்டிய வெள்ளை வேட்டியோடு ஏர் ஓட்டமுடியும் போல # உரிமைக்குரல்
ப.கீ:ங்கொய்யால நீரும் ஓட்டிப் பாரும்! அடுத்த நாள் உம்மைக் கட்டி ஊட்டம்முணி ஏர் ஓட்டுவாங்க# அடிமைக் குரல்.
-0-
 அரசியல் சார்பு எடுத்ததின் விளைவாக மட்டுமே அடிப்படை மனிதநேயம், மாண்பு, மனிதத்தன்மை செத்தொழிவது ஏன்? எல்லாமே காசுதானா?

ப.கீ:அவுங்கூட்டு  மனுசா மேல நேயம், அவரோட மாண்பு, அவுங்க மனுசங்களுக்கு நல்லது செய்யணும்னு தன்மையா இருக்கும்போது செத்துப் போச்சுன்னு எப்புடி சொல்லுவீங்ணா? சே சே அப்புடி காசுன்னு எல்லாம் கராரா இருக்க மாட்டாங்ணா? நெலம் புலம், காரு, கம்பேனின்னு எது குடுத்தாலும் சரிங்ணா.
-0-

பொறுப்பி: அவ்வப்போது  ‘ட்விட்டரில்’ கிறுக்காத ’ பதில் கீச்சுகள்’. ஏன்  போடலைன்னு ஏங்கி நொந்தவர்கள் பொறுத்தருள்க (இத மட்டும்  கொட்டைஎழுத்துல போட்டுடுவோம்)

23 comments:

சக்தி கல்வி மையம் said...

நாங்ககூட வருவோமில்ல..

சக்தி கல்வி மையம் said...

தங்களின் நகைச்சுவை எழுத்துக்கள் மனதை இலேசாக்குகின்றன்..

மணிஜி said...

கீச்..கீச்..கீச்ச்

Paleo God said...

அடப்பாவி மனுசா! அப்ப மறு சுழற்சின்னு இடுகை இடுகையா போட்டு ஓட்டு தேத்தினதெல்லாம் பொய்யா?//

இதெல்லாம் வேற மைண்ட்ல வெச்சிக்கணுமா? :))

சார் கீச்சு வேற பதிவு வேற..! :)

'பரிவை' சே.குமார் said...

Sir... Keechchukku unga kathir veechchu nalla irukku...

அகல்விளக்கு said...

செமயா கீச்சீட்டீங்க அண்ணா....

:-)

பா.ராஜாராம் said...

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

ஈரோடு கதிர் said...

//மூட்டைப் பூச்சி@பிப்.15.காம்\\

மருந்து வாங்கி அடிக்கிறேன் இருங்க :)))

பழமைபேசி said...

ஏதோ அதகள்ம் நடந்திட்டு இருக்கு

ஈரோடு கதிர் said...

||ஏதோ அதகள்ம் நடந்திட்டு இருக்கு ||

எனக்கு ஒரு புள்ளி கொறைஞ்சு போச்சே!!!!!!

ஈரோடு கதிர் said...
This comment has been removed by the author.
vasu balaji said...

/ஈரோடு கதிர் said...

||ஏதோ அதகள்ம் நடந்திட்டு இருக்கு ||

எனக்கு ஒரு புள்ளி கொறைஞ்சு போச்சே!!!!!!/

option

அ. வெட்டு ஒட்டு இல்லைன்னு காட்ட
ஆ. நீங்க பெரும்புள்ளின்னு
இ. ஆனைக்கும் அடி சறுக்கும்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//சருக்கும். \\

ஆசானே,
நீங்க ஏன் சறுக்கிட்டீங்க!//

நானும் ஆனையோ?

Unknown said...

கீச்சும்.. கீச்சு கீச்சும் சூப்பர்...

cheena (சீனா) said...

கதிர் -பாலா கூட்டணி தான் ஜெயிக்கற கூட்டணி - ஆமா

ராஜ நடராஜன் said...

எல்லோரும் டிவிட்டிறீங்களா?இப்பத்தானே தெரியுது பதிவு ஏன் முக்கா கிலோ கொறையுதுன்னு!

ஓலை said...

கீச்சு தான் கலக்குதேன்னு நினைச்சா பதில் கீச்சு செமயா கலக்குது.

நசரேயன் said...

///ஈரோடு கதிர் said...

||ஏதோ அதகள்ம் நடந்திட்டு இருக்கு ||

எனக்கு ஒரு புள்ளி கொறைஞ்சு போச்சே!!!!!!/

option

அ. வெட்டு ஒட்டு இல்லைன்னு காட்ட
ஆ. நீங்க பெரும்புள்ளின்னு
இ. ஆனைக்கும் அடி சறுக்கும்//

ஈ. நான் ரெம்ப வேலையா இருக்கேன்

காமராஜ் said...

நல்ல கீச்.
சிரிக்க சிரிக்க சிரிக்க அப்ப்றமா சிந்திக்க
வாழ்க அண்ணா, கதிர்.

vasu balaji said...

முதல் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி கருன்.

vasu balaji said...

@@ நன்றி ஷங்கர். பின்ன
@@ நன்றி குமார்
@@ நன்றி ராஜா.
@@நன்றி பா.ரா.
@@ நன்றி டி.வி.ஆர். சார்
@@ நன்றி கதிர். மொதல்ல கொசுவ அடிச்சுட்டு அப்புறம்:))
@@ நன்றிங் பழம
@@ நன்றி வானம்பாடிகள் (நமக்கு நாமே திட்டம்)
@@ நன்றி செந்தில்
@@ நன்றி சீனா சார்
@@ நன்றி ராஜண்ணா. ம்கும் நானெங்க ட்வீட்டினேன். :))
@@ நன்றி ஓலை
@@ நன்றி தளபதி. தூக்கம் வந்துச்சுதோ?
@@ நன்றிங்க காமராஜ்.

பவள சங்கரி said...

எவ்வளவு அருமையான கீச்சை தவற விட்டுட்டேனே..........