Tuesday, August 14, 2012

வீடு

'வனக்கம் சார்! மெனையா பாக்கறீங்களா? ஊடு இர்ந்தா பரவால்லியா?’

‘வணக்கங்க. மனை இருந்தா நல்லது. இல்லைன்னா ரொம்ப பழைய வீடு இருந்தாலும் பரவால்ல’

‘இன்னா பஜ்ஜிட்ல பாக்குறீங்கோ?’ (கேட்கும்போதே குத்துமதிப்பா எவ்வளவுக்கு நான் ஒர்த் என்ற எக்ஸ்பர்ட் அனலிஸிஸ்)

‘இடம் பிடிச்சிருந்தா கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் பரவாயில்ல’ (ஒன்னைய மாதிரி எத்தன பேருட்ட நான் பதில் சொல்லிருப்பேன்)

‘அப்பார்மெண்டு வோணாவா?’ (உன்னப் பாத்தா தனியா மனை வாங்கி கட்டுற அளவுக்கு ஒர்த்தா தெரியலையே)

‘இல்லைங்க. அபார்ட்மெண்ட், டூப்லெக்ஸ் எல்லாம் வேணாம்.’

‘கொள்த்தூர் பிஜ்ஜு கிட்ட சூப்பரா ஒரு எடம் இருக்குது பாக்குறியா’ (ங்கொய்யால! உன் தம்புடி எப்புடின்னு கண்டு புடிக்கறேன் மவனே)

‘பெரியார் நகர், ஜவஹர் நகர், பெரம்பூர், அயனாவரம் இதுக்குள்ள சொல்லுங்க சாமி’

‘லோக்கோ டேசன் கிட்ட ஒரு வெடம் கீது. நாப்பத்தஞ்சிக்கு அம்பத்தஞ்சி. நல்ல ஏரியா. பேப்பர் க்ளீனா இருக்குது. மெனதான். ஒன்னு நாப்பது சொல்றாங்கோ. பார்ட்டி கிட்ட இட்டும்போறேன். உக்காந்து பேசிக்கிங்க. தோ! லோக்கோ பிஜ்ஜி கீய லெப்ட்ல திரும்புனாங்காட்டியும் நேர கார்னர் ப்ளாட்டுக்கு அடுத்த ப்ளாட்டு. ஊடு நல்லாருக்குது. சரிபட்டா பார்க்கலாம். இல்லன்னா இட்சி கட்டிக்கலாம். நாப்பதுக்கு முப்பது. தொர ஊடு. பேசனா மேண்டேன்ஸ் பண்ணிக்கிறாரு. உங்க இஸ்டம். ஒன்னு இரவத்தஞ்சு. ஒன்னு இரவது வரிக்கும் கேட்டாங்கோ குடுக்கல. நீங்க ஒக்காஞ்சு பேசுங்க. இன்னா நா சொல்றது’

போகும் வழியில் அவன் காட்டிய வீட்டைப் பார்க்கிறேன். 1964-65களில் அப்பாவின் விரல் பிடித்துக் கொண்டு லோகோவர்க்ஸ் ஸ்டேஷனின் தென்புறம் இறங்கி கண்டெம்ட் வேகன்களை கடையாக்கி சோடா ஃபேக்டரிகளில் ஒன்றில் பச்சை கலர் கோலி சோடா. குடிக்க முடியாமல் முக்கி முக்கி குடித்தும் பாதிக்கு மேல் அப்பாவுக்கு. பிறகு திரும்ப ப்ரிட்ஜ் ஏறி பட்மோடாக இருந்த தரிசு நிலத்தில் இருந்த கேம்பில் டெண்ட் ஆஃபீஸில் முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கத்து ஆஃபீஸில் மஞ்சள் பையிலிருந்து கட்டுக் கட்டாக காகிதங்கள், டிஸ்சார்ஜ் புக், ஜார்ஜ் படம் போட்ட வெள்ளிப் பதக்கம், ராணி படம் போட்ட செம்பு ஸ்டார் பதக்கம் எல்லாம் காட்டி சண்டை போடுவதும் வருவதுமாக இருந்தது. யாரு சண்டை போட்டா நமக்கென்ன போச்சு. நமக்கு பச்சை சோடா கிடைச்சா சரி.

மாசம் ரண்டு மூணு வாட்டி இதுக்கே அலைய முடியாதுன்னு அம்பத்தூரிலிருந்து அயனாவரத்துக்கு 65ல டேரா தூக்கியாச்சு. மாசம் நாலு பச்சை சோடா கேரண்டின்னு ஒரே சந்தோஷம். ஒன்னு ரண்டு மாசம் அப்படியும் நடந்தது. சபிக்கப்பட்ட ஒரு ஞாயிறு. அந்த ப்ரோக்கர் சொன்ன அதே வீதியில் கார்னர் ப்ளாட். ஒரு க்ரவுண்ட் என்று கவனம். அப்பாவுக்கு இடம் காட்டின ஆசாமி ஏதோ சொல்லி டெண்டுக்குள் அழைத்துப் போனான். கொஞ்ச நேரத்தில் அப்பாவின் இடி முழக்கக் குரல். இங்கயே இருக்கணும்னு நிறுத்திப் போன இடத்தில் இருந்து அசையும் அளவுக்கெல்லாம் நமக்கு தைரியமும் இல்லை.

கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்த கையோடு கையில் இருந்த பேப்பரெல்லாம் சுக்கு நூறாக கிழித்து வீசி டிஸ்சார்ஜ் சர்டிஃபிகேட்டை கிழிக்க முயன்றபோது அது காலிக்கோ பௌண்ட் என்பதால் முடியாமல், ‘அப்பா வேணாம்பாக்கும், சார்! என்ன இதுக்கும்’ அடங்கிப் போய் அதை மட்டும் பையில் போட்டுக் கொண்டு தரதரவென்று இழுத்துக் கொண்டு போனார்.

வீட்டுக்குப் போய் 500ரூ லஞ்சம் கேக்கறான். கேட்டா நீ சிப்பாய் இல்லை. க்ளார்க்குங்கறான். நான் ஆஃபீஸ்ல உக்காந்தா கிழிச்சேன். பர்மா காட்டுலயும், பாகிஸ்தான்லயும் குண்டுக்கு நடுவில இருந்தாக்கும் வேலை பார்த்து அந்த மெடல் வாங்கினது. இப்படி ஒரு கேவலப்பட்டு காசு குடுத்து அந்த மனை வாங்கத் தேவையில்லை என்ற வீராப்பு (500ரூ அப்போ ஒரு ஆறேழு மாச சம்பளமா இருக்கும்)

சரிங்க பார்க்கலாம் என்று ப்ரோக்கரிடம் சொல்லிவிட்டு வந்து ஒரு குட்டித் தூக்கம். கனவில் அப்பா.

‘அப்பா! புருபுருன்னு கத்திண்டு பேப்பர கிழிச்சி போட்டு வந்தீங்களே. அந்த இடத்துல பாதி ஒன்னேகால் கோடி சொல்றாம்பா! ஒரு ஐந்நூறு அழுதிருக்கப்படாதா?’

‘ஒழச்ச ஒழப்புக்கு மரியாத இல்ல. க்ளார்க்குன்னு சொல்றான். சரி சொல்லிட்டு போ. அதுக்கு லஞ்சம் குடுத்தா மட்டும் சரியாயிடுமா. அப்படி மானத்த விட்டு மனை வாங்கி என்ன பொழப்புடா அது’

‘ம்க்கும். அதான் மானத்த பாத்துண்டிருக்கா மாதிரி ஆகிப் போச்சு பொழப்பு. ரண்டு கோடி போச்சேப்பா’

‘வெங்கட்ராமையர் காலனில 5 வீடு. மாசம் அம்பதுரூபா மேனிக்கு அம்பது மாசம் குடுத்து க்ரயம் பண்ணிக்கோ வாசுன்னு அந்த ப்ராம்மணன் எவ்வளவோ சொன்னார். இரவத்தஞ்சி ரூபா வாடகையோட இன்னும் இரவத்தஞ்சு கட்டிருக்க முடியாதா. பையன் வளந்தா காலேஜுக்கு எல்லாம் கஷ்டம். பட்டணம் போறேன்னு ஒரே பிடிவாதம்.’.இது அம்மாவோட குரல்.

‘வாய மூடுடி! எனக்கு நீ புத்தி சொல்ல வேணாம். விதிச்சிருந்தா வேண்டாம் வேண்டாம்னாலும் வந்தடையும்.’

அதிசயமாக அம்மாவுக்கு எதிரான அப்பாவின் குரல். அதைவிட அதிசயமாக அம்மாவிடம் சைலேன்ஸ்.

‘அசுர சந்தியாச்சு. எழுந்திருங்கோ. விளக்கேத்தணும்’ (எங்கூட்டம்மணி)

‘ம்! காஃபி குடு’ (அப்பாவுக்கேத்த தப்பாத ஒபீடியண்ட் புள்ள)

(ராத்திரி 12.30 மணி)

மீ: ஓய் இருக்கியா?

மொவன்: சொல்லு நைனா

மீ: லோக்கோல ஒரு இடம் பார்த்தேண்டா. ஒன்னேகால் சொல்றான்.

மொவன்: இதெல்லாம் ஆவறதில்ல நைனா. பேசாம பொள்ளாச்சி, ஈரோடுன்னு எங்கனா ஒரு அரை ஏக்கர் பாரு நைனா. ஒரு கொட்டாய் போட்டுக்கலாம். நீ ஜம்முன்னு புக்கு படிச்சிக்கினு நெட்டுல மொக்க போட்டுனு இரு. நான் ஒரு நாலு மாடு வச்சிக்கினு வெவசாயம் பண்றேன். ஜாலியா இருந்துக்கலாம்.

(என்ன பெத்ததும் சரியில்ல. நான் பெத்ததும் சரியில்ல.=)))))))

10 comments:

ப.கந்தசாமி said...

எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்.

ஸ்ரீராம். said...

எங்கள் வீட்டில் இந்த சப்ஜெக்ட் தொடவே எனக்கும் பயம்தான்! 'விதிச்சுருந்தா வேணாம் வேணாம்னாலும் வந்து சேரும்....' இதுவரை விதிக்கலை!!!

வல்லிசிம்ஹன் said...

கொடுப்பினையும் வேணும் ரோஷமில்லாமலும் இருக்கணும்.தன்மான புருஷன்
உங்க அப்பாக்கு நூறு கோடி நமஸ்காரம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அப்பாவின் வார்த்தைகளில் வடியும் நேர்மை இனி வரும் தலைமுறைகளுக்குப் புரியுமா? அற்புதமான அந்த மனிதருக்கு மனதின் ஆழத்திலிருந்து ஒரு சல்யூட்.

ஆசைக்கும் யதார்த்தத்துக்கும் உள்ள இடைவெளி.

அல்லது இன்னும் நெருக்கமாக தன்னைக் கடனாளியாக்கி ஒரு சொத்தை அடைய விரும்பாத சுட்டுப் பொசுக்கும் சுய கௌரவம்.

அழகான பதிவு பாலாண்ணா.

”தளிர் சுரேஷ்” said...

வீடு கிடைக்க வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

'பரிவை' சே.குமார் said...

அது சரி...
எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேண்டாமா என்ன...
விரைவில் உங்களுக்கு வீடு கிடைக்கட்டும்...

ரிஷபன் said...

வாய மூடுடி! எனக்கு நீ புத்தி சொல்ல வேணாம். விதிச்சிருந்தா வேண்டாம் வேண்டாம்னாலும் வந்தடையும்.’

அது நிஜம் தான்..

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி:)

முரளிகண்ணன் said...

கலக்கல் பதிவு

சிங்கை நாதன்/SingaiNathan said...

Reading again.