Thursday, June 11, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 76

காற்றுப்புக முடியாத அறைக்குள் வைத்து கூட்டமைப்பினரை பூட்ட வேண்டும் - அமைச்சர் மேர்வின் சில்வா

சாவடிக்க எப்படி எல்லாம் உக்காந்து யோசிக்கிறாய்ங்கப்பா. இதில அதிகாரப் பகிர்வுக்கு வேற வழி குடுப்பானுவ.
________________________________________________
ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் கருணாநிதியுமே காரணம் ‐ ராமதாஸ் குற்றச்சாட்டு

இப்போ தனியா வந்து கூவினா நீங்க யோக்கியமா? அதென்னா இந்தியாவும், ஏன் அதில மட்டும் தனிப்பட்ட ஆள சொல்ல முடியாது? தெரியுமுங்ணா.
________________________________________________
ஆயுதங்களைக் கண்டு பிடிக்கும்வரை மீளக்குடியமர்த்த முடியாது -உதய நாணயக்கார

வசதிடா சாமி. இத சொல்லியே கடைசி உசிர் இருக்கிற வரை கம்பிக்குள்ள வைக்கலாம்.
________________________________________________
வவுனியாவின் இராணுவ ஆயுதக்கிடங்கை எரித்தது புலிகள் என வைகோ தெரிவிப்பு

இருக்கிறது போறாதுன்னு இது வேறயா. சாமிகளா அவிங்க பண்ணா அவிங்களே சொல்லுவாய்ங்க.
________________________________________________
ஈழத்தமிழர்களைப் பற்றி ஜெயலலிதாவுக்குத்தான் அக்கறை என்று கூறுவதுதான் உலக மகா அதிசயம்: கலைஞர்

இருந்திருந்து ரொம்ப நாளைக்கப்புறம் ஈழத் தமிழர்னு பேச தோணுறப்ப கூட இந்த நக்கலும் நையாண்டியும் தானே!வேற உருப்படியா ஒண்ணும் பண்ண மாட்டிங்களா ஐயா?
________________________________________________
மத்திய அரசு இலங்கைத் தமிழர்களின் புனர் வாழ்விற்காக இந்திய அரசின் சார்பில் ரூ.500 கோடியை நிதியுதவி அளிக்க முன்வந்து, அதற்காக நாம் நன்றியும் தெரிவித்திருக்கிறோம்.:கலைஞர்

சவசங்கரன் நிபந்தனையில்லாம குடுக்க பரிந்துரைத்த அந்த 500 கோடி 19 சிங்களவனுக்கும் ஒரு முஸ்லிமுக்கும் தவிர ஒரு தமிழனுக்கும் சேரலைன்னு நேத்து சொன்னத படிக்கலையா தலைவரே?
________________________________________________
இலங்கை அரசின் நடவடிக்கை: கனடா கண்டனம்

கடன் குடுத்ததை திருப்பிக் கேளுங்கப்பு. இல்லைன்னா கொழும்பு ஜப்தின்னு நில்லுங்க. சாவட்டும். கண்டனமாம்.
________________________________________________
துணைமுதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கலைஞர்பாராட்டு

தந்தை மகற்காற்றும் உதவி போல. போன வாரமெல்லாம் அவரு இவரைப் பாராட்டினாரு. இப்படியே மாத்தி மாத்தி பாராட்டி மருத்துவருக்கு குடைச்சல் குடுப்பாய்ங்க போல.
________________________________________________
அதிக அளவில் ஆயுதம் வாங்கும் நாடுகள் பட்டியல்:2வது இடத்தில் சீனா

பின்ன. மத்தவங்களுக்கும் சேத்தில்ல வாங்குறது.
________________________________________________
அணு ஆயுதங்களை அழிக்க தயார்: ரஷிய பிரதமர்

என்னா உள்குத்து. யாருக்கு குடுக்க போறானோ தெரியலையே?
________________________________________________
வட இலங்கை முகாம்களில் மக்கள் நீண்ட நாட்கள் தங்க நேரிடலாம் என்று ஐ. நா அதிகாரி கவலை

ஐயோ பாவமே. நீங்க கவலை படுறதே பெரிய விடயம்.இதுக்கு பேரு தங்கறதா? ஆயுள் கைதின்னு சொல்லுங்களேன்.
________________________________________________
(நண்பர்களுக்கு வணக்கம். அழுத்தம் தாளாம புலம்பத் தலைப்பட்டு நறுக்கிச் சொதப்பினனோ சொதப்பி நறுக்கினனோ தெரியாது. உங்க ஆதரவில 76 நறுக்கியாச்சி. கத்திய தீட்டி என்ன பண்ணப் போறம். புத்திய தீட்டலாம்னு முடிவு. ஒரு 34 நாள் இடைவெளி. நடுவில வசதிப் பட்டால் வலை மேயக்கூடும். இழுத்து விட்டு எஸ்கேப் ஆன கலகலப்ரியா, வழிகாட்டியும் ஆதரவாகவும் இருக்கும் பழமைபேசி, ராஜ நடராஜன், கிரி, சூர்யா கண்ணன், சக்தி, நைஜீரியா இராகவன், சுப்பு, ஜூர்கன், நசரேயன், மற்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. மீண்டும் நறுக்கும் வரை...பாலா.)

___/\___

Wednesday, June 10, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 75

தமிழர்கள் மின் வேலியிடப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விலங்குகள் வராம மின்வேலி போட்டாத்தான் சட்டப்படி குற்றம். மனுசனுக்கில்லை. வேணும்னா ஐ.நா. ல ஓட்டு எடுக்கலாமான்னு கேப்பானுவ.
________________________________________________
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது: சிவ்சங்கர் மேனன்

தெரியாம கேக்குறேன். இந்த முடிவெல்லாம் இவர் எடுக்கிறது தானா? மந்திரி முந்திரி எல்லாம் மண்டையாட்டவா?
________________________________________________
20 நாடுகளின் உதவியுடனேயே விடுதலைப் புலிகளை அரசு தோற்கடித்தது: வெளியுறவு அமைச்சர் ரோஹித

அழிக்க 20 நாடு, அதில இருந்து தப்பிக்க 24 நாடு, தினம் உண்டு கொழுக்க நிவாரணம் கொட்டிக் கொடுக்க எல்லாரும்னு பிச்சைலயே போகுது பொழப்பு. இதுக்கு அலட்டல பாரு.
________________________________________________
இலங்கையில் நுழைய அனுமதி மறுப்பு: கனடா எம்.பி. தவிப்பு

கனடா டாலர் மட்டும் தான் மறுப்பில்லாம அனுப்பதிப்பான் ராஜபிச்ச.
________________________________________________
இலங்கை அரச பயங்கரவாதிகள் தமிழீழ மக்களை ஒரு பூச்சியை விட கேவலமாக நடத்துகின்றார்கள்

அரசா இருந்தா பயங்கரவாதத்துக்கு பேரு இறையாண்மை. எல்லாம் வந்து வந்து வேடிக்கை பார்த்துட்டு போறாங்க.
________________________________________________
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும், சிவ்சங்கர் மேனனும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி 500 கோடி ரூபாய்களை இலங்கைக்கு வழங்க பரிந்துரைத்துள்ளனர்:தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் உறுப்பினரான பேராசிரியர் வி.சூரியநாராயணன்

கேடிங்கப்பா. பரிந்துரை எதுக்கு. போடு கையெழுத்துன்னா போடப் போறாங்க.
________________________________________________
20 பேரைக்கொண்ட குழு இந்த பணத்தை 19 சிங்களவர்கள் 1 முஸ்லிம் ஆகியோருக்கு செலவிட பரிந்துரைத்துள்ளது

பினாமி போல. எல்லாம் மந்திரிங்க சொந்தக் காரனா இருக்கும்.
________________________________________________
தமிழ்ச்சமூகத்திற்கு இந்தியா துரோகம் இழைத்து விட்டது: திருமாவளவன்

உங்க‌ளுக்கு இப்போவாவது உறுத்துதே.ச‌ந்தோஷ‌ம்.
________________________________________________
நேருக்கு நேர் மோதுங்கள்:பாகிஸ்தானிடம் அமெரிக்கா

வ‌ள‌ர்த்த‌ க‌டா முட்ட‌ வ‌ந்தான்னு பாடிட்டு போங்க‌ப்பு. ப‌க்ஸேக்கு சொல்ல‌க் காணோம். ஊர‌க் கூட்டி தேரிழுத்தான்.
________________________________________________
சீனாவுடன் மோதல் வருமா?:எல்லையில் விமானங்களை குவிக்கிறது இந்தியா

ப‌க்ஸேட்ட‌ மிச்ச‌ம் மீதி இருந்தா கேட்டுப் பாருங்க‌. குடுப்பான். காசுக்குதான். அதான் உசாரா உன் ச‌ண்டைய‌தானே நான் போட்டேன்னுட்டானே?
________________________________________________
பாவனைக்கு உதவாத பீரங்கி தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையே தீயில் அழிவடைந்துள்ளது ‐ நாணயக்கார

பாவ‌ம்பா. புளுகி நாளாச்சின்னு வ‌ந்துட்டான். பீர‌ங்கி தோட்டா ப‌ஞ்சுல‌யா ப‌ண்ணி வெச்சாங்க‌?
________________________________________________
பாஜக-ஜனதா தளம் இணைந்து செயல்படும்: இல.கணேசன்-சு.சுவாமி அறிவிப்பு

டெபாசிட் கூட‌ இல்லாம‌ நாச‌மா போக‌ வ‌ழி.
________________________________________________

Tuesday, June 9, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 74

இலங்கையில் தமிழ் மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை: கனிமொழி

அதுக்கென்னாங்க. சிதம்பரம் கிட்ட சொன்னா மேனனோ நாராவோ போய் முகாமில ஆதித்யா, சிரிப்பொலி, சன்டிவி, எல்லாம் தெரிய வழி பண்ணிடுவாங்க. ஜனங்க கஷ்டத்த மறந்துடுவாங்க.
________________________________________
இலங்கைத் தமிழர் நிலை வேதனையளிக்கிறது: சுஷ்மா

இது யாரு புது முதலை?
_________________________________________________
ராமேஸ்வர மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

அட பாசமா விருந்துக்கு கூட்டி போயிருப்பாங்கப்பு. இங்க எவனும் சட்ட பண்ணப் போறதில்ல. விதி இருந்தா வந்துடுவாங்க. வேலைய பாருங்க.
________________________________________
இலங்கை ராணுவ தளமாக கச்சத்தீவு மாறும் அபாயம்: டி.ராஜா

நட்புறவின் அடையாளமா கொச்சில கூட இடம் குடுப்பாங்க. கச்சத்தீவு எதுக்கு..
________________________________________
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை: ராமதாஸ்

ஏனோ? உங்க கட்சி கிழிச்சத அவங்க என்ன கிழிக்காம போய்ட்டாங்க. உள்சண்ட போட்டே நாசமா போவுதுங்க.
________________________________________
விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு இந்திய வீஸா வழங்கக் கூடாது – சுப்ரமணியம் சுவாமி

இந்தாள முதல்ல நாடு கடத்தணும். சம்பந்தமே இல்லாம கேனப்பயலுவ தமிழந்தான்னு இங்க வந்து உக்காந்து உசிரெடுக்குறான்.
________________________________________
அகில இந்திய ஆர்ய முன்னேற்ற கழகம்: எஸ்.வி.சேகர் தொடங்கும் புதிய கட்சி

அடுத்த நாடகத்துக்கு பெயரா? இருக்கிறதெல்லாம் போறாது. இவரு வேற வந்துட்டாரு. மனுசனா இருக்க வழி பாருமைய்யா முதல்ல.
________________________________________
திருப்பதி கோவிலைச் சுற்றி இரும்பு வேலி: பாதுகாப்பு ஏற்பாடு

சாமிக்கே வேலியா? ராஜ பக்சே வரானா என்னா பூஜைக்கு.
________________________________________
தீவிரவாதிகள் முகாம்களை அடியோடு அழிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தோடா. அது அவிங்க இறையாண்மைப்பா. அத சொல்ல இவரு யாரு? ஏன். நீடிப்பெல்லாம் குடுத்தீங்கள்ள. நாராவ அனுப்பறது. பேசித் தீத்துடுவாரு.
_________________________________________________