நாஞ்சில் நாடனின் பாராட்டு விழாக் காணொலியில்தான் முதலில் அவரைக் கண்டேன். சற்றும் பூச்சற்ற வட்டாரப் பேச்சுத் தமிழில் வயிறு நோக சிரிக்கப் பேசினாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்சந்தலையில் நச்சென உளியாய் இறங்கும் விஷயங்கள் அவை.
புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை எடுத்துக் கொண்டு பில் போடுமிடத்தில் பணத்தைச் செலுத்திக் கொண்டிருக்க அந்தப் புத்தகத்தை எடுத்தார். சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து எழுதப் போக ‘என்னுடையது’ என்று தவிர்க்க முனையும் நொடியில் ‘இவர்தாங்க ஆசிரியர்’ என்ற அறிமுகம் நடந்தது.
வெள்ளந்தியாய்ச் சிரித்த முகத்துடன் புத்தகத்தில் பெயர் கேட்டு கையெழுத்துப் போட்டு ‘நெல்லாருக்கும்! படிங்க’ என்று இரு கையாலும் எடுத்துக் கொடுத்தபோது தன் சிசுவை பெருமையுடன் கொஞ்சக் கொடுக்கும் வாஞ்சையிருந்தது முகத்தில்.
அப்படித்தான் வந்து சேர்ந்தாள் கண்மணி குணசேகரனின் அஞ்சலை.

அஞ்சலை! ஒரு தனி மனுஷி அல்ல. அவளே சனம். அவள் எதிரிகளும் தனி மனிதர்கள் அல்ல. அவர்களுமே சனம். உடலின் ஒரு சிறு புண்ணை சொறிந்து சொறிந்து ரணமாக்கி புற்று நோயாக்குவதுபோல் சமூகத்தின் அங்கமாகிய பெண்ணை விரட்டி விரட்டி அவள் வாழ்வைப் பறிப்பதும் அச்சமூகமே.
துரத்தித் துரத்தி உறவு பறித்த வாழ்வின் மீதான ஆசையை கட்டிக் காக்கும் முன் பின் அறியா நட்பு. இழைய இழைய உறவாடி கடன் கொடுக்கவில்லை என்பதால் நாத்தெறிக்க அவமதிக்கும் நட்பு. தேள் கொட்டி விட்டதாய் நடித்து வலி போக்க சற்றும் தயங்காமல் தாலியைக் கழட்டி உதவும் பெண்ணின் மார்பகத்தைத் தடவும் பாலிய நண்பன், தன் சுகத்துக்காக தங்கையை பலிகடா ஆக்கும் அக்காள், இப்படி எங்கு நோக்கிலும் மனிதர்களின் (சனங்களின்) வக்கிரங்கள் இரையானவளைத் தேடிக் கிழிக்கும் அவலம்.
முதல் பக்கத்திலேயே வம்புக்கலையும் பெண்ணின் மூலமாகத்தான் அறிமுகமாகிறாள் அஞ்சலை. முடிக்கும் வரை அஞ்சலையை ஒரு கதாபாத்திரமாக உணரவே முடிவதில்லை. அவளோடு சிரித்து, அவளோடு அழுது, அவள் தவிக்கும் தவிப்பைப் பூரணமாய் உள்வாங்கி ஏதும் செய்ய இயலாமல் கை பிசைந்திருக்கமட்டுமே முடிகிறது நம்மால்.
விதவை பாக்கியத்துக்கு மூன்றாவது பெண்ணாக அழகாய்ப் பிறந்து தொலைத்தது மட்டுமே அவள் செய்த பாவம். ஆளில்லாத (ஆம்பிள்ளை) குடும்பத்தைக் கட்டித் தூக்கி இரண்டு பெண்களை கரை சேர்த்து கடைக்குட்டி மகனைப் படிக்க வைத்து எப்படியோ பிறப்பைக் கழிக்கும் பாக்கியத்துக்கு ஆணுக்கும் மேல் ஆதரவாய் உழைத்துக் கை கொடுக்கிறாள் அஞ்சலை.
ஊர் வாய்க்கு அஞ்சியே அவளை ‘ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுக்க’ ஆசைப்படும் பாக்கியத்துக்கு ஆரம்பமே இரண்டாவது மருமகனால் விழுகிறது அடி. வஞ்சமும் வார்த்தையாகவுமே அல்லல் படுகிறது அஞ்சலையின் வாழ்வு.
விருத்தாசலத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் அமைகிறது கதை. துள்ளலும் கேலியுமாய் கார்குடல் வயல் காட்டில் அஞ்சலையோடு அத்தனை வேலைகளையும் அவளோடு செய்யும்போது தெரிகிறது சோற்றில் விவசாயியின் வியர்வை மணம். திருமணமாகி மணக்கொல்லை போய் முந்திரிக்காட்டின் உழைப்பை உணர்கையில் பாயசத்தில் மிதக்கும் முந்திரி கசக்கக் கூடும்.
பாழாய்ப் போன சமுதாயம் சொல்லிக் கொடுத்த ’ஒருத்தனை புருசன்னு நினைச்சிட்டு அவனோடு மனசார வாழ்ந்து திருமணத்தில் அவன் தம்பியை கட்ட வச்சு ஏமாத்திப்புட்டானுவளே! என்னுமா அவனுக்கு முந்தி விரிக்கிறது’ என்பதில் கலைகிறது அவள் வாழ்க்கை.
’நானு போயிட்டா நீ தனியாக் கெடந்து என்னா பண்ணுவ எம்மா?’ என்று யாருக்காக கவலைப் பட்டாளோ அந்தத்தாயே முதல் எதிரியாகிறாள். அவள் வாழ்க்கையை விதவிதமான வாளாய், ஈட்டியாய், நெருப்பாய், விஷமாய் சனத்தின் நாவு கூறு போடுகிறது.
சுருட்டி வைத்த உதிர்ந்த முடி பறந்து போய் அவள் சீலத்தை எள்ளி நகையாட வைக்கிறது. பேசினாலே இந்த இழவில் முடியும் என்று ஒதுங்கிப் போனாலும் விடாமல் துரத்துகிறது. தாயிடம் கொடுத்த சத்தியத்தினால் சாகவும் முடியாமல், ஓட இடமின்றி ஓடி, ஒளிய இடமின்றி ஒளிந்து, ‘இனியாவது’ என்ற நம்பிக்கையில் கிடைத்த வாழ்வை வாழத் தலைப் படுகையில் அதைத் தேடிக் குலைப்பதில்தான் சனத்துக்கு எத்தனை முனைப்பு?
ஏதோ ஒரு குக்கிராமத்து பறத்தெருவின் மனிதர்கள் மட்டுமல்ல இவர்கள். படித்ததாய், நாகரீகமானவர்களாய் வேஷம் போடும் நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறது சனம். சனம், சமூகம் என்று சொறிந்து சொறிந்து மேன்மேலும் நகைப்புக்கு இலக்காக்கி எந்த வழியும் போகவிடாமல் சுழட்டி சுழட்டி அடிப்பது ஒன்றே சமூகமா?
போக இடம் தெரியாமல் போய் நின்றவளை வழி நடத்தி வாழவைக்கும் வள்ளியும் இதே சமூகம்தானே! வள்ளியைப் போல் ஆங்காங்கே புண்ணுக்கு மருந்திடும் மனங்களும் இருக்கத்தான் செய்கிறது. யாரைச் சொல்ல யாரை விட?
’ஆனது ஆகிப் போச்சு! அமைஞ்சதுதான் வாழ்க்கைன்னு’ வாழ வேண்டியதுதான என்று சனம் சொல்லும். சொல்கிறது. ‘உருவத்தைப் பார்த்து வெறுத்து வெள்ளைத் தோலுக்கு மயங்கியவள்’ என்று ஒரு கோணல் பார்வையும் பார்க்கக் கூடும். அவளுக்கு வாழத் தெரியவில்லை என்று ஒற்றை வார்த்தையில் புறம் தள்ளலாம் சமூகம். அவள் வாழ்வை அவளை வாழவிடவில்லை என்பதே உண்மை.
வஞ்சிக்கப் பட்டவளை ’ஆறுதலாய் ஏற்றிருக்குமேயானால்’ போன்ற பல ஆனால்களால் அழிபடுகிறது அவள் வாழ்க்கை. சமூகமே எள்ளினாலும் புறந்தள்ளி அவளை ‘மீண்டுமேற்றுக்’ கொண்ட மண்ணாங்கட்டியே ‘நீ தேவுடியாதானடி’ என்று இயலாமல் சொல்லிய சொல்லுக்கு ஊரையே எதிர்த்து நின்றவள் நொறுங்கிப் போகிறாள்.
‘ஒரு தடவ சொன்னாலும் அதான். ஓராயிரம் தடவ சொன்னாலும் அதான். செத்துட்டா மட்டும் அழிஞ்சிடவா போகுது?பொறந்தது பொறந்தாச்சி. என்னா ஆயிடுங்கற. பத்துப் பொழுது இந்த சனங்க கிட்ட இருந்து, என்னா ஏதுன்னு வாழ்ந்து பாக்காம, செத்துப் போறதுதானா பெரிசு?’. ஞானாசிரியனான பெற்றமகளின் கைத்தாங்கலில் நம்பிக்கையோடும், ‘இன்னும் என்ன சின்னாபின்னப் படப்போறனோ’ என்ற பயத்துடனும்அடியெடுத்து வைக்கும் அஞ்சலைக்கு, ‘வா! வா! நீயும் தானே நான்’ என்று சனம் உச்சி முகருமா இனியாகிலும்?
வேஷமற்ற எழுத்து! வேஷமற்ற மனிதர்கள்! இன்னொரு முறை கண்மணி குணசேகரனைக் காண நேர்ந்திடின், அஞ்சலைக்காக இரு சொட்டுக்கண்ணீர் மட்டுமே தரமுடியும்.