Thursday, August 26, 2010

கேடில் விழுச் செல்வம்..

எப்போதாவது சினிமா நோட்டீஸ் தரும் மாட்டு வண்டியும், ராலே சைக்கிள் வைத்திருந்த ரெண்டு பணக்கார மாமாக்கள் வேலைக்குப் போகும் போதும் வரும் போதும் மட்டுமே வண்டியோடிய சாலையின் ஓரத்தில் இருந்த வீட்டிலிருந்து, வாசல் படி தாண்டி கால் வைத்தாலே பத்திரம் எனப் பதறும் அளவுக்கு, சைக்கிளும், காரும், லாரியும் பறக்கும் வீதியொன்றுக்கு புலம் பெயர்ந்தபோது வயது எட்டு.  பீதியிலேயே நடந்து, வீதி கடந்து, பள்ளிக்குச் சென்று வந்து பழகி,  பராக்குப் பார்த்தபடி நடக்க ஆரம்பிக்க ஒரு வருடம் பிடித்ததெனக்கு.

அப்படிக் கடக்கையில் கண்டதுதான், கந்தன் டூஷன் நிலையம். 8க்கு 8 அடி ரூமில் நெருக்கியடித்தபடி உட்கார்ந்து, அறஞ்செய விரும்பு,அணில், ஆடு, இலை,எட்டோன் எட்டு, எண்ணிரண்டு பய்னாறு,நல்லார் ஒருவர் உளரேல்.... என்று கலந்தாங்கட்டியாகப் படித்துக் கொண்டிருப்பவர்களை ஒரு கண்ணாலும், வெளியில் போட்ட சேரில் அமர்ந்து வீதியை ஒரு கண்ணாலும் பார்த்துக் கொண்டு, நொச்சித் தழைக் குச்சியை எதிரில் இருந்த ஒன்னரைக்கு ரெண்டு டேபிளில் தட்டிக் கொண்டிருந்தார் புரேட் (Private) சார்.

அடுத்த நாள் பள்ளியில் நண்பனிடம் டூஷன் நிலையம் பற்றி கேட்டபோது தெரிந்து கொண்டதுதான் புரேட் சார் என்பது. அப்படி என்றால் என்ன என்று கேட்ட போது புரேட் தெரியாதாடா என்று கேட்ட த்வனியில் இருந்த எள்ளல் கூட புரியாத வெள்ளந்தியாய் இருந்தேன். புரேட் பற்றிய அறிவு அவன் மூலம் புரிந்தபோது, பள்ளி நேரம் தாண்டி அங்கு தனிப்பட்ட முறையில் பாடம் சொல்லித் தருவது புரிந்தது. கூடவே தானும் புரேட் படிப்பதாகவும், தன்னுடைய புரேட் மிகப் பிரசித்தமென்றும் சொன்னதோடு, காம்பஸ் விசிட்டுக்கும் அழைப்பு விடுத்தான்.

பள்ளி முடிந்து அவன் மீண்டும் என் வீதி முனையில் விட வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன், 2 தெரு தள்ளி உள்ள அவன் புரேட் இஸ்கோலுக்கு போனபோது மணி வாத்தியார், வாசல் கூட்டி, நீர் தெளித்துக் கொண்டிருந்தார். நண்பன் வீட்டில் போய், பள்ளிப் பையை எறிந்து விட்டு, கை கால் கழுவி, துண்ணூறு வைத்துக் கொண்டு, தமிழ், கணக்கு புத்தகம், ட்யூஷன் நோட் புத்தகத்தோடு கிளம்பி புரேட்டுக்கு முன்னாடியே கழட்டிக் கொண்டு நேரா போய் சோத்தாங்கைக்கா திரும்பினா ரெண்டாத் தெருடா உன்னுது என்று ஓடிய போது திகைப்பாய் இருந்தது. 

ஆனாலும், கை கட்டிக் கொண்டு முன்னுக்கும் பின்னுக்கும் ஆடிய படி, பாஞ்சோண் பாஞ்சு வாய்ப்பாடு சொல்லிக் கொண்டிருந்த அக்காவைத் தொடர்ந்து அத்தனை பேரும் பாஞ்சோண் பாஞ்சு சொல்வது ஒடிப்போய் உட்கார்ந்து பாஞ்சோண் பாஞ்சு சொல்லத் தோன்றியது. வீட்டுக்கு வந்து மெதுவே அம்மாவிடம், அம்மா நானும் புரேட்டுக்கு போறேன் என்றதும் திகைப்பூண்டை மிதித்தாற்போல் திகைத்து, அப்பாவிடம் போட்டுக் கொடுத்து, புரேட் என்பது முட்டாள்களுக்கானது என்று மனதில் விதைக்கப்பட்டது. 

கணக்கில் எண்பது வாங்கிய ஒரு டெஸ்டுக்காக, இவன் உருப்படமாட்டான், மானம் கெட்டு புரேட்டுக்கு போகட்டும் என்ற போது வேணாம் வேணாம் என்று கதறியது நன்றாய் நினைவிருக்கிறது. காலங்கள் உருண்டோட, என்ன ஐடியா? பையன ஐ.ஐ.டி கோச்சிங்ல போட்டிருக்கியா? இல்லைன்னா ப்ரைவேட் கோச்சிங்கா? மேத்ஸ் க்ரூப்னா அண்ணாநகர் வசதி. 10வது ஹால்ஃப் இயர்லி ப்ராக்ரஸ் வந்ததுமே போய் காண்பிச்சி பேர் பதிஞ்சிடு. 

மார்க்‌ஷீட் வந்ததும், நேர கொண்டுபோய் காட்டி, புக் பண்ணி விட வேண்டும். இல்லையெனில் வெயிட்டிங்லிஸ்ட், பரிந்துரை என அல்லாட வேண்டியிருக்கும் என்ற ட்யூஷனில்,  அவமானமாகக் கருதப்பட்ட ஒன்று கவுரவச் சின்னமாய் மாறி விட்டிருந்தது தெரிந்தது. பிற்பாடு இலங்கையில் ட்யூஷன் என்பது பள்ளி வகுப்புக்கு மாணவரை முன்பே தயாராக்கும் களம் என்பது தெரிந்தபோது வியப்பாய் மாறியது. பின்னுமொரு நாள் மணிக்கு 400ரூ முதல் எண்ணூறு ரூபாய் வரை வாரம் ஒரு முறை இரண்டரை மணி நேரம், வசதிப்பட்ட நேரத்துக்கு வந்து வகுப்பெடுக்கும் வசதியும் இருப்பது தெரிந்த போது வருத்தமாய் இருந்தது. 

சமீப காலமாக மதிப்பெண் குறைவு என ஆசிரியர் திட்டியதால், ஐந்தாம் வகுப்புப் பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு இறப்பதும், பள்ளியிறுதி வகுப்பில் படிக்கும் பெண் பள்ளிக் கழிவறையில் பிள்ளை பெற்று விட்டு விட்டுப் போனதும் அதிர்ச்சியாய் இருக்கிறது. 

பாஞ்சோண் பாஞ்சு காலத்திலிருந்து பள்ளியிறுதி மாணவி பிரசவம் பார்த்துக் கொள்ளுமளவு மாறிவிட்ட இக்காலத்திலும் மாறாத ஒன்று இருக்கிறதென்றால் அது மதிப்பெண் ஒன்று மட்டுமே. வேறு எதுவும் பொருட்டல்ல. அட! ஏம்பா அந்த ஸ்கூல்ல போட்ட? கொஞ்சம் காசு கூடன்னாலும் இந்த ஸ்கூல்ல நல்ல பெர்செண்டேஜ். எக்ஸ்ட்ரா கோச்சிங் எல்லாம் உண்டு, என்று குற்ற உணர்ச்சியைத் தூண்டித்தான் நமக்குப் பழக்கம். 

இவ்வளவுதானா? இவ்வளவுதானா ஒரு மாணவனின் உலகம்? அவன் எதிர்காலம்! அவனுக்கென்று ஒரு குறிக்கோள், அவனுக்கியைந்த ஒரு வாழ்வு, அவனுக்குப் பிடித்த ஒரு படிப்பு இவையெல்லாம் ஒன்றுமேயில்லையா? மதிப்பெண் மட்டுமேதானா?

இந்த வார விடுமுறையில் இன்னுமொரு பாடம் படிக்க முடிந்தது. ஆசியர் பயிற்சி, முதியோர் கல்வி ஆகியவற்றில் தேர்ந்த ஓர் ஆசிரியரின் உரையின் தொகுப்புக் கையேட்டைப் படிக்க வாய்த்தது. 

அவ்ர் கேட்டிருந்த கேள்விகளைப் படியுங்கள். இதற்கு முன் நமக்காய் நம் பெற்றோரோ, நம் பிள்ளைகளுக்காய் நாமோ இதைக் கேட்டிருக்கிறோமா?

உங்கள் குழந்தைகளின் திறமைகளைச் சரிவர அறிந்திருக்கிறீர்களா?
பள்ளியறிக்கை மட்டுமே ஒரு மாணவருக்குண்டான ஆற்றல் மற்றும் அவர் சாதிக்கக் கூடியதைக் கூறுமா?
பள்ளியில் வெற்றி பெறுவது சந்தோஷமான ஒரு வாழ்க்கைக்கான உத்தரவாதமாகுமா?
உணர்வார்ந்த அறிவு என்பதன் அர்த்தமென்ன ? குழந்தைகளின் தினசரி வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் என்ன?
இசையறிவின் முக்கியத்துவமும் அதன் தாக்கமும் எத்தகையது?
ஒரு மனிதன் என்ன திறமைகளைக் கொண்டுள்ளான் என்பதை விட அதை வைத்து அவனால் என்ன சாதிக்க முடியும் என்பதே முக்கியமானது.

ஒன்றுக்காவது நேர்மையாக நம்மால் பதில் சொல்ல முடியுமா? அம்மா மார்க் கொடுத்தார்கள் என்று நீட்டும் பேப்பரை வாங்கிப் பார்க்கு முன்னரே ராஜு எத்தனாவது ரேங்க், ரம்யா கணக்கில எவ்வளவு? இப்படித்தானே கேட்போம்? கேட்கப்பட்டோம்.பிள்ளை புத்திசாலிங்க அல்லது உருப்படாதுங்களுக்கு மேல் என்ன தெரியும் நமக்கு? 

புத்திசாலித்தனத்துக்கு பன்முகம் இருக்கிறதாம்.  மொழித்திறன், கணிதம்-தர்க்கம், பார்வை-பரிமாணம், இசை, சமூக அறிவு, தன்னை அறிதல், இயற்கை அறிவு, உடலசைவு என எண்முகமாம் அதற்கு. இவை யாவும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றனவாம். மாணவர்கள் தங்கள் புத்தியின் அதி ஆற்றலைப் பயன்படுத்தும் பட்சத்தில் கற்றல் மிக உற்சாகமாக இருப்பதோடு, நோக்கங்கள் துரிதமாக நிறைவேறும்” என்கிறார்.

“ஒரு குழந்தையின் பலங்களை மேலும் பலப்படுத்துவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அது தன் பலவீனத்தைச் சரி செய்வதற்கான ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்” என்கிறார் அவர்.  

இப்படியெல்லாம் செப்பனிட்டும் பெற்றோருக்குச் சொல்லிக் கொடுத்தும் கொடுக்கும் கல்வியல்லவா எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் சேர்த்துக் கொடுக்கும் சொத்து. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் தமிழர்தானே. இங்கிருந்தால் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்குமோ தெரியாது. ஆனால் நிச்சயம் அவர் மகன் அவருக்குள் இருக்கும் திறமையான, அவருக்குப் பிடித்த செல்லோ இசைக்கலையைக் கொன்று புதைத்து ஒரு மருத்துவராகவோ, எஞ்சினியராகவோ, இரசாயனத்துறை விரிவாளராகவோ ஆகியிருக்கக் கூடும், . இங்கில்லாததால் தானோ அவரின் திறமையை மதித்து, அவரை செல்லோக் கலைஞராக வளரவிடும் மனப்பாங்கு அவர் பெற்றோர்களுக்கு இருக்கிறது?

இதை தட்டச்சும் நேரம், மனதில் ஒரு நனவோடை. சற்றேரக் குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஈழத்தில் ஷெல் சத்தங்களுக்கு நடுவே, மேச்சட்டையின்றி, விழும் குண்டுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்ற விரக்தியுடன்,  “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்ற நிருபரின் கேள்விக்கு அழுதபடி அந்தக் குழந்தை என்ன கேட்டிருக்கும் என ஊகிக்க முடியுமா உங்களால்? வீடு கேட்கவில்லை. உணவு கேட்கவில்லை. உடை கேட்கவில்லை.  “ஒன்பது ஊர் மாறி மாறி இங்க நிக்கிறம். எங்கயும் இருக்க விடுறாங்கள்ள. எல்லா இடத்திலும் செல்லடிக்கிறாங்கள். எனக்குப் படிக்கணும் அண்ணை என்று அழுதபோது உதடு விம்ம என் அழுகை அடங்க வெகு நேரமாகியது.

இந்த ஆர்வத்தை, இந்த உணர்வை, அதற்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது, அதற்கென ஒரு திறமை இருக்கிறது, அதற்கு இருப்பதில் போதிய வாய்ப்புமிருக்கிறது என்ற உணர்வின்றி மதிப்பெண்ணிலும், ஓர் வேலையிலும், திருமணத்திலும் அடைக்கத்தான் போகிறோமா? தலைமுறை தலைமுறையாக இதைத்தான் செய்துக் கொண்டிருக்கிறோம். செய்வோம்.

காரணம், இருக்கும் சூழ்நிலை இப்படித்தான் கொடுக்கப்படுகிறது நம் கல்வியாளர்களால். நம் அரசால். நாமாவது கேட்போமே.

(டிஸ்கி:சாத்தான் ஓதும் வேதம் என உணர்ந்தே வெட்கத்துடன் எழுதினேன். என் பிள்ளைகள் படிக்கும் காலத்தில் நான் இதை உணர்ந்திருந்தாலும் இப்படி யோசித்திருப்பேன் என உறுதியாய்ச் சொல்லவியலாது. இது முற்றிலும் புதிய சிந்தனை. புதிய சூழல். என்றோ ஒரு நாள் வந்தே தீர வேண்டிய மாற்றம். என்னால் முடிந்தது, இப்படியும் பிள்ளைகளுக்குக் கல்வியை ஆராதிக்கிறார்கள் என்ற ஒரு புரிதலுக்காகவே)

தகவல் மற்றும் விளக்கத்துக்கு நன்றி ப்ரியா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

60 comments:

நசரேயன் said...

மொத வெட்டு

Unknown said...

Execellent posting Sir today. Every one must ask those questions. When education is so much commericialized, we all forget the basic humanness, and keep looking for commercial values, even to our basic education. Thanks for sharing.

நசரேயன் said...

இப்படி எல்லாம் பேசி வாத்திமார் பொழைப்பிலே மண் அள்ளிப் போட்டுடுவீங்க போல

Chitra said...

ஒரு மனிதன் என்ன திறமைகளைக் கொண்டுள்ளான் என்பதை விட அதை வைத்து அவனால் என்ன சாதிக்க முடியும் என்பதே முக்கியமானது.



.....ஒரு அமெரிக்க நண்பரோடு பேசிக்கொண்டு இருந்தபோது, இந்தியர்களை குறித்த தனது பொதுவான கருத்தை தெரிவித்தார். "இந்தியர்கள், கடும் உழைப்பாளிகள் - நிறைய விஷயம் தெரிந்தவர்கள், தங்கள் தொழிலுக்கு தேவையான தொழிநுட்ப அறிவை கொண்டவர்கள். ஆனால், வெகு சிலரே executive skills and team spirit and leadership commanding power உள்ளவர்கள். பலர், வேலையில் - தொழிலில் - ரிஸ்க் எடுக்க தயக்கம் காட்டுகின்றனர், " என்றார். நம் கல்வித்திட்டம் செயல் படும் விதத்தை இது காட்டுகிறதோ? ஏட்டு கல்விக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வாழ்க்கை கல்விக்குத் தேவையான எத்தனையோ திறமைகளையும் தன்னம்பிக்கையையும் தருகிறதா என்பது கேள்விக்குறியே. மாறி வரும் புதிய கல்வி திட்டத்தினால் மாறுதல் வரும் என்று நம்புவோம்.

Unknown said...

"இப்படி எல்லாம் பேசி வாத்திமார் பொழைப்பிலே மண் அள்ளிப் போட்டுடுவீங்க போல"

Fun to say like this, but they spoil the education system. I have seen in life, unless you go for private tution to the same teacher of your regular subject in school, they won't give more marks. Where to go and say this!

பத்மநாபன் said...

கல்வியில் அந்த கால நிலை, நடுவில் வந்த மாற்றம், தற்போதய நிலை , எதை நோக்கி செல்லவேண்டும் என பளிச்சென்று எடுத்து வைத்துள்ளீர்கள்.

கேடில் விழுச்செல்வம் இப்பொழுது கேடு விழுச்செல்வமாக மாறிவருகிறது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மிக அருமையான இடுகை..

நான் எனக்குள் அடிக்கடி கேட்டுக் கொள்ளும் கேள்விகள்..

எங்கள் மகனை மதிப்பெண்களுக்காகப் படிக்க வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் தலைமுறையினர்க்குக் கூட மதிப்பெண்கள் பெற்றால் தான் நல்ல கல்லூரி, நல்ல வேலை, நல்ல சம்பாத்தியம் என்ற நிலைமை.

ஐரோப்பாவில் வாகன ஓட்டுனராக விரும்பினாலும் நல்ல தரமான வாழ்க்கையை நடத்த முடியும். அந்த நிலைமை நம் நாட்டிலும் வந்தால் ஓரளவு நிலைமை சரியாகிவிடும். பார்ப்போம்.

பா.ராஜாராம் said...

//இதை தட்டச்சும் நேரம், மனதில் ஒரு நனவோடை. சற்றேரக் குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஈழத்தில் ஷெல் சத்தங்களுக்கு நடுவே, மேச்சட்டையின்றி, விழும் குண்டுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்ற விரக்தியுடன், “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்ற நிருபரின் கேள்விக்கு அழுதபடி அந்தக் குழந்தை என்ன கேட்டிருக்கும் என ஊகிக்க முடியுமா உங்களால்? வீடு கேட்கவில்லை. உணவு கேட்கவில்லை. உடை கேட்கவில்லை. “ஒன்பது ஊர் மாறி மாறி இங்க நிக்கிறம். எங்கயும் இருக்க விடுறாங்கள்ள. எல்லா இடத்திலும் செல்லடிக்கிறாங்கள். எனக்குப் படிக்கணும் அண்ணை என்று அழுதபோது உதடு விம்ம என் அழுகை அடங்க வெகு நேரமாகியது.//

வாசிக்கிற போதே எனக்கும் நேர்கிறது.

பாலாண்ணா, என்ன பேனா யூஸ் பண்றீங்க? எல்லா முக்கும் போய் திரும்புது. அடுத்த ஒரு வாரத்துக்கு யூஸ் பண்ணிட்டு தாரேன்.
அடுத்த ஒரு வாரம்? அப்புறம் சொல்றேனே... :-)

க ரா said...

வாசிக்கிற போதே எனக்கும் நேர்கிறது.

பாலாண்ணா, என்ன பேனா யூஸ் பண்றீங்க? எல்லா முக்கும் போய் திரும்புது. அடுத்த ஒரு வாரத்துக்கு யூஸ் பண்ணிட்டு தாரேன்.
அடுத்த ஒரு வாரம்? அப்புறம் சொல்றேனே... :-)
---
என்ன மாம்ஸ் அடுத்த வாரம் நட்சத்திர வாரம் ஆகப்போகுதா :)

அது சரி(18185106603874041862) said...

முக்கியமான விஷயம் பற்றிய பதிவு. குழந்தைகள் பொதி மாடுகளாகி வெகு காலம் ஆகிவிட்டது (இது ஒரு பொதிமாட்டின் வாக்குமூலம் என்று எடுத்துக் கொள்ளலாம்).

இதன் காரணங்கள் சமூகம், பொருளாதாரம், வேலை வாய்ப்பு, குறுகிய நிலப்பரப்பில் மிக அதிகமான மக்கள் தொகை, வெற்று பெருமை பேசும் போலி கலாச்சாரம், குறிப்பிட்ட சமூகங்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட வரலாறு என்று இதன் பட்டியல் மிக நீளமானது.

கலகலப்ரியா said...

ம்ம்.. நல்லாருக்கு சார்...

ஸ்ரீராம். said...

இதில் பல கேள்விகள் மனதிலேயே நிற்கின்றன. அருமையான பதிவு.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல பகிர்வு .

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மார்க் குறைஞ்சதுக்கு புள்ளைங்கள அடிச்சதெல்லாம் பழங்கதை ஆகிப் போச்சு சார், இப்போ லேட்டஸ்ட் பேஷன், காதல் பண்ணினா புள்ளைங்களை கொன்னு போடுறது தான். காவியம் பேசி காதல் வளர்த்த தென் தமிழ் நாட்டில் இந்த நிலைமை.

Unknown said...

வாத்தியார்களை மட்டும் குறை சொல்லி பிரயோசனமில்லை.

மக்களின் ஒட்டுமொத்த பார்வையும் மாறவேண்டும். அதற்கு பாடத்திட்டமும், கல்வி முறையும் மாறவேண்டும்.

இப்போது எடுத்திருக்கும் சமச்சீர் கல்வி முறை அந்த மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புவோம்.

Jerry Eshananda said...

ஆவணப்பதிவு...

a said...

//
புத்திசாலித்தனத்துக்கு பன்முகம் இருக்கிறதாம். மொழித்திறன், கணிதம்-தர்க்கம், பார்வை-பரிமாணம், இசை, சமூக அறிவு, தன்னை அறிதல், இயற்கை அறிவு, உடலசைவு என எண்முகமாம் அதற்கு
//
புதிய தகவல் சார்............... பகிர்விற்க்கு மிக்க நன்றி....

Mahi_Granny said...

நூறு சதவீதம் உண்மை . நம் பிள்ளைகளை வளர்க்கும் போது இதெல்லாம் தெரிந்தாலும் தெரியாதது போல இருந்து விடுகிறோம். பன்முகம் என்பது எவ்வளவு சரிஎன்பது செய்திதாளில் தெரிந்து கொண்டேன். வகுப்பில் 35 % க்கு மேல் மதிப்பெண் எடுக்க முடியாத மாணவன் புகைப்படகலைத்துறையில் இன்று உலகப் பிரசித்தம். ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உபயோகமான பதிவு.

The helper said...

We introduce ourself a group from educational background.We are ready to help you for any competitive examinations or engineering studies at free of cost.Ask your doubts and get clarified

http://regionofachievers.blogspot.com/

The helper said...

http://regionofachievers.blogspot.com/

பெசொவி said...

படிப்பு என்பதே மதிப்பெண் பெறத்தான் என்னும் மனப்பான்மை என்று மாறுகிறதோ அன்றுதான் அறிவுலகம் பிழைக்கும்.

அப்புறம், ஈழம் பற்றி எழுதிய அந்த வரிகள் "படிக்கணும் அண்ணா"...........................நெஞ்சை எதுவோ அடைக்கிறது சார்!

Ravichandran Somu said...

மிக அருமையான பதிவு சார்!

பின்னோக்கி said...

470 இஞ்சினியரிங் காலேஜ்... 2 லட்சம் இஞ்சினியர்கள்... இந்த நிலையில், தனித் திறமை மூலமாக மட்டுமே அடுத்த நிலைக்குச் செல்ல இயலும்.

நடுத்தரவர்கத்தினர், பிள்ளை படித்து, வேலைக்கு போனா போதும் என்ற நினைப்பிலிருந்து வெளியே வர இயலவில்லை.. எனக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கிறதா என்று தெரியவில்லை.. பார்ப்போம்.

ஜோதிஜி said...

உங்கள் எழுத்து ஆற்றலின் உச்சத்தில் இதுவும் ஒன்று. இந்த விசயங்கள் எனக்கு தனிப்பட்ட வெற்றி.
என்னை நேரிடையாக வந்து கேட்பது போல் இருந்தது. குழந்தைகள் விசயங்கள் தான் இப்போது அதிகம் கவனிப்பது.

Unknown said...

நல்ல இடுகை.நான் மிகவும் ரசித்தேன்.விவாதிக்கப்படவேண்டிய விஷயம்.

Jey said...

படிக்க போடுரதுக்கு..வீடு நிலமெல்லாம் அடமானம் வைக்கிரதால....எது படிச்சா சில்லரை கிடைக்கும்னு ரோசனை பண்ர நிலைமை பலபேருக்கு இருக்குண்ணே..., அதனால கூட சில பேரு என்ன பிடிக்கும்னு பாக்குரத விட... எதப் படிச்சா சம்பாதிக்கலம்னு பாக்குராங்க..., இதுக்கு என்னண்ணே தீர்வு..

சத்ரியன் said...

//பாலாண்ணா, என்ன பேனா யூஸ் பண்றீங்க? எல்லா முக்கும் போய் திரும்புது. அடுத்த ஒரு வாரத்துக்கு யூஸ் பண்ணிட்டு தாரேன்.
அடுத்த ஒரு வாரம்? அப்புறம் சொல்றேனே... :-)//

பா.ரா. மாமா,

அடுத்த வாரம் ‘அந்த’ ஏரியாவுல நீங்களா?

கலக்குங்க.

சத்ரியன் said...

//இது முற்றிலும் புதிய சிந்தனை. புதிய சூழல். என்றோ ஒரு நாள் வந்தே தீர வேண்டிய மாற்றம்.//

வரவேற்போம் பாலா அண்ணே!

நட்புடன் ஜமால் said...

உங்கள் டிஸ்கி இடுக்கையை காட்டிலும் ரொம்ப பிடிச்சிருக்கு இடுக்கையும் தான்

க.பாலாசி said...

நல்ல சிந்தனைக்கட்டுரை... உணரவேண்டிய தருணமும், வாய்ப்பும் என்னொத்த தலைமுறைகளுக்கும் இருக்கிறது..

தமிழ் குரல் said...

இப்போது இருக்கும் கல்வி முறையும்... பெற்றோர்களின் செயல்களும்... பிள்ளைகளை உணவற்ற மனித இயந்திரங்களாக்கவே பயன்படுகிறது...

பணம் மட்டுமே வாழ்க்கை எனும் நிலைக்கு போயாகி விட்டோம்... இனிமேல் மானிட உணர்வுள்ள உங்களை போன்றவர்களின் குரல்... மனிய இயந்திரங்களுக்கு கேட்குமா என தெரியவில்லை...

RAJA RAJA RAJAN said...

அட டா... அட டா...
அருமை...!

http://communicatorindia.blogspot.com/

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிடிச்சிருக்கு

பவள சங்கரி said...

சமச்சீர் கல்வி முறை நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. பார்ப்போம்.

பவள சங்கரி said...

எத்தனை விதமான slang.....எப்படி சார்? சூப்பரோ சூப்பர்........

அன்புடன் நான் said...

மிக அணுக்கமா உணர்ந்த விடயம். மிக தெளிவான கண்ணோட்டத்தில்... தற்கால புரிதலுக்கான ஆதங்கமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் அய்யா.
ஆனா நடைமுறைபடுத்த இந்த சூழல் ஒத்துவராதுங்கைய்யா.
உங்க கண்ணோட்டம்... மிக தெளிவு.
நன்றி.

பிரபாகர் said...

அய்யா, பொறுமையாய் இப்போதுதான் படித்தேன். தனி வகுப்பு பற்றி ஒரு பாடமே எடுத்திருக்கிறீர்கள்...

உங்களின் அனுபவச் சிதறல் எங்களுக்கு வழிகாட்டும் விளக்கு போல...

பிரபாகர்...

Paleo God said...

ஆஹா.. நட்சத்திர வாழ்த்துகள் சார். இப்பத்தான் படிக்கிறேன். பொறுமையா படிச்சிட்டு வர்றேன். :))

ஈரோடு கதிர் said...

||ஒன்றுக்காவது நேர்மையாக நம்மால் பதில் சொல்ல முடியுமா?||

நேர்மைன்னா?

CS. Mohan Kumar said...

அற்புதமான எழுத்து ஐயா நன்றி

vasu balaji said...

@@நன்றி நசரேயன்
@@Thanks Sethu.
@@நன்றிங்க சித்ரா.
@@நன்றிங்க பத்மநாபன்
@@நன்றிங்க செந்தில்

vasu balaji said...

பா.ராஜாராம் said...
//
வாசிக்கிற போதே எனக்கும் நேர்கிறது.

பாலாண்ணா, என்ன பேனா யூஸ் பண்றீங்க? எல்லா முக்கும் போய் திரும்புது. அடுத்த ஒரு வாரத்துக்கு யூஸ் பண்ணிட்டு தாரேன்.
அடுத்த ஒரு வாரம்? அப்புறம் சொல்றேனே... :-)


ஆஹா! வாங்க வாங்க.

vasu balaji said...

@@நன்றி ராமசாமி கண்ணன்
@@நன்றிங்க நண்டு
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி நாய்க்குட்டி மனசு

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ம்ம்.. நல்லாருக்கு சார்...//

நாந்தான் உனக்கு நன்றி சொல்லணும். இப்படி ஒன்னு இருக்குன்னு விளக்கினதுக்கு.

vasu balaji said...

அது சரி said...

//முக்கியமான விஷயம் பற்றிய பதிவு. குழந்தைகள் பொதி மாடுகளாகி வெகு காலம் ஆகிவிட்டது (இது ஒரு பொதிமாட்டின் வாக்குமூலம் என்று எடுத்துக் கொள்ளலாம்).//

ரொம்பச் சரி.

//இதன் காரணங்கள் சமூகம், பொருளாதாரம், வேலை வாய்ப்பு, குறுகிய நிலப்பரப்பில் மிக அதிகமான மக்கள் தொகை, வெற்று பெருமை பேசும் போலி கலாச்சாரம், குறிப்பிட்ட சமூகங்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட வரலாறு என்று இதன் பட்டியல் மிக நீளமானது.//

ம்ம்.

vasu balaji said...

முகிலன் said...
வாத்தியார்களை மட்டும் குறை சொல்லி பிரயோசனமில்லை.

மக்களின் ஒட்டுமொத்த பார்வையும் மாறவேண்டும். அதற்கு பாடத்திட்டமும், கல்வி முறையும் மாறவேண்டும்.

இப்போது எடுத்திருக்கும் சமச்சீர் கல்வி முறை அந்த மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புவோம்.//

நான் வாத்தியார்களை குறை எங்கே சொன்னேன். இது முக்கியமாக பாடம் குறித்தே அல்லவே. சமச்சீர் கல்வி இந்த நோக்கத்தை உள்ளடக்கியதாகத் தெரியவில்லையே.

vasu balaji said...

ஜெரி ஈசானந்தன். said...

//ஆவணப்பதிவு...//

I treasure this comment jery. Its a honor From a teacher.

vasu balaji said...

@@நன்றி யோகேஷ்
@@நன்றி மஹி க்ரான்னி
@@நன்றி பெ.சொ.வி
@@நன்றி இரவிச்சந்திரன்
@@நன்றி பின்னோக்கி
@@நன்றி ஜோதிஜி
@@நன்றி நந்தா
@@ஆமாம் ஜெய். ஆனாலும் ஒரு நாள் மாறாம முடியுமா? நன்றி.
@@நன்றி சத்ரியன்

vasu balaji said...

@@நன்றி ஜமால்
@@நன்றி பாலாசி
@@நன்றி தமிழ்க்குரல்
@@நன்றிங்க ராஜ ராஜ ராஜன்:)
@@நன்றி டி.வி.ஆர்.சார்
@@நன்றி நித்திலம்
@@நன்றி கருணாகரசு

vasu balaji said...

@@நன்றி பிரபா. தனிவகுப்பு பாடமா..அவ்வ்வ்.

@@நன்றி ஷங்கர்
@@நன்றி கதிர்
@@நன்றி மோகன்குமார். தொடர்வதற்கும்.:)

'பரிவை' சே.குமார் said...

Execellent.

சிநேகிதன் அக்பர் said...

அனைவரின் மனதிலும் உள்ள செயல்படுத்தாத ஏக்கத்தை உங்கள் பக்கங்களில் கொண்டுவந்ததற்கு நன்றி அண்ணா.

ஸ்ரீமதன் said...

கல்வி என்பது வேலை வாய்ப்புக்கான ஒரே வாசல் என்ற அளவில்தான் இப்பொழுது உள்ளது. பணம் அல்லது அதிகாரம் மட்டுமே மனிதரின் சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும் காரணியாகி விட்ட இன்றைய நிலையில் அதிக சம்பளம் அல்லது அதிகாரம் தரக்கூடிய வேலை அல்லது துறைகளுக்கு செல்ல உதவும் பாடங்கள் மட்டுமே பெற்றோர்களின்/மாணவர்களின் தேர்வாக மாறி விடுகிறது.

தனக்கு உகந்த துறையை தேர்வு செய்தவர்களில் மிக பலர் வாய்புகள் சரியாக அமையாமல் வாழ்வின் பொருளாதார சிக்கல்களில் சிக்கி அழிந்து விடுவதும் , அந்த துறையில் பின் வரும் மாணவர்களை/பெற்றோர்களை ஆர்வம் இழக்க செய்து விடுகிறது.

தமிழ்நதி said...

அழ வைத்தீர்கள்:(

வல்லிசிம்ஹன் said...

எங்கயோ அழைத்துச் சென்று விட்டீர்கள் .எனக்கும் புரேட் போக ஆசை இருந்தது.:)
எல்லாக் காலத்தையும் தொட்டு அருமையாக எழுதி இருக்கிறீர்கள். இலங்கை வரிகள் மனதைப் பிழிகிறது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

variety ஆ கொடுக்கறீங்க, ஸார்!

vasu balaji said...

@@நன்றி சே.குமார்
@@நன்றி அக்பர்
@@நன்றி ஸ்ரீமதன்
@@சாரிங்க தமிழ்நதி.
@@நன்றிங்க ஆரண்யநிவாஸ்

vasu balaji said...

வல்லிசிம்ஹன் said...

//எங்கயோ அழைத்துச் சென்று விட்டீர்கள் .எனக்கும் புரேட் போக ஆசை இருந்தது.:)
எல்லாக் காலத்தையும் தொட்டு அருமையாக எழுதி இருக்கிறீர்கள். இலங்கை வரிகள் மனதைப் பிழிகிறது.//

:). நன்றிங்க வல்லிசிம்ஹன்

பழமைபேசி said...

சிந்தனைக்குள் ஆட்படுத்தினீர்கள்... சிந்தனையின் பலன்...விரக்திதான்!!!

vasu balaji said...

பழமைபேசி said...
சிந்தனைக்குள் ஆட்படுத்தினீர்கள்... சிந்தனையின் பலன்...விரக்திதான்!!!


நன்றி பழமை