Monday, February 14, 2011

பகவத் கீதை - அத்யாயம் 19

பகவத் கீதை
அத்தியாயம் 19
ஜங்க் மெயில் யோகா.

அர்ச்சுனன்: ஹே வாசுதேவா! மிகக் கேவலமானதும் மன்னிக்க முடியாததுமான  ஜங்க்  மெயில்களை என் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும், மரியாதைக்குரிய பெரியவர்களுக்கும் அனுப்பி வைக்கும் ஈனச் செயலை நான் எப்படிச் செய்வேன்?

க்ருஷ்ணன்: ஹே பார்த்தா! இந்த நொடி யாரும் உன் நண்பனோ எதிரியோ, உறவோ பகையோ, இளையோரோ முதியோரோ, நல்லதோ கெட்டதோ எதுவுமில்லை. உன்னுடைய வலை தர்மத்திலிருந்து நீ தப்பிக்க முடியாது. உடனடியாக வலைமனை புகுந்து ஜங்க் மெயிலை அனைவருக்கும் அனுப்பு. அதுவே உன் கடமையும் நீ கடைப் பிடிக்க  வேண்டிய தருமமும் ஆகும்.

அர்ச்சுனன்:
ஹே முராரி! என் மனசாட்சியை உறுத்தும், என் ஆன்மாவை வதைக்கும் எச்செயலையும் என்னைச் செய்யத் தூண்டாதே!

க்ருஷ்ணன்: ஹே குந்தியின் மைந்தனே! மாயையின் கொடுமையான பிடியில் சிக்கித் தவிக்கிறாய் நீ. இந்த மெய்நிகர் உலகில் உனக்கும், உன் தர்மத்துக்கும், உன் மௌசுக்கும் தவிர நீ யாருக்கும் கடமைப்பட்டவனல்ல. ஜங்க் மெயில்கள் கடந்த 25 வருடங்களாக இருக்கின்றன. உனக்குப் பிறகும் கல்ப கோடி காலம் இருக்கும். மாயையிலிருந்து எழுந்து வா! உன் கடமையைச் செய்.

அர்ச்சுனன்:
க்ருஷ்ணபகவானே! ஜங்க் மெயில் எப்படி மாயையாகும் எனத் தெளிவு படுத்தும்படி ப்ரார்த்திக்கிறேன்.

க்ருஷ்ணன்:
வத்ஸ! ஜங்க் மெயில் என்பது ஆறாவது பூதமாகும். நிலம், நீர், வாயு, நெருப்பு, ஆகாசம், ஜங்க் மெயில் என்பவை அவை. அசைவோடும் அசைவின்றியும், உயிரோடும் உயிரின்றியும் இருப்பவை அவை. உன் சிஸ்டத்தையும் ஹார்ட் டிஸ்கையும் அளவுக்கதிகமாக நிரப்பும். ஆனால் அது ஒரு சிறந்த பலனைத் தருவதாகும். அது மக்களை அவர்களின் நேரத்தை இத்தகைய ஜங்க் மெயில்களைப் படிப்பதிலும், முன்னனுப்புவதிலும் அறிவைத் தேடும் செயலாக நம்ப வைக்கிறது. அது அவர்களின் அறிவையோ முயற்சியையோ பயன்படுத்தாமல் ஒரு சாதனையைப் படைத்ததான நிறைவைத் தருகிறது. எப்படி ஆன்மா ஒரு ஸ்தூல சரீரத்தை விட்டு மற்றொன்றுக்குத் தாவுகிறதோ அதுபோல் ஜங்க் மெயிலும் ஒரு சிஸ்டத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்லுமே தவிர அதற்கு அழிவோ சாவோ இல்லை.

அர்ச்சுனன்:
அருமை கிரிதாரி! ஜங்க் மெயிலின் லட்சணங்களைக் கூறுவாயாக

க்ருஷ்ணன்:
அதை நெருப்பு அழிக்க முடியாது. காற்றில் கரைந்து போகாது. அதை வெல்லவோ அடிமைப்படுத்தவோ இயலாது. அது உன் ஆன்மாவைப் போல் எங்கும் நிறைந்திருப்பது. அழிவற்றது.  உன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் பல நேரங்களில் நீ அனுப்பிய ஜங்க் மெயில் உன்னிடமே சில மாதங்களுக்கு , ஏன் சில வருடங்களுக்குப் பிறகு கூட வந்து சேர்ந்து நீ மீண்டும் அவர்களுக்கே அனுப்ப வகை செய்யும்.

அர்ச்சுனன்:
அருமை அருமை சாரதி! என் வணக்கங்கள். ஜங்க் மெயில் கலாச்சாரத்தை எனக்குக் காட்டினாய். நான் இந்த மாயையில் சிக்கி என் இதர கடமைகளை மறந்து இந்த ஜங்க் மெயில்களை சிரத்தையாய் படித்துவந்தேன். இனி, படிக்காமலே முன்னனுப்பும் பொத்தானை அழுத்தி நட்பு, பகை, உறவு, எதிரி, இளைஞர் முதியோர் அனைவருக்கும் அனுப்பிவிடுவேன். இந்த குருக்ஷேத்திரப் போரில் அது அவர்களை என் முன் மண்டியிடச் செய்யும்.

க்ருஷ்ணன்:
அர்ச்சுனா வெற்றியோ தோல்வியோ உன் கையில் எதுவுமில்லை. உன் செயலுக்கான பலனைக் குறித்து கவலைப்படாதே. ஜங்க் மெயிலை முன்னனுப்பி அனைவரும் அதைப் படித்து பைத்தியம் பிடிக்க வைப்பதோடு உன் கடமை முடிந்தது. ததாஸ்து!!

இவ்வாறு க்ருஷ்ணன் உபதேசித்தான். 

(மின்னஞ்சல்: யாரோ!!                                  மொழியாக்கம்: நாந்தேன்)

32 comments:

Pranavam Ravikumar said...

>>ஹே பார்த்தா! இந்த நொடி யாரும் உன் நண்பனோ எதிரியோ, உறவோ பகையோ, இளையோரோ முதியோரோ, நல்லதோ கெட்டதோ எதுவுமில்லை.<<

But in this world we are still posessive ti all out material likes.. Nice post!

settaikkaran said...

எது வந்ததோ அது ஜங்காகவே வந்தது. எது வருகிறதோ அதுவும் ஜங்காகவே வருகிறது. எது வரப்போகிறதோ அதுவும் ஜங்காகவே வரும். ஜங்காசாரம்

'பரிவை' சே.குமார் said...

//வெற்றியோ தோல்வியோ உன் கையில் எதுவுமில்லை. உன் செயலுக்கான பலனைக் குறித்து கவலைப்படாதே. ஜங்க் மெயிலை முன்னனுப்பி அனைவரும் அதைப் படித்து பைத்தியம் பிடிக்க வைப்பதோடு உன் கடமை முடிந்தது. //

ha.. ha... Nice One.

பெசொவி said...

சசர்வம் ஜங்க் மெயில் மயம் ஜகத்!
சர்வம் ஈ-மெயிலார்ப்பணமஸ்து

சிநேகிதன் அக்பர் said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க :)

ஸ்ரீராம். said...

'ஜங்கோ'பதேசத்துக்கு நன்றி!

பா.ராஜாராம் said...

:-))

என்ன பாலாண்ணா ரொம்ப நாளா ஆளக் காணல?

cheena (சீனா) said...

அன்பின் பாலா

ஜங்கோபதேசம் அருமை - யாருக்கு உபதேசம் செய்தீர்கள் ???? வாழ்க வளமுடன்

cheena (சீனா) said...

அன்பின் பாலா

ஜங்கோபதேசம் அருமை - யாருக்கு உபதேசம் செய்தீர்கள் ???? வாழ்க வளமுடன்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

பகவத் கீதையின் அதே மொழி.அதே நடை.ஜங்ஜங்குனு ஜமாய்க்கிறீங்கோ பாலா சார்.

Jayadev Das said...

காமெடி பண்றதுக்கு நாட்டுல எவ்வளவோ விடயங்கள் இருக்கு, [தமிழ் மக்களின் வாழ்க்கையே எல்லாமே இலவசம் என்னும் காமெடிதானே!! ] உங்களுக்கு காமெடி பண்ண பகவத் கீதைதான் கிடைத்ததா?

Unknown said...

என் மனசாட்சியை உறுத்தும், என் ஆன்மாவை வதைக்கும் எச்செயலையும் என்னைச் செய்யத் தூண்டாதே

vinthaimanithan said...

//மொழியாக்கம்: நாந்தேன்//

இது வேறயா? :)))

பழமைபேசி said...

ஜான்வுலோ ஒச்சி ச்சதவாலி அண்ணகாரு!!

ராஜ நடராஜன் said...

ஜங்கரடி சரணடைந்தேன்!

ஓலை said...

உள்ளத்தில் நல்ல
உள்ளம் உறங்காது
ஜங் மெயில் இன்
சாகசம் நொறுங்காது
அனுப்பறவன் ஆட்டம்
........

Ramachandranusha said...

:-))))))))))))

பவள சங்கரி said...

நல்ல காமெடி சார்...........ரசித்தேன்.சிரித்தேன்..நன்றி.

நசரேயன் said...

//உள்ளத்தில் நல்ல
உள்ளம் உறங்காது
ஜங் மெயில் இன்
சாகசம் நொறுங்காது
அனுப்பறவன் ஆட்டம்//

சேதுவுக்கு ரெண்டு அனுப்புங்க

ஓலை said...

தளபதி .........

தளபதி .........

ஏன் இப்பிடி? பாலா சார் காலையிலேயே பார்த்துட்டு, பாவம் பொழைச்சுப்போன்னு விட்டுட்டார்.

வல்லிசிம்ஹன் said...

இன்று காலை இனிதே பிறந்தது. ஜன்க் மெயிலின் உதயத்தால்:)
நன்றி பாலா சார்..நாங்கள் ஜன்க் மெயில் பார்த்த கணம் அழித்துவிடுவோம்!! அதற்குத்தான் அழியாத ஆத்மா இருக்கிறதே!!

ஈரோடு கதிர் said...

பாலாண்ணாவுக்கு பத்தாயிரம் ஜங்க் மெயில் பார்சேல்ல்ல்ல்ல்...

ததாஸ்து!!

துளசி கோபால் said...

ஹாஹாஹாஹா

vasu balaji said...

@@ நன்றி ப்ரணவம் ரவிகுமார்
@@ நன்றி சேட்டை. சாரம் சூப்பர்
@@ நன்றி குமார்
@@ நன்றி பெ.சொ.வி
@@ நன்றி அக்பர்
@@ நன்றி ஸ்ரீராம்
@@ நன்றி பா.ரா. ப்ரியாம்மா வந்திருந்தாள்.
@@ நன்றி சீனா சார்
@@ நன்றி சுந்தர்ஜி

vasu balaji said...

/Jayadev Das said...

காமெடி பண்றதுக்கு நாட்டுல எவ்வளவோ விடயங்கள் இருக்கு, [தமிழ் மக்களின் வாழ்க்கையே எல்லாமே இலவசம் என்னும் காமெடிதானே!! ] உங்களுக்கு காமெடி பண்ண பகவத் கீதைதான் கிடைத்ததா?/

பகவான் சித்தம் :p

vasu balaji said...

@@ நன்றி டி.வி.ஆர். சார்
@@ நன்றி செந்தில்
@@ நன்றி விந்தை மனிதன்
@@ தாங்க்ஸ் தம்முடு. ஜானவு வச்சிந்தேமோகானி மீரு வச்சினட்டு லேதே.
@@ நன்றி ராஜ நடராஜன். க்ருஷ்ணார்ப்பணம்.
@@ நன்றி ஓலை.பெயர் சூட்டு விழாவுக்கு அழைக்காததற்கு கண்டனங்கள்.

vasu balaji said...

@@ நன்றி ராமச்சந்திரன்உஷா
@@ நன்றிங்க நித்திலம்
@@ நன்றி தளபதி
@@ நன்றிங்க வல்லிஸிம்ஹன்
@@ நன்றிங் நாட்டாம! சென்செக்ஸ் தவிர வேறே நம்பர் கண்ணுலயே படாதே:))
@@ நன்றிங்க துளசி மேம்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அட்டகாசம் போங்க.

Paleo God said...

ஓ இதுதான் ஜலபுல ஜங்க்ஸா!!!

:))

ஓலை said...

@@ நன்றி ஓலை.பெயர் சூட்டு விழாவுக்கு அழைக்காததற்கு கண்டனங்கள்.

மன்னிக்கவும்.

priyamudanprabu said...

Nice

vasantruban said...

ஆடியோ பகவத் கீதை [ MP3 வடிவில்]+download
http://vasantruban.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%28Gita%29