Tuesday, October 19, 2010

பாராக் கதைகள் - நம்பிக்கை

கலியாணத்துக்கே உண்டான கலகலப்புடன் இருந்தது அந்த மண்டபம். சிரிப்பும்,பேச்சுமாய் மகிழ்ச்சியான சூழல் மாறி மெது மெதுவே கிசு கிசுப்பும் அமைதியும் படரத் தொடங்கியது. ஆசீர்வாதத்துக்கு கொண்டுவந்த தாலியைக் காணவில்லை. தேடலுக்கும் வேண்டுகோளுக்குப் பிறகும் கிடைக்காததால் எல்லாரையும் பரிசோதிப்பது என்று முடிவானது. எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் உட்கார்ந்திருந்தவரை அழைத்தபோது

‘யோவ்! என்னைப் பார்த்தா வரிசையில நிக்கச் சொல்ற. உன் ஜூஜூபி தாலி எனக்கு எதுக்குய்யா. நான் யார் தெரியுமா? ......... டெக்ஸ்டைல்ஸ் ஓனர்’ என்றார்.

மெதுவான புன்சிரிப்புடன் அந்த இளைஞன்

‘உங்களுக்கு தெரியாததா முதலாளி. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆஃபீசரானாலும் சரி, உங்களை மாதிரி பெரிய வியாபாரியானாலும் சரி, எங்களை மாதிரி அன்னாடங்காச்சியா இருந்தாலும் சரி, கையில வேற பை இருந்தா புடுங்கி வச்சிகிட்டு டோக்கன் குடுத்துதானே உங்க கடைக்குள்ள அனுப்பறீங்க? எங்கள வச்சி பிழைக்கிற நீங்களே எங்களை நம்ப மாட்டிங்கறீஙளேன்னு நாங்க கேக்குறமா? சந்தேகத்துக்கு முன்னாடி முதலாளி என்ன கூலிக்காரன் என்னங்க? வாங்க செக் பண்ணனும் என்றான்.

~~~~~~~~~~~~~~~~~~~

நகரத்தின் மிகப்பெரிய ஹோட்டலின் மேல்மாடி தனி ஸ்யூட்டில் மதுவருந்தியபடி அமர்ந்திருந்தனர் ஆளும்கட்சி, எதிர்கட்சித் தலைவரும், அந்த மிகப் பெரிய தொழிலதிபரும். சமீபத்தில் லைசன்சுக்கு விட்ட கல்குவாரியில் கொஞ்சம் வைரமும் கிடைப்பதால் மூச்சுக்காட்டாமல் ஆட்டையைப் போட பேரம் முடிந்த சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

‘ஏன் தலைவரே! என்னைக்குனாச்சும் ஜனங்களுக்கு ரோசம் வந்து, உங்களை நம்பித் தேர்ந்தெடுக்குறோம். எங்களுக்காடா துரோகம் பண்றீங்கன்னு பொங்கிட்டா நம்ம கதி..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்’ என்று சிரித்தது எதிர்கட்சி.

‘அடப் போய்யா! முதல் தேர்தல்ல இருந்து இன்னைவரைக்கும் நம்மள நம்பித் தேர்ந்தெடுக்குறவன நாம நம்பாம விரல்ல மை தடவித்தானே அனுப்புறோம். அதுக்கே ரோஷம் வரலை. இதுக்கெல்லாமா ரோஷப்படுவானுங்க. அடுத்த ரவுண்டு ஊத்துய்யா’ என்று சிரித்தது ஆளும்கட்சி.

~~~~~~~~~~~~~~~~~~~~~

அலுவலகத்திலிருந்து வந்து ப்ரீஃப் கேஸ் ஒரு புறம், ஷூ சாக்ஸ் மறுபுறம் என்று வீசிவிட்டு அமர்ந்தான் ராஜு. கடும் கோபத்திலிருப்பதை அறிந்த அவன் மனைவி அமைதியாக டீ கொண்டு வந்து வைத்துவிட்டு அமர்ந்தாள்.

‘சே! எத்தனை வருஷப் பழக்கம் எனக்கும் ஆனந்துக்கும். ஒரு அவசரத்துக்கு இருவத்தஞ்சாயிரம் கேட்டால், நம்பிக்கையில்லாம ப்ரோநோட் எழுதி கையெழுத்து கேக்குறான். இவனெல்லாம் நண்பனா?’ என்று வெடித்தான் ராஜு.

‘விடுங்க! நான் உங்க மனைவிதானே. உங்களை நம்பி வாழ வந்தவள்தானே. நீங்க கூடத்தான் வாராவாரம் செலவுக்கு என்ன வேணுமோ கொடுத்துட்டு கப்போர்டைப் பூட்டி சாவியை கொண்டு போறீங்க. எதிர்பாராத செலவுக்கு காசு கேட்டா அன்னைக்குதானே முன்னூறு கொடுத்தேன். என்ன செலவுன்னு கணக்கு கேக்குறீங்க. நீங்கல்லாம் ஒரு புருசனான்னு நான் கேட்டனா’ என்றாள் அவன் மனைவி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

55 comments:

எல் கே said...

:)))

Unknown said...

very very cute stories. I laughed alone. last one very very nice

ராஜ நடராஜன் said...

எனக்கு முன்னால் பின்னூட்டமிடுபவர்கள் கண்கொத்தி பதிவர்கள்:)

ராஜ நடராஜன் said...

இரண்டாவதுக்கு இரண்டாவதா ஒரு ஸ்பெஷல் பின்னூட்டம்.

ஆடம்பர ஹோட்டல்ல வெத்தலை கொதப்பிகிட்டு ஒரு அரசியல் பெரிசை ஒரு முறை பார்த்தேன்.ஒருவேளை ஆட்டய போடுறதப் பத்தி பேசுறதுக்காக இருக்குமோ?சான்ஸ் இல்லையே!அது தேறாத கட்சியாயிற்றே.

நேசமித்ரன் said...

:)

நல்லா இருக்கு சார்

thiyaa said...

அருமை நல்ல பதிவு

பழமைபேசி said...

நான் க.கொ.ப அல்ல!!!

பழமைபேசி said...

நான் க.கொ.ப அல்ல!!! ஆனா, சேது சாரைப்பத்தி எனக்கு ஒன்னுந் தெரியாது!!!

க ரா said...

மூனாவது அருமை சார் :)

Bavan said...

அனைத்துக்கதைகளின் முடிவிலும் அட என்பது போன்ற புன்னகை மிஞ்சியது..:D

சூப்பர் சார்..:D

Unknown said...

"நான் க.கொ.ப அல்ல!!! ஆனா, சேது சாரைப்பத்தி எனக்கு ஒன்னுந் தெரியாது!!!"

க.கொ.ப என்றால் என்ன?

பழமை, கொஞ்சம் புரியறமாதிரி சொல்லி தலையில அரக்கத் தேச்சா நல்லா இருக்கும்.

சார், கதை மூனும் சூப்பர். லாஸ்ட் தான் டாப்புல.

Unknown said...

க.கொ.ப என்றால் என்ன?

கண் கொத்திப் பறவையா?

Unknown said...

மூணு கதையுமே சூப்பர்..

நசரேயன் said...

நான் க.கொ.ப அல்ல!!?

vasu balaji said...

@Sethu
ராஜ நடராஜன் said...

எனக்கு முன்னால் பின்னூட்டமிடுபவர்கள் கண்கொத்தி பதிவர்கள்:)

dheva said...

‘//உங்களுக்கு தெரியாததா முதலாளி. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆஃபீசரானாலும் சரி, உங்களை மாதிரி பெரிய வியாபாரியானாலும் சரி, எங்களை மாதிரி அன்னாடங்காச்சியா இருந்தாலும் சரி, கையில வேற பை இருந்தா புடுங்கி வச்சிகிட்டு டோக்கன் குடுத்துதானே உங்க கடைக்குள்ள அனுப்பறீங்க? எங்கள வச்சி பிழைக்கிற நீங்களே எங்களை நம்ப மாட்டிங்கறீஙளேன்னு நாங்க கேக்குறமா? சந்தேகத்துக்கு முன்னாடி முதலாளி என்ன கூலிக்காரன் என்னங்க? வாங்க செக் பண்ணனும் என்றான்...//

இது செம அண்ணே....!

Menaga Sathia said...

//விடுங்க! நான் உங்க மனைவிதானே. உங்களை நம்பி வாழ வந்தவள்தானே. நீங்க கூடத்தான் வாராவாரம் செலவுக்கு என்ன வேணுமோ கொடுத்துட்டு கப்போர்டைப் பூட்டி சாவியை கொண்டு போறீங்க. எதிர்பாராத செலவுக்கு காசு கேட்டா அன்னைக்குதானே முன்னூறு கொடுத்தேன். என்ன செலவுன்னு கணக்கு கேக்குறீங்க. நீங்கல்லாம் ஒரு புருசனான்னு நான் கேட்டனா’ என்றாள் அவன் மனைவி.
//ஆஹா இது இது சூப்பர்ர்ர்...

மாதேவி said...

ஹா....:))

Rekha raghavan said...

மூன்று பாராக் கதைகளும் அருமை.

ரேகா ராகவன்.

Chitra said...

எல்லாமே நல்லா இருக்குங்க... கடைசி ஒண்ணு, சான்சே இல்லை....!

Ahamed irshad said...

பார்க்க‌ வைக்கிற‌ கதைக‌ள்..அருமைங்க‌..

Radhakrishnan said...

மிகவும் நன்றாக இருக்கிறது.

சூர்யா ௧ண்ணன் said...

கலக்கல் தலைவா!

VISA said...

:)

பின்னோக்கி said...

ஒரே மாதிரியான கருத்தில் மூணு கதை. படிக்க நல்லா இருக்கு.

கலகலப்ரியா said...

நல்லாருக்கு சார் குட்டிக் குட்டிக் கதைகள்... (என்னாச்சு... பழைய ஆனந்த விகடன்ல ஒரு பக்கக் கதைகள் படிச்சது கனவில வந்திச்சா... )

காமராஜ் said...

மூனாவது படிச்சுமுடிக்கமுன்னே குபீர்னு வந்து விழுகுது சிரிப்பு.இவ்வளவு ஹாஸ்யங்களை எங்கே குமிச்சு வச்சிருக்கிங்கண்ணா ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

பிரபாகர் said...

உங்கள் முத்திரையோடு பாராக் கதைகள்... பார்த்து படித்து ரசிக்க...

நிறைய இதுபோல் எழுதுங்கய்யா!

பிரபாகர்...

Anisha Yunus said...

//‘விடுங்க! நான் உங்க மனைவிதானே. உங்களை நம்பி வாழ வந்தவள்தானே. நீங்க கூடத்தான் வாராவாரம் செலவுக்கு என்ன வேணுமோ கொடுத்துட்டு கப்போர்டைப் பூட்டி சாவியை கொண்டு போறீங்க. எதிர்பாராத செலவுக்கு காசு கேட்டா அன்னைக்குதானே முன்னூறு கொடுத்தேன். என்ன செலவுன்னு கணக்கு கேக்குறீங்க. நீங்கல்லாம் ஒரு புருசனான்னு நான் கேட்டனா’ என்றாள் அவன் மனைவி. //

சைக்கிள் கேப்புல பிளேனே ஓட்டிட்டாங்களே...இது, தங்கமணிகளுக்கு அழகு...I appreciate it :)

Unknown said...

சார், template நல்லா இருக்கு. டக்குனு ஓபன் ஆவுது. நன்றி.

தாராபுரத்தான் said...

ஏதோ பரவாயில்லை..ங்க

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாண்ணே....கலக்குங்க....

பவள சங்கரி said...

நீங்கல்லாம் ஒரு புருசனான்னு நான் கேட்டனா’ என்றாள் அவன் மனைவி.....சார் சான்சே இல்ல...எப்புடி சார் இப்படீல்லாம்..?சூப்பருங்கோவ்......

க.பாலாசி said...

அஹ்ஹா... இந்தமாதிரி எல்லாருக்கு ரோசம் வந்திட்டா என்னாவறது !!!!

மூணாவதும் சூப்பர்... இருந்தாலும்.. மாச சம்பளத்த முழுசா கொடுத்திட்டு டெய்லி டீக்கு காசு வாங்கிப்போற புருஷனுங்களத்தான் நான் நிறைய பார்த்திருக்கேன்.

Paleo God said...

அடுத்த ட்ரெண்டா சார்..

சூப்பர் :)

'பரிவை' சே.குமார் said...

Ayya...

Anaiththum arumai...

Super... 'Siru' kathaikal.

ஸ்ரீராம். said...

புதிய வகையில் யோசிக்கப் பட்ட கதைகள். அருமை.

"உழவன்" "Uzhavan" said...

அருமையான கதைகள் :-)

creativemani said...

மூன்றுமே யதார்த்தம் சார்..

அது சரி(18185106603874041862) said...

//

இதுக்கெல்லாமா ரோஷப்படுவானுங்க. அடுத்த ரவுண்டு ஊத்துய்யா’ என்று சிரித்தது ஆளும்கட்சி.
//

இதெல்லாம் பார்த்தா முடியுமா சார்? நமக்கு ரவுண்டு முக்கியம். நாளைய பிரச்சினை நாளைக்கு பார்ப்போம். :))

அது சரி(18185106603874041862) said...

அதென்னா பாராக் கதைகள்?

அப்புறம் இந்த டெம்ப்ளேட் நல்லாருக்கு. ஆனா கலர், யாருக்குமே கண்ணு வலிக்கலையா? எனக்கு மட்டும் தான்னா ஒரு டாக்டர்ட்ட செக் பண்ணனும் :))

vasu balaji said...

அது சரி(18185106603874041862) said...

அதென்னா பாராக் கதைகள்?

அப்புறம் இந்த டெம்ப்ளேட் நல்லாருக்கு. ஆனா கலர், யாருக்குமே கண்ணு வலிக்கலையா? எனக்கு மட்டும் தான்னா ஒரு டாக்டர்ட்ட செக் பண்ணனும் :))//

அதேனோ க்ரோம்ல கன்னாபின்னானு வருது. மாத்தணும். சாரி.

vasu balaji said...

ஹி ஹி paragraph:))

vasu balaji said...

@@நன்றி LK
@@Thanks Shyam

vasu balaji said...

//ராஜ நடராஜன் said...

எனக்கு முன்னால் பின்னூட்டமிடுபவர்கள் கண்கொத்தி பதிவர்கள்:)//

=))
/ஆடம்பர ஹோட்டல்ல வெத்தலை கொதப்பிகிட்டு ஒரு அரசியல் பெரிசை ஒரு முறை பார்த்தேன்.ஒருவேளை ஆட்டய போடுறதப் பத்தி பேசுறதுக்காக இருக்குமோ?சான்ஸ் இல்லையே!அது தேறாத கட்சியாயிற்றே.//

தேறாத கட்சியா இருக்கலாம். தேத்தாத கட்சி உண்டுமா:))

vasu balaji said...

@@நன்றி நேசமித்திரன்
@@நன்றி தியா
@@நன்றி பழமை
@@நன்றி இராமசாமி கண்ணன்
@@நன்றி பவன்
@@நன்றி சேது
@@நன்றி முகிலன்
@@நன்றி நசரேயன்:)). ஆமாம். அல்ல அல்ல
@@நன்றி தேவா
@@நன்றிங்க மேனகாசத்யா
@@நன்றிங்க மாதேவி

vasu balaji said...

@@நன்றி கல்யாணராமன் ராகவன்:) நலமா
@@நன்றிங்க சித்ரா
@@நன்ரி இர்ஷாத்
@@நன்றி வி.ஆர்
@@நன்றி தலைவா
@@நன்றி விசா
@@நன்றிங்க பின்னோக்கி

vasu balaji said...

கலகலப்ரியா said...

//நல்லாருக்கு சார் குட்டிக் குட்டிக் கதைகள்... (என்னாச்சு... பழைய ஆனந்த விகடன்ல ஒரு பக்கக் கதைகள் படிச்சது கனவில வந்திச்சா... )//

நன்றிம்மா. உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்:))

vasu balaji said...

@@நன்றி ஈ.ரா.
@@நன்றிங்க காமராஜ். சென்னை வந்தீங்களா?
@@நன்றி பிரவு
@@நன்றிங்க அன்னு
@@அண்ணா. ஏதோ கத்துகுட்டி முயற்சிண்ணா.

@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி பாலாசி
@@நன்றி ஷங்கர்
@@நன்றி சே.குமார்
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றிங்க உழவன்
@@நன்றி மணிகண்டன்

vasu balaji said...

என்ன சேது சார். டெம்ப்ளேட் ஓக்கேயா?=))

Unknown said...

Yes Sir. Excellent color selection.

Did your wife help you in this?

This template and color selection is so perfect.

நாடி நாடி நரசிங்கா! said...

மூணு கதையுமே சூப்பர்..

பனித்துளி சங்கர் said...

இரண்டும் அசத்தல் .அதிலும் முதல் கதை என்னை மிகவும் கவர்ந்தது . பகிர்வுக்கு நன்றி

vasan said...

வித்தியாச‌மான, விவ‌ர‌மான க‌த்தி வீச்சு.
நேராச் சொன்னாலோ நம‌க்குப் புரியாது,
இப்ப‌டி க‌தை மாதிரிச் சொன்னா?
புரிஞ்சு திருந்திரப் போற‌மா, என்ன‌!

(அர‌சிய‌ல்வாதி எப்ப‌வும் ஆளும் க‌ட்சி,
ம‌க்க‌ள் எப்ப‌வும் எதிர்க‌ட்சி.)