ஈரோடு சங்கமம் குறித்து எல்லாரும் பதிவிட்டு விட்டார்கள். நான் பிந்தங்கிப் போனேன். ஆஃபீஸ் ஆணி அதிகமிருந்தது ஒரு பக்கம் என்றாலும், ஓசி பாஸ் இருந்தாலும் எனக்கென்று ரிசர்வ் செய்தால் கக்கூஸ் பக்கத்து சைட் பர்த், இல்லாவிட்டால் மூனு இஞ்ச் கேப்பில் மூஞ்சியில் ஏசி அடிக்கும் மேல் பர்த்தான் கிடைக்கும். சுக்கிரன் ஏழில் இருந்து அஞ்சாம் இடத்து சூரியனைப் பார்ப்பானேயாகில் வெயிட்டிங் லிஸ்ட் ஈக்யூ போட்டாலும் கன்ஃபர்ம் ஆகாது. பட்டா பாக்கியம் காலி இருந்தால் ரிஸர்வ் செய்யலாம் என்று போக, போக ஏற்காட்டில் ஏஸியும் வர கோவையில் செகண்ட் சிட்டிங்கும் இருக்க (நான் பார்த்தபோது 55 காலி இடங்கள்) ஏற்காடு ரிஸர்வ் செய்து கோவைக்கு ரிசர்வ் செய்யும்போது வெயிட்டிங் லிஸ்ட் ரண்டு என்று வந்தது. ஆனாலும், கிளம்பும் அன்று கன்ஃபர்ம் ஆகிவிட்டதால் கிளம்பிவிட்டேன்.
சொல்லி வைத்தாற்போல் கக்கூஸ் பக்கத்து சைட் பர்த் எனக்கே எனக்கு. கொஞ்சம் படித்துவிட்டுத் தூங்கலாம் என்றிருக்க, தலைக்கு வைத்திருந்த கம்பளியிலிருந்து குட்டி குட்டியாய் மூன்று கரப்பான் பூச்சிகள் வாக்கிங் கிளம்பின. ஈரோடு சங்கமம் போகுமுன் என் காதுக்குள் சங்கமமாகி விடாமல் விடிய விடிய அந்தக் குட்டிக் கரப்பான் பூச்சிகளைக் கண்விழித்துக் காத்தேன். பெத்துப் போட்ட மூதேவி பெரிய கரப்பான் பூச்சி எங்கே கிடந்து தூங்கியதோ தெரியவில்லை.
முதல் சங்கமம் முடிந்ததும் ஆடியோவோடு பதிவிட்டது நாந்தான். இந்த முறை பழமைபேசி கேட்டிருந்தும், என்னிடம் ஐஃபோன் இருந்தும் ரிக்கார்ட் செய்யவில்லை. காரணம் பிரபல எழுத்தாளர் பாலாசி. போன முறை பள்ளிபாளையம் கோழி வாங்கித் தருகிறேன் என்று ஏமாற்றியதோடல்லாமல், ஸ்டேஷனிலிருந்து வரும்போதே பார்த்தேன் என்று கண்டுக்காமல் விட்டதுமில்லாமல் சொல்ல வேறு செய்தார். சங்கமம் நடைபெறும் அரங்குக்கு கதிரோடு வந்து சேர்ந்தேன். ங்கொய்யால திருவிழாக் கூட்டத்தில் தொலைத்தாற் போல் கழட்டி விட்டு அரங்க அமைப்பைப் பார்க்கப் போய்விட்டார். ஒரு பார்வை பார்த்துக் கொண்டு வந்து, வாங்க டிஃபன் சாப்பிடலாம் என்று உத்தரவு போட்டார். எனக்குப் பசிக்கிறதா என்று கேட்காமல் வாங்க சாப்பிடலாம் என்று உத்தரவு போட்டதில் கதிரின் டிஃபனாதிக்கப் பூனைக் குட்டி வெளியே தெரிந்தது.
ஆனாலும், டிஃபனுக்குப் போய் உட்கார்ந்தேன். எனக்குப் போட்ட இலையின் முனை சுருண்டிருந்தது. வலது பக்க ஓரம் வாழைப்பால் கறை வேறு. ஈரோட்டில் வாழைக்கா பஞ்சம்? அடுத்த முறை முதல் நாளே வாழை இலை வாங்கி வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து, இஸ்திரி செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். நான் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் காலை டிஃபன் சாப்பிடுவதில்லை. ஆனாலும் கதிரின் டிஃபனாதிக்கத்துக்கு அடிபணிந்து, சாப்பிட உட்கார்ந்தால், இட்டிலி, வடை, பொங்கல், பூரி என்று வைத்துக் கொண்டு போனார்கள். போறாததற்கு கதிர் தோசை வைங்க என்று ஆளூமை செலுத்தியபோது பொத்தென்று விரல் கனத்துக்கு ஒரு தோசை விழுந்தது. ஓரம் பிய்த்து சாப்பிட்டு, நடுவில் விரல் வைக்க ரொட்டி மாதிரி அமுங்கியது. ஒரு டவுட்டில் பிரித்துப் பார்த்தால் மஞ்சளாக ஒரு கோட்,. அண்ணே, என்னாதிது என்றால் முட்டை தோசையாம்.
தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். குறையாகச் சொல்லவில்லை. அடுத்த முறை இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் சொல்கிறேன். கலியாணத்தில் அப்பளத்தில் மணமகன் பெயர் மணமகள் பெயர், நன்றி போட்டு வறுத்தெடுக்கிறார்போல் முட்டை தோசையில் முட்டை தோசை என்று எழுதி இருக்கலாம். செய்வார்கள் என்று நம்புகிறேன். சாப்பிட்டு முடித்ததும் திரும்ப கதிர் அரங்குக்குப் போய்விட்டார்.
அரங்கத்தில் கழிப்பறை எந்தப் பக்கம் என்று கண்ணில் படாததால் (நோட் திஸ் ஆல்ஸோ யுவர் அமைப்பாளர்ஸ்) நானே தேடிக் கண்டு பிடிக்க வேண்டியதாயிற்று. மணிஜி, வாசு, மயில், இவர்களுக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு அப்படியே ஓரம்கட்டினால், பிரபல ஃபோட்டோக்ராஃபர், பிட் நாயகன் (ஓய் BIT இல்லை PIT) ஜீவ்ஸ் ஏற்கனவே ஒரு அடிக்கு இருந்த அட்டாச்மெண்டைக் கழட்டி கையில் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு மற்ற அட்டேச்மெண்ட் மாற்ற உதவியபோது தெரியவில்லை. யுவர் ஹேண்ட் யுவர் ஐ பாலிசி என்பது. வளைச்சு வளைச்சு என் மண்டையை ஃபோட்டோ எடுத்திருக்கிறார். (உசாரா பாத்து சொல்லுங்கப்பு, எங்கயாச்சும் ஃபோட்டோ போட்டில சூரியன் க்ளோஸ் அப் ஷாட்டுனு பரிசு கிடைச்சா பங்கு கேக்கணும்)
சரி இனம் இனத்தோடே சுரக்குடுக்கை ஆத்தோடே என்று தருமி சார் பக்கமாகப் போய் நின்றேன். மாத்தி மாத்தி அய்யா அய்யா என்று யாரோ ஒருவர் வரவும் முந்தின இடுகையில் சொன்னாற்போல் ஒருவருக்கு ஒருவர் ஆற்றுப் படுத்திக் கொண்டோம். மெதுவாக மொட்டை வாசு, எம்மின கா.பா என்று வட்டமாக நின்று பேச எங்களை வைத்து லென்ஸ் டெஸ்ட் செய்திருக்கிறார் ஜீவ்ஸ். ஒரு வழியாக அரங்கத்துக்குச் செல்ல, ஐ.டி கார்ட் பொறுப்பாளராக பாலாசி. பயபுள்ளைக்கு ஆளைப்பார்த்தும் கண்டுக்கலையே என்று கார்டில் பேர் எழுதி மாட்டியதும், ‘அல்லோ! புடிங்க கேமரா. இதுலயும் படம் எடுக்கணும்’ என்று உத்தரவாயிற்று. எழுத்தாளர் சொன்ன பிறகு தட்ட முடியுமா? உவர் மோஸ்ட் ஒபிடியண்ட்லி என்று படம் எடுத்துக் கொண்டிருக்க என் மண்டையை யாரையோ விட்டு படமும் எடுத்து பஸ்ஸும் விடுது பயபுள்ள.
நான் வந்து அவ்வளவு நேரமாகியும் முதலாளியின் தரிசனம் கிடைக்கவில்லை. முட்டை தோசை திங்கவா அவ்வளவு தூரம் வந்தோம்? முதலாளி முன்னே நிற்க வேண்டாமா? முதலாளியின் சின்ன மகன் ஒரு டெர்ரரிஸ்ட் என்று தெரியும்தான். ஆனாலும், குரு சுக்கிரனைக் கோணப்பார்வை பார்க்கும் ஜாதகத்தில் பிறந்த ஒருவன் தப்ப முடியுமா? சும்மா ஓடிக்கொண்டிருந்தவரை பிடித்து இழுத்து, என்னைத் தெரியுதா என்றேன். தலையை லேசாக மேலே சாய்த்து, ஆள்காட்டி விரலால் விரலைத்தட்டி ஒரு யோசனை போஸ். கண்ணில் ஒரு மின்னல். “அய்ங். தெரிஞ்சிரிச்சு!!! எங்க வீட்டுக்கு ஏஸி மாட்ட வந்தீங்க! 18ல வச்சிங்கன்னு” அடுக்கடுக்கா அள்ளி விடுது சின்ன ஆரூரரன். ‘அடேங்கப்பா! ஆள விட்றா சாமி’ என்று எஸ்ஸாகி நிற்க நெடு நெடு என்று ஒரு உருவம். ‘வானம்பாடி அண்ணந்தானே, நான் யார் தெரியுதா?’ என்று ஹேண்ட் க்ரனேட் வீசியது.
‘பிட் அடிச்சி மாட்டின பார்வையோடு’ தத்தித் தத்தி சௌம்யன் என்று குத்து மதிப்பாக இழுக்க, ‘அது எங்கண்ணன், நான் அபி அப்பா’ என்று சொன்னார். ‘அட கெரகமே! சப்புனு அப்புனா தலை தனியாப் போறாமாதிரி ஒரு உருவத்த வச்சிக்கிட்டு அப்து அண்ணன், இந்த மனுசன் கொஞ்சம் காத்தடிச்சா, புடிங்க புடிங்கன்னு கத்துறா மாதிரி இருந்துகிட்டு பஸ்ஸுல ப்ளஸ்ஸுல என்னா சவுண்டு?’ன்னு கிறுகிறுன்னு வந்துச்சு. அப்புறம் ஒன்னு ரண்டு தெரிஞ்சவங்க கூட பேசிட்டு, ஒரு ஓரமா உட்கார்ந்தேன். என்னை யாருக்கும் தெரியாததாலும், எனக்கும் யாரையும் தெரியாததாலும், மனுசன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகப்படாதா? ரயில்ல தூங்காத தூக்கம் தொத்திக்கிச்சி. அடுத்த முறை இப்படித் தூங்குபவர்களை இனம் கண்டு முகத்தைத் துடைத்துக் கொள்ள வெட் டிஷ்யூ ஏற்பாடு செய்வார்கள் என்று நம்புகிறேன்.
அப்புறம் பரிசளிப்பு விழா கைத்தட்டலில் கண் விழித்து, நானும் கைதட்டி, நடுவில் கிடைத்த கேப்பில் தூங்கி, எல்லாப் பந்தியும் கடந்து இனியும் தாமதித்தால் ட்ரெயின் பிடிக்க முடியாது என்ற நிலையில் சாப்பிட்டு, கிளம்ப, திரும்ப கதிரைப் பார்த்தபோது எக்ஸிபிஷனில் காணாமல் போய் போலீஸ் பூத்தில் இருந்த குழந்தை பெற்றோரைப் பார்த்ததுபோல் அழுவாச்சியும் சிரிப்பாச்சியுமாய் இருந்தது. விழா சிறப்பாக நடந்தாலும் சிறு குறைகள் இருக்கத்தான் செய்தன. இந்தக் குறைகளும் அடுத்த சங்கமத்தில் இருக்காமல் இருப்பதற்காக அவற்றைக் குறிப்பிடுகிறேன்.:
* கூகிள் ஆர்க்குட், ஹைஃபைவ் உபயோகிப்பாளர்களைச் சேர்க்காமல் விட்டது தவறு.
* என்னதான் வளைச்சு வளைச்சு எழுதினாலும் பின்னூட்டம் இல்லாத இடுகை பாழ் அல்லவா. எனவே பின்னூட்டாளர்களையும் அழைக்க வேண்டும்.
*டிப்பன், சாப்பாடு மெனு கார்ட் மற்றும் முன்கூட்டியே கொடுத்து விட்டால் தேவைக்கேற்ப டிஃபனையோ சாப்பாட்டையோ ஒரு பிடி பிடிக்க வசதியாய் இருக்கும்.
*அடுத்த சங்கமத்துக்கு ஒரு மாதம் முந்தியே அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபோட்டோவோடு வாங்கி தளத்தில் வெளியிட்டு, பக்கத்திலேயே பி.ப,பு.ப,ர.கெ.ப,ட்,ஃப்,ப், என்று அடையாளக் குறியிடுவது புதுமையாக இருக்கும்.
*என்னதான் கவனமெடுத்துச் செய்தாலும் எப்படியோ யாருக்காவது ஒரு குறை இருக்கும் என்பதால் குழுமத்தினர் அனைவரும் ‘குறை இருந்தா மன்னிச்சுக்குங்க, அடுத்த முறை இன்னும் சிறப்பாச் செய்யுறோம்’ அப்படின்னு சொல்றது நல்லாருக்கும். அம்புட்டு தூரம் வந்து காட்டுன விடுதில தூங்கி, அது வேணும் இது வேணும்னு கேக்காம குடுத்தத சாப்பிட்டு, அவிங்க இஷ்டத்துக்கு அமைச்ச நிகழ்ச்சியப் பார்த்து கைதட்றமே. இது கூட செய்யலன்னா எப்புடி?

30 comments:
வி.வி.சி வயிறு வலிக்குதுடா சாமி...
மொதலாளியக் கிண்டாம வுட்டுட்டீங்களே??
அவுரு கண்ணுலயே தெம்படலீங்க:))
உங்க பாணியில் பின்னி பெடலெடுத்திருக்கீங்கண்ணே!
சங்கமம் உங்கள் பாணியில் அருமை...
ஆங்காங்கே நகைச்சுவை தெளித்தது நன்று....
ஹெவியா சாப்புட்டனே எப்படி தூங்குறதுன்னு கவலையோட இருக்கும்போது படிச்சேன். சிரிச்சு சிரிச்சு வயிறு ஃப்ரீயாச்சு :)))
//எம்மின கா.பா என்று //
பாவமுங்க அந்த ஆளு .. அவரையும் நம்ம செட்ல சேத்துக்கிட்டு... உட்ருங்க!!
/தருமி said...
//எம்மின கா.பா என்று //
பாவமுங்க அந்த ஆளு .. அவரையும் நம்ம செட்ல சேத்துக்கிட்டு... உட்ருங்க!!/
அவரே அடாவடியா அப்ளிகேஷன் போட்டு சேந்துட்டாரே சார். ஜீவ்ஸ் ஃபோட்டோல நம்மளுதவிட அவரு தலல்லா டாலடிக்கிது:)))
ஆஹா...
ஆசானே அதகளம்....
:))
வி.வி.சி வயிறு வலிக்குதுடா சாமி//
:))
இம்புட்டு விசயங்க நடந்துச்சா? எனக்கு ஒண்ணுமே கண்ணுல படலியே!
ஆசான்... சிரிச்சி மாளல... பஸ்ஸில் வரும்போதே கமெண்ட் பண்ண ஐ போன் சப்போர்ட் பண்ணல...
கரப்பான் பூச்சி மேட்டர் கண்ணீரில் நீர் வரவழைத்தது... பக்கத்தில் இருப்பவர் என்னை சந்தேகத்தோடு பார்க்குமாறி சிரித்தவாறே படித்து வந்தேன்.
பிரபாகர்...
காலையில ஏன் பைத்தியம் மாதிரி சிரிக்கிறீங்க? வீடே என்னை வேடிக்கை பாக்குது.
தலைக்கு வைத்திருந்த கம்பளியிலிருந்து குட்டி குட்டியாய் மூன்று கரப்பான் பூச்சிகள் வாக்கிங் கிளம்பின. ஈரோடு சங்கமம் போகுமுன் என் காதுக்குள் சங்கமமாகி விடாமல் விடிய விடிய அந்தக் குட்டிக் கரப்பான் பூச்சிகளைக் கண்விழித்துக் காத்தேன். பெத்துப் போட்ட மூதேவி பெரிய கரப்பான் பூச்சி எங்கே கிடந்து தூங்கியதோ தெரியவில்லை.
கண்ல தண்ணீர் வருது...
:)))
அண்ணே இந்தமாதிரி வயிறு குலுங்க சிரிச்சு ரொம்பநாளாச்சு.
//முட்டை தோசையில் முட்டை தோசை என்று எழுதி இருக்கலாம்//
நல்ல ஐடியா.யாருக்காச்சும் தோணுச்சாப்பா..?
அடுத்தமுறை பாருங்க எல்லாத்திலயுமே எழுதி வெச்சுடுவாங்க.
:)))))))
இதுக்கு தான் இதுக்கு தான் இதுக்கு தான் உங்களை எழுத சொன்னது. அதகளம் !!
அப்புறம் ஆபிசர் சார். நாங்க டிரையினில் போகும் போதும் எப்பவும் டாயலட் அருகில் தான் பர்த் கிடைக்குது. இதில் ஏதாவது சதி இருக்குமா? :))
கரப்பான் பூச்சி மேட்டர்ல பிடிச்ச சூடு கடைசி வரை குறைவில்லாமல் சென்றது!
தப்பே இல்லை......உங்களை ஆசான் என்று கூப்பிடுவதில் தப்பே இல்லை!
இந்த எழுத்துதான் உங்கள் அடையாளம், நேரில் பார்த்தால் ரொம்ப அமைதி :)
நன்றி அண்ணா...
அப்படிப்போடுங்க... :-)
சூப்பர் அண்ணா!! இந்தப்பதிவை அபி அப்பாவுக்கு டெடிகேட் செஞ்சிருங்க:-))
திருட்டுத்தனமா முட்டத் தோசைய தின்னுபுட்டு நீங்க முழிச்ச முழி சூப்பர்ண்ணே! :)
புத்தாண்டு வாழ்த்துகள் பாலா சார். :))))
நன்றி சரவணா. உங்களுக்கும் என் வாழ்த்துகள்.
haa......haa....
நன்றிங்க வெயிலான்,வெங்கட் நாகராஜ்,ராஜா, தருமி,கும்க் கி, இளா, கந்தசாமிசார்,ப்ரவு,ஜோதிஜி,டி.வி.ஆர். சார்,ரவி,மோஹங்குமார்,ஸ்ரீராம்,சிவா,ராஜா,மணிஜி,மொதலாளி
/ kathir said...
திருட்டுத்தனமா முட்டத் தோசைய தின்னுபுட்டு நீங்க முழிச்ச முழி சூப்பர்ண்ணே! :)/
அடிங்:)) பண்றதையும் பண்ணிட்டு லொல்லு வேறயா?
Super Sir :)))
அண்ணே.. நீரு பெரியமன்சன்...!!!
கலக்கிப்புட்டீர்...
அறுசுவை நகைச்சுவை சார்.
"/ kathir said...
திருட்டுத்தனமா முட்டத் தோசைய தின்னுபுட்டு நீங்க முழிச்ச முழி சூப்பர்ண்ணே! :)/
அடிங்:)) பண்றதையும் பண்ணிட்டு லொல்லு வேறயா?"
மதியம் தயிர் சாதத்திலும் ஏமாத்தலையே ?
:-))
Post a Comment