Wednesday, May 26, 2010

இரயிலே இரயிலே..

பல பதிவர்களின் இடுகைகளில் இரயில் பயணம், முன்பதிவு, இரயில்கள் இல்லாமை குறித்த அதிருப்தியைக் கண்டிருக்கிறேன். குறிப்பாக சரவணக்குமார், சங்கர் ஆகியோரின் இடுகைகள் அவர்களின் அனுபவத்தை கண்முன் நிறுத்தின. நேற்று திரு காமராஜின் இடுகையில் சில வினாக்களை எழுப்பியிருந்தார். பின்னூட்டங்களைக் கண்டதும் இரயில்வேத்துறை குறித்து முழுமையான புரிதலின்மை புலப்பட்டது.

இதற்கான விளக்கம் எந்த விதத்திலும் பிரச்சனைக்கு முழுதாக உதவப்போவதில்லை எனினும் புரிதல் ஓரளவுக்கு இது இப்படித்தான் எனக் கடந்து போகவாவது உதவலாம் என்பதே இவ்விடுகையின் நோக்கம்.

முதலில் திரு காமராஜ் எழுப்பியிருந்த வினாக்கள்:

/காலை எட்டுமணிக்கு திறக்கும் முன்பதிவு அறையின் முன்னால் இரவு எட்டுமணிக்கே வந்து காத்துக் கிடந்தால் மட்டுமே சாமான்யர்கள் ரயிலில் பயணம் செய்யமுடியும் என்கிற நிலைமை பொதுவாகிவிட்டது.//

அப்படிக் காத்துக் கிடந்தாலும் இடம் கிடைக்கும் என்ற உறுதியில்லை. காரணம் அனுமதி பெற்ற தனியார் கணினி முன்பதிவு, IRCTCயில் தனி நபர்கள் பெறக்கூடிய இ-டிக்கட்,மற்றும் பெரிய நகரங்களில் தரகர்கள் சட்டவிரோதமாக பதிவு செய்து அதிக விலைக்கு விற்கும் டிக்கட்டுகள்.

/முன்னமெல்லாம் சென்னைக்கோ வேறிடங்களுக்கோபோக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னால் முன்பதிவு செய்தால் கிடைக்குமென்கிற நிலை இருந்தது. இப்போது தொன்னூறு நாட்களுக்கு முன்னாலே எல்லா ஊருக்குமான இருக்கைகள் விற்றுத்தீர்ந்துவிடுகின்றன.///

ஆம். பெரும்பாலும் திட்டமிட்ட பயணம் என்பது பழகிப்போன ஒன்றாயிடினும் இதற்குக் காரணம் சமூகவிரோத கும்பலின் மொத்தக் கொள்முதல். டிக்கட் கிடைக்காததால் இவர்களிடம் போகிறோம் என பொது ஜனமும், இவர்கள் வாங்குவதால் டிக்கட் கிடைக்கவில்லை என நிர்வாகமும் பதில் சொல்லிக் கொள்ளலாம்.

//பெருகிவரும் மக்கள் தொகையைச் சமாளிக்க கூடுதல் வசதிகளையும் பணியாளர்களையும் நியமிப்பதற்குப் பதிலாக அதை ஏலத்திற்கு விடுவதுதான் சிறந்த தீர்வென நம்புகிறது அரசும்,அதன் திட்டமும்.//

இரயிலைப் பொறுத்தவரை அரசையோ இரயில்வேயையோ குறை சொல்லமுடியாது காமராஜ் சார். கட்டமைப்பு அப்படி. பல நுணுக்கமான பிரச்சனைகள் உள்ளடக்கிய விடயம் இது. ஒரு பணியாளரை நியமிப்பதால் பிரச்சினை தீருமாவெனில் இல்லை. உதாரணமாக ஒரு ஊரில் 3 கவுண்டர்கள் இருக்கின்றன. நாளைக்கு 1000 டிக்கட்டுகள் விற்கப் படுகின்றன என வைத்துக் கொள்ளுவோம். கூடுதலாக ஒரு பணியாளரைச் சேர்ப்பதால் அதே ஆயிரம் டிக்கட்டுகள் குறைந்த நேரத்தில் விற்கப் படலாம். ஆனால் ஒரு அரசு ஊழியரின் சம்பளம், இதர படிகள், பென்ஷன், போன்ற மறுக்க முடியாத சுமை தாண்டி இதனால் கிடைக்கும் நேரச் சேமிப்பு உண்மையில் 4 ஊழியரின் நேர விரயமாக முடியும்.

//அரசு அலுவலகத்தில் வேலை செய்வதற்கும்,தனியார் நிறுவணத்தில் வேலை பார்ப்பதற்கும் தனித்தனிப் பிரஜைகளை இந்தியா உருவாக்க வில்லை.ஒரு அரசு நிறுவண ஊழியன் வாங்குகிற காசுக்கு வேலைபார்த்தாலே போதும் //

மிகச்சரியான கருத்து. ஆனால் எந்த ஸ்டேஷனிலாவது எங்கள் வேலை முடிந்துவிட்டது நாளை வாருங்கள் என்று கவுண்டர் மூடியிருக்கிறார்களா சார்.

//எழுபதுகளில் தென்பகுதியிலிருந்து சென்னைக்கு இரண்டு வண்டிகள் இயங்கிக்கொண்டிருந்தது. நாற்பது வருடம் கழித்து ஐந்து வண்டிகளாக உயர்ந்திருக்கிறது. ஜனத்தொகை அடிப்படையிலும் பணப் புழக்கத்தின் அடிப்படியிலும் பார்த்தால் இது யனைப்பசிக்கு சோளப்பொறி.//

இது சரிதான். அதிகப்படியான பயணச்சுமைக்கான காரணங்கள் என்ன தெரியுமா?
1. கணினித்துறை வளர்ச்சி காரணமாக வேலை வாய்ப்புக்கள் பெருகியமை
2. கிராமங்களை விட்டு நகர்ப்புறம் பெயர்ந்தமை
3. ஆன்மீக பயணிகள் அதிகரிப்பு (மேல்மருவத்தூர், சபரிமலை)
4. பொதுவாக சுற்றுலாவில் ஆர்வம்.
5. தொழில்நுட்பக் கல்லூரிகளின் வளர்ச்சி

இரண்டிலிருந்து ஐந்து வண்டி எப்படி ஓட்டப் படுகிறது தெரியுமா? புதியதாக பெட்டியோ இஞ்சினோ வாங்கப்படுவதில்லை. அதற்கு வசதியில்லை. மைசூரிலிருந்து மதியம் கிளம்பி அடுத்த நாள் காலை திருப்பதி சேரும் இரயில் அங்கிருந்து திரும்பவும் கிளம்பி கருடாத்திரியாக சென்னை வரும். மாலையில் கிளம்பி திருப்பதி போய் சற்று நேரத்தில் மைசூர் எக்ஸ்பிரசாகப் போகும்.

திருப்பத்தூரிலிருந்து அதிகாலை புறப்படும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் சற்று நேரத்தில் பெங்களூர் எக்ஸ்பிரசாக கிளம்பும். பெங்களூரில் காலை கிளம்பி மதியம் வரும் பெங்களூர் எக்ஸ்பிரஸ் மாலையில் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரசாக திருப்பத்தூர் செல்லும்.

//நூத்திப் பத்துக் கோடிக்கு மேலிருக்கும் ஜனத் தொகையிலிருந்து பயணச்சீட்டுக் கொடுக்க போதிய பணியாளர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா? //

முன்பே சொன்னதுபோல் இது நிரந்தரச் செலவு என்பது ஒருபுறமிருந்தாலும் ஒரு அதிர்ச்சி அளிக்கும் விடயம். ஒதுக்கீட்டுக்கான பணியிடங்களுக்கு தேர்வு நடந்தும் பங்கேற்பவர்கள் இன்றி, மற்ற மாநிலத்தவர் வந்து எழுதிப் போகிறார்கள். இந்த காலியிடங்களை வேறெப்படியும் நிரப்ப முடியாது என்பது விதி.

//ரயில்வே போக்குவரத்துக்கு போதுமான தண்டவாளப் பாதைகளை உருவாக்க முடியாமல் போனதன் சூட்சுமம் என்ன?. இன்னும் லட்சக் கணக்கான மோட்டார் வாகனங்களை தனியார் நிறுவணங்கள் உற்பத்தி செய்வதற்கு அமைக்கிற ராஜபாட்டை அது என்பதை புரிந்துகொள்ளலாம்.//

உண்மையில் இரயில்வேயின் எதிரி மோட்டார் வாகனங்கள். இருப்புப் பாதை அமைக்கவோ, புதிய ரயில்கள் விடவோ இரயில்வேயிடம் பணமில்லை. இரயில்வேயின் சம்பாத்தியத்தில் பாதிக்கு மேல் நிர்வாகச் செலவுக்குப் போகிறது.


ஏர் இந்தியாவுக்கு ஒரு விமானம் கொள்முதல் செய்யப்படுமானால் மத்திய அரசு முதலீடு செய்து கொடுக்கும். அதற்குண்டான கட்டணத்தை ஏர் இந்தியா முடிவு செய்யும். நட்டம் ஏற்படின் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ஒரு இருப்புப் பாதை அமைக்கவோ, புதிய ரயில் கொள்முதல் செய்யவோ மத்திய அரசு உதவுமானால் அது கடனாகக் கருதப்படும். இரயில்வேத்துறை அதற்கு டிவிடண்ட் கொடுக்க வேண்டும். கட்டணம் அரசின் முடிவின் பேரில் நிர்ணயிக்கப்படும். நட்டம் ஏற்படின் மத்திய அரசின் உதவி கிடையாது.

//பல பொதுத்துறை நிறுவணங்களை கள்ள விலைக்கு விற்று விட்ட மாதிரியே ரயில்சேவையை தனியாருக்கு விற்றுவிடத் துடிக்கிறது இப்போதிருக்கும் இந்திய ஜனநாயக அமைப்பு.//

தவறு. இரயில்வேத்துறை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே தனியார்த் துறையாகத்தான் இருந்தது. தனியார் முதலீட்டின் பேரில் இரயில்வேக்கள் தொடங்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன. நிர்வாக நிர்பந்தங்களினால் இரயில்வே வாரியம் அமைக்கப்பட்டது. 1942ல் அரசு முழுதாக ஏற்றுக்கொண்ட பிறகும் இதே கட்டமைப்பு தொடர்கிறது. இரயில்வேக்கான வரவு செலவு இரயில்வே வாரியத்தின் பொறுப்பாகும். அதனால்தான் தனியாக இரயில்வே பட்ஜட் சமர்ப்பிக்கப்படுகிறது.  

நிர்வாகச் செலவு அதிகரித்துப் போகும் அதே நேரம், குறைந்த கட்டணம், லாபமற்ற செயல்பாடு, நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்ட விரிவாக்கம் ஆகியன தனியார் மயமாக்கலை திணிக்கின்றன.

ஒரு உதாரணம் எடுத்துக் கொண்டால் இரயில்வேக்குத் தேவையான ஒரு ‘நட்’ தயாரிக்க இரயில்வேத்துறையிலேயே இயந்திரங்களும், கட்டமைப்பும், ஊழியரும் இருக்கின்றனர். மூலப் பொருள் மட்டுமே தேவை. அதன் விலை மிகக்குறைவு. ஆனால் அப்படித் தயாரிக்கும் பட்சத்தில் அதன் விலை ரூ ஆறு ஆகலாம். அதே ‘நட்’ மார்க்கட்டில் 40பைசாவுக்கு கிடைக்கும். இப்போது சொல்லுங்கள் இத்தகைய வேலையை தனியார்வசம் விடாமல் என்ன செய்ய?

கே: பத்து நாட்களுக்கு முன்பு பதிவு செய்யப் போனாலும் டிக்கட் கிடைப்பதில்லையே ஏன்?

ப:எல்லாத் துறையும் போல் இரயிலும் ஒரு முனையிலிருந்து மறு முனைவரை முழுப்பயணம் செய்பவரை விரும்புகிறது. திருநெல்வேலியிலிருந்து ஒரு இரயில் புறப்படுமானால் சென்னைவரை அதன் கொள்ளளவு முழுதும் பயணிகள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனாலும், சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், இன்ன பிற ஊர்களில் இருந்தும் பயணிகள் இருப்பார்கள் அல்லவா? அவர்களுக்காக குறிப்பிட்ட அளவு ஒதுக்கீடு இருக்கும். அதற்கு மேல் கிடைக்காது.

எனவே அம்பாசமுத்திரத்திலிருந்து சென்னைக்கு டிக்கட் என்றால் இடமில்லை என்றோ, வெயிட்டிங் லிஸ்ட் என்றோ வரும். அதே நெல்லையிலிருந்து சென்னைக்கு அம்பா சமுத்திரத்தில் ஏறிக் கொள்கிறேன் எனக்கேட்டால் இடம் கிடைக்கும்.

அதே போல் உங்களுக்கு சங்கரன் கோவில் போகவேண்டும் சென்னையில் சங்கரன் கோவிலுக்கு டிக்கட் கேட்டால் வெயிட்டிங்லிஸ்ட் வரலாம். திருனெல்வேலி கேட்டால் கிடைக்கும். கூடுதல் கட்டணம்தான். ஆனாலும் அல்லாடாமல் போகலாம் அல்லவா?

இரயில்வேத்துறை கூடுமான அளவில் மக்கள் சேவைக்கு பாடு படுகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு டிக்கட் எடுத்தீர்களானால் pwql என்று ஒரு வெயிட்லிஸ்ட் நம்பர் இருக்கும். சார்ட் தயாரிக்கும் வரை உங்களுக்கு தெரியாது. சார்ட்டில் பார்த்தால், சென்னையிலிருந்து காட்பாடி, வாணியம்பாடி, ஆம்பூர் வரையிலான கோட்டா டிக்கட்டுகள் விற்பனையாகமல் இருப்பின் உங்கள் பயணச்சீட்டு அந்த இடத்தில் நிரப்பப்படும்.

ராம்ஜியாஹூ பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

//பேருந்து, வாகன உற்பத்தியாளர்கள், எண்ணெய் நிறுவன பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு அரசுகள் கொடுக்கும் கையூட்டு, நெருக்கடி போன்றவை தானே ரயில்வே துறையை முன்னேற செல்ல முடியாமல் தடுக்கிறது.,//

மிகத்தவறான கருத்து. எண்ணெய் நிறுவனங்கள் இரயில்வேக்கு விற்கும் எரிபொருளுக்கு கன்ஸெஷன் கூடத் தருவதில்லை. பெட்ரோலியம் மினிஸ்ட்ரியும் மத்திய அரசின் துறைதான். தரைவழி போக்குவரத்துத் துறை மிகச்சிறப்பான நெடுஞ்சாலைகளை அமைத்து வாகனப் போக்குவரத்தை ஊக்குவிக்கிறது. அதனால் இரயில்வேக்கு வரவேண்டிய சரக்கும் பயணிகளும் அவர்களுக்கு போகிறார்கள். இதில் கையூட்டு எப்படி?

இரயில்வேயின் கட்டமைப்பு குறித்தான விளக்கம் இன்னும் நீண்டுவிடும் என்பதால் பின்னொரு சமயம் பார்ப்போம்.

(கேள்விகள் இருப்பின் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். விளக்க முயல்கிறேன்)

80 comments:

dheva said...

நிச்சயமாய் விழிப்புணர்வு கொள்ளச்செய்யும் சார் உங்களின் பதில்கள்! எந்த ஒரு விசயமும் வெளியே நின்று விளங்கிக்கொண்டால் தவறான கற்பிதங்கள்தான் கொடுக்கும். அதன் உள் கட்டமைப்பில் எவ்வள்வு விசயங்கள் உள்ளன....!

வாழ்த்துக்கள் சார்!

சத்ரியன் said...

பாலா,

தேவையான பதிவுதான். இதுக்கு காரணமான காமராஜ் அண்ணனுக்கு நன்றி.

அஹமது இர்ஷாத் said...

//மிகச்சரியான கருத்து. ஆனால் எந்த ஸ்டேஷனிலாவது எங்கள் வேலை முடிந்துவிட்டது நாளை வாருங்கள் என்று கவுண்டர் மூடியிருக்கிறார்களா சார்.///

சரியான கேள்வி...

அகல்விளக்கு said...

இதுல இம்புட்டு மேட்டர் இருக்குங்களா சார்....

என்னதான் சொன்னாலும் இரயில்வே தனியார்மயம் அப்படிங்கறத ஒத்துக்க மனசு வர மாட்டிங்குது சார்...

சும்மாவா சொன்னாங்க The Life Line of India-ன்னு....

திருஞானசம்பத்.மா. said...

நல்ல விளக்கம்..

//.. கணினித்துறை வளர்ச்சி காரணமாக வேலை வாய்ப்புக்கள் பெருகியமை ..//

அங்கேயே குத்துறது.. :-))

ராஜ நடராஜன் said...

இடுகை போட்ட உடனே வந்து எல்லோரும் உட்கார்ந்துக்கிறாங்களாக்கும்:)

ராஜ நடராஜன் said...

//அப்படிக் காத்துக் கிடந்தாலும் இடம் கிடைக்கும் என்ற உறுதியில்லை. காரணம் அனுமதி பெற்ற தனியார் கணினி முன்பதிவு, IRCTCயில் தனி நபர்கள் பெறக்கூடிய இ-டிக்கட்,மற்றும் பெரிய நகரங்களில் தரகர்கள் சட்டவிரோதமாக பதிவு செய்து அதிக விலைக்கு விற்கும் டிக்கட்டுகள். //

இதற்கு ஒரு மாற்று வழி இருக்குது!

இங்கே நாங்கெல்லாம் உபயோகிக்கும்
Civil ID Card மாதிரி பயணம் செய்பவர்கள் மட்டுமே இ-டிக்கெட்,மற்றும் முன் பதிவு.

ராஜ நடராஜன் said...

நிர்வாக கட்டமைப்புக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் பல விசயங்கள் பயண அனுபவத்துக்கு நிகரான உணர்வு.

விசயம் தெரிந்த துறை சார்ந்தவர்கள,ரயில் பயணிகள்,பயணமே செய்யாதவர்கள் வானம்பாடிக்கு நேர்,எதிர் வினை செய்தால் ஆட்டம் களை கட்டும்:)

ராஜ நடராஜன் said...

ஓட்டு போடலாமென்று திரும்ப வருவதற்குள் இடுகை குடு குடு கீழே ஓட்டம்.

முகிலன் said...

//மற்றும் பெரிய நகரங்களில் தரகர்கள் சட்டவிரோதமாக பதிவு செய்து அதிக விலைக்கு விற்கும் டிக்கட்டுகள்.//

இந்தப் பாயிண்ட் எனக்குப் புரியல சார். ரிசர்வேசன் செய்ய பேர், வயசு போட வேண்டாமா? அப்பிடி போட்டு எடுத்த ஒரு டிக்கெட்டை எப்பிடி இன்னொரு ஆள் பேருக்குப் போட்டுத் தரமுடியும்?

அஹமது இர்ஷாத் said...

//(கேள்விகள் இருப்பின் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். விளக்க முயல்கிறேன்)///

எப்ப சார் எங்க ஊருக்கு புல்லட் ரயில் வரும்?

முகிலன் said...

//எப்ப சார் எங்க ஊருக்கு புல்லட் ரயில் வரும்?//

எல்லா ரயில்லயும் இப்ப புல்லட் வருது சார். போலிஸ்காரர் ஒருத்தர் துப்பாக்கியில கொண்டுட்டு வரார்.

அஹமது இர்ஷாத் said...

//எல்லா ரயில்லயும் இப்ப புல்லட் வருது சார். போலிஸ்காரர் ஒருத்தர் துப்பாக்கியில கொண்டுட்டு வரார்///

என்னங்க தமிழ்'ல கேள்வி கேட்டா தெலுங்கு'ல பதில் சொல்றீங்க....!?

முகிலன் said...

//கேள்விகள் இருப்பின் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். விளக்க முயல்கிறேன்//

ஏன் சார் எனக்கு உங்கள மாதிரி எழுத வர மாட்டேங்குது?

சி. கருணாகரசு said...

பதிவுக்கு... பச்சைக்கொடி.
பகிர்வுக்கு... நன்றி.

VISA said...

//இந்தப் பாயிண்ட் எனக்குப் புரியல சார். ரிசர்வேசன் செய்ய பேர், வயசு போட வேண்டாமா? அப்பிடி போட்டு எடுத்த ஒரு டிக்கெட்டை எப்பிடி இன்னொரு ஆள் பேருக்குப் போட்டுத் தரமுடியும்?//

இதை உள் ஒதுக்கீடு என்று எடுத்துக்கொள்ளலாமா அய்யா

இராமசாமி கண்ணண் said...

//மற்றும் பெரிய நகரங்களில் தரகர்கள் சட்டவிரோதமாக பதிவு செய்து அதிக விலைக்கு விற்கும் டிக்கட்டுகள்.//

இதே டவுட்தான் சார் எனக்கும். டிக்கெட் ரிசர்வ் பண்றப்ப (irctc site la online)ல பன்னுனாலும் பெயர் , வயசுல்லாம் கேக்கறாங்க இல்ல. தரகர்கள் புக் பண்றப்ப அந்த விவரமெல்லாம் கிடையாதா ?

முகிலன் said...

//மிகச்சரியான கருத்து. ஆனால் எந்த ஸ்டேஷனிலாவது எங்கள் வேலை முடிந்துவிட்டது நாளை வாருங்கள் என்று கவுண்டர் மூடியிருக்கிறார்களா சார்//

இதை நான் பார்த்ததில்லை சார். ஆனால் 10:00 மணிக்கு டீ குடிக்க என்று பதினைந்து நிமிடம் கவுன்ட்டர்-ஐப் பூட்டி விட்டுச் செல்பவர்களைப் பார்த்தது உண்டு. இதனால் பதினைந்து நிமிடம் ரிசர்வேஷனில் பின்னால் போய் விடக்கூடிய நிலைமை அந்த வரிசையில் இருக்கும் அனைவருக்கும் வந்து விடும்இல்லையா?

க.பாலாசி said...

//ஆனால் எந்த ஸ்டேஷனிலாவது எங்கள் வேலை முடிந்துவிட்டது நாளை வாருங்கள் என்று கவுண்டர் மூடியிருக்கிறார்களா சார்.//

கண்டிப்பாக இதில் இரயில்வே துறையை பாராட்டியே தீரவேண்டும்.

உங்களால் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் இரயில்வேத்துறை மீதான என் அவலட்சண எண்ணங்களை மாற்றிவிட்டுள்ளது...

முகிலன் said...

ரயில்ல போய் ரொம்ப நாள் ஆச்சுன்னு இந்தத் தடவை மதுரை சென்னை பயணத்துக்கு பாண்டியன்ல டிக்கெட் போட்டிருக்கு. அனுபவம் எப்பிடியிருக்குன்னு பாக்கலாம்.

பிள்ளையாண்டான் said...

வானம்பாடி அய்யா, விளக்கங்களுக்கு நன்றி..

எனக்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. சிலவற்றை மட்டும் கேட்கின்றேன்.


50 சதவிகித அல்லது அதற்க்கும் மேற்பட்டமுன்பதிவு செய்யக் கூடிய இடங்களை, "தட்கல்" முறைக்கு ஒதுக்குவதால்தான் எல்லா இடங்களும் விற்கப் பட்டதுபோல் ஒரு மாயையை ரயில்வேத் துறை ஏற்படுத்துகிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?


"தட்கல்" முறையில் (ஒரு டிக்கெட்டுக்கு) ரூ.150 கூடுதலாக‌ மற்றும் முழு பயண டிக்கெட் கட்டணம் வாங்கப் படுகிறது. சோதனை நோக்கில் உருவாக்கப் பட்ட இந்த திட்டம், வணிக ரீதியாக பெரு வெற்றியடைய எல்லா ரயில்களிலும் நடைமுறைப் படுத்தப் பட்டது. இதில் வந்த வருமானத்தைத் தான் லாலு பிரசாத் யாதவ், ரயில்வேத் துறை லாப நோக்கில் செயல்படுகிறது என்று கூறி பணியாளர்களுக்கு போனஸாக வாரி வழங்கினார்.

சூப்பர் பாஸ்ட், தட்கல், சூப்பர் சூப்பர் பாஸ்ட் என்று கட்டணங்களை மறைமுகமாக மக்கள் மீது திணித்து(இதே முறையைத் தான் தமிழ்நாடு அரசு, போக்குவரத்து கழகங்களில் கொண்டுவருகிறது), லாபம் கொழிக்கும் ரயில்வேத் துறையை, ஏன் தனியார் மயமாக்க வேண்டும்?

பிள்ளையாண்டான் said...

புதிய பாதைகள் உருவாக்குவது மற்றும் அகலப் பாதை மாற்றும் கடைநிலை பணிகளை செய்யும் வேலைகளை, அரசியில் உள்ளீடுகளால், சில பல குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்குவதால் ஏற்படும் ரயில்வே துறைக்கு ஏற்படும் இழப்புகள் ஏராளம்.

உதாரணமாக, விழுப்புரம் ‍ மயிலாடுதுறை அகலப் பாதை மாற்றும் பணிகள் ‍ 3 ஆண்டுகளுக்குமேல் நடந்தது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப் பட்ட பாலத்தின் பணிகள் மிகவும் தாமதமாக நடந்தன. கடினமான ராமேஸ்வரம் பாலம் கட்டப் பட்ட காலத்தைவிட இது இரண்டு மடங்கு அதிகமாகும். தென் மாவட்ட ரயில்களுக்கு மாற்றுப் பாதை என கருதப் பட்ட இந்த வழி, பணிகள் நிறைவுற்ற நிலையிலும் பல மாதங்கள் கழித்துத் தான் திறக்கப் பட்டது. தற்போது மூன்று ரயில்கள் இந்த வழியாக இயக்கப் படுகின்றன. ம்யிலாடுதுறை ‍ காரைக்குடி பணிகள் தொடங்கப் ப்டவே இல்லை. இந்தப் பணிகளை விரைந்து முடித்தாலே, பல ரயில்களை இயக்க முடியும்.

Kanchi Suresh said...

நல்ல பதிவு நிறைய செய்திகள் தெரிந்தது. என் உறவினர் இரயில்வேயில் பணிசெய்கிறார் பணிபளு அதிகம் என வருத்தப்படுவார்.

Balavasakan said...

கேள்வி கேட்டு பழக்கமில்லியே..

தாராபுரத்தான் said...

அடையாள அட்டை எடுத்து போகாம மாட்டிக்கிட்டு முழித்தது எனக்குகில்ல தெரியும்..

ஸ்ரீராம். said...

உதவிகரமான பதிவு.

ஈரோடு கதிர் said...

//தாராபுரத்தான் said...
மாட்டிக்கிட்டு முழித்தது எனக்குகில்ல தெரியும்..//

அண்ணே... இதெல்லாம் நமக்கு புதுசுங்ளா?

இஃகிஃகி

கலகலப்ரியா said...

ங்ஙே...

ஈரோடு கதிர் said...

எனக்கும் ஒரு டவுட்ங்னே... ஈரோட்ல இருந்து ஒரு ட்ரெய்ன் சேலம் போய்,அங்கிருந்து மேட்டூர் போகுது. ஈரோட்ல இருந்து ஒரு பய கூட மேட்டூருக்கு ட்ரென்ல போற வாய்ப்பேயில்ல..

ஆனா சேலம் டு கோவைக்கு 150 கி.மீ. பகல் நேரத்துல பக்கத்து அஞ்சு ரயிலுக்கும் கம்மியாத்தான் போகுது. இதுல பாசஞ்சர் ட்ரெயின் விட்டா (அதுவும் ஈரோடு-கோவை ஒரு முறை மட்டும் போய், பின் தூங்கும் எலக்ட்ரிக் வண்டியை) சேலம்-ஈரோடு / ஈரோடு-திருப்பூர் / சேலம்-கோவை / சேலம்- திருப்பூர் / ஈரோடு-கோவை / திருப்பூர் - கோவை என பல நூறு பேருந்துகளை தூக்க்க்க்க்க்கிடலாம்...

ஏன் ஒரே ஒரு ரயில் கூட இந்த 150 கி.மீ. அதுவும் நாலு மாநகராட்சி இருக்கிற ரூட்ல வரலைனு தெரியல....

சொல்லுங்க எசமான்.. சொல்லுங்க

இராகவன் நைஜிரியா said...

வாவ்... சூப்பர் அண்ணே..

யானைய கட்டி தீனி போடுவது மாதிரி - ரயில்வே துறை... சரியா?

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஒரே ஒரு கேள்விதான் சார். ரயில்வே சட்ட திட்டம் கெடுபிடியெல்லாம் வெறும் தமிழ் நாட்டுக்குள்ளதானா? நம்மூர் பார்டர தாண்டினா, ஓப்பன் டிக்கெட்டோ அட அது கூட இல்லாமயோ ஜோரா எல்லாரும் பயணம் பண்றாங்களே, அவங்க டவுசர கிழிச்சாலே ரயில்வேக்கு கோடி கோடியா கிடைக்குமே?

நசரேயன் said...

அண்ணே ரயில்ல சரக்கு ஏன் கொடுக்க மாட்டேன்னு சொல்லுறாங்க ?

D.R.Ashok said...

நல்லதொரு விளக்கம்... துறைசார்ந்தவரே..... :)

ஜில்தண்ணி said...

இந்த தக்கால் இருப்பது கொஞ்சம் சௌரியமாத்தான் இருக்கு சார்
ரெண்டு நாளைக்கு முன்னால் கூட முன்பதிவு செய்யலாமாமே,

பதிவை படித்ததில் என் நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைத்தது
நன்றி

முகிலன் said...

//ஒரே ஒரு கேள்விதான் சார். ரயில்வே சட்ட திட்டம் கெடுபிடியெல்லாம் வெறும் தமிழ் நாட்டுக்குள்ளதானா? நம்மூர் பார்டர தாண்டினா, ஓப்பன் டிக்கெட்டோ அட அது கூட இல்லாமயோ ஜோரா எல்லாரும் பயணம் பண்றாங்களே, அவங்க டவுசர கிழிச்சாலே ரயில்வேக்கு கோடி கோடியா கிடைக்குமே?//

இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியும். அவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். நீங்கள் தமிழ் நாட்டில் வசிக்கிறீர்கள்.

அரைகிறுக்கன் said...

நண்பரே நீங்கள் இரயில்வே துரையின் நல்ல முகத்தை காட்ட முயற்சிக்கிறீர்கள். இரயில்வே முழுக்கவே தவறிப்போன துறையல்ல. ஆனால் இவையெல்லாம் அத்துறையின் மீது இருக்கும் விமர்சனங்களும் குறைக்களும்தான். மற்றும் அதன் பொதுமக்களுக்கு பணியாற்றும் கடமையிலிருந்து விலகி லாபமீட்டும் நோக்கில் செல்கிறதே.

இவர்ரிர்ற்கு விளக்கம் வேண்டுகிறேன்.

தட்கால் அநியாயம்
நாற்பது சதம் வரையிலான தட்கால் ஒதுக்கீடு
அதில் யாருக்கும் அடையாள அட்டை ஏதும் தேவை இல்லை
(எஜன்ட்டுகளுக்காகவே உருவாக்கப்பட்டது போல)
அதிலும் காத்திருப்போர் பட்டியல்

தட்காளில் நாற்பது சதம்வரை ஆன பின்பும் பொதுவான முன்பதிவுகளில் காத்திருப்போர் பட்டியலின் எண்ணிக்கையை குறைக்காமல் அப்படியே பழைய எண்ணிக்கையில் வைத்திருப்பது

வட மாநிலம் வந்தால் இந்த டிடிஆர் கள் ஆர் ஏ சி காரர்களையே பின்னுக்குத் தள்ளி விட்டு அடுத்தவர்களுக்கு இடம் கொடுக்கும் அநியாயம்

எரியாத விளக்குகள் ஓடாத விசிறிகள்
மட்டமான நாற்றமெடுக்கும் கழிவறைகள்

அதிலும் குறிப்பாகதொலைதூர வண்டிகளில் காலை எழுந்து பார்த்தால் அதிலும் தண்ணீர் இருப்பதில்லை

தரப்படும் உணவின் தரம் குறிப்பாக தேநீர் என்ற பெயரில் விற்கப்படும் சுடுநீர். இது பற்றி உங்களது விளக்கம்.

ஓரத்திலும் மூன்று படுக்கைகள் போட்டு ஆபத்துக் கால சன்னல்களையே மூடி வைத்திருந்தார்கள்.இது ரைட்டா?

புருனோ Bruno said...

எனக்கு தெரிந்த வரை 90 நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் காலியாவது தீபாவளி, நவராத்திரி போன்ற பண்டிகை கால தொடர்வண்டி இடங்கள் தான் என்று நினைக்கிறேன்

// IRCTCயில் தனி நபர்கள் பெறக்கூடிய இ-டிக்கட்,//
இதை தவறு என்று கூறுகிறீர்களா. என்ன கொடுமை சார்
நீங்களும் இதில் முன்பதிவு செய்ய வேண்டியது தானே

//50 சதவிகித அல்லது அதற்க்கும் மேற்பட்டமுன்பதிவு செய்யக் கூடிய இடங்களை, "தட்கல்" முறைக்கு ஒதுக்குவதால்தான் எல்லா இடங்களும் விற்கப் பட்டதுபோல் ஒரு மாயையை ரயில்வேத் துறை ஏற்படுத்துகிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?//
மாயை இல்லை. நிஜம்
இது குறித்து என் இடுகையை பாருங்கள்

தொடர்வண்டி துறை குறித்த பிற விமர்சணங்களும் அங்குள்ளன

//ஒரே ஒரு கேள்விதான் சார். ரயில்வே சட்ட திட்டம் கெடுபிடியெல்லாம் வெறும் தமிழ் நாட்டுக்குள்ளதானா? நம்மூர் பார்டர தாண்டினா, ஓப்பன் டிக்கெட்டோ அட அது கூட இல்லாமயோ ஜோரா எல்லாரும் பயணம் பண்றாங்களே, அவங்க டவுசர கிழிச்சாலே ரயில்வேக்கு கோடி கோடியா கிடைக்குமே?
//
ஹி ஹி ஹி

//இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியும். அவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். நீங்கள் தமிழ் நாட்டில் வசிக்கிறீர்கள்.
//

சூப்பர் சூப்பர் ... அசத்திட்டீங்க சார்.

புருனோ Bruno said...

சமீபத்தில் ஒரு பெண்பதிவர் ஒரு பதிவு போட்டிருந்தார்

ஒரு தொடர்வண்டி நிலையத்தில் தொடர்வண்டி கிளம்பும் படத்தை எடுத்து கார்டு தூங்குகிறார் என்று ஒரு அபாண்டத்தை கிளப்பியிருந்தார்

வழக்கம் போல் வயிற்றெரிச்சல் பார்ட்டிகள் அங்கும் சென்று அரசு ஊழியர்களை திட்டி தீர்த்தனர்.

நடைமேதையில் உட்கார்ந்து இருப்பவர் கார்டு அல்ல. கார்டு கடைசி பெட்டியில் இருப்பார். கொடி காட்டியவர் அந்த பணிக்கு உரியவர் என்று நான் சுட்டி காட்டியவுடன் அந்த பதிவு அழிக்க்பட்டது

ஏற்கனவே எழுதிய அபாண்டங்களுக்கு மன்னிப்பு இல்லை என்றால் கூட பரவாயில்லை, ஒரு மறுப்பு கூட இல்லை

இப்படி ஒழுங்காக நடக்கும் சம்பவங்களை கூட குறையாக கூறுவது ஏன்

புருனோ Bruno said...

//எரியாத விளக்குகள் ஓடாத விசிறிகள்//
நீங்கள் கடைசியாக எந்த வண்டியில் என்று பயணம் செய்தீர்கள்

அதில் எத்தனை விளக்குகள் எரிந்தன. எத்தனை எரியவில்லை

//மட்டமான நாற்றமெடுக்கும் கழிவறைகள்//
என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள்

//தரப்படும் உணவின் தரம் குறிப்பாக தேநீர் என்ற பெயரில் விற்கப்படும் சுடுநீர். இது பற்றி உங்களது விளக்கம்.//

நீங்கள் கடைசியாக எந்த வண்டியில் என்று பயணம் செய்தீர்கள்

ஏனென்றால் நான் சென்னை முதல் நெல்லை மற்றும் சென்னை முதல் கோவை செல்லும் தொடர்வண்டிகளில் வழங்கப்படும் உணவுகளை வழக்கமாக சாப்பிடுபவன்.

தோசை, பிரியாணி போன்றவஒஇ வீட்டுச்சாப்பாடு அளவு சுவை கிடையாது என்றாலுல் கூட, குறை கூறும் அளவு மோசமாக இருந்ததாக எனக்கு தெரியவில்லை.

உங்கள் கருத்து மாறுபடலாம்

ஆனால் தொடர்வண்டிகளில் வழங்கப்படும் தக்காளி சூப், பிரட் ஆம்லெட் போன்றவை கண்டிப்பாக தரமானது தான் என்று என்னால் கூற முடியும்

----
நான் கூற வருவது இது தான் : பல இடங்களில் பொது மக்களின் அதிக அதீத எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பது தான் உங்களுக்கு குறையாக தெரிகிறதே தவிர, உண்மையில் பிரச்சனையின் சதவிதம் மிக குறைவே

தன் பணியை ஒழுங்காக செய்யும் ஒரு தொடர்வண்டி ஊழியரை திட்டி ஒரு இடுகை

அதற்கும் சில அரவேற்காட்டு வயிற்றெரிச்சல்காரர்களின் பக்கவாத்தியம்

இந்த இடுகையை படித்தால் உங்களுக்கு புரியும்

--

இப்படி எதற்கெடுத்தாலும் (தவறு இல்லை என்றால் கூட) குறை கூறுவதால், உண்மையான குறையை சுட்டிகாட்டும்போது அதை கவனிப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது

புருனோ Bruno said...

//ஓரத்திலும் மூன்று படுக்கைகள் போட்டு ஆபத்துக் கால சன்னல்களையே மூடி வைத்திருந்தார்கள்.//

எந்த வண்டியில் ??

(இடையில் சில நாட்கள் இருந்தது உண்மைதான் ஆனால்) எனக்கு தெரிந்து 2010ல் நான் சென்ற எந்த வண்டியிலுமே இது இல்லையே

புருனோ Bruno said...

//ரயில்வே போக்குவரத்துக்கு போதுமான தண்டவாளப் பாதைகளை உருவாக்க முடியாமல் போனதன் சூட்சுமம் என்ன?. இன்னும் லட்சக் கணக்கான மோட்டார் வாகனங்களை தனியார் நிறுவணங்கள் உற்பத்தி செய்வதற்கு அமைக்கிற ராஜபாட்டை அது என்பதை புரிந்துகொள்ளலாம்.//

இது அமெரிக்காவில் நடந்தது.
ஆனால் இங்கு அப்படியா என்று தெரியவில்லை

--

அடுத்ததாக் தொடர்வண்டி துறையில் 1947ல் ஆங்கிலேயர் காலத்திற்கும் பின்னர் 50 வருடங்களாக தமிழகம் புறக்கணிக்கப்பட்டது என்பது கசப்பான உண்மை

பிற மாநிலங்களில் எல்லாம் பெரும்பாலான பாதைகள் இருவழி பாதைகளாக்கப்பட்டு இருவழியுமே மின் மயமாக்கப்பட்டன.

இங்கோ 1990கள் வரை செங்கல்பட்டு வரை தான் இருவழி. அதன் பிறகு ஒரு வழி தானே

அதுவும் மீட்டர் கேஜ் தான்

--

எனவே போதுமான தண்டவாள பாதை தமிழகத்தில் இல்லை என்ற குற்றச்சாட்டு உண்மைதான்

//பல பொதுத்துறை நிறுவணங்களை கள்ள விலைக்கு விற்று விட்ட மாதிரியே ரயில்சேவையை தனியாருக்கு விற்றுவிடத் துடிக்கிறது இப்போதிருக்கும் இந்திய ஜனநாயக அமைப்பு.//

இங்கும் public private partnership என்ற மாயை மூலம் தனியார்மயம் ஆரம்பித்துள்ளது

அதை ஊக்குவிப்பது யார் தெரியுமா

அரசு என்றால் மோசம் - தனியார் என்றால் சூப்பர் என்ற மனப்”பிராந்தி”யுடன் அரசு துறையில் இல்லாத குறைகளையும் நடக்காத தவறுகளையும் கற்பனையாக எழுதுபவர்கள் அனைவரும் தான் அதற்கு காரணம் - உதாரணங்களை மேலே அளித்துள்ளேன்

வானம்பாடிகள் said...

மிக்க நன்றி டாக்டர் ப்ரூனோ. பல விடயங்களை மிகத் தெளிவாக்கியிருக்கிறீர்கள். பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கும் இடுகையில் மேலதிக தகவல் தருகிறேன்.

ராஜ நடராஜன் said...

//அண்ணே ரயில்ல சரக்கு ஏன் கொடுக்க மாட்டேன்னு சொல்லுறாங்க ?//

சரக்கே ரயிலா போவதினால்:)

ராஜ நடராஜன் said...

நீங்க கேரள தொலைக்காட்சி ஊடக பணியாளாரா?இன்றைக்கு உங்க பாணியில் ரயிலே ரயிலே இரண்டு மணி நேரம் காத்திருந்தும் வரிசை நகராத, டிக்கெட் கொடுக்காத ரயிலேன்னு நேர்காணல்.

முகிலன் said...

// ராஜ நடராஜன் said...

//அண்ணே ரயில்ல சரக்கு ஏன் கொடுக்க மாட்டேன்னு சொல்லுறாங்க ?//

சரக்கே ரயிலா போவதினால்:)//

எங்கள் தளபதி சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குவதால் கொஞ்சம் எடை போட்டுவிட்டார் என்பதற்காக எங்க தளபதியை சரக்கு மூட்டை என்று கேலி செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வானம்பாடிகள் said...

@@நன்றி தேவா
@@நன்றி கண்ணன் காமராஜ் சாருக்கும்.
@@நன்றி இர்ஷாத்

வானம்பாடிகள் said...

அகல்விளக்கு said...

இதுல இம்புட்டு மேட்டர் இருக்குங்களா சார்....

என்னதான் சொன்னாலும் இரயில்வே தனியார்மயம் அப்படிங்கறத ஒத்துக்க மனசு வர மாட்டிங்குது சார்...

சும்மாவா சொன்னாங்க The Life Line of India-ன்னு....//

ரயில்வே தனியார்மயமாகாது:)

வானம்பாடிகள் said...

@@நன்றி திரு

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...

இடுகை போட்ட உடனே வந்து எல்லோரும் உட்கார்ந்துக்கிறாங்களாக்கும்:)//

வாங்கண்ணா:)

//இதற்கு ஒரு மாற்று வழி இருக்குது!

இங்கே நாங்கெல்லாம் உபயோகிக்கும்
Civil ID Card மாதிரி பயணம் செய்பவர்கள் மட்டுமே இ-டிக்கெட்,மற்றும் முன் பதிவு.//

தத்கலில் இருந்ததையே எடுக்கும் நிலமை. கள்ள டிக்கட் வாங்க மறுத்து டிடிஆரிடம் போனாலே தொடர்ந்த நஷ்டம் தாங்கமுடியாமல் இந்த கள்ள டிக்கட் ஒழியும்.

வானம்பாடிகள் said...

முகிலன் said...

// இந்தப் பாயிண்ட் எனக்குப் புரியல சார். ரிசர்வேசன் செய்ய பேர், வயசு போட வேண்டாமா? அப்பிடி போட்டு எடுத்த ஒரு டிக்கெட்டை எப்பிடி இன்னொரு ஆள் பேருக்குப் போட்டுத் தரமுடியும்?//

பல பெயர்களில் தோராயமான வயதில் வாங்கப்படும் டிக்கட்டுகள். ஏறக்குறைய வயதுள்ளவர்கள் தேர்ந்தெடுத்து வாங்கலாம். பின்னால் பென்சிலில் மிக மெலிதாக பெயரிருக்கும்.:)

வானம்பாடிகள் said...

@@நன்றி கருணாகரசு.
@@நன்றி பாலாசி

வானம்பாடிகள் said...

முகிலன் said...

ரயில்ல போய் ரொம்ப நாள் ஆச்சுன்னு இந்தத் தடவை மதுரை சென்னை பயணத்துக்கு பாண்டியன்ல டிக்கெட் போட்டிருக்கு. அனுபவம் எப்பிடியிருக்குன்னு பாக்கலாம்.//

ஃப்ளைட் மாதிரி முன்கூட்டியே வந்துடுங்க ஸ்டேஷனுக்கு. தீவிரவாத செக் இருக்கு. சமயத்துல நோண்டுவாய்ங்க எல்லாத்தையும்.

வானம்பாடிகள் said...

@@நன்றி பிள்ளையாண்டான். பதில் இடுகையில் சொல்கிறேன்.
@@நன்றி காஞ்சி சுரேஷ் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
@@சமர்த்து வாசு:)
@@அது வேற ஆச்சுங்களாண்ணே. அடுத்த வாட்டி மறக்காம கொண்டுவந்துருங்கன்னு சொல்லி விட்டிருப்பாங்களே.
@@நன்றி ஸ்ரீராம்

வானம்பாடிகள் said...

முகிலன் said...

// இதை நான் பார்த்ததில்லை சார். ஆனால் 10:00 மணிக்கு டீ குடிக்க என்று பதினைந்து நிமிடம் கவுன்ட்டர்-ஐப் பூட்டி விட்டுச் செல்பவர்களைப் பார்த்தது உண்டு. இதனால் பதினைந்து நிமிடம் ரிசர்வேஷனில் பின்னால் போய் விடக்கூடிய நிலைமை அந்த வரிசையில் இருக்கும் அனைவருக்கும் வந்து விடும்இல்லையா?//

லஞ்ச் நேரம் போல் அனுமதிக்கப்பட்ட ப்ரேக் அது. பெரும்பாலும் ஒரு டம்மி கவுண்டர் திறக்கப்பட்டு அங்கு ப்ரேக்கில் செல்லும் நபரின் வரிசையில் இருப்பவர்கள் அழைக்கப் படுவார்கள். எனவே காத்திருத்தல் அவசியமாகாதே

வானம்பாடிகள் said...

இராமசாமி கண்ணண் said...

// இதே டவுட்தான் சார் எனக்கும். டிக்கெட் ரிசர்வ் பண்றப்ப (irctc site la online)ல பன்னுனாலும் பெயர் , வயசுல்லாம் கேக்கறாங்க இல்ல. தரகர்கள் புக் பண்றப்ப அந்த விவரமெல்லாம் கிடையாதா ?//

இருக்குங்க. பேரு கேட்டா கந்தசாமின்னு சொல்லுங்கன்னு சொல்லிதான் விப்பாங்க. பின்னாடி எழுதியிருக்கும். உங்களுக்கான்னு கேட்டு குடுப்பாங்க. இல்ல ஒரு பெருசுக்குன்னா என்ன வயசுன்னு கேட்டு குடுப்பாங்க.:)

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

ங்ஙே...//

ங்கொய்யால. ES2 தேடி அல்லாடி நெல்லையில இருந்து மதுரை வரைக்கும் கவனம் வருதா:)). அதான் இது.

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

எனக்கும் ஒரு டவுட்ங்னே... ஈரோட்ல இருந்து ஒரு ட்ரெய்ன் சேலம் போய்,அங்கிருந்து மேட்டூர் போகுது. ஈரோட்ல இருந்து ஒரு பய கூட மேட்டூருக்கு ட்ரென்ல போற வாய்ப்பேயில்ல..

ஆனா சேலம் டு கோவைக்கு 150 கி.மீ. பகல் நேரத்துல பக்கத்து அஞ்சு ரயிலுக்கும் கம்மியாத்தான் போகுது. இதுல பாசஞ்சர் ட்ரெயின் விட்டா (அதுவும் ஈரோடு-கோவை ஒரு முறை மட்டும் போய், பின் தூங்கும் எலக்ட்ரிக் வண்டியை) சேலம்-ஈரோடு / ஈரோடு-திருப்பூர் / சேலம்-கோவை / சேலம்- திருப்பூர் / ஈரோடு-கோவை / திருப்பூர் - கோவை என பல நூறு பேருந்துகளை தூக்க்க்க்க்க்கிடலாம்...

ஏன் ஒரே ஒரு ரயில் கூட இந்த 150 கி.மீ. அதுவும் நாலு மாநகராட்சி இருக்கிற ரூட்ல வரலைனு தெரியல....

சொல்லுங்க எசமான்.. சொல்லுங்க//

கோவையும் விட்டுபோட்டு ஈரோட்டையும் தாண்டிபோட்டு சேலத்துக்கு கடத்திட்டு போயிடாங் கோட்டத்த. இவரு என்னிய கேள்வி கேக்குறாரு. அதான் சேலம்-ஈரோடு, ஈரோடு கோவை ஷட்டில் விடப்போறாங்கள்ள. அப்புறம் என்ன?

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

வாவ்... சூப்பர் அண்ணே..

யானைய கட்டி தீனி போடுவது மாதிரி - ரயில்வே துறை... சரியா?//

தீனிக்குதாண்ணே இந்தப்பாடு.

வானம்பாடிகள் said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஒரே ஒரு கேள்விதான் சார். ரயில்வே சட்ட திட்டம் கெடுபிடியெல்லாம் வெறும் தமிழ் நாட்டுக்குள்ளதானா? நம்மூர் பார்டர தாண்டினா, ஓப்பன் டிக்கெட்டோ அட அது கூட இல்லாமயோ ஜோரா எல்லாரும் பயணம் பண்றாங்களே, அவங்க டவுசர கிழிச்சாலே ரயில்வேக்கு கோடி கோடியா கிடைக்குமே?//

இல்லை. பீகார் மாதிரி இடத்தில தண்டவாளம் காணாம போகும். பெட்டி எரியும். டிக்கட் கேக்குற டிடீஈ செத்துப்போவான். மத்தியில் ஆட்சி ஆட்டம் காணும்.

வானம்பாடிகள் said...

நசரேயன் said...

அண்ணே ரயில்ல சரக்கு ஏன் கொடுக்க மாட்டேன்னு சொல்லுறாங்க ?//

அதுக்கு தனியா ரயிலிருக்குண்ணே அரமணை மாதிரி. துண்டு கூட வீசப்பார்க்கலாம். கொள்ளகாசு.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//பெருகிவரும் மக்கள் தொகையைச் சமாளிக்க கூடுதல் வசதிகளையும் பணியாளர்களையும் நியமிப்பதற்குப் பதிலாக அதை ஏலத்திற்கு விடுவதுதான் சிறந்த தீர்வென நம்புகிறது அரசும்,அதன் திட்டமும்.//\அப்பொழுது மட்டும் இதே மக்கள் தொகையை சமாளிக்க அவர்கள் ஏதாவது ஒன்றை செய்துதானே ஆகவேண்டும் . எல்லாம் நம்மை ஏமாற்றும் முறைகளில் இதுவும் ஒன்று
.

வானம்பாடிகள் said...

@@நன்றி அசோக்
@@நன்றி ஜில்தண்ணி.

வானம்பாடிகள் said...

நன்றி அரைக்கிருக்கன்
நன்றி புருனோ. பதில் இடுகையில் சொல்கிறேனே.
நன்றி பனித்துளி சங்கர். தொடர்ந்து படியுங்கள்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

தேவையான பதிவு.

Mahi_Granny said...

தகவலுக்கு நன்றி தங்களுக்கு .காரணமாயிருந்த பதிவர்களுக்கும் அதே .

ப்ரின்ஸ் said...

புரிஞ்சுக்கிட்டேன்......

ஜெட்லி said...

பகிர்வுக்கு நன்றி.....
சில விஷயங்கள் புரிந்தது....

காமராஜ் said...

பெரும்பாலான சந்தேகங்கள் கிட்டத்தட்ட க்ளியராகிவிட்டது.
ஒன்றிரண்டு
இன்னும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
மருத்துவம்,கல்வி,குடிநீர்,போக்கு வரத்து எல்லாமே லாப அடிப்படியில் அனுகக்கூடாது.அது சேவை
இனங்களில் வரும்.அது போல போபார்ஸ் பூதங்களுக்கு தீனி போடும் பாதுகாப்புக்கும் நாம் இப்படிக்கணக்கு பார்க்க முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து. இன்னும் விவாதிக்கலாம் பாலாண்ணே.

காமராஜ் said...

அன்பின் ப்ரூனோ வணக்கம்.
இப்போது வரும் விளம்பரங்களில்,
பிரதான செய்திகளில்,
கூகிளில்,
தினமலர்,தினகரன்
போன்ற பெருத்த நாளேடுகளில்
கார்விற்பனை குறித்த பக்கங்கள் கனிசமாக இடம்பெறுவதும்.
கல்விக்கடன் கொடுக்காத வங்கிகள் கார்கடன் கொடுக்கத்துடிப்பதும் இப்போது பரவலாகி வருவது.
ஹியுண்டாய்,ஃபோர்டு,வாக்ஸ்வாகன் போன்ற நிறுவணங்கள் இந்தியாவைக் குறிவைப்பதும் லேசாகக்கடந்து போகும் விஷயமில்லை.

~~Romeo~~ said...

எல்லாம் சரி தான் . இன்னைக்கு காலைல மாப்பள தாக்கல்ல டிக்கெட் எடுக்க போய் இருக்கான். காலைல 4 மணிக்கு எழுந்து போனான்.. டிக்கெட் கிடக்குதோ இல்லையோ

பட்டாபட்டி.. said...

பதிவு மூலமா, ரயில் டிக்கெட்டுக்கு... இவ்வளவு பிரச்சனையிருக்குனு தெரிஞ்சுக்கிட்டேன்..


ஆமா சார்.. டிக்கெட் எடுக்காம போறாங்களே..அதுக்கு என்ன தண்டனைனு விளக்கி சொல்ல முடியுமா?..

எவ்வளவு மாசம் ஜெயில்?..
உள்ள சாப்பாடி எப்படி?..
இல்ல பணமா கட்டனுமுனா எவ்வளவு ஆகும்?

கையில முரசொலி, இல்ல நக்கீரன் வைத்திருந்தாலும், டிக்கெட் எடுக்க வேண்டுமா?.. ஹி..ஹி..
சொல்லுங்க சார்...

பட்டாபட்டி.. said...

@முகிலன் said...

இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியும். அவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். நீங்கள் தமிழ் நாட்டில் வசிக்கிறீர்கள்.

//

இது நச்....

Chitra said...

ஒவ்வொரு கேள்விக்கும், நல்ல விளக்கமான பதில்கள்...... இத்தனை விஷயங்கள் இருக்கா? ம்ம்ம்ம்.....

புலவன் புலிகேசி said...

உபயோகமான பதிவு ஐயா....

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வுக்கு நன்றி பாலா சார். பல புதிய தகவல்களை அறிய முடிந்தது.

அடுத்த தடவ ஊருக்கு வரும்போது சிவகாசிக்கு ஒரு டிக்கட் புக் பண்ணிக் கொடுத்துடுங்க.

புருனோ Bruno said...

//ஹியுண்டாய்,ஃபோர்டு,வாக்ஸ்வாகன் போன்ற நிறுவணங்கள் இந்தியாவைக் குறிவைப்பதும் லேசாகக்கடந்து போகும் விஷயமில்லை.
//

ம்ம்ம்ம்ம்
ஏற்றுக்கொள்கிறேன்

முகிலன் said...

சட்ட திட்டங்கள் கடுமையா இருக்கிற அமெரிக்காவுலயே கார்க்கம்பெனிகள் பூந்து விளையாடுறாங்கன்னா.. லஞ்சம் மலிஞ்சு கிடக்கிற இந்தியால்லாம் ஜூஜூபி...

நான் வசிக்கிற ஊர்ல, சின்ன ஊர்தான்னாலும் மெட்ரோ ரயில் (சப்வே) போக்குவரத்து இருந்ததாம். அந்த வசதி இருந்ததால மக்கள் அவ்வளவா கார்வாங்காம இருந்தாங்கலாம். ஃபோர்டு கம்பெனிக்காரன் அந்த சப்வே சிஸ்டத்தை வாங்கி, ரெண்டு வருசத்துல ஊத்தி மூடிட்டானாம்.

ரயில்வேயை இந்தியால தனியார்மயமாக்கினா இதுதான் நடக்கும்.

நாடோடி said...

சில‌ தெரியாத‌ விச‌ய‌ங்க‌ளை தெரிந்து கொண்டேன்... ப‌கிர்விற்கு ந‌ன்றி பாலா சார்..

rajasurian said...

உபயோகமான பதிவு. நன்றி

அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

பல புதிய விசயங்களைத் தெரிந்துகொள்ளமுடிந்தது சார் :-)