Monday, August 30, 2010

மத்தாப் பூ...

இரயில்வேத்துறையில் அப்ரெண்டிஸ் சர்வீஸ் என்ற ஒன்றிருப்பதை பலரும் அறிவார்கள். அது தொழிற்பயிற்சி மட்டுமே, வேலை உத்தரவாதமில்லை என்பதும் அறிந்ததே. ஆனால் Special Class Railway Apprentices என்ற ஒரு பயிற்சி குறித்து பரவலாக அறிந்திருக்கவில்லையோ எனத் தோன்றுகிறது.

இது பி.யூ.சி/+2 படித்தவர்களுக்கான அனுமதித் தேர்வு. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் ஜமால்பூரிலுள்ள இந்திய இரயில்வே இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெகானிகல் அண்ட் எலக்ட்ரிகல் எஞ்சினீரிங் எனும் பயிற்சிக் கல்லூரியில் நான்காண்டு கடும் பயிற்சிக்குப் பிறகு Indian Railway Service of Mechanical Engineer பிரிவில் Class I அதிகாரியாக இரயில்வேயில் பணியில் சேரலாம். இந்தப் பயிற்சித் திட்டமானது பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ராஞ்சியின் செமஸ்டர் திட்டப்படி நடக்கும். 

பயிற்சிக்காலத்தில் கிட்டத்தட்ட மாதம் ரூ 12,000க்கும் அதிகமான ஸ்டைபண்ட், மருத்துவ உதவி, பாஸ் மற்றும் பி.டி.ஓ என்ற சலுகையும் பெறலாம். இதற்கான நுழைவுத் தேர்வு குறித்த தகவல் இங்கே 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


புறாக்கூண்டு போன்ற ஓர் ஒண்டுக் குடித்தனத்திலிருந்து, ஒரு நடுத்தர வர்க்கத்தினருக்கு ரெண்டு பெட்ரூம் அபார்ட்மெண்ட் என்பது கனவுலகம். கடனை உடனை வாங்கி, நகை நட்டை விற்றோ அடமானம் வைத்தோ ஓர் அளவான ஃப்ளாட் வாங்கலாம் என்று போனால், தங்க முலாம் பூசிய குழாய் (வருவது கடலிலிருந்து நேரடியான உப்புத் தண்ணீர்), க்ளோஸ்ட் லாஃப்ட், இன்ன பிற லக்சுரி அயிட்டங்களைச் சேர்த்து சதுர அடி ரூ 3000-4000 என்று ப்ளானில் பெரிய பங்களா மாதிரி தோற்றம் தரும் ஃப்ளாட்டை வாங்கி, குடியேறிய பின், ஒரு பெட்ரூம் ஸ்டோர் ரூம் ஆக மாற, பழையபடி புறாக்கூண்டு போலவே நெருக்கடியாய் அமைந்து விடும்.

சிலவோடு சிலவென்று இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி ஃபர்னிச்சர் என்று போனால், அசல் தேக்கு என்று ஏமாற்றி விற்கும் மரச் சாமான்களும், உரிந்து வரும் சீன ஃபர்னீச்சர்களும் ஏமாற்றக் காத்திருக்கும். இருக்கும் இடத்தை எவ்வளவு அழகாக, நேர்த்தியாக பயன்படுத்தி வித விதமான ஃபர்னிச்சர்களை உருவாக்கியிருக்கிறார்கள். நம்ம ஊரில் மட்டும் ஏன் இப்படி யோசிப்பதில்லை. அவ்வ்வ்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நம்ம கவுண்டர் காந்தக் கண்ணழகி என்று அலப்பறை செய்யும் காட்சி கவனமிருக்கும்.லண்டனில் ஒரு அம்மணி நிஜமாகவே காந்தசக்தி கொண்ட உடல் வாகாம். சின்ன வயதிலிருந்து கடிகாரம் கூட ஓடாமல் கெட்டுப் போகுமாம். டி.வி., ம்யூசிக் ஸிஸ்டங்கள் கெட்டுப் போவது ஒரு புறம், கடை கண்ணிக்கு போனால், எடை போடும் எந்திரங்கள் ஆகியவை தாறுமாறாக அம்மணிக்கு எத்தனை சங்கடம். 45 நிமிடம் இந்த காந்த சக்தி இருக்குமாம். செம்பு, பித்தளை, இரும்பு எல்லாம் ஒட்டிக் கொள்ளுமாம். ஹூம். நமக்கு இந்த சக்தி இருந்தால் பஸ் உள்ளில் நெரிபடாமல் வெளியே பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டு போகலாம். 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சினிமால ஹீரோவா வாரவங்க எல்லாம் நிஜத்தில அப்படி இருக்கணுமா என்ன? நாமளுந்தான் ப்ளாக் வெச்சிருக்கோம். எப்புடியெல்லாமோ பின்னூட்டம் வருது. வடிவேலு மாதிரி வந்தல்ல, அடிச்சியா போய்க்கேயிருன்னு நம்ம வேலைய பார்க்கிறோம்ல. இந்த அமிதாப்பு பதிவுல எவனோ டாஆஆர்ச்சர் பண்றான்னு சின்னப்புள்ளத்தனமா போலீசுக்கு போயிருக்காரு. ஹெ ஹேஹே..என்னதான்னாலும் நம்ம டமில் ப்ளாகர் மாதிரி வருமா..வீஈஈரய்ங்க நாம..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பேச்சே பாட்டுப் போலிருக்கும் மலையாள மொழியில் நான் ரசித்த நாடன் பாடல் எனும் நாட்டுப்புறப் பாடல். உழைத்துப் பிழைக்கும் ஓர் ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்ய ஒருவன் வருவான் என ஆறுதலாக தோழியர் பாடி, காதில் கழுத்தில் கையில் காலில் நகையில்லாவிடினும், அழகில்லாவிடினும், உன் அழகான மனதை நாடி வருவான் என்று பாட, திருமணம் செய்ய வருபவனுக்கு காசு, பணம்தான் முக்கியம் என அந்தப் பெண் பாட மனதை ஏதோ செய்யும் பாடல். ஆடும் பெண்களின் உற்சாகம், பாடும் குரலின் அழகு..
அறிமுகப்படுத்திய மஹேசுக்கும் பகிர்ந்த ப்ரியாவுக்கும் நன்றி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி..
கடந்த வார நட்சத்திரப் பதிவராக வாய்ப்பளித்த தமிழ்மணம் குழுவினருக்கும், பாராட்டி ஊக்குவித்த சக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
__/\__

37 comments:

க ரா said...

மத்தாப்பூ வர்னஜாலம் :)

Unknown said...

மத்தாப்பூ.. இதுமாதிரி அடிக்கடி வரட்டும் சார்

கலகலப்ரியா said...

|| பஸ் உள்ளில் நெரிபடாமல் வெளியே பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டு போகலாம்.||

பல்லிக்கு தொப்பை இல்லை...

vasu balaji said...

கலகலப்ரியா said...

//|| பஸ் உள்ளில் நெரிபடாமல் வெளியே பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டு போகலாம்.||

பல்லிக்கு தொப்பை இல்லை.//

ஹி ஹி. முதுகுப்பக்கம் ஒட்டிப்பேனே:o)

a said...

மத்தாப்பு அருமை....

நட்சத்திர பதிவராய் கலக்கியதர்க்கு வாழ்த்துக்கள்...

பா.ராஜாராம் said...

வாசிக்க நிறைய விட்டுப் போயிருக்கு பாலாண்ணா.(ரமதான்) வந்து ஓட்டு மட்டும் போட்டு போனேன். (நல்லாதானே செய்வீங்க என்கிற நம்பிக்கை) இதை வாசித்தேன். பிடிச்சிருக்கு.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

மடக்கி நீட்ட ரிமோட் கண்ட்ரோலும் இருந்தா நல்லாயிருக்கும் :))

அங்கங்க ஒன்னு ரெண்டு வார்த்த மட்டும் புரிஞ்சாலும், பாட்டு நல்லாயிருக்கு..

Unknown said...

First congratulation for a star.

"ஹெ ஹேஹே..என்னதான்னாலும் நம்ம டமில் ப்ளாகர் மாதிரி வருமா..வீஈஈரய்ங்க நாம.."

Sir,
புரட்சி வார்த்தையை புரட்டி புரட்டி அடிக்கும் போதே எல்லோரும் ஒரு அளவோடு எட்ட நின்னு தான் பார்பாங்க. புரட்டி விட மாட்டீங்க!

ஸ்ரீராம். said...

வீடு வீடியோவை பொறாமையுடன் பார்த்தேன். அமிதாப் போலீஸ் பிரச்னை சுவாரஸ்யம்..(நமக்கு...இல்லை எனக்கு)

பிரபாகர் said...

இதென்ன அய்யா மத்தாப்பூ.... பல்லி சுவற்றில் ஒட்டுவது போல, காந்தத்தில் இரும்பு ஒட்டுவதுபோல எங்களின் மனதில் ஒட்டிக்கொண்டது. அப்ரெண்டிஸ் சர்வீஸ் பற்றிய தகவல் கண்டிப்பாய் நிறையபேருக்கு பயனுள்ளதாய் இருக்கும். பர்னிச்சர்களால் வீடு அடைபடுதல் தகவல் படித்து நகைத்தேன், எனது வீடு அந்த சூழலுக்குள் உட்பட்டிருப்பதால்...

பிரபாகர்...

சைவகொத்துப்பரோட்டா said...

ஜொலிப்"பூ"

priyamudanprabu said...

நம்ம டமில் ப்ளாகர் மாதிரி வருமா..வீஈஈரய்ங்க நாம..
///

ஆமாங்க ...

priyamudanprabu said...

கலகலப்ரியா said...
|| பஸ் உள்ளில் நெரிபடாமல் வெளியே பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டு போகலாம்.||

பல்லிக்கு தொப்பை இல்லை...

//////

ha ha

ஜெயந்த் கிருஷ்ணா said...

மத்தாப்பு அருமை....

Jerry Eshananda said...

valid information on Railway.

Ravichandran Somu said...

”மத்தாப்பூ” நல்ல வண்ணங்கள்!

Jey said...

// ஹெ ஹேஹே..என்னதான்னாலும் நம்ம டமில் ப்ளாகர் மாதிரி வருமா..வீஈஈரய்ங்க நாம.//

எப்படினே...உங்களால மட்டும்...:)


// Special Class Railway Apprentices //

சூப்பர் வேலையா தெரியுது நன் +2 முடிச்சி20 வருசம் ஆகப் போகுது... இப இதுக்கு அப்ப்ளை பண்ணலாமாண்ணே??!!!..:)

//பஸ் உள்ளில் நெரிபடாமல் வெளியே பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டு போகலாம்.//

நானெல்லாம் , ஊருக்கு ஓசில ட்ரைன்லேயே ஒட்டிகிட்டு போயிருவேன்..., மாச பட்ஜெட் குறையுமில்ல..

அப்புறம் வீடியோ கிளீப்ஸ் அருமை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

மத்தாப்பு அருமை

பவள சங்கரி said...

பொறி பொறியான மத்தாப்பு.........அருமை...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சுவையான செய்திகள்.அருமை.

Ahamed irshad said...

மத்தாப்பு அருமை..

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...
கலகலப்ரியா said...

//|| பஸ் உள்ளில் நெரிபடாமல் வெளியே பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டு போகலாம்.||

பல்லிக்கு தொப்பை இல்லை.//

ஹி ஹி. முதுகுப்பக்கம் ஒட்டிப்பேனே:o)||

அப்டின்னா செத்த பல்லி மாதிரின்னு சொல்லுங்கோ..

vasu balaji said...

கலகலப்ரியா said...
||வானம்பாடிகள் said...
கலகலப்ரியா said...

//|| பஸ் உள்ளில் நெரிபடாமல் வெளியே பல்லி மாதிரி ஒட்டிக் கொண்டு போகலாம்.||

பல்லிக்கு தொப்பை இல்லை.//

ஹி ஹி. முதுகுப்பக்கம் ஒட்டிப்பேனே:o)||

அப்டின்னா செத்த பல்லி மாதிரின்னு சொல்லுங்கோ..//

ஆஆஆஆ. மத்தாப்பூவ வச்சே ஆட்டம்பாம் கொளுத்துறியா..அவ்வ்வ்வ்..நானாத்தான் வாய குடுத்து மாட்டிக்கிட்டனா?

Ahamed irshad said...

விருது வெயிட்டிங்...

http://bluehillstree.blogspot.com/2010/08/blog-post_30.html

க.பாலாசி said...

1. நான் 12 வது படிச்சப்ப இந்த மேட்டர சொல்லியிருந்தீங்கன்னா நல்லாயிருந்திருக்கும்...

2. செலவோடு செலவென்றா?? சிலவோடு சிலவென்றா?????

3. ப்ரியாக்கா சொன்னதே போதும்...

4. எரிமலையே வெடிச்சா என்னான்னு தெரியாத மாதிரி நடிக்கிற ஆளாச்சே நாம...

5. பாடலை கேட்கமுடியவில்லை, நீங்கசொன்னா நல்லாதானிருக்கும்..

Unknown said...

மத்தாப்பூ தீபாவளிக்கு மட்டும் தானா இல்ல, அடிக்கடி வருமா..??

Unknown said...

சொல்ல மறந்துட்டேன்.. மத்தாப்பு சுவாரஸ்யம்..!!

அன்பரசன் said...

அருமை சார்

ஈரோடு கதிர் said...

கலக்கலாய் நிறைவடைந்தது நட்சத்திர வாரம்


செரி.. பிக் பி மாதிரி நீங்க புகார் கொடுக்கனும்னா யார் மேலே(!) கொடுப்பீங்கண்ணே?

பதில் மின்னஞ்சலில் அனுப்பினால் போதும்

vinthaimanithan said...

ரயில்வே அறிமுகம் நல்ல விஷயம்... இம்மாதிரி நிறைய எதிர்பார்க்கிறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

கலந்து கட்டி கலக்குங்க பாலா சார்

'பரிவை' சே.குமார் said...

மத்தாப்பூ... மத்தாப்பூ... மத்தாப்பூ...

vasu balaji said...

@@நன்றி இராமசாமி
@@நன்றி முகிலன்
@@நன்றி ப்ரியாம்மா
@@நன்றி யோகேஷ்
@@நன்றி பா.ரா. தமிழ்மணம் வேற இருக்கே. மெதுவா படிங்க.
@@அப்பிடியும் இருக்கு சந்தனா. அடுத்த மத்தாப்புல போடுறேன்
@@நன்றி சேது
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி பிரபா
@@நன்றி சைவ கொத்து பரோட்டா

vasu balaji said...

@@நன்றி பிரபு
@@நன்றி வெறும்பய
@@நன்றி ஜெரி
@@நன்றி இரவிச்சந்திரன்
@@நன்றி டி.வி.ஆர்
@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி ஸ்ரீ
@@நன்றி இர்ஷாத் விருதுக்கு
@@நன்றி பாலாசி:))
@@நன்றி திரு
@@நன்றி அன்பரசன்
@@நன்றி கதிர். ம்கும்.
@@நன்றிங்க விந்தை மனிதன்
@@நன்றி கார்த்தி
@@நன்றி சே.குமார்

கே. பி. ஜனா... said...

மத்தாப்பூ நல்லாருக்கு!

Thamira said...

எல்லாம் சுவாரசியம். குறிப்பா அமிதாப்.. ஹிஹி.!

Paleo God said...

நல்லா இருக்கு சார் இந்தப் பூ :)

சார் என்ன பொருள் வாங்கினாலும் மழை பெய்தால் மிதக்கறா மாதிரி வாங்கறது பெட்டர். :)