Sunday, May 23, 2010

இப்படியும்தான்..

என்றோ வரும் மழை ஏமாற்றாதிருக்க
தினமும் குடையுடன்
வேலைக்குச் செல்லும் பெண்



*




நெருப்பாய் முதலாளி
சிரித்தபடி நம்ம கடைக்கு
அழைக்கும் சிப்பந்திகள்




 **



கலப்படக்காரன் மாளிகைக்கு
கலவை போடும் சித்தாள் மேல்
சந்தேகக் கவலை.



***



முதிர்வு காட்டும் முகத்தில்
எருமை மேய்ந்த புல் தரைபோல்
அங்குமிங்கும் சிலவும்...


****

அசல் இங்கே.

48 comments:

Unknown said...

எதிர் கவுஜ சூப்பர்..

இவையும் நிஜம்தான்.

தோழி said...

எல்லா கவிதைகளுமே சூப்பர்....

கலகலப்ரியா said...

எதுவும் சொல்றதுக்கில்ல...

நேசமித்ரன் said...

எதிர்ன்னா தண்ணி டாஸ்மாக்தான் வீசும் இதுல தமிழ் மணக்குதே

நல்லா இருக்கு வானம்பாடிகள் சார்

Chitra said...

கலப்படக்காரன் மாளிகைக்கு
கலவை போடும் சித்தாள் மேல்
சந்தேகக் கவலை.


...... எதிர் கவுஜவும் தூள் கிளப்புது..... சூப்பர்!

ஸ்ரீராம். said...

அழகாய் எழுதி உள்ளீர்கள்...அசலையும் சென்று பார்த்து வந்தேன்..

தாராபுரத்தான் said...

எப்படியோ பதிவு போட இப்படியும் ஒரு வாய்ப்பு..வெளையாடுங்க அண்ணா.

Mahi_Granny said...

இது தான்எதிர் கவுஜவா.இப்படியும் இப்படியும் தான் இரண்டுமே அழகு

அன்புடன் அருணா said...

இதுக்கும் ஒரு பூங்கொத்து!

Paleo God said...

//இப்படியும்தான்.//

கரெக்டுதான்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆஆஆஆ...

கலக்கு கலக்குனு கலக்கியிருக்கீங்க. அதுவும் அந்த எருமை மேய்ஞ்ச புல்.. சூப்பர் :))

Unknown said...

//நம்ம கடைக்கு
அழைக்கும் சிப்பந்திகள்//

அங்காடிதெரு ??/

மதுரை சரவணன் said...

கவிதை அனைத்தும் அற்புதம் . வாழ்த்துக்கள்

Ahamed irshad said...

நல்லாயிருக்கு வானம்பாடி அய்யா..

பெசொவி said...

அருமை....அசலும் எதிர் கவிதையும்.....வாழ்த்துகள் அய்யா!

Kumky said...

எப்போதும் அசலை விட நகல் நல்லாயிருக்கும் என நிரூபிச்சுட்டிங்க..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நெருப்பாய் முதலாளி
சிரித்தபடி நம்ம கடைக்கு
அழைக்கும் சிப்பந்திகள்//
யதார்த்த வருத்தம்.

Subankan said...

நல்லா இருக்கு சார் :)

ஈரோடு கதிர் said...

எலே... ங்கொய்யா

இனிமே நா கவிதையே எழுதலய்ய்ய்ய்யா

Kousalya Raj said...

நல்ல ஹைகூ கவிதைகள்!!

சத்ரியன் said...

அட! இ(எ)ப்படி எழுதினாலும் நல்லா இருக்குதே!

சத்ரியன் said...

//எலே... ங்கொய்யா

இனிமே நா கவிதையே எழுதலய்ய்ய்ய்யா//

கதிர்,

பாலா செஞ்சிருக்கிறது உனக்கு பெருமை தானேய்ய்ய்ய்யா?

தொடர்ந்து எழுதுய்ய்ய்ய்யா.

Jerry Eshananda said...

நீங்களும் ஆரம்பிச்சுடீங்களா ..........சரிதான்..

Ashok D said...

:)

தேசாந்திரி-பழமை விரும்பி said...

வானம்பாடிகள் ஐயா வும், ஈரோடு கதிர் அண்ணனும் மன்னிக்கவும்...
சும்மா தான்...


இப்படியும் இப்படியும்தான்.....

நிஜாம் கான் said...

கதிரண்ணே பாட்டுக்கு ஏத்த அருமையான எசப்பாட்டுண்ணே!

ராஜ நடராஜன் said...

அசல் அமைதி காக்குது.நகல் அடிச்சு ஆடுது:)

balavasakan said...

அருமை பாலா சார்...

settaikkaran said...

எசப்பாட்டு எதுப்பாட்டு மாதிரி...நல்லாவே இருக்கு!:-)

க.பாலாசி said...

அடடா.. எதிராயிருந்தாலும் நேராத்தான் இருக்கு...

அந்த எருமை மேஞ்ச புல்தரை சரியான எ.கா.

பனித்துளி சங்கர் said...

//////நெருப்பாய் முதலாளி
சிரித்தபடி நம்ம கடைக்கு
அழைக்கும் சிப்பந்திகள்//////////

இந்த சிப்பந்திகளின் அழைப்பில் சிதறும் புன்னகையில் பல கண்ணீர் துளிகள் ஈரம் காயாமல் இன்னும் தெப்பமாய் மறைந்திருக்கிறது . மிகவும் அருமை அனைத்தும் . பகிர்வுக்கு நன்றி !

thiyaa said...

எல்லா கவிதைகளுமே நல்லா இருக்கு

prince said...

@ :-)

vasu balaji said...

@@நன்றி முகிலன்
@@நன்றிங்க தோழி
@@நன்றிங்க சித்ரா
@@நன்றிங்க ஸ்ரீராம்
@@நன்றிங்கண்ணே வறட்சி! என்ன பண்ண?
@@நன்றிங்க அருணா
@@நன்றி ஷங்கர்
@@நன்றிங்க செந்தில்
@@நன்றிங்க சரவணன்
@@நன்றிங்க இர்ஷாத்
@@நன்றிங்க பெயர் சொல்ல விருப்பமில்லை.
@@நன்றிங்க நாய்க்குட்டி மனசு.
@@நன்றி சுபாங்கன்
@@நன்றிங்க கவுசல்யா முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.
@@நன்றிங்க கண்ணன்
@@நன்றிங்க ஜெரி
@@நன்றி அஷோக் :)
@@நன்றி தேசாந்தரி
@@நன்றி நிஜாம்
@@நன்றிண்ணா:))
@@நன்றி வாசு
@@நன்றி சேட்டை
@@நன்றி பனித்துளி
@@நன்றி ப்ரின்ஸ்
@@நன்றி தியா

vasu balaji said...

கலகலப்ரியா said...

//எதுவும் சொல்றதுக்கில்ல...//

அவ். இரு இரு. காமெண்ட் பாக்ஸ் மேல வந்தது வந்தீங்க. எதுனா சொல்லிட்டுதா போகணும்னு போடுறேன்.:))

vasu balaji said...

நேசமித்ரன் said...

// எதிர்ன்னா தண்ணி டாஸ்மாக்தான் வீசும் இதுல தமிழ் மணக்குதே

நல்லா இருக்கு வானம்பாடிகள் சார்//

நன்றிங்க நேசன்.

சரி அதுக்கென்ன. போட்டா போச்சு

என்றோ செத்தவன் திதிக்கு கடன் வாங்கிய காசில் கோழியும் குவார்ட்டரும்
~~~~~~~~~~~~~~~~~~~~
நெருப்பாய் எரியும் விஸ்கியில் மிதக்கிறது பனிக்கட்டி எப்போதும் குளிர்ச்சியாய்

~~~~~~~~~~~~~~~~~~

யாரோ வாழும் மாளிகைக்கு செங்கல் சுமந்த சித்தாள் கூலி டாஸ்மாக் சரக்கு கனமாய்

~~~~~~~~~~~~~

இளமை நீர்க்கும் மீசையில்
முதுமை பூசும்
பீர் நுரை

vasu balaji said...

ச.செந்தில்வேலன் said...

ஆஆஆஆ...

கலக்கு கலக்குனு கலக்கியிருக்கீங்க. அதுவும் அந்த எருமை மேய்ஞ்ச புல்.. சூப்பர் :))//

:)). இருக்கதா பின்ன

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

எலே... ங்கொய்யா

இனிமே நா கவிதையே எழுதலய்ய்ய்ய்யா//

ஏன்! அட எழுதுங்க சாமி. அப்புரம் நாங்க பொழப்போட்றது எப்புடி?

vasu balaji said...

க.பாலாசி said...

அடடா.. எதிராயிருந்தாலும் நேராத்தான் இருக்கு...

அந்த எருமை மேஞ்ச புல்தரை சரியான எ.கா.//

ம்கும். நேரா மட்டுமில்ல. நேர்மையாவும் இருக்கில்ல:))

சிநேகிதன் அக்பர் said...

எதிர் கவுஜ சூப்பர் சார்.

க ரா said...

அருமை அய்யா :-).

பத்மா said...

இப்படியும் தான் கலக்கல்ஸ் தான் போங்க

Bavan said...

அருமை சார்..:D

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கவிதை..உம்..கவிதை...

அய்யா..பிரபாகர் ஊருக்கு வந்திருக்கானு கேள்விப்பட்டேன்.. அதுக்காக..இந்த பதிவ சமர்பணம் பண்ணிடுங்க..ஹா.ஹா

புலவன் புலிகேசி said...

அட கதிருக்கு எதிர் கவுஜயா??? இதுவும் நல்லாத்தான் இருக்கு....

insight said...

hm unmaiya moonu moonu varila sollitinga

Unknown said...

//.. முதிர்வு காட்டும் முகத்தில்
எருமை மேய்ந்த புல் தரைபோல்
அங்குமிங்கும் சிலவும்... //

முடியலங்க.. :-)))

அண்ணாமலை..!! said...

அங்காடித்தெரு
படத்தோட தாக்கமோ?
நம்ம ஓட்டு 2-வது கவிதைக்கு..!!!
அருமை!