Monday, December 6, 2010

கேரக்டர் - அவன்..

கேரக்டர் எழுத ஆரம்பித்ததிலிருந்து இவரை எழுதுவதா வேண்டாமா என்று ஒவ்வொரு முறையும் ஒரு சின்னப் போராட்டமே நடைபெறும் என்னுள். அப்படி ஒரு மனிதன். அவனின் சாதனை என்பதை விட இப்படி ஒருவனை கணவனாக வரித்து பிள்ளைகளை உன்னதமாக ஆளாக்கிய அந்தச் சகோதரியை சொல்லாமல் போனால் இவன் முழுமையில்லை. அதற்கு இவன் குறையையும் சொல்லியாக வேண்டிய நிர்பந்தம். பெயர் சொல்லிப் பாராட்டமுடியாத நிலை. மன்னித்துக் கொள் நண்பனே.

அவன் என் செக்‌ஷனுக்கு மாற்றலாகி வருமுன் அவனைப் பற்றிய விவரம் மாற்றலாகி வந்தது. என் அதிகாரி, என்னிடம், இவனை உன் கண்ட்ரோலில் வைத்துக் கொள். ரேஸ் பைத்தியம். அந்த மூத்த அதிகாரி சொன்னார். எங்கேயும் சுத்தவிடாடாதே. ஸ்ரிக்டா இருக்கணும். ஏதாவதுன்னா என்னிடம் சொல்லு என்றார். கண்டிப்புக்கும் எனக்கும் வெகுதூரம். நட்பாய்ச் சொன்னால் எல்லாம் நடக்கும் பாலிசி நம்முடையது. எனக்கு வந்ததடா வில்லங்கம் என்று ஒரு பூதத்தை எதிர் நோக்கியிருந்தேன்.

என்னைவிட சற்றே மூத்தவன். செக்கச் செவேலென்ற தேகம். களையான சிரித்தமுகம். செக்கச் சிவக்க ஒற்றைத் திருமண். கருகருவென அடர்த்தியாய் அலையலையாய் வாரிய கூந்தல். வெற்றிலை பாக்கு புகையிலை மென்று பல் என்பது வெள்ளை நிறம் என்று ஒரு முறை கவனப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம். ஒரு காற்றுக்குப் பறந்து விடுவேன் என்பது போன்ற ஒல்லியான உடல்வாகு. சிரித்த முகத்துடன் வந்து அறிமுகம் செய்து கொண்டு ஆர்டரை நீட்டிய போது தெரியாது இவன் என்னை எப்படி பாதிக்கப் போகிறானென்று.

தேனீதான். பரபரவென்று சுற்றிச் சுழன்று வேலை செய்வான். கையெழுத்து கோழி கிண்டினாற் போலிருக்கும். கேட்டுக் கேட்டுச் செய்வான். பரோபகாரி. யாராவது முதியவர் பென்ஷன் விஷயமாக அல்லது அட்ரஸ் கேட்டு வந்தால், இருக்கும் வேலையை விட்டுவிட்டு அவருக்கு வேண்டியதைச் செய்து கொடுத்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பான்.

கொஞ்ச நாளிலேயே மிகவும் நம்பிக்கைக்குரியவனாகி விட்டிருந்தான். நெருக்கமும் கூட. ஒரு நாள் தேனீர் அருந்துகையில் ரொம்பவும் யதார்த்தமாக, தன்னுடைய ரேஸ் பழக்கத்தைச் சொன்னான். ரொம்ப அழிஞ்சிட்டேன் சார். பெரிய ஆஃபிஸர் கிட்ட கூட போட்டு பார்த்துட்டாங்க. எக்மோர் பின்னாடி ஆஃபீஸா. மச்சான் கொஞ்சம் பாத்துக்கடா லெட்ரீன் போய்ட்டு வரேன்னு ஒரு வண்டி பிடிச்சி மாம்பலம் இறங்கி புக்கியிடம் பணம் கட்டிவிட்டு அடுத்த வண்டியில் வந்துவிடுவேன். இப்போதுதான் திருந்தி நன்றாக இருக்கிறேன் என்று சொன்னபோது கொஞ்சம் பெருமையாய்த்தானிருந்தது.

நாதாரி சார் நானு. நினைச்சா ச்சீன்னு சாவணும் போல வரும்சார். அர்பன் பேங்க் லோன் போட்டு ஆயிரக் கணக்கில கையில இருக்கும். பொண்டாட்டி புள்ளதாச்சி. காலைல ஒரு பன், டீ வாங்கி குடுத்துட்டு க்ளப்புல மொத்த துட்டும் தொலைச்சிட்டு போயிருக்கேன் சார். ராத்ரி வரைக்கும் ஒன்னும் சாப்பிடாம தூங்கியிருப்பா சார் என்று சொல்லும்போது கண்கலங்கும். கொஞ்சம் கடன் இருக்கு சார். அது முடிச்சிடலாம் என்ற போது நம்பிக்கையும் வந்தது.

திருவேங்கடம், ஜனா வகையறாவுடன் மங்காத்தா ஆடுவான். வெறும் பத்து ரூபாயோடு. பல நேரம் மொத்தம் உருவி விடுவான். ஆட்டம் முடிந்ததும், டமாஷ்கு ஆடினதுய்யா. இந்தா புடி என்று பெருந் தொகையை கொடுத்து விடுவான். இவனால் பல்ப் வாங்கிய சமயம் பல உண்டு. எலுமிச்சம் சாதம், காண்ட்ராஸ்டாக வெண்டைக்காய் பொரியல். ஒரு தீய்ந்த அடையாளம் இன்றி பச்சு பச்சென்று இருக்கும். சாதம் முழுதும் பரவலாக முந்திரிப் பருப்பு. பெரிய ராஜ பரம்பரை இவரு. முந்திரி கேக்குதோ என்றால், அட சை, 2 ரூ குடுத்தா இவ்வளவு முந்திரி குடுப்பான். இதுக்கு ராஜாவா இருக்கணுமா என்றதை நம்பி, ஒரு பண்டிகையன்று என் அம்மா பக்கதுக் கடையில் முந்திரி வாங்கி வரச்சொன்னபோதுதான் தெரிந்தது 5ரூபாய்க்கு 5 முந்திரி என்று. அப்படியொரு தில்லாலங்கிடி ஆசாமி.

‘த்தா’ இல்லாமல் பேச வராது. ஆனால் நெற்றியில் ஒத்தையை நம்பி, சில நேரம் ஏதோ விசேஷத்துக்கு கூப்பிட வருபவர்கள் இது பழைய பஞ்சாங்கம் என்று ‘அந்த’ பாஷையில் பேசினால் நொந்து நூலாகிப் போவார்கள். யாராவது இறந்தால் முதல் வருட திதியை ‘வருஷாப்திகம்’ என்று சொல்வார்கள். குழந்தை பிறந்து முதல் வருட பிறந்த நாளை ‘ஆயுஷ் ஹோமம்’ என்பார்கள். ஒரு பெரியவர் தன் பேரனுக்கு பிறந்த நாள் விழாவுக்கு அழைக்க வருகிறேன் என்று ட்ரெயினில் சொல்லும்போது ‘ஆயுஷ் ஹோமம்’ என்று சொன்னதை மறந்து, பத்திரிகை கொண்டு வந்தவரிடம் ‘என்ன மாமா! பேரனுக்கு வருஷாப்தின்னு சொன்னீங்களே. அந்த பத்திரிகையா என்றதும் அவர் பதறின பதறல் இருக்கிறதே.

எம்.ஜி.ஆர் மறைந்த தினம். சம்பள பில் போயாக வேண்டும். ஊரெங்கும் கடையடைப்பு. கல் வீச்சு. ஒரு சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். சார் போலாமா என்று. பயந்து பயந்து டபுள்ஸ் போய், ஓட்டேரியில் கல்வீச்சில் சிதறி ஓடி, எப்படியோ சேர்ந்து நடந்தே போனோம். அடுத்த நாள் சைக்கிளும் வேண்டாம் நடந்தே போகலாம் என்று வந்துவிட்டான். மொத்த பில்லும் முடித்து, அடுத்த செக்‌ஷன் பில்லும் பெரும்பாலும் முடித்துப் போட்டோம் இருவரும். அடுத்த வேலை நாளில், சம்பளம் பெரிய பிரச்சனையாய் பேசப்பட்டு, எல்லாருக்குமே கேஷிலும், ஆடிட்டிங் பிறகு செய்து கொள்ளலாம் என்று அதிகாரி சொன்னபோது மொத்த பில்லும் ரெடி என்றதில் அசந்து போனார்.

ஜாதி என்னய்யா ஜாதி. என்னமொ பொறந்துட்டோம். எங்கப்பன் பூணூல் போட்டு விட்டான். ஒத்தை போடாட்டி என்னமோ போல இருக்கும். செத்தா அரணாக் கயிறைக் கூட அறுத்துட்டுதானே அனுப்பறாங்க என்பது அவரின் தத்துவம். மூலக் கொத்தளச் சாவுக்கு தப்பாட்டத்துடன் ஜோதியாவான். பிணத்தைத் தூக்குவதிலோ, குழிக்குள் வாங்க மற்றவர் தயங்குகையில் முதலில் குதிப்பதோ கொஞ்சமும் தயக்கமிருக்காது. ‘மொகம் பாக்கறவங்க பார்க்கலாம், மூடப் போராங்கவும், உடன் பாலேய் உடன் பலேயிலும்’ அதகளம் பண்ணுவான். பார்ப்பனர் வீட்டு சாவில் தர்ப்பை வாங்கி பேண்டில் சொருகிக் கொண்டு ரொம்பவும் ஐதீகமாக எல்லா சாங்கியமும் செய்வான்.

திரும்பவும் ஆள் அவ்வபோது காணாமல் போக ஆரம்பித்ததும், கேட்கும் போதெல்லாம் அங்கே போனேன் இங்கே போனேன் என்று சாக்கு வரும். ஒரு நாள் கேட்டேவிட்டேன். ஆரம்பிச்சாச்சா திரும்ப என்று. ‘இனியும் ரேசுக்கு போறதை விட’ என்று மோசமான ஒரு வாசகம் சொன்னான். டீக்கு போகையில் ஒரு சக ரேசரை பார்த்த ஆர்வ மிகுதியில், ‘இன்னா மாமா! நேத்து செம அடியாமே’ என்று கேட்க அவர் நீ எங்க முதல் ரேசுக்கப்புறம் ஆளைக் காணோம் என்று போட்டுக் கொடுத்துவிட்டார். அப்படியும் அவர் சும்மா சொல்றார் சார் என்றாலும் கடன், வீட்டுக்கு சரியாக சம்பளம் போவதில்லை என்பது தெரிய வந்தது.

ஒரு கட்டத்தில் எப்படியோ வசதியான வேறொரு அலுவலகத்துக்கு மாற்றலாகிப் போனதும் தொடர்பில்லாமல் போனது. சில காரணங்களினால் மனவருத்தமும் கூட. ஆனாலும் அங்கேயும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது போல் வேலையில் அவ்வளவு நல்ல பெயர். எப்போதாவது பார்த்தால் தயக்கமின்றி பேச முடிந்தாலும் அந்த வலி மறையாமல் ஊமையாய் வலிக்கும்தான்.

கடைசியாக, ஒரு அதிகாரியின் தாயின் இறப்பில் பார்த்து ஒன்றாய்க் கிளம்பியபோது மகன் எஞ்சினியரிங் முடித்து எம்.பி.ஏ. படிப்பதும், மகள் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் இருப்பதும் பெருமையாகச் சொன்னபோது அந்தச் சகோதரியைக் கும்பிட வேண்டும்போலிருந்தது. இல்லையென்றால் இப்படி ஒரு நாதாரியுடன் வாழ்ந்து இது சாத்தியமா?

இப்போதும் அன்று பார்த்தார்போல் அதே உருவம், ஒரு நரைமுடியில்லை, மூப்பு தட்டாத அதே இளம் முகம். மனுஷனுக்கு வீக்னெஸ் இருந்தால் என்ன ? இப்படி மனுஷனாய் எல்லோருடனும் ஒட்டுறவாய்ப்  பழக முடிந்து, எதானாலும் பார்த்துக்கலாம் என்ற மனோதிடமும் இருந்தால் மூப்பு வராதோ?

52 comments:

கலகலப்ரியா said...

ம்ம்... நல்லாருக்கு சார்..

கலகலப்ரியா said...

||திரும்பவும் ஆள் அவ்வபோது காணாமல் போக ஆரம்பித்ததும், கேட்கும் போதெல்லாம் அங்கே போனேன் இங்கே போனேன் என்று சாக்கு வரும்.||

ஹூம்... வெளிப்படையாக இருக்க முடியாது போகும் தருணங்கள் நிறைய வாய்க்கின்றன போலும்..

கலகலப்ரியா said...

உங்கள் கேரக்டர் பதிவுகளில்... அடிக்கடி வரும் ரேஸ் என்ற வார்த்தையும்... அதன் விளைவுகளும்... திகிலூட்டுகின்றன...

vasu balaji said...

/கலகலப்ரியா said...

ம்ம்... நல்லாருக்கு சார்../

நன்றிம்மா. ரொம்ப நாளாச்சி முதல் கமெண்ட் வாங்கி.

vasu balaji said...

கலகலப்ரியா said...

// ஹூம்... வெளிப்படையாக இருக்க முடியாது போகும் தருணங்கள் நிறைய வாய்க்கின்றன போலும்..//

தொலைச்ச இடத்துலதானே தேடணும்னு ஒரு தத்துவம் வேற சொல்லுவாய்ங்க.

vasu balaji said...

கலகலப்ரியா said...

// உங்கள் கேரக்டர் பதிவுகளில்... அடிக்கடி வரும் ரேஸ் என்ற வார்த்தையும்... அதன் விளைவுகளும்... திகிலூட்டுகின்றன...//

ம்கும். இது அப்படி பெரிய ரேஞ்ச் இல்லைம்மா. அஞ்சு,பத்துன்னு கட்டுவாங்க. அன்னைய செலவுக்கு வந்தா சரி. போனா போனதுன்னு. சிறுக சிறுக கடன் ஏறும்.

பிரபாகர் said...

ஆஹா... துண்ட போட்டுட்டு படிக்கலாம்னு பார்த்தா.... வட போச்சே... சரி, தோற்றது என் சகோவிடம் தானே!...

பிரபாகர்...

பிரபாகர் said...

//
5ரூபாய்க்கு 5 முந்திரி என்று
//
முந்திரி வாங்கி, தான் பல்பு வாங்கியதை தெரிந்துகொண்டதைப் படித்து சிரித்தேன்... அஞ்சி ரூவாய்க்கு அஞ்சு இன்னும் அதிகமாய் சிரித்தேன்...

பிரபாகர்...

பிரபாகர் said...

வாழ்க்கையை டேக் இட் ஈசி என எடுத்துக்கொள்ளும் கேரக்டர் அய்யா!... அவரின் மற்ற நல்ல குணங்கள் பேலன்ஸ் செய்வதாலும் நீங்கள் சொன்னது போல் வாய்த்து துணைவியும் தான்!...

கலக்கல் கேரக்டர்... ‘அவன்’ அருமை.

பிரபாகர்...

பழமைபேசி said...

முழு நேர எழுத்தாளருக்கு வணக்கம்!

vasu balaji said...

@பழமைபேசி

=)) வணக்கம்.

பெசொவி said...

வழக்கம்போல் அசத்தல், வாழ்த்துகள் சார்!

சங்கரியின் செய்திகள்.. said...

வழக்கம் போல் அருமை சார்.

Unknown said...

பழமையாரை வழிமொழிகிறேன்.

Unknown said...

அந்த சகோதரிக்கு வணக்கம் சார். ரொம்ப நல்லவங்களாக இருக்க வேண்டும்.

Subankan said...

அருமை சார் :)

vinthaimanithan said...

நல்லாத்தான் சுவாரஸ்யமா இருக்கு. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ஆச்சர்யம்!

cheena (சீனா) said...

அன்பின் பாலா - அருமை அருமை - என்னைப் பொறுத்த வரையில் அவர் ஒரு நல்ல மனிதனாகத் தான் இருகீறார். என்ன செய்வது - பழகிய தோஷம் விட மாட்டேன் என்கிறது. இருப்பினும் கட்டுக்குள் தானே வைத்திருக்கிறார். எத்தனை நல்ல குணங்கள் இருந்தும் - ஒரே ஒரு கெட்ட பழக்கத்தினால் பாலாவினாலேயே வெறுக்கப்படுகிறார். அவரது குடும்பத்தார் அனைவருமே பொறுமைசாலிகள் - அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Kumky said...

இன்னமும் ரேஸ் நடக்கிறதா பாலாண்ணே..?

உங்க மூலமாய் தெரிந்து இவர் ஒருவர்...

தெரியாமல் எத்தனை குடும்பங்களோ..

பல பத்தாண்டுகள் முன்பு சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கையில் தினசரி கிண்டி ரயில்வே மேம்பாலத்தில் கடக்கும் போது சிதறிக்கிடந்த ரேஸ் தொடர்பான பேப்பர்களும், மனித முகங்களும் நினவுக்கு வந்து போகிறது.

Paleo God said...

கேரக்டர் :))

ரேஸ். ஆமாம் சார் இத ஏன் இன்னும் விட்டு வெச்சிருக்காங்கன்னு தெரியல! டாஸ்மாக் பக்கத்திலயே இதையும் ஒரு கவுண்டர் போட்டு ஆரமிச்சிடலாம், அடுத்த மெஜாரிட்டி ஆட்சிலயாவது செய்றாங்களான்னு பார்ப்போம்!

ஆரூரன் விசுவநாதன் said...

கேரக்டர் படிக்க ஆரம்பித்ததிலிருந்து எல்லோரையும் வித்தியாசமான கோணத்திலேயே பார்க்க ஆரம்பித்துவிட்டேன். வாழ்த்துக்கள்.

Ahamed irshad said...

ந‌ல்லாயிருக்கு சார். அந்த‌ முக‌ம‌றியா ச‌கோத‌ரிக்கு என் வ‌ண‌க்க‌ங்க‌ள்..

Chitra said...

இப்படி மனுஷனாய் எல்லோருடனும் ஒட்டுறவாய்ப் பழக முடிந்து, எதானாலும் பார்த்துக்கலாம் என்ற மனோதிடமும் இருந்தால் மூப்பு வராதோ?


......இருக்கலாம்ங்க.....

நல்லா எழுதி இருக்கீங்க, Sir!

a said...

ரொம்ப நல்லா எழுதிரூக்கீங்க பாலா சார்.........

creativemani said...

பௌலிங் பிட்ச்லேயே செஞ்சுரி அடிப்பீங்களே சார்.. பேட்டிங் ட்ராக் (கேரக்டர்) ஆச்சே.. கேக்கவா வேணும்.. அதகளம்..

'பரிவை' சே.குமார் said...

//மகன் எஞ்சினியரிங் முடித்து எம்.பி.ஏ. படிப்பதும், மகள் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் இருப்பதும் பெருமையாகச் சொன்னபோது அந்தச் சகோதரியைக் கும்பிட வேண்டும்போலிருந்தது.//

இவர் போல் நிறைய நம்மிடையே உண்டு ஐயா... அந்த அம்மா போல் மகராசிகள் இன்னும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்...
ஊதாரியாய் இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவும் அந்தக் குணம் எத்தனை பேருக்கு வந்திடும் சொல்லுங்க...

நான் ரொம்ப யோக்கியம் என்று மார்தட்டிக் கொள்ளுபவன் மனதிற்குள் உதவும் குணம் தோன்றுமா சொல்லுங்கள்...

நல்ல பகிர்வு... கேரக்டர் மனசில் உயர்ந்த இடத்தில்..!

சிநேகிதன் அக்பர் said...

பெரும்பாலும் ஏதாவது ஒரு பழக்கத்துக்கு நாம் அடிமைதான் போலும்...

நல்லா எழுதியிருக்கிங்க அண்ணா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு Bala

க.பாலாசி said...

ஆனாலும் பாத்தீங்களா, எவ்வளவு சூட்டிகலான மனுஷனாயிருந்தாலும் எதோவொரு விசயத்துல அவனோட வாழ்க்கை அடிபட்டுபோயிடுது. பொண்டாட்டிக்காரின்னு ஒருத்தியும் சரியில்லாம போயிட்டோ அந்த குடும்பத்தோட நிலமைய நினைச்சுப்பாருங்க. அதுங்களுக்கு பொறந்ததுங்கதான் பெறவு தெருவுல நிக்குங்க. என்னமோ அந்தம்மா அவராலும் வணங்கவேண்டியவங்கதான்.

சத்ரியன் said...

//என்னைவிட சற்றே மூத்தவன். செக்கச் செவேலென்ற தேகம்.//

ஏனுங்ணா,

என்னைவிட செக்கச்செவேலென்ற தேகம்னு போட்டிருந்தா என்ன குறைஞ்சி போயிருக்கும்...?

ரிஷபன் said...

கேரக்டர் ஸ்டடியில் உங்களை அடிச்சுக்க ஆளில்லை..

சத்ரியன் said...

ஆனாலும், அவன் நல்லவன் போலதான் தெரியுது சார்.

தாராபுரத்தான் said...

ரோபகாரி. யாராவது முதியவர் பென்ஷன் விஷயமாக அல்லது அட்ரஸ் கேட்டு வந்தால், இருக்கும் வேலையை விட்டுவிட்டு அவருக்கு வேண்டியதைச் செய்து கொடுத்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பான். ..இவரா நாதாரி

நசரேயன் said...

//செக்கச் செவேலென்ற தேகம்.//

என்னையே மாதிரியா ?

காமராஜ் said...

மனிதர்களை நூறுசதமான பரிமாணத்தில் பார்க்கவேண்டுமானால் அப்படியே வானம்பாடிகளுக்குத்தான் வரணும்.இது சரி இது தப்புங்க்ற கணக்கு சொல்ல நம்ம யாரு. க்ளாஸ் அண்ணா வழக்கம்போல.

"உழவன்" "Uzhavan" said...

//இல்லையென்றால் இப்படி ஒரு நாதாரியுடன் வாழ்ந்து இது சாத்தியமா? //
 
நிச்சயமா..

nellai அண்ணாச்சி said...

அந்த மவராசி நல்லா இருக்கணும் அய்யா

sriram said...

பாலாண்ணா,
மணி சொன்னது போல கேரக்டர் உங்க ஹோம் கிரவுண்ட் மாதிரி.. செஞ்சுரி அடிக்கலேன்னாதான் ஆச்சர்யம்.

சீனா ஐயா மற்றும் தாராபுரத்தான் பழனிச்சாமி ஐயா சொன்னவைதான் எனக்கும் தோணித்து.

99 ப்ளஸ் இருந்தும் அந்த ஒரு மைனஸ் எப்படி அவரை உங்களால் நாதாரின்னு சொல்லவைத்ததுன்னு ஆச்சரியமா இருக்கு.

என்னோட கேரக்டரும் கிட்டத்தட்ட இவரை மாதிரிதான். வேலையில் கெட்டி, உதவி கேக்காமலே போயி நிப்பேன், திருமண் எனக்கும் பொருந்தும், ஒரு காலத்தில் எனக்கும் “த்தா” இல்லாம பேச வராது. எம் ஜி யார் செத்த மறுநாள் கிருஸ்துமஸ். கே கே நகரில் இருந்த ஒரு கிருத்துவ நண்பன் வீட்டுக்கு வர்றேன்னு வார்த்தை கொடுத்திட்டேன், அத்தனை பிரச்சனைகளுக்கிடையேயும் கோடம்பாக்கத்திலிருந்து நடந்தே அவன் வீட்டுக்குப் போனேன் (அப்போ என் வயசு 13). எனக்கு உங்க “அவனை” ப்போல ஒரு வீக்னஸ் இருக்கு. தப்புன்னு தெரிஞ்சும் பாக்கு போடற பழக்கம். அப்போ நானும் நாதாரியா பாலாண்ணா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

vasu balaji said...

@sriram

அந்த நாதாரிக்கான காரணம் வேறே. ஆனாலும் ஒரு வாஞ்சையும் கலந்த நாதாரி அது.

ஸ்ரீராம். said...

நிறைய நல்ல குணங்கள்தான் தெரியுது. அவரோட கெட்ட பழக்கம் பாதிக்கிற அளவு தெரியலையா, நீங்கள் சொல்லவில்லையா? மனைவியின் சாமர்த்தியத்தில் குடும்பம் நிமிர்ந்தது என்றாலும் வேலையில் கெட்டியாக இருந்திருக்கிறாரே...

Unknown said...

இன்னொருத்தரைப் பற்றிய தனி மனிதர் விமர்சனம் ஒரு அளவுக்கு மேல் செய்ய முடியாது. ஆதலால் அவருடைய மற்ற கெட்ட பழக்கங்களையும் வெளிபடையாக தெரிவிக்க வானம்பாடி ஐயா விரும்பாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதனால் ஒரு நாதாரி என்ற விமர்சனத்தோட நிறுத்தி விட்டார் போலிருக்கிறது. இருப்பினும் அவரது சந்ததியினர் இதைப் படித்தால் வருத்தப் பட நேரலாம்.

பழமைபேசி said...

மகிழ்ச்சியா இருக்கு.... படிச்சிட்டுப் பின்னூட்டம் போட ஆரம்பிச்சிட்டாங்க மக்க!!

vasu balaji said...

@@நன்றி பிரபா
@@நன்றி பெ.சொ.வி
@@நன்றிங்க சங்கரி
@@நன்றி சேது
@@நன்றி சுபாங்கன்
@@நன்றி ராஜாராமன்
@@நன்றி சீனாசார்
@@நன்றிங்க கும்க்கி

vasu balaji said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கேரக்டர் :))

ரேஸ். ஆமாம் சார் இத ஏன் இன்னும் விட்டு வெச்சிருக்காங்கன்னு தெரியல! டாஸ்மாக் பக்கத்திலயே இதையும் ஒரு கவுண்டர் போட்டு ஆரமிச்சிடலாம், அடுத்த மெஜாரிட்டி ஆட்சிலயாவது செய்றாங்களான்னு பார்ப்போம்!//

ஜெமினி ஃப்ளை ஓவர்ல இருக்கிற குதிரை சிலைய தூக்கணுமே

vasu balaji said...

@@நன்றி ஆரூரன்
@@நன்றி இர்ஷாத்
@@நன்றிங்க சித்ரா
@@நன்றி யோகேஷ்
@@நன்றி மணிகண்டன்
@@நன்றி சே.குமார்
@@நன்றி அக்பர்
@@நன்றி சார்
@@நன்றி பாலாசி

vasu balaji said...

சத்ரியன் said...

//என்னைவிட சற்றே மூத்தவன். செக்கச் செவேலென்ற தேகம்.//

ஏனுங்ணா,

என்னைவிட செக்கச்செவேலென்ற தேகம்னு போட்டிருந்தா என்ன குறைஞ்சி போயிருக்கும்...?//


சொ.கா.சூவா:))

vasu balaji said...

நன்றி ரிஷபன்
ஆமாம் சத்ரியன். ரொம்ப நல்ல மனுசன்.
@@அண்ணே. அது கொஞ்சம் செல்லமாவும் சொன்னதுண்ணே.
@@தளபதி.அவ்வ்வ்.

vasu balaji said...

@காமராஜ்

/.இது சரி இது தப்புங்க்ற கணக்கு சொல்ல நம்ம யாரு. /

சரியாச் சொன்னீங்க காமராஜ்.

vasu balaji said...

@@நன்றிங்க உழவன்
@@நன்றிங்க அண்ணாச்சி

vasu balaji said...

@ஸ்ரீராம்.

வேறே எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. எந்த ஒரு சாதாரணனையும் விட ஒரு படி மேலேயே.

vasu balaji said...

@Sethu

இல்லை சேது. ரேசும், கடனும் தவிர இயலாமையும்.:(. கூடியவரை யாராலேயும் ஊகிக்க முடியாது. அவனுக்கு நெருங்கியவர் தவிர.

vasu balaji said...

@பழமைபேசி
:))