Friday, July 23, 2010

நிஜங்கள் பிரசவிக்கும் அதிசுவாரசியம்


பிம்பங்கள் பிரசவிக்கும் சுவாரசியம் இங்கே


உறக்கம் தேடும் இரவுகளில் நெரிசல் இல்லாப் பயணங்களை விரும்பினாலும், உறங்கிப் பழகாப் பகல் பொழுதுப் பயணங்களில் ஒருவித சுவாரசியத்தை தொடர்ந்து தக்கவைப்பவர்கள் புதிது புதிதாய் தவிர்க்க முடியாமல் நாம் சந்திக்கும் மனிதர்களே. 

(பாலாசி: அதுக்குத்தான் குடுக்கிற காசுக்கு குறையில்லாம பகல் பஸ்ஸுல போறீங்களா? சைட்டடிக்கிறத என்னமா சொல்றாரு பாருங்க)

சில நேரங்களில் பெருத்த ஏமாற்றத்தைத் தருவது எதிர்பார்த்த நபர்களை சந்திக்க முடியாமல் போவது, அதே போல் மிகப் பெரிய ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் விதவிதமாய்த் தருவது எதிர்பாராத நபர்களை பொருந்தாத தருணங்களில் சந்திப்பது.

(வானம்பாடி: வாக்கிங் போறேன்னு போயி மொதலாளிய கழட்டி விட்டுட்டு ரயில்வே ஸ்டேஷன்ல சுத்தின கதை வந்தப்பவே நினைச்சேன். யார்ட்ட மாட்னீங்க மாப்பு?)

நம்மைச் சுற்றி மனிதர்களாக குவிந்து கிடக்கும் தேசத்தில், நம்மை எத்தனை பேருக்குத் தெரியும், நமக்கு எத்தனை பேரை நேரிடையாக அடையாளம் தெரியும். எங்கும் மனிதர்களாகத்தானே வியாபித்துக் கிடக்கின்றனர். ஆனாலும் அதில் எத்தனை சதவிகிதம் நம்மையும், நமக்கு பரிச்சயம் இருக்கின்றது.

(பாலாசி: இந்த நெனப்புதான் பொழப்ப கெடுக்கறது. என்னதான் நமக்கு தெரிஞ்ச மூஞ்சி யாருமில்லைன்னு உறுதிப்படுத்திகிட்டு லுக்கு விட்டாலும், தவறாம நம்மளத் தெரிஞ்சவன் ஆனா நமக்குத் தெரியாதவன் போட்டு குடுத்துடுவான்.)

நம் வீட்டின் அருகில் இருப்பவர்கள், அடுத்து நம் வீதியின் முதல் திருப்பம் திரும்பும் வரையில் இருக்கும் வீடுகளில் அதிகப் படியாக வீதியில் புழங்கும் நபர்கள், அதைத் தாண்டி பெரிய வீதிக்கோ, முக்கிய சாலைக்கோ வரும் போது, அதில் இருப்பவர்களில் பெரும்பாலும் நாம் முன்பின் அறியாத நபர்களாக இருக்கின்றனர்.

(வானம்பாடிகள்: ஹி ஹி. அது அப்புடியில்லடி மாப்பு. பாலாசி சொன்னா மாதிரி அவிங்கள உங்களுக்கு தெரியாது. ஊட்ல போய் போட்டு குடுப்பானுவோ. தங்கமணி வந்து வத்தி வச்சிடும். எத்தன வாட்டி இப்புடி மாட்டிகிட்டு வாங்கி கட்டிகிட்டு இங்க பேசறத பாரேன்)

தொடர்ந்து மனிதர்களைச் சந்திப்பது, மனிதர்களே இல்லாத நிசப்த தனிமை இதில் எது சுகம்? தெரிந்தவர்களைச் சந்திப்பதைக் காட்டிலும், காணும் இடம்தோறும் பல மடங்கு தெரியாத நபர்களை புதிதாய் சந்தித்துக் கொண்டேயிருக்கின்றோம். முன்பின் பார்த்திராத ஒரு மனிதரை புதிதாய் பார்க்கும் சுவாரசியத்திற்கு இணை ஏது?

(பாலாசி: ஆமா! ஆமா! ஒரே ஃபிகர எத்தன நாளைக்குதான் லைன் போடுறது. ஏனுங்க நீங்கள்ளாம் இப்புடி போட்டிக்கு வந்து கைடெல்லாம் போட்டா எங்க பொழப்பு என்னாறது)

நேரம் வாய்க்கும் போதெல்லாம் நீண்ட காலமாய் இருக்கும் அலுவலக வாசலில் நின்று வேகமாய் இயங்கும் சாலையில் பார்வையை ஏதோவொரு சுவாரசியம் தேடி மிதக்க விட்டுப்பார்த்தால், காலை நேரத்தில் கடந்து பல ஆயிரத்தில் ஓரிரண்டு பேர் மட்டும் ஏற்கனவே பார்த்த முகம் போல் தோன்றும்.

(வானம்பாடிகள்: காலையில ஆஃபீசில வேல வெட்டி பாக்கறத உட்டுபுட்டு தெருவில பராக்கு பார்க்கறது என்னங்கறேன். என்னாத்த சுவாரசியம் தேடுறது கார்த்தால. அது அது தின்னும் தின்னாம, ஊட்ல சண்ட, புள்ளைங்கள வெரட்டி அனுப்பிட்டு வேகு வேகுன்னு ஓடுனா இவருக்கு ஸ்வாரஸ்யம் கேக்குது. குளிக்க தண்ணியில்லாம முகம் கழுவிட்டு ஓடுறது இவருக்கு பார்த்த முகமாமா?)

அது தவிர்த்த நேரங்களில் புதிய புதிய முகங்கள் கண்களுக்குள் கலந்து.... கலைந்து போகின்றன. ஆச்சரியம் அதில் பெரும்பாலும் ஒரு முகம் போல் இன்னொரு முகம் இருப்பதில்லை., அதிகபட்சம் முக்கால் சதுர அடிக்குள் அடங்கிப் போகும் முகத்திற்குள் எத்தனையெத்தனை வகைகள்.

(பாலாசி: அதான் பொழுதன்னிக்கும் ஜிமெயில்ல ஆரஞ்சுல இருக்கோ? இவருக்கு அளந்துக்கோன்னு யாரு மூஞ்சிய காட்டுனா? )

நெட்டையோ குட்டையோ, பருமனோ ஒல்லியோ, சிவப்போ கருப்போ, பார்க்கும் விநாடியே கண்கள் அந்த நபரிடம் இருக்கும் குறிப்பிட்ட சிலவற்றை திருடி மூளைக்கு கடத்தி. அதனடிப்படையில் மனதிற்குள் இவர் இப்படிப் பட்டவராக இருக்கலாம் என்று வேகவேகமாய் ஒரு ஓவியம் படியும். சில நேரம் மிகத் தெளிவாக, சில சமயம் கலங்கலாக.

(வானம்பாடி:அட கண்றாவியே! ரகம் பிரிச்சில்லய்யா சைட்டடிக்கிறாரு. இதுல வேற குறிப்பிட்ட சிலத திருடறதாம். யப்பே! இது கசியறத விட கேவலமா இருக்குடி! மவனே ஒரு வாரத்துக்கு கட சோறுதாண்டியேய். வேல வேலன்னு சொல்லி பம்மாத்து பண்ணிட்டு ஆபீஸே கதின்னு இருக்கிற ரகசியம் இப்பல்ல தெரியுது)

முடி, காது, மூக்கு, கண்ணாடி, நரை, கன்னக் கதுப்பு, கழுத்து, பருத்த-வதங்கிய வயிறு, கைக்கடிகாரம், செல்போன், உடையணிந்த விதம், வெட்டப்பட்ட(படாத) நகம், காலுக்கு பொருந்தாத செருப்பு என எதையாவது மனதிற்குள் பதித்து அதையொட்டி ஒரு கணக்கு உள்ளுக்குள் மிக மிக வேகமாக எழுதப்பட்டு, பெரும்பாலும் பதிவு செய்யப்படாமலே அழிந்து போகும். அந்தக் கண நேர சுவாரசியம் ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருக்கும்.

(பாலாசி: மொதல்ல இவருகிட்ட எது இல்லையோ அத பார்க்கிறாரு பாருங்க. வடிவேலு சொல்றா மாதிரி வால்ல்லிப்ப்ப்ப்ப்ப்ப வயசுதான் வேணுமாம். நரைச்சி, முடி குட்டையா, கன்னம் ஒட்டிப்போய், கழுத்தே இல்லாம, தொப்ப கேசு, ஷேப்பில்லாத வகுறெல்லாம் பதிவே செய்யாம எரேஸ் பண்ணிடுவாராம்)

மனிதர்களே இல்லாத நாட்களும், வீதிகளும், சாலைகளும், பயணங்களும் சிறிது நேரம் மனதிற்குள் அமைதியை பரவச் செய்யலாம், அந்த அமைதி கெட்டிப்படும் நேரத்தில், அமைதி அளித்த சுகம் நீர்த்துப்போய், மனிதர்களைச் சந்திக்காத தனிமை ஒரு வித வெற்றிடத்தை மனதிற்குள் கருவாக்கும், அந்த வெற்றிடம் கனமாக உருவெடுக்கும், அந்தக் கனமான தனிமை ஏதோ ஒரு இனம் புரியா பயத்தை மனதிற்குள் தோற்றுவிக்கும்.

(வானம்பாடிகள்: ங்கொய்யால. அன்னைக்கு மேம்பாலத்துக்கு பந்த்ன்னு ஆஃபீஸ்ல வந்து உக்காந்து காஞ்சி கருவாடாகி, மதியானம் சோத்துக்கு வழியில்லாம ராத்திரி உலை ஏத்த முன்ன போய் துண்ட போட்ட சோகக்கதை இதுதானா? பந்தன்னிக்கு வேலை புடுங்கறேன்னு புளுகிட்டு ஊட்டுக்கு போறதுன்னா பயம் வராம இருக்குமா)

எதன் பொருட்டேனும் அவ்வப்போது துளிர்க்கும் சுவாரசியமே மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறது. 

பாலாசி: என்னாது அடுத்த கட்டம். இப்புடி சைட்டடிச்சத வச்சி வசதிக்கு 11.30 மணிக்கு கஸ்ஸ்ஸ்ஸ்ஸிய விடுறதா
~~~

45 comments:

பழமைபேசி said...

Some one dashed me by voting in front of my vote! :-(

நசரேயன் said...

ஓட்டுக்கு முந்தணும்

Philosophy Prabhakaran said...

நல்ல தொகுப்பு...

ஆரூரன் விசுவநாதன் said...

சிரிச்சு மாளல......இனி கதிர் இடுகை போடறதுக்கே பயப்படனும் போல.....

என்ன இருந்தாலும் இவ்வளவு அலும்பு ஆகாதுங்க.......

மிகவும் ரசித்தேன்....

பிரபாகர் said...

எதிர்க் கவிதை போய் இப்போ எதிர் இடுகையா? கலக்குங்கய்யா! இரண்டுமே அதீத சுவராஸ்யம்...

பிரபாகர்...

க ரா said...

சார் பாவம் கதிர் அண்ணே.. போட்டு இப்படி தாக்கூறிங்களே. துணைக்கு பாலாசி வேற எதுல...

Ramesh said...

என்னதான் சுகமோ.. எதிர் ஸ்டேடஸ் எதிர் கவிதை எதிர் பதிவு...
ம்ம் ரசித்தன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
ஓட்டுக்கு முந்தணும்//

Repeat

ஸ்ரீராம். said...

ஒரிஜினல் மனதைத் தொடுகிறது. அழகிய வரிகள்... கீழே வரும் நையாண்டிக் கிண்டல்கள் மனதை லேசாக்கி சிரிக்க வைக்கின்றன.

Unknown said...

அவரு ரொம்ப பீலிங்க்ஸ் ஆப் இந்தியா .. நீங்க டால்கிங் ஆப் இந்தியன்..

காமராஜ் said...

சிரிப்பதா,அழகை ரசிப்பதா,பொதிந்து கிடக்கும் வாழ்க்கைக்குள் மூழ்குவதா ...அண்ணா.

இராகவன் நைஜிரியா said...

:-) எதிர் இடுகை அழகு

பெசொவி said...

எதிர் இடுகையா......................
அப்போ "இடுகை இங்கே" என்ற சுட்டியைக் காணோமே!

பெசொவி said...
This comment has been removed by the author.
பெசொவி said...

அப்போ, பிரபாகரோட எதிரெதிர் இடுகை எப்போ ரிலீஸ்?

Subankan said...

:)))

ஈரோடு கதிர் said...

ரெண்டு பேருக்கும் நல்லா தூக்கம் வந்துச்சா! இல்லாட்டி தூக்க மாத்திரை வாங்கி அனுப்பட்டுமா!!!??

அகல்விளக்கு said...

//ஈரோடு கதிர் said...

ரெண்டு பேருக்கும் நல்லா தூக்கம் வந்துச்சா! இல்லாட்டி தூக்க மாத்திரை வாங்கி அனுப்பட்டுமா!!!?? //


அதானே....

dheva said...

ஐயோ.......என்னங்க..இப்போதான் கதிர படிச்சுட்டு நெகிழ்ச்சியா உட்காந்து இருந்தேன்....கவுஜக்கு தான் எதிரு போடுவீங்கன்னு நினைச்சேன்.....இப்போ கதிருன்னாலே எதிரி போடுவீங்க போலயே அண்ணே.... நறுக்குன்னு நாலு வார்த்தய கதிர் மேல் பாய உட்டுட்டின்ங்க....ஹா ஹா...ஹா


பாலாசி @ நல்லாருக்குப்பு.....!

Mahi_Granny said...

பிம்பங்களும் நிஜமும் மிகவே சுவாரசியம். spl.appreciation for instant reaction

Radhakrishnan said...

தெளிந்த பார்வையில் விழுந்த பிம்பத்தில் நேர்ந்த நிஜத்தின் கலக்கல் சிந்தனை.

பின்னோக்கி said...

மனதில் குரல் நன்றாக இருக்கிறது

Riyas said...

ம்ம்ம் கலக்கல்..

Chitra said...

ஐயோ.......என்னங்க..இப்போதான் கதிர படிச்சுட்டு நெகிழ்ச்சியா உட்காந்து இருந்தேன்....கவுஜக்கு தான் எதிரு போடுவீங்கன்னு நினைச்சேன்.....இப்போ கதிருன்னாலே எதிரி போடுவீங்க போலயே அண்ணே.... நறுக்குன்னு நாலு வார்த்தய கதிர் மேல் பாய உட்டுட்டின்ங்க....ஹா ஹா...ஹா



....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்க கலக்குங்க, பாலா சார்.... !

பத்மா said...

பாவம் கதிர் சார்
u too balaci?

நிஜாம் கான் said...

ஆகா!.. ஒரு ஃப்ளோவுல உண்மையெல்லாம் வெளில வருதே! கொஞ்சம் கவனமாத்தான் இருக்கனும் போல..

Unknown said...

ஒவ்வொரு தடவையும் கதிருக்கு நையாண்டி அறுவடை தானா! சூப்பர் friendship உங்களது. பொறாமையா இருக்கு.

priyamudanprabu said...

என்ன ஒரு முடிவோடத்தான் இருக்கிகளா??
அவர் என்ன எழுதினாலும் எதிரி வினையா
நல்லாத்தான் இருக்கு

priyamudanprabu said...

சிரிச்சு மாளல......இனி கதிர் இடுகை போடறதுக்கே பயப்படனும் போல.....

என்ன இருந்தாலும் இவ்வளவு அலும்பு ஆகாதுங்க.......

settaikkaran said...

அடுத்தாப்புலே உங்க லிஸ்டுலே யாருங்க ஐயா? இந்த கலாய்ப்புக் கலாய்க்கிறீங்களே? :-)

ராஜ நடராஜன் said...

சு தந்திரம் ரசித் தேன்:)

'பரிவை' சே.குமார் said...

எதிர்க் கவிதை போய் இப்போ எதிர் இடுகையா? கலக்குங்கய்யா! இரண்டுமே அதீத சுவராஸ்யம்...

கலகலப்ரியா said...

எதிர்..?

எப்போவாவது ஓக்கே... எப்போதுமேவா.... ம்ம்...

vasu balaji said...

பழமைபேசி said...

/Some one dashed me by voting in front of my vote! :-(//

:))

vasu balaji said...

நசரேயன் said...

/ஓட்டுக்கு முந்தணும்//

ஆஹா. :))

vasu balaji said...

நன்றி இராமசாமி கண்ணன்
நன்றி பிரபாகரன்
நன்றி ஆரூரன்
நன்றி பிரபா
நன்றி றமேஸ்
நன்றி டி.வி.ஆர்.

vasu balaji said...

நன்றி ஸ்ரீராம்
நன்றிங்க செந்தில்
நன்றிங்க காமராஜ்
நன்றிண்ணே:)
நன்றி பெ.சொ.வி
நன்றி சுபாங்கன்

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ரெண்டு பேருக்கும் நல்லா தூக்கம் வந்துச்சா! இல்லாட்டி தூக்க மாத்திரை வாங்கி அனுப்பட்டுமா!!!??//

யாரு ரெண்டு பேரு. மாப்புவும் நசரேயனுமா?

vasu balaji said...

நன்றி ராஜா
நன்றி தேவா
நன்றிங்க மஹி_க்ரான்னி
நன்றிங்க இராதா
நன்றி பின்னோக்கி
நன்றி ரியாஸ்
நன்றிங்க சித்ரா
ஆமாங்க பத்மா.
நன்றி நிஜாம்
நன்றிங்க சேது. ஆமாம். ஹி ஈஸ் க்ரேட்.:)

vasu balaji said...

நன்றிங்க பிரபு
நன்றி சேட்டை
நன்றிண்ணே புரியுது:))
நன்றிங்க குமார்.

vasu balaji said...

கலகலப்ரியா said...

//எதிர்..?

எப்போவாவது ஓக்கே... எப்போதுமேவா.... ம்ம்..//

ம்ம். தப்புத்தான்.

Unknown said...

"எப்போவாவது ஓக்கே... எப்போதுமேவா.... ம்ம்..//

ம்ம். தப்புத்தான்"

No Sir. As long as Kathir enjoys/cherishes your comments, we all can have fun.

தாராபுரத்தான் said...

தம்பி சொல்லறதிலும் ஞாயம் இருக்குங்க..(உன்னை யாரு பைசல்க்கு கூப்பிட்டா)

ரிஷபன் said...

எதன் பொருட்டேனும் அவ்வப்போது துளிர்க்கும் சுவாரசியமே மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறது.

நிஜம்!

க.பாலாசி said...

நான் கேக்கணும்னு நினைச்சது பூரா கேட்டுட்டீங்களே... செம கலக்கல்... பட் டூ லேட்டா வந்திட்டேன்... ஐ மிஸ் கும்மி...