Saturday, June 6, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 72

போர்க் குற்ற விசாரணை சர்வதேச அளவில்நடத்தப்பட வேண்டும்.இந்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்: பான் கி மூன்

கோழி கோழி, குழம்பு வைக்கப் போறேன். மசாலா அரைச்சிக்கவான்னா, சரின்னு சொல்லப் போவுதா கோழி. ஒத்துழைக்கிறதாம்.
______________________________________________________
நீண்ட யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் :பான் கி மூன்

ஆமாப்பா. சட்டு புட்டுன்னு கொண்டாடி முடிங்க. இல்லன்னா இவங்களுக்கு குடைச்சல்.
______________________________________________________
இலங்கை அரசு மனித உரிமைமீறல்: ஐ.நா. விசாரணை நடத்த இந்தியா மீண்டும் எதிர்ப்பு

ஆமா. மூணுபேரையும் சேர்த்து விசாரிக்க முடியாதா? கூட்டுக் கள்ளனுங்கள்ள ஒருத்தன புடிப்பேன்னா மத்த ரெண்டு சும்மாவா இருக்கும்.?
______________________________________________________
20,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை ராணுவம் கொன்று தீர்த்தது குறித்து பான் எதுவும் குறிப்பிடவில்லை:செய்தி

காணாத நரகல் கழுவாம போச்சின்னு கண்டுக்காம விட்டா நோண்ட மாட்டாங்கன்னு விட்டாரு போல.
______________________________________________________
யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தும் ‐ பலிஹக்கார :

உசார் பார்ட்டி இவன். யார் செயல்னு சொல்லமாட்டானே. புலிகள்தான்னு அப்பாவிங்க கொஞ்ச பேர தீத்துக் கட்டுவான்.
______________________________________________________
இந்தியாவில் உள்ள அகதிகளை அழைத்து வருவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்:அமைச்சர் அனுரபிரிதர்ஷன யாப்பா

யப்பா யாப்பா? நியாயமாப்பா? இருக்கிறவங்க செத்தா நான் பொறுப்பில்லன்னு சொல்லிட்டு திரும்ப வேற அழைக்கிறாராம்.
______________________________________________________
தமிழ் கிராமம் சிங்கள மயமாகிறது. ஜனாதிபதியின் பாரியார்,மகன் ஆகியோர் யாழ்ப்பாணம் சென்று திரும்பினர்

அதுக்குத் தானே இவ்வளவு பாடும். தமிழ் ஊருன்னு ஒன்னு இருந்துடப்படாது.
______________________________________________________
உள்விவகாரங்களில் தலையிட எந்தவொரு நாட்டுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது: மஹிந்த சமரசிங்க

சீனா, இந்தியா, ரஷ்யா தவிரவா?
______________________________________________________
புலிகளின் தோல்விக்கும், இலங்கை இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கும் தொடர்பில்லை: சிவ சங்கர மேனோன்

கேக்குறவன்லாம் கேனையன்னு தானெ ஒத்த பால‌ம்.
______________________________________________________
ஜனாதிபதி உரையில் தமிழீழ படுகொலை பற்றி ஏதுமில்லை: திருமாவளவன்

நிஜமா ஏதாவது இருக்கும்னா எதிர்பார்தீங்க?
______________________________________________________
தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்த ராகுல் திட்டம்

இளைஞர்களே கனவு காணுங்கள்னு கலாம் சொன்னாலும் சொன்னாரு அனியாயத்துக்கு காணுறாரு இவரு.
______________________________________________________

5 comments:

பழமைபேசி said...

யார்ப்பா அது, சாவடி திறந்தும் திறக்காத அப்பவே எனக்கு முன்னாடி வந்து ஓட்டுப் போட்டது?

பாலா... said...

/ பழமைபேசி said...

யார்ப்பா அது, சாவடி திறந்தும் திறக்காத அப்பவே எனக்கு முன்னாடி வந்து ஓட்டுப் போட்டது?/

நம்ம கூட்டாசிரியர் கலகலப்ரியா பார்த்து சரி சொன்னாங்க. அதான் ஒப்பமுக்கு.

உங்கள் தோழி said...

//தமிழ் கிராமம் சிங்கள மயமாகிறது. ஜனாதிபதியின் பாரியார்,மகன் ஆகியோர் யாழ்ப்பாணம் சென்று திரும்பினர்//

//அதுக்குத் தானே இவ்வளவு பாடும். தமிழ் ஊருன்னு ஒன்னு இருந்துடப்படாது//

அது தானே அண்ணா அவங்க லட்ச்சியம்...:(:(

மயாதி said...

உங்களுக்கு தரவேண்டிய ஒரு பரிசு என் தளத்தில் உள்ளது நண்பரே, வந்து எடுத்துக் கொள்ளுங்கள்..

நசரேயன் said...

//ஜனாதிபதி உரையில் தமிழீழ படுகொலை பற்றி ஏதுமில்லை: திருமாவளவன்

நிஜமா ஏதாவது இருக்கும்னா எதிர்பார்தீங்க?//

அதானே