Friday, June 5, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 71

அகதிகள் பட்டினியால் மரணித்தால் ஐ.நா. சபையே பொறுப்பேற்க வேண்டும்: அமைச்சர் மஹிந்த சமரசிங்க

அகதியாக்கினதுக்கு இவரு பொறுப்பில்ல. இத விட என்னா வேணும். ஆமாம் நாந்தான் பொறுப்புன்னு படைய அனுப்பி அவங்கள ஊருக்குள்ள விடலாம்ல. அது அது தானே பிழைக்கும்.
_____________________________________________
போர்க் குற்றம் - மனித உரிமை மீறல் குறித்த விசாரணைகள் இனித் தேவையில்லை:மஹிந்த சமரசிங்க

என்டப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு ஏன் குதிக்கிற. ஒண்ணும் இல்லைன்னா ஏன் தடுக்கணும்.
_____________________________________________
13 ஆவது அரசியல் சாசனச் சட்டம் பூரணமாக அமுல்படுத்தப்படும்: அமெரிக்காவிடம் போகொல்லாகம உறுதி

காசு வாங்குற வரைக்கும் எல்லா உறுதியும் குடுப்பானுவ. அப்புறம் யாரும் எமக்கு அறிவுறுத்தத் தேவையில்லைம்பானுவ.
_____________________________________________
இலங்கை இறுதிகட்ட போரில் 5 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே இறந்தனர்:இலங்கை அரசு தகவல்

ஆமிக்காரன் செத்த கணக்குதான் புளுகறதுன்னா இது கூடவா? பூஜ்ஜியத்துக்கு மதிப்பில்லைன்னு விட்டுட்டான் போல.
_____________________________________________
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி வலைகள் அறுப்பு பாதியிலேயே திரும்பி வந்தனர்

இப்போகூட நாம வாய் திறக்க மாட்டமே. அடிபட்டது ஆஸ்டிரியா சர்தார்ஜியா, ஆஸ்திரேலியா இந்திக்காரனா. தமிழன் ரொம்ப நல்லவன். அடி வாங்குறபோ கூட இறையாண்மைன்னு தான் அலருவான்.
_____________________________________________
இந்திய அரசும், ஐ.நா.சபையும் இணைந்து தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்:மதிமுக தீர்மானம்

மறை கழண்டு போச்சா? இந்தியாதான் காரணம்னு கூவிட்டு, இதென்னா வேலை.
_____________________________________________
தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சென்னையில் உஷார் நிலை

400 பேரு ஊடுருவிட்டாங்கன்னு சொன்னாங்களே. அப்போ உஷாரில்லையா?
_____________________________________________
இலங்கை யுத்தப் பிரதேசத்தில் செயலாற்றிய மருத்துவர்கள் ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள்

இது ஒண்ணே போதாதா இவனுங்க எவ்வளவு குரூர புத்திக் காரனுங்கன்னு. பாம்புக்கு ராஜா மூங்கித்தடி தான். போடுங்கப்பு!
_____________________________________________
கப்டன் அலி (வணங்காமண்) கப்பலை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது

நவநீதம் அம்மணி . வழக்கம் போல கோரிக்கையோ கண்டனமோ சொல்லிடுங்க. அதுக்கு மேல பண்ண தருவிசில்ல.
_____________________________________________

8 comments:

SUBBU said...

நருக்குன்னு இருக்கு :(((((((((((

பாலா... said...

அதுக்கேன் சுப்பு அழுகை?!

Suresh Kumar said...

நறுக்குன்னு 71வரை கொண்டு வந்துட்டீங்களே பாஸ்

பாலா... said...

எல்லாம் உங்க ஆதரவு.நன்றி.

நசரேயன் said...

//இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி வலைகள் அறுப்பு பாதியிலேயே திரும்பி வந்தனர்

இப்போகூட நாம வாய் திறக்க மாட்டமே. அடிபட்டது ஆஸ்டிரியா சர்தார்ஜியா, ஆஸ்திரேலியா இந்திக்காரனா. தமிழன் ரொம்ப நல்லவன். அடி வாங்குறபோ கூட இறையாண்மைன்னு தான் அலருவான்.//
உண்மை

கிரி said...

//இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி வலைகள் அறுப்பு பாதியிலேயே திரும்பி வந்தனர்//

எதற்கும் அசராத சுரணை இல்லாத (தமிழக) அரசியல்வாதிகள்

பாலா... said...

வாங்க நசரேயன், கிரி. இந்த அழிச்சாட்டியத்த பார்க்க கோஸ்ட் கார்ட், கடற்படை, ஹெலிகாப்டர், ஹைட்ரோஃபாய்ல் நு எல்லா புண்ணாக்கும் வேற. அடிக்காதன்னு சொல்லுன்னா அய்யோ அவன் இறையாண்மை போய்டுமேன்னு அலற்ற பரதேசிங்களுக்கு அவன் அடிக்கிறப்போ அய்யோ என் **றாண்மை போச்சேன்னு அலற கூடவா முடியாது? வரில பாதி கட்டிங் வேணும்னு வாய பிளக்குது.

உங்கள் தோழி said...

//இலங்கை இறுதிகட்ட போரில் 5 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே இறந்தனர்:இலங்கை அரசு தகவல்//

//ஆமிக்காரன் செத்த கணக்குதான் புளுகறதுன்னா இது கூடவா? பூஜ்ஜியத்துக்கு மதிப்பில்லைன்னு விட்டுட்டான் போல.//

சரியா சொன்னிங்க அண்ணா.


அண்ணா "இறையாண்மை" என்றால் என்ன?உங்க 57ஆவது பதிவிலயும் கேட்டு இருந்தனன்.தப்பா எடுத்துக்காதிங்க தெரியல அதான் கேக்குறன்.!!