Tuesday, June 9, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 74

இலங்கையில் தமிழ் மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை: கனிமொழி

அதுக்கென்னாங்க. சிதம்பரம் கிட்ட சொன்னா மேனனோ நாராவோ போய் முகாமில ஆதித்யா, சிரிப்பொலி, சன்டிவி, எல்லாம் தெரிய வழி பண்ணிடுவாங்க. ஜனங்க கஷ்டத்த மறந்துடுவாங்க.
________________________________________
இலங்கைத் தமிழர் நிலை வேதனையளிக்கிறது: சுஷ்மா

இது யாரு புது முதலை?
_________________________________________________
ராமேஸ்வர மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

அட பாசமா விருந்துக்கு கூட்டி போயிருப்பாங்கப்பு. இங்க எவனும் சட்ட பண்ணப் போறதில்ல. விதி இருந்தா வந்துடுவாங்க. வேலைய பாருங்க.
________________________________________
இலங்கை ராணுவ தளமாக கச்சத்தீவு மாறும் அபாயம்: டி.ராஜா

நட்புறவின் அடையாளமா கொச்சில கூட இடம் குடுப்பாங்க. கச்சத்தீவு எதுக்கு..
________________________________________
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை: ராமதாஸ்

ஏனோ? உங்க கட்சி கிழிச்சத அவங்க என்ன கிழிக்காம போய்ட்டாங்க. உள்சண்ட போட்டே நாசமா போவுதுங்க.
________________________________________
விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு இந்திய வீஸா வழங்கக் கூடாது – சுப்ரமணியம் சுவாமி

இந்தாள முதல்ல நாடு கடத்தணும். சம்பந்தமே இல்லாம கேனப்பயலுவ தமிழந்தான்னு இங்க வந்து உக்காந்து உசிரெடுக்குறான்.
________________________________________
அகில இந்திய ஆர்ய முன்னேற்ற கழகம்: எஸ்.வி.சேகர் தொடங்கும் புதிய கட்சி

அடுத்த நாடகத்துக்கு பெயரா? இருக்கிறதெல்லாம் போறாது. இவரு வேற வந்துட்டாரு. மனுசனா இருக்க வழி பாருமைய்யா முதல்ல.
________________________________________
திருப்பதி கோவிலைச் சுற்றி இரும்பு வேலி: பாதுகாப்பு ஏற்பாடு

சாமிக்கே வேலியா? ராஜ பக்சே வரானா என்னா பூஜைக்கு.
________________________________________
தீவிரவாதிகள் முகாம்களை அடியோடு அழிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தோடா. அது அவிங்க இறையாண்மைப்பா. அத சொல்ல இவரு யாரு? ஏன். நீடிப்பெல்லாம் குடுத்தீங்கள்ள. நாராவ அனுப்பறது. பேசித் தீத்துடுவாரு.
_________________________________________________

12 comments:

ttpian said...

எவனெல்லாம் தமிழ் இனத்தை காட்டிகொடுத்து தன்னையும் தனது குடும்பத்தையும் வளர்க்கிரானோ,
அவனும் அவன் குடும்பமும், விரைவில் கல்லடி படும்...இது உருதி....
தமிழன் உறக்கம் இன்னமும் கலயவில்லை...
கலயும்போது?

உங்கள் தோழி said...

//திருப்பதி கோவிலைச் சுற்றி இரும்பு வேலி: பாதுகாப்பு ஏற்பாடு//

//சாமிக்கே வேலியா? ராஜ பக்சே வரானா என்னா பூஜைக்கு.//


நல்லா சொன்னிங்க அண்ணா..உயிரோட உள்ள மனுசரையே வேலிக்குள்ள அடைச்சு வைத்திருக்கும் நல்லவர் இல்லையா ..!!

உங்கள் தோழி said...

அண்ணா இறையாண்மை என்றால் என்ன?

ராஜ நடராஜன் said...

ஓட்டுடன் பின் தொடர்கிறேன்!

கிரி said...

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை: ராமதாஸ்

ஏனோ? உங்க கட்சி கிழிச்சத அவங்க என்ன கிழிக்காம போய்ட்டாங்க. உள்சண்ட போட்டே நாசமா போவுதுங்க

:-)))))))))

பாலா... said...

வாங்க நடராஜன்,கிரி .வணக்கம்.

பாலா... said...

வாங்க தோழி. வணக்கம். சீமான் ஐயா இறையாண்மைன்னா ஆளுமைன்னு விளக்கம் சொன்னாரு.

Kakkoo Manickam said...

நான் புதிதாக வந்தவன் நண்பரே! // பாமரனின் பக்கங்கள் // இந்த தலைப்பே மிக நன்றாக உள்ளது. எழுத்துக்களும் எண்ணங்களும் இயல்பாக உள்ளது என்பதே சந்தோஷமாக உள்ளது. நிறைய எழுதுங்க ராஜா.

(நான் இப்படி "வழிய " ஒரு காரணம் இருக்கிறது)

பெரும்பாலான "வலைபூ" காரர்கள் தங்களை என்னவோ "அறிவு ஜீவிகள்" என்று படிப்பவர்கள் நினைத்து கொள்ளவேண்டும் என்ற அல்பமான எண்ணத்தில்தான் எழுகிறதுகள். எனக்கு இந்த "அறிவுஜீவி" வார்த்தையே மலக்கட்டு உண்டாக்கும் போன்ற ஒரு பயம். சமீபத்தில் கூட ஒரு அளவுக்கு அதிகமான அறிவு ஜீவித்தனம் கொண்ட ஒரு அரைவேக்காடு ஜெயகாந்தனை பற்றி எழுதும்போது "Intellectual Menopause" என்று ஒரு வார்த்தை பிரயோகம் பண்ணியிருந்தது. அந்த ஜென்மத்தை நேரில் கண்டால் மூஞ்சியில் குத்தலாம் போன்ற கோபம் வந்தது. மேதாவித்தனம் என்பதை படிப்பவன் தானாகவே புரிந்த கொள்வான் அன்றி "நான் பெரிய சிந்தனா வாதியாக்கும்" என்ற தொனியில் எவனாவது எழுதி அதைப்படித்து எனக்கு மலக்கட்டு வரவேனாமே சாமி.

உங்களிடம் இது போன்ற போலி பாவனைகள் இல்லை என்பதால் படிப்பது சுகமாக இருக்கிறது. தொடரட்டும். வாழ்த்துக்கள்.

பாலா... said...

மன்னிக்கணும் நடராஜன்.பின் தொடர்ரது கவனிக்கலை. பிரத்தியேக நன்றி. ஊக்கத்துக்கு.

பாலா... said...

வாங்க மாணிக்கம் ஐயா.வருகைக்கும்,ஊக்கத்துக்கும் நன்றி.

நசரேயன் said...

//விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு இந்திய வீஸா வழங்கக் கூடாது – சுப்ரமணியம் சுவாமி

இந்தாள முதல்ல நாடு கடத்தணும். சம்பந்தமே இல்லாம கேனப்பயலுவ தமிழந்தான்னு இங்க வந்து உக்காந்து உசிரெடுக்குறான்.//

கண்டிப்பா செய்ய வேண்டிய விஷயம்

யூர்கன் க்ருகியர்..... said...

//அகில இந்திய ஆர்ய முன்னேற்ற கழகம்: எஸ்.வி.சேகர் தொடங்கும் புதிய கட்சி//

நாடகத்துக்கு வரவங்களைதான் சிரிக்க வைப்பாருன்னு பார்த்தா இப்போ டோட்டல் தமிழ்நாட்டுக்கே கிச்சுகிச்சு மூட்டுராறு!