Saturday, December 11, 2010

மத்தாப் பூ

ஒரு வழியாய் மழை கொஞ்சம் ஓய்ந்தது போலிருக்கிறது. கொசுக்கள் புகை பிடிக்கக் கற்றுகொண்டு விட்டன. கொசுவத்திச் சுருளில் உட்கார்ந்து நக்கலடிக்கின்றன. இனி ரோடு காண்ட்ராக்டில் போகிற போக்கில் அடிக்க வாய்ப்பு. தேர்தல் வேறு வருவதால் மந்திரிமார் சொகுசுப் பயணத்துக்காக விரைவில் ‘முக்கிய’வீதிகளில் ரோடு போடப்படும். வட சென்னைக் குழிகள் நிரப்பப்படலாம்.
*********
வெள்ளிக்கிழமை நண்பர் ராஜநடராஜனைச் சந்திக்க வாய்த்தது. கூடவே அவரின் சகோதரி மகனையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. காரணமிருக்கிறது. இளைஞர் மத்தியில் ஈழ உறவுகளைப் பற்றிய அக்கறையும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வமுமிருப்பதைக் காணமுடிந்தது. அலுவலக ஃபோரமின் மூலம் சில தடவை முயன்று தோற்றதைச் சொல்லமாட்டாமல் சூசகமாகச் சொன்னேன். சொன்னாற் போலவே அரசியல் வியாதிகளின் காலை நக்குவதை விட சிறந்த வழிமுறையில்லை என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறோம் என்பதை அறிய வருத்தமே.

எழுத்தில் தெரியும் அதே அக்கறையுடன் மென்மையாக திரு ராஜநடராஜன் வருந்திய விஷயங்களுக்கு என்ன பதில் சொல்ல? தன் கூடு என்று தேடிவரும் பறவைகளுக்கு வெளிப்பூச்சில் மினுக்கினாலும் உள்ளே இத்துப் போயிருக்கிறோம் என்பதைச் சொல்லச் சங்கடப்படுவதைத் தவிர வேறென்ன சொல்ல. 

2ஜி ஸ்பெக்ட்ரம், நீரா ராடியா, குருமூர்த்தி படிச்சியா, தமிழன்னு சொல்லிக்கவே வெக்கப்படுறேன் என்று ட்ரெண்டியாகப் பேசிக் கொண்டு அடுத்த ஊழலுக்குக் காத்திருப்போம்.
*************
இசைவிழா சீசன் ஆரம்பமாகிவிட்டது. குண்டஞ்சி வேஷ்டியிலும், ரங்காச்சாரிப் புடவையிலும் வரும் வெளிநாட்டவருக்கு கூசாமல் முழம் 25ரூ என்று முக்கால் முழம் அளக்கும் பூக்காரியிடம் ரூ20க்கு பேரம் பேசி 30ரூபாயாகக் கொடுத்து கச்சேரி கேட்கவரும் ரசிகர்களுடன், ஒருமாசம்  சபா கேண்டீனில் தாவித் தாவி வக்கணையாகத் தின்று கச்சேரியை விட தீனியை விமரிசிக்கும் பெருசுகள், அரைப் பரீட்சை விடுமுறையில் பள்ளி மைதானத்தையும், அசெம்ளி ஹாலையும் கச்சேரிக்கு வாடகைக்கு விட்டு ஆட்டையைப் போடும் பள்ளிகள், இந்தக் கச்சேரிகளுக்காகவாவது மாம்பலமோ மைலாப்பூரோ குடி போகவேண்டும் என 30 வருடமாய்க் கனவு கண்டு, ஜெயா டி.வி.யின் மார்கழி மகோற்சவம் யூடியூபில் வருமா என்று காத்திருக்கும் என்னைப் போன்ற பரதேசிகள் என்று சென்னை ஒரு மார்க்கமாய் மாறிவிடும்.
*************
சரவணபவன் அண்ணாசாலையில் 29 வருடத்தில் 29ம் கிளை திறந்து கல்லாக் கட்டப் போகிறார்கள். செண்ட்ரல் சரவணபவனில் நம்மவர் கை துடைத்துப் போட்ட பேப்பர் டவலை எடுத்துச் சுத்தம் செய்யாமல் பரபரப்பான உணவு வேளையில் ஒரு டேபிளில் வாடிக்கையாளரைக் காக்க வைக்கும் சூபர்வைசர்கள், இடுப்பில் ஹைடெக் பில்லிங் மெஷின் இருந்தாலும், வாடிக்கையாளரை லோக்ளாஸாக நடத்தும் பண்புமிருந்தும் இந்த வளர்ச்சிக்கு காரணமான நம்மைத் துப்பிக் கொள்ளத்தான் தோன்றுகிறது.
**************
இணையத்தில் பரபரப்பாகப் பேசப்படும் போர்க்குற்ற ஊழல் பற்றி மூச்சே விடாமல், இசைப்பிரியாவின் மரணம் குறித்த செய்திகளை ஒரு பத்தி கூட எழுதாமல், நடிகர் விஜயகுமாரின் குடும்ப விவகாரத்தை பக்கம் பக்கமாக எழுதி தமிழ் வளர்க்கும் பத்திரிகைகளை ஏதாவது பரிசு கொடுத்து ஊக்குவிக்கலாம். இந்த அழகில் வரலாற்றுச் சுவடுகளுக்கு விளம்பரம் வேறு.
*************
நம்ம ஊர் ஆஸ்பத்திரி லேப்களில் சிறுநீர் பரிசோதனை ரிஸல்ட் மாறி ஆணுக்கு கர்ப்பம் உறுதி செய்யப்படுவது அடிக்கடி நடக்கும் ஒன்று. ஒன்று எங்கள் சாதியே என்பது போல், இங்கிலாந்தின் ஹில்டனுக்கு லண்டன் நார்விச் மருத்துவமனையிலிருந்தும், பிறப்பு விகிதத் துறையிலிருந்தும் வந்த கடிதங்களின் பேரில் மருத்துவமனைக்குச் சென்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்த பிறகு வந்த ரிஸல்டில் மிஸ்டர் ஹில்டன் இரண்டு குழந்தைகளைக் கருவில் சுமப்பதாக சரியான பெயர், பிறந்ததேதி, இன்சூரன்ஸ் தகவலோடு கொடுக்கப்பட்ட ரிப்போர்டினால் நண்பர்களின் கேலிக்கு ஆளாகி இருக்கிறார். கொடுமை என்னவெனில் 20 வருடங்களுக்கு முன் சிறுநீரகக் கற்களுக்காக சிகிச்சை எடுத்தாராம். கிட்னிக்கும் கருப்பைக்கும் வித்தியாசம் தெரியாமலா ஸ்கேனிங் இருக்கும்?
**************
இன்று பாரதியின் பிறந்த நாள். அவன் தந்த உணர்வுகளைக் கிடாசிவிட்டு அவன் பூணூலில் பார்ப்பனீயம் தேடும் அளவு முன்னேறியிருக்கிறோம். தத்தளிக்கும் மனதை சோகம் சோய்த்த தமிழில், ஜெயஸ்ரீயின் மயிலிறகுக் குரலில் கேட்டு நினைவு கூர்வோம்.
“குணம் உறுதியில்லை
 எதிலும் குழப்பம் வந்ததடி
 கணமும் உள்ளத்திலே
 சுகமே காணக் கிடக்கைவில்லை”
 **************** 
கவுஜ கார்னர்!!!!!
சுட்டுக் கொண்ட விரலைச்
சிற்றுதடு குவித்து ஊதுகிறாய்
பற்றியெறிகிறதென் தேகம்..

நினைவு இழைகளால்
சுற்றி நெய்த வலையில்
இரையானது மனது..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

51 comments:

Sethu said...

Hello sir

வானம்பாடிகள் said...

@Sethu
Hi Sethu:)

VISA said...

ஸ்வரஸ்யமான விஷயங்கள் குட் புளோ....

ஈரோடு கதிர் said...

மத்தாப்பூ பல வண்ணங்களில்!!

ராஜ நடராஜனை
பாராட்டத்தோணுது!

வானம்பாடிகள் said...

VISA said...

ஸ்வரஸ்யமான விஷயங்கள் குட் புளோ....//

நன்றி விசா:)

ஈரோடு கதிர் said...

@@ Sethu
@@ வானம்பாடிகள்
ஹலோ / ஹய்

இதே வேலையாப்போச்சுப்பா இவிங்களுக்கு!!!

மதுரை சரவணன் said...

// அவன் தந்த உணர்வுகளைக் கிடாசிவிட்டு அவன் பூணூலில் பார்ப்பனீயம் தேடும் அளவு முன்னேறியிருக்கிறோம்.//

உண்மை. பகிர்வுக்கு நன்றி.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வணக்கம் . என்னைப் போன்று வேற்று நாடுகளில் வாழும் அனைவரையும் அருகில் இருக்க வைத்து சில நாட்களாக என்னவெல்லாம் நிகழ்ந்ததோ அவை அனைத்தையும் ரசிக்கும் வகையில் தொகுத்து கூறியது போன்ற ஒரு உணர்வை ஏற்ப்படுத்தியது உங்களின் எழுத்து நடையும் எதார்த்தமான தகவல் தொகுப்புகளும் . அருமை . பகிர்வுக்கு நன்றி

ஈரோடு கதிர் said...

||வானம்பாடிகள் said...
நன்றி விசா:)||

தம்ம்ம்ம்பீ இன்னும் டீ வரல!
ஸ்ஸ்ஸாரி எனக்கு இன்னும் நன்றி வரல!

தமிழ் அமுதன் said...

// அவன் தந்த உணர்வுகளைக் கிடாசிவிட்டு அவன் பூணூலில் பார்ப்பனீயம் தேடும் அளவு முன்னேறியிருக்கிறோம்.//


நல்லா சொன்னீங்க அண்ணே..!

பழமைபேசி said...

நான் தோற்கிறேன்... என்னைப் போல நிறையப் பேர் தோற்றுக் கொண்டு இருப்பதையும் காண்கிறேன்... ஆனால், என்றோ ஒரு நாள்... எம் எண்ணங்கள் அலசப்படும்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலர்புல் மத்தாப்பூ பாலாண்ணே

சரவணபவன்.. சேம் ப்ளட்..

ம.தி.சுதா said...

ஒற்றைப் பதிவில் எவ்வளவு சிந்தனை தூண்டும் கேள்விகள்.. நன்றிகள்..

மதி.சுதா.

நனைவோமா ?

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

மத்தாப்பூ பல வண்ணங்களில்!!

ராஜ நடராஜனை
பாராட்டத்தோணுது!//

நன்றிங்ணா:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஸ்வரஸ்யமான விஷயங்கள்

நசரேயன் said...

கடலை சந்து

சுடும் கடலையை
சிற்றுதடு குவித்து ஊதுகிறாய்
பற்றியெறிகிறதென் தேகம்..
இன்னும் வருபடவில்லைஎன

நினைவு இழைகளால்
சுற்றி அலைந்த எனக்கு
கடலை இரையானது

நசரேயன் said...

அல்லலோ சேது
அல்லல்ல்லோ பாலா அண்ணே

வானம்பாடிகள் said...

@நசரேயன்

வாங்க தளபதி. எங்க ஆளையே காணோம்.

நசரேயன் said...

அளவு கடந்த ஆணி அண்ணே ..பஸ்சை வித்தாச்சி அதான் வேலை அதிகமாபோச்சி

நசரேயன் said...

// நடிகர் விஜயகுமாரின் குடும்ப விவகாரத்தை பக்கம் பக்கமாக எழுதி தமிழ் வளர்க்கும் பத்திரிகைகளை ஏதாவது பரிசு கொடுத்து ஊக்குவிக்கலாம்//

அவங்க தான் சினிமா கரங்களுக்கு எதிரியே அப்புறம் ஏன் இந்த இதை எல்லாம் வெளியிடனும் ?

வானம்பாடிகள் said...

@நசரேயன்

ஆணி புடிங்கின காசுல பஸ் வாங்கி விடுங்க.

வானம்பாடிகள் said...

@நசரேயன்

சினிமாக்காரங்களுக்குதான். அவங்க வீட்டு விவகாரத்துக்கு எதிரில்ல. ஆடு பகை குட்டி உறவுன்னு சொலவடை இருக்கில்லா.

சேட்டைக்காரன் said...

//2ஜி ஸ்பெக்ட்ரம், நீரா ராடியா, குருமூர்த்தி படிச்சியா, தமிழன்னு சொல்லிக்கவே வெக்கப்படுறேன் என்று ட்ரெண்டியாகப் பேசிக் கொண்டு அடுத்த ஊழலுக்குக் காத்திருப்போம். //

காத்திருப்பதா? கவலையே வேண்டாம் ஐயா. தினம் ஒரு புது எலும்புக்கூடு கதவுதிறந்து வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. சிரிப்பதா அழுவதா...?

Sethu said...

அல்லல்ல்லோ கதிர்.
அல்லல்ல்லோ தளபதி.
அல்லல்ல்லோ பழமை.

Sethu said...

சார்! ராஜநடையாருக்கு ஒரு பெரிய வணக்கம். காலம் தான் பதில் சொல்லணும்.

இருக்கிற ஊழல்லாம் பார்த்தா, நாம கொசு ரேஞ்சுக்கு தான் இருக்கோம்.

நாங்களும் மார்கழி மாச கச்சேரி youtube தயவில் தான். ஒன்னு ரெண்டு selective ஆகா பார்ப்பது தான்.

யூர்கன் க்ருகியர் said...

ம்.. ம்ஹும் ..ஓ... ஓஹோ... அவ்வ்...ச்சே ..ஹி ஹி ..


உங்க பதிவை படிக்கும்போது மேற்கண்ட அணைத்து சவுண்டும் விட வேண்டி இருக்கிறது .. .

பிரபாகர் said...

ராஜ நடராஜனை சந்தித்தது பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!...

எல்லா நாட்டு நடப்புக்களையும் அளவாய் அழகாய் தொகுத்திருக்கிறீர்கள்...

சரவணபவன் விஷயமாய் சொன்னது மிகச்சரி. ஆனால் எந்த ஒரு ஓட்டலிலும் மரியாதைக் குறைவு எனில் அடுத்தமுறை செல்வதை தவிர்த்து வருகிறேன்...

பிரபாகர்...

அது சரி(18185106603874041862) said...

//

இணையத்தில் பரபரப்பாகப் பேசப்படும் போர்க்குற்ற ஊழல் பற்றி மூச்சே விடாமல், இசைப்பிரியாவின் மரணம் குறித்த செய்திகளை ஒரு பத்தி கூட எழுதாமல், நடிகர் விஜயகுமாரின் குடும்ப விவகாரத்தை பக்கம் பக்கமாக எழுதி தமிழ் வளர்க்கும் பத்திரிகைகளை ஏதாவது பரிசு கொடுத்து ஊக்குவிக்கலாம். இந்த அழகில் வரலாற்றுச் சுவடுகளுக்கு விளம்பரம் வேறு.
//

ஹூம்...அதெல்லாம் ஒரு பத்திரிக்கைன்னு அதைப் போயி.....

அது சரி(18185106603874041862) said...

//
தமிழன்னு சொல்லிக்கவே வெக்கப்படுறேன் என்று ட்ரெண்டியாகப் பேசிக் கொண்டு அடுத்த ஊழலுக்குக் காத்திருப்போம்.
//

நான் தமிழன் இல்லைன்னு நினைச்சாலே சந்தோஷமா இருக்கு :))

அது சரி(18185106603874041862) said...

//
என்னைப் போன்ற பரதேசிகள்
//

வெல்கம் டூ த க்ளப்பு :)))

அது சரி(18185106603874041862) said...

//
இங்கிலாந்தின் ஹில்டனுக்கு லண்டன் நார்விச் மருத்துவமனையிலிருந்தும், பிறப்பு விகிதத் துறையிலிருந்தும் வந்த கடிதங்களின் பேரில் மருத்துவமனைக்குச் சென்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்த பிறகு வந்த ரிஸல்டில் மிஸ்டர் ஹில்டன் இரண்டு குழந்தைகளைக் கருவில் சுமப்பதாக சரியான பெயர், பிறந்ததேதி, இன்சூரன்ஸ் தகவலோடு கொடுக்கப்பட்ட ரிப்போர்டினால் நண்பர்களின் கேலிக்கு ஆளாகி இருக்கிறார்
//

அதெல்லாம் ஒரு குன்ஸா சொல்றது தான். ரெண்டு கல்லுங்கிறதுக்கு ரெண்டு குழந்தைன்னு மாறிடுச்சு. ஒரு வார்த்தை தான மிஸ்டேக்கு? அட்ஜஸ்ட் பண்ணுங்க பாஸு :))

அது சரி(18185106603874041862) said...

//
கவுஜ கார்னர்!!!!
//

:)))

வழிப்போக்கன் - யோகேஷ் said...

பல அடுக்கு மத்தாப்பூக்கள்...........

கலாநேசன் said...

கவுஜ...கலக்கல்.

தல தளபதி said...

சுவாரஸ்யம்!

அஹமது இர்ஷாத் said...

ம‌த்தாப்பூ க‌ல‌க்க‌ல்..ச‌ர‌வ‌ண‌ப‌வ‌ன் செய்தி ரொம்ப்ப்ப்ப ச‌ரிங்கோ..

...கொசுக்கள் புகை பிடிக்கக் கற்றுகொண்டு விட்டன. கொசுவந்த்திச் சுருளில் உட்கார்ந்து நக்கலடிக்கின்றன//

ம்ம் திரும்ப‌ ப‌டித்த‌ வ‌ரிங்..ஜீப்ப‌ரு..

கனாக்காதலன் said...

அருமை !

ஆரூரன் விசுவநாதன் said...

//கவுஜ கார்னர்!!!!!//அய்யோ....அய்ய்யோ

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

சார் உங்க பிளாக் வந்தா, எப்பவும் டபுள் இடுகை குஷி......அதான் சார் உங்களுடைய பின்னூட்டங்களையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்....

இந்த சரவணபவன் மேட்டரு நான் கூட வருத்தப்பட்டிருக்கிறேன், பிறகு ஏன் அங்கே போகணும், வேற ஓட்டலா இல்ல ஊர்ல....எல்லாம் அந்த டேஸ்ட் பண்றவேலை, வேறென்ன....எல்லோரும் சேர்ந்து பாய்காட் பண்ணா எப்படி ஓட்டல் நடத்துவாங்க....?

ஸ்ரீராம். said...

கலந்த பல தகவல்களோடு சிறந்த ஒரு பதிவு.

சே.குமார் said...

மத்தாப்பூ மலர்ச்சியாய்..!

ரிஷபன் said...

தொகுத்த விஷயங்களும் ..உணர்வுகளும்..
மத்தாப்பூ அல்ல.. சர வெடி.

விந்தைமனிதன் said...

நல்ல மிக்ஸிங் சார். நச்சுனு இருக்கு

கலகலப்ரியா said...

||கொசுவந்த்திச் சுருளில்||இது யாரு சாரே... அம்ணி பேரு நல்லாகீது..

|| நடிகர் விஜயகுமாரின் குடும்ப விவகாரத்தை பக்கம் பக்கமாக||இந்த விவகாரம் என்னன்னு சொல்லாம... இசைப்ரியா அது இதுன்னு என்னமோ பேசறீங்க... பொறுப்பே இல்ல சார்..

||இன்று பாரதியின் பிறந்த நாள்.||அவரோட பிறந்த நாள் அன்னிக்கு நான் செம பிஸி... தாமதமான வாழ்த்துகள்...

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க சரவணன்
@@நன்றி பனித்துளி
@@நன்றிங்க தமிழமுதன்
@@நன்றி பழமைபேசி
@@நன்றிங்க செந்தில்
@@நன்றிங்க ம.தி.சுதா. படிச்சேன்.
@@நன்றி டி.வி.ஆர்.சார்.
@@நன்றிங்க சேட்டை.
@@நன்றிங்க யூர்கன்
@@நன்றி பிரபா.

வானம்பாடிகள் said...

@அது சரி(18185106603874041862)

எங்க நிலமை அப்படி அவ்வ்:((

வானம்பாடிகள் said...

@அது சரி(18185106603874041862)

ம்கும். நமக்கு ஒரு வார்த்த. நாள பின்ன கொழந்தைய கொன்னுட்டான்னு கேசு வந்தா:))

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க யோகேஷ்
@@நன்றிங்க கலாநேசன்
@@நன்றிங்க தல தளபதி
@@நன்றி இர்ஷாத்
@@நன்றி கனாக் காதலன்
@@ஏனுங் மொதலாளி:))
@@நன்றிங்க சங்கரி
@@நன்றி ஸ்ரீராம்.
@@நன்றி சே.குமார்
@@நன்றி ரிஷபன்

வானம்பாடிகள் said...

@கலகலப்ரியா

/
இது யாரு சாரே... அம்ணி பேரு நல்லாகீது./

அடங்கொன்னியா. சரி பண்ணிட்டேன்:))

/இந்த விவகாரம் என்னன்னு சொல்லாம... இசைப்ரியா அது இதுன்னு என்னமோ பேசறீங்க... பொறுப்பே இல்ல சார்../

அது மெகா தொடர் இடுகை போடணுமே.

/அவரோட பிறந்த நாள் அன்னிக்கு நான் செம பிஸி... தாமதமான வாழ்த்துகள்../

ஆணி புடுங்கறப்போ முனகின பாட்டுல ஒரு வரி வந்திருக்கும்ல:)))

tamil blogs said...

தமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://tamilblogs.corank.com/

blogpaandi said...

கவுஜ superb!