Monday, May 17, 2010

மயிர் நீப்பின் வாழா..

மனுசனாப் பொறந்தவன் ஒவ்வொருத்தனுக்கும் குறைந்தது ஒரு வயசில இருந்து கட்டையில போற வரைக்கும் தொடர்ந்து இருக்கிற உறவுன்னா அது சவரக்கடைதான். முடிஞ்சா நாமளே போறது முடியலீன்னா அவிங்க வாரதுன்னு ஒரு உன்னதமான ஏற்பாடு அது.

மசிரு பொறாத விஷயம்னு நக்கலா பேசிடுறதும் திட்டுறதும்னு இருக்கிறவங்களுக்கு அதோட மதிப்பு தெரியறதில்லை. ஆனானப்பட்ட வள்ளுவரே ‘மயிர் நீப்பின்’ அப்படின்னு முக்கியத்துவம் கொடுத்து எழுதியிருக்கார். (டி.வி.ஆர். சார் ஒரு வாரம் லீவு. வள்ளுவர் ஏங்கிறப்படாதுன்னு நான் சொல்லிட்டேன். எப்புடீ). அந்த உன்னதமான உறவுக்கு உலைவைக்கும் சதி நடக்கும்போது ஒரு மனுசம்மனசு என்ன பாடுபடும்?

எனக்கு மட்டும் ஏன் சார் இப்புடியெல்லாம் நடக்குது?

சின்ன வயசில தவறாம இழுத்துட்டு போய், மண்டை தெரிய வெட்டி விடுங்கன்னு சொன்னப்போ பலியாடு மாதிரி போவேன். அஞ்சாம்பு படிக்கிற சம்முவம் ஜம்முன்னு சேர்ல உக்காந்து வெட்டிக்கும்போது நம்ம உசரத்த காரணம் காட்டி ஏழாம்பு படிச்ச என்னை கைப்பிடி மேல கட்டைய போட்டு உக்கார வெச்சி வெட்டினப்பவும் ஒரு வார்த்த ஏன்னு கேட்டிருப்பேன்?

கொஞ்சம் முடி வளர்த்துகிட்டு ஒரு தலை ராகம் சங்கர் மாதிரி ஸ்டெப் கட்டிங் வெட்டுங்கன்னு கேட்டேன். முகவாய புடிச்சி திருப்பி பாவமா ஒரு பார்வை பார்த்து இந்த முடிக்கு ஸ்டெப் கட்டிங் வராது தம்பின்னாங்க. இன்னும் கொஞ்சம் வளந்த பிறகு வரவான்னு பணிவா கேட்டேன். பளிச்சின்னு மூஞ்சில அடிச்சா மாதிரி கோர முடிக்கு ஸ்டெப்கட்டிங் நல்லாருக்காதுன்னு சொன்னப்பவும் பழயபடி மண்ட தெரிய கட்டிங்குக்கு ஒத்துக்கிட்டேன்.

பதினொண்ணாம்பு போயும், கிளாசுல இருந்த சுகுணாவுக்கு இருந்த பூனை முடி கூட மீசை இல்லைன்னு கிண்டல் பண்ணப்ப ஒம்பதாம்புல இருந்து ஷேவிங் பண்ற சுந்தரமூர்த்திய கேட்டு எதிர் போடுறதுன்னா என்னான்னு தெரிஞ்சிகிட்டு வரட்டு வரட்டுன்னு இல்லாத மீசையும் தாடியையும் எரிய எரிய ஷேவ் பண்ணேனே எதுக்கு?

அந்த நல்லெண்ணம் புரியாம, முதல் முறையா தாடியும் மீசையுமா முடிவெட்டிக்க போனா ஷேவ் பண்றப்ப என்னமோ கொலக்குத்தம் பண்ணவன் மாதிரி எதிர் போட்டியான்னு கேட்டாலும் பரவால்ல. தம்பி எதிர் போட்டாலும் பரவால்ல, கண்டமேனிக்கு இழுத்தியான்னு நக்கலா கேட்டப்போவும் மனசுக்குள்ளயே அழுதேன்.

இவ்வளவு கொடுமை அவமானமெல்லாம் தாங்கிக்கிட்டேனே ஏன்? எந்தக் கெட்ட வார்த்தை திட்டுக்கும் பொங்காத ஒரு சுரணை கெட்ட மனுசன் கூட ‘ஒம் மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்க’ என்ற வசவுக்கு கொலை செய்யற அளவுக்கு போவான். பிச்சைக்காரனா இருந்தாலும் சரி, பிரதமரானாலும் சரி இவிய்ங்க பீச்சக்கை மூஞ்சில வெக்காம முடிவெட்டணும்னு சொல்ல முடியுமா?

அதுவும், ஷேவிங் பண்றப்ப அந்த நாத்தம் புடிச்ச சோப்ப குழைச்சு தடவி வழிச்சி உள்ளங்கையில கத்தில இருந்து ட்ரான்ஸ்வர் பண்ணி, மூக்கு மேல படாம மூஞ்சில பீச்சாங்கைய வச்சி வசதிக்கு திருப்பி திருப்பி சவரம் பண்ணப்போ எந்தப் பயபுள்ளையாவது கொதிக்க வேணாம். ஏம்ப்பான்னு ஒரு வார்த்த கேட்டிருப்பான்?

இதெல்லாம் விடுங்க. ஒரு மனுசனுக்கு ஆயிரம் துக்கம், கவலை, வியாதி எது வேணா இருக்கட்டும். சவரக்கடையில போய் உக்காந்து கிச்சு கிச்சுன்னு கத்தரி சத்தத்தில அஞ்சாவது நிமிஷம் கண்ணு சொக்காத மனுசன் உண்டுமாய்யா? தூக்கமா அது? அப்புடி ஒரு தூக்கம் தூக்கமாத்திரையோ, டாஸ்மாக் சரக்கோ கூட கொடுக்க முடியாதே. இதுக்கெல்லாம் மதிப்பு குடுத்துதானே.

எனக்கு மட்டும் ஏன் சார் இப்படியெல்லாம் நடக்குது.

நம்ம வெண்ணெய் இருக்கானே, அவன் எல்லாத்துலயும் கொடுத்து வச்சவன். அழகா முன் மண்டையில ஆரம்பிச்சி 30 வயசுக்கெல்லாம் நயாகரா மாதிரி அப்படியே பரவி, காதோரத்தில இருந்து கழுத்துக்கு கொஞ்சம் மேல் வரைக்கு ஒரு ஒன்னரை இஞ்சு பிறை மாதிரி வழிச்சிட்டு போயிடுச்சி. அவனும் ப்ளேட் போடுற சீப்பு வெச்சி குளிக்கும்போது ரெண்டு வாரு வாரிட்டு ‘யப்பா! அம்பது ரூபா மிச்சம்பான்னு’ அப்பா படம் முன்னாடி இருக்கிற உண்டில காசு சேக்குறான்.

ஆனா எனக்கு? ஒரு நேந்திரங்கா சிப்சு சைசில பின்மண்டையில ஆரம்பிச்சி சேப்பாக்கம் ஸ்டேடியம் மாதிரி வளர்ந்துச்சி. அட முடியில்லைங்க! சொட்டை. கொஞ்ச நாள் வலப்பக்கம் அதிகமாக, அய்யோ கடவுளே! ஏன் இப்புடி? இடப்பக்கம் மட்டும் முடிய நீளமா வளர்த்தி, மண்டையில கொஞ்சமா விளக்கெண்ணெய் போட்டு, இந்த முடிய மத்த காது வரைக்கும் பரத்தி விட்டு செட்டப் பண்ண வச்சிறாதன்னு வேண்டாத கடவுள் இல்லை.

ச்சேரி போடான்னு இடப்பக்கமும் வளர ஆரம்பிச்சதும் அப்பாடான்னு சொட்டைக்கு சந்தோஷப்பட்ட பிறவி நானாத்தானிருக்கும். விட்றுவானா? முன் மண்டையில இருந்து அப்ரோச் ரோடு மாதிரி ரெண்டு பக்கமும் அத்து மீறல் தொடர்ந்தது.

அப்படி இப்படி வருசத்துக்கு ரெண்டு வாட்டிதான் முடிவெட்டுற நிலமை வந்தது கூட பெரிசில்ல. நவம்பர் மாசம்னு நினைக்கிறேன். மனசு சுக்கு நூறாகுற சம்பவம் நடந்துச்சி.

முடிவெட்டன்னு போனேன். ஒரு நாள் தாடி கூட இல்லாத என்னப் பார்த்து ஷேவிங்கான்னு கேட்டாங்க. மார்ல நடுவில சுருக்குன்னு ஒரு வலி. சகிச்சிக்கிட்டு கட்டிங்னேன். இருந்த நாலு சேர்ல ஒரு சேர் காலியாயிருக்க உக்காருன்னாங்க.

உக்காரப் போகும் போது ஒரு ஆள் வந்து ‘ஓ! ஃபுல்லான்னாரு’. எனக்கு வெட்டுற ஆள் ஓனர் கூட இல்லை. ஆனாலும் பளிச்சின்னு உக்காருங்க அஞ்சு நிமிசம், முடிஞ்சிரும்னாரு. அப்படியே கூசிப் போச்சு உடம்பு. பொறுத்துகிட்டேன்.

காலர இளக்கி விட்டாரு. நான் கண்ணாடிய கழத்தி வெச்சிட்டு கம்பீரமா உக்காந்தேன். பசங்களுக்கு போத்துர அரைத்துண்டு கூட இல்ல. ஷேவிங் பண்ற டர்க்கி டவல காலருக்கு பின்னாடி சொருவினதும் கண்ணு தளும்பிருச்சி. அதையும் விழுங்கிகிட்டு ஷார்ட்டா வெட்டுங்கன்னேன். பார்க்காட்டியும் களுக்குன்னு சிரிச்ச மாதிரி இருந்திச்சி.

ரெண்டு நிமிசம்தான் கர்ர்ர்ர்ர்ர்ர்ரக்சிக் கர்ர்ர்ர்ர்ர்ரக்சிக்குன்னு கேட்டுச்சி. அப்புறம் வெறும் சிக் சிக்னுதான் சத்தம். ஓரக்கண்ணால பார்த்தேன். சீப்பால ஒரு கையில வாரிய படி ரெண்டு இஞ்சு தள்ளி வெறும் கத்திரிய வெட்டிக்கிட்டிருந்தாரு.

அப்புறம் ஷேவிங்? அப்படின்னாரு. ஆடிப்போயிட்டேன். ஆனாலும் வேணாங்கன்னேன். அப்புறம் கத்திய வெச்சி காதோரம், புருவம், மூக்கு மேலன்னு இழுத்துட்டு, கத்திரிய மூக்குள்ள விட்டு கிச் கிச் பண்ணி, இதுக்கும் மேல என்னதான் செய்யன்னு ஒரு பார்வை பார்த்தாரு.

ஏக்கமா, பின்னாடி ‘ப’ எடுக்கலையேன்னு கேட்டேன். இந்த வாட்டி குபுக்குன்னு சிரிச்சிட்டு பரிதாபமா அங்க முடியில்லைங்களேன்னாரு. அப்புறம் துண்ட உதறினாரு சரி. நான் கேட்டனா? பின்பக்கமா ஒரு கை கண்ணாடிய வாகா புடிச்சி திருப்தியான்னு ஏன் கேக்கணும்? அதயும் விட, இறங்கினதும் சீப்ப நீட்டினா என்னா நக்கலு அது?

சரியா அந்த நேரம்தான் பக்கத்து ஆளுக்கும் முடிய இறங்கி 50ரூ நீட்டினாரு. கீழ பார்த்தா கூடை முடி. நான் எவ்ளோன்னேன். அசராம அம்பது ரூபான்னு சொன்னாரு. ஓரக்கண்ணால பார்த்தேன். ஒரு கைப்பிடி தேராது. ஆனாலும் ஒரு பேச்சு பேசாம அம்பது ரூபா கொடுத்துட்டு டிப்ஸா அஞ்சு ரூபா கொடுத்தேன்.

இல்லைங்க பரவால்ல வேணாம்னு சொன்னா விம்மி விம்மி அழத் தோணுமா தோணாதா? தினத்தந்தி பிரிச்சா லேசர் டெக்னாலஜில வீவிங் பண்றோம்னு சிகிச்சைக்கு முன் பின் படமெல்லாம் போட்டிருந்தத பார்த்ததும் கொஞ்சம் சபலம்தான்.

ஆனாலும், மண்டைக்குள்ள களிமண் இருந்தாலும், மணல் இருந்தாலும் பரவால்லைங்க, மொட்டப் பாறையில பயிர் விளைஞ்சாலும் மயிர் விளையாதுன்னு சொல்லிட்டா தாங்கற சக்தி எனக்கில்லை.

இதோ! இப்போ இருக்கிற முடி வளர்ந்துடிச்சி. காத்தில பறந்து மூஞ்சில அடிக்குது. ஆனாலும் இந்த வாட்டி போனா நின்ன வாக்குலயே ரெண்டு கிச் கிச் பண்ணி முடிஞ்சி போச்சி போங்கன்னு சொல்லிருவாங்களோன்னு அந்த பீலிங் தாங்க முடியல.

ஆனாலும் பதிவுலகம் பலருக்கு பல விதத்துல ஆறுதல். எனக்கு மட்டும் இல்லாம போகுமா? ஒருத்தர பார்த்து முப்பத்தஞ்சு வயசுலயே இப்புடி, இன்னும் என் வயசுல...இஃகிக்கீன்னு சிரிச்சுக்குவேன். இன்னொருத்தரு அட ஏங்க பாலாண்ணே! நானெல்லாம் இந்த கொடுமைக்கு அப்பாயின்மெண்ட் வெச்சி, போய்ட்டு அஞ்சு மடங்கு டிப்ஸ் குடுக்கறேன்னு ஆறுதலா சொல்றா மாதிரி இருக்கும். நெம்ப நன்றி மாப்பூஸ்.

108 comments:

ஈரோடு கதிர் said...

//எதிர் போடுறதுன்னா என்னான்னு//

ஓ... எதிர் இடுகை மாதிரியா!!!???

ஈரோடு கதிர் said...

//ஒரு தலை ராகம் சங்கர் மாதிரி ஸ்டெப் கட்டிங் வெட்டுங்கன்னு கேட்டேன். //


இன்ன்னா... லொல்லு...

”நங்”னு நடுமண்டையில கொட்டாம போனாங்களே!!!!

ஈரோடு கதிர் said...

//டாஸ்மாக் சரக்கோ கூட//

ஓ... இந்தப் பழக்கம் வேற உண்டா!!!

ஈரோடு கதிர் said...

//நம்ம வெண்ணெய் இருக்கானே//

ஓ... தலைவர் பத்தின வயித்தெரிச்சலா... அவரு பாவம் சும்மா விடாதுடி... ங்கொய்யா

ஈரோடு கதிர் said...

//அட முடியில்லைங்க! சொட்டை.//

விடுங்கண்ணே... விடுங்கண்ணே... மனசுன்னாலே முடியாததா மசிரால முடிஞ்சுரும்ம்...

கரடி மாதிரி முடி வச்சிக்கிட்டு, முடியோட தொல்லை தாங்காம இந்த பாலாசிப் பய அடிக்கடி மொட்டை போட்டுக்குது...

நம்மளுக்கெல்லாம்தான் அந்தச் செலவு வேற இல்லையே

ஈரோடு கதிர் said...

//ஒரு நாள் தாடி கூட இல்லாத என்னப் பார்த்து ஷேவிங்கான்னு கேட்டாங்க.//

பாவம்னே... அனுபவிக்கிறவங்களுக்குத்தான் இந்த வலி தெரியும்

ஈரோடு கதிர் said...

//ஏக்கமா, பின்னாடி ‘ப’ எடுக்கலையேன்னு கேட்டேன்//

இது லொல்லு... சாயுறப்போ முதுகு பக்கம் பிளேடு சொருவாம போனாங்ளே

ஈரோடு கதிர் said...

//அசராம அம்பது ரூபான்னு சொன்னாரு. //

அந்த மனுசங்க... நம்ம கிட்ட பாவ புண்ணியமே பாக்குறதில்ல... கேட்டா.. தேடித்தேடி வெட்டுறோம்லனு நாயம் பேசுறாங்க

ஈரோடு கதிர் said...

//ஒருத்தர பார்த்து முப்பத்தஞ்சு வயசுலயே இப்புடி, இன்னும் என் வயசுல...இஃகிக்கீன்னு சிரிச்சுக்குவேன். //

அடிங்கொய்யாலே...

இப்படி வேற என்ன வச்சு ஆறுதலா...

ஈரோடு கதிர் said...

//அட ஏங்க பாலாண்ணே! //

மாப்ப்ப்ப்ப்ப்ப்பூ

வச்சிட்டாரா உங்களுக்கும் ஆப்ப்ப்ப்ப்பூ

vasu balaji said...

டெஸ்டிங்

Paleo God said...

பதிவும் கமெண்ட்டும் டாலடிக்கிது சார்! :))

prince said...

(மரணமொக்கை - இதை வகை படுத்தலிலா போடுறது அப்படியே தலைப்புக்க பக்கத்திலயே போட்டிருக்க கூடாது) .. சிரிச்சி! சிரிச்சி! நாசில ஏறி கொஞ்சன்னா போயி சேர்ந்திருப்பேன்...

//ஏக்கமா, பின்னாடி ‘ப’ எடுக்கலையேன்னு கேட்டேன். இந்த வாட்டி குபுக்குன்னு சிரிச்சிட்டு பரிதாபமா அங்க முடியில்லைங்களேன்னாரு. அப்புறம் துண்ட உதறினாரு சரி. நான் கேட்டனா? பின்பக்கமா ஒரு கை கண்ணாடிய வாகா புடிச்சி திருப்தியான்னு ஏன் கேக்கணும்? அதயும் விட, இறங்கினதும் சீப்ப நீட்டினா என்னா நக்கலு அது?//

Ahamed irshad said...
This comment has been removed by the author.
Ahamed irshad said...

//ஆனாலும் பதிவுலகம் பலருக்கு பல விதத்துல ஆறுதல்.///

எது உண்மையோ இது உண்மை... தலைப்ப பார்த்த உடனே தெரிஞ்சிப்போச்சி கோவமான பதிவுன்னு. இந்த இடுகையை உங்களுக்கு முடி? வெட்டினவரு படிச்சா எப்படி இருக்கும்....!

Unknown said...

பாலா சார்............ எத்தனை பேர இங்க கிண்டல் அடிச்சீங்க இங்க... அதா சவரக் கடக்காரன் உங்கள கிண்டல் அடிச்சுட்டான்.... ஹா ஹா ஹா .....

க.பாலாசி said...

//முடிஞ்சா நாமளே போறது முடியலீன்னா அவிங்க வாரதுன்னு ஒரு உன்னதமான ஏற்பாடு அது. //

ஆமா... இப்ப என்னாத்துக்கு இந்த தத்துவம்... நமக்குதான் வாய்ப்பே இல்லாம போயிட்டே....

Unknown said...

ஒரு சோகத்தையும் இப்படி சிரிப்பா மாத்தி காட்டுற வித்தையை எங்க சார் கத்துகிடீங்க...

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...//

அதானே... ‘தலை’யப்பத்தி பேசும்போது தலயில்லாமலா....

பெசொவி said...

உங்க புலம்பல் புரியுது சார், ஆனா பாருங்க, நம்ம பின்னூட்டாளர்கள் உங்க புலம்பலையும் கூட ரசிச்சு பின்னூட்டம் போடுவாங்களே, அந்த கொடுமையை எங்கே போய் சொல்றதுன்னு தெரியலையே?
- இப்படிக்கு மண்டைக்கு உள்ள ஒண்ணும் இல்லாட்டியும் வெளிய நிறைய இருக்குற திமிர்ல இருப்போர் சங்கம்.

Unknown said...

//எவ்வளவு நேரம்தான் கையால க்ளிப் போடுறது. சும்மா சும்மா முடி பறந்து மூஞ்சில விழுதுங்ணா//

ஹையோ ஹையோ....ஒரே சிப்பு சிப்பா வர்து சாரே.....

க.பாலாசி said...

//எனக்கு மட்டும் ஏன் சார் இப்புடியெல்லாம் நடக்குது?//

நியாயம்தான்... என்னங்க பண்றது???

இப்ப கரெண்ட் இல்ல... கொஞ்ச நேரம்கழிச்சி வர்ரேன்....

சைவகொத்துப்பரோட்டா said...

//முடிவெட்டன்னு போனேன். ஒரு நாள் தாடி கூட இல்லாத என்னப் பார்த்து ஷேவிங்கான்னு கேட்டாங்க. மார்ல நடுவில சுருக்குன்னு ஒரு வலி. சகிச்சிக்கிட்டு கட்டிங்னேன்.//

அடக்கி வைத்த சிரிப்பு, இந்த இடத்தில் மடை திறந்த வெள்ளமாகி விட்டது!!
ஹி.........ஹி..............:))

balavasakan said...

ஐயோ... ங்ஙேஙே...ஙேஙேஙே.. உஉஉஉஉஉஉஉ ம்..ம்..ம் .. பாலாண்ணே..ண்ணே.. அழு...ழுகையாவருதே

நீங்க சொன்னீங்களே அதே கோரமுடிதாண்ணே நமக்கும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ....

பத்மா said...

ஹஹா நல்லா இருக்கு சார் .உங்க புராணம்

க.பாலாசி said...

ஹலோ மைக்..டெஸ்ட்...............

நாடோடி said...

"வெளியில‌ இருக்கிற‌த‌ விட‌ உள்ள‌ இருக்கிற‌தை ந‌ம்பி வாழ்கிற‌வ‌ன்" என்று ப‌ஞ்ச் டைலாக் போட்ருங்க‌... ஹா..ஹா...

பிரபாகர் said...

அய்யா, சாமி, கடவுளே... இருங்க.... படிச்...... முடியல... கொஞ்சம்....

பிரபாகர்...

பிரபாகர் said...

பசியில டயர்டாயிருக்கேன், சிரிச்சி டயர்டாயி டரியலானது இன்னிக்குத்தான்!

அய்யா! என்ன சொல்ல! காலையிலதான் வாழ்க்கை வாழ்வதற்கேன்னு வலைப்பூவ வெச்சிகிட்டு ஒவ்வொருத்தர மேல போனதையே எழுதறமேன்னு மூனு தெய்வங்க சொன்னதுக்கு அப்புறம் புத்தி வந்துச்சி! வேற யாரு நீங்க, தினேஷ், சேம் பிளட்... சோகமெல்லாம் சோடி சேத்துகிட்டு போயிடுச்சி! சிரிப்பான இடுகைதான் இனிமே....

ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர்...

கூந்த இருக்கிற மவராசி அள்ளி முடியறா... அதேன்....

பேன் தொல்லை இல்லாம் இருப்பாங்களா நம்ம மாதிரி!

பிரபாகர்...

Subankan said...

அவ்வவ்வவ்

பிரபாகர் said...

ஒருமுறை நமக்கும் சேவிங் செஞ்சிக்க ஆசை! இல்லாத தாடி மீசைக்கு கிரீம் தடவி பிளேட்ல இழுக்க, நுரையெல்லாம் சிவப்பா ஆக, தாவாகிட்ட கும்ளே மாதிரி (பிரபா மாதிரி கும்ளேன்னு சொல்லனும், நமக்கு நடந்த்து முன்னாலல்ல) கட்டிக்கிட்டு ஸ்கூலுக்கு போனேன்...

பிரபாகர்...

ராஜ நடராஜன் said...

இருந்ததையெல்லாம் கதிரே அள்ளிகிட்டாரு.அதனால் ஓரத்துல நின்னு சிரிச்சிக்கிறேன்.

பிரபாகர் said...

//ராஜ நடராஜன் said...
இருந்ததையெல்லாம் கதிரே அள்ளிகிட்டாரு.அதனால் ஓரத்துல நின்னு சிரிச்சிக்கிறேன்.
//
இருந்துச்சான்னே அவருக்கே சந்தேகம்...

மத்தவங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கனும்னு அறிவாளிங்களுக்கு தெரியாதாமே? அப்படியா?

பிரபாகர்...

ஈரோடு கதிர் said...

//பிரபாகர் said...

பசியில டயர்டாயிருக்கேன், //

மவனே... பசியில மட்டும் டயர்டு ஆகுங்க டயர்ர்ர்ர்டு..

இடுகை எழுதி மட்டும் டயர்ர்ர்ர்டு ஆகா மாட்டீங்களே!!!!

VELU.G said...

பிச்சி உதறிட்டீங்கண்ணே

க.பாலாசி said...

//கொஞ்சம் முடி வளர்த்துகிட்டு ஒரு தலை ராகம் சங்கர் மாதிரி ஸ்டெப் கட்டிங் வெட்டுங்கன்னு கேட்டேன்//

அட... இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல... முடிவெட்டுன கடைக்காரன்தாங்க பாவம்....

க.பாலாசி said...

//பழயபடி மண்ட தெரிய கட்டிங்குக்கு ஒத்துக்கிட்டேன்.//

எனக்கு ஒரு டவுட்டு...ஏற்கனவே மண்ட தெரியிற மாதிரி இருந்த தலையில என்னத்த கட் பண்ணாங்க....

க.பாலாசி said...

//இன்னும் கொஞ்சம் வளந்த பிறகு வரவான்னு பணிவா கேட்டேன்//

ஆனா... இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு....

Anonymous said...

இல்லாத மயிருக்கு உயிர் போற அளவுக்கு சிரிக்க வைத்து விட்டீர்க்ள்.பாதிக்கு மேலே ரொம்ப கிளேர் அடிக்குதுங்க.

க.பாலாசி said...

//கண்டமேனிக்கு இழுத்தியான்னு நக்கலா கேட்டப்போவும் மனசுக்குள்ளயே அழுதேன்.//

தேவையா இதெல்லாம்... ரொம்ப கொடுமைங்க இது.....

க.பாலாசி said...

//சிவா (கல்பாவி) said...
பாதிக்கு மேலே ரொம்ப கிளேர் அடிக்குதுங்க.//

என்னாது சின்னப்புள்ளத்தனமா இருக்கு... பாதியாம்ல..பாதி...முழுசாவே கிளாராத்தான இருக்கு.....நிங்க போட்டோவ பாக்கலையா சிவா... அடப்போங்க என்னோட வேலப்பாக்குறதுக்கே அர்த்தமில்லாம பண்ணிட்டீங்களே...

க.பாலாசி said...

//மூக்கு மேல படாம மூஞ்சில பீச்சாங்கைய வச்சி வசதிக்கு திருப்பி திருப்பி சவரம் பண்ணப்போ எந்தப் பயபுள்ளையாவது கொதிக்க வேணாம். ஏம்ப்பான்னு ஒரு வார்த்த கேட்டிருப்பான்?//

அதெப்படி கேட்கமுடியும்... ஏன்ன்ன்ன்னு லைட்டா திரும்பினாவே போச்சே... ஒரு பக்கத்துல கொஞ்சூண்டு சத காணாப்போயிடுமே.....

க.பாலாசி said...

//காதோரத்தில இருந்து கழுத்துக்கு கொஞ்சம் மேல் வரைக்கு ஒரு ஒன்னரை இஞ்சு பிறை மாதிரி வழிச்சிட்டு போயிடுச்சி.//

இந்த மனுஷனுக்கு எம்புட்டு சந்தோஷத்தப்பாருங்க.....

நேசமித்ரன் said...

பிராண்டெட் சுவாரஸ்யம் !

:)

செ.சரவணக்குமார் said...

கம்பெனி ரகசியத்த எல்லாம் ஏன் பாஸ் வெளியில சொல்லிக்கிட்டு? இருந்தாலும் கூடிய சீக்கிரம் நானும் இந்த மாதிரி ஒரு பதிவு போடுவேன்னு நெனைக்கிறேன்.

செ.சரவணக்குமார் said...

அதென்ன கதிர் அண்ணன் 15 கமெண்ட் போட்டதுக்கப்புறமா டெஸ்டிங்?

க.பாலாசி said...

//முன் மண்டையில இருந்து அப்ரோச் ரோடு மாதிரி ரெண்டு பக்கமும் அத்து மீறல் தொடர்ந்தது.//

அடடே !!!!! (ஆச்சர்யக்குறி.... )

ஈரோடு கதிர் said...

//க.பாலாசி said...
அடடே !!!!! (ஆச்சர்யக்குறி.... )//

கவிதையா தம்பி!!!!

ஈரோடு கதிர் said...

இராகவன் எங்கே... முடிவெட்டிக்க போயிட்டாரா?

ஈரோடு கதிர் said...

மீ த 50...... இஃகிஃகி

பிரபாகர் said...

ஆச்சர்யக்குறின்னாலே கவிதையா!

பிரபாகர்...

ஈரோடு கதிர் said...

//செ.சரவணக்குமார் said...
கம்பெனி ரகசியத்த எல்லாம் ஏன் பாஸ் வெளியில சொல்லிக்கிட்டு?//

அண்ணே... சரவணக்குமாரும் நம்ம சாதிதான் போல்...

பாருங்க பளபளன்னு....

வாருங்கள் மு.இ.ம. சங்கத்திற்கு..

ஈரோடு கதிர் said...

//பிரபாகர் said...
ஆச்சர்யக்குறின்னாலே கவிதையா!//

பிரபான்னாவே ஆச்சரியம்தானே, அந்த கடைசி பாராவுல சொன்ன யூத்து நீங்க தானே!!!!

க.பாலாசி said...

//மொட்டப் பாறையில பயிர் விளைஞ்சாலும் மயிர் விளையாதுன்னு சொல்லிட்டா தாங்கற சக்தி எனக்கில்லை.//

அட சாமீ........இதுதான் சிச்சுவேசன் பழமொழிங்கறதா...............

க.பாலாசி said...

//ஓரக்கண்ணால பார்த்தேன். சீப்பால ஒரு கையில வாரிய படி ரெண்டு இஞ்சு தள்ளி வெறும் கத்திரிய வெட்டிக்கிட்டிருந்தாரு.//

ஏதுமில்லாத கடையில எதுக்குடா டீ ஆத்துறன்னு கேட்கவேண்டியதுதானே.....

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
அண்ணே... சரவணக்குமாரும் நம்ம சாதிதான் போல்...//

க்க்க்கும்.. கூட்டு சேக்குறீங்களாக்கும்.... நமதுக்கு அவரு எவ்வளவோ பரவாயில்ல.... நம்ம கிரவுண்டுதான் நாடறிஞ்சதாச்சே....

க.பாலாசி said...

//இதுக்கும் மேல என்னதான் செய்யன்னு ஒரு பார்வை பார்த்தாரு.//

அந்தாளு ரொம்ம்ம்ம்ப நல்லவரா இருப்பாரு போலருக்கு... அவ்வ்வ்வ்வ்.............

க.பாலாசி said...

//ஏக்கமா, பின்னாடி ‘ப’ எடுக்கலையேன்னு கேட்டேன். //

அட பார்றா.... என்னா வில்லத்தனம்... அந்த ஜீவன என்னா பாடுபடுத்தியிருக்கீங்க...

settaikkaran said...

இதைப் பற்றிக் கூட இவ்வளவு சரளமாக, சரவெடிப் பதிவு எழுத முடியுமா? :-) பின்னறீங்க ஐயா!

vasu balaji said...

அட பாவிங்களா கும்மி ஓடுதா இங்க.

க.பாலாசி said...

//இதோ! இப்போ இருக்கிற முடி வளர்ந்துடிச்சி. காத்தில பறந்து மூஞ்சில அடிக்குது//

க்க்க்க்கும்... இதெல்லாம் கேட்கனும்னு எழுதியிருக்கு பாருங்க... நான் எங்கபோயி முட்டிக்கறது.....

க.பாலாசி said...

//ஒருத்தர பார்த்து முப்பத்தஞ்சு வயசுலயே இப்புடி, இன்னும் என் வயசுல...//

ஹா...ஹா.. யாரச்சொல்லுறீங்கன்னு தெரியுது.... அந்தாளும் வலிக்காதமாதிரியே எவ்வளவு நேரம் கமெண்ட்ஸ் போடுவாருன்னு பாப்போம்.....

சத்ரியன் said...

//கிளாசுல இருந்த சுகுணாவுக்கு இருந்த பூனை முடி கூட மீசை இல்லைன்னு கிண்டல் பண்ணப்ப..//

இருந்தாலும் இவ்வளவு...இதுவா சொல்லியிருக்கக் கூடாதுதான்.

ஐ அண்டர்ஸ்டுட்டு யுவரு ஃபீலிங்கி.!

சத்ரியன் said...

// ... வரட்டு வரட்டுன்னு இல்லாத மீசையும் தாடியையும் எரிய எரிய ஷேவ் பண்ணேனே எதுக்கு?..//

அதான் சுகுணாவுக்கு இருக்குதுன்னீங்களே, அந்தளவுக்காவது வளரட்டுமேன்னுதானே..?

சத்ரியன் said...

//கிச்சு கிச்சுன்னு கத்தரி சத்தத்தில அஞ்சாவது நிமிஷம் கண்ணு சொக்காத மனுசன் உண்டுமாய்யா?..//

இதுக்கு நான் ஒத்துக்கறேன்.

சத்ரியன் said...

//நேந்திரங்கா சிப்சு சைசில பின்மண்டையில ஆரம்பிச்சி சேப்பாக்கம் ஸ்டேடியம் மாதிரி வளர்ந்துச்சி. அட முடியில்லைங்க! சொட்டை. //

எப்பா சாமி, என்னால இதுக்கு மேல சிரிக்க முடியலீங்க.

சத்ரியன் said...

//முன் மண்டையில இருந்து அப்ரோச் ரோடு மாதிரி ரெண்டு பக்கமும் அத்து மீறல் தொடர்ந்தது. //

அந்த காலக்கட்டத்துல பொதுப்பணித்துறை அமைச்சர் யாருங்க?

க.பாலாசி said...

//அஞ்சு மடங்கு டிப்ஸ் குடுக்கறேன்னு ஆறுதலா சொல்றா மாதிரி இருக்கும்.//

அந்தளவுக்கு டிப்ஸ் கொடுக்கலன்னா அவிங்க பாக்குற பார்வையே வித்யாசமால்ல இருக்கும்.....

சத்ரியன் said...

//முடிவெட்டன்னு போனேன்.//

உங்க மனசாட்சி ஒன்னுமேவா சொல்லல..?

இதுக்குமேல நான் என்னத்தச் சொல்ல..?

சத்ரியன் said...

//ஷேவிங் பண்ற டர்க்கி டவல காலருக்கு பின்னாடி சொருவினதும் கண்ணு தளும்பிருச்சி. ..//

என் எதிரிக்கி கூட இப்பிடி ஒரு நெலம வரக்கூடாது.. ஆண்டவா!

சத்ரியன் said...

//அதையும் விழுங்கிகிட்டு ஷார்ட்டா வெட்டுங்கன்னேன்.//

இதக்கேட்ட பின்னாடியும் அவன் உசுரோட இருந்திருக்கானே... அவன் கெட்டிக்காரன்.

சத்ரியன் said...

//ஏக்கமா, பின்னாடி ‘ப’ எடுக்கலையேன்னு கேட்டேன். இந்த வாட்டி குபுக்குன்னு சிரிச்சிட்டு பரிதாபமா அங்க முடியில்லைங்களேன்னாரு. //

இதத்தான் எங்கூருல, வாயக் குடுத்து, எதையோ புண்ணாக்கிக்கிறது -ன்னு சொல்லுவாக.

சத்ரியன் said...

//பின்பக்கமா ஒரு கை கண்ணாடிய வாகா புடிச்சி திருப்தியான்னு ஏன் கேக்கணும்? அதயும் விட, இறங்கினதும் சீப்ப நீட்டினா என்னா நக்கலு அது? //

அந்த சொரண முடி வெட்டிக்க போனப்பவே இருந்திருக்கனும்..!

சத்ரியன் said...

//ஓரக்கண்ணால பார்த்தேன். ஒரு கைப்பிடி தேராது. ஆனாலும் ஒரு பேச்சு பேசாம அம்பது ரூபா கொடுத்துட்டு டிப்ஸா அஞ்சு ரூபா கொடுத்தேன். //

டிப்ஸூ எதுக்கு ? வேரோட புடுங்காம விட்டானே. அதுக்கா?

சத்ரியன் said...

//மொட்டப் பாறையில பயிர் விளைஞ்சாலும் மயிர் விளையாதுன்னு சொல்லிட்டா தாங்கற சக்தி எனக்கில்லை...//

இதுக்கும் மேல படிச்சி சிரிக்க என் ஒடம்புல தெம்ப்பு இல்ல .

( நான்:- ஏண்டி.. வயிறு வலிக்குது. ஒரு சுக்கு காப்பி வெச்சி குடுடி.

அவள்:- வயித்து வலிக்கு சுக்கு காப்பியா? இந்த கூரு கெட்ட மனுசன் தன்னந்தனியா சிரிச்சப்பவே நெனைச்சேன். என்னமோ ஆயிடுச்சின்னு.)

கலகலப்ரியா said...

அடப்பாவமே.. எனக்கு ரொம்ப அழுவாச்சியாதான் வருது சார் இத படிச்சா... ஒரே பீலிங்கு... அவ்வ்வ்..

கதிர் பின்னூட்டம் ஹை லைட்... (அட நீங்க வேற அவங்க படத்த சொன்னேன்..)..

க.பாலாசி said...

//கலகலப்ரியா said...
கதிர் பின்னூட்டம் ஹை லைட்... (அட நீங்க வேற அவங்க படத்த சொன்னேன்..)..//

நீங்க அந்த ‘ஹை’லைட்டதானே சொல்றீங்க....

கலகலப்ரியா said...

பாலாசி.. இதில டவுட்டு வேறயா.. ம்க்கும்..

ரிஷபன் said...

இப்போ இருக்கிற முடி வளர்ந்துடிச்சி. காத்தில பறந்து மூஞ்சில அடிக்குது. ஆனாலும் இந்த வாட்டி போனா நின்ன வாக்குலயே ரெண்டு கிச் கிச் பண்ணி முடிஞ்சி போச்சி போங்கன்னு சொல்லிருவாங்களோன்னு அந்த பீலிங் தாங்க முடியல//
ஹா ஹா.. தாங்க முடியல..

கா.பழனியப்பன் said...

உங்க அளவுக்கு இல்லேனாலும்.என்னால முடிந்த அளவுக்கு
நிங்க சொன்ன விசயத்தை கதை போல சொல்லி இருக்கேங்க.முடிந்தால் படித்து பார்க்கவும்

அகல்விளக்கு said...

முடியல சார்....

இனிமே முடி வெட்டப்போனா நிச்சயம் நீங்க கண்ணாடில தெரிவீங்க...

:)

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
பாலாசி.. இதில டவுட்டு வேறயா.. ம்க்கும்.//

ஆத்தாடி... போங்க போங்க ரொம்ப நல்லாத் தூக்கம் வரும். தூக்கத்துல லைட்டு எரியும்

க ரா said...

பல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடலாம். அதுக்கெல்லாம் நம்ம வருத்தப்படலாமா சார். :-)

க.பாலாசி said...

//அகல்விளக்கு said...
முடியல சார்....
இனிமே முடி வெட்டப்போனா நிச்சயம் நீங்க கண்ணாடில தெரிவீங்க...
:)//

ஏன் ராசா... உங்களுக்கும் சேம் பிளட்டா...!!!!!!!!!!

க.பாலாசி said...

//இராமசாமி கண்ணண் said...
பல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடலாம். அதுக்கெல்லாம் நம்ம வருத்தப்படலாமா சார். :-)//

அடடா... இதுதான் சார்...டைமிங் கமெண்ட்.....சூப்பர்......

Chitra said...

ரெண்டு நிமிசம்தான் கர்ர்ர்ர்ர்ர்ர்ரக்சிக் கர்ர்ர்ர்ர்ர்ரக்சிக்குன்னு கேட்டுச்சி. அப்புறம் வெறும் சிக் சிக்னுதான் சத்தம். ஓரக்கண்ணால பார்த்தேன். சீப்பால ஒரு கையில வாரிய படி ரெண்டு இஞ்சு தள்ளி வெறும் கத்திரிய வெட்டிக்கிட்டிருந்தாரு.


..... இங்கே சிரிக்க ஆரம்பிச்சது..... கலக்கல்.....!!! உங்கள் நகைச்சுவை நடையில் இடுகை பட்டையை கிளப்புது.

நசரேயன் said...

சிங்கத்தையே சாய்ச்சிபுட்டானே

நாடோடி இலக்கியன் said...

சுவாரசியமான இடுகை.

சிரித்துக்கொண்டே இருக்கையில் அனிச்சையாய் தலையை தடவியது கை, பின்னே இங்கேயும் வந்திருச்சுல்ல...

Unknown said...

// ஒருத்தர பார்த்து முப்பத்தஞ்சு வயசுலயே இப்புடி, இன்னும் என் வயசுல...இஃகிக்கீன்னு சிரிச்சுக்குவேன். //

இவர்தான் இந்த இடுகைக்கு முதல் பின்னூட்டம் போட்டிருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்.

//இன்னொருத்தரு அட ஏங்க பாலாண்ணே! நானெல்லாம் இந்த கொடுமைக்கு அப்பாயின்மெண்ட் வெச்சி, போய்ட்டு அஞ்சு மடங்கு டிப்ஸ் குடுக்கறேன்னு ஆறுதலா சொல்றா மாதிரி இருக்கும். நெம்ப நன்றி மாப்பூஸ்//

இவரு நேத்துத்தான் தான் யூத்து என்று இடுகை போட்டிருப்பதாகக் கேள்வி

Unknown said...

//மவனே... பசியில மட்டும் டயர்டு ஆகுங்க டயர்ர்ர்ர்டு..

இடுகை எழுதி மட்டும் டயர்ர்ர்ர்டு ஆகா மாட்டீங்களே!!!!//

அவருக்கிட்ட இருக்கிற மேட்டருக்கு அடுத்த ஜென்மம் வரைக்கும் இடுகை போட்டுக்கிட்டேஏஏஏஏஏ இருப்பார்..

செ.சரவணக்குமார் said...

//அண்ணே... சரவணக்குமாரும் நம்ம சாதிதான் போல்...//

அண்ணே, அந்த அளவுக்கு நாம இன்னும் வர்லீங்க. கூடிய சீக்கிரம் வந்துரும்னு நெனைக்கிறேன். அதுக்கப்புறமா மு.இ.ம சங்கத்துல ஆயுட்கால உறுப்பினரா ஜாய்ன் பண்ணிக்கிறேன்.

சிநேகிதன் அக்பர் said...

போட்டோவில பாக்கையில தலையில் கத்தையாக முடியிருக்குமென்று நினைச்சினன்.

பழமைபேசி said...

பாலாண்ணே, வணக்கம்! சந்தி சிரிச்சதக்கப்புறம் என்னத்த சொல்றது? இஃகிஃகி!!

ஈரோடு கதிர் said...

//முகிலன் said...

இவர்தான் இந்த இடுகைக்கு முதல் பின்னூட்டம் போட்டிருக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்.//

முதல் பின்னூட்டம் மட்டுமா, மீதி 9 பின்னூட்டத்த கணக்குல எடுத்துக்க மாட்டீங்ளோ?

ஈரோடு கதிர் said...

//முகிலன் said...
அவருக்கிட்ட இருக்கிற மேட்டருக்கு அடுத்த ஜென்மம் வரைக்கும் இடுகை போட்டுக்கிட்டேஏஏஏஏஏ இருப்பார்..//


அய்ய்ய்ய்ய்ய்ய்யோ பிரவு.........

ஈரோடு கதிர் said...

// நாடோடி இலக்கியன் said...
அனிச்சையாய் தலையை தடவியது கை, //

பாரி.. ரொம்பத் தடவி “சோ” தலை மாதிரி ஆகிடப்போவது..

..பீ கேர்ஃபுல்

ஈரோடு கதிர் said...

மீ த 100!!

(க்கும்.. இதுக்குத்தானே முக்கிமுக்கி 3 பின்னூட்டம் ஒத்தியெடுத்துப் போட்டே... போடா போ... காத்தால போய் வேலையப்பாருடா,

மீ த 100ம் பெரிய மீ த 100)

Unknown said...

பாலாண்ணே....இனிக்கு காலைல முடி வெட்ட போனேன்.... கடைய பாத்ததும் சிரிப்பு வந்துச்சு...சிரிப்ப அடக்கிகிட்டு போய் முடி வெட்டுப்பா சொல்ட்டு கண்ணை அப்டி மூடுனா... கொய்யால இந்த இடுகையை தவிர எதுமே நினைப்பு வர மாடேங்குது.....

எனக்கு மட்டும் ஏன் சார் இப்டி....அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் ..

கடைகாரன் கடன்காரன பாக்கற மாதிரியே முறைச்சான் சார்......என்ன தம்பி ஆச்சு..இப்படி சிரிச்சுட்டே இருந்தா முடி இல்லப்பா காது போய்டும் எப்படி வசதி..?? அப்டினான்...அப்பறம் ஒரு வழியா சமாளிச்சு வெட்டிட்டு வந்தேன்...

இன்னிக்கு இத பிரிண்ட் போட்டாச்சும் அவனுக்கு காட்டி...இதுனாலத்தான் சிரிச்சேன்னு சொலிபுடனும்....

Unknown said...

மீ தி 101 நா ???

Mahi_Granny said...

மக்களே இப்போதெல்லாம் இடுகை மட்டுமல்ல ,பின்னுட்டம் படிப்பதுவும் சுகமே

nellai அண்ணாச்சி said...

உங்கள்கட்டுரை படித்து கண் கூசியது (சொட்டை உரை)

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

முடியல சார்... சிரிச்சி சிரிச்சி ....புன்னாயுடிச்சு

Radhakrishnan said...

ஹா ஹா, எனக்கும் வெட்கமாகத்தான் இருக்கிறது. மனதுக்குள் சிரித்துக் கொள்வேன்.

சிவசங்கர். said...

எதிர்காலத்துல என்னோட நெலமை இதுதானோ?

vasu balaji said...

107 x நன்றிகள்:))

Unknown said...

//.. முடிக்கு ஸ்டெப் கட்டிங் வராது தம்பின்னாங்க ..//

அப்பவே அப்படித்தானா..??

//.. ரெண்டு பக்கமும் அத்து மீறல் தொடர்ந்தது. ..//
//.. அஞ்சு நிமிசம், முடிஞ்சிரும்னாரு...//
//.. ஓரக்கண்ணால பார்த்தேன். ஒரு கைப்பிடி தேராது. ..//

:-))))


//.. முப்பத்தஞ்சு வயசுலயே இப்புடி, இன்னும் என் வயசுல...//

அது யாருங்க..??

பிரேமா மகள் said...

`முடி`யல.

ஓலை said...

sirichchu maalala.