Saturday, August 28, 2010

நறுக்னு நாலு வார்த்த V.5.2

இலங்கை அரசிற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் : மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாவார்

ஏம்பா! உங்கூர்ல இந்த நிரந்தர ஜனாதிபதின்னெல்லாம் சொல்லமாட்டிங்களா? அப்புடியாச்சும் ஊத்திக்கட்டுமே.
~~~~~~~~~~~~~~~~~~~~~
கிருஷ்ணன் தூது பயனுள்ளதா? : செண்பகத்தார் திறனாய்வுப் பார்வை

இந்த தூது கௌரவர் பக்கம். உசாரு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஹக்கீம் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பது எமக்கு செய்யப்பட்ட துரோகம்: ரணில் ஆவேசம்

அட சை! சும்மாக் கிட! உங்கூர்ல இதுக்கு பேரு அரசியல்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சகோதர படுகொலைகள் காரணமாக புலிகளை தேசிய இயக்கமாக கருத முடியாது : டியூ குணசேகர

குடிமக்களை கொன்று குவித்தவர்களை அரசாங்கமாக கருதலாமோ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியா தீர்வை முன்வைக்கவேண்டும்: டி.எம். சுவாமிநாதன்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா! ராஜீவும் இல்லை ஜெயவர்த்தனாவும் இல்லை. தீர்வுக்கு எங்க்ய்யா போறது. பத்திரமா வெச்சிருக்க வேணாமா? ஒரு காப்பி கேளு குடுப்பாய்ங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரச்சினையை தீர்ப்பதை விட பிளவுகளை ஏற்படுத்துவதில் அரசாங்கம் தீவிரம்: சாடுகிறார் மனோ கணேசன்

அடக் கேனயே. நீங்க அடிச்சிகிட்டு செத்தா அவனுக்கு தீர்வுதானே. அது புரியாமத்தானே அடிச்சிட்டு சாவறீங்க. சாவடிக்கிறீங்க
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கையில் தமிழர் மறுகுடியமர்வில் கவனம் செலுத்த வேண்டும்: டி.கே.ரங்கராஜன்

யாரோ பழைய பேப்பர கொடுத்துட்டாங்க. பார்க்காம படிச்சிட்டாரு. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை ராணுவ தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது: எஸ்.எம்.கிருஷ்ணா

இந்தாளு கும்பகர்ணனா? அவன் கூட ஆறுமாசத்துல விழிப்பான். இவரு ஒன்னரை வருஷம் கழிச்சி சொல்றாரு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முல்லைத்தீவில் ஆயுதங்கள் மீட்பு: இலங்கை ராணுவம்

அதெப்புடிடா ஆயுதம் மட்டும் கெடைக்குது. நீங்க கொன்னு போட்ட ஜனங்க எலும்பு கூட கிடைக்குதில்லை?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே இந்திய அரசின் கொள்கை: நாராயணசாமி

போனதெல்லாம் பொறந்து வரணுமோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு ஊழியர்கள் அல்ல: மத்திய அரசு

அப்ப எதுக்கு சம்பளம் குடுக்குறீய.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாமகவை காப்பாற்ற இளைஞர்களுக்கு ராமதாஸ் கோரிக்கை

டாக்டரே கைவிட்ட கேசை இளைஞர்கள் என்னாத்த மாத்துறது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னை கண்டு கலைஞருக்கு பயம்: நான் பெரிய குத்தூசி: விஜயகாந்த் பேச்சு

பின்ன! குரங்க தோள்ள ஏத்தினா பேன் பார்த்தாலும் பார்க்கும். காதுல மோண்டாலும் மோளும்னு சொலவடையிருக்கே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விஜயகாந்த்தின் வாக்கு வங்கி குறைகிறது: திருமாவளவன்

ஓ! இப்ப பேங்க் பேலன்ஸக்கூட ஓட்டா கன்வர்ட் பண்ணித்தான் பார்க்கறீங்களாய்யா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருப்பதி: வி.ஐ.பி. டிக்கெட்டுகளை குறைக்க முடிவு

அடப்பாவிகளா! வி.ஐ.பின்னு வந்தா போட்டு தள்ளிடப் போறீங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கற்பழிப்பு சம்பவம் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்: நீதிபதிகள் கருத்து

நடுக்காட்டில வச்சி நடந்துச்சு. சுத்திலும் 20 கி.மீக்கு ஜனங்களே கிடையாதுன்னு ஒரு வக்கீல் வாதாடினா விட்ற போறீங்க. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோபாலபுரம் வீட்டில் விதிமீறல் எனக் கூறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கொடநாட்டுக்கு எதிர்வினையா? ப்ளாக்குகார பசங்கப்பா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆபரேஷன் சமோசா:2 தீவிரவாதிகள் கைது 

அடப்பாவிங்களா! டொமாடோ ஸாஸ் ஊத்தி சமோசா சாப்டா இப்புடி சொல்லீடுவாய்ங்களோ. சமோசா கேன்ஸேஏஏஏஏஏஏல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

33 comments:

நசரேயன் said...

மொத வெட்டா ?

வானம்பாடிகள் said...

ஆமாம் ஆமாம்

Chitra said...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு ஊழியர்கள் அல்ல: மத்திய அரசு

அப்ப எதுக்கு சம்பளம் குடுக்குறீய.


...... மத்திய அரசு, சிரிக்காமல் ஜோக் அடிச்சு இருக்காங்களே!

பனங்காட்டு நரி said...

//// குடிமக்களை கொன்று குவித்தவர்களை அரசாங்கமாக கருதலாமோ /////

செருப்படி சார்

நந்தா ஆண்டாள்மகன் said...

வழக்கம் போல் நறுக் நறுக்

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
இலங்கையில் தமிழர் மறுகுடியமர்வில் கவனம் செலுத்த வேண்டும்: டி.கே.ரங்கராஜன்

யாரோ பழைய பேப்பர கொடுத்துட்டாங்க. பார்க்காம படிச்சிட்டாரு.
//
ரொம்ப நேரமா சிரிச்சிகிட்டு இருக்கேன்.........

ஜோதிஜி said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா! ராஜீவும் இல்லை ஜெயவர்த்தனாவும் இல்லை. தீர்வுக்கு எங்க்ய்யா போறது. பத்திரமா வெச்சிருக்க வேணாமா? ஒரு காப்பி கேளு குடுப்பாய்ங்க.


சப்தம் போட்டு சிரித்துக் கொண்டு நொந்து போனேன்.

ஒவ்வொருவரும் சேர்ந்து ஒவ்வொரு விசயத்தையும் திகில் கதை போல இன்று வரைக்கும் நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். தற்போதைய அத்தியாயம் கேபி என்ற மாப்பு

தமிழ்நதி said...

வேதனைப்படுவதா? சிரிப்பதா? தெரியவில்லை.. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க...

Jey said...

எல்லா நறுக்’சும் நச்...

dheva said...

//சகோதர படுகொலைகள் காரணமாக புலிகளை தேசிய இயக்கமாக கருத முடியாது : டியூ குணசேகர


குடிமக்களை கொன்று குவித்தவர்களை அரசாங்கமாக கருதலாமோ//

செம சூடு அண்ணே.....!

செ.சரவணக்குமார் said...

//குடிமக்களை கொன்று குவித்தவர்களை அரசாங்கமாக கருதலாமோ//

நறுக்குன்னு கேட்டீங்க பாலா சார்.

சி. கருணாகரசு said...

கிருஷ்ணன் தூது பயனுள்ளதா? : செண்பகத்தார் திறனாய்வுப் பார்வை

இந்த தூது கௌரவர் பக்கம். உசாரு//
வணக்கமய்யா....
அப்பா கடைசியில தர்மம் தான் வெல்லுமுன்னு சொல்லுங்க?

சி. கருணாகரசு said...

சகோதர படுகொலைகள் காரணமாக புலிகளை தேசிய இயக்கமாக கருத முடியாது : டியூ குணசேகர

குடிமக்களை கொன்று குவித்தவர்களை அரசாங்கமாக கருதலாமோ//

நச்!

சின்ன அம்மிணி said...

நச்சுன்னு இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நச்

சத்ரியன் said...

//சகோதர படுகொலைகள் காரணமாக புலிகளை தேசிய இயக்கமாக கருத முடியாது : டியூ குணசேகர

குடிமக்களை கொன்று குவித்தவர்களை அரசாங்கமாக கருதலாமோ//

அவிங்களுக்கு நாக்கு இருக்குமா, புடுங்கிக்கிட்டு சாவறதுக்கு...?

சத்ரியன் said...

//இலங்கை ராணுவ தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது: எஸ்.எம்.கிருஷ்ணா

இந்தாளு கும்பகர்ணனா? அவன் கூட ஆறுமாசத்துல விழிப்பான். இவரு ஒன்னரை வருஷம் கழிச்சி சொல்றாரு//

பாலா அண்ணே,

அந்தாளு போய் தூங்கிட்டு வெந்தது, ‘அவன்’ வூட்டுல. அங்கயெல்லாம் ஏது ராணுவத் தாக்குதல்?

வெறும்பய said...

நச்சுன்னு இருக்கு.

வெறும்பய said...

உறுப்பினர்கள் அரசு ஊழியர்கள் அல்ல: மத்திய அரசு
அப்ப எதுக்கு சம்பளம் குடுக்குறீய.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

//


இவனுங்களே தண்டம்.. இவனுங்களுக்கு சம்பளம் வேற..

காமராஜ் said...

ஆனாலும் எங்க தோழரை இந்த வாங்கு வங்கியிருக்கவேண்டாம்.better late than never இல்லையா அண்ணா.சொன்னாலும் குத்தம் சொல்லலண்ணாலும் குத்தமா அண்ணா.( but கம்மெண்ட் நல்லாருக்கு)

சைவகொத்துப்பரோட்டா said...

நறுக் = சுறுக்.

வல்லிசிம்ஹன் said...

உங்களுக்குப் பின்னூட்டம் இடறதுக்கே நான் யோசித்த பிறகுதான் சொல்லணும். வார்த்த்தையே கிடைக்க மாட்டேங்குது:)

ஜெரி ஈசானந்தன். said...

வர வர ....வால்யூம் ஏறிக்கிட்டே போகுது.....

விந்தைமனிதன் said...

//டாக்டரே கைவிட்ட கேசை இளைஞர்கள் என்னாத்த மாத்துறது?//

இதான்யா பொட்டுல அடிக்கிறதுங்குறது!

Mahi_Granny said...

போனதெல்லாம் பொறந்து வரணுமோ?' என்று மனக் கஷ்டத்துடன் படித்துக் கொண்டே வந்தால் சமோசாவை கேன்சல் செய்து இப்படி சுற்றிலும் உள்ளவர்கள் திரும்பி பார்க்கும்படி செய்து விட்டீர்கள்

அஹமது இர்ஷாத் said...

ரைட்டு...W.007

ஸ்ரீராம். said...

காரசாரம்.

அது சரி said...

// குரங்க தோள்ள ஏத்தினா பேன் பார்த்தாலும் பார்க்கும். காதுல மோண்டாலும் மோளும்னு சொலவடையிருக்கே.
//

உங்களுக்கு குரங்கு சைக்காலஜி நல்லா தெரிஞ்சிருக்கு ;‍-))))

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

//அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
கொடநாட்டுக்கு எதிர்வினையா? ப்ளாக்குகார பசங்கப்பா//

நமக்கெல்லாம் குலதெய்வமே அவங்கதானே சார்!

rk guru said...

அருமையான பதிவு...வாழ்த்துகள்

சே.குமார் said...

எல்லா 'நறுக்'சும் வழக்கம் போல் நறுக்... நறுக்...

ராதை said...

எல்லாமே நறுக் நறுக் :)

சிவசங்கர். said...

குடிமக்களை கொன்று குவித்தவர்களை அரசாங்கமாக கருதலாமோ?

*நல்லா இருக்கு ஐயா!

கொன்றதை வேடிக்கை பார்த்தவங்களை ஒண்ணும் சொல்லலைன்னு கொஞ்சம் வருத்தமா இருக்குயா!*