Tuesday, August 31, 2010

தனிமை




தனிமை
நரகமாகவும்
சொர்க்கமாகவும்

அழுகையாகவும்
சிரிப்பாகவும்

சாவாகவும்
வாழ்வாகவும்

வெயிலாகவும்
தண்ணிலவாகவும்

பிணியாகவும்
மருந்தாகவும்

சாபமாகவும்
வரமாகவும்

ஏதுமற்றதாயும்
எல்லாமுமாய்
இருக்கிறது

நானாக
நாமாக
இருக்கும்
தருணங்களில்...
~~~~~~~~~~~~~~~

50 comments:

எல் கே said...

thanimai ella tharunangalilum thevai

எல் கே said...

haii vadai enakkuthan

க ரா said...

தனிமை வரம் :)

Paleo God said...

பதிவர்கள் பற்றிய கவிதையா சார்? :)

சைவகொத்துப்பரோட்டா said...

கவிதையோடு, படமும் அழகு.

சூர்யா ௧ண்ணன் said...

அருமை தலைவா!

பழமைபேசி said...

முடியலை...

எல்லாரும் எல்லாமுமாய்...

பிரபாகர் said...

நாமாக இருக்கும்போது தனிமையா?

நல்லாருக்குங்கய்யா!

பிரபாகர்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

தனிமை.. அதன் இனிமையும்.. வலியும்...

Chitra said...

Good one! :-)

ரிஷபன் said...

தனிமை வரமா.. சாபமா என்பது நம் அந்த நேர மன நிலை தான்.. ஆனால் சில சமயங்களில் அதுவும் தேவைதான்..

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்......

Unknown said...

இதுக்கு நான் தனிமைலயே இருந்துருக்கலாம்..??!!

கே. பி. ஜனா... said...

//பிணியாகவும்
மருந்தாகவும்..// அருமை!

sakthi said...

Simply Superb

க.பாலாசி said...

//பிணியாகவும்
மருந்தாகவும்//

நான் பிரியாணியாகவும்னு படிச்சிட்டேன்... நம்ம கண்ணுக்கு அதான் தெரியுது...

சரி விடுங்க.. அதான் கூகிள் பஸ், ஃபேஸ்புக், ட்விட்டர், பிளாக் எங்கப்பத்தாலும் இருக்கீங்களே அப்பறம் ஏது உங்களுக்கு தனிமை...

எல்லாவுமாகி இருப்பதால்தான் தனிமை இனிப்பாகவும், கசப்பாகவும் இருக்கிறது...

vasu balaji said...

க.பாலாசி said...
//பிணியாகவும்
மருந்தாகவும்//

நான் பிரியாணியாகவும்னு படிச்சிட்டேன்... நம்ம கண்ணுக்கு அதான் தெரியுது...

சரி விடுங்க.. அதான் கூகிள் பஸ், ஃபேஸ்புக், ட்விட்டர், பிளாக் எங்கப்பத்தாலும் இருக்கீங்களே அப்பறம் ஏது உங்களுக்கு தனிமை...

எல்லாவுமாகி இருப்பதால்தான் தனிமை இனிப்பாகவும், கசப்பாகவும் இருக்கிறது...//

ஏன் ராசா? என் ட்விட்டர் அக்கவுண்ட் குடேன் எனக்கே தெரியல. ரெம்பப்பேரு அதுக்கு ஆவலா இருக்காங்க. அந்த ட்விட்டர் வானம்பாடி வேற ராசா:))

ஜோதிஜி said...

இப்படியே நடந்தா கொஞ்சம் நூல் பிடித்து முயற்சிக்கலாம் போல..........

அன்பரசன் said...

தனிமை கொடுமை சார்

தமிழ் அமுதன் said...

தனிமை

சொர்க்கமாகவும்


சிரிப்பாகவும்


வாழ்வாகவும்

தண்ணிலவாகவும்

மருந்தாகவும்


வரமாகவும்

எல்லாமுமாய்
இருக்கிறது


நாமாக
இருக்கும்
தருணங்களில்...


இப்படியே இருக்கட்டும்..!

நசரேயன் said...

ம்ம்ம்

க.பாலாசி said...

//ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்...... //

//நசரேயன் said...

ம்ம்ம்//

மயக்கமென்ன, இந்த மௌனமென்ன...

Thamira said...

ஜாலியா..

'சரி, அதுக்கென்ன இப்போ'னு கேட்கத்தோணுது. :-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

தனிமை அழகு.

ஸ்ரீராம். said...

தனிமையிலே இனிமை காண முடியுமா? கவிதை காண முடியும்.

'பரிவை' சே.குமார் said...

அட போடவைக்கும் கவிதை.

கலகலப்ரியா said...

பைத்தியம் புடிச்ச மாதிரியும் புடிக்காத மாதிரியும் இருக்கீங்க சார்...

Thenammai Lakshmanan said...

வெயிலாகவும்
தண்ணிலவாகவும்//

தண்ணிலவு அருமை பாலா சார்.. ஒய்ஃப் ஊருக்கு போய்ட்டாங்களா என்ன.. அப்ப வேற மெட்டுல இல்ல நீங்க எழுதி சந்தோஷப்படணும்..:))

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு பாலாண்ணா. :-)

Unknown said...

என்ன சார் ஆச்சு இன்னிக்கு. யாருக்கு என்ன ஆச்சுனு புரியல இந்த கவிதையைப் பார்த்து.
ஒன்னு புரியுது தனிமை வேணும்.

தமிழ் blog பார்த்தா ஆளுக்கு ஆள் ஒரு கவிதையை எழுதி விட்டு தள்றாங்க. தமிழ்-னா கவிதை தானா.

கவிதை புரியாத என்ன மாதிரி ஆளுங்க கொஞ்சம் எட்ட நின்னு தான் பார்க்கணும்.

அமிதாப் பச்சன் ப்ளாக்-லே அவங்க அப்பாவோட கவிதையை போட்டு படுத்தறாரு. அதனாலே எவனோ வில்லங்க பண்ணியிருப்பான். இங்க தமிழ் ப்ளாக்-இல் தமிழ் கவிதை போட்டே கொல்லுறாங்க அப்பு. அதனால் தான் எவனும் வாலாட்ட மாட்றாங்க. புரிஞ்சா தானே!

பவள சங்கரி said...

அருமை சார். எளிமை அழகு. தனிமையைப் போல. .............

Unknown said...

//ஏன் ராசா? என் ட்விட்டர் அக்கவுண்ட் குடேன் எனக்கே தெரியல. ரெம்பப்பேரு அதுக்கு ஆவலா இருக்காங்க. அந்த ட்விட்டர் வானம்பாடி வேற ராசா:))//

எனக்கும் குடுங்க ராசா.. நிறைய பேரு என்கிட்ட என்கொயருராங்க...

Unknown said...

நல்லாருக்கு சார் கவிதை

Ahamed irshad said...

கவித கவித...

சுஜா செல்லப்பன் said...

நானாக
நாமாக
இருக்கும்
தருணங்களில்...

--அருமையான வரிகள்..வாழ்த்துக்கள் !

ஜெகதீஸ்வரன்.இரா said...

நேற்று இருண்ட சாலையில் தனிமையில் நடக்கும் போது தோன்றியது..


என் நிழல் கூட
என்னை விட்டு
பிரிந்திருக்கிறது....
ஏன் இந்த
தனிமை மட்டும்
என்னுடன் எப்போதுமே
ஒட்டிக்கொண்டுள்ளது...!!

ஜெகதீஸ்வரன்.இரா said...

தங்களின் கவிதை மிகவும் அருமை

ஈரோடு கதிர் said...

||பழமைபேசி said...

முடியலை...

எல்லாரும் எல்லாமுமாய்...||

இந்த உள்குத்துதான் புரியல

vasu balaji said...

@@நன்றி LK
@@நன்றிங்க இராமசாமி
@@நன்றி ஷங்கர். பதிவருங்க எப்போ தனிமையில இருக்காங்க:))
@@நன்றிங்க சைவ கொத்துபரோட்டா
@@நன்றி சூர்யா
@@நன்றி பழமை
@@நன்றி பிரபா
@@நன்றிங்க வெறும்பய

vasu balaji said...

@@நன்றிங்க சித்ரா
@@நன்றிங்க ரிஷபன்
@@நன்றி ஆரூரன். இஸப்கோல் சாப்பிடுங்கள்:))
@@நன்றி திரு. அதானே:))
@@நன்றி ஜனார்த்தனன்
@@நன்றிங்க சக்தி
@@நன்றிங்க அருணா
@@நன்றிங்க ஜோதிஜி
@@நன்றிங்க அன்பரசன்
@@நன்றி ஜீவன்:)

vasu balaji said...

@@நன்றி தளபதி. நிறைய ரொட்டி சாப்பிட்டா கட்டும்:))
@@நன்றி ஆதி:))அதுக்கென்ன?:)))
@@நன்றி டி.வி.ஆர்.சார்
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி சே.குமார்
@@நன்றிங்க தேனம்மை
@@நன்றி பா.ரா

vasu balaji said...

கலகலப்ரியா said...

//பைத்தியம் புடிச்ச மாதிரியும் புடிக்காத மாதிரியும் இருக்கீங்க சார்...//

யோவ். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

vasu balaji said...

@@நன்றி சேது. இதுவெல்லாம் கவுஜயா:))
@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி முகிலன்:)). வடிவேலு காமெடில வாரா மாதிரி யார் கேட்டாலும் சொல்லிராதிய:))
@@நன்றி இர்ஷாத்
@@நன்றிங்க சுடர்விழி
@@நன்றிங்க ஜெகதீஸ்வரன்
@@நன்றிங்ணா:))

vinthaimanithan said...

//தனிமை வரமா.. சாபமா என்பது நம் அந்த நேர மன நிலை தான்.. ஆனால் சில சமயங்களில் அதுவும் தேவைதான்.. //
அதே!

காமராஜ் said...

இப்போதுதான் படிக்கமுடிந்தது பாலாண்ணா.அப்படியே ஒவ்வொரு எழுத்தும் என்னோடு கூடவே வருகிறது.தனிமையை தேடிக்கொள்ளுதல்,தனித்துவிடப்படுதல் இப்படி வகைப்படும்தனிமையினால் கூடுதல் தெளிவு வருகிறது.கடல் எவ்வளவு அழகோ, அதை விட ஆயிரம் மடங்கு அழகு ஒரு துளி.

prince said...

சாபமாகவும்
வரமாகவும்//
அனுபவித்திருக்கிறேன் ..
/நரகமாகவும்
சொர்க்கமாகவும்/

vasu balaji said...

@@நன்றிங்க விந்தை மனிதன்
@@நன்றி காமராஜ்
@@நன்றி ப்ரின்ஸ்

Unknown said...

என்ன சார்! இதுக்கு தான் தனிமை வேணும்னு கேட்டீங்களா! 5 நாளா ஒன்னும் போடலையே.

Is everything OK at your end?

vasu balaji said...

5 நாளாவா:)). இன்னைக்குதான் தேதி 3. கொஞ்சம் வேலை அவ்வளவுதான். இன்னைக்கு பார்க்கலாம் சேது. அன்புக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அத்தனை கூட்டம் இருந்தாலும் இந்தக் கிறுக்குப் பிடித்த தனிமை வந்து ஆட்கொள்ளும். இல்லாத தம்பியை நினைத்துக் கண்ணீர்விடும்.
இருக்கிற பாசக் கும்பலை நினைக்காது. பைத்தியம்தான். சந்தேகமில்லை.
உங்கள் தனிமை உண்மை பாலா.