Tuesday, October 2, 2012

நறுக்னு நாலு வார்த்த V 6.1

ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்: நாராயணசாமி வற்புறுத்தல்

நல்ல சாமிய பார்த்தா நாறசாமிக்கு பொறுக்காதே.
----------------------------------
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஈரோட்டில் உண்ணாவிரதம்

பத்தாயிரம் ரூவா கட்டினா டெய்லி ஒரு க்வார்ட்டரு பிறந்த நாளைக்கு ஒரு ஃபுல்லுன்னு எதுனா திட்டம் வருதா?
___________________________________
கொலையான வீட்டில் கொள்ளையடித்த போலீசார்!

அப்ப கொள்ளை போச்சுன்னு புகார் பண்ணா கொலையும் பண்ணுவாய்ங்களோ?
-----------------------------------
சபாநாயகர் பதவிக்கு தனபால் நிறுத்தப்படுவார் -ஜெ

உங்க கட்சில ஒரு ஆம்பிளையாவது நிக்குறாய்ங்களா. மொதல்ல நேரா நிக்கச் சொல்லுங்கம்மா.
-----------------------------------
நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கு! நகைச்சுவை நடிகர் சிட்டிபாபுவுக்கு பிடிவாரண்டு!

வில்லன காமெடி பீசாக்கின காமெடியன் வில்லன்.
------------------------------------
வி.ஏ.ஓ. கீ-ஆன்சர் வெளியீடு

பரிட்சை முடிஞ்சி வெளியிட்டதால என்னை மாதிரி விடை தெரியாதவங்க பாஸ் ஆக வாய்ப்பு பறிபோச்சுன்னு எவனாச்சும் கோர்ட்ல கேஸ் போடாம இருந்தாச் சரி.
-------------------------------------
திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு இல்லை: கலைஞர் பேட்டி

அதுக்கெல்லாம் சொரணைன்னு ஒன்னு வேணும்
-------------------------------------
மது மீது மோகம்! மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது!

மது யாரு அவர் காதலியா?
-------------------------------------
இறந்தவர்களின் உயிரை ஜெயலலிதாவால் திருப்பித்தரமுடியுமா? ராமதாஸ் கேள்வி

படிச்சு டாக்டரான உங்களாலயே முடியாது. பட்டத்துல டாக்டரான அவிங்க என்ன செய்வாங்க மருத்துவரைய்யா
-------------------------------------
அக்டோபர் 5ல் மனித சங்கிலி

தலைவர் போராட்ட லிஸ்ட்ல இதுக்கொரு எண்ட்ரியப் போடேய்.
--------------------------------------
மத்திய மந்திரி சபையில் தி.மு.க. சார்பில் புதிதாக யாரும் இடம் பெறமாட்டார்கள்: கலைஞர் அறிவிப்பு

என்னமோ இவர கெஞ்சினா மாதிரியும் இவரு முடியாதுன்னு சொல்லிட்டா மாதிரியும் என்னா பில்டப்பு?
--------------------------------------

20 comments:

பட்டிகாட்டான் Jey said...

அண்ணே, நறுக்ஸ்ல ...சுருக்ஸ்..சரியா இருக்கு.
அதுலேயும் “நாறசாமி”....”கலைஞ்சரின் சொரனை” :-)))

சேட்டைக்காரன் said...

//பத்தாயிரம் ரூவா கட்டினா டெய்லி ஒரு க்வார்ட்டரு பிறந்த நாளைக்கு ஒரு ஃபுல்லுன்னு எதுனா திட்டம் வருதா?//

நறுக்-குனு ஒரு நல்ல ஐடியா கொடுத்திட்டீங்க ஐயா! :-)

பிரபாகர் said...

கலக்கல் ஆசான்...! அடிக்கடி எழுதிக் கலக்குங்க...! எல்லாமே நறுக், சுருக்.

ஈரோட்டு வியாபார காந்தங்கள் உங்க ஐடியா படிச்சாங்கன்னா கண்டிப்பா பேப்பர்ல விளம்பரம் பார்க்கலாம்!...

பிரபாகர்...

ராஜ நடராஜன் said...

பதிவு வாசனை இழப்பு என்ன என்பதை உங்களைப் போன்றவர்களிடமிருந்தே உணர முடியும்.

ஸ்டார்ட் மியூசிக்.

ராஜ நடராஜன் said...

தளபதின்னு போர்டு மாட்டிகிட்டு நசரேயன் சுத்திகிட்டிருந்தாரே!கண்டால் மேடைக்கு வரவும்.

ஸ்ரீராம். said...

பத்தாயிரம் ரூபாய் ஐடியா கூட நல்லாத்தான் இருக்கு! படிச்ச டாக்டரும் படிக்காத டாக்டரும் கூட சூப்பர்!

வானம்பாடிகள் said...

/ ராஜ நடராஜன் said...

தளபதின்னு போர்டு மாட்டிகிட்டு நசரேயன் சுத்திகிட்டிருந்தாரே!கண்டால் மேடைக்கு வரவும்./

எழுதினா கோடிங்தான் எழுதுவேன்னு சபதம் பண்ணிண்டிருக்கார்ணா:))

ராஜ நடராஜன் said...

/சபாநாயகர் பதவிக்கு தனபால் நிறுத்தப்படுவார் -ஜெ

உங்க கட்சில ஒரு ஆம்பிளையாவது நிக்குறாய்ங்களா. மொதல்ல நேரா நிக்கச் சொல்லுங்கம்மா.//

ரத்தத்தின் ரத்தங்களுக்கு நெத்திக்கடன்


//திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு இல்லை: கலைஞர் பேட்டி

அதுக்கெல்லாம் சொரணைன்னு ஒன்னு வேணும்//

சொரணையா? அப்படின்னா!

பழமைபேசி said...

welcome back! Show begins!!

ஜோதிஜி திருப்பூர் said...

கலக்கல் ஆசான்...! அடிக்கடி எழுதிக் கலக்குங்க...! எல்லாமே நறுக், சுருக்.

பிரபாகர் இப்ப எங்கே இருக்கீங்க?

அப்பாதுரை said...

எல்லாமே அருமை.
//கொலையான வீட்டில் கொள்ளையடித்த போலீசார்
இது #1

ஓலை said...

Kalakkal.

Pathivarnnu thideer gnaabagam vanthidichchoi! Welcome back.

cheena (சீனா) said...

அன்பின் பாமரன் - சூப்பர் கமெண்ட்ஸ் - மொதல்ல நேரா நிக்கச் சொல்லுங்க்ம்மா - சுப்பரோ சூப்பர் - அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

T.V.ராதாகிருஷ்ணன் said...

welcome back!

முனைவர்.இரா.குணசீலன் said...

நீண்ட நாளைக்குப் பிறகு நறுக்கென்று நாலு செய்தி படித்தேன்..

நயம்.

சே. குமார் said...

நக்கல் நறுக்ஸ்....
அருமை ஐயா...

வானம்பாடிகள் said...

அனைவருக்கும் நன்றி:)

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/3.html) சென்று பார்க்கலாம்...

நன்றி...

தொழிற்களம் குழு said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

வானம்பாடிகள் said...

நன்றிங்க தனபாலன்