Friday, June 18, 2010

கதிருக்கு எதிரு

பொழுது ஏற ஏற
உழைத்த காசு
இருண்டதும் புட்டியாக!

*****

வாழ்க்கைப் பக்கங்களின்
எதிர்பாராதவை எஞ்சிப் போயின
காலி புட்டியாகவும் கோழி இறகாகவும்

*****
எந்த வடிவமும் நிலைப்பதில்லை
குடிமகன் புரண்ட
கடற்கரை மணலில்..

*****

மலை உச்சியில் புணர்ந்த
மேகம் தந்த குளிரை விரட்ட
மனம் தேடுகிறது சரக்கை.

*****
கவுஜ இங்கே...
Post a Comment