ரோர்க்கை முன்னிலைப் படுத்தி எழுதிய போன இடுகையில் டோமினிக் குறித்த அறைகுறை அறிமுகம் மிகவும் உறுத்திற்று. காரணம் புத்தகத்தில் அவளுடைய பாத்திரத்தின் ஆதிக்கம் ரோர்க்கிற்கு சற்றும் குறைந்ததல்ல. ஒரு விதத்தில் ரோர்க்கின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் கிரியா ஊக்கி அவளின் பாத்திரம் என்றே சொல்லலாம்.
ரோர்க்கையும் டொமினிக்கையும் பிரித்துச் சொல்ல முடியாமல் இழைத்து இழைத்து படு லாவகமாக வெளிக்காட்டியிருப்பார் ராண்ட். இருவரையும் சேர்த்தே முழுமையாக்கும் விதத்தில் பாத்திர அமைப்பு பிரமிக்கவைக்கும். இத்தகைய பிரமிப்புக்கு காரணம் என்ன? டொமினிக்கின் பாத்திரம் புத்தகம் முழுதும் விரவியிருந்தாலும், ஒரு சில பகுதிகள் போதும் அவளை ஓரளவு புரிந்து கொள்ள.
அவளின் சுய அறிமுகம் இதோ:
//ஒருவர் உண்மையில் தனக்கு அனுமதிக்கக் கூடிய ஒரே விருப்பத்தை மட்டுமே நான் அனுமதித்துக் கொள்கிறேன். சுதந்திரம், ஆல்வா, சுதந்திரம்.
இதனை சுதந்திரம் என்றா சொல்கிறாய்?
எதையும் கேட்காதிருப்பது. எதையும் எதிர்பாராமல் இருப்பது. எதன் மீதும் சார்ந்திராமல் இருப்பது.
ஒரு வேளை நீ விரும்பிய ஒன்றைக் கண்டால்?
நான் தேடமாட்டேன். அதைக் காண விழையமாட்டேன். அது உங்களுடைய அழகான உலகத்தின் ஒரு அங்கமாக இருக்கும். அதை நான் உங்களோடு பங்கிட்டுக் கொள்ள வேண்டியிருக்கலாம்--அதைச் செய்யமாட்டேன். உனக்குத் தெரியுமா? நான் எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிறந்த நூலை திரும்பத் தொடக்கூட மாட்டேன். அதனை படித்த மற்றவர்களின் பார்வை குறித்த எண்ணமும் அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதும் எனக்கு மிக வேதனையைத் தரும். அம்மாதிரியான சிறந்த ஒன்று இம்மாதிரியான மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கல்ல. .
டோமினிக், எதன் மீதும் இம்மாதிரியான ஓர் தீவிர உணர்ச்சி அசாதாரணம்.
என்னால் அப்படித்தான் உணர முடியும். அல்லது உணர்ச்சியற்று இருக்கலாம்.
எனக்கு ஆண்களின் நிர்வாணச் சிலை மிகவும் பிடிக்கும் என்பதை அறிவாயா ஆல்வா? அப்படி பார்க்காதே. சிலை என்று சொன்னேன். குறிப்பாக ஒன்று என்னிடமிருந்தது. அதை ஹீலியோசின் சிலை என்று சொல்வார்கள். அதை ஐரோப்பாவின் ஒரு தொல்காட்சியகத்திலிருந்து பெற்றேன். அதை பெறுவதற்கு பெரும்பாடு பட வேண்டியிருந்தது--அது விற்பனைக்கு இருந்ததல்ல. அதன் மீது எனக்கு சொல்லவொணாக் காதல் என நினைக்கிறேன் ஆல்வா. அதனை வீட்டிற்குக் கொண்டு வந்தேன்.
எங்கே இருக்கிறது அது? ஒரு மாறுதலுக்காவது உனக்குப் பிடித்ததை பார்க்க விரும்புகிறேன்.
அது உடைந்துவிட்டது.
உடைந்து விட்டதா? அத்தகைய ஒரு தொல்பொருளா? எப்படி உடைந்தது?
நான் உடைத்துவிட்டேன்?
எப்படி?
மேலிருந்து தூக்கி எறிந்தேன். கீழே கான்கிரீட் தரை.
உனக்கு முழுப் பைத்தியமா? ஏன்?
வேறு யாரும் எப்போதும் அதைப் பார்க்கக் கூடாது என்பதற்காக....//
இதுதான் அவள். இத்தகையதோர் உன்னதச் சிற்பமோ, புத்தகமோ சுதந்திரம் மறுக்கும் இவ்வுலகம், இந்தச் சமுதாயம் பெற ஏற்றதில்லை என்ற வேகம் கொண்டவள்.
ரோர்க் அவளைப் போலவே சுதந்திர வேட்கை கொண்டவன். கனவைச் சுமப்பவன். அதை அனுபவிக்கத் தெரியாத உலகத்துக்கு தன்னை , தன் கனவை அர்ப்பணிக்க நினைப்பவன். அவனையோ இந்த உலகத்தையோ தன்னால் ஒன்றும் செய்ய முடியாத போது உணர்ச்சியற்றுத்தான் போகிறாள்.அவனை இந்த உலகம் வாழவிடாது, அவன் கனவை செயலாக்க விடாது அதனால் அவன் நொறுங்கிப் போக நேரிடும். அதைக் காணும் சக்தி அவளுக்கில்லை. அவனுக்குப் புரியவைப்பது இயலுமா?
கெஞ்சுகிறாள். இந்த உலகம் உன்னை வாழவிடாது. வா! திருமணம் செய்து கொள்ளலாம். எங்காவது கிராமத்தில் தனியாக இருக்கலாம். ஏதோ வேலை செய்து பிழைக்கலாம். உனக்குச் சமைத்துப் போடுகிறேன். மனைவியாக இருக்கிறேன். நீ தோற்பதை என்னால் பார்க்க முடியாது என்று. அவனா கேட்பான். மற்றவர்களால் அழிவதை விட நானே உனக்குப் புரிய வைக்கிறேன் என்று சொல்லி விட்டே செய்கிறாள். எத்தனை தடையுண்டோ அத்தனையும் செய்கிறாள்.
அத்தனையும் மீறி வெல்வது ரோர்க் மட்டுமேயல்ல. டொமினிக்கும். அவர்களின் காதலும்.
எத்தனையோ புதினங்கள் படித்திருப்பீர்கள். திரைப்படங்கள் பார்த்திருப்பீர்கள். இது மாதிரி ஒரு காதல் நிகழ்வு படித்திருக்கவோ பார்த்திருக்கவோ முடியாது எனக் கருதுகிறேன். அலாதியாக, தொடக்கமின்றி, எப்போதோ அவர்களுக்குள் இருந்த உறவு மீண்டும் தொடர்வது போன்ற ஒரு நிகழ்வு அது. ஒவ்வொரு எழுத்தும் நிகழ்வைக் கண்முன் காட்டும் அற்புதம் அது.
//// ரோர்க் அவளை நேராக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களுக்கிடையேயான புரிதல் ஆளுமைப்படுத்தும் அந்தரங்கமானதாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனுடன் பேசியதன் மூலம் அதை அவள் உடைத்தாள்.
‘ஏன் என்னை எப்பொழுதும் உற்றுப் பார்க்கிறாய்?’ என வெடுக்கெனக் கேட்டாள்.
அவள் வார்த்தைகள் எப்பொழுதும் ஈடுபாடின்மையைப் பிரதிபலிக்க உதவும் எனக் கருதியிருந்தாள். அவர்களுக்கு புரிந்த ஒன்றைக் குறிப்பிடக் கூடிய எந்த ஒன்றையும் குறிப்பிடாமல் தவிர்த்தாள். ஒரு கணம் அவன் அவளைப் பார்த்தபடி அமைதியாயிருந்தான். அவன் பதிலளிக்காமல் இருந்துவிடுவானோ , அமைதியாய் இருப்பதன் மூலமே எங்கே தெளிவாக இந்தக் கேள்விக்கு பதில் அவசியமில்லை எனச் சொல்லிவிடுவானோ எனக் கலவரமானாள். ஆனால் அவன் பதில் சொன்னான்:
“நீங்கள் எதற்காக என்னை உற்றுப் பார்க்கிறீர்களோ அதே காரணத்துக்காகத்தான்”
“நீ எதைப்பற்றிப் பேசுகிறாய் என்பது புரியவில்லை”
“உங்களுக்குப் புரியாவிடில் இதைவிட ஆச்சரியமாகவும் இத்தனை கோபமின்றியும் இருப்பீர்கள் மிஸ். ஃப்ராங்கன்” //
அவர்களுக்கிடையேயான முதல் உறவு வன்புணர்ச்சியாக அமைகிறது. வன்புணர்வாக என்ற வார்த்தை அதற்குப் பொருந்தாது. ராண்டே இதைச் சொல்கிறார். “அது வன்புணர்வாயின், அதற்கான அழைப்பு அவளே கொடுத்ததென்று”.
//அது அளவற்ற அன்பின் சின்னமாக மிக மென்மையாக அல்லது வெறுப்பின் அடையாளமாக அவமதிப்பையும் வெற்றியையும் குறிப்பதாகப் புரியக்கூடிய ஒரு செயலாகும். ஆனால் அதை அவன் ஏளனமாக நிகழ்த்தினான். அன்பின் அடையாளமாக அல்ல. ஒரு புனிதத்தைக் கலைப்பதாக. அதுவே அமைதியாக அவளைச் சமர்ப்பிக்கச் செய்தது. அவனிடமிருந்து மென்மையான ஒரு வெளிப்பாடு இருந்திருப்பின் -- அவள் தன் உடலுக்கு என்ன நிகழ்கிறதென்ற ப்ரக்ஞையற்றவளாக உணர்ச்சியற்று இருந்திருப்பாள். அவளின் எஜமானன் கேவலமாக ஆணவத்துடன் அவளை ஆக்கிரமித்துக் கொள்வது போன்றதான அந்த பரவசமே அவளின் விழைவாயிருந்தது.
அதன் பிறகு அவனால் கூடக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியாத தாங்கவொணாப் பரவசத்துடன் அவன் உடல் நடுங்குவதை உணர்ந்தாள். இதை அவனுக்கு கொடுத்தவள் அவளே, அது அவளுள்ளிருந்தே கிடைத்தது, அவள் உடலிலிருந்து என்பதை அறிந்தவள், உதட்டைக் கடித்துக் கொண்டாள். அவன் அவளுக்கு என்ன உணர்த்த எண்ணினானோ அதை உணர்ந்தவளானாள்.
வேண்டுமென்றே நடந்த கண்ணியமற்ற செயலையும் தாண்டி, வன்முறைக்கப்பாற்பட்ட புரிதலோடு, அவர்கள் ஒருவரோடொருவர் ஐக்கியமாயினர்; அவன் அவளை அத்துணை முக்கியமாகக் கருதாவிடில் அவளை அவ்வாறு அடைந்திருக்க மாட்டான், அவளும் அவனை அத்துணை விரும்பாவிடில் இப்படிப் போராடியிருக்கமாட்டாள். மீண்டும் நடக்கமுடியாதது அந்த உன்னதம். அவர்கள் இருவருமே இதை உணர்ந்திருப்பதை அறிந்திருந்தார்கள். //

அவள் தன்னைத் தரவில்லை. அவன் எடுத்துக் கொண்டான். அவனை அவள் ஆக்கிரமித்துக் கொண்டாள். இரண்டு ஆன்மாக்களின் சங்கமம் அது. இதுவா கற்பழிப்பு? இதுவா வன்புணர்வு? மிக உன்னதமான வார்த்தைக்கப்பாற்பட்ட இரண்டு உள்ளங்களின் தேடலும் சங்கமுமல்லவா?
அவள் மீது அளவற்ற காதலிருந்தும், அவனுடைய சுயத்தை மதிக்கும், தன் வாழ்க்கை தன்னுடையது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் அவனை என்ன செய்ய முடியும்? எவ்வளவு அழகாக டோமினிக்கின் கதாபாத்திரம் உருமாற்றம் பெறுகிறது. ரோர்க்கிடம் அவள் சொல்கிறாள்:
//நான் உன்னை வெறுக்கிறேன் என்பது உனக்குத் தெரியும் ரோர்க். நீ எப்படி இருக்கிறாயோ அதற்காக, நான் உன்னை விரும்புகிறேனே அதற்காக, உன்னை விரும்பாமல் இருக்க முடியவில்லையே அதற்காக -- உன்னோடு போராடப் போகிறேன் ரோர்க் -- உன்னை அழிக்கப் போகிறேன் -- நான் ஒரு யாசிக்கும் மிருகமெனக் கூறினேனே அதே அமைதியான மனத்துடன் கூறுகிறேன் இதை. நான் நம்புவதற்கு எதுவும் இல்லாவிடினும் இதற்காக பிரார்த்திக்க யாரும் இல்லையெனினும் உன்னை அழிக்க இயலக்கூடாது எனப் பிரார்த்திக்கப் போகிறேன். நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் நான் தடையாயிருப்பேன். உனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் உன்னிடமிருந்து பறிப்பேன். உன்னை வருத்தக் கூடிய ஒரே வழியான நீ நேசிக்கும் உன் தொழில் மூலமாகவே உன்னை வருத்துவேன் ரோர்க். உன்னை பட்டினி போடுவேன். உன்னால் அடைய முடியாதவை மூலம் உன்னைத் திணறடிப்பேன். இன்று உனக்கு அந்த வருத்தத்தைத் தந்தேன் ரோர்க். அதற்காகவே உன்னோடு இன்றிறவைக் கழிக்க வந்தேன். உன்னை வெல்லும் ஒவ்வொரு இரவும் நான் வருவேன் ரோர்க்--நீ என்னை எடுத்துக் கொள்ள சம்மதிப்பேன். என் காதலனாக அல்ல ரோர்க். என் எதிரியாக! என் வெற்றியை வீழ்த்தும் எதிரியாக.//
பிறகு
//ரோர்க்! ஏன் அந்த குவாரியில் வேலைக்குச் சேர்ந்தாய் ரோர்க்?
உனக்குத் தெரியும்.
ஆம். வேறு யாராயினும் ஒரு கட்டிடக் கலைஞனிடம் வேலைக்குச் சேர்ந்திருப்பார்கள்.
அப்படி இருந்திருந்தால் என்னை நீ அழிக்க நினைத்திருக்க மாட்டாய்.
உனக்கு அது புரிந்ததா ரோர்க்?
ஆம். அசையாமல் அப்படியே இரு. அது இப்போது அவசியமில்லை.
என்ரைட்டின் வீடு நியூயார்க்கிலேயே அழகான வீடு என்பது உனக்குத் தெரியுமில்லையா ரோர்க்?
அதை நீயும் அறிவாய் என்பது எனக்குத் தெரியும் டோமினிக்.
நீ மிக அழகாய் இருக்கிறாய் டோமினிக்.
சொல்லாதே!
நீ மிக அழகானவள்..
ரோர்க். நான்..நான் உன்னை அழிக்கத்தான் போகிறேன் ரோர்க்!
அப்படியில்லாவிடில் நான் உன்னை விரும்புவேன் என்றா நினைக்கிறாய்?
ரோர்க்! நான் செய்வதெல்லாம் இவ்வளவு திறமையான உன்னை ஒரு கல்குவாரியில் கல்லுடைக்க விட்டதே இந்த உலகம். அதை உனக்குப் புரிய வைக்கத்தான்.
எனக்குத் தெரியும்.//
பிரமிப்பாயில்லை? ரத்தமும் சதையுமாய் இப்படி ஒருத்தியைப் பார்க்க வேண்டும் போல் இல்லை? என்ன ஒரு புரிதல்? என்ன ஒரு சுதந்திரம்? என்ன ஒரு தன்னம்பிக்கை?
(திரைப்படத்தில் இவ்விரு காட்சிகளும். கேரி கூப்பரும் பேட்ரிஷியா நீலும். அவர்களின் முதல் சந்திப்பில் டோமினிக்கின் கண்களைப் பாருங்கள். என்ன அருமையான வெளிப்பாடு)
(தொடரும்)
நன்றி: எழுத ஊக்குவித்த பதிவர் பைத்தியக்காரன் (திரு. சிவராமன்) அவர்களுக்கு
43 comments:
Thank you for sharing the views and the clip. Good ones!
உள்ளேன்.. உள்ளேன் .. உள்ளேன்
புத்தகத்தில் படிக்கும்போது இந்த புரிதல் வரமாட்டேன் என்கிறது, ஆங்கிலப்புத்தகங்களை அதிகம் படிக்காதாதனாலோ என்னவோ.
ஆங்கில மொழி பெயர்ப்புக்கள் நிறைய படித்திருக்கிறேன், உங்களின் மொழி பெயர்ப்பு, விவரித்தல் யாவும் அவற்றினின்று விலகி அருமையாய் அழகாய் இருக்கிறது.
பிரபாகர்.
வீடியோ பர்ந்தமைக்கு நன்றி ஐயா...கதையையும் பாத்திரங்களையும் யதார்த்தமாக விளக்கியிருக்கிறார்..உங்களின் மொழிபெயர்க்கப்பட்ட விமர்சனமும் அருமை...
mm nice and thanks
உங்கள் நடையே வித்தியாசமாகிவிட்டது:)
மிக்க நன்றி தொடருங்கள்..:)
உங்களின் எழுத்து நடை ரசிக்கும்படி இருக்கிறது.
அருமை... தங்கள் வயதும் வாசிப்பு அனுபவமும் இடுகையில் பளிச்சிடுகிறது. தொடருங்கள். தொடர்கிறோம்.
ஆனால், இடுகையின் இறுதியில் எனக்கெதற்கு ஐயா நன்றியெல்லாம்...
தோழமையுடன்
பைத்தியக்காரன்
அருமை...எழுத்து நடை ரசிக்கும்படி இருக்கிறது
thank you sir, good sharing . reading give pleasure,s, i realize that when i read this post.
சார் இந்தப் புத்தகத்தை நீங்கள் தமிழில் மொழிபெயர்த்தால் என்ன?
இடுகை அருமை.
காணொளிக்கு நன்றி அண்ணா
தலைவரே...என்ன இப்டி ஆரம்பிச்சிட்டீங்க... மறுபடியும் அதே டச்சிங்... வீடியோத்தான் ஆபிஸ்ல பாக்க முடியல...
சொல்லும் கதைக்கு நெத்திப் பொட்டு மாதிரி அழகா கறுப்பு வெள்ளை படம்.
கதை அப்படியே வார்த்தைகளில் தெரியுதுங்க தலைவா.
நடத்துங்க.., நடத்துங்க
தங்கள் எழுத்தைப் பார்த்தபின் இதைப் பார்க்கவேண்டும், படிக்கவேண்டும் என்று தோன்றுகிறது...
சார்,
உங்கள் தமிழ் நடை பிரம்மிக்க வைக்கிறது.
தொடர்ந்து நடை போடுங்கள்,, பின் தொடர்கிறோம் .. !!!
கலக்கி இருக்கீங்க . வாழ்த்துக்கள் !
ஆங்கில எழுத்து விமர்சனத்துக்கு அழகிய தமிழ் பாடல்களின் வரிகளில் தலைப்பு...இடுகையை விட தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
அண்ணே! என் கருத்தை மாத்திக்கிட்டேன். ஆங்கில பெயர்ப்பு நாவலுக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கானொலி அருமை.
Chitra said...
Thank you for sharing the views and the clip. Good ones!//
நன்றி சித்ரா
நசரேயன் said...
/உள்ளேன்.. உள்ளேன் .. உள்ளேன்/
:)). புரியுது புரியுது
பிரபாகர் said...
/ ஆங்கில மொழி பெயர்ப்புக்கள் நிறைய படித்திருக்கிறேன், உங்களின் மொழி பெயர்ப்பு, விவரித்தல் யாவும் அவற்றினின்று விலகி அருமையாய் அழகாய் இருக்கிறது./
எனக்கு பயமாய் இருக்கிறது பிரபாகர்:)
புலவன் புலிகேசி said...
வீடியோ பர்ந்தமைக்கு நன்றி ஐயா...கதையையும் பாத்திரங்களையும் யதார்த்தமாக விளக்கியிருக்கிறார்..உங்களின் மொழிபெயர்க்கப்பட்ட விமர்சனமும் அருமை...//
நன்றி புலிகேசி
றமேஸ்-Ramesh said...
mm nice and thanks
Thank you
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
உங்கள் நடையே வித்தியாசமாகிவிட்டது:)
மிக்க நன்றி தொடருங்கள்..:)//
நன்றி சங்கர்.
சைவகொத்துப்பரோட்டா said...
உங்களின் எழுத்து நடை ரசிக்கும்படி இருக்கிறது.//
நன்றிங்க.
பைத்தியக்காரன் said...
அருமை... தங்கள் வயதும் வாசிப்பு அனுபவமும் இடுகையில் பளிச்சிடுகிறது. தொடருங்கள். தொடர்கிறோம்.
ஆனால், இடுகையின் இறுதியில் எனக்கெதற்கு ஐயா நன்றியெல்லாம்...
தோழமையுடன்
பைத்தியக்காரன்//
நன்றி சிவராமன். :)
T.V.ராதாகிருஷ்ணன் said...
அருமை...எழுத்து நடை ரசிக்கும்படி இருக்கிறது//
நன்றி சார்.
Madurai Saravanan said...
thank you sir, good sharing . reading give pleasure,s, i realize that when i read this post.//
Thank you. Yes. nothing can compare with the pleasure of reading
முகிலன் said...
சார் இந்தப் புத்தகத்தை நீங்கள் தமிழில் மொழிபெயர்த்தால் என்ன?//
ஆஹா. பார்க்கலாம். கம்பிமேல் நடக்கிற வேலை.:)
ஈரோடு கதிர் said...
இடுகை அருமை.
காணொளிக்கு நன்றி அண்ணா//
நன்றி கதிர்.
க.பாலாசி said...
தலைவரே...என்ன இப்டி ஆரம்பிச்சிட்டீங்க... மறுபடியும் அதே டச்சிங்... வீடியோத்தான் ஆபிஸ்ல பாக்க முடியல...//
வீட்ல பார்த்தியா?
ராஜ நடராஜன் said...
சொல்லும் கதைக்கு நெத்திப் பொட்டு மாதிரி அழகா கறுப்பு வெள்ளை படம்./
நன்றி சார்:)
தாராபுரத்தான் said...
கதை அப்படியே வார்த்தைகளில் தெரியுதுங்க தலைவா.//
நன்றிங்கண்ணா:)
பேநா மூடி said...
நடத்துங்க.., நடத்துங்க//
நன்றி ஆனந்த்
ஈ ரா said...
தங்கள் எழுத்தைப் பார்த்தபின் இதைப் பார்க்கவேண்டும், படிக்கவேண்டும் என்று தோன்றுகிறது...//
படிக்கணும் ஈ.ரா. உங்க பார்வையில் புரிஞ்சிக்கணும். அற்புதம் இது.
யூர்கன் க்ருகியர் said...
சார்,
உங்கள் தமிழ் நடை பிரம்மிக்க வைக்கிறது.
தொடர்ந்து நடை போடுங்கள்,, பின் தொடர்கிறோம் .. !!!//
மிக்க நன்றி யூர்கன்
♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
கலக்கி இருக்கீங்க . வாழ்த்துக்கள் !//
நன்றிங்க :)
ஸ்ரீராம். said...
ஆங்கில எழுத்து விமர்சனத்துக்கு அழகிய தமிழ் பாடல்களின் வரிகளில் தலைப்பு...இடுகையை விட தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.//
நன்றி ஸ்ரீராம்
இப்படிக்கு நிஜாம்.., said...
அண்ணே! என் கருத்தை மாத்திக்கிட்டேன். ஆங்கில பெயர்ப்பு நாவலுக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கானொலி அருமை.//
:)). நன்றி நிஜாம்.
BALA sir vowwwwwwwwwww.....superb..........
its different....and i like it
thanks for sharing....
keep writing......
Post a Comment