Thursday, December 16, 2010

இந்த நாள்..இனிய நாள்..

சிறு பூந்தூறல், ஒரு நொடி சில்லென முகம் தழுவிப் போகும் காற்று, உயர்தர செண்டை ஓரம் கட்டும் உழைப்பின் வியர்வை வாசம், நகர இறுக்கமோ கிராமத்தின் அமைதியோ விசுக்கென மரம்தாவும் கிளி ,களைத்த மனத்தை கண நேரம் களிப்புறச்  செய்ய தவறியதேயில்லை இவை.

ஆல விருட்சம் போல் தலைமுறை கலந்த ஒரு வீட்டின் திருமண விழா பார்த்திருக்கிறீர்களா? உறவு யார், நட்பு யார், ஊர்க்காரர் யார் ஒன்றும் தெரியாது. அவரவருக்கும் யாரும் எதுவும் சொல்லாமலே ஏதோ ஒரு கடமையில் ஒன்றுகூடி சிறப்பிக்கும் நிகழ்வு அது. ஒன்றிரண்டு சலம்பலையும் ‘விட்றா மாப்ள. நம்மூட்டுக் கலியாணம். நம்ம பஞ்சாயத்த அப்புறம் பார்க்கலாம். எலையப் போடலாமான்னு பாரு போ’என்று நீர்த்துப் போகச் செய்யும் லாவகம்.

சற்றும் புறமாய் உணரவிடாமல், ஆத்மார்த்தமாய் கை பிடித்து எங்களில் ஒருவன் நீ என செயலால் உணர்த்தும் மாயம்.

எழுத்தைப் படித்து எண்ணத்தில் வரைந்த கோட்டோவிய மனிதர்கள் சற்றும் ஒத்துப் போகாமல் புதிய பரிமாணத்தில் இதயம் புகும் இன்ப அதிர்ச்சி.

மொக்கையோ, மொண்ணையோ, அறச்சீற்றமோ, அரைவேக்காடோ, இலக்கியமோ, இலக்கணமோ, கும்மியோ, கருத்துப் பரிமாற்றமோ  உள்ளங்கை பொத்தி உற்றுக் கண்பார்த்து நட்பாய், உரிமையாய், உறவாய்ச் சிலாகிக்கும்/கண்டிக்கும்/நெறிப்படுத்தும் உணர்வு ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நேரம்.

ஆம்! இதில் எதுவொன்றையும் திட்டமிட்டுச் செய்யமுடியுமா? அந்த நொடியின் நிகழ்வல்லவா அவை? எத்தனை வருடமானாலும் நினைவோடும் தருணங்களில் அதே சிலிர்ப்பைத் தரத் தவறுமா அவை? வாய்க்க வேண்டும். வாய்த்திருக்கிறது.

ஈரோடு பதிவர் சங்கமம் 2010ன் அழைப்பிதழைக் கண்டவுடன் என் அனுபவத்தின் நனவோடை இது. ஒரு இனிய விழாக்கால விடுமுறையை கூடினோம்,பேசினோம், பிரிந்தோம் என்றில்லாமல் பயனுள்ளதாக, பொறுப்புள்ளதாக அமைத்திருக்கும் பாங்கைப் பயன்படுத்திக் கொள்ளக் கசக்குமா என்ன? 

சங்கத்தினரின் அழைப்பிதழ் இதோ:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சங்கமம் 2010 – அன்போடு அழைக்கின்றோம்

கடந்த ஆண்டு இதே மாதத்தில் எழுத்தால் மட்டும் சந்தித்து மகிழும் நண்பர்களை நேரில் சந்தித்தால் என்ன என்ற எண்ணத்தில் உருவான சங்கமம் உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு மிக அழகிய வெற்றியை ஈட்டித் தந்தது.

இப்பொழுதுதான் கைகள்
பற்றி ஆசையாய் அன்பாய் குலுக்கி விடைபெற்றது போல் இருக்கிறது. இன்னும் உள்ளங்கைகளுக்குள் ஊடுருவிய வெப்பம் தணிந்ததாகத் தெரியவில்லை, ஆனால் ஆண்டுதான் ஒன்று உருண்டோடியிருக்கிறது.
சென்ற ஆண்டு சங்கமத்தில் குலுக்கிய கைகளோடு இன்னும் கரங்களை எதிர்நோக்கி மீண்டும் ஒரு முயற்சியை பெரியளவில் முன்னெடுக்க விரும்புகிறோம்.

ஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கரங்கள் நீட்டி தயாராக இருக்கிறோம்
நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு

நிகழ்ச்சி முன்னோட்டம் .......

* பதிவர்கள் அறிமுகம்
* வலைப்பூக்கள் ஒரு மாற்று ஊடகம்
* சிறுகதைகளை உருவாக்குவோம்
* புகைப்படங்களில் நேர்த்தி
* நீங்களும் குறும்படம் எடுக்கலாம்
* உலகத்திரைப்படங்கள்
* வலைப்பக்கங்களை திறனுடன் பயன்படுத்துதல்
* பதிவர்கள் கலந்துரையாடல்


காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.

பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்
உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
உங்கள் வருகையே நம் வெற்றி!

தொடர்புகளுக்கு:
erodetamizh@gmail.com அல்லது குழும பதிவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு...உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊர்கூடி இழுக்கும் தேர் இது.

சந்திப்போமா?

49 comments:

Sethu said...

Hello Sir.

இராமசாமி said...

Sir i am going to missing it... If time favours next time i will be there defnitely..

வானம்பாடிகள் said...

@Sethu

Hello :)

Sethu said...

நீங்க ஏன் சார் போகல? போன தடவ பைக்ல வைச்சு அனுப்பிட்டாங்கனா?

வானம்பாடிகள் said...

@இராமசாமி

True. Try:)

வானம்பாடிகள் said...

@Sethu

26 இன்னும் கடக்கலையே. அதுக்குள்ள போகலை எப்படி?

Sethu said...

"சந்திப்போமா? "

இத கவனிக்கல. நீங்க போகலைன்னு நினைச்சுட்டேன். Sorry.

ஒரு ரூபாய் மீல்ஸ் வெங்கடராமனுக்கு வாழ்த்து சொல்லிட்டு வாங்க சார்.

வானம்பாடிகள் said...

@Sethu
/போன தடவ பைக்ல வைச்சு அனுப்பிட்டாங்கனா?/

அது பழமையோட புத்தக வெளியீடு விழா.
சஞ்சயுடனான அந்த பயண நேரம், ஸ்டேஷன்ல சாப்பாடு சரியா இருக்காது சார், நீங்க ஹோட்டல்ல சாப்பிட்டு போலாம். நான் வெயிட் பண்றேன் என்ற அன்பு, எனக்கு போனஸ். அதிலென்ன குறைப்பட இருக்கிறது? அது நம்ம வீட்டு விழா இல்லையா?

அது சரி(18185106603874041862) said...

விழாவுக்கு வாழ்த்துக்கள்

(ஆமா, சங்கத்துல லோன் எதுனா தர்றீங்களா? நம்மளையும் மெம்பரா சேத்துக்கங்கய்யா..நெம்ப நாளா லோன் கேட்டுக்கிட்டு இருக்கேன்)

அது சரி(18185106603874041862) said...

//

காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.
//

ஆஹா...தமிழ்நாட்டு தமிழர்க்ள் கொடுத்து வச்சவங்கப்பா. எங்க போனாலும் டீ, சமோசா, அன் லிமிட்டட் மீல்ஸுக்கு பிரச்சினை இல்ல :)))

வானம்பாடிகள் said...

@அது சரி(18185106603874041862)

:)). லோனு:))..

அது சரி(18185106603874041862) said...

//
பேருந்து நிலையம், தொடர்வண்டி நிலையத்திலிருந்து அரங்கிற்கு வந்து செல்ல வாகனங்கள் ஏற்பாடு செய்ய எண்ணியுள்ளோம்
//

லண்டன் ஹீத்ரோ இல்லாட்டி மான்செஸ்டர் இன்டர்னேஷனல் இங்க இருந்தும் ஏற்பாடு செஞ்சா நானும் வருவேன்ல? செரி, அது கூட வேணாம், எடின்பரோ இல்லாட்டி பேரிஸ் சிடிஜி (ஆமா, சாரு சொல்ற அதே பேரிஸ் தான் )? எதுனா ஒன்னு மட்டுமாவது செலக்ட் பண்ணுங்க சார் :)

வானம்பாடிகள் said...

அது சரி(18185106603874041862) said...

//லண்டன் ஹீத்ரோ இல்லாட்டி மான்செஸ்டர் இன்டர்னேஷனல் இங்க இருந்தும் ஏற்பாடு செஞ்சா நானும் வருவேன்ல? செரி, அது கூட வேணாம், எடின்பரோ இல்லாட்டி பேரிஸ் சிடிஜி (ஆமா, சாரு சொல்ற அதே பேரிஸ் தான் )? எதுனா ஒன்னு மட்டுமாவது செலக்ட் பண்ணுங்க சார் :)//

முடியாத காரியமா என்ன? சங்கத்துக்கு நன்கொடை எவ்வளவுன்னு தெரிஞ்சா பிஸினஸ் க்ளாசா புக் பண்ணிருவோம்ல.

காமராஜ் said...

//எழுத்தைப் படித்து எண்ணத்தில் வரைந்த கோட்டோவிய மனிதர்கள் சற்றும் ஒத்துப் போகாமல் புதிய பரிமாணத்தில் இதயம் புகும் இன்ப அதிர்ச்சி.//

ஆமாம் பாலாண்ணா இது ஒரு புது வகை உறவு.
புதிதான ஆர்வம்.

வானம்பாடிகள் said...

@காமராஜ்

காலை வணக்கம் காமராஜ்:). ஆமாம்.

வானம்பாடிகள் said...

@அது சரி(18185106603874041862)

நோ! இது பதிவர் சந்திப்பு. பதிவுலக கலாச்சாரப்படி வடை டீ தான். அப்பதான் லேட்டா வரவங்க ‘வடை போச்சே’ சொல்ல முடியும்

காமராஜ் said...

பாலாண்ணாவுக்கும் சேதுசாருக்கும்,கண்ணனுக்கும் ஏனையோருக்கும் காலை வணக்கம்.

Sethu said...
This comment has been removed by the author.
Sethu said...

நண்பர் காமராஜுக்கு பெரியதோர் வணக்கம்.

உங்கப் பதிவிலையும் நீங்கப ஈரோடு போகப் போவதாக தெரிந்தது. நல்ல என்ஜாய் பண்ணுங்க. பொறாமையா இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

விழாவுக்கு வாழ்த்துகள்

philosophy prabhakaran said...

அடடே.... நிகழ்ச்சி நிரல், மதிய உணவு, வாகன ஏற்பாடு என்றெல்லாம் பிரம்மாண்டமாக செய்வீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை... கலக்குங்க...

Sethu said...

"ஒரு இனிய விழாக்கால விடுமுறையை கூடினோம்,பேசினோம், பிரிந்தோம் என்றில்லாமல் பயனுள்ளதாக, பொறுப்புள்ளதாக அமைத்திருக்கும் பாங்கைப் ..."

- பின்ன! யாரு முன்நிலையில நடத்தறது. சமூக ஆர்வலர் அல்லவா!

கண்டிப்பா ஒரு சிறப்பான விழாவாத்தானிருக்கும். வாழ்த்துகள்.

Chitra said...

சூப்பர்! வாழ்த்துக்கள்!

பழமைபேசி said...

@Sethu

டிச-26ல அமெரிக்கப் பதிவர்கள் சங்கமம் சார்லட்ல.... வந்துருங்க சேது ஐயா! இஃகிஃகி!!

வல்லிசிம்ஹன் said...

சந்திப்பு நல்லபடியாக நடக்க என் வாழ்த்துகள்.அருமையான உணர்வு நட்புகள் கொடுப்பது.

பழமைபேசி said...

Anna,

I am just relying on you for audio, video and live webcast...

டிச-25ந் தேதி இரவு, இங்க நாங்க எல்லாரும் ஒரு இடத்துல கூடி ஈரோடு சங்கமத்தைக் கண்டு களிக்கணும்!!!

நசரேயன் said...

பயணச்சீட்டு அணிப்பி வையுங்க

சங்கரியின் செய்திகள்.. said...

சார், வணக்கம். நாங்கள் வடநாட்டு சுற்றுலா பயணம் திட்டமிட்டுள்ளபடியால் என்னால் கலந்து கொள்ள முடியாது. 3 மாதம் முன்பாகவே முடிவு செய்த விசயம், மாற்ற முடியவில்லை. நன்றி.

சேட்டைக்காரன் said...

இப்படியொரு அழைப்பை வாசித்தபிறகு,கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று என்னை நொந்து கொள்கிறேன் ஐயா!

ராமலக்ஷ்மி said...

மிக அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்:)! 2009 போலவே சங்கமம் திருவிழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

dr suneel krishnan said...

அழைப்பு அமர்க்களமா இருக்கு ,எனக்கும் வரணும்னு ஒரு எண்ணத்தை விதச்சிருக்கு,பலரையும் காண வேண்டும் என்று ஒரு அவா இருக்கு ,பார்க்கலாம் .எதுவும் திட்டமிடலை ,முயற்ச்சிப்போம்

ஜெரி ஈசானந்தன். said...

சந்திப்போம் அண்ணா.

முனைவர்.இரா.குணசீலன் said...

இந்த முறையும் தங்களைச் சந்திக்கும் ஆர்வத்துடன் என்றும் அன்புடன்

முனைவர்.இரா.குணசீலன் said...

வலைப்பதிவர் சங்கமம் பற்றி எனது பதிவிலும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறேன் அன்பரே

http://gunathamizh.blogspot.com/2010/12/2010.html

கே.ஆர்.பி.செந்தில் said...

சங்கமம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள் ...

அதே நாளில் சென்னையில் பதிவர் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுவதால் என்னால் கலந்து கொள்ள இயலாமல் போவது வருத்தமே ...

சே.குமார் said...

ஊர்கூடி இழுக்கும் தேர் விழாவுக்கு வாழ்த்துக்கள்.

ரோஸ்விக் said...

பாலா அண்ணே நான் வந்து அந்த தேரை இழுக்கமுடியாத சூழல். எனக்குப்பதிலா உங்க இன்னொருகையையும் தேர்வடத்துல வச்சு நல்லா இழுங்க.

Disci: ஓ அந்த பேக்கை வச்சிருக்கது சிரமமா இருக்க. எங்கிட்ட கொடுத்திடுங்க... (அப்பாடா அண்ணன்கிட்ட இருக்கதை ஆட்டையைப் போட்டிடலாம்.) :-)))

க.பாலாசி said...

ஆஹா... ஒரு ஆகச்சிறந்த
அழைப்பு....

எல்லோரும் இணைவோம்...

ம.தி.சுதா said...

எல்லாம் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்..

செ.சரவணக்குமார் said...

சங்கமம் பற்றிய உங்கள் நனவோடைக் குறிப்புகள் அருமையாக இருந்தது பாலா சார். இந்த ஆண்டும் நீங்கள் சங்கமத்தில் கலந்துகொண்டு அந்த அற்புத நிகழ்வை எங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ரிஷபன் said...

சங்கமம்-நல் வாழ்த்துகள்.

தேவன் மாயம் said...

சந்திப்புக்கு என் வாழ்த்துகள்!

ஈரோடு கதிர் said...

எழுதறதெல்லாம் சூப்ப்ப்ப்பரா எழுதறீங்க.... சென்னை மக்களோட நேரங்காலமே வந்து சேருங்கண்ணே!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அட அட அட அருமை;; தலை வார்த்தைகளைப் படிச்சதும் நாமளும் போகணும்னு எண்ணம் வருது..:))

நெகிழ வச்சிட்டீங்க பாலா சார்.

ஸ்ரீராம். said...

சென்று வந்து விவரம் சொல்லுங்கள்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நல் வாழ்த்துக்கள்...

எம்.எம்.அப்துல்லா said...

அரையாண்டு விடுமுறைக் காலம்.என் பிள்ளைகள் வந்து என்னோடு இருப்பது விடுமுறைகளில் மட்டுமே.நான் வருவது கடினம் :(

மங்குனி அமைச்சர் said...

சார் என் பேர சொல்லி நாலு மொக்க போடுங்க , அப்படியே சாப்பாட மட்டும் எனக்கு பார்சல்ல அனுப்பிடுங்க

வானம்பாடிகள் said...

அனைவருக்கும் நன்றி