தமிழ் நெஞ்சில் ஆணிகள்;ரத்தம் வழியும் காயங்கள்:கலைஞர் கடிதம்
அதுக்கு மிளாய் தடவுறீங்களே ஐயா. அது தான் தாங்க முடியவில்லை.
_________________________________________________________
வெறுக்கத்தக்கதும்-வேண்டத் தகாததுமான இத்தனை கொடுமைகளுக்கும் "விடுதலைப் போர்'' என்று பெயரிட்டு அழைத்தாலும்: கலைஞர்
இப்படியா கொச்சைப் படுத்துவீங்க?
__________________________________________________________
இலங்கையில் விடுதலைப் போர்- இங்கேயிருந்து ஆதரவு தரும் தமிழர்களுக்கு கெடுதலை உருவாக்கும் காரியமன்றோ செய்கின்றார்; களத்தில் நிற்போரிடம் கள்ள உறவு வைத்துக் கொண்டு:கலைஞர்
யாரு கெடுதலை உண்டாக்கினது, யார் களத்தில் நிற்போரிடம் கள்ள உறவு வச்சிருக்கா இதெல்லாம் தெரியாமலா இருக்கோம். இத உங்க மனசாட்சி பேசினதுன்னு சொல்லலாமா? மறந்து போய் சொல்லிட்டீங்க.
__________________________________________________________
மருத்துவமனை மீது இலங்கை ராணுவம் தாக்குதல்: 63 தமிழர்கள் பலி
முதல்வருக்கு யாருமே இதெல்லாம் காட்ட மாட்டேங்குறாங்கப்பா.
__________________________________________________________
அன்று வெற்றி பெற்றதால் இன்று உம்மோடு இருக்கிறேன். தமிழ்மீது சத்தியம்;ஈழத்து திலீபன் கல்லறைக்குப்பக்கத்தில் இருந்திருப்பேன். --:கலைஞர்
நல்ல காலம். அவங்க பேரு கெடாம போச்சி.நக்கலுக்கு ஒரு அளவில்லையா?
__________________________________________________________
ஆனால் ஒன்று; அன்று வெற்றி பெற்றதால் இன்று உம்மோடு இருக்கிறேன். :கலைஞர்
இவரு நம்மள ஏமாத்துறாரா? இல்ல தன்னையே ஏமாத்திக்கிறாரா தெரியலையே.
__________________________________________________________
போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தியிருந்தால் அரசியலைவிட்டே விலகிக்கொள்கிறேன்:வைகோ
முடியாதுன்னு தெரிஞ்சி வெறுப்பேத்துறாரு!
__________________________________________________________
இன அழிப்பு நடக்கிறது;கை கட்டி வேடிக்கை பார்க்கிறோம்:தங்கர்பச்சான் ஆவேசம்
அப்படி இருந்திருந்தாலாவது இவ்வளவு அழிவிருந்திருக்காது.
__________________________________________________________
நான் முடிந்தவரை போராடுபவன் அல்ல;முடியும் வரை போராடுபவன்: விஜயகாந்த் பேச்சு
என்ன முடியும் வரை? பேரமா?
__________________________________________________________
முரண்பாடுகளின் மொத்த உருவம் அதிமுக கூட்டணி: கி.வீரமணி
நீங்க, சுவாமி, மருத்துவர் ஐயா எல்லாம் தான் இப்படி பேச பொருத்தமானவங்க.
__________________________________________________________
ஓட்டு போட குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமை
இது நல்லாருக்கே. அக்கம் பக்கத்து குழந்தைகள்னு தெரியவா போகுது?
__________________________________________________________
ஈழத்தமிழருக்காக 70ஆண்டுகள் சிறையில் இருக்கத் தயார்: அன்புமணி ராமதாஸ்
எந்த பதவிலங்கையா? அங்கையும் பதவி கேக்காம இருந்தா சரி.
__________________________________________________________
பெருக்கெடுத்த கோபம்;அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்:தா.பாண்டியன்
புரிஞ்சா பண்ணுவாங்களா?
__________________________________________________________
தினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்
Sunday, May 3, 2009
முத்துக் குளிக்க வாரீகளா
என்னடா திடீர்னு முத்துக் குளிக்கக் கூப்பிடரான்னு பார்க்கரீங்களா? தமிழ்க் கடல்ல தாங்க. பரிட்சைனு ஒரு நெருக்கடிக்காக படிச்சது கொஞ்சம். பரவசமா படிச்சது கொஞ்சம்னு கலந்தாங்கட்டியாத்தான் நாம தமிழ் படிச்சது. வலைமனைல தமிழ் அகராதி தேடினப்போ, தமிழ் இலக்கணம் தேடினப்போ கிடைச்சதெல்லாம் யாழ்ப்பாண தமிழறிஞர்களோட உழைப்பும், நூல்களும். நாம ஒண்ணுமேவா பண்ணலைன்னு இருந்தது. வலை மேயுரப்போ கண்ணில பட்டது தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.
சுமார் ஒரு வருடத்துக்கு முன்னாடி கலகலப்ரியா இந்த சுட்டிய கொடுத்தப்போ நூல்நிலையம் பகுதி கட்டுமானத்தில இருந்தது. அப்புறம் பார்க்கலை. இப்போ பார்க்கிறப்போ பிரமிப்பா இருக்கு. ஆத்திச் சூடி, கொன்றைவேந்தன், மூதுரைன்னு தலைப்பெல்லாம் பார்த்து உள்ளே பார்க்கிறப்போ சின்ன வயசு நினைவெல்லாம் வந்து மனசு நிறைவா இருந்தது. ஐந்தரை வயதில ஆறு வயதுன்னு சொல்லி பள்ளியில சேர்க்க கூட்டிண்டு போக கிட்ட கிட்ட ஒரு வாரம் நினைச்சப்போல்லாம் பரிட்சை. அட பாடத்தில இல்லங்க. வலது கையால உச்சந்தலைல கை படிய இடது காதைத் தொடத்தான். எட்டி எட்டி புடிச்சாலும் எட்டுதில்ல. தலைமை ஆசிரியர் கிட்ட புள்ள இரண்டாம் வகுப்பு பாடம் வரைக்கும் கரைச்சி குடிச்சது. ஆத்திச் சூடி, கொன்றைவேந்தன்லாம் மனப்பாடம், இருபது வாய்ப்பாடு, கூட்டல், கழித்தல்,பெருக்கல், வகுத்தல், தேர்க் கூட்டல்லாம் தெரியும்னு ராமானுஜம் அளவுக்கு அளந்தடிச்சதெல்லாம் கவனம் வந்தது. எனக்குதான் கவன பிசகா, இல்ல அவங்க ஏத்தி விட்டாங்களானு குழப்பம். ஏன்னா ஆத்திச் சூடி சொல்லு, கொன்றை வேந்தன் சொல்லுன்னு எல்லாம் கேட்ட கவனம் இல்ல. அறம் செய்ய விரும்பு சொல்லு, ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் சொல்லுன்னு தான் பழக்கம். அப்புறம் தொலைக்காட்சில நன்னன் அய்யா முதியோர்கல்வி நிகழ்ச்சில தமிழ் கத்துக் கொடுத்தப்போ பிரமிப்பா இருந்திச்சி. இப்படி எல்லாம் ஏன் நமக்கு சொல்லித் தரலைன்னு. அதன் பிறகு கதை, கட்டுரைன்னு என்னல்லாமோ படிச்சாலும் அடிப்படையில தமிழ் கொஞ்சம் சந்தேகமாதான் இருக்கும். நம்மள மாதிரி நிறைய பேர் இருக்கலாமில்லையா. அவங்களுக்காகத் தான் இந்த அழைப்பு.
தமிழ் இணையப் பல்கலைக் கழகம். இந்த வலைமனை பார்த்ததும் மத்த பல்கலைக் கழகங்களை விட நேர்த்தியா குழந்தையில இருந்து பட்டப் படிப்பு வரை பாடங்கள், நூல்கள், அகராதி, கலைச் சொற்கள், பாடத் திட்டம், பாட நூல்கள், பயணியர் தமிழ், குழந்தைகள் (ஏன் நமக்குக் கூட) வார்த்தை அமைக்க விளையாட்டு http://tamilvu.org/courses/ship/index.htm என்று எல்லா வகையிலும் மிகச் சிறப்பாக தள அமைப்பு கொண்டிருக்கிறது தெரியும். நூலகம் சுட்டினால் எத்துணை பெரிய பொக்கிஷம், எத்தனை உழைப்பு என்று தெரியும். இணைய வகுப்பறை சுட்டிப் பாருங்களேன். நன்னன் ஐயா, நம் வீட்டில இருக்கிற பணிமுடித்த ஒரு தாத்தா மாதிரி தமிழை எவ்வளவு எளிமையாசொல்லித்தராங்கன்னு. அது ஒரு அனுபவம். முக்கியமா இதைப் பார்த்ததும் புலம் பெயர்ந்து வேலை நிமித்தம் இருக்கும் தமிழன்பர்களுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் எவ்வளவு பயன் பாடா இருக்கும் எனத் தோன்றியது. ஆசிரியரைத்தேடி அலையாமல், வீட்டில் குழந்தைகளே படிக்கும் அளவுக்கு எளிமையாய் கொஞ்சமே கொஞ்சம் வழிநடத்தலுடன் தமிழ் கற்க முடியும். கணக்குத் தொடங்கு, கடவுச் சொல் கொடுன்னு எல்லாம் படுத்தாம சுலபமாக பார்க்க படிக்க முடியும். அட படிச்சா என்னனு நினைக்கிறவங்களுக்கு பெரும்பாலான நாட்டில தொடர்பு மையம், பரிட்சை மையம், இணைய வழியில் தேர்வு, எழுத்துத் தேர்வு போன்ற வசதிகள் இருக்கு. சுவடிக் காட்சியகம் பார்க்கிறப்போ பிரமிப்பா இருக்கும். கண்டிப்பா நாம் அனைவரும் ஆதரித்து பயனடைய வேண்டிய ஒரு வசதி இது.
வலைமனைக்கு (இது சரியான்னு தெரியல) இங்கே சுட்டவும்:http://tamilvu.org/coresite/html/cwhomepg.htm
மறக்காம அவங்களுக்கு பின்னூட்டம் போடுங்க. வளர்ச்சிக்கு உதவும்.

Saturday, May 2, 2009
நறுக்குன்னு நாலு வார்த்த - 39
கொழும்புக்கு இந்தியாவிலிருந்து ஆயுதங்கள்.பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் தலைமையில் வழிமறித்தனர்.
உண்ணா விரதம் இருந்தவர் என்னா விரதம் இருக்கப் போகிறார்?
___________________________________________________
சாத்தியமற்ற தமிழ் ஈழ கோரிக்கையை ஜெயலலிதா கைவிட வேண்டும்: சு.சாமி
பேச்சுக்கே சொன்னதா இருக்கட்டுமே. நம்புறவங்க நம்புறோம். இந்தாளு ஏன் கெடந்து குதிக்குது.

இலங்கை தமிழர்கள் பலியாக முதல் காரணம் ப.சிதம்பரம்தான்: ராமதாஸ்
ஆரம்பிச்சி 8 மாசமாச்சி. எப்போ கண்டு பிடிச்சிங்க ஐயா?

இலங்கை: போரை நிறுத்திவிட்டதாக பாசாங்கு: டி.ராஜா
இதுக்கு பேரு பாசாங்கா.வேற வார்த்த இருக்கும் பாருங்க.

ஈழப்பிரச்சனைக்கு போராடுவதற்கு கலைஞர்தான் சரியானவர். திருமா.
அந்த சனங்களுக்கு அவன் போடுற எரிகுண்டு ஒண்ணுமே இல்ல. தினம் தினம் நம்பின நீங்க பேசுறது அத விட கொடுமை.

தோல்வி பயத்தில் ராமதாஸ்:திருமா
அவரு பிழைச்சிக்குவாரு. உங்க கதைய பாருங்கய்யா.

எஸ்.வி.சேகர் மீது நடிகர் விசு கடும் தாக்கு
காமெடி

எஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்ய தடை
அழைப்பில்லங்க வருது!

இன்றும் 3 மருத்துவர்களை என்னுடன் அழைத்து வந்துள்ளேன். அவர்களில் சமீர் என்று முஸ்லீம், சார்லஸ் என்று கிறிஸ்தவர், கோபால் என்ற இந்து பிராமணரும் அடங்குவர். மருத்துவக் குழுவிலும் மதநல்லிணக்கத்தை எதிர்பார்த்தேன்
இதெல்லாம் தேவையா. யாராவது நோவுன்னா மருத்துவர் என்ன மதம்னு கேக்குறாங்களா?

என் மீது போடப்படும் பழிகள், எருவாகி என்னை வளர்ச்சி அடைய செய்து கொண்டிருக்கிறது.
அதுதான். அதேதான். உங்கள் வளர்ச்சிக்கு குறைவேதுங்கையா. அழியறது யாரோ. நீங்க நடத்துங்க.

விவசாயிகள்நலனை பா.ஜ.புறக்கணிக்கிறது:மன்மோகன்
1500 கோடி இவங்க நலனுக்கு கொடுத்திருந்தா இப்படி பேசலாம்.

பீகாரில் கள்ள ஓட்டு: லாலு குற்றச்சாட்டு
இல்லைன்னா அது பீகாரே இல்லை.

காந்தியை மறந்த அரசியல்வாதிகள்: நரேஷ்குப்தா
தினம் சோனியா காந்தி, ராகுல் காந்தி, வருண் காந்தின்னு இருக்கே. அப்புறம் எப்படி?

Subscribe to:
Posts (Atom)