Saturday, May 2, 2009

என்ன செய்யப் போகிறோம்?

  • இராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள், மருந்துக்கு வழியில்லாமல் வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள். மதிய வேளைகளில் இராணுவத்தினர் வரும்போது, 'ஆமி மாமா, சோறு போடுங்க...' என முகாம் குழந்தைகள் பசி மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்து விடும்! பாவம், பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு, எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என எப்படித் தெரியும்?
  • அதிலும் சில குழந்தைகள், கொடுக்கப்படும் ஒருவேளை சாப்பாட்டையும் கூட வற்புறுத்திக் கொடுத்தாலும், சாப்பிடாமல் பித்துப் பிடித்துத் திரிகின்றன.
  • சிங்களர்களின் அந்தரங்க சொர்க்க புரியாக அரசாலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் அனுராதபுரத்தில், இது நாள் வரை தமிழ் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் இல்லை. ஆனால், இப்போது ஈழத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பதின்மூன்று வயதுப் பெண் குழந்தைகள் பலர், அங்கே விபசார வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • அடுத்த தலைமுறைப் பிஞ்சுகளும் எங்கே உரிமைக் காகப் போராட கிளம்பி விடுமோ என்ற பயத்தில் சிங்கள இராணுவம் நடத்துவது, 'இனப் படுகொலை' மட்டுமல்ல... 'ஈனத்தனமான படுகொலை'யும் கூட!
ஜூனியர் விகடனில வந்த கட்டுரையில் இருந்த சில விடயங்கள் மட்டுமே இது. இதெல்லாம் யார் கண்ணிலுமா படாது? நம் நாட்டிலேயே அடிப்படைக் கட்டமைப்பு , மருத்துவ நிலையங்கள், பள்ளிகள் என பல தேவைகள் இருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை விளிம்பில் இருக்கும்போது 1500 கோடி ரூபாய் கடன் கொடுத்தாவது அடுத்தவன் அழிக்க வழி காட்டியது எந்த வகையில் சரி. கொல்லப்பட்ட மக்கள் எத்தனை? தீவிர வாதிகள் எத்தனை பேர்? போருக்கு வழி சொல்லும் இறையாண்மை காப்பாத்தவோ போர்நிறுத்தவோ தடையாகி விடுமாம்.

போனதெல்லாம் போகட்டும். போரை நிறுத்தச் சொல்ல வேண்டாம். நம்பி வந்த மக்களை இந்தக் கொடுமைக்காளாக்கும் அரசு இவர்களின் நல வாழ்க்கைக்கு என்ன செய்துவிடும்? தொண்டார்வ நிறுவனங்களை சேர்க்க மறுக்கும் அரசு எந்த விதத்தில் இவர்களை வாழ வைக்கும். இதை எல்லாம் யோசிக்காமல் ஆளாளுக்கு பாய்ந்து நல வாழ்வுக்கு கோடி கோடியாய் கொடுப்பது சரியா?

தொலைபேசியில் போரை நிறுத்த முடிந்த கனவான்கள் பொது நிறுவனங்களுக்கு அனுமதி பெற முடியாதா? தனி ஈழமோ ஐக்கிய கட்டமைப்போ என்ன இழவோ இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன விதத்தில் பயன் படப் போகிறது. குறைந்த பட்சம் தோழமைக் கட்சிகள் தோளில் கை போட்டோ, எதிர் கட்சிகள் துண்டு போட்டோ ஒற்றுமையாக ஏதாவது வழி காணத்தான் வேண்டும். ஒத்தைப்பால ரெட்டையர்களின் தலையீடின்றி இந்தியாவின் நேரடிப் பொறுப்பில் இவர்களுக்கு வழி காட்டும் கடமை இருக்கிறது.

அதற்கு முன்னால் இங்கு அகதிகள் என்றும், ஏதிலிகள் என்றும் பெயர் கொடுத்து முகாமில் அடைத்து வைத்திருக்கும் நம் மனசாட்சிக்கும் பதில் சொல்லி ஆக வேண்டும். வேறெங்காவது நம் உறவுகள் இப்படித் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்களா? புலம் பெயர்ந்த தமிழர்கள் என்று கூட சொல்ல முடியாது. தன் நாட்டை நம்பி வந்தவர்கள் இவர்கள். இவர்களால் வாழும் திரை உலகம் மனது வைத்தாலே இவர்கள் வாழ்வு தொடங்கும்.

செய்வோமா?
***

Friday, May 1, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - 38

அரசியல் காரணத்துக்காக இலங்கை போர் நிறுத்தம் பொய் என வதந்தி பரப்புகின்றனர் என்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்

யுத்த நிறுத்தம் செய்யவுமில்லை, செய்யப் போவதுமில்லை:மஹிந்த. தப்பா சொல்லிட்டாரு பரதேசி. பொய்னு சொன்னத மட்டும் தூக்கிட்டா இவனுங்களுக்கு சரியாப் பொருந்தும்.
_______________________________________________
மற்றொரு நாட்டுக்கு ராணுவத்தை அனுப்ப முடியுமா? குலாம் நபி

சொக்குவ கேளு! மவனே ராஜீவ்‍ஜெயவர்தனா ஒப்பந்தம்னு வாய தொறந்தா தெரியும்.
_______________________________________________
ஈழப்பிரச்சனை பற்றி படம் எடுக்க ஆசை இருக்கிறது;ஆனால் பயமாக இருக்கிறது:கமலஹாசன்

எல்லாம் கல்லா கட்டுறானுங்க. நம்மளுக்குன்னே நாமம் சாத்துவாங்கன்னு பயமா மருதநாயகம்?
_______________________________________________
இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் செயல்கள் ஏற்றுகொள்ள இயலாதது: அமெரிக்கா

எல்லாரும் சொல்லியாச்சி. இவரு ரிபீட்டேய்.
_______________________________________________
பிரபாகரனை விரைவில் பிடிப்போம்: ரோஹித போகலகாமா

ஆமாம். அங்க நம்பி வந்ததில ஒரு பிரபாகரன் இல்லாமலா இருக்கும். புடிச்சிக்க. போயாங்!
_______________________________________________
ராணுவத்தை அனுப்பி தனிஈழம் அமைப்போம்:வைகோ

இன்னும் என்னா அனுப்பறது. துப்பாக்கிய திருப்பிக்கன்னா சரி.
_______________________________________________
இலங்கை பிரச்னையில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் எடுபடாது: ஜி.கே.வாசன்

அவ்வளவு தூரம் கேவலமா நினைச்சிருக்குதுங்க இதுங்க. அண்ட புளுகு புளுகிட்டு அலட்டல பாரு.
_______________________________________________
தேர்தலுக்கு பின் ஈழத்தை பற்றி ஜெயலலிதா பேச மாட்டார்: திருமாவளவன்

ஏன். அதுக்குள்ளயே கதைய முடிச்சுடுவீங்களா? இவனுங்கள நம்பி இப்படியெல்லாமா பேசுவிங்க. தேர்தலுக்குப் பின் உங்களுக்கு தெரும்மான்னு கை காட்டுங்க.
_______________________________________________
தமிழர்கள் தனி நாடு கேட்கவில்லை. விடுதலைப் புலிகள்தான் கேட்கிறார்கள்: சு.சாமி

கர்னாடகால போய் சவுண்டு விடுது. அங்க முட்ட இல்லையா. மவனே! தமிழே ஒழுங்கா பேச வராது உனக்கு. உன்னா இதெல்லாம் பேச விட்டா ஏன் பேசமாட்ட. இங்க வந்து சொல்லி பாருடி.
_______________________________________________
எனக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்: ராஜபக்சே

நீ தறுதலயாச்சே. யாரு சொன்னா கேக்க போற நீ. சொந்த புத்தியும் இல்ல. சொன்ன பேச்சும் கேக்க மாட்ட.
_______________________________________________
மத்திய அரசை எதிர்த்து 8 நாள் தொடர் போராட்டம்: பாரதிராஜா

பிடிச்ச சனி போகட்டும்னா. பண்ணுங்க பண்ணுங்க.
_______________________________________________
ராமதாஸ் அரசியல் வியாபாரி: ஸ்டாலின் தாக்கு

அப்டி போடப்பு. அடுத்த முதல்வர் அட்டகாசமா தயாராவுராரு போல.
_______________________________________________
சென்னை ஐகோர்ட்: இன்று முதல் கோடை விடுமுறை

சாமி! கவனம். ஒளிய இடமில்ல. பொத்திட்டிருந்தா உத்தமம்.
_______________________________________________
3வது அணியின் பதவி ஆசை: சோனியா

இவிங்க ஜெயிச்சா, சே சே பதவில்லாம் யாருக்கு வேணும். மக்கள் சேவைதான்னு இருந்துடுவாய்ங்க.
____________________________________________
சோனியா தொகுதியில் தேர்தலை புறக்கணித்த மக்கள்

அம்மாவும் டவுட்டா? அப்படி போடு.
_______________________________________________
100 இடங்கள் கூட பா.ஜ.வுக்கு கிடைக்காது: காங்.

உன் கத சொல்லு ராசா.
_______________________________________________
தீவிரவாதிக்கு சிக்கன்- எனக்கு சுரைக்காய்கூட்டு: வருண்காந்தி

அரசியல்வாதின்னாலே அடுத்தவனுக்கு என்னான்னு தான் அலையுமா புத்தி.
_______________________________________________

ஏமாறலாம் வாங்க

எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..இந்த பாட்டு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் எமாந்துகிட்டு தான் இருக்கோம். இதில யாரு புத்திசாலித்தனமா எமாந்ததுன்னு பட்டி மன்றம் தான் வைக்கலை. தலைவர்கள் ஏமாத்துறது ஒரு பக்கம்னா சனங்க ஒன்னுக்கு ஒன்னு போட்டி போட்டுக்கிட்டு ஏமாத்துற கொடுமை தாங்கலை. தேர்தல் வரைக்குமாவது இந்த செல் ஃபோன் காரங்க இலவச எஸ். எம். எஸ். ரத்து பண்ணா புண்ணியமா போகும். படிச்ச புண்ணாக்கு, படிக்காத மேதைன்னு வகை தொகை இல்லாம இதுங்க அடிக்கிற கூத்து தாங்கலைடா சாமி.

ஏமாத்து 1: "... கட்சிக்கு வாக்களிக்கவும்" . இந்த தகவலை 16 பேருக்கு அனுப்புங்கள். Rs.274. 49 பைசா உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். இந்த வாய்ப்பை அலட்சியம் செய்ய வேண்டாம். இதற்கான பணத்தை அண்ணன் ....... செலுத்தி விட்டார். எனக்கு உடனே நிலுவைத் தொகை ஏற்றப்பட்டது.

ஒரு பயலும் எந்த கேனயாவது இப்படி பண்ண முடியுமா? நான் ஓட்டு போட சொல்லி தகவல் அனுப்புறனா. ஓணான் பிடிக்க சொல்னான்னு எப்படி தெரியும். 16 தகவல் அனுப்பிட்டேன்னு எப்படி தெரியும். இதெல்லாம் யாரும் யோசிக்கிறதில்லை. சாமி வந்த கணக்கா உடனே தகவல் அனுப்பிட்டு, எட்டு ரூபாய் போச்சுன்னு சொன்னா அசிங்கமேன்னு, ஆமாம் எனக்கும் கணக்கில ஏறிச்சின்னு ஏமாத்துறது. இதுல கூத்து என்னன்னா பின்னால் கட்டணம் செலுத்தும் ஆட்களும் என் கணக்கில கழிச்சிடுவான்னு அனுப்பறது.

ஏமாத்து 2: விடிய விடிய உக்காந்து இந்த பாவிப்பய பக்சே என்ன பண்ணித் தொலையிரானோன்னு அங்க இங்க மேய்ஞ்சி போய் படுத்தா பைத்தியம் புடிச்ச பரதேசிங்க " தமிழருக்கு இன்று ஒரு சோகமான நாள். நச்சு குண்டு போட்டு இத்தனை ஆயிரம் பேரு சாவு. இவர் ஏமாத்திட்டார். இவர் தகவல் சொன்னார். இதுக்கெல்லாம் முடிவே கிடையாதான்னு" புலம்பல். ஐயோ போச்சேன்னு அலறி அடிச்சி, தொலைக்காட்சி (அதில வராதுன்னு தெரிஞ்சும்) கணினின்னு அல்லாடி அப்பாடா அவ்வளவு விபரீதம் நடக்கலன்னு அணைச்சிட்டு போய் படுத்தாலும் என்னாகுமோன்னு ஒரு தவிப்பு.

ஏமாத்து 3: இது நம்மள எமாத்தன்னே பிறப்பெடுத்த கூட்டம். வேற யாரு? தலைவர்களும் பத்திரிகையும்தான். முதல் பக்கத்தில போராட்டம் வெற்றி. இலங்கை பணிந்தது. ஆகான்னு படிச்சி, அப்படியே போனா பதிமூணாம் பக்கத்துல யாருடா அப்படி சொன்னான்னு பக்சே நக்கலடிக்கறது இருக்கும். இப்போல்லாம் அட கேனைங்களான்னு ஆசிரியர் நினைக்கிறது அப்பட்டமா தெரியுது. மேல் பத்தில கேள்வி: இலங்கையில் போர் நின்று விட்டது உண்மையா? பதில்: ஆம். உண்மைதான். கேள்வி: நீங்க நம்பறிங்களா? பதில்: நிச்சயமாக நம்புகிறேன். அது கீழேயே யார் சொன்னாலும் போர் நிறுத்தப்பட மாட்டாது. ராஜ பக்சே உறுதி. புலிகளை ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை அவன் தம்பி அங்கதன் கொக்கரிப்புன்னு. சொல்லுறத சொல்லிப்புட்டேன். என் வேல முடிஞ்சதுன்னு போறாங்க.

ஏமாத்து 4: இது ஏமாத்தா? இல்ல நிஜமான்னு தெரியல. செய்தி தான். சென்னைல 20 இடத்தில தீவிர வாதிகள் தாக்கலாம். எச்சரிக்கைன்னு. அதென்னா சென்னை மட்டும் அவ்வளவு புண்ணியம் பண்ணிச்சி. 20 இடம்னு தெரியும்னா எந்த இடம்னு தெரியாதா. இல்லாம இப்படி சொன்னா அது நம்ம இடமா கூட இருக்கலாம்னு ஜனங்க போகாம இருக்கலாம். இதனால சாமானியனோட வாக்கு ஏற்படுத்தும் தாக்கம் போய்டும். கட்சி ஓட்டும் கள்ள ஓட்டும் ( யாராவது இயந்திரம் முடியாதுன்னு வக்காலத்து வந்தா கிழி படுவிங்க) கதைய மாத்திடும். சென்னை தான் கொஞ்ச பேரு கூவிட்டிருக்கான். அவனுக்கு வையி ஆப்புன்னு பண்ணுறாங்களா தெரியல மக்கா.

ஏமாறுறது நம்ம பிறப்புரிமை! ஏமாத்தாம இருப்பமா? முதல் ரெண்டும் பண்ணாதீங்க நண்பர்காள்.