Tuesday, August 4, 2009

அறிவிப்பேய்.

வணக்கம். இன்னையிலிருந்து பாலா ரெண்டு புள்ளியாகிய நான் பாமரன்னு பேர மாத்திக்கிட்டேன். நேமாலஜில பேர மாத்திகிட்டா பிரபல பதிவராகிடலாம்னு சொன்னாங்களான்னு எல்லாம் நக்கலடிக்கப்படாது. இன்னோரு மூத்த பதிவர் பாலா இருக்காங்களா. பேறேன்னன்னா பாலாரெண்டுபுள்ளின்னு சொல்லணும். அதான் குழப்பம் எதுக்குன்னு. அதுமில்லாம வலைச்சரத்துல பழமை நம்மள அறிமுகம் பண்ணி இருக்காங்க. பின்னூட்டம் பார்த்தா கொஞ்சநாளா நம்ம திண்ணைக்கு வராததால ஆ.ஞானசேகரன் ஐயாக்கே பாலாண்ணன்னா யாரோன்னு நினைச்சிட்டாங்க. பாமரன்னா பளிச்சுன்னு கவனம் வரும் பாருங்க. அதான். ஹிஹி

Monday, August 3, 2009

கை போனாலென்ன நம்பிக்'கை' இருக்கும் வரை



எனக்குள் நான் கண்ட என் திறமை உலகில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கிறது என நம்பச் செய்கிறது. ஒவ்வொருவரும் தனக்குள் ஏதோ ஒரு திறனை அடையாளம் காண முடியும்.. டக் லான்டிஸ்.

இந்தப் படங்களை வரைந்தவர் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டக் லான்டிஸ். 15 வயதில் உயர் நிலைப் பள்ளியில் மல்யுத்தப் போட்டியில் கழுத்தின் கீழ்ப்பகுதிகள் செயலிழந்தவர். தொலைக்காட்சி பெட்டிமுன் அதிக நேரம் செலவழிப்பதைக் கண்ட இவர் சகோதரர் மான்டி படம் வரைய போட்டி போட அழைத்து வாயில் பென்ஸிலை வைத்த நேரத்தில் தொடங்கியது தேடல். மிகப் பொறுமையாக தனக்கேயுரித்தான பாணியை வளர்த்துக் கொண்ட இவரின் படங்கள் பிரமிப்பூட்டுகின்றன. குறிப்பாக கண்களும், உடலமைப்பும்.

இறைவனோ இயற்கையோ ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் என்னவெல்லாம் ஒளித்திருக்கிறது! அடையாளம் காணாமல் நாம் தான் தொலைக்கிறோம் போல.

மற்ற ஓவியங்களைக் காண காணொளியை சொடுக்கி முழுத்திரையில் கண்டு பிரமியுங்கள்:


Doug Landis



இவரின் பேட்டியைக் காண இங்கே சொடுக்கவும் :
http://www.mouthart.com/mouthart/frame_info.html

லாண்டிஸ் வரைந்துக் கொண்டே அளிக்கும் பேட்டி:




***

Sunday, August 2, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 84

தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வுத் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை: மகிந்த ராஜபக்ச

இத ஏண்டா அப்பப்ப சொல்லுறது. எப்போதைக்கும் இல்லைன்னு தெரியுமே. காசு வேற வந்தாச்சி. அடுத்த பிச்சை வரைக்கும் மறந்துடலாம்.
________________________________
'இலங்கையில் நடந்தது இந்நூற்றாண்டின் மிகப் பெரிய படுபாதகச் செயல்!': உலுக்கும் உலக நீதிமன்றம்!

இதக்கூட சொல்லலைன்னா எப்படி? ஆவணத்துக்காக சொன்னதா? போங்கைய்யா.
________________________________
நாணய நிதியம் கடன் கொடுக்கத் தவறியிருந்தால் நட்பு நாடுகள் இலங்கைக்கு உதவியிருக்கும் ஒரு தொலைபேசி அழைப்பே போதும் என்கிறார் இந்தியப் பிரதிநிதி

கூட்டுக் களவாணிங்களாச்சே. கொடுக்கலைன்னா போட்டுக் குடுக்க மாட்டானா? தொலைபேசில அவன் ஏன் அழைக்கிறான். நீங்களே தினம் அழைச்சு வேணுமா வேணுமான்னும் குடுக்கலாம்.
________________________________
இலங்கையில் 'சமஷ்டி' போன்றே 'அதிகாரப் பகிர்வு' என்ற சொல்லும் காணாமல் போய்விடும்: கேணல் ஹரிகரன்

அதற்கு முன் தமிழினமும் காணாமல் போகலாம்.
________________________________
"போராட்டம் முடிவுக்கு வரவில்லை, போராட்ட வடிவத்தையே மாற்றியுள்ளோம்": 'த வீக்' வார இதழுக்கு பத்மநாதன் பேட்டி

மாத்துறீங்களா ஏமாத்துறீங்களா? தெரியலையேப்பு.
________________________________
நிலைமையை இலங்கை கையாள்வதற்கு இந்தியா மிகவும் ஆதரவாக இருக்கிகிறது:பாலித கோஹண

லீசுக்கு குடுத்துட்டீங்களா? கூடிய சீக்கிரம் எங்களுக்கு ஒண்ணும் தெரியாது. அவங்கதான் பண்ணாங்கன்னு சொல்லிடுவான்.
________________________________
உயிருடன் உள்ளார் பொட்டுஅம்மான்: உறுதிப்படுத்தும் இலங்கை ராணுவ புலனாய்வு பிரிவு

கூடிய சீக்கிரம் மத்ததையும் ஒத்துக்குவானுங்க.
________________________________
ராஜினாமா செய்யப்போவதில்லை பூட்டா சிங்

பதவியில் இருக்கிறப்பவே புடிச்சிட்டாங்களாம். பதவியை விட்டா புள்ளைய எப்படி காப்பாத்தறது? மாட்டாம வாங்க சொல்லிக் கொடுக்க மறந்து பூட்டசிங்.
________________________________
ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் மசாஜ் செய்யும் கிளப்புகள் நடத்த தடை இல்லை: ஐகோர்ட்டு

தெருவுக்கு தெரு ஆரம்பிச்சிடுவாங்க. அரசே டாஸ்மாக் மாதிரி ஆரம்பிக்கலாம்.
________________________________
நடிகர்களை ரோல் மாடலாக ஏற்பதா? விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வேதனை

மாடலா இருந்தா நடிகையாவக சுலபம்னு நினைச்சிட்டாங்க போல.
***