Wednesday, April 21, 2010

வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே..




சிறிது நாட்கள் முன்பாக இந்தக் காணொளிக்கான சுட்டி எனக்கு மின்னஞ்சலில் வந்தது. பார்த்துப் பரவசப்பட்டுப் போனேன். நண்பர்களுக்கு பகிர்ந்தேன். அதற்குள் அது நீக்கப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு சுட்டியில் இது கவனத்துக்கு வந்தது. தேடித் தேடி கண்டுபிடித்தும் விட்டேன்.

தமிழுக்கு அமுதென்று பேர். செந்தமிழ்நாடெனும் போதினிலே என்றெல்லாம் சிலாகிக்கப்படும் மொழியின் அற்புதம் கண்டேன். எத்துணை அழகான தமிழில் எவ்வளவு உணர்வுபூர்வமாக கேட்போர் உருகும் வண்ணம் பேசுகிறார் திரு சுகி சிவம். கட்டிப் போடுகிறது தமிழ். உள்ளுணர்வு வரை போய் உலுக்கி எடுக்கிறது. 

என்னதான் காசுக்குப் பேசினாலும் இப்படியும் பேசமுடியுமா? மொழியின் அழகால் விஷம் ஊட்டும் அழகே அழகு. பெயரிலேயே சுகி! சுகித்திருப்பவர் என்றும் ஒரு அர்த்தம் உண்டல்லவா? யாரோ அழைத்து ஈழத்தைச் சுற்றிக்காட்டியிருக்கிறார்கள். முக்கியமாக யாழ்ப்பாணம் போனாராம். அவர்கள் சொல்லச் சொன்னதாகச் சொல்லி வேண்டுகிறார். சொல்லாததையும் சொல்லி வியக்க வைக்கிறார்.

தானே எழுதினாரோ, எழுதிக் கொடுத்ததைப் படித்தாரோ தெரியாது. என்ன ஒரு சிந்தனை? என்ன ஒரு தெளிவு? சுகி சிவம் ஐய்யா! மனிதனுக்கு மறதி வரம்தான். ஆனால் இது மறக்ககூடிய வலியில்லை ஐயா! ஊடகத்தைப் பாருங்கள். அத்தனை உயிர்கள் போனபோது ஒரு செய்தியும் காட்டாத ஊடகம் உருகி உருகி இப்படி ஒரு நிகழ்ச்சியைத் தருகிறது பாருங்கள்.

ஐயா சுகி சிவம் அவர்களே! யாழ்ப்பாணம் போனீர்கள் சரி. சண்டைக் காலத்திலேயே அங்கு ஓரளவு சகஜ நிலை இருந்ததே ஐயா. இப்போதும் அவர்கள் பயப்படுகிறார்கள் என்கிறீர்களே. என்ன ஒரு கொடுமை இது. அவர்கள் பூமி. அவர்களும் ப்ரஜைகள். பயந்து வாழும் அவலம். அப்படியென்றால் என்ன ஒரு ஆட்சி நடக்கிறது அங்கே. 

சண்டை முடிந்த பிறகும் இப்படித்தான் வாழ்கிறார்கள் என்றால் என்ன கொடுமை இது? பழைய கதையைப் பேசக்கூடாதாம். சுகி அய்யா சொல்கிறார். வாஸ்தவம். பேசிவிட முடியுமா? எத்தனை உயிர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் பாருங்கள் சுகிசிவம். முதல்வர் கூட பார்வதி அம்மாள் விடயத்தில் டெசோ, சந்திரகாந்தன் பற்றியெல்லாம் பேசித் தொலைகிறார். சண்டிவியையோ உங்கள் பொன்னான கருத்தையோ அவரே மதிப்பதில்லை.

மன்னன் எவ்வழி! மக்கள் அவ்வழி! ஆல் த மீஜிக் ஸ்டார்ட்.

எப்படி எப்படி சுகி சார். ஓடிப் போனவர்களா? ஒரே ஒரு புலம் பெயர்ந்த தமிழனிடம் பேசி இருக்கிறீரா? விரும்பியா ஓடினார்கள்? இருக்கும் இடம் சொர்க்கமேயானாலும், அவர்கள் மனதில் அவர்கள் மண்ணுக்கான ஏக்கமல்லவா இருக்கிறது? ஒரு புனிதத் தலத்துக்கு போவதற்காக தவமல்லவா இருக்கிறார்கள்.

அட போராட்ட காலத்தில் சின்னஞ் சிறுசுகளின் பேட்டி பார்த்தீர்களா?அந்த மண்ணைப் பார்த்தேயிராத பிஞ்சுகள். உணர்வு பூர்வமாக எம்மண்ணுக்குத் திரும்புவோம் என்றபோது சிலிர்த்துப் போயிற்று.

சண்டைக்காலத்தில் ஓடிப்போனவர்களாம். என்ன ஒரு எள்ளல். உங்கள் தெருவில் ஒரு சோடாபாட்டில் உடைத்தால் நடுத்தெருவுக்கு வந்து என்னவென்று கேட்பீர்களா ஐயா? முதலில் கதவடைத்துவிட்டு உள்ளேயல்லவா இருப்போம். 

பாதி வகுப்பில் குண்டு வீச்சு, சந்தேகத்தின் பேரில் கடத்தல், விசாரணையென்ற பேரில் சித்திரவதை, வயது வந்த குழந்தையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ திருமணம் செய்து கொடுப்பது என்ற கட்டாயச் சூழலில் வாழும் நிலை ஏற்பட்டால், ஓடாமல் என்ன ஐயா செய்ய முடியும்?

என்னதான் மூன்று தலைமுறையாக நகரத்தில் பிழைத்தாலும், உங்கள் பூர்வீக கிராமத்தில் அல்லது ஊரில் இருக்கும் நிலமோ, வீடோ உங்களுக்காக உழைத்த, அட வேண்டாம் ஊரென்றிருந்தால் உறவொன்றிருக்குமே வழியின்றி! அதற்கு கொடுத்துவிட்டீர்களா? பூர்வீக கிராமத்தில் நிலம் வீடெல்லாம் இருக்கிறது. விடுமுறைக்கு போய் வருவது என்று ஒரு வழமையே இருக்கிறதே நம்மிடம். 

அதையெல்லாம் கொடுக்க மறுக்கிறார்களாம். யாரிடம் கொடுப்பது? சமூக அமைப்புகளிடம். சமூக அமைப்புக்கு. ஐ.நா. போன்ற அமைப்புக்களிடம் அங்கீகாரம் பெற்ற அமைப்புக்களுக்கு கொடுக்க வேண்டுமாம். அவர்கள் அங்கிருப்பவர்களுக்கு உதவுவார்களாம்.

மருந்து கிடைக்கவில்லை அங்கே என்று வருத்தப் பட்டீர்களே. ட்ட்ட்ட்டச் பண்ணிட்டீங்க சார். உலகெங்குமிருந்து மருந்தும் உணவும் வந்ததே. கொடுக்க விட்டார்களா? யாராவது முன்னெடுத்து கொடுக்கத்தான் செய்தார்களா?

செஞ்சிலுவைச் சங்கத்தையே ஆட்டிப்படைத்ததய்யா. மக்களுக்காக உழைத்த அமைப்புக்களுக்கு முத்திரை குத்தி விரட்டியது. இவர்களிடம் ஒப்படைத்தால் மக்களுக்குப் போகுமாம். நீர் தருகிறீரா உத்திரவாதம்? ஏன் அங்கிருக்கிறவர்கள் போருக்குமுன் எங்கிருந்தார்கள்? ஆகாசத்திலிருந்தா குதித்து விட்டார்கள்? இருந்த இடத்தில் அவர்களை வாழவிட என்ன தடை?

உலகெங்கும், அவர்களின் மீள் குடியமைப்புக்கு கொடையாக, கடனாகவென்று வாங்கிய காசெல்லாம் எங்கே போயிற்று? அருமையாயகச் சொன்னீரைய்யா. அவர்கள் வாழ கோழி, ஆடு, மாடு, வலை எல்லாம் வேண்டுமாம். ஏன் அங்கு படித்தவர்கள் இல்லையா? அவர்களுக்கு வேலைத் தரச் சொல்லுங்களேன். படிக்க பள்ளி கட்டித் தரச் சொல்லுங்களேன். தமிழர் பிள்ளைகளுக்கு கல்வியை இலவசமாக வேண்டாம், சலுகையில் தரச் சொல்லுங்களேன். ஆடு கோழி வளர்த்துதான் தமிழன் வாழ வேண்டுமா?

அஞ்சி அஞ்சி வாழ்கிறார்களாம். அரசோடு ஒத்துப் போக வேண்டுமாம். எப்படி? இப்படி அச்சத்திலேயே வாழவிடு. நாங்கள் கொட்டிக் கொடுக்கிறோம். அவர்களைக் கொல்லாமல் விட்டால் சரியென்றா? 

கடைசியில் சொன்னீர்களே! சீனாக்காரன் அங்கு உறவாடுகிறான். நம் எல்லை குறித்த அவதானிப்பு மிக முக்கியம். அதனால் அரசியல் பேச வேண்டாமென்று. அதனால் அங்கிருக்கும் தமிழர் பலிகடாவாக இருக்கத்தானே வேண்டும். ஆட்டை வளர்த்துத்தானே அடித்து விருந்து வைக்கவேண்டும். இப்படி ஓர் வாழ்க்கைக்காகத்தானே இவ்வளவு போராட்டமும் இல்லையா ஐயா. 

காசு வாங்கியாச்சி. பேசியாச்சி. அந்த நாள் உங்களுக்கு இனிய நாளாகப் போச்சு. நல்லா இருங்கய்யா. உங்களை வளர்த்த தமிழும், உங்கள் வாழ்வாதாரமான ஆன்மீகமும் உங்களை வாழ்த்தும். என்ன எழவு. பாரதி குறித்தெல்லாம் பொங்கி பொங்கி பேசியிருக்கிறீர்களே. உறுத்தாது? பாரதி கண்முன் வந்தால் இந்த பேச்சுக்கப்புறம் தின்னும் சோறு நரகலாயிருக்காது?

ஹி ஹி. ஒரு கேள்வி. இந்த நிகழ்ச்சியை பதிர்வதற்கு கார் வராவிட்டால், காசு தராவிட்டால் போயிருப்பீர்களா? அதென்ன சார் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் சன் டிவியில் மட்டும்தான் பேசவேண்டும் எனச் சத்தியம் வாங்கிக் கொண்டார்களா என்ன? 

 ஐயா அவர்களை அமெரிக்கத் தமிழ் விழாவுக்கு அழைத்திருக்கிறீர்களாமே. இந்தியத் தமிழரோ ஈழத் தமிழரோ அய்யாவோடு ஒரு சந்த்திப்புக்கு வழி செய்து புலம்பெயர் வாழ்வின் வலியைப் புரியச் சொல்லுங்கள். புண்ணியமாய்ப் போகும்.

(பொறுப்பி: ஏதோ எழுத ஒன்றுமில்லாமல் எழுதியதில்லை இது. உலகின் மனிதர்கள் இருக்கும் ஒரு மகோன்னத தேசத்தில் எந்தக் கவலையும் இன்றி சுகித்து வாழும் வழியிருந்தும் தன் மண்ணை, தன் மக்களை நொடியும் மறவாமல் அவர்களுக்காக அழுது, அவர்களுக்காக உழைத்து, அவர்கள் நல் வாழ்வுக்கு தன் சுகத்தை அர்ப்பணித்து, முடிந்தவரை அவர்களுக்கு உதவும் கலகலப்ரியாவுக்கும் அவரைப் போன்ற இதரப் புலம் பெயர்ந்தும் தன் மண்ணை நேசிக்கும் சொந்தங்களுக்கு, இப்படி ஒன்றுமறியாமல் கூலிக்கு மாரடிப்பவர்களின் சார்பில் நான் கோரும் மன்னிப்பு இது)
~~~~~~~~~~

34 comments:

Radhakrishnan said...

ஒரு உண்மையான வரலாற்று இலக்கியம் ஒன்றை படைத்து தாருங்கள் என என்னிடம் ஒரு நண்பர் கேட்டபோது அவரிடத்தில் இருந்த வலி எனக்குள் அதிகமாகவே வலித்தது.

திருகிப் பேசும் மனிதர்கள் இருக்கும் வரை கஷ்டம் தான்.

ஈரோடு கதிர் said...

கொடுத்த காசுக்கு ஓவராவே கூவியிருக்காருங்க

ஈரோடு கதிர் said...

இந்த மனுசன அமெரிக்காவுல யாரோ கூப்பிட்டு பேசச் சொல்லப்போறங்களாம்...

அமெரிக்கத் தமிழர்களே கொஞ்சம் கருணை காட்டுங்க.. உள்ளே விடமா

அகல்விளக்கு said...

Evvalau kottinaalum thiruntha maattargal....

மணிஜி said...

சார்...வெர்சடைல் சார்...

இராகவன் நைஜிரியா said...

தலைப்பே எல்லாம் சொல்லிவிட்டதய்யா...

க ரா said...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால். மனசு வலிக்குதுய்யா இந்ந மாதிரி நிகழ்வுகள கேள்விபடறப்போ.

settaikkaran said...

உளறல்மன்னர்கள் பட்டியலில் சுகி சிவமும் சேர்ந்துவிட்டாரா? வாழ்த்துகள் அவருக்கு....!

//மன்னன் எவ்வழி! மக்கள் அவ்வழி! ஆல் த மீஜிக் ஸ்டார்ட்.//

ஐயா, இதைப் படித்துவிட்டு மன்னரைப் போலவே மக்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று எண்ணிவிடாமல் இருந்தால் சரிதான்.

நசரேயன் said...

படத்தை வீட்டிலே போய் பார்க்கிறேன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்ம்.. மனதால் பேசாமல் வாயால் மட்டும் பேசினால் இப்படித் தான் இருக்கும்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

என்னத்த சொல்ல

ராஜ நடராஜன் said...

வந்து விட்டேன் சொல்லி விட்டு தொடர்கிறேன். உணர்வு சார்ந்த இடுகையென்பதால் நிதானித்து வாசிக்கிறேன்.உங்கள் முந்தைய பதிவின் சாடிஸ்ட் இதற்கும் ஒரு தலைப்பு போட்ட மாதிரி நினைவு.

vasu balaji said...

வாங்க வாங்க சந்திரன். NRIக்குதான் மைனஸ் போடுவீங்கன்னு நினைச்சேன். எனக்கும் போட்டதுக்கு நன்றி.

நேசமித்ரன். said...

ஒரு மகோன்னத தேசத்தில் எந்தக் கவலையும் இன்றி சுகித்து வாழும் வழியிருந்தும் தன் மண்ணை, தன் மக்களை நொடியும் மறவாமல் அவர்களுக்காக அழுது, அவர்களுக்காக உழைத்து, அவர்கள் நல் வாழ்வுக்கு தன் சுகத்தை அர்ப்பணித்து, முடிந்தவரை அவர்களுக்கு உதவும் கலகலப்ரியாவுக்கும் அவரைப் போன்ற இதரப் புலம் பெயர்ந்தும் தன் மண்ணை நேசிக்கும் சொந்தங்களுக்கு, இப்படி ஒன்றுமறியாமல் கூலிக்கு மாரடிப்பவர்களின் சார்பில் நான் கோரும் மன்னிப்பு இது//

தீப் பொறி ஆறுமுகம் ,பெரியார்தாசன் அலைஸ் அப்துல்லாஹ்,சுகி சிவம்

என்ன பெரிய வித்தியாசம் ?
கருப்பு .. சிவப்பு இரண்டையும் விட கருப்பு (வெள்ளயும் சேர்ந்தது பொறகு)சிவப்புக் காரர் மேல்

புனைகதைகளை பேசுபவர் எம்.எஸ் உதய மூர்த்தியையும் கிருபானந்த வாரியாரையும் கலந்து ஒப்பிப்பவர்

என்ன எதிர் பார்க்க முடியும்

dheva said...

ஏதாவது கோவில் திருவிழாவிற்கு கூப்பிட்டு இலவசமாக பேசியிருக்கிறாரா....இந்த சுகி.சிவம்....! காசுதான் அவரது குறிகோள் சார்....! உங்களின் தெளிவான கருத்துகளுக்கு வாழ்த்துக்கள்!

Unknown said...

பாதிக்கு மேல கேக்க முடியல..

எட்வின் said...

அடக்கொடுமையே... இவரும் இப்பிடி ஆயிட்டாரா! இப்பிடி பேசச்சொல்லி எழுதிக்குடுத்திருப்பாய்ங்களோ!

நாகா said...

கமெண்ட் போடாமப் போக முடியலீங்கய்யா.. இத்தன வருஷமும் இந்த மொழி மேல வெறியா இருந்துச்சு, இப்போ வெக்கமா இருக்கு. காட்டிக் கொடுக்கறவனுங்களும் கால நக்கறவனுங்களுக்கு மட்டும்தான் இது தாய் மொழி :(

துபாய் ராஜா said...

பணம் மட்டும் வாழ்க்கையா இந்த பாழாய் போன மனிதருக்கு.... :((

கலகலப்ரியா said...

வீடியோ பார்க்க நேரம் இல்ல... அப்புறம் பார்க்கறேன்... ம்ம்... அது ஏன் சார் என்னோட பேரு... நான் எதுவுமே செய்யலயே... *sigh*...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

"வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே.."
சரியா சொன்னீங்க .

தாராபுரத்தான் said...

சகிக்க முடியவில்லை..

ரோஸ்விக் said...

தமிழினம் என்பதை விட்டுத் தள்ளுங்கள். இங்கே பல தமிழர்களுக்கே தமிழினம் என்றால் இழிவாக இருக்கிறது...

மனிதர்கள் என்ற கரிசனைகூட பலருக்கு இல்லை.

இவர் பெயர் சுகி. சவம் என்று இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

பிரபாகர் said...

இடுகையைப் படித்துவிட்டு இரவு அந்த காணொளியைப்பார்க்கவில்லை, தூக்கமில்லா மற்றுமொர் இரவை எதிர்நோக்க உடல் ஒத்துழைக்காத்தால்...

பணத்திற்காக எதையும் செய்யும் கீழ்த்தரமான நாய்கள்(நாயினமே என்னை மன்னியுங்கள், நீங்களெல்லாம் ரொம்ப மேன்பட்டவர்கள்....) அல்ல அல்ல... இந்தப் பாதகர்கள் சமூகக் களைகள்...

பிரபாகர்...

Paleo God said...

புல்லரிக்கிறது.

அதுசரி, தமிழக குடும்ப நாசினியாக செயல்படும், விஷ கதைகளால் பகுத்தறிவு பரப்பும் ஊடகத்திலிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

தீபன் said...

//இருக்கும் இடம் சொர்க்கமேயானாலும், அவர்கள் மனதில் அவர்கள் மண்ணுக்கான ஏக்கமல்லவா இருக்கிறது//

உண்மை... உண்மை... விழி நீர் வழி தேடும் அந்நாள் நினைவுகளை இரைமீட்க...

தம் வரலாற்றையே அறியாத ஈணப்பிறவிகள் இவர்கள் மனிதத்தை கொன்று, மண் தோண்டி புதைத்துவிட்டனரே...

Jackiesekar said...

தேடிப்புடிச்சி போட்டதற்க்கு மிக்க நன்றி...

க.பாலாசி said...

காச கொடுத்திட்டு சாணிய கரைச்சு தலையில ஊத்தினாலும் நக்கி பாக்குற பயலுங்க இந்த பன்னாட....

நல்லவேள என்னால அந்த பேச்ச கேட்க முடியல...

சத்ரியன் said...

அண்ணே,

பின்னூட்டம் போட நெனைச்சாலே, தமிழ் நாட்டுல பேசுற எல்லா கெட்ட வார்த்தைகளும் வந்து என் வெரலுல வரிசை கட்டி நிக்குது.

எனக்கு நல்ல வார்த்தை எதுனா சொல்லிக்குடுங்க. அப்புறமா இவனுகள திட்டறேன்.

கலகலப்ரியா said...

ஓதினது சாத்தான் ஆனாலும்... சில பல விடயங்களில் உண்மை இருக்கத்தான் செய்கிறது...

மறு பக்கம் ஏனோ அவரின் கழுத்திலுருக்கும் செயின் என் மண்டையில் உறுத்திக் கொண்டே இருக்கிறது...!

பார்க்கலாம்..

vasu balaji said...

@@நன்றி வெ.இரா
@@நன்றிகதிர்
@@நன்றி கார்த்தி
@@நன்றி மணிஜி
@@நன்றிண்ணே
@@நன்றி சேட்டை
@@நன்றி நசரேயன்
@@நன்றி செந்தில்
@@நன்றி டிவிஆர்
@@நன்றி நடராஜன்
@@நன்றிங்க நேசமித்திரன்
@@நன்றிங்க தேவா
@@நன்றி முகிலன்
@@நன்றி எட்வின்
@@நன்றி நாகா
@@நன்றி ராஜா
@@நன்றி பிரியா. எனக்குத் தெரியுமே *sigh*:)
@@நன்றி நண்டு@
@@நன்றி ரோஸ்விக்
@@நன்றிங்கண்ணே
@@நன்றி பிரவு
@@நன்றி ஷங்கர்
@@நன்றி தீபன்
@@வாங்க ஜாக்கி. நன்றி
@@நன்றி பாலாசி
@@நன்றி கண்ணா
@@நன்றிம்மா:)

eraeravi said...

ஆங்கிலம் கலக்காமல் பேசத் தெரியாத நபருக்கு சொல்லின் செல்வர் பட்டம் கொடுத்தது யாரோ?

பார்ப்பன அடிவருடி சுகிசிவம் சமஸ்கிருதத்திற்கு
கொடி பிடிக்கிறார் .கோயிலில் தமிழ் கூடாதாம்
சமஸ்கிருதம் தான் வேண்டுமாம் .மதுரையில் நடந்த நூல்கள்
வெளியீட்டுவிழாவில் பேசினார் ..விந்து, மாதவிலக்கு என
ஆபாச விளக்கம் ..பேசியப் பேச்சில் மிக அதிகமான
ஆங்கில சொற்கள் .ஆங்கிலம் கலக்காமல்
பேசத் தெரியாத நபருக்கு சொல்லின் செல்வர் பட்டம்
கொடுத்தது யாரோ?

தமிழ்நதி said...

"படிக்க பள்ளி கட்டித் தரச் சொல்லுங்களேன். தமிழர் பிள்ளைகளுக்கு கல்வியை இலவசமாக வேண்டாம், சலுகையில் தரச் சொல்லுங்களேன். ஆடு கோழி வளர்த்துதான் தமிழன் வாழ வேண்டுமா?"

நல்லாக் கேட்டிருக்கீங்க பாமரன். ஈழச்சிக்கல் எழ முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்தது, தமிழர்கள் கல்வியில் மேம்பட்டிருந்ததுதான். அதன் காரணமாகத்தானே தரப்படுத்தல் வந்தது... 'நான் கொஞ்சூண்டு மார்க் எடுத்தாப் போதும். நீ நெறய மார்க் வாங்கணும். அப்போத்தான் பல்கலைக்கழகம் போலாம்'என்று சிங்களவர்கள் இதயமேயில்லாமல் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இதெல்லாம் சுகிசிவம் ஐயாவுக்குத் தெரியாதா? எங்கள் பிள்ளைகள் கல்வியில் உயர்ந்தவர்களாக வேண்டும். ஆடு,மாடு, கோழி வளர்ப்பதொன்றும் கேவலமானதல்ல. எந்தத் தொழிலும் இழிந்ததல்ல. ஆனால், படிப்பறிவும் முக்கியம். அந்த அடிப்படை இவருக்கேன் புரியவில்லை.

உங்களுக்கு நான் சொல்வதா? நன்றாக எழுதுகிறீர்கள்... எள்ளல்நடையில் பின்னுகிறீர்கள். நன்றி.

vasan said...

க‌டுமையான வார்த்தைக‌ளை
இங்கே பேசினால், இல‌ங்கை
மேலும் சின‌ம் கொண்டு, தாக்குத‌லை
த‌மிழ‌ர்க‌ள் மீது தீவிர‌மாக்கும் என‌
ந‌ம் முத‌ல்வ‌ர் சென்ற‌ ஏப்ர‌லில்
சொன்ன‌தை, இவர் இந்த‌ ஏப்ர‌லில்
திரும்ப‌ச் சொல்லுகிறார் இல‌ங்கை
போய்விட்டு வ‌ந்து.எத்த‌னை த‌ட‌வ‌தான்
`முட்டாளாவ‌து`.