Tuesday, May 18, 2010

அஞ்சலி..

ஆண்டொன்று ஓடிவிட்டது! பருவங்கள் மட்டுமே மாறின

பதவி, பவிசு, பட்டம், விழா, கொண்டாட்டம், இலவசம், பொய்,  துரோகம், பணம், மறதி, பழிவாங்கலில் எதுவுமே மாறவில்லை.

மானுடம் மறந்ததற்கான ஆண்டுவிழா இன்று.

பச்சைத்துரோகத்தின் பரிசாய் புதையுண்ட பல லட்சம் உயிர்களை மறந்துபோகவும் தலைப்பட்டோம். யார் சரி யார் தவறுக்கு அப்பாற்பட்டு அப்பாவியாய் அத்தனை உயிர்கள் போனது நிஜம். பச்சிளம் குழந்தைகள், முதியோர் என மொத்தமாய் செத்தவர்க்கு ஓர் அஞ்சலி சொல்லக்கூட மனமில்லை நம்மவர்க்கு.

பத்திரிகைகள் மறக்காமல் சத்தீஷ்கர் நிகழ்வுக்கு யாரையோ நினைவு கூறுகின்றன.

ஒரு புறம் நினைத்தால் அவமானமாய் உணர்கிறேன். மறுபுறம் நான் மட்டுமே இப்படியிருக்கிறேன். என் உறவுகள் தமிழுக்காய் இன்னும் தலை நிமிர்ந்தேயிருக்கிறார்கள் என்ற பெருமிதம் சற்றே ஆறுதலாயிருக்கிறது.

நிர்க்கதியாய் நிற்பவனை ஆயுதம் ஏந்தி ஒரு கூட்டம் மிரட்டுகிறதென்றால் உண்மையில் ஆயுதம் இருப்பது யாரிடம்? பயந்தவன் தானே மிரட்டுவான். ஏதிலி யார்? வலையம் வலையம் என்று முதலைக் கண்ணீர் விட்டோம். அவர்கள் சுதந்திரமாய் இருக்கிறார்கள். அல்லது சுதந்திரமாய் இல்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

சுதந்திரமாய் இருப்பதாய் மாயை கொண்டு கண்ணுக்குத் தெரியா இலவச, செய்தி இருட்டடிப்பு, போதையில் ஆழ்த்தும் தொலைக்காட்சிகள், மிரட்டல் என பல வலயங்களுக்குள் அகப்பட்டு உணராமல் இருக்கிறோமே! ஏதிலி யார்?

சென்ற வருடம் இருந்த பதட்டம், இயலாமை, எல்லாம் முடிந்த துக்கம் நெஞ்சை நிறைக்கிறது. நாகரீக உலகம் என்று மார்தட்டி நிற்கும் உலகலில், மறைந்தவனின் சமாதி கூட இடித்தொழிக்கப்படும் அவலம். க்ளோபல் வில்லேஜ் என்று பெருமை பொங்கும் உலகில் ஒரு மூதாட்டிக்கு அனுமதி மறுக்கும் மனிதநேயம்.

அதை வைத்து அரசியல் வியாபாரமாக்கும் அவலங்கள். இடது கையால் நீர் கொடுத்தமையால் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவனின் பெருமையை எழுதிக் காசாக்கி உதவிக்கரம் நீட்டும் பொய்முகம்.

அடிமையாய் இருக்கும் நமக்கு அவர்களுக்கு ஆறுதல் சொல்ல தகுதியில்லை. அவர்களுக்கு அது தேவையும் இல்லை. தமிழ் மாறினாலும், தமிழர் புத்தாண்டு மாறினாலும், தலைஎழுத்தே மாறினாலும் எறியப்படும் எலும்புத்துண்டுக்கு அடிமையாகிவிட்டோம்.

எனக்கொரு வலைமனை இருக்கிறது. என்னால் இடுகையிட முடியும். இதற்கு மீறி ஏதும் செய்ய வழியற்ற, துணிச்சலற்ற ஒர் அடிமையாய் நானும் அதைத்தான் செய்கிறேன்.

மானத்துக்காய் உயிர்நீத்த அந்த தியாக உள்ளங்களுக்கு மானமற்ற ஒரு ஜீவனின் கண்ணீர் அஞ்சலி. மன்னித்துவிடுங்கள் மனிதர்களே.

48 comments:

பிரபாகர் said...

வலிகளோடு நானும்...

பிரபாகர்...

ஈரோடு கதிர் said...

ஒரு இனத்தின் போராட்டத்தை, இன அழிப்புப் போராக மாற்றி, வெற்றி கண்ட இந்தக் கரிய தினத்தில்...
கொடியதொரு நயவஞ்சக இன அழிப்புப் போரில் தெரிந்தும், தெரியாமலும் தங்கள் உயிரை, உறுப்புகளை, கற்பை, உறவுகளை, உடமைகளை இழந்த அத்தனை ஆத்மாக்களிடமும், கையலாகத்தனம் மிகுந்த சக தமிழனாக மானசீகமாக மன்னிப்புக் கோரி, உயிர் துறந்த ஆத்மாக்கள் அமைதி அடைய மனமுருக வேண்டி, என்றாவது ஒரு நாளில், ஏதாவது ஒரு வழியில் தமிழர்கள் தமிழீழத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற நெஞ்சம் உருகும் பிராத்தனைகளோடு இந்த கரிய தினத்தைக் கடந்து போகிறேன் மிகக் கனத்த மனதோடு.

’மனவிழி’சத்ரியன் said...

இன அழிப்பைக் காக்க வக்கற்ற ஒரு உயிர்ப்பிணமாய் இங்கே வாசித்தேன்.

அந்த மானமிக்க புனிதர்களுக்கு, எந்தச் சொரணயுமில்லாத என்னுடைய அஞ்சலி ஏற்புடையதாகுமா...?

இராகவன் நைஜிரியா said...

வலிகளுடன் கூடிய என்னுடைய கண்ணீர் அஞ்சலிகள்.

பட்டாபட்டி.. said...

கண்ணீர் அஞ்சலிகள்.

மோனி said...

மானத்துக்காய் உயிர்நீத்த அந்த தியாக உள்ளங்களுக்கு மானமற்ற ஒரு ஜீவனின் கண்ணீர் அஞ்சலி

சைவகொத்துப்பரோட்டா said...

அஞ்சலி.

அஹமது இர்ஷாத் said...

கண்ணீர் அஞ்சலிகள்..

செ.சரவணக்குமார் said...

கண்ணீர் அஞ்சலிகள். கடந்த வருடம் இதே நாளில் அரங்கேறிய கொடூரம், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாறாத வடுவாய் மனதில் இருக்கும்.

VELU.G said...

மனமார்ந்த கண்ணீர் அஞ்சலிகள்

நாடோடி said...

என்னுடைய‌ அஞ்ச‌லியையும் இதில் ப‌திவு செய்கிறேன்..

ச.செந்தில்வேலன் said...

கண்ணீர் அஞ்சலிகள்

Hanif Rifay said...

கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலிகள்...

Hanif Rifay said...

கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலிகள்...

க.பாலாசி said...

//அடிமையாய் இருக்கும் நமக்கு அவர்களுக்கு ஆறுதல் சொல்ல தகுதியில்லை. அவர்களுக்கு அது தேவையும் இல்லை//

உண்மைதான்... வேறு வழியும் தெரியவில்லை... எனது கண்ணீர் அஞ்சலியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்....

க‌ரிச‌ல்கார‌ன் said...

கண்ணீர் அஞ்சலிகள்

Anonymous said...

நம்மால் இருக்கின்றவர்களுக் உதவமுடியாது என்றாலும் இறந்தவர்களுக் கண்ணீர் அஞ்சலியாவது செய்வோம். அவர்களது ஆன்மாவது நம்மை மன்னிக்கட்டும்

சூர்யா ௧ண்ணன் said...

எனது கண்ணீர் அஞ்சலி..

ராஜ நடராஜன் said...

பலகோடி மனித சஞ்சாரத்தில் தொலைந்து போய் விடாமல் வலைத்தளமாவது ஏமாற்றங்களை,எதிர்பார்ப்புக்களை,குமுறல்களை வெளிப்படுத்தும் வடிகாலாக இருப்பதில் மட்டும் சிறு ஆறுதல்.

பரவலாக எண்ணங்களை பகிர்வது மட்டுமே இப்போதைய தேவை.

சி. கருணாகரசு said...

என் இயலாமையையும் பகிர்கிறேன் அய்யா.

vasan said...

ஆம் வான‌ம்பாடி சார்,

சத்தீஸ்க‌ரில் அதே குர‌ல் (த‌வ‌று) அதே வார்த்தை
நில‌க்க‌ண்ணி வெடி, ம‌னித‌க் கேட‌ய‌ம்,
க‌ளிந்த‌ வ‌ருட‌ம் இதே குர‌ல் (த‌வ‌றா) இதே வார்த்தைக‌ள்,
எம‌ன் திசை தெக்கிலிருந்து...........

முகிலன் said...

கனத்த மனத்தோடு கையாலாகாத்தனத்தை எண்ணி நொந்துகொண்டே..

என் கண்ணீரை அஞ்சலியாக்குகிறேன்.

ஜெரி ஈசானந்தன். said...

பாலாண்ணா ..

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

கண்ணீர் அஞ்சலிகள்.

Subankan said...

//எனக்கொரு வலைமனை இருக்கிறது. என்னால் இடுகையிட முடியும். இதற்கு மீறி ஏதும் செய்ய வழியற்ற, துணிச்சலற்ற ஒர் அடிமையாய் நானும்//

அதைக்கூடச் செய்யமுடியாதவனாய் :(((

இராமசாமி கண்ணண் said...

வலிகளோடு நானும்.

தாராபுரத்தான் said...

கையாகாத என்னை மன்னித்து கொள்ளுங்கள் மகாத்மாக்களே..அந்த பாவிகள் நாசமா போகணும் என சாபம்தான் என்னால் விட முடியும்.என்னால் முடிந்தது இது தான்..இறுதி மூச்சில் உன்னை நினைப்பேன்..தமிழ்.. தமிழ்..எனப் பேசி என்னை கோழையாக்கிய வீராதிவீரன்..குடும்பம் என் கண் முன் அழிய போவதில்லை.. சின்னா பின்னமாகும் நாள் வந்தே தீரும்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

,,,,,,,,,

Balavasakan said...

நீங்கள் மட்டுமல்ல எங்கள் எல்லோருக்கும் இதைத்தான் செய்ய முடிகிறது பாலாண்ணே..!!!

karthickeyan said...

எல்லா தமிழக உறவுகளின் வலிகளும் இப்படித்தான்!

நாய்க்குட்டி மனசு said...

அஞ்சலி, அஞ்சலி, புஷ்பாஞ்சலி.

றமேஸ்-Ramesh said...

///மானத்துக்காய் உயிர்நீத்த அந்த தியாக உள்ளங்களுக்கு மானமற்ற ஒரு ஜீவனின் கண்ணீர் அஞ்சலி. மன்னித்துவிடுங்கள் மனிதர்களே.///

நானும் உங்களோடு உறவுகளே மன்னித்துவிடுங்கள்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

மன்னித்துவிடுங்கள் மனிதர்களே!

:(

Chitra said...

கண்ணீர் அஞ்சலி.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கட்டுடைந்த கண்ணீருடன் சொல்வதறியாது நான் .

கலகலப்ரியா said...

:)

V.Radhakrishnan said...

//தமிழ் மாறினாலும், தமிழர் புத்தாண்டு மாறினாலும், தலைஎழுத்தே மாறினாலும் எறியப்படும் எலும்புத்துண்டுக்கு அடிமையாகிவிட்டோம்.

எனக்கொரு வலைமனை இருக்கிறது. என்னால் இடுகையிட முடியும். இதற்கு மீறி ஏதும் செய்ய வழியற்ற, துணிச்சலற்ற ஒர் அடிமையாய் நானும் அதைத்தான் செய்கிறேன். //

கண்ணீர் அஞ்சலிகள்

நேசமித்ரன் said...

:(

http://djthamilan.blogspot.com/2010/05/blog-post_7242.html

நேரமிருந்தா வாசிங்க சார்

புலவன் புலிகேசி said...

//மானுடம் மறந்ததற்கான ஆண்டுவிழா இன்று.
//

பளார் என அறைந்து சொல்லியிருக்கிறீர்கள் ஐயா...

ப்ரின்ஸ் said...

மானத்துக்காய் உயிர்நீத்த அந்த தியாக உள்ளங்களுக்கு மானமற்ற ஒரு ஜீவனின் கண்ணீர் அஞ்சலி. மன்னித்துவிடுங்கள் மனிதர்களே.\\

.....................................................................................

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! நடந்து முடிந்த இனஅழிப்புக்கு நானும் தங்களோடு சேர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன். இன்னமும் தொடரும் துயரத்திலிருந்து அவர்களை யார் மீட்பது? விடை தெரியா கேள்வியோடு....,

வானம்பாடிகள் said...

நன்றி
@@பிரபாகர்
@@கதிர்
@@கண்ணன்
@@ராகவண்ணா
@@பட்டா
@@மோனி
@@ஏஸ்கேபி
@@இர்ஷாத்
@@சரவணக்குமார்
@@வேலு
@@நாடோடி
@@செந்தில்
@@ஹனீஃப்
@@பாலாசி
@@சிவா
@@சூர்யா
@@கரிசல்காரன்
@@நடராஜன்
@@வாசன்
@@கருணாகரசு
@@முகிலன்
@@ஜெரி
@@சரவணக்குமார்
@@சுபாங்கன்
@@இராமசாமிகண்ணன்
@@அண்ணா
@@நண்டு
@@வாசு
@@கார்த்திகேயன்
@@நாய்க்குட்டிமனசு
@@ஷங்கர்
@@றமேஸ்
@@பனித்துளிசங்கர்
@@சித்ரா
@@ப்ரியா
@@ராதாகிருஷ்ணன்
@@நேசன். படிச்சேங்க:(
@@ப்ரின்ஸ்
@@புலிகேசி
@@நிஜாம்

அக்பர் said...

வலிகளோடு நானும் என் இயலாமையை இங்கு பதிவு செய்கிறேன்.

பலியான எண்ணற்ற அப்பாவி உயிர்களுக்கு எனது அஞ்சலிகள்.

rajasundararajan said...

நம் கையறு நிலையைச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். அதை இங்குள்ளவர்கள் அரசியல் ஆக்கியதையும் தோலுரித்துக் காட்டி இருக்கிறீர்கள். அநியாயம் நடக்கும்போது குறுக்கிடாதவர்களும் குற்றவாளிகள் என்று ஒரு பழமொழி உண்டு. அந்த வகையில் நானும் ஒரு குற்றவாளிதான். வருந்துகிறேன்.

கா.பழனியப்பன் said...

// எனக்கொரு வலைமனை இருக்கிறது. என்னால் இடுகையிட முடியும். இதற்கு மீறி ஏதும் செய்ய வழியற்ற, துணிச்சலற்ற ஒர் அடிமையாய் நானும் அதைத்தான்
செய்கிறேன்.//

நானு நிங்க‌ சொன்ன துணிச்சலற்ற ஒர் அடிமைதாங்க‌.

அண்ணாமலை..!! said...

உணர்வுக்குவியலகள் ஒவ்வொரு வரியிலும்..!!!
காசி ஆனந்தனின் கவிதைகள்
உங்கள் ஒவ்வொரு வரியிலும் காண்கிறேன்!
இதோ இன்னுமொரு அடிமை வழிமொழிகிறது!

வானம்பாடிகள் said...

கா.பழனியப்பன் has left a new comment on your post "அஞ்சலி..":

// எனக்கொரு வலைமனை இருக்கிறது. என்னால் இடுகையிட முடியும். இதற்கு மீறி ஏதும் செய்ய வழியற்ற, துணிச்சலற்ற ஒர் அடிமையாய் நானும் அதைத்தான்
செய்கிறேன்.//

நானு நிங்க‌ சொன்ன துணிச்சலற்ற ஒர் அடிமைதாங்க‌.

வானம்பாடிகள் said...

அண்ணாமலை..!! has left a new comment on your post "அஞ்சலி..":

உணர்வுக்குவியலகள் ஒவ்வொரு வரியிலும்..!!!
காசி ஆனந்தனின் கவிதைகள்
உங்கள் ஒவ்வொரு வரியிலும் காண்கிறேன்!
இதோ இன்னுமொரு அடிமை வழிமொழிகிறது!