Sunday, April 18, 2010

பத்திரிகாவிரதை...

தலைவர் பதிவிரதாத்தனத்தை சுட்டி யாரை வேண்டுமானாலும் நக்கலடிக்கலாம். கால் நக்கும் ஊடகங்கள் காட்டும் பதிவிரதாத்தனத்தை பாராட்டாமல் இருக்கவே முடியாது.

இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. மீண்டும் ஒருமுறை பார்வதி அம்மாளை முன்வைத்து கல்லாக்கட்ட தொடங்கிவிட்டன கட்சிகள். போராட்டங்கள், பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் என்று தொடங்கி விட்டார்கள். கோமாளி கூட குரல் எடுத்து அலறிவிட்டான். பதில் சொல்ல வேண்டியவர்களோ வாயே திறக்கவில்லை.

யார் வீட்டு படுக்கையறையிலோ புகுந்து நம் வீட்டு ஹாலில் சல்லாபக் காட்சியைக் கட்டவிழ்க்கும் ஊடகமோ, பாலியல் குற்றங்கள் எங்கே எப்படி நடைபெறுகின்றன என்று விலாவரியாகச் சொல்லிக் கொடுக்கும் ஊடகமோ, இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்பதைக் கொச்சைப் படுத்தி நீலப்படம் விற்கும் நியாயவாதிகளோ சசி தரூரைக் கவிழ்ப்பதிலும், சாமியார் சல்லாபக் கணக்கிலும் மும்முரமாகி விட்டார்கள்.

அய்யகோ! என்னை மரியாதையின்றி கருணாநிதி என்று சொல்லிவிட்டார் என்று யாரும் கேட்காவிட்டாலும் தானே கேள்வி கேட்டு பதில் சொல்பவர் ஐ.பி.எல். மேட்ச் குத்தாட்டம் ரசிப்பதில் வாயடைந்து விட்டார்.

தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்று அந்தர் பல்டியடித்தவர் ஒன்றும் கேட்டதாகக் காணோம்.

இரண்டு கல் விழுந்தவுடன் ’அய்யோ! அடிக்கறா! காப்பாத்துங்கோ’ என்று நீதிபதியின் பின் ஒளிந்த ஜந்து உளறிக் கொட்டியதை கட்டம் கட்டிப் போட்டு பெருமைப் படுத்தியாகிவிட்டது.

மிசா காலத்தில் எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் எனக் கதறிய ஊடகங்கள் இப்போது எதற்கு அடிமைப்பட்டுப் போயின? தேடித் தேடி அமைதிப் படையின் அத்துமீறலையும், ஃபோஃபார்ஸ் ஊழலையும் பத்தி பத்தியாய் விற்று இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்று மார்தட்டிக் கொண்ட பத்திரிகைகளுக்கு ஏன் சம்பந்தப் பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு வெளியிடத் தோன்றவில்லை.

அது அவர்கள் தார்மீகக் கடமை என்பதை விட அவர்கள் போராடிய உரிமையல்லவா? சிண்டு முடிந்து பேட்டி எடுத்து கல்லாக் கட்டுவதுதான் பத்திரிகை தருமமா? அரசு தடை விதித்தால், அடக்குமுறை எனக் கொதித்துப் போகும் ஊடகங்கள், அத்தனை பேரும் எந்த அடிப்படையில் செய்தியை மறைக்கிறார்கள்?

ஊடகங்களின் எஜமானர்கள் மக்களல்லவா? செய்திகளைத் திரட்டிக் கொடுப்பது மட்டுமே அவர்கள் வேலை. அதற்காக பொறுப்பற்ற முறையில் அனைத்தையும் சொல்லியாக வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு நாட்டின், ஒரு மாநிலத்தின், ஒரு ஊரின் அல்லது ஒரு அப்பாவிக் குடிமகனின் பாதுகாப்புக்கு ஊறு ஏற்படும் செய்திகளைத் தவிர மற்ற எந்தச் செய்தியையும் மறைப்பதற்கோ, திரிப்பதற்கோ பத்திரிகைகளோ ஊடகங்களோ யார்?

மக்களின் கவனத்தைச் சிதறடிக்கவும், சிற்றின்பத்தில் மூழ்கடிக்கவும், விளம்பர கல்லாக் கட்டலும் தாண்டி நம்மை முன்னிறுத்தி, கவர் கலாச்சாரம் வரை போய்விட்டதாக ‘வடை போச்சே’ ஊடகங்களின் மூலமாவது தெரியவருகிறது.

நாமும் யாருக்கு என்ன நடந்தால் என்ன?  எவனாவது எதையாவது கொடுக்கிறானா? அது குறித்த தகவல் வந்திருக்கிறதா? எந்த ஊர் தேர்தலில் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது குறித்தே படித்துப் பழகிவிட்டோம்.

ஒரு காலத்தில் கட்சியின் கொள்கைகளைச் சொல்ல கட்சிப் பத்திரிகைகள் நடத்த வேண்டிய அவசியம் இருந்தது. இப்போதோ ஆளும் கட்சியின் பொது ஜனத் தொடர்பாளர்களாகவே அனைத்து ஊடகங்களும் மாறியதோடல்லாமல் நம்மையும் மூளைச் சலவை செய்யும்  வேலையில் போட்டி போடுகின்றன.

நான் கொடுக்கிற காசுக்கு நன்றாக மலமிளக்கும் பத்திரிகையைத் தேர்வு செய்வது நானாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய, மனச்சிக்கலும் அதனால் மலச்சிக்கலுக்கும் ஆளாகும் துர்பாக்கியம் தமிழனுக்கு ஏன்?

நேற்றைய பேப்பரை காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறானே அண்டை மானிலத்தவன், அவன் பத்திரிகை இப்படியா ஜால்ரா அடிக்கிறது? நித்தியானந்தர் வீடியோ மீண்டும் ஒளிபரப்பும் நேரம் என டிக்கர் ஓட்டிய ஊடகம், இந்த விடயத்தை எத்தனை முறை நினைவு படுத்தியது?

நமக்கான ஆட்சியைத் தேர்ந்தெடுப்பதில் எத்தனை அடிப்படை உரிமை இருக்கிறதோ நமக்குத் தேவையான செய்தியை தேர்ந்தெடுப்பதிலும் அதே உரிமை நமக்கு வேண்டாமா?

யேய்! நீ கேளேன். நீ கேளேன் மாதிரியாவது தெரிந்தவர் தெரியாதவர் அனைவரிடமும், ஒரு நாள் பத்திரிகை வாங்காமல் இருங்களேன் என்று போராடிப் பார்த்தால் என்ன? கவரையும், விளம்பரத்தையும் இன்ன பிற கிளுகிளுப்பையும் நம்பி ஊடகம் யாருக்கென்று நடத்த முடியும், நாம் புறக்கணித்தால்?

(டிஸ்கி: ஈயத்தப் பார்த்து இளிச்சதாம் பித்தளைன்னு எங்கள சொல்ல வந்துட்டியா வானம்பாடி! நித்தியானந்தனையும், சாருவையும் சாடி எத்தனை பதிவு வந்தது? பார்வதி அம்மாளுக்கு நடந்த கொடுமைக்கு எத்தனை பேரு இடுகை போட்டீங்கன்னு துப்புங்க எசமான் துப்புங்க)

31 comments:

மணிஜி said...

போகும் இடத்திலெல்லாம் வேட்டியை தூக்கி விட்டு,பின் அவஸ்தை.அதில் இதுக்கு ஏதுங்க நேரம்? பத்தினி,பதிவிரதை எல்லாம் அடுத்தவங்களுக்குத்தான்...

Ramesh said...

ஐயோ....
பத்திராவத்தனத்தை என்னபண்ணுறது....பொறுப்பற்ற முறையில் இயங்கும் அனைத்து ஊடகங்களும் தமக்குத்தமக்குத் தாமே கேட்டுக்கொள்ளவேண்டிய விடயம்.
நச் எண்டு கேட்டியலே.. அய்யா எழுதுங்க இன்னுமின்னும்

பிரபாகர் said...

அய்யா!

ரொம்ப அருமையா சொல்லியிருக்கிறீங்க. பத்திரிக்கை வாங்கறத நிப்பாட்டித்தான் பார்ப்போமே! அப்பவாச்சும் அந்த நாயிங்களுக்கு புத்தி வருதா பார்ப்போம்...

பிரபாகர்...

Paleo God said...

//மிசா காலத்தில் எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் எனக் கதறிய ஊடகங்கள் இப்போது எதற்கு அடிமைப்பட்டுப் போயின? தேடித் தேடி அமைதிப் படையின் அத்துமீறலையும், ஃபோஃபார்ஸ் ஊழலையும் பத்தி பத்தியாய் விற்று இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்று மார்தட்டிக் கொண்ட பத்திரிகைகளுக்கு ஏன் சம்பந்தப் பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு வெளியிடத் தோன்றவில்லை.//

சாட்டை அடி.

ஜோதிஜி said...

தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாலும் உள்ளேயே இருந்தாலும் என்றுமே தமிழன் என்பவன் வேடிக்கையாளன் மட்டுமே.

settaikkaran said...

எதுவும் சரியில்லை; எவனும் சரியில்லை! என்ன தான் நடக்கப்போகுதோ?? கொதிப்பைப் பகிர்ந்ததற்கு நன்றி!!

புலவன் புலிகேசி said...

என்னத்த சொல்ல இவனுங்கள....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கேள்விகளுக்கு பதிலில்லை பாலாண்ணே..

"இந்த விசயத்துக்கு எல்லா ரியேக்ட் பண்ணக் கூடாதய்யா.. ரெண்டு நாளு அடிச்சுட்டு.. அடங்கிருவானுங்க" என்று முதல்வன் படத்தில் ரகுவரன் பேசும் வசனம் தான் நினைவிற்கு வருகிறது.

ஊடகம் தர்மம் செத்துப் பல வருசமாச்சு.. :((

இராகவன் நைஜிரியா said...

பத்திரிக்கை என்பதே வியாபாரம் என்று ஆகிவிட்ட பின் தர்மம் எங்கேயிருந்து அண்ணே வருது.

யார் ஆட்சி செய்கின்றார்களோ அவர்களை காக்கா பிடிப்பதே இவங்க வேலை...

அதற்கு மேல் எதிர்பார்த்தால் ... சாரி நத்திங் டு சே..

பத்மா said...

ஆமாம் பத்திரிக்கை வாங்கறத நிறுத்தனும்

நாடோடி said...

//நித்தியானந்தனையும், சாருவையும் சாடி எத்தனை பதிவு வந்தது? பார்வதி அம்மாளுக்கு நடந்த கொடுமைக்கு எத்தனை பேரு இடுகை போட்டீங்கன்னு துப்புங்க எசமான் துப்புங்க///

பாவ‌ம் இத‌ற்கு ப‌தில் சொல்வார் யாரும் இல்லை.......

ராஜ நடராஜன் said...

//மிசா காலத்தில் எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் எனக் கதறிய ஊடகங்கள் இப்போது எதற்கு அடிமைப்பட்டுப் போயின? தேடித் தேடி அமைதிப் படையின் அத்துமீறலையும், ஃபோஃபார்ஸ் ஊழலையும் பத்தி பத்தியாய் விற்று இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்று மார்தட்டிக் கொண்ட பத்திரிகைகளுக்கு ஏன் சம்பந்தப் பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு வெளியிடத் தோன்றவில்லை.//

இவர்களின் மிசாக்களின் சுயநலங்கள் கூட இப்போதுதான் புரிகிறது.ஜெயபிரகாஷ் நாராயணன்,இந்தியன் எக்ஸ்பிரஸெல்லாம் சேர்ந்து போராடிய போராட்டத்துக்கு இவர்கள் பலனை அறுவடை செய்து கொண்டார்கள்.

ஆமா!நீங்க நறுக்கை எதற்கு நிறுத்தினீர்கள்?இந்த மாதிரி நேரங்களுக்கு அதுவே சிறந்த டானிக்.

ராஜ நடராஜன் said...

நமது கண்டனங்களை தெரிவிக்கும் இன்னுமொரு அஸ்திரம் செம்மொழி மாநாட்டை புறக்கணிப்பது.

சுய சிந்தனையுள்ள தமிழ் ஆர்வலர்களை வேண்டிக் கொள்வதெல்லாம் இந்த மாநாட்டால் சுயலாபங்கள் தவிர தமிழுக்கு ஒரு பலனும் இல்லை.

அப்படி பலன்கள் இருக்குமென்றால் பொதுவுலகில் வந்து விவாதித்து விட்டு உங்கள் பக்கத்து நியாயங்களை கூறுங்கள்.

இல்லையென்றால் மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு படியேறுகிறீர்கள் என்று பொருள்.

பத்திரிகை புறக்கணிப்பு என்பதெல்லாம் இயல்பாக ஜனநாயக ரீதியாக செயல்படுத்தக் கூடியவை.இதனை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் இருக்கிறது புறக்கணிப்பின் வெற்றி.

கலகலப்ரியா said...

ம்ம்..

Chitra said...

விசாவையும் கொடுத்து, விமானத்திலும் ஏற்றி, இந்தியா வர வைத்து........ ம்ம்ம்ம்...... என்னத்த சொல்ல?

தாராபுரத்தான் said...

பத்திரிக்கைளளையே வாங்காமல் இருக்க நான் ரெடி.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

உண்மை உண்மை .
அருமை அருமை.

Unknown said...

நீங்க பேசின வியாக்கியானம் செருப்ப கலட்டி அடிச்சி கருப்பட்டிய கைல கொடுத்த மாதிரி இருக்கு!
கெளப்புங்க!

காமராஜ் said...

நல்லா சூடு வர மாதிரிச்சொல்லிருக்கீங்க.
தனக்கு தனக்குன்னா .... எறங்கிக்களைவெட்டும்.
நடக்கிற கூத்தையெல்லாம் பார்க்க மட்டிலும் கிடைக்கிற வேதனை.
வாரிசுஅரசியல் எதையும் விட கேவலமாகிப்போனது

ஈரோடு கதிர் said...

தேவையான அறச்சீற்றம்...

ஒரே ஒரு கேள்வி!
அவங்க திருந்தனுமா?
நாம திருந்தனுமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரொம்ப அருமை

Unknown said...

நான் இடுகையப் படிக்க ஆரம்பிச்சதுமே கேக்கணும்னு நினைச்சக் கேள்வியை கடைசியா நீங்களே கேட்டுட்டிங்க...

ஊடகமெல்லாம் தே...த்தனம் செய்ய ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சி சார்.

Unknown said...

//துப்புங்க எசமான் துப்புங்க//

இதுல எதோ உள்குத்து இருக்கே??

Unknown said...

//ஒரே ஒரு கேள்வி!
அவங்க திருந்தனுமா?
நாம திருந்தனுமா?//

நாம திருந்தி அவிங்களத் திருத்தனும்

க.பாலாசி said...

//ஐ.பி.எல். மேட்ச் குத்தாட்டம் ரசிப்பதில் வாயடைந்து விட்டார்.//

ஆமா... இந்தாளு வந்தப்ப அங்க ஆடுனதுங்கள்லாம் பேண்ட் சட்டை போட்டிருந்ததால கொஞ்சம் வருத்தப்பட்டாராமே...

//நான் கொடுக்கிற காசுக்கு நன்றாக மலமிளக்கும் பத்திரிகையைத் தேர்வு செய்வது நானாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய, மனச்சிக்கலும் அதனால் மலச்சிக்கலுக்கும் ஆளாகும் துர்பாக்கியம் தமிழனுக்கு ஏன்?//

ம்ம்ம்ம்..

ரொம்ப நாளைக்கு அப்புறம் முந்தாநேத்துதான் ஒரு பேப்பர படிச்சேன்... இந்த நியூஸ்தான் கண்ணுல பட்டுது...

எரியிறத எடுத்துட்டா கொதிக்கறது நின்னுடும்னு சொல்லுவாங்க... அப்டித்தான் செய்யணும்....

vasan said...

ந‌ம‌து உணர்ச்சியும், கோப‌மும்,
வெறியும், தீக்குச்சியாய்,
சீறி எரிந்து, வினாடிக‌ளில்
அணைந்து வீணாக்காமல்,
சிறுக‌ சிறுக‌ சேமித்து,
சரியான‌ த‌ருண‌ம் வ‌ருகையில்,
அது, ஐஸ்லாந்திலே சீறிய‌
எரிம‌லையாய், ப‌ற‌க்கின்ற‌
அனைவ‌ரையும் த‌ரையிற‌க்கும்
வ‌லிமை கொள்ளும்.
ஒன்று சேர்வோம், வ‌லி சோர்ப்போம்.
புதிய‌ வ‌ழி புல‌ப்ப‌ட‌லாம்.

தமிழ் நாடன் said...

பாலாண்ணே! ஏன் பார்வதியம்மாள் வரைக்கும் வந்திட்டீங்க! ஈழத்துல அத்தனை பிணம் விழும்போதும் நாம மானாட மயிலாடதானே பார்த்திட்டிருந்தோம்! விடுங்கண்ணே! இந்த ஜென்மங்கெல்லாம் திருந்த போறதே இல்லை.

சுண்டெலி(காதல் கவி) said...

செம சூடு

Thamira said...

நல்ல பகிர்வு. பதிவுலகம் வந்த இந்த 2 வருடங்களில் இதுமாதிரி ஒரு 50 பதிவுகளாவது படித்திருப்பேன். :-))

ஸ்ரீராம். said...

இப்போ பார்லிமெண்டுல பேச ஆரம்பிச்சிருக்காங்க போல...

vasu balaji said...

@@ ஆமாங்க மணிஜி
@நன்றி ரமேஸ்
@@நன்றி பிரபா
@@நன்றி ஷங்கர்
@@சரியாச் சொன்னிங்க ஜோதிஜி
@@நன்றி சேட்டைக்காரன்
@@நன்றி புலிகேசி
@@ஆமாங்க செந்தில். இது நல்லதில்லையே
@@வாங்கண்ணே
@@ஆமாங்க பத்மா
@@நன்றி நாடோடி
@@மீண்டும் நறுக்கறேன் அண்ணா:)
@@நன்றி ப்ரியாம்மா
@@நன்றி சித்ரா
@@அப்புடி போடுங்க தாராபுரத்தண்ணே
@@நன்றிங்க நண்டு@
@@நன்றிங்க சிவா
@@நன்றிங் கதிர்ணோவ்
@@நன்றி டி.வி.ஆர்.சார்
@@நன்றி முகிலன். நோ குத்துஸ்
@@நன்றி பாலாசி
@@நன்றி வாசன்
@@நன்றிங்க தமிழ்நாடன்
@@நன்றிங்க காதல் கவி
@@நன்றி ஆதி. கணக்கு தப்பு. நான் இந்த ஒரு வருஷத்துலயே 50கு மேல படிச்சிட்டனே:))
@@பேசி என்ன பண்ண ஸ்ரீராம்:). நன்றி