போன பதிவின் follow up
//வானம்பாடிகள் said... sriram said... பாலாண்ணா.. பதிவுலக ப்ரோட்டோகால் பத்தியும் சொல்லுங்களேன்.. அப்புறம் - அரசு அலுவலகங்களின் கடிதப் போக்குவரத்துக்களில் பேர் போடாம பதவி மட்டும் போடும் காரணம் பத்தி சொல்றேன்னு சொன்னீங்களே - எப்ப சொல்வீங்க? என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//
சொல்றேனே:)//
பாலாண்ணா..
மொதோ மேட்டர் (பதிவுலக ப்ரோட்டோகால்) எப்போ சொல்வ்றீங்க, ரெண்டாவது மேட்டர் (அரசாங்க கடிதப் போக்குவரத்து) எப்போ சொல்றீங்கன்னு என் கையில் அடித்து (கிள்ளி) சத்தியம் பண்ணி சொல்லுங்க, அப்போதான் நம்புவேன்.
என்றும் அன்புடன்பாஸ்டன் ஸ்ரீராம்//
ஹி ஹி. பதிவுலகில ப்ரோட்டகால்னு ஒன்னு கிடையாதுன்னுதான் நினைக்கிறேன். அதுமில்லாம நான் பதிவுலக கத்துகுட்டி. அதனால சும்மா இருப்பதே சுகம் அப்படிங்கற ப்ரோட்டகால்தான் சரி.
~~~~~~~~~~~~~~~
அரசு அலுவலக கடிதங்கள் பொதுவா ரெண்டு வகை. ஒன்னு அலுவலகங்களுக்கு இடையிலானது. மற்றது அலுவலகத்துக்கும் ஒரு தனிப்பட்ட ப்ரஜைக்கானது. முதலாவது அஃபிஷியல் கரஸ்பாண்டன்ஸ். இதுலயும் அஃபிஷியல், பெர்ஸனல்னு ரெண்டு வகை உண்டு.
முதலாவது ஒரு செக்ஷன், அல்லது அலுவலகத்துக்கு இடையிலானது. அடுத்தது ஒரு அதிகாரிக்கும் மற்ற அதிகாரிக்குமோ அல்லது ஒரு அதிகாரிக்கும் அவரின் ஊழியருக்குமோ இடையிலானது.
அலுவலகத்துக்கும் அலுவலகத்துக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து என்பதால், அட்ரஸ், சல்யூட்டேஷன் எல்லாம் இருக்காது. உதாரணத்துக்கு ஒரு செக்ஷன் மேனேஜர் இன்னோரு செக்ஷன் மேனேஜருக்கு எழுதும் கடிதத்தில், பதவி மட்டுமே குறிப்பிடப்படும். ஒரு அலுவலகம் இன்னோரு அலுவலகத்துக்கு எழுதும் கடிதத்தில் அலுவலக தலைமை அதிகாரியின் பதவி மட்டுமே குறிப்பிடப்படும். கையெழுத்துப் போடுபவர் for என்று போட்டு கையெழுத்துப் போடுவார்.
ஒரு அலுவலக அதிகாரிக்கும் மற்ற அலுவலக அதிகாரிக்கும் இடையேயான பெர்ஸனல் கரஸ்பாண்டன்ஸ் டெமி அஃபிஷியல் எனப்படும். இது பெரும்பாலும் முக்கியமான விடயத்தில் பொறுப்பாளியாக்க பயன்படுத்தப்படும். இதில் அதிகாரியின் பெயர் இருக்கும். கடிதம் பெயரிட்டு தொடங்கும். முடியும் போது க்ரீட்டிங்ஸ், யுவர்ஸ் சின்சியர்லி எல்லாம் இருக்கும். இதில் ப்ரோட்டோகால் கீழ்க்கண்டவை:
1. எழுதப்படும் கடிதம் எழுதுபவரை விட பதவியில் உயர்ந்தவருக்கோ, அல்லது அதே பதவியில் சீனியருக்கோ என்னும் பட்சத்தில் Dear Sri என ஆரம்பிக்கும். க்ரீடிங்க்ஸில் ஃபேர் காபியில் கையெழுத்திடுபவர் தன் கையெழுத்தில் with regards என்று எழுதுவார்.
2. ஒரே க்ரேடில் இருப்பவரோ அல்லது ஜூனியரோ எனில் My dear என ஆரம்பிக்கும். க்ரீடிங்கில் ' with best wishes' என எழுத வேண்டும்.
3. பெறுனர் பெண்களாயின் ‘Dear Ms/Mrs' என்றே அட்ரஸ் செய்ய வேண்டும்.
இதில் அடுத்ததாக பெர்ஸனல் கரஸ்பாண்டன்ஸ் என்பது ஒரு ஊழியரைக் கண்டிக்கவோ, தண்டனை தரவோ அல்லது பாராட்டவோ எழுதப்படுவது. இதுவும் பதவிக்கும், ஒரு ஊழியருக்கும் என்பதால் ஊழியரின் அலுவலக முகவரியும், ஆணையிடுபவரின் பதவியும் மட்டுமே இருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அரசு அலுவலக கடிதத்துக்கும் தனிப்பட்ட பொது ஜனத்துக்குமான கடிதப் போக்குவரத்து என்பது பொதுவாக ஒரு தகவலாகவோ, அல்லது விளக்கமாகவோ மட்டுமே இருக்கும். எனவே தனிப்பட்டவருக்கு ஒரு பதவி எழுதும் கடிதம் என்பதால் இதிலும் அட்ரஸ், கையொப்பமிடுபவர் பெயர் இருக்காது.
ஆனால், ஒரு தனிநபரின் சாதனைக்காகவோ, அல்லது அன்னாரின் குடும்பத்தில் இருந்த அரசு ஊழியரின் தியாகத்தைப் பாராட்டியோ (உ.ம். கலவரத்தில் இறந்த போலீஸ் ஊழியர், போரில் இறந்த ராணுவ வீரர், தன் சாதனைகளுக்காகப் பாராட்டப் படும் தனிப்பட்ட ஒருவர்) எழுதப்படும் கடிதங்களில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி, தனிப்பட்ட முறையில் விளித்து, வாழ்த்து அல்லது நன்றி பாராட்டி, தன் பதவியின் பெயரோடு தன் பெயரில் கையெழுத்திடுவார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவலறியும் சட்டம் வந்த பிறகு, தவறான தகவல் அளித்தமைக்கு, அல்லது தகவல் அளிக்க சட்டத்திற்கு விரோதமாக மறுத்தமைக்கு பொறுப்பு என்பதால், எல்லாத் தனிநபருக்கான அரசு கடிதத்திலும் பெயரும், பதவியும் போட்டாக வேண்டும் என்ற ரூல் வந்துவிட்டது. ஆனாலும் பெயர் குறித்து விளிக்கவேண்டிய அவசியமில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காமெடி பீஸ்:
1. டெமி அஃபிஷியல் லெட்டர்களில் பெண் அதிகாரிக்கு எழுத வேண்டுமெனில் சீனியரா ஜூனியரா கண்டுபிடி என்று உயிரெடுப்பார்கள். திருமணமாகிவிட்டதா இல்லையா என்று கேட்கச் சொல்லுவார்கள். கிருத்திருமம் பிடித்த ஸ்டெனோ டைவர்ஸ் ஆயிருக்கான்னு கேக்க முடியுமா சார் என்று டரியலாக்குவான்.
2. உதாரணமாக ஒரு அதிகாரியின் பெயர் உமா ராஜகோபால் என்றிருந்தால் ஜூனியர்தான் ஆனா தெரியாது அவங்கள, அதனால டியர் மிஸஸ் உமான்னு போடுங்க என்பார். ஸ்டெனோ மிஸஸ் போட்டா ராஜகோபால்தான் போடணும்னு க்ளாஸ் எடுப்பான்.
3. பிடிக்காத சீனியருக்கு எழுதும் கடிதத்தில் ‘நாசமா போக’ இவனுக்கு 'with regards' வேறன்னு திட்டிக் கொண்டே கையெழுத்து போடுவது ப்ரீச் ஆஃப் ப்ரோடாகாலில் வராது.
4. கிறித்துவ மத ஆஃபிஸருக்கு Sri/smt போடக்கூடாதுன்னு Mr./Ms/Mrs போட்டு டைப் செய்து வரும் ட்ராஃப்டில் சுழித்து Sri/smt போடும் அதிகாரிகள் உண்டு.
5. முஸ்லிம் மதத்தினருக்கு Sri/Mr/Smt/Mrs/Ms போடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை என்றால் கேட்காமல் போட்டாக வேண்டும் என பிடிவாதம் பிடித்து ஃபோனில் வாங்கிக் கட்டிக்கொள்ளும் அதிகாரிகள் உண்டு. ஹி ஹி.

