Tuesday, December 7, 2010

கஸ்ஸ்ஸ்ஸியும் கவிதைகள்..



தூண்டில்

கவிஞர்கள் கண்ணை மீனென்றல்லவா சொல்வார்கள்
உனக்கு மட்டும் ஏனடி தூண்டிலானது
பார் என் இதயம் சிக்கித் தவிக்கிறது.
***
வாசம்

குளித்து நடந்த உன் கால்தடத்தை
இணைத்துக் கூந்தல் கசிந்த நீர் கோலம் போட்டது
நிமிடத்தில் கோலம் காய்ந்தாலும்
நீ விட்டுச் சென்ற மஞ்சள் வாசம் நிறைத்திருக்கிறது
***
மூச்சு

ஓடி வராதே என்றால்
கேட்பதில்லை நீ
பார் உன்னைப் பார்த்தவருக்கெல்லாம்
மூச்சிறைக்கிறது.
***
முத்திரை

பேரழகி நீ என்று வாக்களித்தேன்
கள்ள ஓட்டுப் போடாமல் மார்பில்
நீ கடித்த தடம் இன்னும் இனிக்கிறது.
***

 


இமைகள்

கருவண்டுக் கண்களென்றா
படபடவென
இமையடித்துப் பார்க்கிறாய்?

***
புள்ளி

புள்ளிகள் இணைத்து
பிரமன் வரைந்த ஓவியம் நீ
இணைக்காமல் விட்ட புள்ளிகளில்
இன்னும் அழகாயிருக்கிறாய்!
***

இதழ்கள்

உன் இதழ்கள்
எனக்காகப் படைக்கப்பட்டவை
நீ சுவைப்பதற்கல்ல!



~~~~~~~~~~~~~~~~

78 comments:

vasu balaji said...

என்னைப் பார்த்து காப்பியடிச்சு கவுஜ எழுதும் கதிரை என்ன செய்யலாம்! :)))

போனப்போகுதுன்னு ஒரு நன்றி சொல்லிருவமா!!!!? அண்ணே நன்றிண்ணே!:)))

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

பதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...

Unknown said...

பாவம் சார். நம்ம ஆளு.

பிரபாகர் said...

இது போங்கு ஆட்டம். மொத பின்னுட்டமிட வழியில்லாம ஆசானே போட்டுகிட்டது முறையில்லை... படிச்சிட்டு வர்றேன்...

பிரபாகர்...

க ரா said...

இளமை ஊஞ்சாலுடுகிறது :) தமிழ நர்த்தனமாடுது :)

Unknown said...

வாலிப விருந்து போல இருக்கு!!!

க ரா said...

கஸிய்யும் கவிதைகளுக்கு கதிர் அண்ணனுக்கு நன்றிங்கோ :)

ம.தி.சுதா said...

அருமையான வரிகள்.. அருமையாக இருக்கிறது...

மணிஜி said...

வாலிபம் திரும்புது அய்யாவுக்கு:-0))

ம.தி.சுதா said...

முதல் பின்னுட்டம் கணக்கில் எடுக்கமாட்டேன்... விருந்தாளி சாப்பிட்டாத்தான் விருந்து...

ஹ...ஹ...ஹ...ஹ...

பிரபாகர் said...

ரொம்ப நல்லாருங்கய்யா!...

இமைகள் படபடக்க
இதழ்கள் துடிதுடிக்க
வாசம் மணமணக்க
மூச்சு கிறுகிறுக்க
முத்திரையை நீ பதிக்க
தூண்டில் புழுவாய் நான்!...

பிரபாகர்...

(உங்க கவிதை தலைப்புக்களை வைத்து ஒரு பின்னூட்ட முயற்சி)

Unknown said...

பையன் படிச்சிட்டு வீட்டில போட்டு கொடுத்திரப் போறான். இன்னும் இரு வாரத்துக்கு பத்திய சாப்பாடு தான். மிளகு கொழம்பு, பாகற்காய் பொறியல், வேப்பம் பூ ஸ்பெஷல் தான்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அடடா.. கவித கவித...

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

Ahamed irshad said...

ஆஹா கவிதையை பார்த்தா தலைக்கு விக் வெச்ச மாதிரி தெரியுது.. அருமை சார்...:)

Ahamed irshad said...
This comment has been removed by the author.
Ahamed irshad said...

கதிரு சார்க்கு எதிரு இப்படி வரும்'ன்னு எதிர்பார்க்கல...

அப்படீன்னா உசுப்பேத்தனும் அப்படிதானே..

நிலாமதி said...

கதிரை .............காலை உடைக்கலாமா? ( வேடிக்கை)

Chitra said...

என்னைப் பார்த்து காப்பியடிச்சு கவுஜ எழுதும் கதிரை என்ன செய்யலாம்! :)))

போனப்போகுதுன்னு ஒரு நன்றி சொல்லிருவமா!!!!? அண்ணே நன்றிண்ணே!:)))


.......ரைட்டு! :-)

பழமைபேசி said...

இதான் சரியான பதில்...இஃகிஃகி...

தூண்டிலும் மூச்சும் 100/100

பழமைபேசி said...

சேதுகாரு,

அண்ணத்தோ மாத்திரம் கொடவ காதே காதண்டி! ஆய்னாத்தோ பட்டிகிண்டே... அந்த்தே!

மாயனின் தொலைந்த ப‌க்கம் said...

இதழ்கள்,புள்ளி,முத்திரை,வாசம் ஆகிய தலைப்பிலான கவிதைகள் சூப்பர்...

(இளமை ஊஞ்சலாடுகிறது போல..!!!)

Unknown said...

பழமை! அர்த்தம் புரியல.

ஐயா கிட்ட seriuos ஆகா சொல்லல!

கலகலப்ரியா said...

அய்யோ அய்யோ அய்யோ இந்தக் கொடுமையக் கேப்பாரில்லையா...

ஆமா இது எதிர்க்கவுஜையா..?!

vasu balaji said...

@கலகலப்ரியா

இல்லைம்மா:)). எதிர் கிண்டல்

கலகலப்ரியா said...

கதிரின் இன்றைய இடுகைத் தலைப்பைப் படிக்கவும்...

ஆமென்..

கலகலப்ரியா said...

||கசியும் மௌனம்
எ.கொ.சா.இ -1||

ஆகா... நம்பர் வேற போட்டு ஆரம்பிச்சிருக்காய்ங்க...

ஸோ.. மாத்தி மாத்திக் கொடுமை தொடருமா..

எண்ட குருவாயூரப்பா...

காமராஜ் said...

பாலாண்ணா..
கதிரோ,எதிரோ
எதுவா வேண்ணாலும் இருக்கட்டும்
எங்களுக்கு நல்ல கவிதைகள் கிடைக்குது.

Unknown said...

"கஸ்ஸ்ஸ்ஸியும்" OK OK.

நசரேயன் said...

தூண்டில்

போடாமலே விழுந்து விட்டேன்
உன் இதய தூண்டிலில்
விழுந்த பின் தானே தெரிந்தது
என் கழுத்திலே கொக்கி இருப்பது

நசரேயன் said...

வாசம்

குளித்து குடித்தேன்
நிமிடத்திலே மறைந்த பாட்டில் தண்ணி
உன் நினைவுகளை மட்டும் விட்டு சென்றது
வாசமாய்

நசரேயன் said...

மூச்சு

நீ வரும் ஓசை கேட்டதும்
என் மூச்சுக்கே
மூச்சு முட்டுது

நசரேயன் said...

முத்திரை

உன் பெயரை முத்திரையாய்
நெஞ்சில் சுமக்கிறேன்
நீயோ அவன் பெயரை
கைகளில் சுமக்கிறாய்
அழியா முத்திரையாய்

நசரேயன் said...

இமைகள்

உன் இமைகள்
என்னைப் பார்த்ததும்
ஆமைகள் போல இமையாமல்
ஆந்தையாய் அலறுவதேன்

Unknown said...

Thalbathi, kalakkareenga.

நசரேயன் said...

புள்ளியியல் பாடத்திலே
நான் உன்னை
வரைந்த ஓவியத்துக்கு
பரிசாக பரீட்சையிலே
கோலம் கிடைத்தது

நசரேயன் said...

இதழ்கள்

தேனுக்கல்லவா சுவை அதிகம்
என்று
நினைத்திருந்தேன்
உன் இதழ்களை
சுவைக்கும் வரை

ஸ்ரீராம். said...

எல்லா ஏரியா விளையும் கலக்குறீங்க...கவிதைகள் அருமை. மூச்சு முத்திரை பதிக்குது. நசரேயன் கவிதை டாப்.

ஈரோடு கதிர் said...

எல்லாம் அந்த பின்னூட்டம் பண்ற வேலை!!!!! :)))

ஈரோடு கதிர் said...

ஆஸ்பத்திரி வேலைய வுட்டுப்புட்டு கஸ்ஸ்ஸ்ஸ்ஸியறீங்களோ!!!!

இனிமே சோறு கிடையாதுடியோவ்!!!!

ஈரோடு கதிர் said...

||Blogger நிலாமதி said...

கதிரை .............காலை உடைக்கலாமா? ( வேடிக்கை)||

கதிரைக் காலை உடைச்சா எப்படி உக்காருவீங்க! புதுக் கதிரை வாங்கனுமே!

ஆரூரன் விசுவநாதன் said...

ஆஹா......

அதெப்படிங்ணா, இன்னும் இம்புட்டு எழமயா இருக்கீங்க

Ashok D said...

ஆங் ரைட்டு... !

vasan said...

இணைக்காமல் விட்ட புள்ளிகள்.. தேடிக்கொண்டிருக்கிறேன்..
தேச‌(க‌)மெங்கும்.

சத்ரியன் said...

//உன் இதழ்கள்
எனக்காகப் படைக்கப்பட்டவை
நீ சுவைப்பதற்கல்ல!//

அண்ணே பாலா,

இது உங்களுக்கே நல்லாருக்கா.
இந்த சப்ஜெக்ட்டுகள நம்பி கடைத் தொறந்து வெச்சிருக்கிற எங்க பொழப்பு என்னாகுறது?

அண்ணே கதிர்,

இப்பிடி ஆளாளுக்கு எதிர் கவிஜையும், நறுக்குன்னும் நாலும் போட்டுக்கிட்டிருக்கீங்களே... ஏழைங்க எங்க பொழப்புல மண் விழுந்துறப் போகுது. பாத்து சூதனமா நடந்துக்குங்க.

சத்ரியன் said...

பாலா,

பால் வடியும் (கசியும் இல்லண்ணே) காதல் கவிதைகள்....!

சத்ரியன் said...

ஐம்பதிலும் காதல் வரும்ணு சொன்னா ஒருத்தரும் நம்ப மாட்டேங்கறீங்க.

இப்ப என்னாச்சி பாத்தீங்களா...

கதிர், ஆரூ(ருயி)ர், பாலாசி, வேலுஜி, பழமையண்ணே, நசரண்ணே, பிரபா... இன்னுமுள்ள etc நண்பர்களெல்லாம் வாங்கடியோ.......வ்!

cb.srinivasan said...

idhuthan mudal murai intha valai thalam vanthathu.... en kavithaigalai ingu eppadi pathivu seivathu .... uthavungal... cb.srinivas09@gmail.com... cb.srinivas09@yahoo.com... nandri...

Thenammai Lakshmanan said...

ஐயையோ காப்பாத்துங்க.. நான் எதிர்பார்த்துவந்த பாமரன் இவர் இல்லை.. :))

யார்யாரோ கசிய விட்டா நமக்கென்ன பாலா சார்.. யூ டூ .. அது சரி .. ஆல் இன் த கேம்...ஹாஹாஹா

பவள சங்கரி said...

மலரும் நினைவுகளா சார்.......ம்ம்ம் கல்க்குங்க......

பெசொவி said...

கதிர் அண்ணன் பாலா சாரைக் காப்பி அடிச்சு நச் கமெண்ட்ஸ் போடறாரு,
பாலா சாரு, கதிர் அண்ணன் மாதிரி கவுஜ எழுதுறாரு,
அப்ப, நானு பாலா சார வச்சு கேரக்டர் எழுதிட வேண்டியதுதான்....
:)

ரிஷபன் said...

உன்னைப் பார்த்தவருக்கெல்லாம்
மூச்சிறைக்கிறது.
சபாஷ்.. கஸ்ஸ்ஸ்ஸிகிறது..

க.பாலாசி said...

இதெல்லாம் சரியேயில்ல...அநியாயம்.. கொழந்தைங்க கையில இருக்கிற மிட்டாய பிடுங்கின மாதிரி வயசானவங்கள்ல இப்டி எழுதினா என்ன பண்றது... சோ..சேட்..



//குளித்து நடந்த உன் கால்தடத்தை
இணைத்துக் கூந்தல் கசிந்த நீர் கோலம் போட்டது
நிமிடத்தில் கோலம் காய்ந்தாலும்
நீ விட்டுச் சென்ற மஞ்சள் வாசம் நிறைத்திருக்கிறது//

சூப்ப்ப்ப்ப்பர்... ரொம்ப அதகளம்..

vasu balaji said...

@Sethu

அப்ப நானு.அவ்வ்வ்.

vasu balaji said...

@@நன்றி பிரபா
@@நன்றிங்க இராமசாமி
@@நன்றிங்க ம.தி.சுதா
@@மணிஜி அண்ணே. அதென்ன திரும்பறது. போகவே இல்லைங்கறேன்.

vasu balaji said...

@Sethu
அவன் ஸ்பானிஷ்லயோ மெக்ஸிகன்லயோ எழுதுறானோ என்னமோ:))

vasu balaji said...

@@நன்றிங்க கனாக் காதலன்
@@நன்றி சார்
@@நன்றி இர்ஷாத்
@@நன்றிங்க நிலாமதி
@@நன்றிங்க சித்ரா
@@நன்றிங்க பழமை

vasu balaji said...

@பழமைபேசி

பாக செப்யாரண்டி.

vasu balaji said...

@@நன்றிங்க மாயன்
@@நன்றி காமராஜ்
@@நன்றிங்க கலா நேசன்
@@அடிச்சி விளையாடுங்க தளபதி.
@@நன்றி ஸ்ரீராம்

vasu balaji said...

ஈரோடு கதிர்
December 8, 2010 9:22 AM

//எல்லாம் அந்த பின்னூட்டம் பண்ற வேலை!!!!! :)))//

பின்ன! பதில் மொய் வைப்போம்ல

/ஆஸ்பத்திரி வேலைய வுட்டுப்புட்டு கஸ்ஸ்ஸ்ஸ்ஸியறீங்களோ!!!!

இனிமே சோறு கிடையாதுடியோவ்!!!! /

ம்கும். குக்கரு சமைக்குது

vasu balaji said...

@ஆரூரன் விசுவநாதன்

அதென்ன இன்ன்ன்ன்ன்னும்னு. எப்ப நாம கெழமையா ஆனோம்

vasu balaji said...

@D.R.Ashok

:)) ரைட்டுங்கன்ணா:))))

vasu balaji said...

@vasan

அஹா கொசுறு கவிதை வாசன் சார்

vasu balaji said...

@சத்ரியன்
/இந்த சப்ஜெக்ட்டுகள நம்பி கடைத் தொறந்து வெச்சிருக்கிற எங்க பொழப்பு என்னாகுறது?
/

போட்டி இருந்தாத்தானே யாவாரம் களகட்டும்

vasu balaji said...

@தேனம்மை லெக்ஷ்மணன்

இது கதிர் எழுதினது:))

vasu balaji said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றிங்க

vasu balaji said...

@@நன்றிங்க பெ.சொ.வி
@@நன்றி ரிஷபன்

vasu balaji said...

@க.பாலாசி

ம்கும் வயசுப் புள்ள கெழவி, அம்மிக் கல்லு, கவரிங் செயினுன்னு புலம்பினா நாங்க என்ன பண்ண.

Unknown said...

சார், தளபதி என்ன சூபரா உங்க கவிதையை மாத்தி எழுதியிருக்கார். நீங்க கண்டுக்கவேயில்லையே!

vasu balaji said...

@கலகலப்ரியா

/கதிரின் இன்றைய இடுகைத் தலைப்பைப் படிக்கவும்...

ஆமென்.. /

ஆமாமா. ஆமென்.:))

அது சரி(18185106603874041862) said...

எனிக்கி ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இதெல்லாம் எந்தா சாரே? :))

பட்ஷே நிங்கள் ஈ எழுத்தை வாரமலருக்கு அனுப்பி வைக்காம். புதுக்கவிதைன்னு பேரு போட்டு பின்னட்டையில வருமாக்கும். மறக்காண்டாம் சாரே.

arasan said...

அருமையான தொகுப்பு.. ரொம்ப ரசித்தேன்...

அதுவும் அந்த "தூண்டில்" ம்ம்ம்ம்ம்ம் தூள் கெளப்பிட்டிங்க...

விடுதலை said...

இதையும் கொஞ்சம் படிக்கலாமே


பெண்ணெழுத்து: உடலரசியலும் உலக அரசியலும்!


http://maattru.blogspot.com/2010/12/blog-post_07.html

vasu balaji said...

@அது சரி(18185106603874041862)

ஹி ஹி. அது களியா! ஈ கதிரேட்டன் நறுக் எழுதி. ஞான் ஆயாளு மாதிரி கவிதை எழுதி. அத்தரயேயுள்ளு. வாரமலரோ. அங்ஙனயொரு பத்ரிகையுண்டோ. :))

vasu balaji said...

@அரசன்
நன்றிங்க அரசன்

vasu balaji said...

@விடுதலை

நன்றிங்க படிக்கிறேன்.

ஈ ரா said...

ஐயா,
என்னாது இது,,,?

வயசுப் பசங்க எல்லாம் கடைய மூடிட்டுப் போக வேண்டியதுதான்...

மிரண்டு போயிட்டேன்... அருமை

தல தளபதி said...

:-)))