* நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் வெளியில் நின்றிருக்கும்போது அஃப்கானோ, லிபியாவோ அட்ரஸ் தெரியாமல் வந்துவிட்டாற்போல் ஒரு உணர்வு. ஆளாளுக்கு பஸூகா, போஃபார்ஸ் மாதிரி அரை அடியிலிருந்து ஒன்னரை அடி நீளத்துக்கு அட்டாச்மெண்டுடன் கழுத்தில் காமராவோடு அலைந்தார்கள்.
* கூடிய சீக்கிரம் ஜெய்ஜாக்கி வட்டம் ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. அது மட்டும் வந்துச்சுன்னா ஊர்ல இருக்கிற வட்டம் எல்லாம் சதுரம், முக்கோணம்னு மாறிக்கிறணும். ஜாக்கியின் அதி தீவிர வாசகர் ஒருவர், அவரின் பையைச் சுமப்பதை பாக்கியமாக எண்ணி சுமந்து சிஷ்ய பரம்பரை காத்தது ஆச்சரியம். (இதுக்காகவே அங்கிட்டும் இங்கிட்டும் நடந்து சீன் போட்ட ஜாக்கியின் குசும்பை வேறு யாரும் நோட் பண்ணாங்களா தெரியலை)
* மணிஜி லிக்விட் ஃபார்மில் குற்றாலமாகவும் சாலிட் ஃபார்மில் அண்டார்ட்டிகாவும் ஆகிவிடுகிறார். வழக்கமான மணிஜி மிஸ்ஸிங்.
*ஈரோடு குழுமத்தினருக்கு எச்சரிக்கை. வருடாவருடம் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கறது என்று சாப்பாட்டில் ஏனோதானோவென்று இருந்துவிட முடியாது. டாக்டர் கந்தசாமி சார் இலையில் ஒவ்வொரு ஐட்டமாக பறிமாறிக் கொண்டிருக்க புகைப்படத்தில் ஆவணப் படுத்தியிருக்கிறார்.
* சற்றேறக் குறைய மூன்று பந்திகள் முடிந்து அடுத்த பந்திக்கு ஆட்கள் சேராத சைக்கிள் கேப்பில் தாமோதர் சந்துருவும், விஸ்வம் சாரும் ருசி பார்க்க உட்கார்ந்தார்கள். சமையலுக்குப் பொறுப்பானவர் போலிருக்கிறது வெள்ளை வேட்டியும் சட்டையுமாக தானே வந்து கறி வகைகளை பரிமாரினார். முதல் துண்டு கறி வாய்க்குப் போனதும் சந்த்ருவின் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை. டைப்ரைட்டிங்கில் நிமிஷத்துக்கு இத்தனை வார்த்தை என்று ஸ்பீட் டெஸ்ட் இருப்பதுபோல் இதற்குமிருந்தால் சந்த்ரு சூப்பர் ஹைஸ்பீட் டெஸ்டில் மெடல் வாங்கியிருப்பார். ஒரு துண்டு கறி வாய்க்குப் போனதும், எம்ப்டியாக ரிட்டர்ன் ஆகாமல் சீராக இன்னோர் அயிட்டம்போல் வாயிலிருந்து இலையில் எலும்பைச் சேர்க்க, கறி காலியாகிக் கொண்டிருந்தது. ம்கும். இதுங்கூட போட்டி போட என்னால ஏலாது என்று விஸ்வம் சாதத்துக்குப் போய்விட்டார்.
*அபி அப்பா அவ்வப்போது குடை சாய்ந்து மணிஜி பக்கம் சரிந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தபோதும் போதி தருமர் போஸில் நோக்கு வர்மத்தில் இலையை காலி செய்தார் மணிஜி.
*ஒரு நல்ல ரசிகனே நல்ல எழுத்தாளராக முடியும் என்பது ஜெமோலாஜி சாப்பிடும்போது தெரிந்தது. கலந்தோமா அடைத்தோமா வேலையே கிடையாது. தேர்ந்த கலைஞன் போல் சோற்றையும் குழம்பையும் புரட்டிக் கொடுத்து செம்புலப் பெயல் நீர் போல சோற்றில் குழம்பு கலக்க சுருதி சேர்த்து, செல்லமாக ஒரு வாய் கறி கொறித்து, முதல் கவளம் வாயில் போக அப்படி ஒரு ரசிப்பு. (வரப்போற அம்மணி பாவம்)
*புதுசா மாறின வேதக்காரன் போப்பாண்டவருக்கே பைபிள் சொல்றா மாதிரி மயில்ராவணன் குடல்கறி இல்லாத குறையைச் சொல்ல தலைக்கறியோடு குடல்கறி மதியத்தில் ஜோடி சேராது என்ற பரமார்த்த தத்துவத்தோடு பல்பு கொடுத்தார் சந்த்ரு.
*சாப்பிடும்போது முகத்தையும், பரிமாறும் போது இலையையும் பார்த்து பரிமாறணும்னு சொல்லுவாங்க. அகநாழிகைக்கு சாப்பாடு போடும் வாய்ப்புப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்/வாணிகள். தேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் போல முகத்தில் அத்தனை பாவமும் பார்க்கலாம். ஆனந்த விகடனில் சினிமாவுக்கு மார்க் போடுவது போல் வாசு எழுந்திருக்கும்போது முகத்தைப் பார்த்து சாப்பாட்டுக்கு மார்க் போடலாம்.
* சைவப் பந்தியில் ஒரு வன் புணர்ச்சி நடத்தினார்கள் வேலு Gயும் இன்னோருவரும். அதுவரை கோழி படம் தொங்கவிட்டுக் கொண்டு ஆஹா ஓஹோ என்று அலம்பலோடு சாப்பிடும் மனோரமா போல் இருந்திருப்பார் போல் வேலு. மற்றவர் முட்டைப் பணியாரம் கேட்கவும், ‘நண்பேண்டா’ என்று கூவாமல் தானும் வாங்கிக் கொண்டு நிம்மதியாக சாப்பிட விடுகிறதா உலகம். சமய சந்தர்ப்பம் தெரியாமல் ’நீங்க சைவமில்ல’ என்று ஒருத்தர் கேட்க ‘முட்டை சாப்பிடுவேன்’ என்ற குரல் கிணத்துற்குள்ளிருந்து வந்தாலும் லேசாக தீய்ந்த வாடை அடித்தது.
* ஆரூரன், கார்த்தி, ஜாஃபர், மேடி ஆகியோரை ‘சாப்பிடல’ என்று அவ்வப்போது யாராவது லந்து கொடுப்பதும், ‘தோ சாப்பிடப் போறோம்’ என்று சொல்லி எஸ்ஸாகும்போது அந்த வெட்கமும் சிரிப்பும் எந்த நடிகையும் திரைப்படத்தில் கொண்டுவந்து விடமுடியாது.
* என்னவோ வெட்டி முறிக்கிறாமாதிரி இங்குட்டும் அங்குட்டும் ஓட்டிட்டிருந்த கும்பல ஒரு ஓரமா நின்னு நானும் தருமியும் பார்த்துக்கிட்டிருந்தோம். அந்த அலைச்சலுக்கு நடுவேயும் தவறாம யாரோ ஒருத்தர் வந்து மாத்தி மாத்தி ஐயான்னு ஏதோ சொல்ல, ‘இவிங்க வேற எவ்வளவு சொன்னாலும் ஐயா ஐயான்னுகிட்டு’ என்று தன் சோகத்தை இறக்கி வைத்த தருமி சாருக்கு ‘உங்களுக்காவது பரவாயில்லை. என்னைய ஆசான்னு வேற கொல்றாய்ங்க’ என்று ஆற்றுப்படுத்தியபோது. ‘என் இனமடா நீ’ என்ற அர்த்தத்தில் ஓவியமாய் ஒரு புன்னகை சிந்தினார்.
* முதல்வருக்கு மனு கொடுக்கலாம் என்றிருக்கிறேன். வளைத்து வளைத்து பிடித்து கேஸ் போட்டும் நில அபகரிப்புக் கூட்டமொன்று பதிவராகவோ/ட்வீட்டராகவோ/ஃபேஸ்புக் பயனாளராகவோ வளைய வருகிறது. குறைந்தது மூன்று பேராவது என் பின்மண்டையை புகைப்படம் எடுத்ததைப் பார்க்கும்போது அசந்தால் கடைக்கால் தோண்டி வணிகவளாகம் கட்டிவிடுவார்கள் போலிருக்கிறது
32 comments:
அருமையான பதிவு.
நல்ல விமர்சனம்.
நன்றி ஐயா.
nice write up , thanks
சார் சி(ற)ரிப்பு சாப்பாட்டு பதிவாக வந்திருக்கு. புகை படங்கள் நிறைய எடுதீங்கலே. ஏன் போடலை?
அதான் எல்லாரும் போட்டுட்டாங்களே:))
நெடுநாட்கள் பின்னர் உங்கள் பதிவினை பார்த்த திருப்தி. அருமை ஐயா.
ஒருத்தர் முட்டை தோசை பாதிவரை தின்ன ரகசியத்தச் சொல்லவேயில்ல!
/ஒருத்தர் முட்டை தோசை பாதிவரை தின்ன ரகசியத்தச் சொல்லவேயில்ல!//
கற்பழிச்சிடீங்களேய்யா:(((. ஓரமா தின்னா பாதி தின்ன கணக்கா:))))
கூட்டம் அதிகமாகிவிட்டதால் என்னால் எல்லோரையும் சாவகாசமாக சந்தித்து அளவளாவ முடியாமல் போனது மிகவும் வருத்தமே.
குறைந்தது மூன்று பேராவது என் பின்மண்டையை புகைப்படம் எடுத்ததைப் பார்க்கும்போது அசந்தால் கடைக்கால் தோண்டி வணிகவளாகம் கட்டிவிடுவார்கள் போலிருக்கிறது
உங்கள் குறும்பை ரசித்தேன்.
ஆசானே என்ன தவம் செய்தனை... ரெண்டு மூணு காமிரா வெச்சிக்கிட்டு டிசைன் டிசைனா போட்டு எடுத்து அமெரிக்காக்கு அனுப்புனது நீங்கதான்.ஆகையால் இன்னொரு பதிவு புகைப்படங்களோடு எழுதவும்.
இந்த வர்ணனையை வாசிக்க மூன்று மாதம் காத்திருந்தது மட்டுமில்லாமல் ஒரு சங்கமமும் நடத்த வேண்டியிருக்கிறது. உவமைகள் (eg. teaching bible to pope, solid lk antartica )asaththal . அடிக்கடி எழுதுங்கள் ஆசான்
//என் பின்மண்டையை புகைப்படம் எடுத்ததைப் பார்க்கும்போது அசந்தால் கடைக்கால் தோண்டி வணிகவளாகம் கட்டிவிடுவார்கள் போலிருக்கிறது//
நகைச்சுவையான பதிவில் மணிமகுடம்....
சங்கமத்தில் நடந்த விஷயங்கள் உங்கள் வார்த்தைகளில் அருமை...
இது சாப்பாடு பிரிவா? நல்ல நகைச்சுவையுடன் சொல்லி இருக்கீங்க போட்டோலாம் ஏன் வல்லே?
//குறைந்தது மூன்று பேராவது என் பின்மண்டையை புகைப்படம் எடுத்ததைப் பார்க்கும்போது அசந்தால் கடைக்கால் தோண்டி வணிகவளாகம் கட்டிவிடுவார்கள் போலிருக்கிறது//
:))))
"சங்கமம்" பற்றிய எழுதிய பதிவுகளில் வேறுபாடு காட்டி ரசனையோடு சாப்பிட (மன்னிக்கவும் ) வாசிக்க வைத்து விட்டீர்கள். அடிக்கடி எழுதலாமே!
//ரெண்டு மூணு காமிரா வெச்சிக்கிட்டு டிசைன் டிசைனா போட்டு எடுத்து அமெரிக்காக்கு அனுப்புனது நீங்கதான்.ஆகையால் இன்னொரு பதிவு புகைப்படங்களோடு எழுதவும்.//
Repeattu !!
ஐயோ நான் நிஜமாலுமே முட்டை சாப்பிடற சைவமுங்கோ
சுவையான பதிவுன்னு தான் சொல்லணும் இல்லையா....போட்டோக்கள் இல்லாதது குறைதான்.
ரொம்பவும் மிஸ் பண்றேன் ஆசான், வராததற்கு... உங்கள் பாணியில் கலக்கல் விமர்சனம்... ஆசான் ராக்ஸ்...
பிரபாகர்...
விட்டுட்டு போய்டீங்கள்ல... கிர்ர்ர்ர்ர்ர்
ஜெய் ஜாக்கி :))
சோறு திங்கறதல்லாம் எப்ப பாத்தீங்க.. ஆனாலும் அதகூட ஒரு இலக்கிய பார்வையோட பாத்திருக்கீங்க பாருங்க.. அங்கதான் ஒரு முழு இலக்கியவாதியா நீங்க நிக்கறீங்க..
இருக்கேளா!
அய்யா ஒரு நிறைவு வருதைய்யா.... உங்க பகிர்வை படிக்கையில்.... இதுபோன்ற தருணம் எனக்கு வாய்க்கவில்லை என்ற ஏக்கம் வருதைய்யா.
நன்றிங்க ரத்னவேல்,ராம்ஜி,மோகன்குமார்,ராதாகிருஷ்ணன்,கந்தசாமிசார், ரிஷபன்,கதிர்,ம.ரா,மஹிக்ரானி,வெங்கட் நாகராஜ், லக்ஷ்மி,டிவிஆர்சார்,ரூஃபினா,வேலு, ஸ்ரீராம்,ப்ரபா,அப்துண்ணே,செந்தில்,பாலாசி,கருணாகரசு:)))
/ராஜ நடராஜன் said...
இருக்கேளா!/
இருக்கேனேண்ணா:)))
அதெப்பிடீங்க நாங்க சாப்புடறதை நாங்க கவனிக்காமலே பாத்திருக்கீங்க.. இது தான் கேரக்டர் கவனிப்பா?.. கலந்து சிறப்பித்தமைக்கு எனது மகிழ்சியும் நன்றியும்.
கடைசி வரியில் ‘பாலா’ அண்ணா ஒளிர்கிறார்.
அது சரி..முன் மண்டை என்ன பாவம் செய்தது? அதில் லைப்ரரி சாரி..ஆஸ்பத்திரி கட்டலாமே? கோச்சுக்காதீங்க சர்.. நான் என்னய சொன்னேன்....
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
// முதல்வருக்கு மனு கொடுக்கலாம் என்றிருக்கிறேன். வளைத்து வளைத்து பிடித்து கேஸ் போட்டும் நில அபகரிப்புக் கூட்டமொன்று பதிவராகவோ/ட்வீட்டராகவோ/ஃபேஸ்புக் பயனாளராகவோ வளைய வருகிறது. குறைந்தது மூன்று பேராவது என் பின்மண்டையை புகைப்படம் எடுத்ததைப் பார்க்கும்போது அசந்தால் கடைக்கால் தோண்டி வணிகவளாகம் கட்டிவிடுவார்கள் போலிருக்கிறது//
ஹா...ஹா..ஹா.
அருமை ஐயா... அற்புதம் ஆசானே...
mmm....kalakkureenga aasanee
உங்க அளவுக்கு வருமா மொதலாளி:))
Post a Comment