Tuesday, July 19, 2011

தலைப்பில்லாக் கவிதைகள்

துளிர்த்த பச்சையின் சிலிர்ப்பில்
பழுத்த இலையுதிர்வின் வலியை
உணராதா மரம்?
உதிரினும் 
மண் புகுந்து
தன் உயிர்கலக்கும்...


***
ஹய்ய்யோ!
எவ்ளோ பெரிய கேக்
என்றாள் குழந்தை

ஹய்ய்யோ!
எவ்ளோ பெரிய கண்
என்றிருந்தது எனக்கு..



****


குடை ராட்டினமாய்
மேலும் கீழுமாய்
அலைபாய்கிறது மனது
படி, எழுது, படம் பார்,
நட, ஓடு,
ஏதாவது செய்
என்றார்கள்..
ஆறோ, குளமோ,
ஏரியோ, கடலோ
எங்கு எறிந்தாலும்
கரையொதுங்கும்
கட்டைபோல்
மனமொதுங்குகிறது
நினைவு..



****


குடுவையில் அடைபட்டிருந்தேன்
இறுக்கம் உணர்ந்ததில்லை
அல்லது பழகிவிட்டிருந்தது
உன் விரல் தொட்டுத் திறந்தாய்
மென் மொழியால்
வெளி காட்டினாய்
உள்ளும்..
ரந்து விரிந்திருந்ததென் உலகம்
மொழியற்று
வழியற்று
திசை தப்பி
மீண்டும் குடுவைக்குள் நான்
இறுக்கம் திணறடிக்கிறது
வெளியில்லை
உள்ளும்..



****
அழுதழுதலைபாய்ந்து
அணைத்த கையொடுங்கி
ஆவலாய் முலையுண்ணும்
குழந்தையின்
முதல் ’ம்’க்கும்
உண்டபிறகான
’ஹா’வுக்கும் ஈடாக
நன்றிக்கும்
நிறைவுக்குமான
வார்த்தைகள்
எந்த மொழியிலும் இல்லை

***

21 comments:

க ரா said...

பொறாமையா இருக்கு பாலா சார் :)

ரிஷபன் said...

எல்லாமே பிடிச்சிருந்தாலும் 2ம் கடைசியும் மனசுல பச்சக்னு ஒட்டிகிச்சு

ஈரோடு கதிர் said...

பட்டாசு!

ஓலை said...

Nice ones.

'பரிவை' சே.குமார் said...

Superb.

சத்ரியன் said...

//அழுதழுதலைபாய்ந்து
அணைத்த கையொடுங்கி
ஆவலாய் முலையுண்ணும்
குழந்தையின்
முதல் ’ம்’க்கும்
உண்டபிறகான
’ஹா’வுக்கும் ஈடாக
நன்றிக்கும்
நிறைவுக்குமான
வார்த்தைகள்
எந்த மொழியிலும் இல்லை//

பாலா அண்ணே,

பலாச்சுளை!

ஸ்ரீராம். said...

அருமை.
குறிப்பாகக் கடைசி கவிதை.

Mahi_Granny said...

தலைப்பு இல்லாவிட்டால் என்ன. அருமையான பகிர்வு. கடைசி கவிதை அருமையோ அருமை.

க.பாலாசி said...

எனக்கு பொறாமைன்னு வச்சிக்கலாம்... உண்மையாவே..

Thenammai Lakshmanan said...

கேக் கவிதை அற்புதம் பாலா சார். கடைசி கவிதையும் .. ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் மட்டுமேயான அழகுப் பகிர்வு.:))

Anonymous said...

beautiful ones-luved them,last was real gud

vasu balaji said...

அனைவருக்கும் நன்றி.

காமராஜ் said...

எல்லாக்கவிதைகளிலும் மொழிகலந்து கிறக்குகிறது.அதில் அனுபவம் தெரிகிறது. இரண்டும் கடைசியும் பாலாண்ணா தெரிகிறார்.குழந்தைக்கவிதை எல்லாரையும் இழுத்துக்கொண்டு பின்னே பின்னே போய்க்கொண்டே இருக்கும்.

vasu balaji said...

நன்றி காமராஜ்.

Karthikeyan Rajendran said...

அன்பு நண்பரே , நான் பேஸ்புக்கில் மற்றும் கூகுள் + ல் இணைந்துள்ளேன். ஆனால் எனக்கு அதில் உள்ள ஆப்பரேடிங் பற்றி ஒன்றும் தெரியவில்லை, இதை பற்றி சொல்லித்தர தமிழில் வலை முகவரி உள்ளத, எனக்கு கொஞ்சம் உதவுங்களேன்......

தாராபுரத்தான் said...

கலக்குறீங்க அய்யா..

vasu balaji said...

அண்ணா வாங்க. நலமா.

மா.குருபரன் said...

அருமையாக இருக்கிறது நண்பர். கடைசி கவிதையை நிறையவே உணர்ந்து ரசித்தேன்

சமுத்ரா said...

nalla கவிதைgal

THAVEETHU GCE said...

இரண்டாவது கவிதை மிகவும் நன்றாக உள்ளது....

நிலாமகள் said...

உணராதா மரம்?//


//கரையொதுங்கும்
கட்டைபோல்
மனமொதுங்குகிறது
நினைவு..//

//வெளியில்லை
உள்ளும்..//
இம்முத்தாய்ப்புக‌ளை தூக்கிச் சாப்பிட்டுவிடுகிற‌து

//முதல் ’ம்’க்கும்
உண்டபிறகான
’ஹா’வுக்கும் ஈடாக//

இந்த‌ ந‌டுவாந்திர‌ வ‌ரிக‌ள்!