Tuesday, August 24, 2010

பார்க்காத பயிர் மட்டுமல்ல பிள்ளைகளும்..

ஞாயிறு தினத்தந்தியில் ஒரு செய்தி. சென்னையின் ஒரு பிரபல பள்ளிக்கூடத்தில் 100 சதம் தேர்ச்சி பெற முடியவில்லை என்பதற்காக, கற்பிக்கும் முறையிலும், மாணவர்களை ஆர்வம் கொள்ளச் செய்வதிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியும், அவர்கள் எதிர்பார்த்த அளவு மாற்றம் ஏற்படவில்லையாம். இதன் காரணம் என்ன எனக் கண்டறிய விரும்பிய நிர்வாகம் 40 கேள்விகள் அடங்கிய ஒரு சர்வே எடுத்ததாம். அதில் 10 கேள்விகள் அப்பா, அம்மா, வீடு, வீட்டுச் சூழல் குறித்ததாம். ஆசிரியர்கள் கூட படிக்க அனுமதி கிடையாது அதனால் உள்ளதை உள்ளபடியே எழுதவேண்டும். பதில் வீட்டுக்கும் தெரியப் படுத்தப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தின் பேரில் கிட்டத்தட்ட நான்காயிரம் மாணவ மாணவிகள் அளித்த பதிலைத் தொகுத்த நிர்வாகம் ஆடிப்போய்விட்டதாம். 

மாணவர்கள் கூறியவற்றுள் முக்கியமானவை
  • தந்தை குடித்துவிட்டு வந்து தாயை அடிப்பது எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற கவலையை உண்டாக்குவதால் படிப்பில் நாட்டம் குறைவது
  • படிக்கும் நேரத்தில் தாய்மார்கள் அக்கம் பக்கத்து பெண்களை அழைத்து வந்து வீட்டில் அரட்டையடிப்பது (அதிக எண்ணிக்கை மாணவர்களின் குறை)
  • எவ்வளவு முக்கியமான பரிட்சை என்றாலும் சத்தமாக சீரியல் பார்ப்பது
  • தாயார் முதலில் தூங்கப் போய் தாமதமாக எழுவது.

இதை அடிப்படையாகக் கொண்டு நிர்வாகம் கூறியதாக செய்தி கூறுவது

“முன்பெல்லாம் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக தங்களது தனிப்பட்ட தேவைகளையும், ஆசைகளையும் பெற்றோர் குறிப்பிட்ட காலத்துக்கு ஒதுக்கி வைப்பார்கள், அல்லது தியாகம் செய்வார்கள்.” இப்போது அப்படியல்ல. தாங்கள் வாழும் காலம் வரை தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதையும் குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறார்கள். மொத்தத்தில் பெற்றோர்களிடம் சுயநலம் அதிகரித்துவிட்டதைத்தான் இந்த சர்வே காட்டுகிறதாம். 

இது முழுதும் பெற்றோரைக் குற்றம் சொல்லும் செயலேயன்றி வேறெதுவுமில்லை. இதே போல் பெற்றோரும் தனித்தனியாக கண்டிப்பாக இதே சர்வேக்கு பதில் சொல்லவேண்டும் என்று பதிலைப் பெற்று ஒப்பு நோக்கி ஒரு தேர்ந்த மனநல மருத்துவரின் உதவியுடன் காரணிகளைக் கண்டு பிடித்திருந்தால் பெருமளவு பயனுள்ளதாக இருந்திருக்கும்.

பிள்ளைகள் தங்கள் நாளின் பெரும்பகுதியை படிப்பு என்ற சூழலில் செலவிடும் இடம் பள்ளி. மேற்கூறிய காரணங்கள் இருப்பினும், கவனச்சிதறல் என்பது கண்டுகொள்ளக் கூடிய ஒன்று. அத்தகைய மாணவர்களை தனிப்பட்ட கவனம் செலுத்தி, அல்லது அவர்களோடு உரையாடி காரணம் அறிந்து பெற்றோர்கள் காரணமெனின் அவர்களுக்கு அறிவுறுத்துவதும் பள்ளியின் கடமை அல்லவா?

மற்ற மாணவர்களுடன் இருக்கையில் அவர்கள் உலகம் தனியல்லவா? கவலைகள் மறையாவிடினும் மறந்து, படிப்பில் கவனம் செலுத்தும் இடமாயிற்றே. அப்படியிருந்தும் தேர்ச்சி அடைய முடியாமல் என்ன தடை? அவர்களின் ஆர்வமின்மை குறித்து பள்ளி நிர்வாகம் ஏன் சொல்லவில்லை. எத்தனை பெரிய பள்ளியானாலும் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் கட்டணம் வசூலித்தும் ஒரு பல் டாக்டர், அல்லது பொது மருத்துவரின் பரிந்துரை தருகிறதே தவிர, பிள்ளைகளின் மனநலனுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்திருக்கிறதா என்றால், எனக்குத் தெரிந்த வரை இல்லை.

அவர்களையும் முழுதாய்க் குற்றம் சொல்ல முடியாது. அப்படி ஒரு வேளை அம்முயற்சியில் ஈடுபட்டாலும், என் பிள்ளை பைத்தியமா? எப்படி மனநோய் மருத்துவரிடம் காட்டலாம் என்று சண்டைக்கு வரும் பெற்றோர்கள் அதிகம். 

“Kinder Garten" என்பதை அப்படியேவோ அல்லது “Children's Garden" என்று மொழிமாற்றம் செய்தோ போடாமல் “Kinder Garden" என்று போடும் கான்மெண்ட் இஸ்கூலில் சேர்ப்பது நம் கவுரவமல்லவா? அடுத்தவரை கைகாட்டி குற்றம் சொல்வதை விட, நாம் பிள்ளைகளிடம் பேசுவதும், தொலைக்காட்சியைப் பார்த்தே தீரவேண்டும் என்ற அவா இருக்குமானால் பிள்ளைகளிடம் அவர்களுக்கு தொந்தரவில்லையா என்று கேட்ட பிறகு பார்ப்பதும், தூங்கப் போகுமுன் ஏதாவது வேண்டுமா என்று கேட்டுவிட்டு தூங்கப் போவதும் வேறெதுவுமில்லாவிடினும் தங்கள் மீதான அன்பின் வெளிப்பாடு என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்கும். அதனால் ஒரு சிறு முன்னேற்றமிருப்பினும் நல்லதுதானே.
~~~~~

46 comments:

மணிஜி said...

அக்கறை....பாராட்டுக்”கல்” அண்ணா

vasu balaji said...

மணிஜீ...... said...

//அக்கறை....பாராட்டுக்”கல்” அண்ணா//

ஹி ஹி. நம்மள மாதிரி ஸ்கூல் போற வயசுல பிள்ளைங்க இல்லாதவங்கதான் சொல்ல முடியும். பலாபட்டறைய சொல்லச் சொன்னா வெண்ணை..0.5னு திட்டமாட்டாரா?

அகல்விளக்கு said...

இப்படியெல்லாம் வேற நடக்குதா....
ரொம்ப கஷ்டம்தான்.... :(

VELU.G said...

எல்லா பெற்றோர்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.

இருந்தாலும் மாணவர்கள் மேல் இவ்வளவு அக்கறை காட்டும் பள்ளி நிர்வாகம் ஏன் பள்ளியிலேயே படித்து எழுதிக்காட்டி சிறு சிறு டெஸ்ட்கள் மூலம் அவர்களை முன்னேற்றக்கூடாது. அதற்கேற்ப பள்ளி பாடத்திட்ட வேளைகளை சிறுசிறு மாற்றங்கள் செய்யக்கூடாது. பள்ளி நேரத்தை கொஞ்சம் அதிகப்படுத்தி அவர்களை அதில் ஈடுபாடு கொள்ளச்செய்யக்கூடாது. பெற்றோர்கள் அக்கறையில்லையென்று பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டி விட்டு இவர்கள் ஏன் தப்பிக்கிறார்கள்.

பெற்றோர்கள் வீட்டு நிர்வாகத்தில் வேலைகள் இருக்கும். இவர்களுக்கு வேலை கல்வி கற்றுத்தருவது தானே. ஒரு மாணவன் பள்ளியில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளாமல் வீட்டில் வந்து படித்து மனப்பாடம் செய்து விட்டு வா என்று அனுப்பம் பள்ளி என்ன நிர்வாகம் செய்கிறது. அதற்கு பள்ளிக்கு சென்றுதான் பயில வேண்டும் என்ற கட்டாயம் என்ன இருக்கிறது

Unknown said...

இப்போதெல்லாம் பிள்ளைகளிடம் நாம் மிகுந்த கவனமாக இருக்கவேண்டும் ..

rajasundararajan said...

//அடுத்தவரை கைகாட்டி குற்றம் சொல்வதை விட, நாம் பிள்ளைகளிடம் பேசுவதும், தொலைக்காட்சியைப் பார்த்தே தீரவேண்டும் என்ற அவா இருக்குமானால் பிள்ளைகளிடம் அவர்களுக்கு தொந்தரவில்லையா என்று கேட்ட பிறகு பார்ப்பதும், தூங்கப் போகுமுன் ஏதாவது வேண்டுமா என்று கேட்டுவிட்டு தூங்கப் போவதும் வேறெதுவுமில்லாவிடினும் தங்கள் மீதான அன்பின் வெளிப்பாடு என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்கும்.//

என்னா பொறுப்புள்ள அறிவுரை போங்க!

'அனுபவிக்க எம்புட்டோ இருக்கு, ஆனா முடியலையே'ங்கிறதுதானுங்க நம்மளோட மனக்காய்ச்சல். மீடியாக்களும் விடாம இந்தக் காய்ச்சல ஊதிக் கனல வெச்சுக்கிட்டே இருக்குதுக. டி.வி. சீரியல் பார்க்குறது அனுபவிக்கிற ஒரு விஷயம்கிற அளவுக்கு நம்ம தாய்க்குலங்க காய்ஞ்சு கிடக்குதுங்க, பாவம்!

எவ்வளவு ஃபீஸ் கட்டிப் படிக்கவெச்சாலும் வீட்டுல வந்து படிக்காட்டித் தேராது. ஃபீஸ் கட்டாமப் படிச்ச எங்க காலத்துலயும் இதுதான் உண்மை.

பள்ளிக்கூடத்துல என்ன பண்றாங்கன்னு குறை சொல்றதெல்லாம் சரிதான், ஆனா பிள்ளை நம்ம பிள்ளைங்க.

அன்பரசன் said...

நல்லதொரு பதிவு சார்...

பவள சங்கரி said...

சார் அருமையான, உபயோகமான பதிவு. இதுதான் இன்றைய நிலை. குழந்தைகளும் ஒழுங்காகப் படிக்க வேண்டும், தங்கள் மகிழ்ச்சிக்கும் எந்த பங்கமும் வரக்கூடாது. உங்கள் எண்ணம் முற்றிலும் சரி. இதெல்லாம் எங்கு போய் முடியப் போகிறது, முதியோர் இல்லத்திலா ?

Vidhoosh said...

சார்.
ரொம்ப அவசியமான அருமையான பதிவு.

இதை http://parentsclub08.blogspot.com/ வலைதளத்தில் வெளியிடலாமா?

நன்றி
விதூஷ்

Vidhoosh said...

மெயிலில் பெற ..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லதொரு பதிவு

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லதொரு பதிவு

எம்.எம்.அப்துல்லா said...

சூப்பர் நைனா.

பிரபாகர் said...

//எத்தனை பெரிய பள்ளியானாலும் மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் கட்டணம் வசூலித்தும் ஒரு பல் டாக்டர், அல்லது பொது மருத்துவரின் பரிந்துரை தருகிறதே தவிர, பிள்ளைகளின் மனநலனுக்கு ஒரு மன நல மருத்துவரை அழைத்திருக்கிறதா என்றால், எனக்குத் தெரிந்த வரை இல்லை.
//
மிகச் சரியான கருத்து... கண்டிப்பாய் எல்லாப் பள்ளிகளும் செய்யவேண்டிய ஒன்று...


//
அடுத்தவரை கைகாட்டி குற்றம் சொல்வதை விட, நாம் பிள்ளைகளிடம் பேசுவதும், தொலைக்காட்சியைப் பார்த்தே தீரவேண்டும் என்ற அவா இருக்குமானால் பிள்ளைகளிடம் அவர்களுக்கு தொந்தரவில்லையா என்று கேட்ட பிறகு பார்ப்பதும், தூங்கப் போகுமுன் ஏதாவது வேண்டுமா என்று கேட்டுவிட்டு தூங்கப் போவதும் வேறெதுவுமில்லாவிடினும் தங்கள் மீதான அன்பின் வெளிப்பாடு என்று பிள்ளைகளுக்கு புரிய வைக்கும். அதனால் ஒரு சிறு முன்னேற்றமிருப்பினும் நல்லதுதானே.
//

மொத்தத்தில் தியாக மனப்பான்மை குறைந்து விட்டது அய்யா! கண்டிப்பாய் இது மாறவேண்டும். அட்லீஸ்ட் நாமாவது திருந்த முயற்சிப்போம்...

பிரபாகர்...

"உழவன்" "Uzhavan" said...

குழந்தைகளுக்கும் தாய்தந்தையர்களுக்குமான உறவு மிக முக்கியமானது.

vasu balaji said...

Vidhoosh said...
சார்.
ரொம்ப அவசியமான அருமையான பதிவு.

இதை http://parentsclub08.blogspot.com/ வலைதளத்தில் வெளியிடலாமா?

நன்றி
விதூஷ்//

தாராளமாக வெளியிடுங்கள். நன்றி

Ahamed irshad said...

சமூக அக்"கறை"..

நல்ல பதிவுங்..

முத்து said...

ஏற்கனவே பசங்க பாடு டப்பா டான்ஸ் ஆடுது இதுல வேற அவங்களை கண்டுகொள்ளாமல் விட்டால்?

ஸ்ரீராம். said...

பள்ளிகள் பெற்றோரைக் குறை சொல்வதும், பெற்றோர் பள்ளியின் பொறுப்புதான் பணம் கட்டரோம்ல என்று சொல்வதும்... மொத்தத்தில் பாதிக்கப் படுவது குழந்தைகள்தான்..

நிஜாம் கான் said...

அண்ணே! அருமையான அலசல். ஆனா... எனக்கு 12 ஆம் வகுப்புக்கு பிறகு தெரிஞ்ச விசயங்கள் விவரங்கள் எல்லாம் இப்ப 5 வது படிக்கிற பையனுக்கு தெரியுதேன்னு நினைக்கும் போது அதுவும் ஒரு மிகப்பெரிய காரணியா இருக்குமோன்னு எனக்கு தோனுது...

Unknown said...

நல்லதொரு பதிவு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான, மிகவும் தேவையான பதிவுங்க.

குழந்தைகள் நல்ல முறை கல்வி கற்க எல்லா வகையிலும் உதவுவதே நல்ல விசயம். இதைப் பெற்றோரும் ஆசிரியர்களும் சேர்ந்து செய்ய வேண்டும்.

நாடோடி said...

சிந்திக்க‌ வேண்டிய‌ ப‌திவு சார்..

நாகா said...

வழக்கம் போல் அக்கறையுள்ள எழுத்துக்கள். ஐயாவுக்கு நட்சத்திர வார வாழ்த்துக்களும்..!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லதொரு பதிவு சார்.

பெசொவி said...

விதை விதைத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் இருந்தால் எப்படி மரம் வளராதோ, அதுபோல் நம் பிள்ளைகளை நல்ல (என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும்) பள்ளியில் சேர்த்து விட்டால் மட்டும் போதாது, நாம் அவர்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை என்றால், இப்படித் தான் நடக்கும். நல்ல முக்கியமான பதிவு, நன்றி சார்!

எறும்பு said...

ஹூம்..

கலகலப்ரியா said...

ம்ம்...

அப்பாதுரை said...

ரேடியோ டிவி செல்போன் டெக்ஸ்டிங் பேஸ்புக் என்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் இடையூறுகளினால் படிப்பில் கவனம் குறைவது ஒரு பக்கம்... இந்தியாவில் பட்டதாரிகள் எண்ணிக்கை 2000ம் ஆண்டு பட்டதாரி எண்ணிக்கை 1970 விட பதினொரு மடங்கானது இன்னொரு பக்கம். (மக்கள் தொகை பெருக்கமும் இந்த இடையூறிடையே வளந்ததுதாங்கணா)

vasu balaji said...

@@நன்றி மணிஜி
@@நன்றி ராஜா
@@நன்றிங்க வேலு
@@நன்றிங்க செந்தில்

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு சார்.

vasu balaji said...

rajasundararajan said...

//என்னா பொறுப்புள்ள அறிவுரை போங்க!

'அனுபவிக்க எம்புட்டோ இருக்கு, ஆனா முடியலையே'ங்கிறதுதானுங்க நம்மளோட மனக்காய்ச்சல். மீடியாக்களும் விடாம இந்தக் காய்ச்சல ஊதிக் கனல வெச்சுக்கிட்டே இருக்குதுக. டி.வி. சீரியல் பார்க்குறது அனுபவிக்கிற ஒரு விஷயம்கிற அளவுக்கு நம்ம தாய்க்குலங்க காய்ஞ்சு கிடக்குதுங்க, பாவம்!

எவ்வளவு ஃபீஸ் கட்டிப் படிக்கவெச்சாலும் வீட்டுல வந்து படிக்காட்டித் தேராது. ஃபீஸ் கட்டாமப் படிச்ச எங்க காலத்துலயும் இதுதான் உண்மை.//

காரணிகள் இது மட்டும்தானுங்களா?

//பள்ளிக்கூடத்துல என்ன பண்றாங்கன்னு குறை சொல்றதெல்லாம் சரிதான், ஆனா பிள்ளை நம்ம பிள்ளைங்க.//

குறையாச் சொல்லலைங்க. முழுமையாச் செய்யலையேன்னு ஒரு வருத்தம். தேர்ச்சி கூட அடைய முடியாம பள்ளியில் படிச்சது போறாதுன்னா நினைக்கிறீங்க.

vasu balaji said...

@@நன்றிங்க அன்பரசன்
@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி டி.வி.ஆர்.சார்
@@நன்றிங்க அப்துல்லா:)
@@நன்றி பிரபா
@@நன்றி உழவன்
@@நன்றி இர்ஷாத்
@@நன்றி ஸ்ரீராம். இது அப்படிச் சொல்லலைன்னு நினைக்கிறேன்:).
@@நன்றிங்க முத்து
@@நன்றிங்க நிஜாம்

vasu balaji said...

@@நன்றி கலாநேசன்
@@நன்றி செந்தில்
@@நன்றி நாடோடி
@@நன்றிங்க நாகா. நலமா?
@@நன்றிங்க வெறும்பய
@@நன்றி பெ.சொ.வி
@@நன்றி ராஜகோபால்
@@நன்றிங்க அப்பாதுரை

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ம்ம்...//

ம்ம்..போடறதில்லை. நிறைய வாட்டி எழுதக் கேட்டிருக்கேன். இதுபத்தி ஒரு இடுகை போடணும்மா நீ. இப்படியெல்லாம் இருக்குன்னு தெரியணும். யாராவது ஒரு பத்து பேர் கேப்பாங்க.

rajasundararajan said...

//பள்ளிக்கூடத்துல என்ன பண்றாங்கன்னு குறை சொல்றதெல்லாம் சரிதான், ஆனா பிள்ளை நம்ம பிள்ளைங்க.//

இது @ VELU.G சொன்னதைக் கணக்கில் கொண்டு சொன்னது.

சிநேகிதன் அக்பர் said...

ராஜாசுந்தரராஜன் சார் சொல்வதும் கவனத்தில் கொள்ளவேண்டியது.

மேலும் குருவி தலையில் பனங்காய் வைத்த கதையாக, எல்கேஜிக்கு ஐந்தாம் கிளாஸ் படிப்பவர்கள் அளவுக்கு பாடங்கள். பாவம் அவர்களும் என்ன செய்வார்கள்.

100% தேர்ச்சிபெற்றே ஆக வேண்டுமென்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

நல்லா சொல்லியிருக்கிங்க அண்ணா.

தாராபுரத்தான் said...

வணக்கம்ங்க..தேவையான பதிவுதாங்க..

ஈரோடு கதிர் said...

வெறும் படிப்பும் அதையொட்டி பெறும் மதிப்பெண்களுமே முக்கியமாகிப் போய்விட்ட சூழலில்...

கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம்தான்

cheena (சீனா) said...

அன்பின் பாலா

பெற்றோர்களின் சுயநலம் அதிகரித்து விட்டது - உண்மை தான்.

மேலும் பெற்றோர்களும் பிள்ளைகள் மேல் அக்கறை காட்டுவதில்லை. பள்ளியில் சேர்ப்பது மட்டுமே அவர்கள் கடமை என நினைக்கின்றனர். அவர்களின் பணிச்சுமையும் அவர்களை இயலாதவர்களாக்கி விட்டது.

நல்ல சிந்தனை - நல்ல இடுகை - நன்று நன்று.

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா

Unknown said...

ரெண்டு பக்கமுமே திருந்தனும். பள்ளிகள் பெற்றோரை குறை சொல்வதும், பெற்றோர்கள் பள்ளிகளைக் குறை சொல்றதுமா இருக்கக் கூடாது.

பெற்றோரும் பள்ளிகளும் சேர்ந்து ஒரு நல்ல திட்டத்துக்கு வரணும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டாத பெற்றோரும் தப்புதான். பெற்றோரை முறையாக பயிற்றுவித்து அவர்களையும் பங்கெடுக்க வைக்காத பள்ளிகளும் தப்புதான்.

அதுக்காக பெற்றோர் படித்தவர்களாக இருந்து பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித்தர வேண்டுமென்று சொல்லவில்லை. பிள்ளைகள் ஹோம் வொர்க் செய்கிறார்களா, படிக்கிறார்களா என்பதைப் பார்க்கத் தெரிந்திருந்தால் போதும்.

வல்லிசிம்ஹன் said...

பயிரைப் போல பிள்ளைகளை வளர்ப்பவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.
சதவிகிதம் எப்படி என்றுதான் தெரியவில்லை. ஆனால் அதிர்ச்சியாக இருக்கிறது இந்த சர்வே. நல்ல பதிவு.

a said...

நல்ல விசயம்....

Vidhoosh said...

parents club-பில் வெளியிட அனுமதி தந்தற்கு நன்றி சார்.

http://parentsclub08.blogspot.com/2010/08/blog-post_26.html

Ravichandran Somu said...

நல்ல பதிவு...

CS. Mohan Kumar said...

பத்தாவது, + 2 படிக்கும் போதாவது பெற்றோர் டிவி பார்ப்பதை குறைக்கக் கூடாதா? ம்ம்..